Archive for the ‘இனக்கொலை’ Category

தோள்சீலை போராட்டம்: 200-வது ஆண்டு நிறைவு நாள்விழா- கூட்டணி மேடைகளில் பேசுவது ஏன் – சித்தாந்த கட்டுக்கதை சரித்திரம் ஆகாது! (2)

மார்ச்19, 2023

தோள் சீலை போராட்டம்: 200-வது ஆண்டு நிறைவு நாள் விழாகூட்டணி மேடைகளில் பேசுவது ஏன்சித்தாந்த கட்டுக் கதை சரித்திரம் ஆகாது! (2)

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது[1]: “பாஜக, தேசிய அரசியலில் தகர்க்க  முடியாத சக்தி அல்ல….திருவிதாங்கூர் மன்னன் சனாதன தர்ம ஆட்சி நடப்பதாக அறிவித்து நடத்திய ஒடுக்குமுறைக்கு  எதிரான தோள்சீலை போராட்டத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உள்ளது………..  சனாதன தர்மத்தின் அரசியல்என்று கூறி மார்த்தாண்டவர்மா செயல்படுத்திய வழி முறைகளே இன்றும் நமது நாட்டில் நிலவும்சனாதன இந்துத்துவம்’…….. அவர்கள்லோகா சமஸ்தியா சுபந்தோஎன்கிற சுலோகத்தை  கூறுகிறார்கள். அந்த வார்த்தை,  ‘‘கோ பிராமண்மே கியா சுப  மஸ்து’’. இதன்பொருள் பசுவுக்கும் பிராமண னுக்கும் நலம் உண்டாகட்டும் என்பதாகும். பசுவும் பிராமணனும் நலமாக இருந்தால் உலகத்தில் அனைவருக்கும் நலம் ஏற்படும் என்பதாகும்.  இது பசுவை  மையமாகக்கொண்ட இன்றைய அரசியலுடன் எந்த அளவுக்கு  பொருந்துகிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்[2]………... ‘” இவ்வாறு செத்தமொழி பேசும் முதல்வராக இருந்தார், அதை, திராவிட முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து பேசியது: மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற இந்து சார்பு அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. வகுப்புவாதம் இல்லாத மாநிலங்களாக தமிழகமும், கேரளமும் மட்டுமே உள்ளன. அனைத்துஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இவ்விரு மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இந்துத்துவ தந்திரம் ஆபத்தை உண்டாக்கும். மொழி பாதுகாப்பு முதல் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம் உள்ளன. அனைத்துக்கும் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். பா..வை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். மக்கள் உரிமை நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை[3]. இங்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு அழைப்பை கொடுக்க விரும்புகிறேன்[4]. அடுத்தாண்டு நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்பார்[5]……..,” இவ்வாறு அவர் பேசினார்[6]. 2024ல் கேரளத்தில் நடக்கும் பொழுது, அதுவும் அரசியல் கூட்டமாகத்தான் இருக்கும். ஆக இதெல்லாம் முன்னேற்பாடுடன் நடந்தவை தான். ஏற்கெனவே வசங்கள் எழுதப் பட்டு விட்டன[7], இப்பொழுது பேசியாகி விட்டது[8].

பாலபிரஜாபதி அடிகள்பலரகமான அரசியல் கட்சிகள், சித்தாந்த குழுக்களுடன் சேர்திருப்பது: தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகள், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.பி. விஜய் வசந்த் பங்கேற்றனர். இவ்வாறு அரசியல்வாதிகள் கூடி வருகின்றனர். “பாலபிரஜாபதி அடிகள்” என்பவரும் எல்லா இந்துவிரோத சித்தாந்திகளுடன் சேர்ந்து இருப்பதைக் கவனிக்க முடிகிறது. இத்தகைய மாறுபட்ட சித்தாந்திகள் ஒன்றாக கூடுவது, பிஜேபி எதிர்ப்பு என்றுதான் தெரிகிறது. பேசுகிறவர்களும் அதனை மறைக்கவில்லை. பிறகு இவர்களால் மக்களுக்கு அமைதியான முறையில் என்ன கிடைக்கும்? இதற்கு தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளதாக உள்ளது. மற்றவர்கள்  அரசியல் காரணங்களுக்காக அமைதியாக இருக்கிறார்கள் போலும்.

தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் கண்டனம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் தோள் சீலை 200வது ஆண்டு நிறைவு பொதுக் கூட்டத்தில் நாடார்களை குறைத்து மதிப்பிட்டு பேசக்கூடாது எனவும் நாடார்களை தரக் குறைவாக பேசுவதற்கு என்று ஒரு கூட்டம் எனவும் கூறியுள்ளார் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ்[9]. இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர்.முத்து ரமேஷ் செய்தியாளர் சந்தித்தார்[10].  அப்போது அவர் ” தோள் சீலை போராட்டம் என்பது நாடார் சமுதாயத்தை தவறாக சில ஜாதி வெறியர்களால் சில நபர்களால் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு பதிவு செய்யப்பட்ட வரலாறாக மாறி உள்ளது.  நாடார் சமூகம் என்பது எந்த காலத்திலும் தோள் சீலை போடாமல் இருந்தது கிடையாது.  நாடார்கள் மீது இந்த அரசுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. இன்றைய நாகரீகத்தை விட அன்று அழகான உடை அணிந்து பெண்மணிகள் தோள் சீலை அணிந்த புகைப்படங்கள் இன்றும் உள்ளது.  அப்படி இருக்கும்போது தவறாக தோள் சீலை போராட்டத்தில் நாடார்கள் பாதிக்கப்பட்டதாக சித்தரிக்கிறார்கள்.” எனப் பேசியுள்ளார்.  எனவே நாடார்களை குறித்து தவறாக யார் பேசினாலும் அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கப்படும்.  மேலும் தவறாக பேசும் பட்சத்தில் தமிழகத்தை சேர்ந்த மொத்த நாடார் அமைப்புகள் சேர்ந்து 1 கோடி மக்கள் திரட்டி போராட்டம் நடத்தக்கூடும்.  மேலும் தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம் என தெரிவித்து,இந்த கூட்டத்தில் நாடார்கள் குறித்து கீழ்த்தரமாக தரம் தாழ்ந்து பேசக்கூடாது, கவுரவப்படுத்தி பேச வேண்டும் என தெரிவிப்பதோடு இந்த தோள் சீலை 200 ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.

கேரளப் பெண்களும், மார்பை மறைக்கும் ஆடைகளும்: இந்தியாவில், குறுகிய காலத்தில் கூட பெரிய கட்டுக்கதைகளை உருவாக்கி அதனைப் பரப்பி, உண்மை போன்று உலா வரச் செய்யலாம் என்பதற்கு, இந்த மலைவரி கதையே சான்றாக உள்ளது. ஒரு நூறு ஆண்டுகளில் இக்கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, சித்தாந்த ரீதியில் எந்த அளவுக்கு திரித்து எழுதி, பேசி, நீட்டி அளந்து கதைகளை, கட்டுரைகளை, புத்தகங்களௌ, ஏன் சினிமாவைக் கூட தயாரித்து வெளியிடுவார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனி, இக்கதை தோன்றிய விதத்தைக் கவனிக்கலாம். பொதுவாக, கேரள பெண்கள் ஜாக்கெட் போடாமல், போட்டாலும், தாவணி / சேலை போன்றவற்றால் மார்பை மறைக்காமல் இருந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்லலாம். 20ம் நூற்றாண்டில், பிறகு தாவணி / சேலை மார்பை மூட ஆரம்பித்தனர். இப்பொழுது 21ம் நூற்றாண்டைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இனி, அந்த ஐரோப்பியர்களின் 18-19ம் நூற்றாண்டுகளின் குறிப்புகளைப் பார்க்கலாம்.

ஐரோப்பிய பிரயாணிகள் கிறிஸ்துவ மிஷினரிகளின் வர்ணனைகள்: அடுத்தவர் சொன்னதை இனொருவர் சொல்ல, மேலும் இன்னொருவர் முன்னவர் சொன்னார் என்று, கம்யூனிஸ்ட் வகையறாக்கள் பொய் சரித்திரத்தை உருவாக்குவதில் வல்லவர்கள். அம்முறைதான், இக்கட்டுக்கதை மெய்ப்பிகிறது:

  1. டச்சுப் பயணி ஜோஹன் நியுஹோஃப் (Johan Nieuhof), கொல்லம் ராணியை சந்திக்கச் சென்றபோது,  அவள் தனது மார்பகத்தை மூடவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
  2. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் பெட்ரோ டெல்லா வல்லி (Pietro Della Valle) மற்றும் ஜான் ஹான்றி குரோஸ் (John Hanry Grose), பயணக்கட்டுரைகளில் கேரளாவில் ஆண் மற்றும் பெண் இருவரின் உடைகள் மேல் ஆடைகளை அணியவில்லை என்று தெரிவிக்கின்றன.
  3. மற்றொரு பயணியான அபே டுபோயிஸ் (Abbe Dubois) 1815 ஆம் ஆண்டு தனது “இந்து முறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விழாக்கள்” என்ற கையேட்டில்,” அனைத்து பெண்களிலும், வேசிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க தங்கள் மார்பை மூடிக்கொண்டனர்!!! மார்பகத்தை மூடுவது ஒரு கவர்ச்சியான செயலாக கருதப்பட்டது.” என்று குறிப்பிட்டார்,
  4. கேரள சமூகம் பெரும்பாலும் தாய்வழி சம்பிரதாயம் கொண்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இதனால், ரவிக்கை அணியாத அல்லது மார்பகங்களை மறைக்காமல் இருக்கும் கேரள பெண்களைப் பார்த்த பொழுது, கிறிஸ்துவ-முகமதிய / ஆபிரகாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு வியப்பாக இருந்தது. மேலும், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தவர்கள் மட்டுமே ரவிக்கை அணிவதை விரும்புவதால், அவர்களின் ஆடைத் தேர்வு மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  5. மானுடவியலாளர் ஃப்ரெட் ஃபாசெட் (Fred Fawcett), “மலபாரை பூர்வீகமாகக் கொண்ட எவரும் ரவிக்கை அணிவதையோ அல்லது மார்பகத்தை மூடுவதையோ விரும்புவதில்லை, ஆனால் பின்னர், மக்கள் வெளியில் செல்லும்பொழுது, அவர்களின் பழக்கம் மாறியது,” என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில், ஆங்கிலேய செவிலியர்கள் விபச்சாரிகள் இல்லை என, தங்கள் மார்பை ஒரு துணியால் மூடுமாறு கேட்டபோது, ​​பூர்வீக தியா பெண்கள் மறுத்தனர்.

© வேதபிரகாஷ்

08-03-2023


[1] தீக்கதிர், பாஜகவை தகர்க்க முடியும், நமது நிருபர் மார்ச் 7, 2023

[2]https://theekkathir.in/News/states/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/tholsheelai-200—pinarayi-vijayan-slogan-at-closing-ceremony

[3] நக்கீரன், கோரிக்கை வைத்த முதல்வர்; அழைப்பு விடுத்த பினராயி விஜயன், மணிகண்டன், Published on 07/03/2023 (16:26) | Edited on 07/03/2023 (17:05).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tn-cm-mk-stalin-request-accepted-by-kerala-cm-pinarayi-vijayan-nagercoil/

[5] இடிவிபாரத், தோள் சீலைப் போராட்டம் மாநாட்டில் பினராயி விஜயன் வைத்த ட்விஸ்ட்ஸ்டாலினுக்கு கோரிக்கை!, Published on: 9.00 am |Updated on: 9.00 am.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/kanniyakumari/200th-anniversary-of-thol-seelai-porattam-conference-vaikom-protest-pinarayi-vijayan-invites-mk-stalin-for-100th-anniversary-celebration/tamil-nadu20230307085731918918863

[7] தினத்தந்தி, தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்: தமிழ்நாடு, கேரள முதல் அமைச்சர்கள் பங்கேற்பு,  Update: 2023-03-06 02:57 GMT

[8] https://www.dailythanthi.com/amp/News/State/200th-commemoration-day-of-shoulder-seal-struggle-public-meeting-tamil-nadu-kerala-chief-ministers-attend-913021

[9] மாலைமுரசு, இதற்கு இரண்டு முதலமைச்சர்கள் பங்கேற்பது என்பது கண்டிக்கத்தக்கது….தமிழ்நாடு சட்டசபையை ஸ்தம்பிக்க வைப்போம்..!!, Webteam; Mar 6, 2023 – 08:580167

[10] https://www.malaimurasu.com/posts/district-news/Where-is-the-movie-of-Hindu-Gods

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (2)

ஜூலை17, 2021

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (2)

இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன.

நடைபெற்று உள்ள சம்பவங்கள் சட்டம்ஒழுங்கு தொடர்பானவை; இதிலே இனரீதியான வன்முறை இல்லை: இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பான்டோர்ருடன் வன்முறை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடைபெற்று உள்ள சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கு தொடர்பானவை; இதிலே இனரீதியான வன்முறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வன்முறையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜெய்சங்கருக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. “இனரீதியான வன்முறை” என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. வெள்ளையர் வெள்ளையர் அல்லாதவர்களின் மீது காட்டிய, காட்டப் படும் வெறுப்பு, காழ்ப்பு, துவேசம், அடக்குமுறை, அடிமைத்தனம், முதலியவை அறிந்ததே இந்தியர்களும் வெள்ளையர்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில், காந்தி எவ்வாறு நடத்தப் பட்டார், அவரும்வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார் என்பதெல்லாம் தெரிந்த விசயங்கள் ஆகும். அந்நிலையில் கருப்பர்கள் இந்தியர்களை அவ்வாறு நடத்தவில்லை என்பதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.

குறிப்பாக, இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன

கருப்பினத்தவர் இந்தியர்களுக்கு எதிராக இனரீதியில் ஈடுபடமுடியுமா?: கருப்பினத்தவர் வெள்ளையர்களுகு எதிராக போராடின நிலை இனரீதியில் இல்லை, தங்களுக்கு சுதந்திரம், உரிமைகள் வேணும் என்று போராடி வெற்றி பெற்றனர். இந்தியர்களும் அவ்வாறே வெற்றிப் பெற்று சுதந்திரம் அடைந்தனர். உண்மையில் இந்தியர்களும் அடிமைகளாகத் தான், தென்னாப்பிரிக்கப் பண்ணைகளில் வேலை செய்ய, வெள்லையர்கள் இந்தியாவிலிருந்து கடத்தி வந்தனர். பிறகு, 20-21ம் நூற்றாண்டுகளில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால், பணக்காரர்களாக இருக்கும் இந்தியர்கள் மற்ற நாடுகளில் சென்று வியாபாரம் ஆரம்பித்தனர். குறிப்பாக, சீக்கியர் பல நாடுகளில் எல்லாவிதமான வியாபாரங்களிலும் சிறந்து விளங்குகிறார்கள், இங்கு கூட தாக்கப் பட்ட, சூரையாடப் பட்ட கடைகளின் உரிமையாளர்களில் சீக்கியரும் உள்ளார்கள். வெளிநாட்டு டிவி பேட்டிகளில் அவர்கள் தங்களது கடைகள் எவ்வாறு சூரையாடப் பட்டன, தாங்கள் உயிருக்குப் பயந்து, வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறோம் என்று தங்களது நிலையை வருத்தத்துடன் விளக்கினார்.

தெருக்களில் கலவரத்தில் ஈடுபட்ட மக்கள்.
கடைகளை சூரையாடும் மக்களை நோக்கி கண்ணீர் குண்டு வெடிப்பு, இருப்பினும் கடைகள் கொள்ளை முடிந்து விட்டன.

இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இந்திய அரசு கோரிக்கை: தென்னாப்பிரிக்க அதிபரான சிறில் ரமாபோசா, கலவரத்தை தங்களுக்கு சாதகமாக சமூக விரோத நபர்கள் பயன்படுத்தி கடைகளை சூறையாடும் சம்பவங்களில் ஈடுபட்டதாக தெளிவுபடுத்தி உள்ளார். இந்நிலையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோலவே பல தலைமுறைகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாட்டுக்கு குடியேறி அங்கேயே வாழ்ந்து வரும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய தூதரகம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தினசரி தகவல்களை சேகரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[1]. தென்னாப்பிரிக்க நாட்டில் தொடரும் வன்முறையில் இந்திய வம்சாவளி மக்கள் குறிவைக்கப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தி வருகிறது[2].

சூரையாடப் பட்ட பொருட்களை தாராளமாக அள்ளிச் சென்றனர். ஏதோ திருவிழாவிற்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்வது போன்று மக்கள் நடந்து சென்றனர்.

இந்திய வம்சாவளி அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இந்திய வம்சாவளி அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக பொறுப்பு வகிக்கும் சஞ்சய் பட்டாச்சார்யா தொடர்ந்து டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், டர்பன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களை காக்க எடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய வம்சாவளி மக்கள் தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள்[3]. பல தலைமுறைகளாக அந்த நாட்டில் வசித்துவரும் அவர்கள், அங்கே கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்[4].

இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன, பொருட்கள் அள்ளிச் சென்றனர்.

வெள்ளையர்களும், கருப்பர்களும் இந்தியர்களுக்கு விரோதமாக இருக்கும் தன்மை: இந்தியர்களை பழுப்பு நிறத்தவர் (Browns) என்று குறிப்பிடுவது உண்டு. ஆக தோல் நிறம் ரீதியில் வெள்ளையர் (Whites), இந்தியர்கள் கருப்பர் (Blacks) என்று தான் குறிப்பிட்டனர், பாவித்தனர் மற்றும் நடத்தினர். வெள்ளையர் / ஆங்கிலேயர் இந்தியர்களை அவ்வாறு நடத்தியதால் தான், கோட்டையக் கட்டிக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்ட போது, சுற்றியுள்ள பகுதிகளை கருப்பினத்தவரின் ஊர் (Black town), கருப்பினத்தவரின் நகரம் (Black city), கருப்பினத்தவரின் தெரு / சாலை (Black street) என்றே குறிப்பிட்டனர். இந்தியாவின் குறிப்பிட்ட பொருட்களுக்கு அவ்வாறே பெயரிட்டனர் இந்திய கருப்பு நிறம் (Indian Black), இந்திய மை (Indian Ink) என்று அத்தகைய கருப்பு நிறத்தை குறிப்பிட்டு, உபயோகமாக்கி, இன்று வரை வழக்கில் இருந்து வரும் சொற்களாக இருந்து வருகின்றன. அந்நிலையில், கருப்பர், கருப்பினத்தவர், இந்தியர்களை இனரீதியிலாக வேறுபடுத்தி பாவித்தல், நடத்துதல் மற்றும் வன்முறைகளுக்கு உட்படுத்துதல் என்பது கவனிக்கத் தக்கது. இதை எதிர்மறை-நிறவெறித்துவம் என்று குறிப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை அத்தன்மை, கருத்துருவாக்கம், தானாக எழுந்ததா அல்லது தற்காலத்தில் உருவாக்கப் பட்டதா? அப்படியென்றால், யாரால், ஏன், எவ்வாறு உருவாக்கப் பட்டது என்று யோசிக்க வேண்டியுள்ளது.

கடைகளில், கைக்கு கிடைத்தவற்றை அள்ளிச் சென்றனர்.

சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” – இவ்வாறு எதிர்மறை பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது ஏன்?: “ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” என்று குறிப்ப்டப் பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. அதாவது, “சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” என்றால், யாரோ, குழுவோ, குழுக்களோ அத்தகைய உணர்வுகளைத் தூண்ட, இந்தியர்களைத் தாக்க, குறிவைத்து பிரச்சாரம் ஆரம்பித்துள்ளது, செயல்படுகிறது என்று தெரிகிறது. பிறகு, இது ஒரு திட்டமிட்ட செயல் என்றாகிறது. யாரோ செய்யும் காரியங்களுக்கு, குற்றங்களுக்கு, இந்திய வம்வாவளியினர் பலிக்கடா ஆக்கப் படுகின்றனர் என்றாகிறது. ஒருவேளை பாதிக்கப் பட்ட இந்திய வம்வாவளியினர், சூரையாடப் பட்ட கடைகளுக்கு, சொத்துக்களுக்கு சட்டப் பட்டி இழப்பீடு போன்றவை இருந்தால், பெறலாம். ஆனால், மறுபடியும் அவற்றை சீரமைத்து, பழைய நிலைக்கு வர ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். பிறகு, மற்றவர் தம்மை எவ்வாறு நடத்துவர் என்ற எண்ணமும் இருக்கும். நாளைக்கு கருப்பர் கடைகளுக்குள் நுழைந்தால், குறிப்பாக கத்திக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டு நுழைந்தால், ஏதாவது வாதங்களில் ஈடுபட்டால், வன்முறையில் ஏன் முடியாது என்ற அச்சமும் கடைகளின் சொந்தக் காரர்களுக்கும், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் இருக்கும். அந்த வடுக்கள் நீங்க காலம் ஆகலாம்.

© வேதபிரகாஷ்

16-07-2021


[1] தினமலர்,தென்னாப்பிரிக்காவில் கலவரம்; இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, Updated : ஜூலை 16, 2021  10:44 |  Added : ஜூலை 16, 2021  10:39.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2803447

[3] பிபிசி.தமிழ், தென்னாப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா கலவரம்: அதிகரிக்கும் உயிர் பலிபின்னணிஎன்ன?, 14 ஜூலை 2021

[4] https://www.bbc.com/tamil/global-57832980

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

ஜூலை16, 2021

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் shops-looted-in-south-africa-indian-origin-affected-sikh-times-16-07-2021.jpg

முன்னாள் அதிபர் கைது, கலவரங்கள் ஆரம்பம்: முன்னாள் அதிபர், 75 வயதாகும் ஜேக்கப் ஸூமா இந்த மாதம் 7-ஆம் தேதி (07—06-2021) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது [1]. கலவரம், வன்முறை, மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் / 1,200 பேருக்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரேடியோ நிலையம் கூட சூறையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது [2]. ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய கலவரங்களை, கடைகளை சூறையாட வாய்ப்பாக சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது [3]. ஸூமா 2009 வருடம் முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது [4]. அவர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்4தில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் [5]. இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக கலவரங்கள் வெடித்தன [6].


மருத்துவ மனை எரியூட்டல், சாலைகளில் கலாட்டா முதலியன: டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்[7]. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்[8]. இவற்றிலிருந்து கலவரக் காரகளின் ஈவு-இரக்கமற்ற குணாதிசயங்களும், வக்கிரமும் வெளிப்படுகிறது. சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவர கலாட்டாக்களில் இந்திய வம்சாவளி போன்ற விவகாரம் இல்லை. நிறம் சம்பந்தப் பட்டப் பிரச்சினை இல்லை. ஏனெனில், இதில் தாக்கப் பட்டவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமிருக்கின்றனர்.

இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு: இதனிடையே, ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இது இந்திய வம்சாவளி மக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. “தென்னாப்பிரிக்காவிலுள்ள முக்கிய நிறுவனங்களில், அதுவும் நிதி சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பது இந்தியர்கள்தாம். அவர்களால்தான் நமக்கு பொதிய வேலைவாய்ப்புகளும், பணமும் கிடைப்பதில்லை,” என்று தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது[9]. அதே நேரத்தில், “தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இந்தியர்களையே சாரும். பொருளாதார ரீதியாகத் தென்னாப்பிரிக்கா நாடு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கும் இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது சரியல்ல,” என்று இந்தியர்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பிரிக்க மக்கள் சிலர் துணை நிற்கின்றனர்[10]. நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து, குடியுரிமைகளுடன் வாழும் இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு சரியில்லை.

இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன: தற்போது தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலில், இந்திய வம்சாவளி மக்கள் நடத்தும் கடைகள், மருந்தகங்கள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன[11]. வன்முறை கும்பல்கள் கடைகளை சூறையாடி பொருட்களை அள்ளிச் செல்வது மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன[12]. இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்துதாக்கப்படுகின்றன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது, இப்படித்தான், தமிழ் ஊடகங்கள் விவரிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 6 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75% பேர் கருப்பின மக்கள். 13% பேர் வெள்ளையின மக்கள். இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இயல்பில் இந்திய மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். தொழிலை தெய்வமாக மதித்துப்போற்றி, சிக்கனமாக வாழக்கூடியவர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகமாக உள்ளனர். இதன் காரணமாக தற்போதைய வன்முறையில் இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, பகல் கொள்ளை அரங்கேறுகிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருப்புவெள்ளை இனத்தவர்களிடம் இருதளைக்கொள்ளி எறும்பு போல வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர்: மேலும் கருப்பின, வெள்ளையின மக்கள் என எந்த பக்கமும் சாராமல் இந்திய வம்சாவளியினர் தனித்து வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் ஊடகங்கள் திரித்துக் கூறுவதும் விஷமத் தனமானது. உண்மையில், அவர்கள் தாம், இருவகைப் பிரிவினரிடமும், இருதளைக்கொள்ளி எறும்பு போல அகப் பட்டு அவஸ்தை படுகிறார்கள். பொருளாதார ரீதியில் முன்னேறி விட்டதால், ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்கின்றனர். வெள்ளையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று கூறுவதும் முறையற்றது. அப்படியென்றால், கருப்பின மக்கள் தாக்கப் பட்டால், எல்லா ஆப்பிரிக்க நாடுகளும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று சொல்வதற்கு இல்லை. ஆக, கருப்பு-வெள்ளை இனத்தவர்களிடம் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அரசு கவனிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். .

தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலை: தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்திய வம்சாவளி மக்கள் தங்களுடைய கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாக்க தனியார் பாதுகாவலர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தான், மேலும் அபாயத்தில் முடியும்நிலையுள்ளது. ஒருவேளை, அந்நாட்டில் அதற்கு அனுமதி இருக்கலாம். ஆனால், அத்தகைய “தனியார் பாதுகாவலர்கள்,” யார், கருப்பினத்தவரா-வெள்ளையினத்தவரா என்று எடுத்துக் கூற முடியுமா? போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவத்தை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-07-2021


[1] புதியதலைமுறை, தென்னாப்பிரிக்க கலவரங்களில் குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்என்னதான் நடக்கிறது?,    Web Team Published :15,Jul 2021 08:31 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/109750/Firstlook-Posters-of-Actor-ashok-selvan-Sila-Nerangalil–Sila-Manidhargal.html

[3] தமிழ்.இந்து, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம்இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, செய்திப்பிரிவு, Published : 16 Jul 2021 03:11 AM; Last Updated : 16 Jul 2021 06:03 AM.

[4]https://www.hindutamil.in/news/world/693700-attack-on-indians.html

[5] தினமணி, தென்னாப்பிரிக்காவில் வெடித்த கலவரம்..காரணம் என்ன?, By DIN  |   Published on : 15th July 2021 05:36 PM.

[6] https://www.dinamani.com/world/2021/jul/15/why-south-africa-is-witnessing-worst-violence-3660820.html

[7] NEWS18 TAMIL, மருத்துவமனைக்கு தீ.. கலவரத்தில் 72 பேர் உயிரிழப்புதென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன? ,  LAST UPDATED : JULY 15, 2021, 15:51 IST

[8] https://tamil.news18.com/news/international/south-africa-72-death-after-zuma-arrest-worst-violence-in-years-vjr-506005.html

[9] விகடன், தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது‘, `பெருந்தொற்று‘, `வறுமை‘ – உண்மை பின்னணி என்ன?!, வருண்.நா, Published: Today at 4 PM; Updated:Today at 4 PM

[10] https://www.vikatan.com/government-and-politics/international/what-is-the-reason-for-the-south-africa-riots

[11] பாலிமர்.நியூஸ், தென்னாபிரிக்காவில் கலவரம்: 75 பேர் பலி கடைகள் சூறைதீ வைப்பு, 14 ஜூலை 2021, 10.29.16.AM.

[12] https://www.polimernews.com/dnews/150345

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை- பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)

ஏப்ரல்11, 2018

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவுஎதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறைபிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)

Shoe- Tamilian threw chappals 10-04-2018

நாம் தமிழர் ஆட்களின் அநாகரிகமான செயல்ஷோக்களை எரிந்தது[1]: ஆனாலும் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்தது. போட்டியும் திட்டமிட்டபடி நடந்தது. போட்டியின் இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்கலாம் என எதிர்பார்த்து மைதானத்துக்குள்ளே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பவர் பிளே முடிந்த பின்னர் பவுண்டரி லைன் அருகே பட்டாபிராம் முனை பகுதியில் காலரியிலிருந்து ஷூ ஒன்று மைதானத்திற்குள் வீசப்பட்டது[2]. அது நேராகச் சென்று ஜடேஜா அருகில் விழுந்தது. அவர் அதைப் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் அதைக் காலால் உதைக்க முயன்றார். அது மீண்டும் மைதானத்திலேயே விழுந்தது. மைதானக் காவலர்கள் காலணியை எடுத்துச் சென்றனர். உடனடியாக மைதான பாதுகாவலர்களும், போலீஸாரும் ஷூ வீசிய இளைஞர்களைப் பிடித்தனர்.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-4

மைதானத்துக்குள் காலணி வீசியதாக ராஜ்குமார், அய்யனார், பொன்வேல் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அப்போது அந்த இளைஞர்கள் சற்றும் அஞ்சாமல் நாம் தமிழர் கொடியை எடுத்து விரித்து பிடித்தபடி கோஷமிட்டபடி சென்றனர். படிகட்டில் இறங்கும் நேரத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் அவர்களைத் தாக்க முயன்றார். அவர்கள் பதிலுக்கு தாக்க முயன்ற போது போலீஸார் இழுத்துச் சென்றனர். இதே போல் வாலாஜா சாலையில் நுழைவு வாயில் அருகே போட்டியைக் காணவந்த இரண்டு இளைஞர்களை டிக்கெட்டைக் காட்டுங்கள் என்று கூறி பனியனை கழற்றச்சொல்லி தாக்கியதாக போலீஸார் சிலரை பிடித்தனர். போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் மைதானம் முழுதும் குழுமி இருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச்சை மொத்தமாக அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஷோக்களை எரிந்து தரத்தைக் குறைத்துக் கொண்ட விதம் படு கேவலமாகி விட்டது. கிரிக்கெட் சரித்திரத்திலேயே, சென்னைக்கு இழுக்கை சேர்ததாகி விட்டது.

Anna salai blocked- IPL match

போராட்டம் பெயரில் மாலை நேரத்தில் தெருக்களில் இடைஞ்சல் செய்தது, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்பவர்களை பாதித்தது:  தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை திடீரென தற்போது போராட்டத்தில் குதித்தன[3]. விகடன் “திடீரென தற்போது போராட்டத்தில் குதித்தன,” என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனனில், மற்ற இயக்குனர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாகிறது. அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்றார்.  போராட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர். கொல்கத்தா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தின் உள்ளே சிலர் செருப்பை வீசினர். புலி படம் பொறித்த நாம் தமிழர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர்.  மத்திய அரசுக்கு எதிராகவும், கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக அங்கிருந்து வெளியேற்றி கைது செய்தனர்.  செருப்பு வீசியவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், போட்டி தொடர்ந்து நடைபெற்றது. செருப்பு வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்[4]. இவையெல்லாம் வீரச்செயல்களா இல்லையா என்று ஆராயும் முன்னர், போராட்டம் பெயரில் மாலை நேரத்தில் தெருக்களில் இடைஞ்சல் செய்தது, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்பவர்களை பாதித்தது முதலியன அதிகமாகவே பொது மக்களால் உணரப்பட்டது.

Ameer anti-MODI ranta

அமீர் “செக்யூலரிஸத்திற்குப் புறம்பாக” அடிப்படைவாத துலுக்கனாக பேசி வருவது: கூத்தாடிகள் எந்த அளவுக்கு வரம்புகளை மீறுகிறார்கள் என்பதற்கு, வகுப்புவாத, அடிப்படைவாத துலுக்கரின் பேச்சே ஆதாரமாக உள்ளது. “மத்திய அரசுதான் இறையாண்மைக்கு எதிரான தேசதுரோகி…….தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்,” என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார்[5]. இந்த அமீர், பலதடவை தான் ஒரு துலுக்கன் என்ற ரீதியில் பேசியிர்ந்தது கவனத்தில் கொள்ளத் தக்கது. பிறகு மழுப்பலாக, “மண்வெட்டி, கலப்பையும் ஆயுதமே, அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம்,” என்றும் அமீர் தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது[6]. மோடி-எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, நீட்-எதிர்ப்பு முகமூடிகளில், செக்யூலரிஸ வரம்புகளை மீறிய பேச்சுகள் அவரது முகத்தை வெளிக் காட்டியுள்ளது. அப்பேச்சுகள் வீடியோவாக இணைதளங்களில் காணக்கிடைக்கிறது. அதை உன்னிப்பாக கேட்கும் போது, மீரின் தராதரம் வெளிப்படுகிறது. ரஜினி எதிர்ப்பு விவகாரத்தில் கூட அது வெளிப்பட்டது. ரஜினி என்னமோ பிஜேபியின் ஆள், கைப்பொம்மை என்ற விதத்தில் பேசியது, காழ்ப்புணர்ச்சிகளை வெளிக்காடியதானது. மேலும், ஊடகங்கள் இத்தகைய பிரிவினைவாதிகளுக்கு, ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதும் புதிராக இருக்கிறது.

Anti-national leaders- IPL match

திடீரென்று உருவான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு  பேரவை: திரைப்பட இயக்குனர்கள் இணைந்து “தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு  பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். ஏன், எப்படி, எவ்வாறு திடீரென்று இவ்வமைப்பு உண்டானது என்று தெரியவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, மற்றவர்களுக்கு, இதில் உடன்பாடில்லை என்று தெரிகிறது. இந்த அமைப்பு குறித்து நடிகர்  சத்யராஜ், இயக்குநர்கள் பாரதி ராஜா, ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச் சான், அமீர்,  வெற்றிமாறன், வி.சேகர், ராம், சுப்பிரமணியம் சிவா, கவுதமன் ஆகியோர்  கூட்டாக  அளித்த பேட்டி வருமாறு[7]:  “………..காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை  மூடும் போராட்டம் நடத்தப்படும். தமிழ் இனத்துக்காகவும் காவிரி பிரச்சினைக்காகவும் ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. இரண்டு கட்சிகளுக்குமே தமிழர்கள் மீது  அக்கறை இல்லை,“ என்றனர்[8]. பாரதி ராஜா, அமீர், கௌதமன் மற்றவர் பேசியதை, கீழ் கண்ட வீடியோவில் காணலாம் / கேட்கலாம்[9]. அவர்களது பேச்சு, பக்குவமாக இல்லை, ஆனால், பிரிவினைவாதமாக [வெள்லைக்காரன் தான் இந்தியாவை உண்டக்கினான்], இனவெறித்தனமாக [இனபடுகொலை முதலிய வெறித்தனமான பேச்சுகள்], தேசவிரோதமாகத் தான் இருந்தது[10].

CSK fas beaten -Anti-national leaders- IPL match

எதிர்காலத்தை நோக்கி: 11-04-2018 அன்று இதனை எழுதி முடிக்கும் தருவாயில், வெளியிடப் பட்டுள்ள வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. மைதானத்தின் அருகே, சென்னை அணியின் டீ-ஷர்ட்டை அணிந்திருந்த சிறுவர்களை / இளைஞர்களை பிடித்து போராட்டக்காரர்கள் பலர் தாக்கிய காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இ-சர்ட்டை கழட்டி, திறந்த மேனியுடன் ஓட-ஓட விரட்டும் காட்சி படுகேவலமாக இருக்கிறது. தவிர, சிலர், வரிசையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்களை நோக்கி, டி-சர்ட்டை கழட்டடி என்று கைகாட்டி கத்துவது, அசிங்கத்தின் உச்சத்தைத் தொட்டதாகியது. காவலர்கள் கூட தாக்கப்பட்டுள்ளார்கள். தாடி வைத்த ஒருவன், ஒரு போலீஸை அடிப்பது திடுக்கிட வைக்கிறது. அரசியலில் ஆர்வம் கொண்டு எழுந்து வரும் இளைஞர்களை, திசைத் திருப்பி, உணர்ச்சிப் பூர்வமாக, அவர்களை உசுப்பி விட்டு, பிரிவினை என்ற நஞ்சை ஊட்டும் விதத்தில், இவர்கள் செயல்பட்டு வருவது தெரிகிறது. மக்களிடையே வெறுப்பையும், துவாசத்தையும், பிரிவினையையும் வளர்ப்பதை விட, தேச ஒற்றுமை சமுதாய அமைதி மற்றும் நேர்மறையான குணங்கள் முதலியவற்றை வளர்ப்பது நல்லது. ஏனெனில் இக்கால இளைஞர்கள், குறுகிய காலத்தில் உண்மையினை அறிந்து கொண்டு விடுவார்கள், அப்பொழுது, இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்.

© வேதபிரகாஷ்

11-04-2018

CSK fas beaten -Anti-national leaders- IPL match-2

[1] தி.இந்து, ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சியினர் கைது, Published : 10 Apr 2018 21:32 IST; Updated : 10 Apr 2018 21:32 IST

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23495564.ece

[3] விகடன், பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..! உச்சகட்ட பதற்றத்தில் சேப்பாக்கம்,  Posted Date : 17:41 (10/04/2018) Last updated : 21:14 (10/04/2018).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/121796-protest-around-chepauk-stadium-on-cauvery-issue.html?artfrm=related_article

[5] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரி: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்ஆயுதம் எது என்பதை தீர்மானிப்பது எதிரிஅமீர் மீண்டும் உறுதி, Posted By: Mayura Akhilan Updated: Tuesday, April 10, 2018, 14:43 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-need-take-the-weapon-if-necessary-says-director-ameer-316803.html

[7] விடுதலை, காவிரிப் பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயார்! திரைப்பட இயக்குநர்கள் கூட்டாகப் பேட்டி, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 15:36.

[8] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/159884-2018-04-10-10-27-39.html

[9] தமிழ்.இந்து, ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்றாலும் போராடுவோம்: அமீர்,

Tamil The Hindu, Published on Apr 9, 2018.

[10] https://www.youtube.com/watch?v=ho9IIKfhbD8

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை-பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)

ஏப்ரல்11, 2018

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவுஎதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறைபிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)

Separate flag for states - IPL match

தனி மாநிலக் கொடிகளுடன் சித்தராமையாவும், செபாஸ்டியன் சீமானும்: காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. உண்மையில் உதிரி கட்சிகள் மற்றும் அரசியல் பலமற்ற தலைவர்கள் தாம் அதிகம் கலாட்டா செய்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகளில் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றக்கோரி வலியுறுத்தும் செவி சாய்க்காத ஐபிஎல் நிர்வாகத்திற்கு எதிராக 10-04-2018 அன்று மாலை தமிழ்நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது[1].  சித்தராமையா பாணியில், செபாஸ்டியன் சைமன் செயல்படுவது திகைப்பாக இருக்கிறது. அதாவது, கர்நாடகாவிற்கு தனிக்கொடி என்று சித்தராமையா அறிவித்துள்ள நிலையில், சைமனும், “தமிழ்நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப்படும்,” என்றது, சித்து-செபாஸ்டியன் கூட்டணி யாதாவது ரகசியமாக செயல்படுகிறதோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் இந்தியாவை இணைக்கிறது, தேசவிரோதிகளை வெளிப்படுத்துகிறது என்பதால், தமிழக பிரிவினைவாதிகள் இத்தகைய கலாட்டாக்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

Stalin in IPL match

திமுக CSKவுடன் நெருக்கமாக இருப்பதால், ஸ்டாலின்இந்நேரத்தில் திட்டம் போட்டு, “போராட” தூரத்தில் சென்று விட்டார்!: இந்நிலையில், ‘ காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும்’ என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர், என்று ஊடகங்கள் கூறுவது வெறும் உபயோகம் இல்லாத வாதம், ஏனெனில், ஐபிஎல்லில் திமுகவுக்கு அதிகமாக வியாபார சம்பந்தங்கள் இருக்கின்றன. சீனிவாசன் முரசொலி மாறன் நெருக்கம் அறிந்ததே[2]. கருணாநிதி என்றுமே சீனிவாசனுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். அதனால் தான், ஸ்டாலின் அமைதியாக இருப்பதும், இந்த நேரத்தில் சென்னையை விட்டு விலகி இருப்பதுக் வெளிப்படுத்துகிறது.கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர், தோனி முதலிய வீரர்களை பாராட்டியது நினைவிருக்கலாம். இதெல்லாம், இந்த போராட்ட வீரர்களுக்கு [கூத்தாடிகளுக்கு] தெரியாதா என்ன?  கோடிகள் புரளும் சினிமா வியாபாரம் என்றால், கிரிக்கெட்டும் வியாபாரம் ஆகிவிட்டது, பல பரஸ்பர உறவுகள், நெருக்கங்கள்மற்றும் இனைப்புகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இரண்டுமே போதை போன்று இந்திய இளைஞர்களைக் கெடுக்கின்றன. ஆக ஒன்று மற்றொன்றை எதிர்ப்பது என்பது போலித் தனமானது! கூத்தாடிகள் கபட நாடகம் ஆடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நிச்சயமாக, எந்த அரசியல்வாதியும், இதனை எதிர்க்க மாட்டான்.

Velmurugan threatened with snake entering IPL pitch - 10-04-2018

.பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல பாம்புகள் உள்ளே வந்தால் நாங்கள் பொறுப்பல்ல….: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ராமர் படத்தை செருப்பால் அடித்த “பேராசிரியர்” ஜெயராமன் தலைமையில் நடந்த தமிழ்நாட்டின் நீர்உரிமைப் பாதுகாப்பு பொதுக், கூட்டத்தில், வேல்முருகன்[3], “……….சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், பாம்புகள் உள்ளே வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, ஹெலிகாப்டர் மறைக்கும் அளவுக்கு பெரிய கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்படும். தமிழக மக்களின் எதிர்ப்பை மோடிக்கு உணர்த்தப்படும்,” ஏன்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது[4]. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ”தமிழகத்தில் .பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது. இதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம். சென்னையில் உள்ள .பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல , எனத் தெரிவித்திருந்தார்[5].  இத்தனை வக்கிரமாக ஒருவன் பேச முடியாது. இந்துவிரோத கோஷ்டிகள், மோடி-எதிர்ப்பு போர்வையில் சேர்ந்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. வழக்கு பதிவு செய்யப் பட்ட இந்துவிரோதி எப்படி கூட்டம் நடத்துவது, அதில், இப்படிபட்ட கிறுக்கர் கலந்து கொள்வது முதலியனவும் திகைப்பாக இருக்கிறது. இதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Protestors came in disguise - IPL match

கிரிக்கெட் ரசிகர்கள் போல போலித்தனமாக வந்தபோராளிகள்: அதன்படி 10-04-2018 அன்று காலை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்[6] என்று விகடன் வர்ணிக்கிறது. மைதானத்துக்குப் பூட்டுப்போட முயன்ற அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்[7]. “பூட்டுப் போட” என்பதே தமாஷாக இருக்கிறது. அத்தகைய குற்றத்திற்கே, இவர்களை சட்டப் பட்டி சிறையில் அடைக்கலாமே? பிறகு எப்படி உலா வந்து கொண்டிருக்கிறார்கள்? முன்னதாக, ஐ.பி.எல் போட்டியின்போது போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், மைதானத்தைச் சுற்றிலும் சுமார் 4,000 போலீஸார் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 100 ஆட்களை கட்டுப்படுத்த 4,000 போலீஸா தேவைப் படுகிறது? பிறகு லட்சக் கணக்கில் வீட்டிற்கு செல்பவர்கள் பாதிக்கப் படுகின்றனரே அவர்களது நிலை என்ன? இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. காலையிலேயே இத்தகைய ரகளை செயத பிறகு, போலீஸார், அப்பகுதியில் யாரும் கூடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால்,, கார்களில், வேன்களில் வந்து சேர்ந்தது, அவர்கள் அனுமதிக்கப் பட்டார்கள் என்றாகிறது. அதாவது, போலித் தனமாக, கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள்போல பனியன்கள் அணிந்து வந்தார்கள், பிரச்சினை செய்தார்கள்![9] பனியன், காலணிகளைக் கழட்டி ஏறிந்தார்கள், ஆனால், அவர்கள் கைது செய்யப் பட்டனர்[10].

© வேதபிரகாஷ்

11-04-2018

Udhyanidhi family in IPL match

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாட்டு கொடியுடன் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று மாலை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை!, Posted By: Mohan Prabhaharan Published: Tuesday, April 10, 2018, 15:06 [IST]

https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-party-leaders-cine-stars-siege-chepak-groun-316806.html

[2] N. Srinivasan,67,is known to be close to M. Karunanidhi and his nephew Murasoli Maran whose party,the DMK, is credited with allowing his business to grow by creating a favourable policy environment,besides backing him in the state cricket body elections. Until last season,Karunanidhi would be a constant feature at the Chepauk’s VIP box Because of his DMK connections,Srinivasan has rivals in the AIADMK camp. As president of the Tamil Nadu Golf Federation, he came under attack from J Jayalalithaa over the lease for a 77.70-acre golf course in Chennai. In 1996, when holder Cosmopolitan Club’s lease came up for an extension,the federation too petitioned then chief minister Karunanidhi. The lease was eventually granted to both the golf federation and the club. In 2002, when Jayalalithaa became chief minister,she alleged inside the assembly that the lease had been given because Srinivasan was a “benami for Murasoli Maran.  Whenever Srinivasan’s Chennai Super Kings played at home. A source in Tirunelveli says that whenever Karunanidhi visits the district,he stays at India Cements guesthouse. Srinivas’s lawyer P S Raman,who also represents the BCCI,was state advocate general during the DMK regime.

http://indianexpress.com/article/news-archive/web/in-cricket-or-business-n-srinivasan-used-to-having-his-way/

[3] ` விகடன், .பி.எல் போட்டியில் பாம்புகள் புகுந்தால் நாங்கள் பொறுப்பல்ல‘ – வேல்முருகன், Posted Date : 12:10 (10/04/2018) Last updated : 12:32 (10/04/2018).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/121742-velmurugan-warns-ipl.html

[5] விகடன், `.பி.எல் வீரர்களுக்கு எதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல!’- எச்சரிக்கும் வேல்முருகன், Posted Date : 12:33 (09/04/2018) Last updated : 12:38 (09/04/2018).

[6] https://www.vikatan.com/news/tamilnadu/121635-we-are-not-responsible-for-anything-happen-to-csk-players-says-velmurugan.html

[7] விகடன், பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானம் முற்றுகை, Posted Date : 13:27 (10/04/2018) Last updated : 15:44 (10/04/2018)

[8] https://www.vikatan.com/news/tamilnadu/121757-members-of-tamizhaga-vazhvurimai-katchi-protest-oustide-chepauk-stadium.html

[9] புதியதலைமுறை, சேப்பாக்கம் மைதானத்தில் காலணி வீச்சு! ரசிகர்கள் போல் வந்த போராட்டக்காரர்கள், Web Team, Published : 10 Apr, 2018 08:46 pm

[10] http://www.puthiyathalaimurai.com/news/sports/43486-slippers-thrown-in-chennai-chepauk-stadium-between-ipl-match.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் (2)

ஜூலை27, 2013

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் (2)

Letter to obama.LS1அமெரிக்காவின் இரட்டை வேடங்கள்: குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது. அமெரிக்கா விசா வழங்கவே கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபரில் 12 கட்சிகளை சேர்ந்த 65 எம்.பிக்கள் கையெழுத்திட்டாதாக சொல்லப்படும், ஒரு கடிதத்தின் நகலை ஒபாமாவுக்கு பேக்ஸ் ஒன்றை அனுப்பியிருந்தனர். இந்நிலையில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க லாபியில் ஈடுபட்டிருந்தார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் நரேந்திரமோடி அமோக வெற்றி பெற்றதாலும் மற்றும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாலும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது[1].  நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்களது வெளிநாடு கொள்கை காரணமாகத்தான் நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து அவருக்கு விசா வழங்குவது பற்றி பரிசீலித்து முடிவு எடுப்போம்’’ என்றார்[2]. ஏற்கெனவே, ஐரோப்பிய யூனியன் மோடியை சந்தித்துப் பேசியுள்ளது.

Letter to obama.LS2முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்து வரும் தீஸ்தா செதல்வாத், கலவர இழப்பீடு பணம் கையாடல் செய்து விட்டார், என்று ஒரு முஸ்லிமே புகார் கொடுத்தபோது, அவர்களின் இரட்டை வேடங்கள் வெளிப்பட்டன. பணம், வியாபாரம் எனும் போது, பகிர்ந்து கொள்வதில் அவர்களது புத்தி வெளிப்பட்டு விடுகிறது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், ரபீக் அஹமது மோடியுடன் நெருக்கமாக இருக்கிறார். இவர் மீது எந்த முஸ்லிம் அமைப்பும் பத்வா போடவில்லை. ஏற்றுமதி-இறக்குமதி வணிகங்களில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள்தான்.  பிறகு அவர்கள் மோடியை எதிர்த்துக் கொண்டிருந்தால், வியாபாரம் நடக்குமா? இதேபோல, பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடந்துவரும் பிரச்சாரத்தால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார்கள். இது முஸ்லிம்களின் வழக்கமான நாடக தந்திரங்கள் தாம். நாளைக்கு செக்யூலஸித்திற்கு இதெல்லாம் சிறந்த உதாரணம் என்றும் சொல்வார்கள். ஆனால், இப்பொழுது, மோடி அவர்களை பயத்தின் மூலம் கட்டுப் படுத்தி வருகிறார் என்று மற்ற முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள். பிறகு முஸ்லிம்களிலேயே, இத்தகைய வெவ்வேறு வெளிப்பாடுகள் ஏன் என்று தெரியவில்லை.

Letter to obama.LS3அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் இந்திய விரோத பிரச்சாரம்[3]:  அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் அதற்கு செக் வைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அதே பேக்ஸ் கடிதம் மீண்டும் ஒபாமாவுக்கு அனுப்பி தங்களது மதவெறியை “மோடி–எதிர்ப்பு” முகமூடியிட்டு வெளிப்படுத்தியுள்ளனர். இது வெறும் கேவலமான பிரச்ச்ச்சார யுக்தி என்பது தெரிந்து விட்டது. ஆனால் இந்த கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மறுத்தார். இதையெடுத்து திமுகவின் கே.பி. ராமலிங்கமும் மறுத்தார்[4]. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் வியாபாரம் தான் முக்கியம். மோடி பிரதம மந்திரி ஆனால், அவருடன் தானே ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும். பிறகு அவர்கள் மோடியை எதிர்த்துக் கொண்டிருந்தால், இந்தியாவில் அமெரிக்க வியாபாரம் நடக்குமா? அப்பொழுது, அமெரிக்காவின் நிலை அசிங்கமாகி விடும். எனவே, தேர்தலுக்கு முன்னமே, தனது நிலைப்பாட்டை சரிசெய்து கொண்டு விடும் என்று நினைக்கிறது போலும்.

Letter to obama.LS4சீதாராம் யெச்சூரி தான் கையெழுத்திடவில்லை என்று மறுத்தார்: இக்கடிதத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன், அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்), எஸ்.அகமது (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்ட எம்.பி.க்களும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்[5].  ஆனால், சீதாராம் யெச்சூரி, ராஜ்யசபா எம்.பி,, தான் அந்த கடித்திலும் கையெழுத்திடவில்லை என்றும்[6], அது ஏதோ “வெட்டி-ஓட்டிய” வேலையாகத் தெரிகிறது என்கிறார்[7].

The latter includes the signature of Sitaram Yechury of the CPI; however, he told NDTV that this appears to have been “a cut and paste job.”He added, “I would be the last person to write to the US Administration and to do something like this. We don’t want anyone to interfere in the internal affairs of the country. These are issues which will have to be settled in India politically.

மேலும் அக்டோபர் 2012ல் எழுதப்பட்ட அந்த கடிதங்களை, இப்பொழுது, ஒரு முஸ்லிம் ஆதரவு இயக்கம் – மனிதக்கொலைகளுக்கு எதிரான கூட்டணி [Coalition Against Genocide (CAG)] ஆதரிக்கிறது என்று இன்னொரு முஸ்லிம் இணைதளம் – “டூ-சர்கிள்ஸ்” வெளியிட்டுள்ளது[8]. அதன் இணைதளத்தில் உள்ள பதிவுகள் மோடிக்கு எதிராக உள்ளன[9]. ஜூலை 1, 2008ல் எழுதப்பட்ட ஒரு கடிதம் இங்குள்ளது[10]. அமெரிக்காவில் இப்படி முஸ்லிம் சார்புடைய இயக்கங்கள், மோடி-எதிர்ப்பு என்ற பெயரில், இந்திய—விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது[11]. இந்தியர்களை எதிர்த்துக் கொண்டிருந்தால், நாளைக்கு இந்தியர்கள் அதனை உணர்ந்தால், என்னவாகும்? சி.ஏ.ஜி என்ற பெயரை வைத்துக் கொண்டு “சி.ஏ.ஜி.ரிபோர்ட்” என்று மோடிக்கு எதிராக அறிக்கை ஒன்றையும் தயாரித்து இணைதளத்தில் போட்டுள்ளது[12]. சாதாரணமான மக்கள் இதனை “சி.ஏ.ஜி. ரிபோர்ட்” என்றே எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

Letter to obama.3காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக என்று அனைவரும் மறுப்பது ஏன்?: இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்து விட்டால் அவரது ‘இமேஜ்’ உயர்ந்து விடும் என்ற பயத்தில் இந்த கடிதம் அவசரம், அவசரமாக எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறாமலே தயாரிக்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. 65 எம்.பி.க்களின் கையெழுத்து இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் அந்த கடிதத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி தலைவர்கள் கையெழுத்து போட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த கடிதம் தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்ட மோசடி கடிதம் என்று இப்போது தெரிய வந்துள்ளது[13]. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், இடது சாரி கட்சிகளின் எம்.பி.க்கள் விளக்கத்தால், ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பது உறுதியாக உள்ளது. அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் வேறு ஆவணங்களில் போட்ட கையெழுத்தை வெட்டி பிரதி எடுத்து, ஒட்டி மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்களின் கையெழுத்தும் இப்படி தில்லுமுல்லு செய்துதான் தொகுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. மோடி பிரதம மந்திரி ஆனால், கூட்டணி ஆட்சியில் யாரையாவது ஆதரித்தால் தான் பிழைப்பு நடக்கும் என்று எம்பிக்களுக்குத் தெரியும். அதனால், “நான் போடவில்லை”, என்று மறுக்கிறார்கள் போலும்!

Letter to obama.2அரசியல் மோசடியா, செக்யூலரிஸ விபச்சாரமா?: மோடிக்கு எதிராக சிலர் திட்டமிட்டு இந்த மோசடியை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரை குறை வேலையால் இந்த தில்லுமுல்லு வெட்ட வெளிச்சமாகி விட்டது. மோடிக்கு எதிராக நடந்துள்ள இந்த சதி பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு  ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தகா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுதர்சன் பகத் ஒரு கடிதம் அனுப்பிய்யுள்ளாறர்[14]. அதில், ‘‘ஒபாமாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில் நாங்கள் கையெழுத்து போடவில்லை என்ற பல எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இது மோசடி செயலுக்கு நிகரானது.  எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள்[15]. Letter to obama.1செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம், திமுக போன்ற அரசியல் விபச்சாரிகளுக்கு மோசடி செய்வது என்பது சகஜமான வேலைதான். பிஜேபி மதவாத கட்சி என்று சொல்வதால், தங்க்களுக்கு “செக்யூலரிஸ” சான்றிதழ் கிடைத்து விடுகிறது என்று அரசியல் செய்து வருகின்றார்கள். ஆனால், உண்மையில் இந்த கட்சிகள் தாம் வெறிபிடித்த மதவாத கட்சிகள் என்பது மக்கள் அறியும் போது, தூக்கியெறியப்படுவார்கள். சரித்திரத்தில் அவர்கள் யாரும் நினைத்துப் பார்க்கப் போவதில்லை.

வேதபிரகாஷ்

© 27-07-2013


ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

Yasin-maliok-with-seeemanசெபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக்சில ஒற்றுமைகள்: செபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் இவர்களது தொடர்புகள், அயல்நாட்டில் வைத்திருக்கும் உறவுகள், பெண்களிடம் நெருக்கம் அல்லது பலஹீனம் முதலியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. தமது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், வெற்றி-தோல்விகளை முதலியவற்றை ஜீரணிக்க முடியாமல், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னத்தான், மனித உரிமைகள், மக்களின் போராட்டம் என்றெல்லாம் பேசிவந்தாலும் தங்களது மதநம்பிக்கைகள், உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பேச்சுகளில், தொடர்புகளில், காரியங்களில் வெளிப்படுகின்றன. யாசின் மாலிக் குடித்து கும்மாளம் அடித்து, பெண்களுடன் ஆடியது, நடுவில் ஒரு பெண்ணை அலேக்காகத் தூக்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, மற்றவர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர். இவையனைத்தும் கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டது[1]. பெண்களின் உரிமைகள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு அக்கரை எதுவும் இல்லையா?

Yasin malik at Caddalore meetingகுடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[2]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Mushaal-mallickசீமானின் விஜய லட்சுமி நடிகையுடனான பிரச்சினை: விஜயலட்சுமி என்ற நடிகை, சீமான் தன்னை காதலித்து, உறவாடி, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக ஜூன் 2011ல் புகார் கொடுத்தார்[3]. பிறகு, சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறனார். விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், டைரக்டர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார். முதலில் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

Seeman with Vjayalakshmiகணவன்மனைவியாக வாழ்ந்தோம்: இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் – மனைவியாக வாழ்ந்தோம்[4]. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

Vijayalakshmi mother seemanநடிகை கொடுத்துள்ள ஆதாரங்கள் முதலியன: சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார்[5] விஜயலட்சுமி நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி[6]. சீமான், நடிகை மற்றும் நடிகையின் தாய் மூவரும் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் வெளியாகின. இதற்குள், சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.   இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.

seeman andசீமானின் வக்கீல் சொன்னது: வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது[7]: “நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. Seeman with womanசீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்”, இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்[8]. பிறகு சீமானே தனக்கு காதல், டூயட் என்றெல்லாம் செய்ய நேரம் இல்லை என்று சொன்னதாக செய்து வந்தது[9]. சினிமா பாணியில் பதில் இருந்தாலும், ஐபிஎல் சீனிவாசன் சொன்ன பதில் மாதிரி இருந்தது!Poster demanding to arrest Seeman for affair

சீமானுக்கும், இலங்கைப் பெண்ணுக்கும் தொடர்பு: சீமான் சினிமா உலகத்தைச் சேர்ந்ததால், நடிகைகள், பெண்கள் என்று பல தொடர்புகள் இருப்பதில் வியப்பில்லை. அதனால்தான், மேலே விவரித்த விஜயலட்சுமி விவகாரம் வந்துள்ளது. இருப்பினும், ஒரு இலங்கைப் பெண்னுடனான விவகாரங்கள், புகைப் படங்கள் முதலியன, யாசின் மாலிக்கைப் போன்றே ஒரு மனிதனாகக் காட்டுகிறது. Yasin malik with his wifeயாசின் மாலிக்கின் மனைவி மிகவும் அழகானவள், ஒரு நடிகையை விட அழகாக இருப்பாள். Yasin malik with his wife and othersஆனால், அவள் பாகிஸ்தானில் உள்ளாள். ஆகவே, பொழுது போக்கிற்காக, குடித்து பெண்களுடம் கும்மாளம் போட்டிருக்கலாம். Yasin malik and wife Mushalஆனால், சீமானின் பிரச்சினை என்ன என்பது தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சோயிப் மாலிக்-ஆயிஷா பிரச்சினை போன்றேயுள்ளது[10]. சானியா மிர்ஸாவுடன் திருமணம் செய்து கொள்ளும் முன்னர், ஆயிஷா என்ற பெண்மணி சோயிப் தன்னை கர்ப்பமாக்கினார் என்று வழக்குத் தொடர்ந்தார்[11]. பின்னர் சமரசம் செய்து கொண்டனர்[12]. அதற்கு முன்னர் சாயாலி என்ற மாடலுடன் உறவு இருந்தது[13]. இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில், ஷரீயத் என்ற முஸ்லிம் சட்டத்தின் படி, இப்படி பல பென்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்ளலாம்[14]. இருப்பினும் பிரபங்கஙளின் மணம் என்பதால் முரண்பட்ட கருத்துகள், தீர்மானங்கள் என்று வெளிவந்தன[15]. பிறகு ஒரு வழியாக திருமணம் முடிந்தது[16]. ஏனெனில், அவர்களுக்கு அந்த பந்தம் ஒரு கான்ட்ராக்ட் / ஒப்பந்தம் தான். ஆனால், சீமான் அப்படி செய்ய முடியாதே?

© வேதபிரகாஷ்

19-05-2013


சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

ஏப்ரல்11, 2013

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

Sarah Groves - passport- PTI

இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரம்[1], இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரம்[2], இந்தியா ஐரோப்பிய பெண்களுக்கு உகந்தது அல்ல[3] என்றெல்லாம் ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம்[4] செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியநாட்டவரை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். வெள்ளையர்களுக்கு தமது நிறப்பற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்துள்ளனர். காதல் வயப்பட்டு சேந்து வாழும் பெண் கிறிஸ்தவர், ஆண் முஸ்லீம், அதிலும், காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லீம். இதை எப்படி மேனாட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை யாரும் விளக்கவில்லை. மேனாட்டு ஊடகங்கள், மற்ற நேரங்களில் அதிகமாக அலசும் போது, இவ்விஷயத்தில் மறைப்பது சந்தேகமாக இருக்கிறது.

Victo-Groves-the-father-of-Sarah-Groves-who-was-stabbed-to-death-in-India-gives-an-emotional-press-conference-at-Guernsey

தந்தை விக்டர் “காஷ்மீருக்குப் போகாதே” என்று உறுதியாகச் சொல்லித் தடுத்தது: சாரா கிரௌஸின் தந்தை, தந்தை விக்டர், “என் மகளை காஷ்மீருக்குப் போகாதே என்று உறுதியாகச் சொல்லித் தடுத்துப் பார்த்தேன். ஆனால், அவள் கேட்கவில்லை” என்கிறார். அதாவது, காஷ்மீருக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அவள் பிழைத்திருப்பாள். சாராவின் காதலனும், “நான் அவளை காஷ்மீரத்திற்குக் கூப்பிட்டதால் தான் கொலையுண்டாள்”, என்றான். ஆனால், இருவர் சொல்வதிலிருந்தும், உண்மை சிறிது மாறுபடுகிறது, தந்தை அவள் ஒரு முஸ்லீமுடன் வாழ்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது. சையிது அஹ்மத் சோடாவோ, கோவாவிலியே இருந்திருந்தால், அவள் கொலயுண்டிருக்க மாட்டாள் என்கிறான். அப்படியென்றால், சாரா ஏன் காஷ்மீரத்திற்கு வலுக்கட்டாயமாக வரவேண்டும் அல்லது வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும்?

Richard-de-Wit-wife-Wit had a history of mental problems -but had never been violent or threatening

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[5]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[6]. அவள் தொடர்ந்து கூறும் விவரங்களில் வேறு விஷயமும் வெளிப்படுகிறது.

Sarah-Rehman-Richard-2013

என் கணவர் அப்பாவி  “அவர் துரத்தப் பட்டதால் இந்தியாவிற்கு சென்றுள்ளார்”: நெதர்லாந்தின் கடற்கரையைச் சேர்ந்த பிரதேசமாகும். டச்சுப் போலீஸார் அவரைத் துரத்தி வருகின்றனர். ஹாலந்தை விட்டு அதனால் தான் அவர் வெளியே வந்தார். ஹாலந்து, அந்த மனோதத்துவ நிபுணரை வைத்துக் கொண்டு வேவு பார்க்கின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என்று பயந்துதான், கடந்த ஆறு மாதங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில், பல கென்யா, டுனிஸியா நாடுகளுக்குச் சென்று பிறகு, கிருஸ்துமஸ் போது சுவிட்சர்லாந்தில் தங்கி விட்டு. இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளார்[7]. 20 வருடங்களுக்கு முன்னர், ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதனால், அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டு பல ஊர்களுக்குச் சென்று பொழுதைப் போக்கி வருகிறார். மனப்பிரச்சினகளினால், எந்த வேலையையும் செய்வதில்லை[8].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”. அதாவது, காஷ்மீருக்குச் செல்வதை விட, ஶ்ரீலங்காவிற்குச் செல், தரும காரியங்கள் செய் என்று சொன்ன அர்த்தம் என்னவென்று தெரியவில்லை

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட (பிரௌன்) பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [9].

Sarah Groves murderer - richard de Wit - Facebook

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[10]. அதிக அளவில் வலதுசாரி-சித்தாந்தம் கொண்ட குடியரசுக் கட்சிக்காரனாக சந்தேகிக்கப்பட்டதால், டச்சு பிலனாய்வுத் துறை, இவன் தம்து நாட்டு அரசிக்கு எதிராக இருக்கக் கூடும் என்று வேவு பார்த்து வந்தனர்[11]. இப்படி பல செய்திகளை வெவ்வேறு நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

கொலைக்குக் காரணம் இனவெறியா, மதமா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது[12]. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் முன்னமே குறிப்பிட்டது போல, சாராவின் பெற்றோர், தம் மகள் ஒரு முஸ்லீமை மணந்து கொள்வதை விரும்பியிருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், சாரா கஆஷ்மீரத்திற்கு வந்தவுடன், சயீதின் தாயார், அவளுக்கு இஸ்லாம் பற்றி போதித்திருப்பது தெரிகிறது. இல்லையென்றால், வெள்ளை மசூதிக்குச் செல்வது, தொழுவது முதலியவை நடந்திருக்காது. நவநாகரிகமான சாரா அந்த அளவிற்கு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரானால், என்பதும் நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

11-04-2013

 

 


[5] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] He believed the Dutch police and authorities were “out to get him” and that his government-appointed psychologist had colluded with them, she told The Daily Telegraph in Rotterdam. In fear that the police would take him into custody, and embarked on a journey across African and Asia to avoid “arrest”, she said.Over the last six months, he travelled first to Kenya and Tunisia, stopping off in Switzerland at Christmas, and arrived earlier this year in Delhi, India.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[8] Describing his decision to leave Holland and go travelling, funded by compensation payments from the accident, she said: “This has been a problem in his life. He is always running away from things. He feels stress and he runs. He is frightened people want to arrest him.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[9] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[10] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[11] He also claimed that as a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election.Mr de Wit said he had been visited by intelligence agents who believed he was a far-Right republican who posed a threat to Queen Beatrix of the Netherlands.

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

ஏப்ரல்10, 2013

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

Sarag Groves - different pose

ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியர்களை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். இருப்பினுகம், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்தனர்.

Wife of Richard de Wit

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[1]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[2].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [3].

Sarag Groves - the killed in different pose

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[4].

Sarah went to mosque on Friday and get killed on the same day

கொலைக்குக் காரணம் இனவெறியா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

10-04-2013


[1] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[2] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[4] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html