Archive for the ‘திருத்தம்’ Category

தோள்சீலை போராட்டம்: 200-வது ஆண்டு நிறைவு நாள் விழா- கூட்டணி மேடைகளில் பேசுவது ஏன் – சித்தாந்த கட்டுக்கதை சரித்திரம் ஆகாது! (3)

மார்ச்19, 2023

தோள் சீலை போராட்டம்: 200-வது ஆண்டு நிறைவு நாள் விழாகூட்டணி மேடைகளில் பேசுவது ஏன்சித்தாந்த கட்டுக் கதை சரித்திரம் ஆகாது! (3)

20ம் நுற்றாண்டில் கதை உருவாகிகற்பனையுடன் பெரிதாக்கப் பட்டது: மலையாள சிறுகதைகளில், கதைகளில், இந்த கட்டுக்கதை எவ்வாறு உருவாக்கி, பெரிதாக்கப் பட்டது என்பதை கவனிக்கலாம்:

  • அதேபோல, சி. கேஷவனின் சுயசரிதையில், ஒரு இளம் பெண் தன் தாயை எதிர்த்து, ரவிக்கை அணிந்து கலகம் செய்யும் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலப் பெண்கள் தோரணையை வெளிப்படுத்தும் மதிப்பீட்டிற்கு கிளர்ச்சி என்ற ரீதியில், இக்கதை உள்ளது.
  • கேரளாவில் நிலவியதாகச் சொல்லப் படும் 19ம் நூற்றாண்டைய “மார்பக வரி” என்ற வழக்கத்தை எதிர்ப்பதாக சொல்லப் படும், இத்தகைய வர்ணனைகள், கதைகள், விவரங்கள் எங்கிருந்து, எவ்வாறு, ஏன் வருகின்றன என்று ஆயவேண்டியுள்ளது.
  • 1957 இல், என் ஆர் கிருஷ்ணா, ‘ஈழவா: அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் ‘தைரியமான பெண்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார், ஆனால் அவர் நங்கேலி அல்லது அவரது கணவரின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
  • 1976 இல், ‘எஸ். பத்மநாபன் பணிகர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்றில், பின்னர், சி. வாசவ பணிகர் என் ஆர் கிருஷ்ணாவின் கதையில் காணப்பட்ட இரண்டு வரிக் கதையைப் பயன்படுத்தி இன்னும் விரிவாக எழுதினார், ஆனால் பிரச்சினையைப் பற்றி உறுதியாக, ஆதாரங்கள் எதையும் கொடுக்கவிலை.
  • பின்னர், 2000 CEல், S N சதாசிவன் “இந்தியாவின் சமூக வரலாற்றில்” இந்த சிக்கலை விரிவாக விவரித்தார் மற்றும் 1840 CE காலத்தைய விவரங்களைக் குறிப்பிட்டார்.
  • 2007 – இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, இறுதியில் பத்திரிக்கையாளர் சி.ராதாகிருஷ்ணன் அத்தகைய கற்பனை கதாபாத்திரங்களுக்கு நங்கேலி, கடப்பன் என்று பெயரிட்டு, அதற்கு மசாலா சேர்க்கும் வகையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட கதையையும் சேர்த்தார். இந்தக் கதை முதன்முதலில் மார்ச் 8, 2007 அன்று தி பயனியர் என்ற நாளிதழில் வெளியானது. அதன் மலையாள மொழிபெயர்ப்பு அதே நாளில் மாத்ருபூமி மற்றும் மலையாள மனோரமாவில் வெளியிடப்பட்டது.
  • பின்னர் 2012ல் எஸ்.பிடி.கவியூர் ஸஞ்சிகையிலும் (SBD Kaviyoor bulletin) பின்னர் டி.. முரளியின் கேன்வாஸிலும் / சித்திரத்திலும் வெளியானது.
  • ஏறக்குறைய அதே நேரத்தில், இது Vagabond, BBC மற்றும் Times of India ஆகியவற்றில் இக்கதை வெளிவந்தது.

தமிழிலும் வளர்க்கப் பட்ட கட்டுக் கதைதொடரும் விதம்: பிறகு, தமிழிலும், இக்கதை பெரிதாக்கி, விவரிக்கப் பட்டது. முலை வரி அல்லது மார்பக வரி (Breast Tax) (மலையாளம்; തലക്കരം, முலைக்காரம் அல்லது முலை-காரம்) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தில் (இன்றைய இந்தியாவின் கேரள மாநிலம்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஈழவ / எஸ்.சி இந்துக்கள் பொதுவாக தங்கள் மார்பகங்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய விரும்பும் பெண்களுக்கு 1924 வரை விதிக்கப்பட்ட வரியாகும். இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் எஸ்.சி / தலித் பெண்களுக்கும் மார்பகங்கள் வளரத் தொடங்கும்போது அரசாங்கத்திற்கு முலை வரியைச் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். இதர பிற்படுத்தப்பட்ட ஆண்கள் தலை-காரம் என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒரு வரியை தங்கள் தலைப்பாகைக்காக செலுத்த வேண்டும். திருவிதாங்கூரில் வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள். பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பெண்களும் தலித் பெண்களும் தங்கள் மார்பகங்களை மறைக்காமல் இருப்பது திருவிதாங்கூரின் நீண்டகால பாரம்பரியமாக இருந்தது. மேலும், இது ஒரு உயர் சாதி நபருக்கு மரியாதை அளிப்பதற்கான அறிகுறியாகும். இது இந்திய சாதி அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவ மறைபணியாளர்களின் செல்வாக்கின் விளைவாக இந்த நடைமுறை கேள்விக்குட்படுத்தப்பட்டது, என்றெல்லாம் விக்கிபீடியா வர்ணித்துத் தள்ளியது.

நங்கேலி குறித்த செவிவழிக்கதை: விகிபிடியா இப்படி தலைப்பிட்டே, இக்கதையைப் பரப்புகிறது. கிராமப்புற செவிவழிக் கதைகளின்படி நங்கேலி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவிதாங்கூர் இராச்சியத்தில் சேர்த்தலை என்ற இடத்தில் ஒரு பெண் வாழ்ந்ததாகவும், இவர் சாதி அடிப்படையிலான முலை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது மார்பகங்களை வெட்டிக் கொண்டார் என்ற கதை ஆரம்பித்தது. கதையின்படி, அவர் மார்பகங்களை வெட்டி அவற்றை வாழை இலையில் கட்டி வரி வசூலிப்பவருக்கு வழங்கினார், பின்னர் குருதி இழப்பால் இறந்தார், நங்கேலியின் மரணத்தைத் தொடர்ந்து, மக்கள் இயக்கங்கள் தொடங்கப்பட்டது. விரைவில் அவர் வாழ்ந்த இடம் முலச்சிபறம்பு ( முலைச்சி இடம் என்று பொருள்) என அழைக்கப்பட்டது என்றெல்லாம் கட்டுக்கதை பெரிதாக்கப் பட்டது.

50 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டக் கட்டுக் கதை: எவ்வாறாயினும், இந்த கதை இந்தியாவின் எந்த வரலாற்று பதிவுகளிலும் இடம்பெறவில்லை. மேலும் இதன் நம்பகத்தன்மையும் விவாதத்திற்குரியதாக உள்ளது. நங்கேலியின் காலத்தில் கேரளத்தில் தாய்வழி சமூகத்தில் மார்பகங்களை மறைப்பது வழக்கமல்ல என்று வரலாற்று ஆசிரியர் மனு பிள்ளை வாதிடுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலேயர் குடியேற்ற செல்வாக்கின் கீழ் விக்டோரிய மகாராணி கால நெறிமுறைகள் திருவாங்கூர் சமூகத்தில் ஊடுருவியது. இது தோள் சீலை அணியும் உரிமைக்கான அடுத்தடுத்த வர்க்கப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அனைத்து கீழ் சாதியினருக்கும் விதிக்கப்பட்ட ஒடுக்குமுறை வரிக்கும், ஆட்சிக்கும் எதிராக நங்கேலி எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் நம்புகிறார். இது காலப்போக்கில் பெண்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஒரு வித்தியாசமான ஆணாதிக்கத்துகு எதிரான போராட்டமாக தொடர்ந்தது என்றெல்லாம் வர்ணித்தாலும், இது இப்பொழுது உண்டாக்கிய கட்டுக்கதை ஆகும்.

  1. தோள்சீலை போராட்டம் பற்றி கம்யூனிஸ்டுகள் பொதுகூட்டம் போட்டு இரண்டு முதலமைச்சர்களை வைத்து பேச வைத்துள்ளனர்!
  • சமீத்தில் உருவாக்கப் பட்ட கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, கதையாக அளந்துள்ளனர். கம்யூனிஸ்ட்-திராவிட மாடல்களுக்கு கைவந்த கலை!
  • ஆனால், இந்துத்துவ வாதிகள் தான் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்கள் ஆயிற்றே, எதற்கு-எதற்கோ பொங்குவரே, இப்பொழுது ஏன் மௌனம்?
  • மறுபடியும் குறிப்பிட்ட சமூகத்தினரை இந்த கட்டுக் கதையை வைத்து தூஷித்துள்ளனர், அவதூறு பேசியுள்ளனர், புரியவில்லையா?
  • ஐரோப்பிய பரதேசிகள் கேரளாவைச் சுற்றி வந்தபோது, சில பெண்கள் மார்பங்களை மறைக்காமல் ஆடை அணிந்திருந்தனராம்! கட்டுக்கதை ஆரம்பம்!
  • என். ஆர். கிருஷ்ணா, வாசவ பணிக்கர் ஒருவரி கதை விரிவாக்கப் பட்டபோது, சி.ராதாகிருஷ்ணன் நங்கேலி, கடப்பன் என்று பெரிட்டாராம்!
  • டி. முரளி என்பவர் சித்திரமாக வரைய, பிபிசி இக்கதையை ஒளிபரப்ப, கட்டுக்கதைக்கு சரித்திரப் போர்வை போடப் பட்டது!
  • ஒருவன் சொன்னான், அவன் – இவன் சொன்னான், இன்னொருவன் சொனான், இன்னும் இன்னொருவன் சொன்னான், இதுதான் அவர்கள் ஆராய்ச்சி நெறிமுறை!
  • 50 (1873), 100 (1923), 150 (1973) ஆண்டு கொண்டாட்டங்கள் தெரியாது, ஆனால் 200 ஆண்டுகள் ஞாபகத்திற்கு வந்து விட்டது!
  1. அட வாங்கப்பா அத்வைதம், துவைதம், என்று பேசலாம்; சங்கராச்சாரி பற்றி விவாதிக்கலாம், ராமாயணம் பாடலாம்! வடை சுடலாம்!

© வேதபிரகாஷ்

08-03-2023

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

ஓகஸ்ட்7, 2013

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

Stefano and Paulo Mainoவெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: இந்திய எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது குறித்து பேசிய குர்ஷித், நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம். நாம் உணர்வுடனும், விழிப்புடனும், தீவிர கண்காணிப்புடன் உள்ளோம். எந்த வகையிலும், இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. அது குறித்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது. இரு பல காலமாக நடந்து வரும் பேச்சுவார்த்தையாகும். அண்டை நாடுகளுக்குள் உறவு இல்லாமல் இருப்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ளார்[1].

  • நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம்: அதனால்தான் பாகிஸ்தானியர் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்; நமது வீரர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்; தலைகளையும் கொய்து அனுப்புகிறார்கள்.
  • நாம் உணர்வுடனும்,  விழிப்புடனும்,  தீவிர கண்காணிப்புடன் உள்ளோம்: இப்படி சொல்வதற்கு இந்த ஆளுக்கு என்னதான் மூளை இருக்கிறது என்று தெரியவில்லை.
  • எந்த வகையிலும்,  இந்திய  எல்லைக்குள்  புகுந்து  பாகிஸ்தான்  ராணுவம்  தாக்குதல்  நடத்துவதை  அனுமதிக்க  முடியாது: அதுதான் நடந்து வருகிறாதே, பிறகு என்ன வாய் சவடால்?
  • பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது: கேடு கெட்ட இந்த ஆள், ஆஜ்மீரில் பாகிஸ்தான் ஜனாதிபதி சாமி கும்பிட வந்தபோது, ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தான்.

Sonia anestral house at Orbassano, Turin, Italyராணுவ அமைச்சர் அந்தோனி வெட்கமில்லாமல் பேசிய விதம், அசிங்கமாக இருந்தது: வழக்கம் போல சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது. இது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி எழுந்ததை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, எல்லைத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்[2]. அதில், “பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையில் வந்த சிலரே இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார் அந்தோணி. எந்த நாட்டு ராணுவ மந்திரியும் சூடு-சொரணை இல்லாமல் இப்படி பேசியிருக்க முடியாது. கோழைத்தனத்துடன் பேசிய அவர் மன்னிப்புக் கேட்கவும் மறுத்து விட்டார்[3].

  • பாகிஸ்தான்  ராணுவத்தின்  சீருடையில்  வந்த  சிலரே  இந்திய  ராணுவ  வீரர்கள்  மீது  தாக்குதல்  நடத்தியுள்ளனர்: இப்படி பேசுவது கேடு கெட்டராணுவ மந்திரி. பேசும் போது கூட, ஒன்றும் புரியவில்லை. குழறியபடியே பேசினார். இந்த ஆள் முகத்தைப் பார்த்தாலே, இருக்கும் வீரமும் போய்விடும்.

Sonia Italy connectionராணுவம் கொடுத்த அறிக்கையை மாற்ற வைத்தது: முதலில் ராணுவ அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன், தீவிரவாதிகள் ரஎல்லையில் சுட்டதில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இருந்தது[4]:

In its first statement, the PIB (Defence Wing) stated:“A patrol of Indian Army comprising of one Non Commissioned Officer and five Other Ranks was ambushed by a Pak Border Action Team close to the Line of Control in Punch Sector of J&K early morning on 6 August 2013. In the ensuing firefight, five Indian soldiers were martyred. The ambush was carried out by approximately 20 heavily armed terrorists along with soldiers of Pak Army.”

ஆனால், அந்தோனியின் உளறலுக்குப் பிறகு, அது கீழ்கண்டவாறு மாற்றப் பட்டது. அதாவது, அரசியல்வாதியின் விருப்பத்திற்கு ஏற்ப அறிக்கையை மாற்றி வெளியிட்டது:

 The PIB (Defence Wing) was forced to toe the political leadership line on the subject. Antony effectively changed the Indian army version of incidentThe words “persons dressed in Pakistan army uniform” changed the whole connotation, suggesting that the intruders were not Pakistan army regulars but could be terrorists or non-state actors wearing Pakistan army uniforms.  A fact that was pointed out by Leader of Opposition Arun Jaitley in the Rajya Sabha, but something the Defence Minister refused to accept.As a result of the minister’s statement, the PIB (Defence Wing) issued a second statement titled “REGRET & REVISED PRESS RELEASE”.In it it stated:1. The following Press Release supersedes the earlier Press Release ( No. PRO/Jammu/425/Aug /2013 ) forwarded from this office.

2. You are requested to follow the new one.

3. Inconvenience is deeply regretted.”

It then attached a mirror of the statement made by Antony in Parliament. Incidentally, both the PIB statements were signed by SN Acharya.

முன்பு, எல்லையில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பாராளுமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்திய எல்லைக்குள் தீவிர வாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்து தாக்கியதில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்தார். ஏ.கே.அந்தோணி தவறான அறிக்கை வெளியிட்டதாகவும், இதறக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினர் எடுத்துக் காட்டினர்[5]. இத்தகைய முரண்பட்ட காரியத்திற்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டார், ராணுவ அமைச்சர்[6].

sonia with Anushka sisterஊமை பிரத மந்திரி: ஒன்றுக்கும் சளைக்காத ஊமைக் கோட்டன் பிரதம மந்திரி மௌனம் தான் காக்கிறது. இந்த அழகில் எதிர் கட்சியுடமன் பேச வேண்டும் என்கிறாராம்[7]. பாராளுமன்றத்தில் பேசாததை, தனியாக ஏன் பேச வேண்டும்? இப்படி ஒட்டு மொத்தமாக, இந்திய நலன்களில் சிறிதும் அக்கரையில்லாத இவர்களை வைத்துக் கொண்டு, இந்தியர்கள் வாழ்வது வேடிக்கைதான்.  போதாகுறைக்கு நடுவில் கனிமொழி வேறு பேசியது வேடிக்கையாக இருந்தது:

கனிமொழி (தி.மு..):[8] எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிவில் மக்கள் உயிரிழப்பதையும், நடுக்கடலில் மீனவர்கள் கொல்லப்படும் சம்பவத்தையும் மறைப்பது பிரச்னைக்கு தீர்வு தராது. ஆனால், இப்பிரச்னைகளை அரசு நிராகரித்து விட்டு செயல்படுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நிலையை எடுக்க வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டது.

Sonia-Sonia-Soniaஆட்டி வைக்கும் சோனியா கூறுவது[9]: எல்லையில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வஞ்சகத்தனமான செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியும், மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது. இத்தகைய நயவஞ்சகச் செயல்களால் இந்தியாவை அடிபணியவைத்துவிட முடியாது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘‘இதுபோன்ற அப்பட்டமான வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது’’ என்று கூறிய அவர், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார்[10].  உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த இந்தியாவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

  • வழக்கம் போல இப்படி பேசி ஏமாற்றுவது இவரின் வேலையாக இருக்கிறது.
  • ஜம்முகாஷ்மீரில்நிகழ்ந்துள்ளசம்பவம்அதிர்ச்சியும், மனவேதனையையும்அளிப்பதாகஉள்ளது: இந்த வாய் சவடாலால் என்ன ஆகப் போகிறது? போன உயிர்கள் வந்து விடுமா?

Sonia with friends at a Cambridge Pubஅரசு மீது வீரர்கள் குடும்பத்தினர் புகார்[11]: பூஞ்ச் பகுதியில் நேற்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரர்களின் குடும்பத்தினர்கள் மத்திய அரசு மீது புகார் தெரிவித்துள்ளனர். வீரர்கள் தாக்கப்படுவது ‌தொடர்கதையாகி வருவதாகவும், அரசு இதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவி‌ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர். இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு தார்மீக பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மணீஸ் திவாரி இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்கிறார். ஆனால், அவ்வாறு செய்ததே அந்தோனிதான் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாது. மக்கள் வரும் தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும். இல்லையென்றால்,வட இந்தியாவின் பெர்ம் பகுதி, பாகிஸ்தான்-சீனா ஆக்கிரனித்து விடும். அதற்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ்காரர்களே வழி செய்து கொடுப்பார்கள்.

வேதபிரகாஷ்

© 07-08-2013


பரதநாட்டியம் பற்றி நாத்திகம், கிருத்துவம், பெண்ணியம், விபச்சார பிரச்சாரம் முதலியவை ஏன்?

ஓகஸ்ட்2, 2013

பரதநாட்டியம் பற்றி நாத்திகம், கிருத்துவம், பெண்ணியம், விபச்சார பிரச்சாரம் முதலியவை ஏன்?

DK-Christian nexus.3

சொர்ணமால்யா தேவதாசி முறை கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்று பேசியது: சென்னையில் நடந்த மகளிர் கல்லூரி நாட்டிய விழா வொன்றில் நடிகை சொர்ணமால்யா பங்கேற்று பேசியபோது,  “தேவதாசிகள் கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர்களாக திகழ்ந்தனர்தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்தன. தேவதாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவதாசிகள் அதனை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன் வந்து தேவதாசிகளானார்கள்” என்று கூறினார்.  தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்று விமர்சித்துள்ளார்[1]. மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி ‘தேவதாசி முறை ஒழிப்பு’க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் நினைவு கூர்ந்த ஸ்வர்ணமால்யா, தேவதாசி முறையை மிகவும் மெச்சியபடி கொண்டாடினார். அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்றும் தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றும் நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்[2]. அப்போது அந்த பேச்சுக்கேட்டு கூடியிருந்தோர் பலத்த கரகோசம் எழுப்பினர்[3]. இப்படி ஊடகங்கள் உசுப்பிவிட்டுப் பார்த்தன.

DK-Christian nexus

ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவி கல்பனா எதிர்த்து அறிக்கை விட்டது: சொர்ணமால்யா பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மகளிர் நிர்வாக குழு செயலாளருமான கல்பனா[4] இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய காலங்களில் தேவதாசிகளை ஜமீன்தார்களும் உயர்சாதியினரும் தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி அடிமைப்படுத்தி வைத்து இருந்தனர். பெண்கள் உரிமைக்கு எதிரான அடிமைத்தனமாகவே அது கருதப் பட்டது. எனவே தான் பெண்கள் நலனில் அக்கறை கொண்டோரின் முயற்சியால் தேவதாசிகள் முறை ஒழிக்கப்பட்டதுதேவதாசிகள் தொழிலுக்கு வக்காலத்து வாங்குவது போல் சொர்ணமால்யா இப்போது பேசுவது கண்டிக்கத் தக்கது”, என்று கூறியுள்ளார்[5]. ஆனால், இந்த பெண்கணிகள் எல்லோரும் மற்ற விஷயங்களில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் அல்லது அந்நேரங்களில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவதில்லை.

DK-Christian nexus-in abusing Bharatnatyam

தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்என்ற கருத்தரங்க தலைப்பு பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்”  என்று மாறியதாம்: முன்னதாக “தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்” (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக “பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்” (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது[6]. இருப்பினும், சில பெண்ணிய அமைப்புகள் அக்கருத்தை ஏற்கவில்லை[7]. பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்த உதவியதும் மேலாதிக்க சாதி மனப்பான்மையின் கொடூர வடிவாகவும் திகழ்ந்த பெருந்தீமை ஒன்றை ஒரு பெண்ணாக இருக்கும் நடிகையே ஆதரித்து வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[8].

XRatedBible

கிருத்துவர்களின்  “தேவமகளிரும்”,  இந்தியாவின்  “தேவரடியாரும்: ஐரோப்பியர்களின் எழுத்துகளினால்தான் தேவதாசி என்றாலே ஒரு அசிங்கமான, ஆபாசமான, கேவலமான, அருவருப்பான வார்த்தைப் போல எண்ணம் உருவாகியது. கிருத்துவத்தில் பெண்கள் அடக்கப் பட்டு வந்தனர். கன்னியாஸ்திரிக்கள் என்ற போர்வையில் பெண்களை ஜேஹோவாவிற்கு அர்பணித்தனர்[9]. leave-the-matter-in-Jehovah“கடவுளின் பெண்கள்”, “ஏசுவின் மனைவிகள்” என்று அவர்கள் வைக்கப்பட்டு, பிஷப்புகள், பாதிரிகள் முதலியோர் தமது காமப்பசிக்கு உபயோகப்படுத்தி வந்தனர்[10]. Abuses of Christianity booksஆனால், இந்தியாவிற்கு அவர்கள் வந்தபோது, கோவிலில் நடனமாடும் பெண்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் மதத்தில் எப்படி பெண்கள் வைக்கப்பட்டார்களோ அப்படித்தான் இந்தியாவிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்று எழுதி வைத்தனர். இதைப் படித்த இந்தியர்களுக்கு அத்தகைய தவறான அபிப்ராயமே உண்மையாக மனங்களில் பதிந்து விட்டது. தொடர்ந்து அவ்வாறே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததால், வருவதால், அவற்றைப் படித்து / கேட்டு வருபவர்களும் அவைதான் சரித்திர உண்மை என்று நம்பி வருகின்றனர்.

Christtian ministries for prostitutionஆனால் இன்றும் கிருத்துவத்தில் விபச்சாரத்தை வைத்துக் கொண்டு பிரசாரமே செய்து வருகிறார்கள். அதாவது, மதரீதியாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது. மேலே உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

திராவிட சித்தாந்திகளின் போலித் தனம்: 20 நூற்றாண்டில் திராவிட சித்தாந்தம் அரசியல் உருவத்தில் மாறியபோது, “ஆரியர்களின்” கலாச்சாரம் என்று அனைத்தும் முத்திரையிடப்பட்டு ஒதுக்கப்பட்டன. கோவில்கள் பகிஷ்காரம் என்று வந்தபோது, கோவில்கள் சம்பந்தப் பட்ட அனைத்தும் தூஷிக்கப்பட்டன.  பரதநாட்டியத்தை ஒதுக்க வேண்டும், இழிவு படுத்த வேண்டும் என்று வந்தபோது, முதலில் அது “சதிராட்டம்” என்ற முறையிலிருந்து தோன்றியது என்றனர். ஆனால், அதற்கான நூல்கள் “பரதம்” போன்று காணப்படவில்லை. இருப்பினும், பரதநாட்டியம், “தேவர் அடியார் முறை”, “தெவிடியாமுறை” தான் என்று கொச்சைப் படுத்தி எதிர்த்து, தடைசெய்யப்பட்டது. இருப்பினும் பரதநாட்டியத்திற்கு மேனாடுகளில் வரவேற்பு இர்ருப்ப்பது கண்டு அதனை வியாபார ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அந்நியர்களும், கிருத்துவர்களும், நாத்திகர்களும், திராவிட கூட்டங்களும் முயன்றன.  அதுதான், பரதத்தை ஒருபக்கம்  இழிவு படுத்துவது, மறுபக்கம் போற்றுவது. கிருத்துவர்கள் அதனை சொல்லிக் கொடுத்தால் பாராட்டு, பரிசு முதலியன. மற்றவர்கள் நடத்தினால் கேவலமாகப் பேசுவது, எழுதுவது முதலியன தொடர்ந்தன. எப்படி நாத்திகர்கள் மற்றும் கிருத்துவர்கள் சேர்ந்து கொண்டு, ஒரு புறம் பரத நாட்டியத்தை இழிவுபடுத்தியும், இன்னொரு பக்கத்தில் அதனை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர் என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[11]. 2007ல் ஜோயா ஜைதி (Zoya Zaidi) என்பவர்[12] வழக்கம் போல, பிரச்ச்சார ரீதியில் அரைவேக்காட்டுத் தனமாக எழுதியபோது, அதிலிருந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதினேன்[13].

வேதபிரகாஷ்

© 02-08-2013


[9] இது பற்றி லட்சக் கணக்கான புத்தகங்களை கிருத்துவர்களே – கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், சரித்திராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள் – எழுதி வைத்துள்ளனர்.

[10] இது பற்றியும் லட்சக் கணக்கான புத்தகங்களை கிருத்துவர்களே – கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், சரித்திராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள் – எழுதி வைத்துள்ளனர்.

[12] Dr. Zoya Zaidi MD (Honours) Moscow.Physician Rheumatologist, AIIMS, New Delhi. Practicing as a Physician, Rhaumatologist for last 28 years in Aligarh (UP), India. Has more than two thousand Rheumatology Patients registered in the clinic.Life Member of APLAR (Asea Pacific League of Association of Rheumatologists) and IRA (Indian Rhematism Association) Has attended, and continues to regularly attend, many Rheumatology Conferences,on both international and national level. Has presented many scientific papers at these conferences. A typical article can be seen here: http://www.sikhspectrum.com/052007/devadasi.htm

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

ஏப்ரல்7, 2013

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

Sample Picture - facebook

இதை முந்தைய பதிவுடன் சேர்த்துப் படிக்கவும்[1].

Sarah Groves

கோவாவில் உல்லாசமாக நண்பர்களுடன் இருந்த சாரா கிரௌஸ்: சாரா கிரௌஸ் கோவாவிற்கு சமீர் சோடாவுடன் சுற்றுலா சென்றாளாம். அங்கு அவளுக்கு நண்பர்கள் இருந்தார்களாம். சாரா மீது காதல் கொண்ட சமீர், “வா, என்னுடன் காஷ்மீருக்கு வா”, என்றழைத்தானாம். அவளோ, “நீ போ, நன்றாக அனுஅவி” என்றாளாம். அவனோ, “நீ இல்லாமல் நான் ஒரு நாள் எப்படி இருப்பேனோ” என்றானாம்[2]. பிறகு காஷ்மீருக்கு வந்தாளாம். நான்கே நாட்கள் தங்குவேன் என்பவள் அங்கேயே தங்கி விட்டாளாம்.

Sarah Groves murder2

நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம்: சமீர் சோடா சொல்வதாவது[3], “நான் சாரா கிரௌஸை கோவாவில் சந்தித்தேன். பிறகு அவளை காஷ்மீருக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படியே அவள் இங்கு வந்தாள். அவள் மிகவும் அருமையான பெண். எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொண்டாள். அவள் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் புரிந்து கொண்டாள், ஆமாம், அனைத்தையும்…..” . அப்படியென்றால், என்னவென்று புரியவில்லை. ஆங்கிலேயர்கள் இத்தகைய காதலை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

டைம்ஸ் ஆப் இந்தியாவின் படி[4], அதுல் ரஹிம் சோடாவின் மகன் சையது அஹ்மது கூறுவதாவது, “நான் சாரா கிரௌஸ் கோவாவிற்குச் சென்றபோது சுற்றுலா உதவியாளனாக இருந்தேன். அவள் குல்மார்க் வரை சென்றுள்ளாள். இன்னும் பல இடங்களை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள். எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தாள். எங்களுடன் உணவு உண்டு எங்கள் குடும்பத்தாருடன் தங்கியிருந்தாள், என்று உணர்ச்சியுடன் கூறினான்.

One of the sons of the boathouse owner Abdul Rahim Shoda (pictured) is also helping police with the inquiries, although he has not been arrested, according to reports

டெயிலி மெயிலின் படி[5]: சமீர் சோடா சொல்வதாவது, “நான் அவளுடைய பாய் பிரென்ட். நாங்கள் திருமணம் செய்து கொண்டிருப்போம். நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம். ஏனெனில், கோவாவில் அவள் தனது நண்பர்களுடன் இருந்தாள். நான் தான் இங்கு வருமாறு அழைத்தேன்”. பொலீஸார், ரிச்சர்ட் டி விட்டிற்கு கன்னபிஸ் / போதை மருந்து விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்று கூறுகிறது.

Richard de Wit - Netherlands

படகுவீட்டின் மகன் சாராவை காதலித்தான் என்றால்,  ரிச்சர்டுக்கு ஏன் போதை மருந்து கொடுத்தான்?: சாராவை உயிருக்கு மேலாகக் காதலித்தான் என்றால், அடுத்த அறையில், ரிச்சர்டை எப்படி தங்க அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. தங்க வைத்த பிறகு, ஏன் போதை மருந்து அவனுக்கு “சப்ளை” செய்தார்கள் என்றும் தெரியவில்லை. சாதாரணமாக காதல் என்றாலே பொறாமை வரும், தன்னுடைய காதலியுடன் யாராவது பேசினாலே கோபம் வரும், பிறகு எப்படி இப்படி?

வேதபிரகாஷ்

07-04-2013


[2] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] Samir Shoda, the son of the houseboat’s owner, was helping police with their inquiries, the Sunday Telegraph reported. He told the paper that he met Groves during a holiday in Goa and that he had invited her to stay at the hotel. Shoda, who said he had been out with friends at the time, added: “She was an amazing person. She understood everything, we shared our problems, everything.”

http://www.guardian.co.uk/world/2013/apr/07/kashmir-police-investigating-murdered-briton

[4] Shoda’s son Syed Ahmad, who works as guide in Goa and had accompanied Sarah, said that the British tourist had so far only gone to Gulmarg and was planning to visit other tourist places. “Sarah had got close to our family. She used to have food with us and stay with my family members,” said the houseboat owner, his voice choking with emotion. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-06/india/38326582_1_houseboat-owner-british-tourist-tourist-police

[5] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)!

மே6, 2012

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)!

கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ அல்லது திட்டமிட்டு நடக்கும் நாடகமா – யார் சூத்திரதாரி? சொல்லிவைத்தால் போல, மதுரை ஆதீனத்தில் தொடர்ந்து ஏற்படும் நிகழ்ச்சிகள், அதுவும், குறிப்பாக விஷேச நாட்களில் – மதுரை கோவிலில் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது, சித்திரா பௌர்ணமி முதலியவை, முன்பு காஞ்சிமடம் சங்கராச்சாரியாரை தீபாவளி சமயத்தில் கைது செய்ததைப் போலவே நடக்கின்றன.

மற்றமத மடாதிபதிகள் ஏகப்பட்ட குற்றங்களில் சிக்கியுள்ளபோதிலும், அங்குக் காட்டப்படாத அக்கரை, கவனம், ஜாக்கிரதை, சாமர்த்தியம், சாதுர்யம் எல்லாமே இங்குக் காட்டப் படுகின்றன. ஆக இது திட்டமிட்டு நடக்கும் நாடகமே என்றுதான் எண்ணத்தோன்றுகிறடது. அதாவது, “நித்யானந்தா” என்ற பெயரில் இந்து மடாயத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. முடிவில் அரசே இந்த மடாலயத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனவே கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. கடந்த 1300 ஆண்டுகளாக இந்துக்கள் பலத்ரப்பட்ட தாக்குதல்களுக்குட்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். இஸ்லாமிய-கிருத்துவ ஆட்சிகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தாலும், செக்யூலரிஸம் என்ற போர்வையில், எல்லோரும் சேர்ந்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி ஆண்டு வருகிறார்கள். இந்துக்களின் பற்பல உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. செக்யூலரிஸ மாயையில் அவ்வாறு ப்பறிக்கப்பட்டுள்ளதே தெரியாமல் இந்துக்கள் தங்களது சொந்த நாட்டில் அடிமைகளாக வாந்து வருகிறார்கள்.

ஒருபக்கம் ரெய்டு நடந்து கொண்டேயிருக்கிறது, மறுபக்கம் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது முதலியவற்றைப் பற்றி அந்த நாத்திக ஊடகங்கள் வெட்கமில்லாமல் நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்து வருகின்றன.

மதுரை ஆதீனம் மடத்தில் ரெய்டு: மதுரை ஆதீன மடத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்[1]. இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆதீனம் அருணகிரிநாதர் உள்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்[2]. இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப் பட்டது. இங்கு 1980,ல் 292வது அருணகிரிநாதர் ஆதீனமாக பொறுப்பேற்றார். இவர் 2004ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை அறிவித்தார். அதன்பின் சில நாட்களிலேயே சுவாமிநாதன் நீக்கப்பட்டார்.  8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் நியமிக்காத மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்தியானந்தாவை 293வது ஆதீனமாக அறிவித்தார்.

இதற்கு இந்து மத அமைப்புகள் (இந்து மக்கள் கட்சி) மற்றும் பக்தர்கள் (அல்லது பக்தர்கள் போர்வைல் நாத்திகர்கள், இந்துமத விரோதிகள்) இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நியமனத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள் நித்தியானந்தா நியமனத்தை ஏற்கவில்லை. இந்த ஆதீனங்கள் சேர்ந்து, நித்தியானந்தாவின் நியமனத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இப்படி இவ்வளவு வேகமாக அரசு எந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, அவை உடனே விடுமுறை நாட்களில் துரிதமாக வேலை செய்கின்றன என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் குண்டு வைத்தால் கூட தூங்கிக் கொண்டிருக்கும் மத்தொய சோனியா மெய்னோ அரசு, எப்படி இந்த விஷயத்தில் இவ்வளவு வேகமால்ச் செயல்படுகிறது என்பதனைப் பார்க்க வேண்டும். உண்மையில் தில்லியில் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கத்தான் பெரிய கூட்டமே கூட்டப்பட்டுள்ளது. அங்கு தமிழக முதல்வரும் சென்றுள்ளார். அந்நேரத்தில் தான் தில்லியிலிருந்து வந்துள்ள ஆணையின்படி சோதனை நல்லநாளில் நடக்கிறதாம்!

தில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது: 12 அதிகாரிகள் குழு இந்நிலையில், மதுரை ஆதீன மடத்திற்கு 05-05-2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வருமான வரி மண்டல இயக்குனர் கிருஷ்ணசாமி உத்தரவுப்படி, வருமானவரித் துறை துணை இயக்குநர் சுந்தரேசன் தலைமையில், 3 கார்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 அதிகாரிகள் வந்தனர். காலை 7.30 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது[3]. மடத்திற்குள் 4 பிரிவுகளாக பிரிந்து இவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆதீன மடத்தின் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய புறநகர் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்துக்குள் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதீனத்திடம் விசாரணை சித்ரா பவுர்ணமி நாளான அன்று, திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு நடத்திய பட்டாபிஷேகத்தில் பங்கேற்க நேற்று காலை மதுரையில் இருந்து ஆதீனம் அருணகிரிநாதர் கிளம்புவதாக இருந்தார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்த மடத்திற்கு வந்ததால் அவரது பயணத்தை ஒத்திவைத்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆதீன மடத்திலிருந்த அவரது பெண் உதவியாளர் வைஷ்ணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நித்தியானந்தா, அருணகிரிநாத சுவாமிகளின் ஆட்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். மடத்திலுள்ள வரவு, செலவு ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

தில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது என்று மடத்திற்கு வந்திருந்த வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்[4]. ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். அப்படியென்ன மதுரையில் விஷேசம் என்று தெரியவில்லை. ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். மூன்று / நான்கு பெட்டிகளில் ஆவணங்கள் அள்ளிச் செல்லப் பட்டதாக ஊடகங்கள் அறிவித்தன, காண்பித்தன. மடத்தின் கணக்குகள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் பட்டியல் கணக்காளர்களால் சரிபார்க்கப் பட்டு, சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அவர்கள் இடங்களிலும் ரெய்டு நடத்தப்படுமா என்று தெரியவில்லை. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மடத்தில் இப்படி ரெய்டு நடந்தால், அரசு என்ன செய்யும், குறிப்பாக இந்து அறநிலையத்துறை என்ன செய்யும் என்று பார்க்க வேண்டும். பக்தர்களால் கொடுக்கப் படும் “பாதக்காணிக்கை” வருவாய் துறை சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. Officials said they were conducting the raid on orders from their Delhi counterparts and they had seized some documents and cash but declined to give details[5]……………They assessed the value of the “golden” crown and “golden” throne, which was brought to the mutt before anointment of Nityananda as the 293rd mutt head besides the jewellery in the mutt premises, IT officials said……..The officials also made inquiries with the Adheenam Arunagirinatha Gnanasambandha Desiga Paramacharya Swami……….their accounts were audited both by the Hindu Religious and Charitable Endowments department and their own auditors. They said the Adheenam (mutt head) would be offered “Padakanikai” (money given by devotees), which was exempted from Income Tax[6]. …………...Nityananda, who is the first person outside the Saiva Velalar community to be appointed as Mutt chief, had landed in a controversy after a video footage showing him in a compromising position with an actress was telecast by local TV channels in March 2010.  He was arrested on Apr 21, 2010 from Solan in Himachal Pradesh and granted bail on June 11, 2010 by the Karnataka High Court.

மதுரை ஆதீனத்திற்கு ஒரு கோடி ரூபாய் குரு காணிக்கை அளித்துள்ளதாக நித்தியானந்தா, பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் ரூ.4 கோடி அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆதீனம் நியமனத்தில் பல கோடிகள் கைமாறியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 4 பெட்டிகளில்  ஆவணங்கள் மதுரை ஆதீனத்திற்கு ரூ.1,300 கோடி மதிப்பில் மதுரை, திருச்செந்தூர், தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதிலும் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. தற்போது நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து இந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சொத்துக்களுக்கான வாடகை வசூலிப்பது, மடத்தின் கணக்குகள் பராமரிப்பதில் பல கோடிக்கு குளறுபடி நடந்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் அடங்கிய ஏராளமான கடிதங்கள் வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன[7]. இதன் பேரிலேயே வருமான வரித் துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனையின் முடிவில், ஆதீன மடத்துக்கு வந்த வருவாய், செலவு, சொத்து விவரங்கள், மடத்துக்கு பெறப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான ஆவணங்களை 4 பெட்டிகளில் அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.   நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ரெய்டு குறித்து கூற அதிகாரிகள் மறுத்தனர்.  இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகே மதுரை ஆதீனம் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதா என்பது தெரிய வரும்[8].

மதுரை ஆதீன மடத்தின் சொத்து ரூ.1,300 கோடி: மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ளது மதுரை ஆதீன மடம். இந்த மடத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு தற்போது நகைக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது. இங்குதான் மருத்துவமனை அமைக்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். அவனியாபுரத்தில் 100 ஏக்கர் நிலம் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலமும் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. இது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்திற்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் மதிப்பு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

நித்தியானந்தாவால் தலைகுனிவு[9]: சைவ சமயம் பரப்பும் உயர்ந்த நோக்கில் துவக்கப்பட்ட ஆதீன மடத்திற்குள் நேற்று முதல் முறையாக வருமான வரித் துறை புகுந்து சோதனை நடத்தியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், “ஆதீன மடத்தில் வருமான வரித்துறைச் சோதனையை வரவேற்றபோதும், கடந்த காலத்தில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்த இம்மடத்தில் இப்போது பாலியல் புகாருக்கு ஆளான நித்தியானந்தா நியமனத்தால் இம்மடம் அதிகாரிகளின் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. இது சிவனடியார்களையும், பக்தர்களையும் வேதனைப்படுத்துகிறது. இம்மடத்தின் புனிதம் காக்க தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என்றார்

மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைகள் அமைப்பு நிர்வாகி ஜானகிராமன் கூறுகையில், மதுரையின் தொன்மையான ஆதீனமடம் தவறான நபருக்கு தரப்பட்ட தலைமையால் புனிதம் இழந்திருக்கிறது. இச்சோதனை நடத்தும் அளவிற்கு இம்மடம் சென்றிருப்பது பக்தர்களான எங்களையும், மதுரை மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது என்றார். ஊடகங்கள் ஜாதி அடிப்படையில் விளக்கம் அளிப்பது, நித்யானந்தா முதலியார், ஆகையால் மடாதிபதி ஆகக்கூடாது, சைவப்பிள்ளைமார் தான் ஆகலாம் என்றெல்லாம் விளக்கம் அளிப்பது, அதுபோல, அச்சங்கத்தின் சார்பாக திடீரென்று வந்து பேட்டிக் கொடுப்பது, முதலியன இயற்கையாக நடப்பது போல இல்லை.

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் “இந்து மக்கள் கட்சி” இவ்வாறேல்லாம் பேசுவது வேடிக்கைதான். உண்மையிலேயே இந்துக்கள் கோவில்களில், மடாலயங்களில் அக்கரைக் காடுவதாக இருந்தால், அவை முதலில் அரசின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும் என்பதனை உணரவேண்டும்.

தி.மு.க., மீது குற்றச்சாட்டு: நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ., பாண்டிசெல்வம், “பிடதி ஆசிரமத்தில் நடக்காத ரெய்டா, இங்கு நடந்து விடப்போகிறது. அங்கு, ருத்ராட்சம் மாலைக்கு கூட கணக்கு இருந்தது. மதுரை ஆதீனத்தில் ரெய்டு நடக்கும் என தெரியும். ஆதீனம், நித்தியானந்தா மீது தமிழக அரசு நல்ல மதிப்பு வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருக்கிறார். மேலும் ஆதீனம் திருவண்ணாமலைக்கு செல்வதும்[10] தடுக்கப் பார்க்கிறார்கள்,” என்றார்[11]. ரெய்டுக்கு பின் ஆதீனம் திருவண்ணாமலை சென்றார். அவர், “கணக்குகளை சரிபார்க்க வந்தனர். அவ்வளவு தான்,” என்றார். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பாரம்பரியத்திற்கு விரோதமானது என்று யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சிற்கு புரியவில்லை போலும்!

நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது[12]. தினமலர் இப்படி “கொசுரு” சேர்ந்துப் போட்டுள்ளது. மடாலயங்களில் முருங்கைக்காய் சாம்பார் முதலியன போடுவது ஒன்றும் அதிசயமான நிகழ்வல்ல. இருப்பினும் அதில் குதர்க்கத்தைக் காணுவது தினமலர் நாகரிகம் போலும். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது, என்று சொல்லும் போது, நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது என்று தினமலருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை!

வக்கிரபுத்தியுடன் இப்படி மேன்மேலும் அவதூறுகளை வாரியிரைக்கத்தான் இத்தனையும் நடக்கிறது என்று நினைத்தது, இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுகிறது. இதனால்தான், இந்துக்களின் நலன்களுக்கு எதிராக இவையெல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன என்று பலமுறை எடுத்துக் காட்டப்படுகின்றன.

மத்திய புலனாய்வு, உளவுத்துறை உஷார்[13]: மத்திய புலனாய்வு, மாநில உளவுத்துறையினர் மடத்திற்குள்ளும், வெளியிலும் கண்காணித்தனர். ஆஹா அவர்களின் தேசபக்தி, நாட்டுப் பற்று புல்லரிக்க வைக்கிறது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன்

உட்பட சிலர் “மடத்தை மீட்கும் வரை போராடுவோம். முதற்கட்டமாக போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தோம்,” என்றனர். அதாவது, இந்துமடத்தை மொத்தமாக இழுத்து மூடுவோம் அல்லது தனியார் மயமாக்கிக் கொள்ளையெடிப்போம் என்கிறார்கள் போலும். அர்சிடமிருந்து மீட்போம் என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை? மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை[14]. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார். இந்தியாவில் இஸ்லாமிய-ஜிஹாத் தீவிரவாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் (இதில் கிருத்துவ-முஸ்லீம்கள் அடக்கம்) செய்யும் மனிதவிரோத குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் தாம் அதிகம். அவர்கள் தாராளமாக உலா வருகிறார்கள். அரசுடன் ஜாலியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிகாரிகளை [பிட்த்து வைத்துக் கொண்டு பணம் கேட்டுப் பெறுகிறார்கள்; பாதக கொடூர குரூர குற்றங்களை செய்தவர்களை மீட்டுச் செல்கிறார்கள்; ஆனால்  இந்த மத்திய புலனாய்வு, உளவுத்துறைகள் அங்கு ஏன் ஒன்றும் செயவதில்லை என்று தெரியவில்லை. ஆனால், இந்து மடாலயங்கள் என்றால் அணிவகுத்துக் கொண்டு வந்து விடுகின்றன. அதெப்படி?

இங்குதான் இந்திய செக்யூலரிஸத்தின் மீது சந்தேகம் வருகிறது. சோனியா மெய்னோவின் மீதும் சந்தேகம் வலுப்படுறது. ஏனெனில், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல், இந்தத் துறையினர் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியாது. தில்லியிலிருந்து ஆணைப் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

  • Ø  ஆகவே, யார் இவர்களுக்கு ஆணையிட்டது?
  • Ø  ஏன் அத்தகைய அதிரடி ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன?
  • Ø  அதன் பின்னணி என்ன?
  • Ø  தீவிரவாதிகளைக் கண்காணிப்பதைவிட, ஒரு சாதாரண மடத்தலைவரை ஏன் இப்படி கண்காணிக்க வேண்டும்?
  • Ø  அந்த அளவிற்கு அப்படியென்ன பெரிய முக்கியத்துவம், மகத்துவம் இவ்விஷயத்தில் வந்து விட்டது?

 இந்துக்கள் இத்தகைய கேள்விகளுக்கு நிச்சயமாக இதற்கு விடை காண வேண்டும். “இந்து மக்கள் கட்சி” போன்ற ஆட்களிடம் கேட்கவேண்டும்.

  • Ø  ஒருவேளை “நித்யானந்தாவே” இந்துக்களுக்கு எதிராக உருவாக்கப் பட்ட ஒரு அடையாளச் சின்னமா?
  • Ø  தாக்குதலுக்குட்பட்டு வரும் குறியா-குறியீடா?
  • Ø  அத்தகைய போர்வையில் இந்துமதம் வசதியாகத் தாக்கப் பட்டு வருகிறதா?
  • Ø  படித்த அல்லது விஷயம் தெரிந்த இந்துக்கள் இவற்றால் குழப்பப் பட்டு வருகிறார்களா?
  • Ø  வ்வாறே அவர்கள் இந்துமத நலன்களுக்கு எதிராக பேச, செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்களா?
  • Ø  இவையெல்லாம் மனோதத்துவ ரீதியில் இந்துக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரா?
  • Ø  அவ்வாறான அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்கள் அவர்கள் மீது நடக்கின்றன என்பதனை இந்துக்கள் அறிவார்களா?
  • Ø  இந்துக்கள் இத்தகைய அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்முறைகளினின்று மீள முட்யுமா?
  • Ø  அவற்றிலிருந்து தம்மை முதலில் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்கள்?
  • Ø  பிறகு அவற்றை தகுந்தமுறையில் எதிர்கொண்டு போராட என்ன யுக்திகளை வைத்துள்ளார்கள்?
  • Ø  இல்லை ஒன்றுமே தெரியாமல் “பலி ஆடுகளாக” அப்படியே இருந்து சாகப்போகிறார்களா?

 

வேதபிரகாஷ்

06-05-2012


[7] அதெப்படி மதுரை ஆதின மடத்தை மட்டும் குறிவைத்து அத்தகைய கடிதங்கள் வருவாய் துறைக்குச் செல்கின்றன என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும், அதெப்படி குறிப்பாக இப்படி நல்ல நாட்களில் வந்து ரெய்டு செய்ய வேண்டும் என்று தில்லியில் யார் சொல்லி அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.