Archive for the ‘காவேரி’ Category

பரதநாட்டியம் பற்றி நாத்திகம், கிருத்துவம், பெண்ணியம், விபச்சார பிரச்சாரம் முதலியவை ஏன்?

ஓகஸ்ட்2, 2013

பரதநாட்டியம் பற்றி நாத்திகம், கிருத்துவம், பெண்ணியம், விபச்சார பிரச்சாரம் முதலியவை ஏன்?

DK-Christian nexus.3

சொர்ணமால்யா தேவதாசி முறை கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்று பேசியது: சென்னையில் நடந்த மகளிர் கல்லூரி நாட்டிய விழா வொன்றில் நடிகை சொர்ணமால்யா பங்கேற்று பேசியபோது,  “தேவதாசிகள் கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர்களாக திகழ்ந்தனர்தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்தன. தேவதாசி தொழில் என்பது கடவுளுக்கான அர்ப்பணிப்பு. தேவதாசிகள் அதனை மன முன்வந்து செய்தனர். நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன் வந்து தேவதாசிகளானார்கள்” என்று கூறினார்.  தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்று விமர்சித்துள்ளார்[1]. மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி ‘தேவதாசி முறை ஒழிப்பு’க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் நினைவு கூர்ந்த ஸ்வர்ணமால்யா, தேவதாசி முறையை மிகவும் மெச்சியபடி கொண்டாடினார். அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்றும் தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றும் நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்[2]. அப்போது அந்த பேச்சுக்கேட்டு கூடியிருந்தோர் பலத்த கரகோசம் எழுப்பினர்[3]. இப்படி ஊடகங்கள் உசுப்பிவிட்டுப் பார்த்தன.

DK-Christian nexus

ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவி கல்பனா எதிர்த்து அறிக்கை விட்டது: சொர்ணமால்யா பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மகளிர் நிர்வாக குழு செயலாளருமான கல்பனா[4] இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய காலங்களில் தேவதாசிகளை ஜமீன்தார்களும் உயர்சாதியினரும் தங்கள் இச்சைக்கு பயன்படுத்தி அடிமைப்படுத்தி வைத்து இருந்தனர். பெண்கள் உரிமைக்கு எதிரான அடிமைத்தனமாகவே அது கருதப் பட்டது. எனவே தான் பெண்கள் நலனில் அக்கறை கொண்டோரின் முயற்சியால் தேவதாசிகள் முறை ஒழிக்கப்பட்டதுதேவதாசிகள் தொழிலுக்கு வக்காலத்து வாங்குவது போல் சொர்ணமால்யா இப்போது பேசுவது கண்டிக்கத் தக்கது”, என்று கூறியுள்ளார்[5]. ஆனால், இந்த பெண்கணிகள் எல்லோரும் மற்ற விஷயங்களில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் அல்லது அந்நேரங்களில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவதில்லை.

DK-Christian nexus-in abusing Bharatnatyam

தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்என்ற கருத்தரங்க தலைப்பு பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்”  என்று மாறியதாம்: முன்னதாக “தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்” (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக “பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்” (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது[6]. இருப்பினும், சில பெண்ணிய அமைப்புகள் அக்கருத்தை ஏற்கவில்லை[7]. பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்த உதவியதும் மேலாதிக்க சாதி மனப்பான்மையின் கொடூர வடிவாகவும் திகழ்ந்த பெருந்தீமை ஒன்றை ஒரு பெண்ணாக இருக்கும் நடிகையே ஆதரித்து வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[8].

XRatedBible

கிருத்துவர்களின்  “தேவமகளிரும்”,  இந்தியாவின்  “தேவரடியாரும்: ஐரோப்பியர்களின் எழுத்துகளினால்தான் தேவதாசி என்றாலே ஒரு அசிங்கமான, ஆபாசமான, கேவலமான, அருவருப்பான வார்த்தைப் போல எண்ணம் உருவாகியது. கிருத்துவத்தில் பெண்கள் அடக்கப் பட்டு வந்தனர். கன்னியாஸ்திரிக்கள் என்ற போர்வையில் பெண்களை ஜேஹோவாவிற்கு அர்பணித்தனர்[9]. leave-the-matter-in-Jehovah“கடவுளின் பெண்கள்”, “ஏசுவின் மனைவிகள்” என்று அவர்கள் வைக்கப்பட்டு, பிஷப்புகள், பாதிரிகள் முதலியோர் தமது காமப்பசிக்கு உபயோகப்படுத்தி வந்தனர்[10]. Abuses of Christianity booksஆனால், இந்தியாவிற்கு அவர்கள் வந்தபோது, கோவிலில் நடனமாடும் பெண்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் மதத்தில் எப்படி பெண்கள் வைக்கப்பட்டார்களோ அப்படித்தான் இந்தியாவிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்று எழுதி வைத்தனர். இதைப் படித்த இந்தியர்களுக்கு அத்தகைய தவறான அபிப்ராயமே உண்மையாக மனங்களில் பதிந்து விட்டது. தொடர்ந்து அவ்வாறே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததால், வருவதால், அவற்றைப் படித்து / கேட்டு வருபவர்களும் அவைதான் சரித்திர உண்மை என்று நம்பி வருகின்றனர்.

Christtian ministries for prostitutionஆனால் இன்றும் கிருத்துவத்தில் விபச்சாரத்தை வைத்துக் கொண்டு பிரசாரமே செய்து வருகிறார்கள். அதாவது, மதரீதியாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது. மேலே உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

திராவிட சித்தாந்திகளின் போலித் தனம்: 20 நூற்றாண்டில் திராவிட சித்தாந்தம் அரசியல் உருவத்தில் மாறியபோது, “ஆரியர்களின்” கலாச்சாரம் என்று அனைத்தும் முத்திரையிடப்பட்டு ஒதுக்கப்பட்டன. கோவில்கள் பகிஷ்காரம் என்று வந்தபோது, கோவில்கள் சம்பந்தப் பட்ட அனைத்தும் தூஷிக்கப்பட்டன.  பரதநாட்டியத்தை ஒதுக்க வேண்டும், இழிவு படுத்த வேண்டும் என்று வந்தபோது, முதலில் அது “சதிராட்டம்” என்ற முறையிலிருந்து தோன்றியது என்றனர். ஆனால், அதற்கான நூல்கள் “பரதம்” போன்று காணப்படவில்லை. இருப்பினும், பரதநாட்டியம், “தேவர் அடியார் முறை”, “தெவிடியாமுறை” தான் என்று கொச்சைப் படுத்தி எதிர்த்து, தடைசெய்யப்பட்டது. இருப்பினும் பரதநாட்டியத்திற்கு மேனாடுகளில் வரவேற்பு இர்ருப்ப்பது கண்டு அதனை வியாபார ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அந்நியர்களும், கிருத்துவர்களும், நாத்திகர்களும், திராவிட கூட்டங்களும் முயன்றன.  அதுதான், பரதத்தை ஒருபக்கம்  இழிவு படுத்துவது, மறுபக்கம் போற்றுவது. கிருத்துவர்கள் அதனை சொல்லிக் கொடுத்தால் பாராட்டு, பரிசு முதலியன. மற்றவர்கள் நடத்தினால் கேவலமாகப் பேசுவது, எழுதுவது முதலியன தொடர்ந்தன. எப்படி நாத்திகர்கள் மற்றும் கிருத்துவர்கள் சேர்ந்து கொண்டு, ஒரு புறம் பரத நாட்டியத்தை இழிவுபடுத்தியும், இன்னொரு பக்கத்தில் அதனை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர் என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[11]. 2007ல் ஜோயா ஜைதி (Zoya Zaidi) என்பவர்[12] வழக்கம் போல, பிரச்ச்சார ரீதியில் அரைவேக்காட்டுத் தனமாக எழுதியபோது, அதிலிருந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி எழுதினேன்[13].

வேதபிரகாஷ்

© 02-08-2013


[9] இது பற்றி லட்சக் கணக்கான புத்தகங்களை கிருத்துவர்களே – கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், சரித்திராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள் – எழுதி வைத்துள்ளனர்.

[10] இது பற்றியும் லட்சக் கணக்கான புத்தகங்களை கிருத்துவர்களே – கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், சரித்திராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள் – எழுதி வைத்துள்ளனர்.

[12] Dr. Zoya Zaidi MD (Honours) Moscow.Physician Rheumatologist, AIIMS, New Delhi. Practicing as a Physician, Rhaumatologist for last 28 years in Aligarh (UP), India. Has more than two thousand Rheumatology Patients registered in the clinic.Life Member of APLAR (Asea Pacific League of Association of Rheumatologists) and IRA (Indian Rhematism Association) Has attended, and continues to regularly attend, many Rheumatology Conferences,on both international and national level. Has presented many scientific papers at these conferences. A typical article can be seen here: http://www.sikhspectrum.com/052007/devadasi.htm

ஒரு வழியாக ஶ்ரீனிவாசன் போய், டால்மியா வந்து விட்டார் – சூதாட்டம் விசாரணை முடியும் வரை விலகாமல் ஒதுங்கியிருப்பாராம்!

ஜூன்2, 2013

ஒரு வழியாக ஶ்ரீனிவாசன் போய், டால்மியா வந்து விட்டார் – சூதாட்டம் விசாரணை முடியும் வரை விலகாமல் ஒதுங்கியிருப்பாராம்!

BCCI meeting 02-06-2013ஶ்ரீனிவாசன் வென்றார், கிரிக்கெட் தோற்றது[1]: இரு வாரங்களாக ஆங்கில ஊடகங்கள் ஶ்ரீனிவாசனை வைத்துக் கொண்டே ஓட்டி வந்தன. அவற்றிற்கு வேறு எந்த செய்தியும், செய்தியாகப் படவில்லை. இப்பொழுது கூட ஊடகங்கள் “ஶ்ரீனிவாசன் வென்றார், கிரிக்கெட் தோற்றது”, இப்படி தலைப்பிட்டு எழுதி வருகின்றன. உண்மையில் இந்தியர்கள் தாம் தொற்றுள்ளார்கள். ஶ்ரீனிவாசன் விலகி, ஜகன்மோஹன் டால்மியா வந்து விட்டதால், என்ன செய்யப் போகின்றன என்பதைப் பார்ப்போம்! இதில் வேடிக்கையென்னவென்றால், கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் காரணமாக, இவரே பதவி விலக நேர்ந்தது, ஆனால், 2001ல் தலைவரானார், 2004ல் சரத் பவாரால் வெளியேற்றப்பட்டார், அதாவது, முதலில் இவர் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது, பிறகு, தோற்றார் என்றார்கள்!

What others say about BCCI working02-06-2013 அன்று சென்னையில் நடந்த அவசரக் கூட்டம்: பி.சி.சி.ஐ.,யில், தலைவரோடு சேர்த்து, மொத்தம் உள்ள, 31 உறுப்பினர்களில், 24 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே சீனிவாசனை, பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நிலையில், எதிர்ப்பு, 18 ஆகவும், ஆதரவு ஏழாகவும், நடுநிலை ஆறாகவும் இருந்தது. மேலும், தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வர, 10 பேர் ஆதரவு தேவை. இக்குழப்பத்திற்கிடையில், இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர், அனுராக் தாகூர் உள்ளிட்ட சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில், சூதாட்டம் குறித்து விவாதிக்க, செயற்குழுவைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டது. இதனால், மும்பையில், வரும் ஜூன் 8ம் தேதி அவசர செயற்குழு கூட இருந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலர், சஞ்சய் ஜத்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர், திடீரென பதவி விலகியதால், சீனிவாசன் மேலும், நெருக்கடிக்கு உள்ளானார்.
நிர்வாகிகள் பதவி விலகலை தொடர்ந்து, 02-06-2013 அன்று சென்னையில், பி.சி.சி.ஐ.,யின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. தனியார் நட்சத்திர ஓட்டலில், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நிர்வாகிகள் அருண் ஜெட்லி மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்[2].

India cements with other companies CBIஶ்ரீனிவாசன்  ஊடகங்களை சாடியது[3]: இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவை பொறுப்பு வகிக்கச் செய்வது என்றும் அதுவரை சீனிவாசனை ஒதுங்கியிருக்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று சீனிவாசன் தொடர்ந்து மறுத்து வந்தார். நடந்த கூட்டத்தில் கூட, “நான் எந்தவித தப்பும் செய்யவில்லை, குருநாத் பெய்யப்பன் தவறுசெய்தால், சட்டம் அதற்கான நடவடிக்கை எடுக்கும். ஆனால், என்னை இந்தவிதமாக நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். அவர்கள் நான் ஏதோ கிரிமினல் மாதிரி, என் பின்னால் ஓடி வருகின்றனர். என்னுடைய மகளின் காரைத் துரத்தி வருகின்றனர். காலை நேரத்தில் நடக்கச் சென்றல் கூட அதில் மூக்கை நுழைக்கின்றனர்”, என்று குறை கூறினார்[4]. அனைவரும் அமைதியாகக் கேட்ட்டுக் கொண்டிருந்தனராம்!

Aircel deal Maran brothersசூதாட்டம் விசாரணை முடியும் வரைஶ் ரீனிவாசன் ஒதுங்கியிருப்பார்: இந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய துணை செயலர், அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசன் பதவியில் இருந்து விலகாமல், அப்படியே நீடிப்பார். சூதாட்ட புகார் விசாரணை முடியும் வரை, பி.சி.சி..,யின் அன்றாட பணிகளை இடைக்கால தலைவரான ஜக்மோகன் டால்மியா கவனிப்பார். மேலும், பதவி விலகிய இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் சஞ்சய் ஜக்டலே, பொருளாளர் அஜய் ஷீர்கே ஆகிய இருவரும் தங்கள் பதவி விலகலைத் திரும்பப் பெற வேண்டும்”, இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது[5].  ஆனால், ஐ.பி.எல்., தலைவர் ராஜுவ் சுக்லா பதவி விலகல் பற்றி அந்த செய்திக் குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. செயற்குழுக் கூட்டத்தில், ஜக்மோகன் டால்மியா, நிரஞ்சன் ஷா, பிந்த்ரா, ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்துவந்த, ஜக்மோகன் டால்மியா கூறுகையில், “சீனிவாசனை யாரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. சூதாட்ட புகார் மீதான விசாரணை நடந்துவருகிறது,” என்றார்.

என்னைத் தவிர வேறு யாரும் துணிச்சலோடு கேட்கவில்லை[6]: கூட்டத்தில் பங்கேற்ற, பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர், இந்திரஜித் சிங் பிந்த்ரா கூறியதாவது: “சீனிவாசன் விலகவில்லை, ஏனெனில், அவரது ராஜினாமா பற்றி, யாரும் பேசவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் தைரியமாகக் கேட்டேன். ஒரு மாத காலத்திற்கு ஒதுக்கி இருப்பார் என, கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏதோ பெரிதாக நடக்கும் என்று எதிர்பார்த்தோம். இது ஏதோ முன்னமே தீர்மானம் செய்து நடத்தப்பட்ட கூட்டம் போல தோன்றியது[7]. மேட்ச் பிக்சிங்கை விட மோசமாக இருந்தது. ஒரு மாதத்திற்குள் ஒன்றும் செய்ய முடியாது. செப்டம்பர் வரை ஒதுங்கி இருக்கும்படி கூறினேன். ஆனால், சீனிவாசன் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். நான் மட்டுமே கூட்டத்தில் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனக்கு ஜக்மோகன் டால்மியா மீது எவ்வித பிரச்னையும் கிடையாது. இருப்பினும், இடைக்கால தலைவராக அவர் கொண்டு வரப்பட்ட விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதில், முக்கிய முடிவு எடுப்பதற்கு அருண் ஜெட்லி பங்கு முக்கியமாக இருந்தது”, இவ்வாறு, அவர் கூறினார். “டால்மியா தலைமையிலான தாற்காலிக ஏற்பாடு எவ்வாறு செயல்படும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறி தனது அதிருப்தியை ஷிர்கே வெளிப்படுத்தினார். பவாருக்கு நெருக்கமானவர் ஷிர்கே என்பது குறிப்பிடத்தக்கது[8]. அதேபோல நிரஞ்சன் ஷா தேர்ந்தெடுக்கப்படாததற்கும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது[9].
ஊழல் என்றாலும், சூதாட்டம் என்றாலும் விலகாத பந்தம்[10]: இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜக்மோகன் டால்மியா, 73, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். 1997ல், பி.சி.சி.ஐ., தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் தான், கிரிக்கெட், பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியது. போட்டிகளை, “டிவி’களில் ஒளிபரப்ப உரிமம் வழங்கியதன் மூலம், பி.சி.சி.ஐ.,க்கு ஏராளமான பணம் குவிந்தது. கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பதவி விலகினார். ஆனாலும், 2001ல், நடந்த தேர்தலில், வெற்றி பெற்று, மீண்டும், பி.சி.சி.ஐ., தலைவரானார். 2004 வரை, தலைவர் பதவியில் நீடித்தார். பிறகு வந்த லலித் மோடியும் ஊழலில் சம்பந்தம் பட்டுள்ளார். ஆனால், அவரும் ஶ்ரீனிவாசனை விமர்சித்து வருகிறார். ஆகவே, ஊழலுடன் ஊறிய கிரிக்கெட், அரசியல் போல உள்ளதால், ஒன்றும் செய்ய முடியாது. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், கிரிக்கெட்காரர்கள் என்று எல்லோரும் சேர்ந்து விட்ட பிறகு, ஊழலின் பரிணாமமே எங்கோத்தான் சென்றுள்ளது. இனி அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவது கடினமே.

காங்கிரஸ் கட்சிகளில் போட்டியா, காங்கிரஸ்-பிஜேபி போட்டியா: விஷயங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால், இது கிரிக்கெட் சூதாட்டத்தை விட, அரசியல் சூதாட்டமாகத் தான் தெரிகிறது. சரத் பவார், சர்க்கரை ஆலைகள், மும்பை தாதாக்களின் ஆதரவு வைத்துக் கொண்டுதான், கிரிக்கெட்டை வளைத்துப் பிடித்தார். 2004ல் தலைவரானப் பிறகு, தேசியவாத காங்கிரஸை வைத்துக் கொண்டு, சோனியா மெய்னோவை அதிகமாகவே விமர்சித்து, ஆனால், கூட்டு சேர்ந்து, யுபிஏவில் ஆட்சி அதிகாரம் பெற்றார். வரும் தேர்தலில் கோடிகள் செலவாகப் போவதால், மக்களை ஏமாற்றி, கிர்கிக்கெட் மூலம் பணத்தைக் கறந்து செலவிட போட்ட நாடகம் தான் இது. அதே நேரத்தில் கருப்புப் பணத்தை வெள்லையாக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்விதத்தில் சரத் பவார்- சோனியா மெய்னோ கட்சிகளின் நிழல் யுத்தம் தான் இது. கடைசி நிமிடம் ராஜிவ் சுக்லா ராஜினாமா செய்த நாடகமே அதனை வெளிக்கட்டிவிட்டது. தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்தவே அவ்வாறு செய்தார். ஆனால், சரத் பவார் தமது ஆட்கள் மூலம் அதனை சரிகட்டிவிட்டார். பிஜேபி இந்த விளையாட்டில் புதியதாக இருக்கிறது. அதனால், ஜாக்கிரதையாக விளையாடுகிறது. அருண் ஜைட்லி தலைவராக வேண் டும் என்ற ஆசை உள்ளது, ஆனால், எங்கே பிரதம மந்திரி சந்தர்ப்பம் போய் விடுமே என்று, கிரிக்கெட் விஷயத்தில் அனைவருக்கும் சாதகமாக இருப்பது போல நடந்து கொள்கிறார். கிரிக்கெட் விஷயத்தில் பிஜேபி, காங்கிரஸுக்கு பக்கத்திலேயே வரமுடியாது. அதுவும் ஊழலுக்கு எதிராக பேசிவரும் போது, அதற்கு அந்த அருகதையே கிடையாது. அதனால், ஶ்ரீனிவாசனை ஆதரிக்கும் வழியாக, பிஜேபிக்கு ஆதாயம் கிடைக்கும். ஒருவேளை திமுக கூட்டும் கிடைக்கும் என்ற நோக்கில் பிஜேபி செயல் படலாம்.

வேதபிரகாஷ்

© 02—06-2013


[3] Setting the tone for the BCCI’s emergent working committee meeting here today, Srinivasan reportedly began by saying that he had no intention of resigning. “Tell me why should I resign? It is not me who has done anything wrong,” he reportedly said in his opening remarks. “If Gurunath (Meiyappan) has done something wrong, the law will take its own course and I will accept it.” “I have been under terrible pressure. People have been talking non-stop. I have been portrayed as the main guy behind this. I said I am ready to appoint a commission that will independently inquire into the betting and spot-fixing scandal,” he reportedly said, adding, “I am being hounded by the media as if I am a criminal… The other day, they chased my daughter’s car… they are chasing me even during my morning walk.”

http://www.indianexpress.com/news/srinivasan-steps-aside-but-gets-his-way/1124271/0

குருநாத் மெய்யப்பன் கைது நீடிப்பு – நாராயணசுவாமி ஶ்ரீனிவாசன் மும்பைக்குச் சென்று கொல்கத்தாவிற்கு பறந்தாராம்!

மே25, 2013

குருநாத் மெய்யப்பன் கைது நீடிப்பு – நாராயணசுவாமி ஶ்ரீனிவாசன் மும்பைக்குச் சென்று கொல்கத்தாவிற்கு பறந்தாராம்!

Srikanth, Vindoo, Sakshi and others 2012 chennai23-04-2013 (வியாழக்கிழமை): ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் கவுரவ உறுப்பினருமான குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். முதலில் திங்கட்கிழமை வரை நேரம் கேட்டிருந்தும், போலீஸார், 24-05-2013 வெள்ளிக்கிழமை 5 மணி வரை கெடு விதித்திருந்தது. அவருக்கும், அவரது வீட்டிற்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் கொடைக்கானலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர், என்பதை அறிந்தும், ஊடகங்கள் குருநாத் எங்கே, ஶ்ரீனிவாசன் எங்கே என்று பரபரப்புடன் செய்திகள் வெளியிட ஆரம்பித்தன.

Gurunath Meiyappan at Mumbai Police Commissioner Office24-05-2013 வெள்ளிக்கிழமை: இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் நேற்று மும்பை புறப்பட்டு சென்றார். 8.55 மணியளவில் மும்பை போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்தடைந்ததும், அவருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளது என்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. ஹிமான்சு ராய், மும்பையின் இணை கமிஷனர் (கிரைம்) இதனை தெரிவித்தார்[1].

Gurunath Meiyappan with.......... IPLநடுஇரவில்கைது: பரத் ராமன், என்பவர் குருநாத் மெய்யப்பன் கூட இருந்தார். இவர் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் என்பவரின் சகோதரர். திமுகவிற்கு நெருக்கமான இவர், “விஸ்வரூபம்” வழக்கிலும், கமல் ஹஸனுக்காக வாதாடியவர்[2]. போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்தடைந்ததும், சுமார் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாம். ஆனால், கேட்கப்பட்டபோது, அசையாமல் பதில் சொல்ல மறுத்தார். தனது, வழக்கறிஞர் வரும்வரை பதில் சொல்லமுடியாது என்று அடம் பிடித்தார். இதனால், வேறுவழியின்றி சுமார் 00.13 மணி அளவில் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “நாங்கள் சட்டரீதியாக எல்லாவற்றையும் செய்ய யோசித்து வருகிறோம் மற்றும் எந்த காரணங்களுக்காக கைது என்ற “ரிமேன்ட் ரிப்போர்ட்”டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[3].

IPL-Srinivasan-Aswin accuses Guruசரத் பவார், மோடி, ஶ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு: சனிக்கிழமை (25-05-2013) அன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்[4] என்று எதிர்பார்க்கப்படுகிறது[5]. இதனால் நாராயணசுவாமி ஶ்ரீனிவாசன் பதவி விலக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று சொல்கின்றனர். சரத் பவர் கட்சிக்காரர் மற்ரும் மோடி, ஶ்ரீனிவாசன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். ராஹுல் கன்வால் என்ற “இந்தியா டுடே” துணை ஆசிரியர் கேட்டபோது, “வாயை மூடு, வெரும வயை மூடு. இதற்கெல்லாம் நான் என்ன செய்யவேண்டுமே அதையெல்லாம் உனக்காகச் செய்வேன்”, என்று எரிந்து விழுந்தாராம்[6]. இந்தியாவில் குற்றஞ்சாட்டப் பாடவுடனே யாரும் ராஜினாமா செய்வதில்லை.

Photo1126ஊழல் காங்கிரஸ்காரர்களை ஏன் இப்படி விரட்டப்படுவதில்லை?: காங்கிரஸ்காரர்கள், குறிப்பாக சோனியா, மன்மோஹன் முதலியோர் எத்தனை ஊழல்கள் கிளம்பினாலும், தொடர்புகள் காட்டப்பட்டாலும், சட்டப்படி மெய்ப்பிக்கப்படட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பதவியில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றனர். காமன்வெஇத் விளையாட்டு, 2ஜி, கோல்கேட், சீக்கியர்படுகொலை, என்று எத்தனை குற்றங்களில் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கோர்ட்டுகளில் நிலுவைகளில் உள்ளன என்ரு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராஜா, கனிமொழி, பன்சால், அஸ்வினிகுமார் என்று ஊழலில் ஈடுபட்டவர்கள் ஜெயிலுக்குப் போனாலும், ராஜினாமா செய்தாலும் கவலைப்படுவதில்லை. ஆனால், இதில் ஏன் இவ்வளவு பரபரப்புக் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

Photo1125அடுத்தவர் யார் என்று ஊடகங்கள் யேஷ்யத்தில் இறங்கிவிட்டன: இதற்குள் CNN-IBN படி, பிசிசிஐயின் தலைவராக அருண் ஜைட்லி பதவி ஏற்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதாம். மெய்யப்பனின் கைது பற்றி கருத்து கேட்டதற்கு, அருண் ஜைட்லி மறுத்தாராம். சக்‌ஷி சிங் தோனி[7], மஹேந்திர சிங் தோனியின் மனைவி, “மக்கள் யாதாவது சொல்லிக் கொண்டே இருப்பார், அவ்வாறு சொல்வதுதான் அவரது வேலை”, என்று ஒரு ஹிந்தி பாடல் வரியை டுவிட்டரில் போட்டுள்ளார்[8].

Gurunath Meiyappan changed position 2013 Team Principal CSK24-05-2013, மாலை 5.45ற்குசெய்யப்பட்டமாற்றம்: குருநாத் மெய்யப்பன் “டீம் பிரின்சிபெல், சென்னை சூப்பர் கிங்ஸ், மேனேஜிங் டைரக்டர், ஏவிஎம் பொரடெக்சன்ஸ் அன்ட் என்டெர்டைன்மென்ட், ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் கன்ச்ட்ரெக்சன்ஸ். சென்னை, இந்தியா, சென்னைசூபர்கிங்ஸ்.காம்” என்று இதுவரைஈருந்து வந்த அவர் நிலை, “மேனேஜிங் டைரக்டர், ஏவிஎம் பொரடெக்சன்ஸ் அன்ட் என்டெர்டைன்மென்ட், ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் கன்ச்ட்ரெக்சன்ஸ்” மாறியுள்ளதை எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. அதாவது “டீம் பிரின்சிபெல், சென்னை சூப்பர் கிங்ஸ்,…………. சென்னைசூபர்கிங்ஸ்.காம்”, என்ற பதவி விடுபட்டுள்ளது!

Gurunath Meiyappan changed position 2013 MD AVM productions nowமைத்துனர்-மாப்பிள்ளைகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் நிர்வாகியான குருநாத்துக்கு சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்ரீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்[9]. குடும்ப பிரச்சனையால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஸ்ரீனிவாசிடமிருந்து விலகி உள்ள அவரது மகன் அஸ்வின் (44), அவரது மைத்துனரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைமை செயல் நிர்வாகியுமான குருநாதிற்கு எப்பொழுதும் துபாய், சென்னை போன்ற இடங்களில் இருந்த இடைத்தரகர்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்துள்ளார்[10]. இதுக்குறித்து அவர் கூறுகையில், குருவுக்கு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தரகர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பில் இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது[11]. இச்செய்தி பிறகு மற்ற ஊடகங்களில்[12], ஒரு வீடியோ உட்பட[13], வெளியிடப்பட்டுள்ளன[14]. ஆனால் விஷயம் ஒன்றே ஒன்றுதான், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன.

Guru has links with bookies in Chennai Dubai25-05-2013 (சனிக்கிழமை): விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்த மும்பை போலீஸ், அவர் மீது கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. பின்னர் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, வரும் 29-ம் தேதி வரை குருநாத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் இருந்து 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே குருநாத் மெய்யப்பனை சந்திப்பதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் இன்று மும்பை வந்தார். மாலையில் அவர் குருநாத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. குருநாத்தை போலீசார் விசாரணைக் காவலில் அழைத்துச் சென்றதையடுத்து, சீனிவாசன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்[15].

 

© வேதபிரகாஷ்

25-05-2013


[3] “We are exploring all legal possibilities. We are waiting for the remand report before reading the charges against him.

[6] Rahul Kanwal        ✔ @rahulkanwal – Spoke to N Srinivasan about arrest of son-in-law. ‘Shut up, just shut up. I will fix the whole lot of you.’

[7] Sakshi Singh Dhoni        ✔ @SaakshiSRawat – For hindi song lovers….kuch toh log kahengay…logo ka kaam hai kehnaa, 5:43 PM – 22 May 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (3).

மே23, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (3).

Stalin cricket September 2010ஸ்டாலின் தனக்கு பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட் என்று கூரிக் கொண்டதுடன், தனது இணைதளத்தில் பாட்டை வைத்துக் கொண்டு ஆடுவதைப் போல, இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்[1]. இதைத் தவிர கிரிக்கெட்டும் ஆடியுள்ளதாகத் தெரிகிறது. பார்ப்பன விளையாட்டை இவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் தெரியவில்லை.

Stalin-cricket-2010மார்ச் 16, 2008: அன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றலும், ஸ்டாலின் சிறந்த பௌலர் என்று அங்கீகரிக்கப்படார்.

Aryan-dravidian spectrum and cricket scams6For a cricket frenzied Chennai, beating an Australian team always brings joy. It becomes a greater entertainment, when the home team is filled with politicians, cine and sports stars. Add to it, Local Administration Minister and son of Chief Minister, MK Stalin walking away with the best bowler award. What else can one ask for on a Sunday afternoon? This is what unfolded at the Pachiappas College MRF Pace Foundation ground in the city on March 16, when the Tamil Nadu Chief Minister’s XI met Premier South Australia XI in a Twenty20 friendly match. Stalin led the home team against South Australian premier Mike Rann’s visiting team. Unlike the recent India-Australia matches, the one organised by the State Government and the Sports Development Authority of India was filled with all fun and no anger.

Aryan-dravidian spectrum and cricket scams7After Stalin won the toss and elected to bat, cricketer Dinesh Kaarthick and Handloom Minister NKKP Raja opened the innings. Raja was bowled out for a duck, and in came the Stalin, the crowd, which seemed to be quiet jumped into life and started cheering their Thalapathi. However, Stalin retired the very next over scoring just one run. Replacing him was former cricketer Srikkanth who was bowled out for 17 by Senior Trade Commissioner, India, AK Tareen. All this while, Dinesh Kaarthick was smashing sixes and fours and retired after scoring 73, the highest score in the team. Highways Minister Vellakoil Saminathan scored four.

Aryan-dravidian spectrum and cricket scams8While Fisheries Minister KPP Sami, Higher Education Minister K Ponmudi and Dairy Development Minister were out for ducks, actor Jeeva scored 41. Ashok Ponmudi, son of Ponmudi, added 14 to the score while actors Srikanth, Vikranth and Ramesh con tributed 2, 7 and 9 respectively. The TN Chief Minister’s side scored 191 runs in 20 overs. For the fielding side, AK Tareen took two wickets. Initially what seemed to be an achievable target for the the South Australians, started looking like a distant dream as many batsmen from the Aussie side were out for single digits. The highlight was Mike Rann getting out for a duck in Stalin’s over. Stephen Parsons, an official from the University of South Australia, top-scored for the visitors with 45. When the Premier South Australia XI were all out for 124 runs with nine balls to spare, the crowd celebrated.

Aryan-dravidian spectrum and cricket scams9சிறந்த பௌலர் ஸ்டாலின்: Stalin was adjudged the best bowler while Dinesh Karthik was the best batsman. Stephen Parsons was declared the best all rounder and AK the man of the match. Governor Surjith Singh Barnala presented both teams with a bat signed by Sachin Tendulkar. “Today was more than a competition,” Thiru Stalin said. “It is about improving cooperation and friendship, and furthering ties between the two states. It is about creating a conducive environment to develop friendship.

Aryan-dravidian spectrum and cricket scams10”So no sledging then? “Definitely no sledging,” he confirmed.Mike Rann, the South Australian Premier, shared his sentiment. “We’re having a great mining boom and economic growth in South Australia, but we are short of people,” Mr. Rann said. “We are here to recruit migrants and students to come from our sister-state Tamil Nadu and share in this growth.” Judging by India’s recent cricket history, you might not think that staging a cricket match between Indians and Australians is the best way to foster friendship. But believe it or not, it worked this Sunday afternoon[2].

Stalin cricket with Srinanth brahminமார்ச் 31, 2008 – ஸ்டாலின்பௌலிங்மற்றும்ஶ்ரீகாந்த்பேட்டிங்: திராவிடப் பழங்களான அண்ணதுரை மற்றும் கருணாநிதி பிறந்த நாட்களில் கிரிக்கெட் விளையாட, ஶ்ரீகாந்த போன்ற பார்ப்பன கிரிக்கெட்காரர்களை அழைத்து, ஸ்டாலின் விளையீடி இருக்கிறார் என்றல், அதற்கு, வீரமணி என்ன செய்தார்? பகுத்தறிவுப் பகலவன் வழை வந்து, திடராவிடத்தில் ஊறிய அண்ணதுரை மற்றும் கருணாநிதி பிறந்த நாட்களில் பார்ப்பனீய கிரிக்கெட்டை ஆடலாமா? யாரும் கேட்கவில்லையே? இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இந்த திராவிட-ஆரிய கூத்து கோபாலபுரம் மைதானத்தில் நடந்தது. இவ்விவரங்களைக் கொடுப்பது, திருவாளர் ஸ்டாலின் இணைதளம் தான்[3]. ஆற்காடு வீராசாமி, நேரு போன்ற அமைச்சர்கள் பார்த்து ரசித்தார்கள். 2000களிலேயே கிரிக்கெட் ஊழல் அம்பலமாகி விட்டபடியால், எவ்வாறு திராவிடர்கள் இதனை ஏற்றுக் கொண்டு நடத்தனார்கள் என்ரு தெரியவில்லை.

Stalin cricket players with his logo baniansசெப்டம்பர் 5, 2010 – ஸ்டாலின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய கிரிக்கெட்: சென்னையில் 05-09-2010 அன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக விளையாட்டு வளர்ச்சி ஆணைய உறுப்பினர் செயலாளர் சத்யப்ரதா சாஹூ கூறுகையில், தமிழகத்திற்கும், தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[4]. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இப்போட்டி மெரீனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு அந்த மாநில முதல்வர் மைக்ரான் தலைமை தாங்கினார். வெற்றி பெறுபவர்களுக்கு ஆளுநர் பர்னாலா கோப்பையை வழங்கினார். தமிழக முதல்வர் லெவன் அணியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் இடம் பெறுவர். திரைப்பட நடிகர்களும் இடம் பெறுகிறார்கள் என்றார்[5].

Stalin cricket players with his logo banians girls tooமாட்ச் நடந்தே விட்டது: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் நடத்தப்பட்ட “நட்பு’ கிரிக்கெட் போட்டியில், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி வெற்றி பெற்றது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வரின் தமிழக அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே, சென்னை திருவல்லிக்கேணி மெரீனா கிரிக்கெட் மைதானத்தில், “நட்பு’ கிரிக்கெட் போட்டி நேற்று மாலை நடத்தப்பட்டது[6]. தமிழக அணியில்  துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சபீதா ஐ.ஏ.எஸ்., மற்றும் திரைப்பட நடிகர்கள் உட்பட 15 பேர் இடம் பெற்றிருந்தனர். தெற்கு ஆஸ்திரேலியா முதல்வர் மைக்ரான் தலைமையிலான அணியில் பீட்டர் வர்கீஸ், மைக்கேல், துஸ்கர் அகர்வால் உட்பட 12 பேர் இடம் பெற்றிருந்தனர். பத்து ஓவர் போட்டியாக இது நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து ஓவரில் நான்கு விக்கெட் இழந்து 37 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி, ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் பெற்று வெற்றியடைந்தது.

Stalin bowlingஸ்டாலினுக்கு மேன்ஆப்மேட்ச்பரிசுவழங்கப்பட்டது: “மேன் ஆப் மேட்ச்’ பரிசு துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், அவருடன் இணைந்து விளையாடிய அசோக், பொன்முடிக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணியினருக்கும் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பரிசு வழங்கி பாராட்டினார். இப்போட்டி குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் கூறும் போது, “”ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் ஏராளமானோர் உயர் கல்வி கற்று வருகின்றனர். ஆஸ்திரேலியா – இந்தியா மாணவர்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் இருநாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் சார்பில்  இப்போட்டி நடத்தப்பட்டது,” என்றார். போட்டியின் இடைவேளையின் போது, “எத்திராஜ் கல்லூரி, சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மற்றும் ஷிவாணி நாட்டியாலயாவின் ஷாலினி விஸ்வநாதன் மற்றும் பிரகாஷ் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதென்ன, ஒரே பார்ப்பனக் கூத்துகளக இருக்கின்றனவே, திருமாவிடம் கான்டிராக்ட் கொடுத்திருந்தால், தாரை-தப்பட்டைகளோடு வந்து ஆட்டம் போட்டிருப்பார்களே[7].

Karunanidi award to Dhoni, Ashwini etc 2011ஆரிய விளையாட்டிற்கு திராவிட தலைவர் கோடிகளை அள்ளிக் கொடுத்தது – 05-05-2011: உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ.4 கோடி பரிசுத் தொகையை முதல்வர் கருணாநிதி 05.05.2011 அன்று வழங்கினார். அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் முதல்வரிடம் இருந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்[8]. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்று 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. மத்திய, மாநில அரசுகளும் பரிசுகளை அறிவித்தன.

Karunanidi award to Dhoniகோடிகளை அள்ளிக் கொடுத்த திராவிடத் தலைவர்: இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி பரிசுத் தொகை வழங்கும் விழா, புதிய தலைமைச் செயலகத்தில் 05.05.2011 அன்று காலை 11.15 மணிக்கு நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

Stalin-took-dhoni--raina-around Sec.complexவீரர்களுக்கு பொன்னாடை, பாராட்டு: விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின் கலந்து கொண்டனர். முதல்வர் கருணாநிதி, கேப்டன் டோனியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதேபோல சுரேஷ் ரெய்னாவுக்கும் முதல்வர் பொன்னாடை அணிவித்து காசோலை வழங்கினார். மற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகையை கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடியை முதல்வர் வழங்கினார். இங்கு சாதி பார்த்து கொடுத்தார்களா என்று தெரியவில்லை. வீரமணி போன்றோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை.

Dayanidhi bowling Stalin battingடோனி, அஸ்வின் நன்றி தெரிவித்தனர்: இதுகுறித்து டோனி கூறுகையில், “முதல்வரிடம் நேரில் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எங்களை நேரில் அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழக வீரர் அஸ்வின் கூறுகையில், “முதல்வரிடம் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி” என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு, டி.பி.எம்.மைதீன்கான், தலைமைச் செயலாளர் மாலதி, அட்வகேட் ஜெனரல் ராமன், இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன்[9] மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Arayan-dravidian nexusபுதியசட்டமன்றபேரவைவளாகத்தைச் சுற்றிப் பார்த்த வீரர்கள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், புதிய சட்டமன்ற பேரவை வளாகத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், கருணாநிதிக்கு வணக்கம் தெரிவித்து விடைபெற்றனர். அதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை மு.க.ஸ்டாலின் புதிய சட்டமன்ற பேரவை வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். பேரவையினை பார்வையிட வருகை தந்த கிரிக்கெட் வீரர்களை இரா.ஆவுடையப்பன் வரவேற்றார். அவரை மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பேரவையினை எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பார்த்து வியந்து, மகிழ்ந்தனர். பேரவையின் பல்வேறு மாடங்களையும், சிறப்பு அம்சங்களையும், கிரிக்கெட் வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். பின்னர், பேரவையில் நின்றவாறு கிரிக்கெட் வீரர்கள் மு.க.ஸ்டாலின், ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பேரவையினை சுற்றிக்காண்பித்து, தங்களை சிறப்பித்த மு.க.ஸ்டாலினுக்கு கிரிக்கெட் வீரர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டு விடை பெற்றனர். பிறகு அவர்களை, தலைமைச்செயலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்[10].

Spectrum corruptionதுபாயிலும் கிரிக்கெட் நடப்பது ஆச்சரியம் தான்: U.A.E.தமிழ் சங்கமும் துபாயில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்கிறது[11]. இதற்கான விவரங்களும் தெரிவிக்கப்படுகின்றன[12]. ஆனால், தாவூத் இபாஹிம் மற்றும் வனுடைய ஆடகள் அங்கேயே இருப்பதலால், மேட்ச் பிக்சிங் நடந்ததா இல்லையா என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஒருவேளை டி-கம்பனி மற்றும் இதர புக்கீஸ்களே ஸ்போன்சர் செய்து விட்டார்களோ என்னமோ?

Mumbai D-co nexus IPL bettingதுபாயில் கிரிக்கெட் நடந்தால், அபுதாபிகாரர்கள் சும்மா இருப்பார்களா?: அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ.டி.எஃப்.சி. அணி வெற்றி பெற்றது. அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்ட‌ம் நேஷ‌ன‌ல் ட‌வ‌ர் ஸ்டேடிய‌த்தில் கடந்த 18ம் தேதி டிசம்பர் 2011 ந‌டைபெற்ற‌து[13]. இப்போட்டிக‌ளில் ஆறு  அணிகள் பங்கேற்றன. ஏ பிரிவில் அபுதாபி ஸ்டார், பிரேவ்ஸ்  ப‌ட்டாலிய‌ன், ஈடிஏ மெல்கோ ஆகிய 3 அணிக‌ளும், பி-பிரிவில் பைட்ட‌ர்ஸ் 11, ஏ.டி.எஃப்.சி., எம்.எம்.சி.சி. ஆகிய 3 அணிகளும் பங்கேற்றன. வெற்றிக் கோப்பையை ஸ்பான்ச‌ர் செய்த ஈடிஏ மெல்கோ[14] மேலாள‌ர் முஹ‌ம்ம‌து உம‌ர் அன்சாரி ஏ.டி.எஃப்.சி. அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிக‌ளை சிறப்பாக நடத்தித் தந்த எம்.எம்.சி.சி. அணியின் நிர்வாகிக‌ள் பிஎஸ் காஜா மொஹிதீன், த‌ப்ரே ஆல‌ம் மற்றும் அந்த அணிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது[15].

Yasin malik with his wifeஆரிய-திராவிட சித்தாந்தம் அமீரகத்தில் பேசப்படுவதில்லையா?: அமீரகத்தில் தமிழர்கள் ஆரியம்-திராவிடம் என்று பிரித்துப் பேசப்படுவதில்லை போலும். இருப்பினும் திராவிடத் தலைவர்கள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். ஒருவேளை அப்படி பேசினால், பருப்பு வேகாது என்று சுமுகமாகப் பேசி, வந்துபோவதற்கான காசு வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

23-05-2013


[3] Sports events on Anna, Kalaignar birth anniversaries: Stalin, Chennai | Monday, March 31 2008 IST, http://mkstalin.net/news/31March2008/chennai_cricket.html

[7] குறிப்பு: தமாஷாவிற்காக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. சித்தாந்தம் பேசி மக்களை திசைத் திருப்பும் இவ்ர்கள், அவவ்வப்போது, கொள்கைகளையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் படுகிறது.

[9] இப்பொழுதுள்ள என். சீனிவாசனா, அல்லது வேறொருவரா என்று தெரியவில்லை.

[14]  Genex holds a 5.27% stake in Etisalat DB (earlier called Swan Telecom), which is under scrutiny for its alleged link with Dubai-headquartered firm ETA Star that is implementing many projects in Tamil Nadu and is said to be close to the ruling DMK party headed by chief minister K Karunanidhi. A Raja, who lost his job as telecom minister on Sunday over the 2G scam, is a member of the DMK. ETA Star had close ties with the DMK chief, having bagged several projects in Tamil Nadu. the financial connections between Karunanidhi and the ETA directors

http://articles.economictimes.indiatimes.com/2010-11-17/news/27624585_1_eta-star-spectrum-scam-shahid-balwa.

As per the charge sheets of CBI, a bribe of Rs. 200 crore was given by Swan Telecom Pvt. Ltd. (now M/s Etisalat DB Telecom Pvt. Ltd.) to Kalaignar TV through a number of intermediary companies in the garb of loan or share application money.

http://www.thehindu.com/news/national/2g-scam-ed-to-attach-properties-worth-rs-223-cr/article2790423.ece

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (2).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (2).

Sun risers -Sri Lanka- riticized2தமிழகத்தில் கிரிக்கேட்டை இனவெறி ரீதியில் வாதிப்பது: தமிழகத்தில் 1960களிலிருந்து திராவிட சித்தாந்தம் பேசப்பட்டு வருகின்றது. ஆரியர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்து, திராவிடர்களை வென்று, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை திராவிடர்களின் மீது திணித்தார்கள் என்று பேசுவது, எழுதுவது நடந்து வந்தது. 1990களில் சரித்திர ஆசிரியர்கள், தொல்துறை நிபுணர்கள் முதலியோர் அத்தகைய வாதங்கள் எல்லாமே சரித்திர ஆதாரமற்றவை, மாயை என்று ஒதுக்கிவிட்டால் கூட, அவ்வப்போது, இச்சித்தாந்திகள் “ஆரிய-திராவிட” தொணியில் பேசுவார்கள். கிரிக்கெட்டும் இதில் விதிவிலக்கல்ல. கபில் தேவை “திராவிடன்” என்று வர்ணித்து எழுதினர். அதற்கு முன்பாக கிரிக்கெட் ஆரியமயமாக்கப் பட்டிருந்தது என்றும் வாதித்தனர். அதாவது பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தது என்றும் பிரச்சாரம் செய்தனர்.

Sun risers -Sri Lanka- riticized4வடஇந்தியர்களின் தாக்கம் அதிகம் தான்: இந்தியாவைப் பொறுத்த வரையில் பார்ஸிஸ் எனப்படும் இரானியர்கள் – அந்த மக்களின் வியாபாரிகள் தாம் 19ம் நூற்றாண்டு இறுதியில் பிரபலமாக்கினர். சிலருடைய கருத்தின் படி, மும்பையில் கிரிக்கெட் வகுப்புவாத ரீதியில் ஏற்படுத்தப்பட்டது. கல்கட்டாவில் நடுத்தர சமூகத்தினரின் பொழுது போக்காக இருந்தது.  மதராஸில் ஆங்கிலேயரை வெல்வதில் பெருமைக் கொண்டனர். ஹாக்கியில் தேசியத்தைப் போறிய இந்தியர்கள், திடீரென்று 1970களில் கிரிக்கெட்டில் மோகம் கொள்ள ஆரம்பித்தனர். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் யுத்தமாகவே சித்தரிக்கப் பட்டன. அதனால், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் வென்றபோது கொண்டாடினர். இதனை, இந்தியர்கள் வெறுத்தனர், குறைகூறினர். பிறகு, வீரர்களையும் போற்ற ஆரம்பித்தனர். இதனால், ரசிப்புத்தன்மை வெறியாக மாறியது.

Sun risers -Sri Lanka- riticized3பாலிவுட்டுடன் சேர்ந்த மும்பை கிரிக்கெட்: 2001ல் மைக் டென்னிஸ் என்பவர் பந்தை உருகுலைக்கும் காரணத்திற்காக, சச்சின் டென்டுல்கருக்கு ஒரு ஆட்டத்திற்கு தடை விதித்தார். அப்பொழுது, ரசிகர்கள் கொதித்து, அவரது கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டம் செய்தனர். பிசிசிஐ அப்பொழுது ஐசிசியிலிருந்து விலகிக்கொள்வோம் என்று கூட மிரட்டியது. கிரிக்கெட் பாலிவுட்டின் வியாபாரப் பொருளாகவும் மாற்றப்பட்டது. “லகான்” என்ற திரைப்படத்தில் கிராமத்து மக்கள், ஆளும் ஆங்கிலேயரை கிரிக்கெட்டில் தோற்கடிப்பது போல காட்டினர். தொடர்ந்து இக்பால், ஹாட்ரிக், சே சலாம் இந்தியா என்று பல படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டன.

Sun risers -Sri Lanka- riticized5தென்னாப்பிரிக்காவின் இனவெறி: தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர்கள் இனவெறி சித்தாந்தத்தினால், கருப்பர்களுடன் விளையாட மாட்டோம் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தனர். இந்தியா 1970ல் தான் முதன் முதலில் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ரு விளையாடியது. அப்பொழுது வெள்லையர்கள் இந்தியர்களை ஒருமாதிரித்தான் பார்த்தனர், நடத்தினர். 1991ல் பாகிஸ்தானியர் இந்தியாவில் ஆட மறுத்தனர். இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்திய வீரர்கள் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தான் அங்குச் சென்று விளையாடி வந்தனர். இதைப் பற்றியெல்லாம் எந்த திராவிட சித்தாந்தியும் அறிவதில்லை, அலசுவதில்லை, ஆராய்ச்சி செய்வதில்லை. இருப்பினும் ஆரியம்-திராவிடம், பார்ப்பனீயம்-பிராமணம் என்று பேசிக் கொண்டிருப்பர்.

Sun risers -Sri Lanka- riticized6ஆஸ்திரேலியர் இனவாதிகள் தாம்: ஆஸ்திரேலியர்கள் ஆரம்பத்திலிருந்தே இனசித்தாந்த்தில் பிடிப்புள்ளவர்களாக இருந்தனர். இந்தியர்கள் அங்குச் சென்று விளையாடுவது மிகவும் கடுமையாக இருந்தது. அதே நேரத்தில், அவர்கள் இந்தியாவில் வந்து ஆடவேண்டும் என்றால் ஏகப்பட்ட கன்டிஷன்களை போடுவார்கள். ஆனால், இந்தியர்கள் அவர்களை நன்றகத்தான் நடத்தியுள்ளார்கள். 1986ல் ஒரு ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் – டீன் ஜோன்ஸ் வாந்தியெடுத்தபோது, இந்தியர்கள் உதவினர். அப்பொழுது எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை.

Dean Jones vomiting at Chepauk 1986 courtesy Wisdenசென்னை சிதம்பரம் ஸ்டேடியம்: சென்னையில் சிதம்பரம் ஸ்டேடியம் 1916ல் ஆரம்பிக்கப்பட்டது. பிசிசிஐ 1928ல் மும்பையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் 1932ல் தொடங்கியது[1].  ரஞ்சித் டிராபி போட்டி 1934ல் தொடங்கியது. இதில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் யார் என்பது படித்துத் தெரிந்து கொள்ளலாம். அப்பொழுது, இவ்விஷயங்களில் ஏன் திராவிடவாதிகள் அல்லது அத்தகைய அரசியல்வாதிகள் இதை எதிர்க்கவில்லகென்று தெரியவில்லை. பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் தோன்றி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, எப்படி இத்தகைய பிரபலமான கிரிக்கெட்டை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அதிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டித்தான் அப்பொழுது மேட்சுகளே நடக்கும். தமிழர் திருவிழாவை பாதிக்கும் முறையில் நடத்தினார்களா, அதனை எதிர்த்தார்களா என்று தெரியவில்லை.

Indian cricketers of those days1967 முதல் 1987 வரை: திராவிட கட்சிகளின் ஆதிக்கம், இக்காலத்தில் அதிகமாக இருந்தது. அப்பொழுது பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி எதிராக யாரும் பேசிவிட முடியாது. அப்படி பேசினால் அவர்கள் கதி அதோகதிதான்[2]. 1967-68களில் இந்தியா நியூஸிலாந்த்தை அவர்கள் நாட்டிலேயே வென்றது. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கீழ்கண்ட ஆண்டுகளில் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான போட்டிகள் நடந்துள்ளன.

1972-73 இங்கிலாந்து

1974-75 மேற்கு இந்திய தீவுகள்

1976-77 நியூசிலாந்து, இங்கிலாந்து

1978-79 மேற்கு இந்திய தீவுகள்

1979-80 ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்

1981-82 இங்கிலாந்து

1982-83 இலங்கை

1984-85 மேற்கு இந்திய தீவுகள்

1969 பிப்ரவரியில் அண்ணாதுரை இறக்கும் வரையிலும், அவர் கிரிக்கெட்டிற்கு எதிராக யாதாவது பேசினாரா என்று தெரியவில்லை. பிறகு வந்த கருணாநிதி மாநில சுயாட்சி பற்றி பேசும் போதும், அதில் கிரிக்கெட் வரவில்லை. பெரியார் 24-12-1973ல் காலமானார், ஆனால், அவர் கிரிக்கெட்டிற்கு எதிராக யாதாவது செய்தாரா என்ற குறிப்புக் காணப்படவில்லை. அப்பொழுதெல்லாம் இத்தகைய பேச்சுகளோ, பிரச்சினகளோ, ஊழல்களோ இருந்ததில்லை. பழையதைப் பற்றி நினைவு கூர்ந்தாலும், சந்தோஷமாகத்தான் இருக்கும்[3]. ஆனால், இவற்ரையெல்லாம் விடுத்து அவர்கள் அலசப்படுத்துவது இதோ இப்படித்தான் உள்ளது.

EVR-karu-atheist-path-of-jihadiகிரிக்கெட் ஒரு பார்ப்பனீய விளையாட்டு, அவர்களுக்குத் தான் வரும்: சென்னை மெரினாவில் கிரிக்கெட் ஆடக்கூடாது என்று போலீஸார் தடைவிதித்தனர். திராவிட சித்தாந்தி சின்னக் குத்தூசி, “கிரிக்கெட் விளையாட்டையும், மெரினாவில் கிரிக்கெட் ஆடுவதையும் ஆதரித்து, தினமணி வைத்தியனாத அய்யர் தலையங்கம் எழுதியிருக்கிறார்.  என்ன காரணம் என்றால் (ஓட்டப் பந்தயம்), (தடை ஓட்டம்), (நெடுந்தூர ஓட்டம்), (நீளம் தாண்டுதல்), (உயரம் தாண்டுதல்), (மும்முறை தாண்டுதல்), (குண்டு எறிதல்), (தட்டு எறிதல்), (ஈட்டி எறிதல்), (நீச்சல்), (தடகளம்), (கூடைப்பந்து), (வளைகோல் பந்து), (கையுந்துபந்து), (கால்பந்து), (கராத்தே), (குத்துச்சண்டை), (கபடி) என்று எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் அதெல்லாம் பார்ப்பனச் சிறுவர்களின் பூப்போன்ற உடலமைப்புக்கு ஒத்து வராது! பார்ப்பனர்களின் ஒரே விளையாட்டு கிரிக்கெட்தான்! மெரினாவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் யார்? மாம்பலம் – மைலாப்பூர் – திருவல்லிக்கேணிப் பகுதிகளைச் சேர்ந்த பார்ப்பனச்சிறுவர்கள்தான்! மெரினாவில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிப்பதால் – இந்த மூன்று பகுதிப் பார்ப்பனச் சிறுவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நஷ்டம்?”, என்று முடிக்கிறார். இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய இடம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்யர் – அய்யங்கார் பிரச்னை பெரிதாக இருக்கிறதாம். எஸ்.வி.டி. சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், ராமன், சடகோபன் ரமேஷ் என்று அய்யங்கார்கள் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவராமகிருஷ்ணன், வி.வி.குமார் என்ற இருவர் மட்டும்தான் அய்யர்கள் என்கிறது சேப்பாக்க கிரிக்கெட் வட்டாரம்[4]. டிராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரைக் கூட இனவாத ரீதியில் திராவிட சித்தாந்திகள் அலசும் போக்கை என்னென்பது[5]. ஆனால், இப்படியெல்லாம் அலசிவிட்டு, இப்படியும் சொல்கிறர்கள்.

2G - Karu-wife - cartoonபார்ப்பனர் அல்லாதவர் தலைமை தாங்கியதால் தான் இந்தியா உலககோப்பையை வென்றது: ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த்,   ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல்கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார், டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல்[6]. இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைத்தது! இப்படித்தான் இன்றும் எழுதி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] ஆரியமாயை, கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் நடந்த கருத்தரங்களைப் பற்றி படித்தால், அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியும். ரா.பி. சேதுபிள்ளை, ஈழத்து அடிகள், சீனிவாசன் முதலியோரை நடத்திய விதம் ஞாபகத்தில் வர வேண்டும்.

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

kalanithi_maran,_kaviya_and_kaveriவருடத்திற்கு ரூ 85 கோடி என்று ஏலத்தில் கலாநிதி மாறன் “ஹைதரபாத் ரைடர்ஸ்” என்ற கிரிக்கெட் கூட்டத்தை குத்தகைக்கு எடுத்தபோது[1], திராவிட இனமானங்களுக்கு, ரத்தங்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது போலும். “டெக்கான் சார்ஜர்ஸ்” காசுப் பிரச்சினையில் சிக்கியதால் அக்கூட்டம் மூடப்பட்டு, பிசிசிஐ தேடிக்கொண்டிருந்தபோது தான், இந்த திராவிட செல்லப்பிள்ளைக் கிடைத்தாராம்[2]. வருடத்திற்கு ரூ 85 கோடி என்பது 2008ல் ஒப்பந்த ஏலத்தில் 100% மேலாகக் கேட்கப்பட்ட பணத்தைவிட அதிகமாம். சன்டிவி மற்றும் பிவிபி வென்சூர்ஸ் [ராஜசேகர ரெட்டி கம்பனி ஷக்‌ஷி டிவியின் பங்குதாரர்[3]] என்று இரண்டே கம்பெனிகள் ஏலத்தில் இருந்தனராம், மற்றவர்கள் ஏலம் கேட்காமல் அமைதியாக இருந்தார்களாம்[4]. பிவிபி வென்சூர்ஸ் ரூ.69.03 கோடி என்றபோது, சன்டிவி ரூ 85 கோடிக்கு கேட்டதால், ஏலம் முடிவு செய்யப்பட்டதாம்[5]. திராவிட கண்மணிகளுக்கு இவையெல்லாம் கூட புரியவில்லை போலும்.

Cheer-girls-sponsored- Spicejet2சன்டிவி, ஷக்‌ஷி டிவியை வென்றது எப்படி?: கத்தோலிக்க சோனியா காங்கிரஸ், கிறிஸ்தவ ராஜசேகர ரெட்டி காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது தெரிந்த விஷயமே. இருப்பினும்,  பிசிசிஐ திராவிட, நாத்திக, இந்து விரோத கூட்டத்திற்கு எப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் குத்தகைக்குக் கொடுத்தார் என்பது விளங்கவில்லை. குங்குமம் வைத்தவர்களை[6] ஏசிய தாத்தாவின் பேரனுக்குக் கொடுக்கிறோமே என்று கவலைப் படவில்லை. கலாநிதிக்கு சாதகமாக ஏலம் இருந்தது என்பதை, அவர் கொடுத்த விலை அல்லது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்தது. அவர் அத்தகைய மதிப்பீட்டை சரியாக செய்தாரா என்று கூட கேள்வியை எழுப்பினர்[7]. எப்படியிருந்தாலும், யுபிஏ வியாபாரக் கூட்டு நன்றகத்தான் செயல்படுகிறது என்பது தெரிகிறது.

Sun risers -Sri Lanka- riticized4ஒருகோவில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால்,  அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்: கருணாநிதி இப்படி சொன்னது[8] ஞாபகத்தில் உள்ளதா, “ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்”. அதற்கு முன்னர்என்ன நெற்றியில் ரத்தம் வருகிறதேஎன்று கிண்டல் அடித்துள்ளார். அதே போல நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் கலாநிதிக்கு, பேரனுக்கு உதவியிருக்கிறாரா? நல்லவேளை, நாளைக்கு இதெல்லாம் “பாப்பான்களின் சதி”, “ஆரியத்தின் சூது”, “தமிழருக்கு சூதாட்டம் தெரியாது”, “ஆரியன் வந்துதான் கெடுத்தான்”, என்றெல்லாம் கூட திராவிட சித்தாந்திகள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

கீழ்காணும் படம், இந்த டளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது – நன்றி.

http://www.facebook.com/photo.php?fbid=550737211623599&set=a.295437630486893.76949.293309174033072&type=1&relevant_count=1

Sun risers -Sri Lanka- Karu familiy criticizedகைமாறி கலாநிதிக்கு வந்தது எப்படி?: முன்னர் டெக்கான் குரோனிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் [Deccan Chronicle Holdings Limited] ரூ 428 கோடிகள் கொடுத்து பத்தாண்டுகளுக்கு ஏலம் எடுத்திருந்தது, அதாவது வருடத்திற்கு 42.8 கோடி என்றாகிறது. கடந்த செப்டம்பர் 2012ல் காசுப்பிரச்சினைக்காக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அக்டோபர் 15, 2012 மாலை 5 வரை இதனால் ரூ.100 கோடிக்கு பேங்க் கேரண்டி கொடுக்கமுடியவில்லை. “டெக்கான் சார்ஜர்ஸ்” பிசிசிஐன் மீது வழக்குத் தொடர்ந்தாலும், உச்சநீதி மன்றத்தில் பின்னருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதனால், மறுபடியும் பிசிசிஐ ஏலத்தை ஆரம்பித்தது. ஆனால், இப்பொழுது குறைந்த பட்சம் ரூ.60 கோடி என்று நியாயமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆரம்ப ஏலத்தொகையாக வைக்கப்பட்டதாம்[9]. மார்ச் 2013 ல் தான் இவையெல்லாம் நடந்தது. ஆனால், திராவிடப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஐயோ, மாறனே அந்த கும்பலுடன் சேராதே என்று அறிவுருத்தவில்லை.

Sun risers -Sri Lanka- riticizedசன்ரைசர்ஸ்” என்ற ஆங்கிலப் பெயர் சூட்டிய புராணம்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஐபிஎல் சீசன் 1 தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது. ‘டெக்கான் சார்ஜர்ஸ்’ என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது.  இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் அது தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த அக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டு, கலாநிதி வாங்கியது மேலே விவரிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்து, “சன் ரைசர்ஸ்” என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்விதமாக திருவாளர் டி. வெங்கட்ராம ரெட்டி [T. Venkattram Reddy] அவர்கள் வியாபரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[10].

Deccan chargers T Venkattram Reddy the looser of the dealதிராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது?: மார்ச் முதல் மே வரை வள்ளுவர் கோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல, பிரபாகரன் மகனின் படத்தை வைத்துக் கொண்டு வெவ்வேறு கோஷ்டிகள் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், ஒரு கும்பல் கூட இதனைத் தட்டிக் கேட்கவில்லை.திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது என்ற ரகசியம் இனமான போரளொகளுக்குப் புரியவில்லை. குமார் சங்கக்காரா [Kumar Sangakkara] மற்றும் திஸரா பெரேரா [Thisara Perera] போன்ற ஶ்ரீலங்கா வீரர்கள் எப்படி திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று கேட்கவில்லை. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இக்கூட்டத்தில் உள்ளார்கள்[11]. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால், தயாநிதி, ஏலம் எடுக்கும் போது இப்பிரசினை இல்லை அல்லது அப்பொழுது இந்தியா-இலங்கை உறவு சுமுகமாக இருந்தது என்பார்[12]. கலாநிதி பணம் கொடுக்கமலா சேர்ந்து கொண்டார்கள். ஜெயலலிதாவும் இதனை கிண்டலடித்துள்ளார்[13].

கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டிய லலித் மோடி: முந்தைய ஐபில் தலைவர், இந்த பேரத்தில் ஏதோ சூது இருப்பதைக் கண்டறிந்து, தனது நண்பர் கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்து விட்டர் என்று குற்றஞ்சாட்டினார். “ஆக, ஒருவழியாக, சன்டிவி இந்த குத்தகையப் பெற்று விட்டது. இவ்வாறு நடக்கும் என்று நான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கூறினேன், ஏனனில் ஶ்ரீனிவாசன் அவ்வாறு விரும்பினார். இதைவிட பெரிய ஊழல் / மோசடி இருக்க முடியாது. இந்த ஶ்ரீனிவாசன் மற்றும் இந்தியா சிமென்ட் முதலியவற்றின் சன்டிவியுடனான உறவுகளை ஆராய வேண்டும். ஏனெனில் கலைஞர் டிவிஞஊழலை மறக்க வேண்டாம்”, என்று டுவிட்டரில் வெளியிட்டார்[14]. கலாநிதியின் முதலாளித்துவத்தில் அசுரத்தனமான தீவிரவாதம் இருப்பதை விமர்சகர்கள் காண்கின்றனர். சிபிஐ அவரது சகோதரனின் ஊழலைப் பற்றி விசாரித்து வருகிறது. 2004 முதல் 2007 வரை அவர் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாருக்கெல்லாம் வாரி வழங்கும் முறையில் பரிந்துரை செய்துள்ளார் என்று விசாரித்து வருகிறது. நிச்சயமாக யுபிஏ-1 அரசாங்கம் மாறன் வியாபாரத்திற்கு உதவியிருக்கிறது. எது எப்படியாகிலும், இந்த பேரத்தின் மூலம் சன்டிவி மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் விளம்பர முத்திரை, வணிக மதிப்பு, வியாபார ஆதிக்கம் முதலியவற்றை அதிகமாக்குவார் என்று தெரிகிறது[15].

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] Kalanithi Maran’s Sun TV Network today won the Hyderabad franchise of the Indian Premier League for an amount of Rs 85.05 crores per year, marking an end to BCCI’s hunt for a new team in the wake of the controversial termination of cash-strapped Deccan Chargers. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/#sthash.UsjLLnim.dpuf

[3]  PVP is also a film financier, interestingly, is an investor in YSR Congress leader Y S Jaganmohan Reddy’s Sakshi TV.

http://timesofindia.indiatimes.com/business/india-business/Did-Maran-pitch-it-right-on-valuation/articleshow/16961258.cms

[4] The source said that Sun TV and PVP Ventures were the only two companies which bid for the new IPL team. Four other companies had collected the forms but did not bid. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[5] “SUN TV Network have won the Hyderabad Franchise for an amount of Rs 85.05 crores per year. This Franchise fee represents a premium of over a 100 % above the amount paid by DCHL for the Hyderabad Franchise in 2008,” BCCI Secretary Sanjay Jagdale said in a release. “The SUN TV Network bid was substantially higher than the second bid of PVP Ventures, which was Rs 69.03 crores,” Jagdale said.- See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[9] In an effort to attract more bidders, the BCCI had kept the base price at a reasonable Rs 60 crores per year. Deccan Chronicle Holdings Limited had bought the Hyderabad franchise for Rs 428 crores for a period of 10 years. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[11] IPL organisers decided that the 13 Lankan players in the tournament would sit out matches in Chennai.

http://www.ndtv.com/article/india/two-lankan-players-in-sun-group-owned-ipl-team-dmk-double-speak-on-lanka-row-347232

[12] DMK leader and actor Khushbu said she was “sure the Sun Group will take a call on this”. Sun Group officials were not available for comment, but sources close to Kalanidhi Maran’s younger brother and former minister Dayanidhi Maran argue that matters on the Sri Lanka front were much more cordial last year when the team purchased the Sri Lankan players. Saravan, a cricket fan, pointed out that the IPL was a “business model” and about winning a cricket tournament.

[14] Former IPL chairman Lalit Modi smelt a rat in the deal. He accused BCCI President N. Srinivasan of ‘gifting’ the franchise to his friend. “So, finally Sun TV has got an IPL franchise. I had predicted three months ago it will be Sun, as BCCI president wanted it that way. Can’t be a bigger scam than this. Someone should see Srinivasan and India Cements’ relationships with Sun TV. Don’t forget Kalaignar TV scam,” tweeted Modi. “While Sahara pays $370 million (Rs.1,990.6 crore) for its team, this one goes for pennies. How and why?” he asked in another tweet. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

[15] Critics say Maran’s growth is a classic example of crony capitalism. CBI is probing whether Maran’s brother Dayanidhi may have used his position as telecom minister between 2004 and 2007 in UPA-1, to win favours for Maran’s business. Whatever the outcome of the probe, the buying of an IPL team gives Sun a chance to promote its TV business and ensure brand recall of SpiceJet across India. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html