Archive for the ‘இந்திய தூதர்’ Category

சீனா உலக ஆதிக்கம் பெறுவதற்காக பில்லியன்கள் செலவு செய்து கையாளும் முறைகள்  – இந்தியாவுடன் போர், எல்லை ஆக்கிரமிப்பு, மோதல் முதலியன – 1962 முதல் 2022 வரை (3)

ஜனவரி17, 2022

சீனா உலக ஆதிக்கம் பெறுவதற்காக பில்லியன்கள் செலவு செய்து கையாளும் முறைகள்  – இந்தியாவுடன் போர், எல்லை ஆக்கிரமிப்பு, மோதல் முதலியன – 1962 முதல் 2022 வரை (3)

பரந்த இந்தியா சுருங்கியது, தனி நாடுகள் ஆனது: 1947ல் ஆங்கிலேயர்க்ள் இந்தியாவை விட்டு செல்லும் போது, பிரச்சினைகளை உண்டாக்கி விட்டுத் தான் அகன்றனர். 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பூகோள விஸ்தாரம் ஆப்கானிஸ்தான், சிந்த், திபெத், பர்மா, இலங்கை என்று பல பிரதேசங்களை சேர்த்து தான் இருந்தன. ஆனால், இந்தியாவுக்கு சுதந்திரம் எனும் போது, பாகிஸ்தான் பிரிக்கப் பட்டது என்றாலும், முன்னமே மற்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டாகியது.

  • 1910 ஆம் ஆண்டு சீன புரட்சியின் காரணமாக சீனப்பேரரசரின் அரசு கவிழ்ந்தது. திபெத்தை விட்டு சீனப் பேரரசரின் படைகள் அனைத்தும் வெளியேறின. 1912 ஆம் ஆண்டு சான் யாட் சன் தலைமையில் சீன கம்யுனிஸ்ட் பிரகடனமானது. அதே ஆண்டில் ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து திபெத் தலைநகர் லாஸாவிற்குத் திரும்பினார். அவருடன் “சர் சார்லஸ் பெல்” என்ற ஆங்கிலேய தளபதியும் சிறுபடையுடன் திபெத் சென்றார். திபெத் சென்ற முதல் நாளே தலாய் லாமா திபெத்தை ‘பூரண சுதந்திரம் பெற்ற குடியரசு நாடாக’ அறிவித்தார். புதிய சீன குடியரசு அமைக்கும் பணியில் கவனம் செலுத்திய சான் யாட் சென் இந்த பிரகடனத்தில் கவனம் செலுத்தவில்லை.
  • ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஆப்கானிஸ்தான் விடுதலை பெற்றது.
  • பர்மாவுக்கு 1948ல் சுதந்திரம் அளிக்கப் பட்டது.
  • பிப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது

1962ல் ஏற்பட்ட இந்தியசீன போரும், பிரச்சினைகளும்: இந்திய சீனப் போர் என்பது 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரை குறிக்கும். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், மற்ற புற காரணிகளும் இப்போர் நடப்பதற்கு முதன்மை காரணமாக விளங்கியது. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க மறுத்த தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இந்தியா முன்னோக்கிய கொள்கை என்பதை முன்னெடுத்து எல்லைப் பகுதியில் வெளிஅரண்களை அமைத்தது. 1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள், மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். சீனா 1962, நவம்பர் 20ல் போர்நிறுத்தம் அறிவித்ததை தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது. மேலும் அவர்கள் சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து பழைய நிலைக்கு திரும்பினார்கள்.

தொடர்ந்த எல்லைப்பிரச்சினைகள், ஆக்கிரமிப்புகள் முதலியன: இந்தியாவும் சீனாவும் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. மங்கோலியா, ருசியாவிற்கு அடுத்து சீனா இந்தியாவுடன் தான் நீண்ட எல்லையை கொண்டுள்ளது. இந்திய சீன எல்லையில் பூடானும் நேபாளமும் வருவதால் இந்திய-சீன எல்லை மூன்று பகுதிகளாக உள்ளன. அக்ஷய் சீனா எனப்படும் பகுதி இந்திய மேற்கு எல்லையில் உள்ள எல்லை உடன்பாடு எட்டப்படாத பகுதியாகும். இதை இந்தியா காஷ்மீரத்தின் பகுதி என்றும் சீனா தனது சிங்சியான் மாகாணத்தின் பகுதி எனவும் கூறுகின்றன. பூடானுக்கும் மியான்மாருக்கும் இடையே உள்ள பகுதி இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசமாகும், இதை சீனா தனது திபெத்தின் தென்பகுதி என்கிறது. இப்போரானது கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடத்தில் நடைபெற்றதால் போர் தளவாடங்களை இரு தரப்பும் போர்முனைக்கு கொண்டு செல்வதில் சிரமத்தை சந்தித்தனர், இப்போரில் இந்தியா மற்றும் சீனா இரண்டும் வான் மற்றும் கடற்படையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்த மலைப்பகுதிகளில் நடந்த இப்போரில் எதிரி நாட்டு படைகளால் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை விட கடும் குளிரால் ஏற்பட்ட இழப்பே அதிகம்.

அக்டோபர் 2021ல் சீனஇந்திய வீரர்கள் அருணாசலபிரதேச இல்லையில் மோதல்[1]: மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளன. இந்நிலையில், அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் கடந்த வாரம் அக்டோபர் 2021 மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியது[2]. தீபெத் வழியாக அருணாச்சலபிரதேசத்தின் தங்வாங் பகுதிக்குள் கடந்த  வாரம் 200 சீன வீரர்கள் நுழைய முயற்சித்தனர். அவர்கள் அங்கு இருந்த சோதனைச்சாவடிகளை சேதப்படுத்த முயற்சித்தனர். அப்போது, அங்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர் சீன வீரர்களை தடுத்தனர். இதனால், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீன வீரர்கள் தங்கள் நாட்டின் எல்லைக்கே திரும்பி சென்றனர். இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர். இதனை தொடர்ந்து இருநாட்டு படையினரின் உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சீன வீரர்களை இந்திய படையினர் விடுதலை செய்ததாக தகவல் வெளியாகியது. இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.  லடாக் மோதல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனவரி 5 2022- ஆந்திராவில் இரண்டு மாதங்களாக சுற்றி வந்த சீனப் புறா[3]: ஆந்திராவில் புறாவின் காலில்சீன நாட்டின் ரகசிய குறியீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டை கட்டி செய்திகளை எழுதி அனுப்பப் பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர். மேலும், காதலுக்கும் புறாக்கள் கடிதங்களை சுமந்து சென்று தூது போயுள்ளதாகவும் நாம் படித் துள்ளோம். ஆனால், தற்போது சில புறாக்கள் நம் நாட்டில் சீன நாட்டின் ரகசிய குறியீடுகளை தாங்கி உலா வருகின்றன. 05-01-2922 அன்று ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே சீமகுர்த்தி எனும் ஊரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு உள்ள ஒரு புறாவை அப்பகுதியினர் பிடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஜனவர் 4, 2022- ஒரிஸாவுக்கு அடுத்து ஆந்திராவில் சீனப் புறா வேவு பார்த்தது[4]: இதையடுத்து, போலீஸார், வனத்துறை அதிகாரிகள் அப் பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர், அந்த புறாவை போலீஸார் கைப்பற்றி அதன் காலில் இருந்த ரகசிய குறியீடை பறிமுதல் செய்தனர். அதில் ஏஐஆர்-2022 எனவும், மேலும் சில சீன எழுத்துக்களும் எழுதி இருந்தன. இப்புறா கடந்த 2 மாதங்களாக அப்பகுதியில் சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர். இது குறித்து ஓங்கோல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 04-01-2022, செவ்வாய் கிழமை ஒடிஷா மாநிலம், காம்ஸ்பஹால் கிராமத்தில் ஒரு புறா அடிபட்டு சாலையில் விழுந்தது. இதனை கண்ட சர்பேஷ்வர் சவுத்ராய் என்பவர் அப்புறாவை எடுத்து பார்க்கையில், அதன் காலில் சீன எழுத்துக்கள் கொண்ட ஒரு ரகசிய குறியீடு இருந்துள்ளது. உடனே இது குறித்து சர்பேஷ்வர் சவுத்ராய் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இப்புறா எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிஷாவை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலம், ஓங்கோலில் மற்றொரு சீன குறியீட்டுடன் புறா ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[5]. இப்படி புறாக்கள் டுரோன்கள் போல செயல்படும் நேரத்தில், இந்திய மனிதர்களும் வேலை செய்து வருவது தெரிகிறது.

தேசவிரோதம், தேசதுரோகம் முதலியன: 61 வயதாகும் ராஜீவ் சர்மா சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றி வந்தார். இந்திய அரசின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராக அவர் இருந்தார். ராஜீவ் சர்மா இங்கிருந்தபடி, சீனாவின், ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு, பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவ்வாறு, அவர் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிறுவிய விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் சிந்தனைக் குழுவுடனும் அவர் தொடர்பில் இருந்தார் என்றும் அவர் கைது செய்யப்பட்ட பின்பு அதன் இணையதளத்தில் அவருடைய வேலைகள் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[6]. இவ்வாறு கம்யூனிஸ்ட் பிரச்சாரமும் தொடர்ந்தது[7]. எஸ். குருமூர்த்தி இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்று இதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. அதாவது “தி இந்துவின்” மார்க்ஸிய ஆதரவு தெரிந்த விசயமே. சர்மா அவ்வாறு இந்திய ஊடகங்களில் வேலை பார்த்து, சீனாவுக்கு வேவு பார்க்கிறான் என்றால் அது, அவனது துரோகத்தைக் காட்டுகிறது. இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்தியாவைத்தான் எதிர்த்து வருகின்றனரே தவிர, சீனாவை கண்டிப்பதில்லை, விமர்சிப்பதில்லை. ஏனெனில், அவர்களிடமிருந்து இவர்களும் பணம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே சிபிஐ (CPI), சிபிஎம் (CPM), சிபிஐஎம் (CPIM) என்றெல்லாம் பெயர்களை வைத்து கொண்டு அவர்களால் தங்களது எஜமானர்களை எதிர்க்க முடியாது.

© வேதபிரகாஷ்

17-01-2022.


[1] தினத்தந்தி, இந்தியசீன படையினர் இடையே மீண்டும் மோதல்; சீன வீரர்கள் சிறைபிடிப்பு, பதிவு: அக்டோபர் 08, 2021 10:12 AM.

[2] https://www.dailythanthi.com/News/India/2021/10/08101215/India-China-faceoff-in-Arunachals-Tawang-PLA-troops.vpf

[3] தமிழ்.இந்து, புறாவின் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு: ஆந்திர போலீஸார் தீவிர விசாரணை, என்.மகேஷ்குமார், Published : 06 Jan 2022 07:03 AM; Last Updated : 06 Jan 2022 07:03 AM.

https://www.hindutamil.in/news/india/754684-chinese-secret-code.html

[4] தினகரன், ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் புறாவின் காலில் சீன நாட்டின் ரகசிய குறியீடு: போலீஸார் தீவிர விசாரணை, 2022-01-06@ 12:59:29.

[5] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733107

[6]  பின்னணியில் குருமூர்த்தியா? – சீனாவுக்காக வேவு பார்த்த இந்தியர்! | Journalist Rajeev Sharma, Sep 21, 2020; https://www.youtube.com/watch?v=Rmy9En43Jd8

[7] தமிழ்.வெப்துனியா, சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா‘ – விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்,Written By Prasanth Karthick, Last Updated: திங்கள், 21 செப்டம்பர் 2020 (15:51 IST). 

[8] https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/rajiv-sharma-an-indian-journalist-who-spied-on-china-chinese-state-media-staying-away-120092100066_1.html

சீன அதிபா் ஷி ஷின்பிங்கின் திபெத் விஜயமும், இந்திய எல்லைகளில் நடக்கும் ஊடுருவல் மற்ற விவகாரங்களும் (3)

ஜூலை26, 2021

சீன அதிபா் ஷி ஷின்பிங்கின் திபெத் விஜயமும், இந்திய எல்லைகளில் நடக்கும் ஊடுருவல் மற்ற விவகாரங்களும் (3)

ஜூலை 21 முதல் 23 வரை மேகொண்ட சைன அதிபர் விஜயமும், இந்திய ஊடகங்களும்: ஜூலை 21-புதன், 22-வியாழன் மற்றும் 23-வெள்ளிக் கிழமைகளில் வேற்கொண்ட ஜி ஜின்பிங்கின் விஜயம், இந்திய ஊடகங்களில் தாமதமாகவே வெளிவர ஆரம்பித்தன. சீன அதிபா் ஷி ஷின்பிங், அருணாசல பிரதேசத்தையொட்டிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நையிங்சி (Nyangchi) நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்[1]. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது[2]: என்று எச்சரிக்கையாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. “சீனாவில் அரசியல்ரீதியாகப் பதற்றம் நிறைந்த திபெத் மாகாணத்துக்கு அதிபா் ஷி ஜின்பிங் முதல் முறையாக வருகை தந்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுற்றுப் பயணம் 21-07-2021, புதன்கிழமையே நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் 23-07-2021, வெள்ளிக்கிழமைதான் தெரிவித்தனா். இந்தச் சுற்றுப்பயணத்தால் எழக்கூடிய சா்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில் சீன அதிபரின் திபெத் சுற்றுப் பயணம் குறித்து அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நையிங்சி நகர விஜயம் ராணும முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப் படுகிறது: திபெத்தில் ஷி ஜின்பிங் நேரடியாக வந்திறங்கிய நையிங்சி நகரம், இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்துக்கு மிக அருகில் உள்ள எல்லை நகரமாகும். அங்கு விமானங்கள் வந்து இறங்கும் வகையில், நவீனப் படுத்தப் பட்ட, விமான நிலையம் முதலியவை உள்ளன. அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா், அங்கிருந்து திபெத் தலைநகரான லாசாவுக்குச் சென்றார். எல்லையில் புதிதாக அமைக்கப்பட்ட அதிவிரைவு புல்லட் ரயில் மூலம் ஷி ஜின்பிங் நைசிங்கிலிருந்து, லாசா நகருக்குச் சென்றார். லாசாவில் ராணுவ அதிகாரிகளுடம் பேசியுள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன. திபெத் பகுதியை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 70-ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் அவா் அந்த மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

திபெத் பகுதியை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 70-ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் விஜயம்: அந்தச் சுற்றுப் பயணத்தின்போது, ‘புதிய யுகத்தில் திபெத்தை ஆள்வதற்கும் அந்தப் பிராந்தியத்தில் நிரந்தர நிலைத்தன்மை மற்றும் உயா்தர வளா்ச்சியை ஏற்படுத்துவதற்குமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்’ என்று ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். நையிங்சி நகரில் இருந்தபோது, அங்குள்ள பிரம்மபுத்ரா நதிக்கரைக்குச் சென்ற அவா், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். அந்த நதியில் மிகப் பெரிய அணை கட்டும் திட்டத்துக்கு சீனா இந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதுகுறித்து இந்தியாவும் வங்கதேசமும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் அவா் பிரம்மபுத்ரா நதிக் கரையைப் பார்வையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1912-ஆம் ஆண்டு முதல் சுதந்திரமான தனி நாடாக இயங்கி வந்த திபெத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு 70 ஆண்டுகளுக்கு முன்னா் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. அந்த இணைப்பை ‘திபெத்தின் அமைதி முறையிலான விடுதலை’ என்று சீனா கூறிக் கொண்டாலும், அது தங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்று இந்தியாவில் புலம் பெயா்ந்துள்ள திபெத் அரசும், அந்த நாட்டு மக்களும் கூறி வருகின்றனா். இந்த நிலையில், திபெத் இணைப்பைக் குறிக்கும் வகையில் அந்தப் பகுதியில் ஷி ஜின்பிங் முதல்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்”.

அருணாசலபிரதேச எல்லைப் பகுதிகளில், சைனா அதிநவீன கட்டமைப்புகளை உருவாக்கி வருவது: தென் கிழக்கு திபெத் பகுதியில் உள்ள யிங்ச்சி மெயின்லிங் விமான நிலையத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங், விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும், பாரம்பரிய உடையில் திரண்டிருந்த பொதுமக்கள், சீன கொடிகளை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்[3]. மேலும், அவரை சுற்றி நடனக் கலைஞர்களும் பாரம்பரிய நடனம் ஆடியபடி வரவேற்றனர்[4]. யிங்ச்சி மெயின்லிங் பகுதியில் நடைபெற்று வரும், ரயில்வே திட்டப் பணிகளை ஆய்வு செய்ய, அவர் வந்ததாக கூறப்படுகிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த புதன்கிழமை, திபெத் பகுதிக்கு வருகை தந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகே அவரது வருகை குறித்த தகவல் வெளியிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, சீன அதிபர் ஒருவர் திபெத் செல்வது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 1990-ல் அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் திபெத் சென்றார். தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங், இதற்கு முன்பு 2011-ல் துணை அதிபராக இருந்தபோது, திபெத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத் சுதந்திரத்திற்காக தலாய் லாமா நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், சீன அதிபரின் திபெத் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020-2021, சைனாவின் ஆக்கிரமிப்பு, கட்டுமானங்களை உருவக்கியது, எல்லை மோதல்கள்: இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 2020 முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. டோக்லாம் தொடங்கி கல்வான் பள்ளத்தாக்கு மோதல் வரை பல்வேறு இடங்களில் சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து முறியடித்ததோடு, கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் ஏரியைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளையும் கைப்பற்றியது[5]. அதேபோல், யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்ததோடு, அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா – சீனா எல்லைப் பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது[6]. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் பாரம்பரிய எல்லைகளை சீனா அங்கீகரிக்காததால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. சுபன்சிரி மாவட்டம், சாரி சூ நதிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்தகிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் புகைப்படம் உறுதி செய்துள்ளது.

திபெத் வழியாக, இந்தியாவில் ஊடுருவுவது என்பது, சைனாவின் 2000 வருட திட்டங்களில் ஒன்று!: கம்யூனிஸத் தலைவர்களின் படங்களுடன், ஜி ஜிங் பிங்கிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு தூண் வைக்கப் பட்டது. இந்திய எல்லைகளைத் தொட்டுவிடும் தூரத்தில், மின்சார ரயில், திபெத்தில் இயங்கி வருகிறது.  புல்லட் ரெயிலும் விடப் பட்டுள்ளது. டோக்லாம் மோதலுக்குப் பிறகு, சீனா எல்லைகளில் நீண்ட சாலைகள் போடுவது, ரெயில்வே பாதை இடுவது, அதற்கான கட்டுமானங்களைக் கட்டுவது என்று வேகமாக ஆரம்பித்தது. G-6 என்ற அதிமேகமாக வண்டிகள் செல்லக் கூடிய சாலை (G-6 expressway from Xining to Lhasa, to connect Tibet’s capital to Beijing) ஜினிங் மற்றும் லாஸாவை இணைப்பதாக உள்ளது[7]. இதன் மூலம் சீனத் தலைநகரான பீஜிங்கிலிருந்து, திபெத்தின் தலைநகரான லாஸாவிற்கு துரிதமாக வந்து செல்லலாம்.  கிங்காய்-திபெத் நெடுஞ்சாலை [Qinghai-Tibet Highway (Xi’ning-Golmud-Lhasa)], ஜி-இனிங்-கொல்முத்-லாஸா பகுதிகளை இணைக்கிறது. 1947 கிமீ தூரம் உள்ள இந்நெடுஞ்சாலை, 4,000 மீ உயரத்தில் உள்ளது. வழியில் குலுன் மலை, தங்குல மலை, துவோதுவோ நதி, பெரிய புற்களால் அவகு செய்யப் பட்டுள்ள சமவெளி, முதலியவற்றைக் கண்டு கொள்ளலாம். அதாவது, இவ்வாறு சுற்றுலா பயணிகளை ஈர்த்து, வரவழைத்டு மறைமுகமாக, சீனாவிற்கு வந்திருக்கிறீர்கள் என்று உறுதிப் படுத்தப் படுகின்றது. சீன விசாக்களும் வழங்கப் படுகின்றன!

© வேதபிரகாஷ்

25-07-2021


[1] தினமணி, அருணாசல பிரதேசத்தையொட்டிய திபெத் நகருக்கு சீன அதிபா் வருகை, By DIN  |   Published on : 24th July 2021 01:52 AM.

[2]https://www.dinamani.com/india/2021/jul/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3666119.html

[3] சமயம், திபெத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்! – அறிவிக்கப்படாத பயணத்தால் பரபரப்பு!, Velayuthan Murali | Samayam TamilUpdated: 23 Jul 2021, 04:16:00 PM

[4] https://tamil.samayam.com/latest-news/international-news/chinese-president-makes-surprise-visit-to-tibetan-city-near-india-border/articleshow/84675080.cms

[5] விகடன், இந்திய எல்லையில் 4.5 கி.மீ ஊடுருவல்; கிராமத்தையே கட்டமைத்த சீனா! – சாட்டிலைட் போட்டோக்களால் அம்பலம், ஹரீஷ் ம, Published: 19 Jan 2021 5 PM; Updated: 19 Jan 2021 5 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/controversy/china-builds-village-in-indian-side

[7] Qinghai-Tibet Highway is by far the safest highway with best road conditions into or out of Tibet, comparing to other highways such as Sichuan-Tibet Highway, Yunnan-Tibet Highway, Xinjiang-Tibet highway or Nepal-Tibet highway. Starting from Xining, capital of Qinghai Province, the Qinghai-Tibet Highway stretches a 1947 km (about 1210 miles) into Tibet with an average elevation of above 4,000 meters. Winding along the Kunlun Mountain, Tanggula Mountain, Tuotuo River, and vast grassland, the Qinghai-Tibet Highway amazes travelers with its appealing landscape along the plateau. The land adventure from Lhasa to Xining or vice versa is awesome and really enjoyable. To take the overland driving adventure with flexible schedule of 3-4 days for the 200km will be fantastic, you are welcome to discover more of the remote area along the way.

சீன அதிபா் ஷி ஷின்பிங்கின் திபெத் விஜயமும், தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டமும், இந்திய எல்லைகளில் நடக்கும் ஊடுருவல் மற்ற விவகாரங்களும் (2)

ஜூலை26, 2021

சீன அதிபா் ஷி ஷின்பிங்கின் திபெத் விஜயமும், தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டமும், இந்திய எல்லைகளில் நடக்கும் ஊடுருவல் மற்ற விவகாரங்களும் (2)

ஜூலை 6, 2021 – தலாய் லாமா பிறந்த நாளுக்குத் தடை விதித்த நேபாளம்: இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய்லாமாவான இவர் கடந்த 1959 ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடைய பிறந்த நாள் ஜூலை 6 ஆகும். கடந்த 1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயது நடைபெறுகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வசித்து வரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் பகுதியில் உள்ள முஸ்டங்கும்பா என்ற இடத்தில் பல நிகழ்ச்சிகளை கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் பிறந்த நாளை கொண்டாட தடை விதித்த நேபாள அரசு அப்பகுதிக்கு பாதுகாப்பு படையை அனுப்பி வைத்தது[1]. விழாவில் அமெரிக்கா ஜெர்மனி, மற்றும் இங்கிலாந்துநாட்டுதூதுவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். விழாவை ரத்து செய்தது குறித்து கருத்து தெரிவித்த வெளிநாட்டுதூதர் ஒருவர் கூறுகையில் இது திபெத்திய சமூக மக்களின் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என கூறி உள்ளார்[2]. இது குறித்து நேபாள நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ராம்கிருஷ்ணா ரெக்மி கூறுகையில் திபெத்தியர்கள் தங்கள் வீடுகளில் தலாய்லாமாவின் பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடலாம். ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. என கூறினார். திபெத் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனா, தற்போது நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது . அதற்கு பிரதிபலனாக சீனாவின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலாய் லாமாவை வைத்து இந்தியக் கட்சிகளும் அரசியல் செய்வது: பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “திபெத் தலைவர் தலாய்லாமாவின் 86ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுளுடம், ஆரோகியத்துடனும் வாழ வாழ்த்தினேன்” என்று குறிப்பிட்டார்[3]. அதற்கு வீடியோ வாயிலாக பதிலளித்த தலாய் லாமா, “இந்தியாவில் ஓர் அகதியாகி குடியேறியதிலிருந்து இந்த நாட்டின் சுதந்திரம், மத நல்லிணக்கத்தை முழுமையாகப் ஏற்கொண்டேன். இந்தியாவின் மதச்சார்பற்ற”நேர்மை, கருணை, அகிம்சை ஆகியவை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்[4]. ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலைக்கு சீனத் துருப்புகள் திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவருகிறது[5]. ஆனால், சீனா அதற்கு செவிமடுக்கவில்லை. இதனால் இந்திய சீன எல்லைப் பிரச்சினை எப்போதுமே நிலவி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு 2020 கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[6]. என்று தமிழ்.இந்து குறிப்பிடுகின்றது. “தி இந்து” குழுமம் கம்யூனிஸ்ட் ஆதரவு கொண்ட ஊடகம் என்பது, என்.ராம் போன்றோரின் மூலம் தெரிந்த விசயமாக இருக்கிறது. ஆகவே, இங்கு ஒவைஸியை வைத்து நக்கலடித்திருப்பது, மோசமான போக்கையே வெளிப்படுத்தியது.

சைனா நேரிடையாக தலாய் லாமா பிறந்த ஆள் கொண்டாங்களை எதிர்த்தது: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள டெம்சுக் பகுதியில் உள்ள கிராமத்தினர், தலாய் லாமாவின் பிறந்த நாளை 6ம் தேதி கொண்டாடினர். அப்போது, சீன எல்லைப் பகுதியில் இருந்து அந்நாட்டு ராணுவத்தினரும், பொது மக்களும், லடாக் பகுதியில் உள்ள சிந்து நதியின் மறுபுறம் குவிந்தனர்[7]. கையில் பதாகைகள் மற்றும் சீன கொடியை ஏந்தியபடி, தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[8]. திபெத்தியரைப் பொறுத்த வரையில், தலாய் லாமா, அவர்களது மதத்தலைவர்,அவருக்கு மரியாதை அளிப்பர். ஆனால், இப்பொழுதைய தலாய் லாமாவை, சைனா ஒப்புக் கொள்ளவில்லை. அவருக்கு இணையாக ஒரு லாமாவை நியமித்தனர். ஆனால், திபெத்தியர்  அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அரசியல் தான், இப்பொழுது, அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை எதிர்ப்பது. மேலும், அந்நிகழ்ச்சி,  ஷி ஷின்பிங் திபெத் விஜயம் நாட்களுக்கு முன்னர் வந்துள்ளது.

எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் லாசாவையும் இணைக்கும் புல்லட் ரெயில் திட்டம் அமூலாக்கப் பட்டது: சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்கி உள்ளது. திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரெயில் வழித்தடத்தில் புல்லட் ரெயில் 25-06-2021 அன்று முதல் இயக்கப்படுகிறது[9]. சீனாவின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியுடன்  திபெத்தின் யிங்சி நகரை இணைக்கும் புதிய ரெயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியிருந்தார். அத்துடன், எல்லை ஸ்திரத் தன்மையைப் பாதுகாப்பதில் புதிய ரெயில் பாதை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார். புல்லட் ரெயில் இயக்கப்படும் யிங்சி நகரம், இந்தியாவின் அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள பகுதி ஆகும்[10]. சீனா தொடர்ந்து திபெத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எல்லைப்பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா – சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளதால், சீனாவின் இந்த புதிய புல்லட் ரெயில் திட்டம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தலைநகரான செங்குடு பகுதியில் இருந்து துவங்கும் இந்த ரெயில் திட்டம், யான் மற்றும் காம்டோ வழியாக திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு முதல் லாசா வரையிலான 48 மணிநேர பயணம் 13 மணி நேரமாகக் குறையும்.

© வேதபிரகாஷ்

25-07-2021


[1] தினமலர், தலாய் லாமா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நேபாளம் தடை,  Updated : ஜூலை 08, 2019  06:50 |  Added : ஜூலை 08, 2019  06:49

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2315293

[3] ஈ.டிவி.பாரத், மதச்சார்பற்ற இந்தியா மீது மிகுந்த மரியாதை உண்டுதலாய்லாமா, Published on: Jul 6, 2021, 10:57 PM IST.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/pm-modi-greets-dalai-lama-on-86th-birthday/tamil-nadu20210706225754261

[5] தமிழ்.இந்து, தலாய்லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி: விமர்சித்த ஓவைஸி , Published : 06 Jul 2021 15:10 pm, Updated : 06 Jul 2021 15:10 pm, ,

[6] https://www.hindutamil.in/news/india/690035-message-to-china-pm-modi-dials-dalai-lama-wishes-him-on-his-birthday.html

[7] தினத்தந்தி, தலாய் லாமா பிறந்தநாள் ; சீனா ராணுவம் எதிர்ப்பு, பதிவு: ஜூலை 13,  2021 05:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/India/2021/07/13050109/Chinese-soldiers-enter-Ladakhs-Demchuk-object-to-Dalai.vpf

[9] மாலை மலர், திபெத்தில் புல்லட் ரெயில் சேவையை தொடங்கியது சீனா, பதிவு: ஜூன் 25, 2021 15:55 ISTமாற்றம்: ஜூன் 25, 2021 16:09 IST.

[10] https://www.maalaimalar.com/news/world/2021/06/25155502/2761622/China-Launches-First-Bullet-Train-In-Tibet-Close-To.vpf

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (2)

ஜூலை17, 2021

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (2)

இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன.

நடைபெற்று உள்ள சம்பவங்கள் சட்டம்ஒழுங்கு தொடர்பானவை; இதிலே இனரீதியான வன்முறை இல்லை: இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பான்டோர்ருடன் வன்முறை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடைபெற்று உள்ள சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கு தொடர்பானவை; இதிலே இனரீதியான வன்முறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வன்முறையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜெய்சங்கருக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. “இனரீதியான வன்முறை” என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. வெள்ளையர் வெள்ளையர் அல்லாதவர்களின் மீது காட்டிய, காட்டப் படும் வெறுப்பு, காழ்ப்பு, துவேசம், அடக்குமுறை, அடிமைத்தனம், முதலியவை அறிந்ததே இந்தியர்களும் வெள்ளையர்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில், காந்தி எவ்வாறு நடத்தப் பட்டார், அவரும்வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார் என்பதெல்லாம் தெரிந்த விசயங்கள் ஆகும். அந்நிலையில் கருப்பர்கள் இந்தியர்களை அவ்வாறு நடத்தவில்லை என்பதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.

குறிப்பாக, இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன

கருப்பினத்தவர் இந்தியர்களுக்கு எதிராக இனரீதியில் ஈடுபடமுடியுமா?: கருப்பினத்தவர் வெள்ளையர்களுகு எதிராக போராடின நிலை இனரீதியில் இல்லை, தங்களுக்கு சுதந்திரம், உரிமைகள் வேணும் என்று போராடி வெற்றி பெற்றனர். இந்தியர்களும் அவ்வாறே வெற்றிப் பெற்று சுதந்திரம் அடைந்தனர். உண்மையில் இந்தியர்களும் அடிமைகளாகத் தான், தென்னாப்பிரிக்கப் பண்ணைகளில் வேலை செய்ய, வெள்லையர்கள் இந்தியாவிலிருந்து கடத்தி வந்தனர். பிறகு, 20-21ம் நூற்றாண்டுகளில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால், பணக்காரர்களாக இருக்கும் இந்தியர்கள் மற்ற நாடுகளில் சென்று வியாபாரம் ஆரம்பித்தனர். குறிப்பாக, சீக்கியர் பல நாடுகளில் எல்லாவிதமான வியாபாரங்களிலும் சிறந்து விளங்குகிறார்கள், இங்கு கூட தாக்கப் பட்ட, சூரையாடப் பட்ட கடைகளின் உரிமையாளர்களில் சீக்கியரும் உள்ளார்கள். வெளிநாட்டு டிவி பேட்டிகளில் அவர்கள் தங்களது கடைகள் எவ்வாறு சூரையாடப் பட்டன, தாங்கள் உயிருக்குப் பயந்து, வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறோம் என்று தங்களது நிலையை வருத்தத்துடன் விளக்கினார்.

தெருக்களில் கலவரத்தில் ஈடுபட்ட மக்கள்.
கடைகளை சூரையாடும் மக்களை நோக்கி கண்ணீர் குண்டு வெடிப்பு, இருப்பினும் கடைகள் கொள்ளை முடிந்து விட்டன.

இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இந்திய அரசு கோரிக்கை: தென்னாப்பிரிக்க அதிபரான சிறில் ரமாபோசா, கலவரத்தை தங்களுக்கு சாதகமாக சமூக விரோத நபர்கள் பயன்படுத்தி கடைகளை சூறையாடும் சம்பவங்களில் ஈடுபட்டதாக தெளிவுபடுத்தி உள்ளார். இந்நிலையில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தும் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோலவே பல தலைமுறைகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாட்டுக்கு குடியேறி அங்கேயே வாழ்ந்து வரும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்திய தூதரகம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தினசரி தகவல்களை சேகரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[1]. தென்னாப்பிரிக்க நாட்டில் தொடரும் வன்முறையில் இந்திய வம்சாவளி மக்கள் குறிவைக்கப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசை வலியுறுத்தி வருகிறது[2].

சூரையாடப் பட்ட பொருட்களை தாராளமாக அள்ளிச் சென்றனர். ஏதோ திருவிழாவிற்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்வது போன்று மக்கள் நடந்து சென்றனர்.

இந்திய வம்சாவளி அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இந்திய வம்சாவளி அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக பொறுப்பு வகிக்கும் சஞ்சய் பட்டாச்சார்யா தொடர்ந்து டெல்லியில் உள்ள தென்னாப்பிரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், டர்பன் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களை காக்க எடுக்கப்படும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய வம்சாவளி மக்கள் தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள்[3]. பல தலைமுறைகளாக அந்த நாட்டில் வசித்துவரும் அவர்கள், அங்கே கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்[4].

இந்திய வம்சாவளியினரின் கடைகள், வர்த்தக வளாகங்கள் அதிகமாகவே பாதிக்கப் பட்டன; சூரையாடப் பட்டன; கொளுத்தவும் பட்டன, பொருட்கள் அள்ளிச் சென்றனர்.

வெள்ளையர்களும், கருப்பர்களும் இந்தியர்களுக்கு விரோதமாக இருக்கும் தன்மை: இந்தியர்களை பழுப்பு நிறத்தவர் (Browns) என்று குறிப்பிடுவது உண்டு. ஆக தோல் நிறம் ரீதியில் வெள்ளையர் (Whites), இந்தியர்கள் கருப்பர் (Blacks) என்று தான் குறிப்பிட்டனர், பாவித்தனர் மற்றும் நடத்தினர். வெள்ளையர் / ஆங்கிலேயர் இந்தியர்களை அவ்வாறு நடத்தியதால் தான், கோட்டையக் கட்டிக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்ட போது, சுற்றியுள்ள பகுதிகளை கருப்பினத்தவரின் ஊர் (Black town), கருப்பினத்தவரின் நகரம் (Black city), கருப்பினத்தவரின் தெரு / சாலை (Black street) என்றே குறிப்பிட்டனர். இந்தியாவின் குறிப்பிட்ட பொருட்களுக்கு அவ்வாறே பெயரிட்டனர் இந்திய கருப்பு நிறம் (Indian Black), இந்திய மை (Indian Ink) என்று அத்தகைய கருப்பு நிறத்தை குறிப்பிட்டு, உபயோகமாக்கி, இன்று வரை வழக்கில் இருந்து வரும் சொற்களாக இருந்து வருகின்றன. அந்நிலையில், கருப்பர், கருப்பினத்தவர், இந்தியர்களை இனரீதியிலாக வேறுபடுத்தி பாவித்தல், நடத்துதல் மற்றும் வன்முறைகளுக்கு உட்படுத்துதல் என்பது கவனிக்கத் தக்கது. இதை எதிர்மறை-நிறவெறித்துவம் என்று குறிப்பிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை அத்தன்மை, கருத்துருவாக்கம், தானாக எழுந்ததா அல்லது தற்காலத்தில் உருவாக்கப் பட்டதா? அப்படியென்றால், யாரால், ஏன், எவ்வாறு உருவாக்கப் பட்டது என்று யோசிக்க வேண்டியுள்ளது.

கடைகளில், கைக்கு கிடைத்தவற்றை அள்ளிச் சென்றனர்.

சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” – இவ்வாறு எதிர்மறை பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது ஏன்?: “ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” என்று குறிப்ப்டப் பட்டுள்ளது கவனிக்கத் தக்கது. அதாவது, “சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன,” என்றால், யாரோ, குழுவோ, குழுக்களோ அத்தகைய உணர்வுகளைத் தூண்ட, இந்தியர்களைத் தாக்க, குறிவைத்து பிரச்சாரம் ஆரம்பித்துள்ளது, செயல்படுகிறது என்று தெரிகிறது. பிறகு, இது ஒரு திட்டமிட்ட செயல் என்றாகிறது. யாரோ செய்யும் காரியங்களுக்கு, குற்றங்களுக்கு, இந்திய வம்வாவளியினர் பலிக்கடா ஆக்கப் படுகின்றனர் என்றாகிறது. ஒருவேளை பாதிக்கப் பட்ட இந்திய வம்வாவளியினர், சூரையாடப் பட்ட கடைகளுக்கு, சொத்துக்களுக்கு சட்டப் பட்டி இழப்பீடு போன்றவை இருந்தால், பெறலாம். ஆனால், மறுபடியும் அவற்றை சீரமைத்து, பழைய நிலைக்கு வர ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். பிறகு, மற்றவர் தம்மை எவ்வாறு நடத்துவர் என்ற எண்ணமும் இருக்கும். நாளைக்கு கருப்பர் கடைகளுக்குள் நுழைந்தால், குறிப்பாக கத்திக் கொண்டு, ஆர்பாட்டம் செய்து கொண்டு நுழைந்தால், ஏதாவது வாதங்களில் ஈடுபட்டால், வன்முறையில் ஏன் முடியாது என்ற அச்சமும் கடைகளின் சொந்தக் காரர்களுக்கும், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் இருக்கும். அந்த வடுக்கள் நீங்க காலம் ஆகலாம்.

© வேதபிரகாஷ்

16-07-2021


[1] தினமலர்,தென்னாப்பிரிக்காவில் கலவரம்; இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, Updated : ஜூலை 16, 2021  10:44 |  Added : ஜூலை 16, 2021  10:39.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2803447

[3] பிபிசி.தமிழ், தென்னாப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா கலவரம்: அதிகரிக்கும் உயிர் பலிபின்னணிஎன்ன?, 14 ஜூலை 2021

[4] https://www.bbc.com/tamil/global-57832980

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

ஜூலை16, 2021

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் shops-looted-in-south-africa-indian-origin-affected-sikh-times-16-07-2021.jpg

முன்னாள் அதிபர் கைது, கலவரங்கள் ஆரம்பம்: முன்னாள் அதிபர், 75 வயதாகும் ஜேக்கப் ஸூமா இந்த மாதம் 7-ஆம் தேதி (07—06-2021) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது [1]. கலவரம், வன்முறை, மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் / 1,200 பேருக்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரேடியோ நிலையம் கூட சூறையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது [2]. ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய கலவரங்களை, கடைகளை சூறையாட வாய்ப்பாக சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது [3]. ஸூமா 2009 வருடம் முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது [4]. அவர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்4தில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் [5]. இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக கலவரங்கள் வெடித்தன [6].


மருத்துவ மனை எரியூட்டல், சாலைகளில் கலாட்டா முதலியன: டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்[7]. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்[8]. இவற்றிலிருந்து கலவரக் காரகளின் ஈவு-இரக்கமற்ற குணாதிசயங்களும், வக்கிரமும் வெளிப்படுகிறது. சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவர கலாட்டாக்களில் இந்திய வம்சாவளி போன்ற விவகாரம் இல்லை. நிறம் சம்பந்தப் பட்டப் பிரச்சினை இல்லை. ஏனெனில், இதில் தாக்கப் பட்டவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமிருக்கின்றனர்.

இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு: இதனிடையே, ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இது இந்திய வம்சாவளி மக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. “தென்னாப்பிரிக்காவிலுள்ள முக்கிய நிறுவனங்களில், அதுவும் நிதி சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பது இந்தியர்கள்தாம். அவர்களால்தான் நமக்கு பொதிய வேலைவாய்ப்புகளும், பணமும் கிடைப்பதில்லை,” என்று தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது[9]. அதே நேரத்தில், “தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இந்தியர்களையே சாரும். பொருளாதார ரீதியாகத் தென்னாப்பிரிக்கா நாடு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கும் இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது சரியல்ல,” என்று இந்தியர்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பிரிக்க மக்கள் சிலர் துணை நிற்கின்றனர்[10]. நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து, குடியுரிமைகளுடன் வாழும் இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு சரியில்லை.

இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன: தற்போது தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலில், இந்திய வம்சாவளி மக்கள் நடத்தும் கடைகள், மருந்தகங்கள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன[11]. வன்முறை கும்பல்கள் கடைகளை சூறையாடி பொருட்களை அள்ளிச் செல்வது மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன[12]. இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்துதாக்கப்படுகின்றன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது, இப்படித்தான், தமிழ் ஊடகங்கள் விவரிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 6 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75% பேர் கருப்பின மக்கள். 13% பேர் வெள்ளையின மக்கள். இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இயல்பில் இந்திய மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். தொழிலை தெய்வமாக மதித்துப்போற்றி, சிக்கனமாக வாழக்கூடியவர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகமாக உள்ளனர். இதன் காரணமாக தற்போதைய வன்முறையில் இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, பகல் கொள்ளை அரங்கேறுகிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருப்புவெள்ளை இனத்தவர்களிடம் இருதளைக்கொள்ளி எறும்பு போல வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர்: மேலும் கருப்பின, வெள்ளையின மக்கள் என எந்த பக்கமும் சாராமல் இந்திய வம்சாவளியினர் தனித்து வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் ஊடகங்கள் திரித்துக் கூறுவதும் விஷமத் தனமானது. உண்மையில், அவர்கள் தாம், இருவகைப் பிரிவினரிடமும், இருதளைக்கொள்ளி எறும்பு போல அகப் பட்டு அவஸ்தை படுகிறார்கள். பொருளாதார ரீதியில் முன்னேறி விட்டதால், ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்கின்றனர். வெள்ளையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று கூறுவதும் முறையற்றது. அப்படியென்றால், கருப்பின மக்கள் தாக்கப் பட்டால், எல்லா ஆப்பிரிக்க நாடுகளும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று சொல்வதற்கு இல்லை. ஆக, கருப்பு-வெள்ளை இனத்தவர்களிடம் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அரசு கவனிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். .

தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலை: தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்திய வம்சாவளி மக்கள் தங்களுடைய கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாக்க தனியார் பாதுகாவலர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தான், மேலும் அபாயத்தில் முடியும்நிலையுள்ளது. ஒருவேளை, அந்நாட்டில் அதற்கு அனுமதி இருக்கலாம். ஆனால், அத்தகைய “தனியார் பாதுகாவலர்கள்,” யார், கருப்பினத்தவரா-வெள்ளையினத்தவரா என்று எடுத்துக் கூற முடியுமா? போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவத்தை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-07-2021


[1] புதியதலைமுறை, தென்னாப்பிரிக்க கலவரங்களில் குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்என்னதான் நடக்கிறது?,    Web Team Published :15,Jul 2021 08:31 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/109750/Firstlook-Posters-of-Actor-ashok-selvan-Sila-Nerangalil–Sila-Manidhargal.html

[3] தமிழ்.இந்து, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம்இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, செய்திப்பிரிவு, Published : 16 Jul 2021 03:11 AM; Last Updated : 16 Jul 2021 06:03 AM.

[4]https://www.hindutamil.in/news/world/693700-attack-on-indians.html

[5] தினமணி, தென்னாப்பிரிக்காவில் வெடித்த கலவரம்..காரணம் என்ன?, By DIN  |   Published on : 15th July 2021 05:36 PM.

[6] https://www.dinamani.com/world/2021/jul/15/why-south-africa-is-witnessing-worst-violence-3660820.html

[7] NEWS18 TAMIL, மருத்துவமனைக்கு தீ.. கலவரத்தில் 72 பேர் உயிரிழப்புதென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன? ,  LAST UPDATED : JULY 15, 2021, 15:51 IST

[8] https://tamil.news18.com/news/international/south-africa-72-death-after-zuma-arrest-worst-violence-in-years-vjr-506005.html

[9] விகடன், தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது‘, `பெருந்தொற்று‘, `வறுமை‘ – உண்மை பின்னணி என்ன?!, வருண்.நா, Published: Today at 4 PM; Updated:Today at 4 PM

[10] https://www.vikatan.com/government-and-politics/international/what-is-the-reason-for-the-south-africa-riots

[11] பாலிமர்.நியூஸ், தென்னாபிரிக்காவில் கலவரம்: 75 பேர் பலி கடைகள் சூறைதீ வைப்பு, 14 ஜூலை 2021, 10.29.16.AM.

[12] https://www.polimernews.com/dnews/150345

பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்கத் திட்டம்!

ஓகஸ்ட்22, 2013

பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்கத்  திட்டம்!

இலங்கை, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு

இலங்கை, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு

தென்னிந்தியா மென்மையான இலக்காக இருக்கிறாதா?: பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர்[1].  கடந்த 2008ம் ஆண்டு, நவம்பரில் பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக – குஜராத்தின் வழியாக – மும்பைக்குள் ஊடுருவி இப்படிதான் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. ஆகவே, தமிழகத்துக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[2]. தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் வரவேண்டும் என்றால், அதற்காக உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்[3]. முன்பு டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற ஜிலானி மூணாறில் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கிச் சென்றதாக உள்ளது[4]. சென்னை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர் கலவரம், ஹைதராபாத், பெங்களூரு வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் தென்னிந்தியா மென்மையான இலக்காக இருக்கிறாதா என்று பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதாவது, தென்னிந்தியாவில் தீவிரவாத கொடூரங்கள் நிகழாமல் இல்லை.

இலங்கை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் வரவேற்பு

இலங்கை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் வரவேற்பு

தமீம் அன்சாரி வழக்கும், குழப்பங்களும்: மதுரையில் இருக்கும் சிலர், இந்திய ராணுவ விவரங்களை சேகரித்து தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது. தமீம் அன்சாரி என்பவன் ஐ.எசஸ்.ஐ.க்கு விவரங்களை அனுப்பினான் என்று கடந்த செப்டம்பர் 2012ல் கைது செய்யப்பட்டான்[5].

தமீம் அன்சாரி தான் பலிகடாவாக்கப் படுவதாக கூறினான்

தமீம் அன்சாரி தான் பலிகடாவாக்கப் படுவதாக கூறினான்

இதில் என்ன வேடிக்கை என்றால், அவன் எஸ்.எப்.ஐ என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் இயகத்தின் தலைவராக இருந்துள்ளான். அதாவது, கம்யூனிஸ்ட் போர்வையில் முஸ்லிம்கள் வேலைசெய்கிறார்கள் என்றாகிறது. எனவே, மீனவர்கள் போல வேலைசெய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஹாஜி மற்றும் ஷாஜி என்ற இலங்கை பிரஜைகள் மூலம் தொடர்புகள் ஏற்பட்டன, ஏனெனில், பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை செய்யும் அவர்களை ஒரு கொழும்பு ஹோட்டலில் சந்தித்துள்ளான்.

தமீம் அன்சாரி வழக்கு , ஊடக ரோமாஞ்சகமா, உளவுத் துறையின் மெத்தனமா

தமீம் அன்சாரி வழக்கு , ஊடக ரோமாஞ்சகமா, உளவுத் துறையின் மெத்தனமா

இதனால், “Q” பிரிவு போலீஸார், கொழும்பு சென்று விசாரிப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன[6]. தேசிய புலானாய்வு ஏஜென்சி  இவனைப்பற்றிய விவரங்களைக் கேட்டது[7]. பிறகு வழக்கையும் எடுத்துக் கொண்டது[8]. டிசம்பரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது[9]. இந்த வருடம் மே.2013ல், சென்னை உயர்நீதி மன்றம் இவனது கைதை ரத்து செய்தது. அப்பொழுது, தன்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினான்[10].

என்.ஐ.ஏ வழக்கு தள்ளுபடி என்றால் யோசிக்க வேண்டும்

என்.ஐ.ஏ வழக்கு தள்ளுபடி என்றால் யோசிக்க வேண்டும்

போலீஸ் அதிகாரியை மிரட்டியதற்காக, ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது[11]. மனித உரிமைக்காரர்கள் எப்படி வாதங்கள் செய்தாலும், சந்தேகிக்கும் முறையில், நாட்டுநலன்களை மீறிய காரியங்களில் ஏன் ஈடுபடவேண்டும், அவற்றை ஏன் விடுக்கக் கூடாது என்பது பற்ரியெல்லாம் விவாதிப்பதில்லை.

இலங்கை-பாகிஸ்தான் வியாபாரங்களா, ஒப்பந்தங்களா

இலங்கை-பாகிஸ்தான் வியாபாரங்களா, ஒப்பந்தங்களா

இலங்கை “இலங்கையில், எந்த பாகிஸ்தானிய தீவிரவாதியும் இல்லை” என்று மறுத்தல்: “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் செய்தியை வைத்துக் கொண்டு, மற்ற ஊடகங்கள் இதனை பெரிதாக்கி அலசி வருகின்றன. இதற்குள், இலங்கையின் ராணுவ அதிகாரி ஜகத் ஜெயசூரியா, “இலங்கையில், எந்த பாகிஸ்தானிய தீவிரவாதியும் இல்லை”, என்று இந்த செய்திகளை மறுத்துள்ளார்[12]. ஆகவே, இந்தியா ஏனோ-தானோ என்று வழக்குகளை அணுகக்கூடாது. தேவையில்லாமல், நிறைய விஷயங்களை ஊடகங்களுக்குக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் அவற்றைப் பயன்படுத்து, மக்களை திசைத்திருப்பி, ஆனால், தீவிரவாதிகளுக்களூதவி செய்வது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். மேலே குறிப்பிட்ட தமீம் அன்சாரி வழக்கில் அத்தகையப் போக்கைக் காணலாம். பாகிஸ்தான் மட்டும் என்ன, ஒசாமா பின் லேடன் இங்கிருந்தான் என்றா சொல்லிக் கொண்டது? இப்பொழுதுகூட, தாவூத் இப்ராஹிம் இருக்கிறான்-இல்லை என்று தான் பாட்டுப் பாடி வருகிறது. மாமனார் என்ன மறுமகனை வந்துப் பார்க்கக்கூடாதா?

இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தாக்கினான் என்று குற்றாஞ்சாட்டப் பட்டவன் விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தாக்கினான் என்று குற்றாஞ்சாட்டப் பட்டவன் விடுதலை

இலங்கைஉளவுத்துறைபாகிஸ்தானியர்களைபிடித்துவிசாரணைசெய்தனர்: கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரிந்தது. இவர்களில் 4 தீவிரவாதிகள் பஞ்சாப் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலுக்கு களமாக இலங்கை பயன்படுத்தப்பட உள்ளது[13]. இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் மற்ற தீவிரவாத அமைப்புகளான சர்வதேச பப்பர் கல்சா, ஜெய்ஷ் இ முகமது, ஜமாத் உத் தவா, லஷ்கர் இ ஜாங்வி, அல் உமர் முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியவையும் முயற்சிக்கின்றன[14]. இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கும் இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளவும்-மறுக்கவும் இல்லாத நிலையில், ஊடகங்களில் இவ்வாறு அலச வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை, பாகிஸ்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

இலங்கை, பாகிஸ்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

மகாராஷ்டிரமாநிலஉளவுத்துறைஎச்சரித்தது ஏன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்த  வேண்டும்?: இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது[15]: பாகிஸ்தானின், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த பிப்ரவரி மாதம், 2ம் தேதி. 2013, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது. சிலர் ஏற்கெனவே ஶ்ரீலங்கா பாஸ்போர்ட்டில் திருவனந்தபுரத்திற்கு வந்து சென்றாதாகக் கூறுகின்றனர்[16]. இதனால், சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது[17].

இலங்கை எல்லா நாடுகளுடனும் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது

இலங்கை எல்லா நாடுகளுடனும் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது

கடலோரப் பாதுகாப்பு என்பது எப்பொழுதும் இருக்க வேண்டும்: இது குறித்த எச்சரிக்கை மத்திய உளவுத்துறையினர் தமிழக காவல்துறைக்கு அளித்துள்ளனர். இந்த எச்சரிக்கையின் விளைவாக தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர எல்லையான சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்[18]. மேலும், மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் விளைவாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அளவில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்[19]. மற்ற நேரத்தில் சும்மா இருப்பது போல இச்செய்திகள் இருக்கின்றன. முதலில் “தமிழ் மீனவர்கள்” என்று சொல்லிக் கொண்டு, சட்டங்களை மீறி காரியங்களை செய்து வருவது, மாநில-மத்திய அரசுகள் முழுவதுமாக தடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இத்தகைய விஷயங்களை ஜனரங்கமாக்கி, மதிப்புக் குறையுமாறு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

சைனாவுடன் நட்பு

சைனாவுடன் நட்பு

இந்தியா எப்பொழுதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது: ஶ்ரீலங்கா, மற்ற நாடுகளுடன் சுமுகமான உறவுகளை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஆனால், இந்தியா அந்த சிறிய நாட்டுடன் உறவை சரியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. கடந்த 60 வருடங்களாக, இலங்கைப் பிரச்சினைகள், இந்தியாவை மிகவலுவாகவே பாதித்துள்ளன. இப்பொழுதும், சைனா-பாகிஸ்தான் மிக வேகமாக நெருங்கி வருகின்றன. ஏனெனில், ஶ்ரீலங்காவின் இருப்பிடம் அப்படி. இந்து மகா சமுத்திரத்தில் முக்கியமான இடத்தில் இருப்பதால், அதன் மீது ஆதிக்கம் செல்லுத்த எல்லா நாடுகளும் விரும்புகின்றன. இது இடைக்காலத்திலிருந்தே தொடர்கிறது. உண்மையில் ஶ்ரீலங்காவின் கலாச்சாரம் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அதிக அளவில் பாதித்தது டச்சுக் காரர்கள் தாம். ஆக, பக்கத்தில் இருக்கும் இந்தியா சரியாக உறவை வைத்துக் கொள்ளமுடியாத நிலையைக் கண்டு சரிசெய்து கொள்ளவேண்டும்.

உள்ளூர் அமைச்சரின் தைரியம் - இது இந்தியர்களுக்கு வருமா?

உள்ளூர் அமைச்சரின் தைரியம் – இது இந்தியர்களுக்கு வருமா?

உள்ளூரில் (இலங்கையில்) நடக்கும் பிரச்சினைப் பற்றி இங்கு விவாதிக்கிறார்கள். இங்கு வரும் புத்தபிக்குகளைத் தாக்குகிறார்கள். ஆனால், இங்கிருக்கும் பௌத்தர்கள் அவர்களைப் போல எதையும் எதிர்ப்பதில்லையே?

முஸ்லிம் பண்டிகையின் போது பசுவதை தடை

முஸ்லிம் பண்டிகையின் போது பசுவதை தடை

மாறாக, அவர்களது புத்தகயா கோவில் தாக்கப்படுகிறது.

இந்தியா உதவாது, இந்தியாவால் பிரயோஜனம் இல்லை என்பதால் தான், தூரத்தில் இருக்கும் எதிரி நாடுகளுடன் நட்பை வைத்துக் கொள்கிறது ஶ்ரீலங்கை. இதில் தான் “தமிழர்கள்”, “முஸ்லிம்கள்”, “கம்யூனிஸ்ட்டுகள்”, “மனித உரிமைக் காரர்கள்” என்று பலரும் இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீனா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சென்றால், யாரும் எதிர்ப்பதில்லை; அவர்கள் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் ஆர்பாட்டம் செய்வதில்லை; இந்தியர்கள், ஏன் பல தமிழர்கள் (எல்லா கட்சிகள், மதங்கள், ஜாதிகள் சேர்த்து) இலங்கையுடன் வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்து வருகிறார்கள்; யாரும் தட்டிக் கேட்பதில்லை. ஆனால், இலங்கை வீரர்களுக்கு வெல்லிங்டனில் பயிற்சி கொடுத்தால் ஆர்பாட்டம் செய்கிறார்கள். வேவு பார்த்தால் கூட தப்பிக்க வைக்க பாடுபடுகிறார்கள். இப்படித்தான், இந்தியர்களின் நிலையுள்ளது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நாட்டிற்கு எதிராக வேலைசெய்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

22-08-2013


[3] இப்படி எடுத்துக் காட்டினால், அத்தகையத் திரைப்படங்களை எதிர்க்கிறார்கள்.

[4] அந்த அளவிற்கு அவனது போக்குவரத்து, தங்கும் விவகாரங்கள் ரகசியமாக வைக்கப் பட்டன என்றால், உதவியது யார் என்று கண்டுகொள்ள வேண்டும்.

[6] Alleging that Ansari was an ISI operative, Superintendent of Police (‘Q’ Branch CID) G. Sampath Kumar claimed the suspect worked for the Pakistani intelligence agency through two Sri Lankan nationals – known only as Haji and Shaji – whom he met during a business trip to Colombo. Ansari studied in a Chennai college and actively participated in the Students Federation of India (SFI). “He suffered losses in an import/export business venture. During one of his visits to Colombo, Ansari met Haji in a restaurant. Haji and Shaji worked for an official working in the Pakistani High Commission in Sri Lanka,” he said. Sources in the intelligence agencies said Ansari was using a debit card that had frequent credit from Sri Lanka. “A team of ‘’ Branch officials might visit Colombo soon for further investigation,” a top police official said and added that the entire operation was closely monitored and coordinated by Intelligence Bureau officials.

http://www.thehindu.com/news/national/exsfi-leader-held-on-charge-of-spying-for-isi/article3908201.ece

[17] தினமலர், மதுரை, மயிலாடுதுறையில்தாக்குதல்நடத்ததீவிரவாதிகள்சதி, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013,23:54 IST

[18] தினமணி, பயங்கரவாதிகள்ஊடுருவத்திட்டம்: தமிழககடலோரப்பகுதியில்பலத்தபாதுகாப்பு, 22-0-8-2013.

சீனச் சட்டப்படி, இந்திய வர்த்தகர்களுக்கு உரிமைகள் இல்லை, நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது- அதனால் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

ஜனவரி3, 2012

சீனச் சட்டப்படி, இந்திய வர்த்தகர்களுக்கு உரிமைகள் இல்லை, நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது- அதனால் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கண்டு கொள்ளாமல் இருக்கும் சீனா: இந்திய தூதர் நீதிமன்றத்தில் நீதிபடி மற்றும் போலீஸார் எதிரிலேயே தாக்கப் பட்டப் பிறகும், சீனா இந்த விஷயத்தில் ஒன்றுமே நடக்காதது போல கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பபாக இருக்கிறது. சீன வர்த்தக அமைச்சகம், கம்யூனிஸ கட்சி கமிட்டி மற்றும் உள்ளூர் போலீஸார் அன்று அனைவருமே எத்தனை முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டாமல் பதில் அளிக்காமல் இருக்கின்றனர். சீன வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டாலும், இதைப் பற்றி மூச்சுவிடமாட்டேன் என்கிறார்[1]. இந்நிலையில் தான் இந்திய தூதரகம், கீழ்கண்ட முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது:

Advisory for Indian businessmen/traders doing trade/business with Yiwu- Jan 3, 2011

01/03/2012

Advisory for Indian businessmen/traders doing trade/business with Yiwu[2]

Indian traders and business men are hereby cautioned not to do business with Yiwu in Zhejiang province. They should be aware that when there are trade disputes with Yiwu, the Indian businessmen/traders can be illegally held under detention and mistreated by Chinese businessmen there. Based on experience, there is no guarantee that legal remedies will be readily available. Furthermore, in case of disputes arising, experience suggests that there is inadequate protection for safety of persons. All people who have business/trade with Yiwu are cautioned against doing business there and all people who do not have business/trade with Yiwu are requested to be careful that they do not do business with Yiwu. Indian businessmen are cautioned to stay away from Yiwu.

இந்திய வர்த்தகர்கள் சீனர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பீஜிங்கிலுள்ள இந்திய தூதரகம், இந்திய வர்த்தகர்கள், வியாபாரிகள் ஜீஜியாங் மாகாணத்திளுள்ள ஹிவூவில் [Yiwu in Zhejiang province] சீன வியாபாரிகளிடம் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது[3]. இதனை அதன் இணைத்தளத்தில் வெளியிட்டுள்ளது[4]. “ஹிவூவிலுள்ள இந்திய வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் சீன வியாபாரிகளிடம் எந்த வியாபாரத் தொடர்பையும் வைத்துக் கொள்ள வேண்டாம். நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட எந்த தொடர்பும் வேண்டாம். அவர்கள் சீனர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”, என்று எச்சரித்துள்ளது[5]. இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்க முடியாத போது, தகுந்த முறையில் உலகுக்கு, சீனாவின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்தாமல், இப்படி அடங்கி போகும் செயல் வருத்தப் படக்கூடியாதாக உள்ளது.

சீனச் சட்டப்படி, இந்திய வர்த்தகர்களுக்கு உரிமைகள் இல்லை, நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது- அதனால் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஹிவூவில் நூற்றிற்கும் மேற்பட்ட இந்திய வியாபரிகள் வாழ்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் பல $ பில்லியன்கள் மதிப்பில் வியாபாரம் செய்துள்ளனர்: மேலும் சொல்கிறது – “ஆனால், பிரச்சினை என்று வரும்போது, சீன சட்ட சரத்துகள் இந்தியர்களுக்கு எதிராக உள்ளன. அதனால் சட்டப்படி, ஏதாவது தகராறு / பிரச்சினை வந்தால் இந்தியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் / முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை””, என்றெல்லாம் தூதரக ஆலோசகர்கள் கூறியுள்ளனர்[6]. அப்பட்பட்ட சட்டங்கள் இருப்பதை ஏன் இந்தியா உலகிற்கு வெளிப்படுத்தக் காட்டக் கூடாது. இல்லை, இந்தியாவில் மட்டும் சீனர்களுக்கு ஏன் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இந்தியாவில் சுதந்திரமாக அவர்கள் சென்று வருகின்றனரே? அதெப்படி முடிகிறது?

இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மௌனவிரத்தில் இருக்கிறார்கள்: மற்ற அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கும் போது, பிஜேபி மட்டும், சீனா இந்த விஷயத்தில் முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இருதரப்பு பரஸ்பர கொள்கையின் படி, நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது[7]. வழக்கம் போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயை மூடிக் கொண்டுள்ளான. மற்ற விஷயங்களில் வாய்கிழிய பேசும், கம்யூனிஸ்ட்டுகள், சீன-ரஷ்யா விஷயங்கள் வந்தால், கண்டு கொள்ளமல் இருப்பதை மற்ற பகுத்தறிவுவாதிகள், செக்யூலார்வாதிகள் யாரும் கேட்பதில்லை. நாட்டிற்கு எதிராக செயல்கள் நடக்கும் போது, இவர்கள் இவ்வாறு ஒத்துழைத்து போவதை கவனித்துக் கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

03-01-2012



[1] Calls to China’s commerce ministry, as well as the government, Communist Party committee and police in Yiwu went unanswered. A spokeswoman for the foreign ministry would not immediately comment on the issue.

[5] Meanwhile, an advisory from the Indian Embassy in Beijing, cautioned Indian businessmen in dealing with traders in Yiwu. “Indian traders and business men are hereby cautioned not to do business with Yiwu in Zhejiang province,” a trade advisory posted on the Indian Embassy website said today. “All people who have business/trade with Yiwu are cautioned against doing business there and all people who do not have business/trade with Yiwu are requested to be careful that they do not do business with Yiwu. Indian businessmen are cautioned to stay away from Yiwu,” the advisory said.

http://timesofindia.indiatimes.com/world/china/India-asks-traders-to-stay-away-from-China-trade-hub/articleshow/11353259.cms

[6] According to unofficial estimates Indian businessmen bought over several billions of dollars worth of goods last year. Over 100 Indian businessmen live in Yiwu doing thriving business there. They “should be aware that when there are trade disputes with Yiwu, the Indian businessmen/traders can be illegally held under detention and mistreated by Chinese businessmen there,” it said. “Based on experience, there is no guarantee that legal remedies will be readily available. Furthermore, in case of disputes arising, experience suggests that there is inadequate protection for safety of persons,” it said, without directly mentioning the detention of two Indians.- PTI

நீதிபதி முன்பாக இந்திய தூதுவர் நீதிமன்றத்திலேயே தாக்கப்பட்டார்: சீனாவில் நடந்த அக்கிரமம், கொடுமை, அராஜகம்.

ஜனவரி2, 2012

நீதிபதி முன்பாக இந்திய தூதுவர் நீதிமன்றத்திலேயே தாக்கப்பட்டார்: சீனாவில் நடந்த அக்கிரமம், கொடுமை, அராஜகம்.

சமீப காலத்தில், சீனா பலமுறை இந்தியா, இந்தியர்கள், இந்திய நாட்டு இறையாண்மை என எல்லாவற்றிற்கும் எதிராக, பல வேலைகளை செய்து வருகிறது. தலாய் லாமா என்றாலும் மற்ற விவகாரம் என்றாலும் முக்கை நுழைத்துக் கொண்டு விஷமத்தை செய்து வருகிறது[1].  இந்தியாவால் சீனாவிற்கு பலவழிகளில் உபயோகம் உள்ளது. ஆனால், சீனா பதிலுக்கு நமக்குத் தரும் அக்கிரமங்கள், அநியாயங்கள், அனைத்துலக சட்டமீறல்கள் என்று பல இருந்தாலும், அவற்றில் சில:

  1. 1961ம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
  2. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க தரமற்ற பொருட்களை கடத்தி வந்து, எந்த வரிகளையும் கட்டாமல் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
  3. எல்லைகளில் மற்றவர்கள் இந்தியாவில் நுழைந்து தீவிரவாத செயல்களை செய்ய ஊக்குவிக்கிறது, அனுப்புகிறது.
  4. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை சீனாவுக்குக் கொடுத்ததும், சீனா ரோடு போட்டுத் தருகிறேன் என்று, பாகிஸ்தானில் நுழைந்துள்ளது. சீனத்துருப்புகளுடன் ஜிஹாதிகள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
  5. பிரம்மபுத்ரா நதியின் பாதிக்கு மேலான நீற்றை ஒரு அணுகுண்டு வெடித்து, இமயமலையின் ஒரு பதியைப் பிளந்து, தன் பக்கமாகத் திருப்பி விட்டுள்ளது.
  6. இலைங்கையிலும் நுழைந்துள்ளனர். எல்.டி.டி.இயை ஒழிக்க, ஸ்ரீலங்காவுடன் ஒத்துழைத்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் போதை மருந்து கடத்தல், வியாபாரம் முதலியவற்றில் தானே தனித்து விளங்க சீனா விரும்புகிறது.
  7. வியட்நாமுடன், தென் சீனக் கடலில் எரிவாயு, எண்ணை கிடைக்குமா என்று ஆராய இந்திய கப்பல் சென்றபோது, அங்கு வரக்கூடாது என்று மிரட்டியது.
  8. அருணாசல பிரதேசம் சீனாவுடன் சேர்ந்தது என்று சொல்லிக் கொள்கிறது. அங்கு சீனர்கள் நுழைந்தால் விசா தேவையில்லை என்கிறது. அதே மாதிரி அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஜம்மு-காஷ்மீரத்திற்கு வந்தால் விசா தேவையில்லை என்கிறது[2]. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தனியாக காகிதத்தில் விசா வழங்குகிறது.

முதலாளி பணம் கொடுக்காமல் ஓடிவிட்டான் என்றால், ஊழியர்களைப் பிடித்து வைக்கும் சீனர்கள்: சீனாவின் இவூ / யீவெய்யூ[3] நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்[4]. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் யூரோ குளோபல் டிரேடிங் [Euro Global Trading} என்ற நிறுவனம் உள்ளது. சீனாவில் உள்ள யீவு என்ற இடத்தில் பண்டக பொருட்களுக்கான மொத்த விற்பனை சந்தை உள்ளது. இங்குள்ள ஒரு கடையின் உரிமையாளர்,அங்குள்ள சீன நிறுவனங்களில் ஏராளமான தொகைக்கு பொருட்களை கடனுக்கு வாங்கி விற்பனை செய்துவிட்டு, அதற்குண்டான தொகையை கட்டாமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டார்[5]. அவர் ஏமன் அல்லது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, முஸ்லீம் என்று தெரிகிறது.. அவரது பெயர் – மாஹிர் பௌத் ஹுஸ்ஸைன் பஸாரா [Mahir Faoud Husain Bazaara][6]. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர்.

சீன வணிகர்கள் இந்தியர்களைக் கொடுமைப் படுத்தியது: “சீன வணிகர்கள் இரண்டு வாரங்கள் அவர்களைக் கொடுமைப் படுத்தினர். மலம், சிறுநீர் சாப்பிட வைத்து கூரூரமாக சித்திரவதை செய்தனர்[7]. இப்பொழுது போலீஸார் காலை வரை போலீஸ் ஸ்டேசனிலேயே தங்கியிருக்கலாம் என்று சொல்கின்றனர். ஆனால், நாங்கள் வெளியே சென்றால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை”, என்று முறையிட்டனர். இதனால், இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுள்ளனர்[8].

மலம், சிறுநீர் சாப்பிட வைத்து கூரூரமாக சித்திரவதை செய்தனர்: “மாஹிர் பௌத் ஹுஸ்ஸைன் பஸாராசெய்யும் காரியங்களுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் வெறும் சம்பளம் ஊழியர்கள் தாம்”, என்று தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் கூறினர்[9]. “நான் வெறும் கணக்கெழுதும் ஊழியன். நான் இந்த சீன வணிகர்களிடமிருந்து எந்த பொருளையும் வாங்கவில்லை. ஆனால், அந்த ஆள் காணாமல் ஓடிவிட்டதற்கு எங்களிடம் பணத்தை கேட்கின்றனர். என்னைத் துன்புறுத்தியபோது எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மலம், சிறுநீர் சாப்பிட வைத்து கூரூரமாக சித்திரவதை செய்தனர். என்னை வற்புறுத்தி என்ன காகிதங்களில் எதையெழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் அவர்கள் அதை வைத்து எங்களை மிரட்ட முடியும். நாங்கள்தான் பணம் தரவேண்டும் என்றுகூட சொல்லலாம். ஆனால், பொருட்கள் அனைத்தையும் அவர் (மாஹிர் பௌத் ஹுஸ்ஸைன் பஸாரா) தான் வாங்கினார்.”, என்று விளக்கினார் அகர்வால்[10].

சீன-முஸ்லீம்கள் சேர்ந்து நடத்தும் கொடூர நாடகமா: ஒருவேளை, சீன மற்றும் முஸ்லீம் வணிகர்கள் சேந்து இந்தியர்களுக்கு எதிராக செய்யும் சதி வேலையாகக் கூட இது இருக்கலாம். ஏனெனில் சரித்திரத்தில் அத்தகைய பல ஏமாற்ற, துரோக வேலைகள் முன்பு அரபு / மொஹம்மதிய வணிகர்கள், சீனர்களுடன் சேர்ந்து செய்துள்ளனர்.  இடைக்காலத்திலிருந்து செய்து வரும் அத்தகைய வீயாபார மோசடிகள், வணிக வஞ்சகங்கள், பொருட்திருட்டுகள், கள்லக்கடத்தல்கள், வரியேய்ப்புகள், கடற்கொள்ளைகள் முதலியன இந்தியாவிற்கு எதிராகவே இருப்பதைக் கவனிக்கலாம். சோமாலியர்கள் / முஹம்மதியர்கள் / முஸ்லீம்கள் எப்படி இந்தியர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டி வசூலிக்கின்றனரா, அதேபோல, சீன வணிகர்கள் செய்வதைக் கவனிக்கலாம்கிதிலும் ஒரு அர்ரெபியர் / முஹம்மதியர் / முஸ்லீம் துணைபோவதை காணலாம். ஆகவே, இந்தியர்கள் இதை உன்னிப்பாகக்கவனிக்க வேண்டும். ஏதோ தனிப்பட்ட நிகழ்ச்சி என்று ஏற்றுக் கொண்டு விட்டுவிட/மறந்துவிடக்கூடாது. சீனதூதுவர், “இது உள்நாட்டு சமூகப் பிரச்சினை அவ்வளவு தான்”, என்று சொல்லியிருப்பதும்,  காங்கிரஸ் போன்ற துரோகிகள் இப்படி – In Delhi on Monday, Congress spokesperson Manish Tewari said, “It’s incumbent on MEA to raise the issue with China and take it to its logical conclusion.”  – பதில் சொல்வதிலிருந்தும் கவனிக்க வேண்டும்.

இந்திய தூதரகம் உதவிக்கு வந்தது: இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது. ஷாங்காயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியான பாலச்சந்திரன் அவர்களை விடுவிக்க நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியர்கள் இருவரையும் விடுவிக்க வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தங்களை பாதுகாத்துக் கொள்ள, இருவரும் பாலசந்திரனை நெருங்கி நின்றனர். இந் நிலையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்த ஏராளமான சீன வர்த்தகர்கள், அந்த இருவரையும் தாக்க முயல, அவர்களை பாலச்சந்திரன் காக்க முயன்றார். இதையடுத்து அவரை சீனர்கள் கடுமையாகத் தாக்கினர். பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்[11]. இவை அனைத்தும் நீதிபதி மற்றும் போலீஸார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நடந்தேறின.

மெதுவாக வெளிவரும் செய்திகள்: டிசம்பர் 31ம் தேதி இந்நிகழ்ச்சி நடந்தாலும், இன்றுதான் செய்திகள் வெளி வர ஆரம்பித்துள்ளன[12]. பாலச்சந்திரன் ஒரு சர்க்கரை வியாதியால் அவதை படும் நபர் என்பதால், அஅருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப் பட்டிருக்க வேண்டுய்ம். ஆனால், தேவையில்லாமல் சீன அதிகாரிகள் தாமதப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது[13]. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிபதி மற்றும் போலீசார் கண் எதிரிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. பாலசந்திரன் மட்டுமின்றி தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இருவரும் போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். உள்ளூர் சீனர்களோ, அவர்களது முதலாளி மில்லின் கணக்கில் பாக்கி வைத்திருப்பதால், பணம் கொடுத்தால் தான், அவர்களை விடுவிக்க முடியும் என்று வாதிட்டனர்[14].

சீன துணை தூதருக்கு இந்தியா சம்மன்: இந் நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன துணை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. காயமடைந்துள்ள தூதரக அதிகாரிக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கூறவும், பிடித்துவைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தவும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது[15]. ஜாங் ஹூய் (Zhang Yue, the Deputy Chief of the Chinese Mission in New Delhi) என்ற தில்லியில் உள்ள சீனத்தூதுவர்வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்து, “வெளியுறவு அதிகாரிகள் வழியாக இப்பொழுது தான், நான் அறிந்து கொண்டேன். உண்மையில் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார்[16].

வர்த்தகமா, நாட்டுப் பிரஜைகளா? இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையொலான வர்த்தகம் $ 50 பில்லியன்களுக்கும் (ரூ. 25 லட்சம் கோடிகள்) மேலாக உள்ளது. இருப்பினும் 1962ம் வருட சண்டை / எல்லைப்பிரச்சினை விவகாரத்திலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள உறவுகள் சரியான நிலையில் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு, சீனா இந்தியாவுடன் தகராறு செய்ய தயாராக இருப்பதை அடிக்கடி காண முடிகிறது. ஆனால், இந்தியர்கள் பல காரணங்களுக்காக, சீனாவிற்குச் செல்கின்றனர்.  இதனால், இந்தியா தனது குடிமக்களின் உரிமசிகளைக் காக்க வேண்டிய நிலையில் உள்ளது.

வேதபிரகாஷ்

02-01-2012


[2]Earlier flashpoints were over China issuing visas to residents of Jammu and Kashmir on separate pieces of paper and saying that visitors from Arunachal Pradesh don’t require visas at all, indicating that it had territorial rights over Indian soil.

[8] Indian officials are trying to persuade Chinese authorities to provide police protection to the two Indians, who are complaining of hideous conditions. “We have been tortured for two weeks by the traders. The police have agreed to let us stay in the police station until tomorrow morning. Please help us. We don’t know what will happen if we leave these premises,” Agarwal said.

http://timesofindia.indiatimes.com/india/Treatment-of-diplomat-violation-of-Vienna-norms/articleshow/11345924.cms

 

[10] The two Indians have pleaded that they can hardly be called to account for the Yemeni company’s actions. “I am an ordinary clerk in the company. I have bought nothing from the Chinese traders. But they are demanding money from me because our company owner has vanished after making the purchases,” Agarwal said. He added he did not know what papers he has signed during the interrogation and torture. “We have done nothing wrong. But they can now use the papers to show we made the purchases and did not pay for it,” he said. The buying was done by his employer who owns the firm Euro Global Trading, he said.

தலாய் லாமா ஏன் பௌத்த மாநாட்டில் பேசக்கூடாது, மேலாக இந்தியாவில் ஏன் பௌத்த மாநாடு நடக்கக் கூடாது – சைனாவிற்கு அப்படி சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

நவம்பர்27, 2011

தலாய் லாமா ஏன் பௌத்த மாநாட்டில் பேசக்கூடாது, மேலாக இந்தியாவில் ஏன் பௌத்த மாநாடு நடக்கக் கூடாது – சைனாவிற்கு அப்படி சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?


இந்தியாவில் ஏன் பௌத்த மாநாடு நடக்கக் கூடாது – சைனாவிற்கு அப்படி சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது? பௌத்த மாநாட்டைத் தடை செய்ய வேண்டும்[1] என்று சீனா, இந்தியாவிற்கு உத்தரவு இடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து பௌத்தத்தை இறக்குமதி செய்து கொண்டு, அதனுடன் இந்திய பௌத்த பிக்குகள், அவர்களுடன் இந்திய தொழிற்நுட்பம், மருத்துவம், கட்டிடக்கலை மற்ற விஞ்ஞானங்களைப் பெற்று, மறுபடி-மறுபடி புத்த பிக்குகளை அனுப்பி, இந்தியாவிலிருக்கும் அத்தகைய துறைகளின் புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று, தங்களது நாட்டை உயர்த்துக் கொண்டு, ஏன் இந்தியாவில் பௌத்த மாநாடு நடக்கக் கூடாது என்கிறது. காரணம் தலாய் லாமா அதில் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. சீனா எதிர்ப்பு தெரிவிக்கவே, மாநாட்டுக் குழுவினர் அதை ரத்து செய்து விட்டனர். ஆனால், இப்பொழுது சமரச பேச்சு வார்த்தைக் கூட்டத்திற்கு வந்திருந்த சீன அதிகாரிகள் மாநாட்டையே நிறுத்த வேண்டும் என்றதால்[2], பேச்சு வார்த்தைகள் திடீரென்று 26-11-2011 அன்று நிறுத்தப்பட்டன[3]. இப்பொழுது தேதிகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன என்கிறார்கள்[4].


உலக பௌத்த சங்கம மாநாடு ஏன் நடத்தப்படுகிறது? 2011ம் ஆண்டு “சம்போதிபிரப்தி” அதாவது புத்தர் நிர்வாணம் அடைந்த 2600வது ஆண்டைக் குறிக்க, இம்மாநாடு – உலக பௌத்த சங்கம மாநாடு ஏன் நடத்தப்படுகிறது (Global Buddhist Congregation ) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற குறிக்கோளையும் சேர்த்து இம்மாநாடு நடத்தப் படுகிறது[5]. அசோக மிஷன் என்ற நிறுவனம் இந்த நான்கு நாட்கள் மாநாட்டை தில்லியில் நடத்துகிறது[6]. இந்த நிறுவனம் 1948ல் பல உலகத்தலைவர்களின் உதவியுடன் கம்போடிய பௌத்தத் துறவி தர்மவர மஹாதேரா என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது[7]. உலகத்திலிருந்து பல நாடுகளிலிருந்து 500ற்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள், 300 பார்வையாளர்கள் மற்றும் பௌத்த துறவிகள், விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்[8]. நான்கு நாட்கள் மாநாட்டு நிகழ்ச்சி அட்டவணையை இங்கே பார்க்கவும்[9].


சைனா இந்தியாவிற்கு என்ன செய்துள்ளது? இந்தியாவால் சைனாவிற்கு பல வகைகளில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன, ஏற்பட்டு வருகின்றன. இந்தியர்கள் அங்கு தொழிற்சாலைகள், கம்பெனிகள் வைத்து நடத்துகின்றனர். இந்திய தொழிற்நுட்ப வல்லுனர்கள், எஞ்சினியர்கள், மென்பொருள் வல்லுனர்கள் வேலைசெய்து வருகின்றனர். ஆனால், சைனா இந்தியாவிற்கு செய்து வருவன என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்:

  1. 1961ம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
  2. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க தரமற்ற பொருட்களை கடத்தி வந்து, எந்த வரிகளையும் கட்டாமல் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
  3. எல்லைகளில் மற்றவர்கள் இந்தியாவில் நுழைந்து தீவிரவாத செயல்களை செய்ய ஊக்குவிக்கிறது, அனுப்புகிறது.
  4. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை சீனாவுக்குக் கொடுத்ததும், சீனா ரோடு போட்டுத் தருகிறேன் என்று, பாகிஸ்தானில் நுழைந்துள்ளது. சீனத்துருப்புகளுடன் ஜிஹாதிகள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
  5. பிரம்மபுத்ரா நதியின் பாதிக்கு மேலான நீற்றை ஒரு அணுகுண்டு வெடித்து, இமயமலையின் ஒரு பதியைப் பிளந்து, தன் பக்கமாகத் திருப்பி விட்டுள்ளது.
  6. இலைங்கையிலும் நுழைந்துள்ளனர். எல்.டி.டி.இயை ஒழிக்க, ஸ்ரீலங்காவுடன் ஒத்துழைத்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் போதை மருந்து கடத்தல், வியாபாரம் முதலியவற்றில் தானே தனித்து விளங்க சீனா விரும்புகிறது.
  7. வியட்நாமுடன், தென் சீனக் கடலில் எரிவாயு, எண்ணை கிடைக்குமா என்று ஆராய இந்திய கப்பல் சென்றபோது, அங்கு வரக்கூடாது என்று மிரட்டியது.
  8. அருணாசல பிரதேசம் சீனாவுடன் சேர்ந்தது என்று சொல்லிக் கொள்கிறது. அங்கு சீனர்கள் நுழைந்தால் விசா தேவையில்லை என்கிறது. அதே மாதிரி அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஜம்மு-காஷ்மீரத்திற்கு வந்தால் விசா தேவையில்லை என்கிறது[10]. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தனியாக காகிதத்தில் விசா வழங்குகிறது.


ஆறறிவு ஜீவிகள் எங்கே? பகுத்தறிவுவாதிகள், செக்யூலரிஸ பண்டிதர்கள், சமதர்ம மேதைகள், ஆறறிவு அறிவு ஜீவிகள், அறிஞர்கள், கலைஞர்கள் முதலியோர் ஏன் அமையாக இருக்கிறார்கள் அல்லது இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் தூங்குகிறார்களா என்று தெரியவில்லை. பௌத்தம் என்றாலே தூக்கிக் கொண்டு வரும் அந்த வீராதி வீரர்கள் இப்பொழுது அவர்களுக்கு தோள்கள் திணவெடுக்கவில்லை போலும்! நோபெல் பரிசு வென்றவர், அதிலும் சமாதானம்-அமைதி என்றதற்கு கொடுக்கப்பட்டது என்ற சிறப்பையுடையவர் – தலாய் லாமா என்ன் பேசக் கூடாது? குரூர கொலைக்கார ராக்சதன் கசாப் ஜிஹாதியைப் பற்றி பேசலாம், அந்த ஒன்பது கொலைகாரர்கள் “நாங்கள் சாகிறோம், தொயாகிகள் ஆகிறோம், அல்லா எங்களைக் காப்பாற்றுவார்” என்று சொல்வதை 26-11-2011 அன்று டிவி-செனல்களில் ஒலி-ஒளி பரப்ப எந்த தடையும் இல்லை. ஆனால், தலாய் லாமா அமைதி மாநாட்டில் பேசுவதற்கு உரிமை இல்லையாம்! பிறகு ஏன் நமது வித்தகர்கள் மௌனிகளாகி விட்டனர்?

வேதபிரகாஷ்

27-11-2011


[2]  The reported Chinese demand for cancellation of the Dalai Lama’s speech at a Buddhist congregation here next week is believed to have led to the postponement of India-China border talks

http://timesofindia.indiatimes.com/india/India-China-border-talks-cancelled-over-Dalai-Lama-row-Report/articleshow/10883677.cms

[4] India and China will also resume the defence dialogue next month which had been put on the backburner after India suspended high-level defence exchanges.

http://www.thehindu.com/news/national/article2663296.ece

[5] The year 2011 is of immense importance to Dhamma practitioners, being the 2600th year of Sambodhiprapti, the Enlightenment of Buddha. Since that momentous turning point in the history of civilization, Buddha’s teachings have become the predominant way of life for people of various nationalities and cultures. Consequently 2011 will see many events taking place all over the world in commemoration.

http://asokamission.in/page/global-buddhist-congregation-context

[6]  Asoka Mission is organizing a four-day Global Buddhist Congregation from 27 November to 30 November 2011 in New Delhi, India.

[7] the Asoka Mission, founded in 1948 by Cambodian monk Dharmavara Mahathera with the support of many world leaders, including Jawaharlal Nehru.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/China-demand-on-Dalai-meet-led-to-boundary-talks-cancellation/Article1-774415.aspx

[10] Earlier flashpoints were over China issuing visas to residents of Jammu and Kashmir on separate pieces of paper and saying that visitors from Arunachal Pradesh don’t require visas at all, indicating that it had territorial rights over Indian soil.

http://www.hindustantimes.com/News-Feed/newdelhi/India-says-can-t-gag-Dalai-China-stalls-border-talks/Article1-774415.aspx

புடவை கட்டியதால் சோதனை: அமெரிக்காவில் நவீன துச்சாதனர்கள்!

திசெம்பர்10, 2010

புடவை கட்டியதால் சோதனை: அமெரிக்காவில் நவீன துச்சாதனர்கள்!

Meera shankar - Baraka Obama

Meera shankar – Baraka Obama

அமெரிக்காவின் யதேச்சதிகார சோதனை: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் ஜாக்சன் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சாதாரண பயணிகளைப் போல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதர் விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. இது மாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அ‌மைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.   கடந்த 4ம் தேதியன்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். கருத்தரங்கை முடித்துக் ‌கொண்டு ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார் மீரா. பார்லிடிமோர் செல்வதற்காக காத்திருந்த அவரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாதாரண பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சோதனை போல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

Friends in high places- Indian ambassador Meera Shankar alongside US Secretary of State Hillary Clinton during a State Arrival at the White House

Friends in high places- Indian ambassador Meera Shankar alongside US Secretary of State Hillary Clinton during a State Arrival at the White House

சேலை அணிந்திருந்ததால் சோதனையா? : இந்திய தூதர் அவமரியாதைக்கு கிருஷ்ணா கண்டனம்: விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்[1]. ஏர்போர்ட்டில்  30 பயணிகளில் குறிப்பாக மீராசங்கரை செக்யூரிடி ஆட்கள் இழுத்துக் கொண்டு சோதனைக்கு அழைத்தச் சென்றனர்[2]. ஏனப்படி என்று கேட்டதற்கு அவர் வித்தியாசமாக அத்தகைய உடையை அணிந்திருந்ததால்தான் என்றனர். மீராசங்கர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது பதவி குறித்து விளக்கியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதை அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரை தனி அறைக்குக்குக் கூட்டிச் சென்றனர்.

Revealing- The nude body scans are used to pick up hidden objects that a passenger may be concealing under their clothes but leaves little to the imagination

Revealing- The nude body scans are used to pick up hidden objects that a passenger may be concealing under their clothes but leaves little to the imagination

தனியாக அழைத்துச் சென்று சோதனை: அங்கு பெண் அதிகாரிகள் உடல் முழுவதையும் கைகளால் சோதனை செய்து மீரா சங்கரை அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் வெகுண்ட மீரா சங்கர், தான் ஒரு தூதர் என்பதை மீண்டும் கூறி அதுதொடர்பான ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் சேலை கட்டி வந்துள்ளதால் உங்களை சோதனையிட்டாக வேண்டும் என்று கூறியுள்ளனர் பாதுகாப்பு அதிகாரிகள்[3].அதாவது அவர்களது புதிய விதிமுறைகளின்படி, யாராவது அப்படி உடலை மூடியஅடி, அளவிற்கு அதிகமான துணி, ஆடைகள் அணிந்து வந்தால், அவர்களை முழுவதுமாக சோதனையிடவேண்டும் என்று உள்ளதாம்[4]. வி.ஐ.பி., வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்ற அவரை , பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்‌‌கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால் , மீரா இந்த மாதிரியான ‌சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Meera Shankar with Clinton former President

Meera Shankar with Clinton former President

விளக்கம் கோரினார் கிருஷ்ணா: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் விமானநிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளார். மீரா சங்கர் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Meera Shankar, Indian ambassador stripped at US airport for checking

Meera Shankar, Indian ambassador stripped at US airport for checking

கூத்தாடிய ஜனாதிபதியும், சோதனையிட்ட அதிகாரிகளும்: சென்ற மாதம் அமெரிக்க ஜனாதிபதி வந்தபோது, கூத்தாடி போல, சிறுவர்களுடன் ஆடியபோது, ஆஹா, இவ்வளவு பெரிய ஆள் இப்படி ஆடுகிறாரே என்று வியந்தனர். ஆனால், ஆடிபாடி கோடிகளுக்கு ஆர்டர்களை அள்ளிச் சென்றுவிட்டார். ஆனால், இப்பொழுதோ, ஒரு இந்திய பெண்மணி, சேலை கட்டிக் கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த வெள்ளையர்கள், துச்சாதனனாக மாறி அவர்களது நாட்டுச் சட்டப்படி துகிலிறிய எத்தனித்துள்ளனர். கைகளால் துழாவி சோதனையிட்டுள்ளனர்.

It is unbelievable that an Indian lady, checked in that way

It is unbelievable that an Indian lady, checked in that way

இனி இந்திய பெண்கள் அமெரிக்காவிற்கு சென்றால் புடவைக் கட்டிக் கொண்டு செல்லவேண்டும்: அமெரிக்காவிற்கு சரியான பாடம் புகட்டவேண்டுமானால், இனி இந்திய பெண்கள் அமெரிக்காவிற்கு சென்றால் புடவைக் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். நமது நாட்டுப் பண்பாட்டை அறிவிக்கவேண்டும், புரியவைக்க வேண்டும். ஏற்கெனவே கோடிகளில் இந்தியர்கள் மற்றுனம் இந்தியா வம்சாவளியினர் அங்கிருப்பதால், அத்தகைய சாத்வீக, சத்தியசகிரபக போராட்டம் சாத்தியமே. முன்பு “டாட்-பஸ்டர்கள்” என்ற வெறியாளர்கள் இருந்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள்சவேண்டும்.

துப்பாக்கியில் சுட்ட அமெரிக்கர்களும், நாவினால் சுட்ட கருணாநிதியும்: நெற்றியில் பொட்டு, குங்குமம் வைத்தால் கருணாநிதி மட்டும், “என்ன நெற்றியில் சிவஆக இருக்கிறது, ரத்தமா” என்று நக்கலாக கேட்க மாட்டார். அமெரிக்காவிலும் அவரைவிட கொடூரமான கொலையாளிகள் இருந்தனர். ஆமாம், அவர்களுக்கு“டாட்-பஸ்டர்கள்” என்று பெயர். நெற்றியில் பொட்டு, குங்குமம் வைத்த பெண்களை துப்பாக்கியால் சுட்டு வந்தனர். இங்கு செக்யூலைரிஸ நாட்டில் வாயால் வார்த்தைகளால் சுட்டால், அங்கு துப்பாக்கியால் சுடுகின்றனர், அதுதான் உண்மை. ஆனால், திருவள்ளுவர் சொல்லியபடியே, செய்து காட்டினார் கருணாநிதி, “தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆராதே,, நாவினால் சுட்ட வடு”!

வேதபிரகாஷ்

© 10-12-2010


[1]சேலை அணிந்திருந்ததால் சோதனையா? : இந்திய தூதர் அவமரியாதைக்கு கிருஷ்ணா கண்டனம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2010,09:34 IST; மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 09,2010,17:24 IST,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142576

[4] In the airport’s defence, the US Transportation Security Administration (TSA) has recently ramped up its rules. Diplomats are not automatically exempted; it’s left to security officers’ discretion. Though many of those offended on Shankar’s behalf reflexively claimed racism, passengers who wear bulky clothing are usually put through a more rigorous search according to TSA rules and Shankar was wearing a sari.