Archive for the ‘சமாதி’ Category

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)

ஓகஸ்ட்31, 2013

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)

 

ஶ்ரீஅரவிந்தர்ஆசிரமத்தில்நடக்கும்அதிகாரபோராட்டம்: புதுச்சேரியில் உள்ள, அரவிந்தர் ஆசிரமம், மிகவும் பிரசித்தி பெற்ற ஆசிரமத்தில் உள்ள –

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, பாலியல் தொந்தரவு நடக்கிறது;
  • மனித உரிமைகள் மீறப்படுகிறது;
  • ஆசிரம நிதியில் முறைகேடு நடக்கிறது;
  • ஆசிரம சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன;

என, குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை, புதுச்சேரி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், விஷ்ணு லலித் மற்றும் ஆசிரமத்தில் உள்ள சிலர் எழுப்பியுள்ளனர்[1]. உண்மையில், ஒவ்வொரு மடத்திலும், நிறுவனத்திலும், கட்சியிலும் இத்தகைய அதிகார போராட்டங்கள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற துவேசங்களினால் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை மறைக்கும் விதமாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது. சங்கம் என்று வைத்துக் கொண்டாலே, பதவி ஆசை வரும்போது அல்லது குறிப்பிட்டவவர்கள் மட்டும் அனுபவிக்கிறார்களே என்று கவனிக்கும் போது, மற்ற உறுப்பினர்களுக்கு ஆசை வரத்தான் செய்யும். ஏனெனில், அந்த 10-20 பேர் மற்ரவர்களை தமக்கு சாதகமாக வைத்துக் கொண்டே, சங்கமே தனக்கு சொந்தம் போல நடந்து கொள்வார்கள். அப்பொழுதுதான், பிரச்சினை வரும்.

புகார்கள் உண்மையா என்று விசாரிக்க உத்தரவு: பாலியல் புகார்கள் உள்பட புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார்கள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. இது தொடர்பாக நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்துள்ள உத்தரவில், அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளனவா என்று நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்மையா என்பது பற்றியும், ஆசிரம நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், ஆசிரமச் சொத்துகள் சட்டவிரோதமான முறையில் விற்கப்படுகிறது என்றும் கூறப்படும் புகார்களில் உண்மை உள்ளதா என்பது பற்றியும் நீதிபதி ராமன் விசாரணை நடத்தி, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சசிதரன் தனது உத்தரவில் கூறியுள்ளார். விசாரணை அதிகாரியான நீதிபதி ராமனுக்கு உதவிடும் வகையில் கொச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சத்யா ஸ்ரீ பிரியா ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்[3]. ஏற்கெனவே, கேரளாவைச் சேர்ந்தவர்கள் வங்காள மாநில மக்களுக்கு அடுத்தபடி, அதிகாரம் செல்லுத்தி வருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டும் உள்ளது. பிறகு, இவர்கள் சமநீதி முறையில் வேலை செய்வார்களா அல்லது பாரபட்சமாக நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

இடைக்காலத் த டைநீக்கம்: அரவிந்தர் ஆசிரம செயல்பாடுகள் குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்ளிட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு 1.10.2012 அன்று புதுச்சேரி துணை ஆட்சியர் (வருவாய்) நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த விசாரணைக்கு தடை கோரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து 5.10.2012 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஆசிரமம் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும், எனினும் முன்னரே முடிவு செய்யப்பட்ட விதத்திலான ஆட்சியரின் விசாரணையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆசிரம அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்தலாம் என்ற யோசனையை நீதிபதி சசிதரன் முன் வைத்தார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டதையடுத்து, நீதிபதி பி.ஆர்.ராமனை விசாரணை அதிகாரியாக நியமித்து நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தின் கௌரவம் காக்கப்பட வேண்டும்: அரவிந்தர் ஆசிரமம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஓர் அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது சிலர் ஆசிரமம் குறித்து கூறியுள்ள புகார்களால் அந்த ஆசிரமத்தின் கௌரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. என்ன விலை கொடுத்தாவது ஆசிரமத்தின் புகழும், கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி சசிதரன், தற்போதைய ஆசிரம அறக்கட்டளை சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்[4].

ஶ்ரீஅரவிந்தர் சித்தாந்தங்கள் மறந்தது: ஶ்ரீ அரவிந்தர் சுதந்திர போராட்ட காலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தது, ஆன்மீகத்தை தேடியது என்ற உண்மைகளை மறந்து, நாங்களும் ஆன்மீகத்தில் திளைக்கிறோம், யோகா செய்கிறோம், தியானம் செய்கிறோம் என்று பலர் கிளம்பி விட்டார்கள். அரவிந்தரின் ஆன்மீகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற் தெரியவில்லை. மார்ச் மாதம் ஆசிரமம் தாக்கப்பட்ட போது, இவர்கள் வருத்தம் தெரிவித்தார்களா என்று கூட தெரியவில்லை. தாக்கியவர்களின் மனங்களில் ஒரு துளி ஆன்மீகம் அல்லது தேசப்பற்று இருந்திருந்தால், தாக்கியிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் முகங்களில், செயல்களில் வெறித்தனம் தான் காணப்பட்டது.

அந்நியர்களில் சிலர் இந்தியக்காரணிகளுக்கு எதிராக நடந்து கொள்வது: அந்நியர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது எல்லாவற்றையும் நம்புகிறவர்கள் ஒரு பக்கம், நாத்திகவாதிகள், இந்து-விரோதிகள், கம்யூனிஸ்டுகள், திராவிட-சித்தாந்திகள் போன்றோர் இன்னொரு பக்கம் – இவர்களால் தான் பிரச்சினைகள் வருகின்றன. இப்பொழுது, அனைத்தும் வியாபாராமாக்கப் பட்டு விட்டதால், பணம் சம்பாதிக்கும் வழிகளில் உள்ளவற்றை கொண்டு வருகின்றனர், அல்லது உள்ளவற்றை மாற்றி வியாபாரம் செய்ய பார்க்கின்றனர். உள்ளூர்காரர்களை விட, வெளிநாட்டுக் காரர்களிடம் “அதிகம் பணம் பண்ணலாம்” என்ற எண்ணத்தில் செயல்படும் போது, குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

சொத்துக்களால் உண்டாகும் குற்றங்கள்: பிரெஞ்சுகாரர்களுக்கு சொத்துரிமை உள்ளது, ஆனால், அவர்களுக்குப் பிறகு, அவை இந்தியர்களுக்கு சில சரத்துகளில் கிடைக்க வழியுள்ளது எனும் போது, அவற்றை இந்தியர்கள் கடைபிடிக்கப் பார்க்கின்றனர். நிலம் மற்ரும் சொத்து மதிப்பு கோடிகளில் உயர்ந்து வரும் இந்நாளில் எதையும் செய்யும் எண்ணமும் உருவாகி விட்டது. பிரெஞ்சு நாட்டிடம் பென்சன் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் உல்லாசிகள், சோம்பேரிகளும் இதில் சேர்ந்து கொள்கின்றனர். இதில் மேற்குறிப்பிட்ட கோஷ்ட்கள் நுழையும் போது அல்லது அவர்கள் பார்வையில் வரும் போது, அவர்களும் அதில் திளைக்கலாம் என்ற எண்ணம் கொள்கின்றனர். இதனால், அரசியல், ரௌடியிஸம், கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்முறை, கொலை செய்யும் அளவிற்கு செல்லுதல் முதலிய வக்கிரங்களும் தலையெடுக்கின்றன. சாதாரண திருட்டு தான், பேராசையில் மற்ற குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. கோஷ்டிகள் இவற்றில் செயல்படும் போது, கோஷ்டி-குற்றங்கள் தாம் ஏற்படுகின்றன.

© வேதபிரகாஷ்

31-08-2013


ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

ஓகஸ்ட்31, 2013

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

அரவிந்தர் ஆசிரமத்தில் செக்ஸ் கொடுமை (2004): இப்படி தலைப்பிட்டு, ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு மேலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1].  பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்ரீதியில்கொடுமைப்படுத்தப்படுவதாக அங்கு தங்கியுள்ள 5 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்கொடுத்துள்ளனர். ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பேரும் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவியான பூர்ணிமா அத்வானி கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பூர்ணிமா, அரவிந்தர் ஆசிரமம் மீது கற்பழிப்பு புகார் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • பெண்கள் தங்கியுள்ள அறைகளில் வந்து ஆண்கள் சிறு நீர் கழிப்பது,
  • பெண்கள் தங்கியுள்ள அறைகளின் சுவர்களில் அசிங்கமான வார்த்தைகளை எழுதி வைப்பது
  • போன்ற செயல்களில் சில ஆண்கள் ஈடுபடுவதாகவும்

இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம் என்றார். இவையெல்லாம், அரசு அலுவலங்கள், ரெயில்கள் மற்ற கட்டிடங்களின் கழிப்பிடங்கள், முதலியவற்றில் சர்வ சகஜமாகக் காணலாம். அவற்றைப் பற்றி கவலைப் படாத பெண்கள், இதைப் பெரியதாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பக இருக்கிறது. ஆரோவில் ஆசிரமத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், முறைகேடான பாலுறவு போன்றவற்றில் அங்குதங்கியுள்ள வெளிநாட்டவரும், உள்நாட்டினரும் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது[2].

அந்நியர்களால் வரும் விபரீதங்கள்: ஆரோவில் வளாகத்தில் அந்நியர்கள் அதிகமாக இருப்பதினால், அவர்கள் மூலமாக பற்பல பிரச்சினைகள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கு மேலுள்ள அந்நிய பக்தர்கள், சீடர்கள், தியான-யோகா நிகழ்சிகளில் கலந்து கொள்பவர்கள், சுற்றுலா பிரயாணிகள், உல்லாசிகள் என்று அனைத்து வகையினரும் இங்குள்ள கூட்டங்களில் அடங்குவர். அந்நியர்கள் அதிகமாக வருவதால், அவர்கள் தங்களது பழக்க-வழக்கங்களை பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸில் ஈடுபடுவது போன்றவை அவர்களைப் பொறுத்த வரைக்கும், தினசரி காரியங்களாக இருக்கின்றன. தினமும் சாப்பாடு-உணவு போல அவற்றை வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் போதை மருந்தும் உட்கொள்கின்றனர். இதனால், இவையெல்லாம் இங்கு கிடைக்கின்றன அல்லது கிடைக்கக்கூடிய நிலையுள்ளது. இவற்றில் சில சட்டமீறல்கள், குற்றங்கள் எனும்போது, அவை தெரிந்தே அனுமதிக்கப் படுகின்றன என்றாகிறது. இவற்ரின் மூலம் தான் மற்ற குற்றங்கள் நடக்கின்றன.

தொடர்ந்து நடக்கும் கொலைகள்,  கற்பழிப்புகள்: ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அல்லது அதனைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் எல்லாம், பொதுவாக ஆரோவில் மற்றும் அதன் வளகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தாம் அதிகமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள், மற்றும் அவற்றைச் சேர்ந்த குற்றங்கள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் சில கீழே உதாரணத்திற்காகக்  கொடுக்கப்படுகின்றன:

  • அக்டோபர் 2004ல் ஆரோவில் அருகேயிருந்த கிராமத்தில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டன. அதில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் கொல்லப்பட்டார். ஜனவரி 19, 2004ல் அக்கூட்டத்தினர் பெயிலில் வெளியே வந்தபோது, அதில் ஒருவர் இடையாஞ்சாவடியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்[3].
  • ஜனவரி 31, 2004ல் சைடோ வான் லூ [Sydo Van Loo, a Dutch national] என்ற டச்சு நாட்டுக்காரர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்[4].
  • அக்டோபர் 2008ல், இசபெல்லா என்ற பெண் பலரால் கற்பழிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக, ஆரோவில் அருகே முந்திரி புதர்களில் கிடந்தது போலீஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கணவர் ஆல்பர்ட் துபாயில் வேலை செய்கிறான். காணாமல் போன அவளைப் பற்றி, தாயார் போலீஸாரிடத்தில் புகார் கொடுத்திருந்தார்[5].
  • மே 2009ல், ஆன்ட்ரி வயோஜேட் [French industrialist, Andre Viozat, 66] என்பவர் தனது 13-ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்னை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[6]. இவர் சந்திரிகா என்ற கேரள பெண்னை திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து விட்டனர். அவர் அடையாளம் தெரியாத ஆசாகளால் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
  • டிசம்பர் 31, 2010 அன்று மதிவளவன் மற்றும் கருணகரன் கோஷ்டி மோதல்களில் கொல்லப்பட்டனர்[7]. இவர்களைக் கொன்ற சுரேஷ் என்பவன் ஆன்ட்ரி வயோஜேட் கொலையிலும் தனக்கு பங்கிருப்பதாக ஒப்புக் கொண்டான்.

வான் லூ கொலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆரோவில்-காரர்களே, வன்முறை ஆரோவில்லில் ஒன்றும் புதியதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்[8]. ஆன்ட்ரி வயோஜேட் கொலையைப் பொறுத்த வரையில் கோடிக்கணக்கான சொத்துதான் பங்கு வகித்துள்ளது. மேலும் ஆரோவில் வளகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் உள்ளூர்வாசிகள் இவர்களிடையே சில பிரச்சினைகள் எழுகின்றன, அவை கொலை, கற்பழிப்பில் கூட முடிகின்றன என்று வெளிநாட்டுக்காரர்களே எடுத்துக் காட்டுகின்றனர்[9].

ஶ்ரீஅரவிந்தர் பெயரில் இயங்கி வரும் இயக்கங்கள்,  நிறுவனங்கள்,  சங்கங்கள் முதலின: ஆரோவில்[10], ஆரோவில் ஆசிரமம், ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம்[11] மற்றும் இதர ஆசிரமங்கள் என்று பல புதுச்சேரியில் / பாண்டிச்சேரியில் இருந்து வருகின்றன. இவற்றை பல இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்கள், டிரஸ்டுகள், சொசைடிகள் நிர்வகித்து வருகின்றன. இவையெல்லாம் முதலியவை தனித்தனியானவை[12]. உள்ளூர்-வெளியூர் இந்தியர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்ற அந்நியர்கள் என்று பலர் அதில் விருப்பங்கலைக் கொண்டுள்ளார்கள்.

ஆரோவில் பகுதியில் நடப்பதை,  ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வரும் நிலை: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[13]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[14]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[15]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

இலங்கை பிரச்சினை வைத்துக் கொண்டு திகவினர் ஆசிரமத்தைத் தாக்கியது  (மார்ச்.2013): இவ்வருடம் மார்ச் மாதம் கூட, சம்பந்தமே இல்லாமல், திராவிட கழக்கத்தினர் ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர். ஆனால், ஆரோவில்லை விட்டுவிட்டனர்[16]. இதேபோலத்தான், ஊடகத்தினரும், ஆரோவில் பகுதியில் நடப்பதை, ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வருகின்றன. சமீபத்தில், ஒரு “டிரான்ஸ்-ஜென்டர்” தான் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் பிரச்சினையை அணுகுவதில் சிக்கலாக இருந்ததால் திகைத்தனர். உடனே “புதுச்சேரி பெண்கள் வாழ ஜாக்கிரதையான இடம் இல்லை” என்றதுபோல “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டது[17]. எப்படி ஒரு அந்நிய பெண் காஷ்மீரத்தில் கொலை செய்யப்பட்டதும், இந்தியா அந்நியர்களுக்கு ஏற்ற நாடல்ல, உமது பெண்கள் அங்கு ஜாக்கிரதையாக இருக்க முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, அதே பாணியில், இந்த பிரச்சாரமும் உள்ளது.

© வேதபிரகாஷ்

31-08-2013


[3] In October 2003, the gang war flared up once again, and another murder took place, this time in another village close by Auroville. The victim was a homeopath who had connections with one of the gangs. It did not take long before the retaliation murder occurred. On January 19th, 2004, one of the senior members of the other gang, who had just been released on bail a few days earlier, was killed in broad daylight in Edaiyanchavadi.

http://www.auroville.org/journals&media/avtoday/archive/2004-2009/2004-03/spiral_violance.htm

[7] A double murder, in which Madhivalavan (26) and Karunakaran (26) were killed in a group rivalry at Periya Mudaliar Chavadi on December 31, 2010,  http://www.hindu.com/2011/01/05/stories/2011010563250900.htm

[12] The disciples and devoted followers of Sri Aurobindo and the Mother, with a view to propagate and practise the ideals and beliefs of Sri Aurobindo formed a Society called Sri Aurobindo Society in the year 1960, which at all material times was and is still a society duly registered under the provisions of the West Bengal Societies Registration Act, 1961. This Society is completely distinct from Aurobindo Ashram in Pondicherry. The Society was established and registered for the purpose of carrying out in and out side India the several objects stated in the memorandum of the Society. http://indiankanoon.org/doc/312939/

[14] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்ரின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html