புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா? தடுப்பது எப்படி? [2]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா? தடுப்பது எப்படி? [2]

Puduchrry DJ Party 2019-5

100க்கும் மேலாகக் கலந்து கொண்ட பார்ட்டி: இது குறித்த தகவல் முன்பே போலீசாருக்கு கிடைத்தவுடன் எஸ்.பி. ஜெயக்குமார், போலீஸ்காரர் ஒருவரை இணைய தளம் மூலம் 1000 ரூபாய் செலுத்தி விருந்தில் பங்கேற்று தகவல் தெரிவிக்க வைத்துள்ளார்[1].  இதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்திருந்தனர்[2]. அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர்[3]. அவர்களுடன் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்[4]. அதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மின்விளக்கு அலங்காரம், ஒலிபெருக்கி வசதிகளுடன் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 08-06-2019 இரவு 11 மணி அளவில் மது விருந்துடன் இந்த டி.ஜே. நடன நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது சிலருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களும் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போதையில் அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் இடையூறு தாங்க முடியாமல், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்[5].

Puduchrry DJ Party 2019-12

போலீஸார் வளைத்ததும், சிலர் தப்பியோடிய நிகழ்சியும்: இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நள்ளிரவில் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தார். போலீசாரை பார்த்ததும், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த சிலர் உஷாராகி, தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், ஆரோவில் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளம் வயது ஆண் பெண் அதிகமாக இருந்துள்ளனர்[6].  சில இளம் பெண்களையும், சில வெளிநாட்டினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Puduchrry DJ Party 2019-6

விசாரணைக்குப் பிறகு கைதானவர்கள்: இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னையை அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் யுவராஜ், அவரது நண்பர்களான கோவையை சேர்ந்த பால்சன் என்பவரின் மகன் ஹஜி, காஞ்சீபுரத்தை சேர்ந்த தவுலத்ஷா மகன் அலி ஆகியோர் உள்பட 15 பேர் இந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்[7]. இந்திய குற்றவியல் சட்டம், போதை தடுப்புச் சட்டம், நகர பாதிப்பு சட்டம் முதலியவற்றின் கீழுள்ள பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த நடன நிகழ்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மின்சாதன பொருட்கள், சரக்கு வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடன நிகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது, இசை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆலங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் பலராமன், லிக்கித், பிரபு, ராமச்சந்திரன், பாலாஜி, நாகப்பன், கூலி தொழிலாளர்களான செல்வம், குமார், அய்யப்பன், முத்து, சரண்ராஜ், பூபாலன், சுரேஷ் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Puduchrry DJ Party 2019-9

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்சிகள், திடீரென்று, இப்பொழுது வெளி வந்துள்ளது என்றாகாது. புதுவை அருகே நள்ளிரவில் போதை விருந்துடன் நடந்த இந்த ஆபாச நடன நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[8]. இதற்கிடையே போதை மற்றும் ஆபாச நடனம் போன்ற தவறான பாதைகளுக்கு கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி இருப்பதாக காவல்துறையினர் வேதனை தெரிவித்தார்கள்[9]. பெற்றோர்கள் முறையாக தங்களின் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது.

Puduchrry DJ Party 2019-7

அமெரிக்கர் பாதையில் இந்தியர் செல்லலாகாது: அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்கம் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளது சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

Puduchrry DJ Party 2019-8

பெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34.குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன.  தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கீதை.1.40,” என்று குறிப்பிட்டு,கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥1.41, ४१॥

அதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-13

[1] நியூஸ்.18, முந்திரிக்காட்டில் தன்னிலை மறந்து மதுபோதையில் ஆட்டம்பெண்கள் உள்பட 16 பேர் கைது, News18 | June 10, 2019, 11:06 AM IST

[2] https://tamil.news18.com/photogallery/national/puducherry-16-people-were-arrested-in-puducherry-for-organized-drinking-party-vin-165811-page-5.html

[3] பிஹைன்ட்.த.வுட்ஸ், இப்படியா ஆபாசமா ஆடுறது‘…போதையில்டி.ஜே டான்ஸ்‘…சிக்கியஐடிமற்றும்கல்லூரி மாணவிகள்‘!, By Jeno | Jun 10, 2019 01:17 PM

[4] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/16-people-were-arrested-in-puducherry-for-organizing-drinking-party.html

[5] நியூஸ்.18, முந்திரிக்காட்டில் தன்னிலை மறந்து மதுபோதையில் ஆட்டம்பெண்கள் உள்பட 16 பேர் கைது, News18 | June 10, 2019, 11:06 AM IST

[6] Times of India, Villupuram: Cops bust rave party, 16 held, Karal Marx | TNN | Updated: Jun 10, 2019, 11:57 IST

[7] Police officials registered a case on 8 sections including 147 and 294a of IPC , 4(1)a and 4 (1)(i) Tamil Nadu Prohibition act and 3 (A) town nuisance act.

https://timesofindia.indiatimes.com/city/puducherry/cops-bust-rave-party-16-held/articleshow/69717770.cms

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்! By Vishnupriya R | Published: Sunday, June 9, 2019, 9:47 [IST] .

[9] https://tamil.oneindia.com/news/villupuram/15-were-arrested-in-villupuram-arranging-for-a-drinks-party-near-auroville-353518.html

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

Puduchrry DJ Party 2019

குடித்து கும்மாளம் போது டீஜே பார்ட்டிகள் புதுச்சேரியில் சகஜம் தான்: புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன[1]. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே[2]. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது[3]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. பாண்டிச்சேரி, புதுச்சேரி, ஆரோவில் என்றாலே இதெல்லாம் சகஜமான விசயம் என்றே ஆகிவிட்டது.  இவையெல்லாம் வெளிப்படையாகவே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு, ஓட்டல்களில் நடக்கின்றன[4]. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீகத்தைத் தேடிச் சென்ற பயணம் ரேவ் பார்ட்டியில் முடிந்து விட்டது என்று ஒருவர் எழுதியுள்ளதைப் படிக்கலாம்[5].  அதாவது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்ய, தயாராக அந்தந்த தொழில்கள் செய்பவகள் தயாராக இருக்கின்றனர்.

Puduchrry DJ Party 2019-2

புதுச்சேரி, ஆரோவில், அரவிந்த ஆசிரமம்: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[6]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[7]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[8]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

Puduchrry DJ Party 2019-3

போதைப் பொருட்களின் புழக்கம்: எல்லோருக்கும் பணம் கிடைத்து வருவதால் அமைதியாக நடந்து வருகின்றன. அயல்நாட்டவர்களை வைத்து செய்கின்ற வியாபாரம் அமோகவே நடந்து வருகின்றன. அதிலும், பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் நபர்கள் மூலம் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆரோவில்லில் நடப்பவை வெளியே வருவதில்லை. மற்றவற்றில், உள்ளூர்வாசிகள் எல்லைகளை மீறும் போது, பிரச்சினைகள் உண்டாகின்றன. ஏதாவது உட்பூசல் போன்ற விவகாரம் வந்தால் புகார்களாக வெளிப்படுகின்றன. ஆனால், “விவரம்” தெரிந்தவர் அந்த “வரயறைக்குள்” நடத்தி செல்கின்றனர். இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன[9]. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன[10]. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எப்படி புழக்கத்தில் உள்ளன என்று ஆராய்ந்தால், வேறு விவகாரங்கள் வெளிவரும்.

Puduchrry DJ Party 2019-4

போலீஸார் கண்காணிப்பு, எச்சரிக்கை முதலியன: ஆரோவில் அனைத்துலக விருப்பு-வெறுப்புகளுக்குட்பட்டதாக இருப்பதால், அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறது. அதனை அரசுடமையாக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகளும் தடுக்கப் பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது[11]. ஆனால் ஆரோ வில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன[12]. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Puduchrry DJ Party 2019-11

வளைதளத்தில் விளம்பரம் கொடுத்து, ஜி.பி.எஸ் மூலம் கூட்டிய அதிநவீன ரேவ்பார்ட்டி: இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 08-06-2019 மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. “அரோரா Music contest” என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் கொடுக்காமல் 1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் Navigator (வழிகாட்டி) Map அனுப்பப்படுகிறது. மகாபலிபுரம் மாதிரியாக இருந்தாலும், மாட்டி கொள்ளாமல் இருக்க, இவ்வழி பின்பற்றின போலும். இந்த வகையில் புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடினார்கள். அங்கு அலங்கார மின்விளக்குகள், இசைக்குழு, மது பானங்கள், போதை பொருட்களுடன் மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, சமூக வளைதளங்களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்த நிகழ்சிற்கு பாதுகாக்கப்படும் காட்டிற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டது[13].

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-10

[1] தினத்தந்தி, புதுச்சேரி அருகே முந்திரி தோப்புக்குள் மது விருந்து அளித்து பெண்களுடன் https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4ஆபாச நடனமாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 10, 2019 05:15 AM

[2] A disc jockey, often abbreviated as DJ, is a person who plays existing recorded music for a live audience. Most common types of DJs include radio DJ, club DJ who performs at a nightclub or music festival and turntablist who uses record players, usually turntables, to manipulate sounds on phonograph records.

[3] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/10041439/Near-pondichery-Wine-party-with-women-at-midnight.vpf

[4] https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4

[5]  Nihal Bambulkar, In Auroville, My Search for Spirituality Ended at a Forest Rave Party, BY NIHAL BAMBULKAR AUG. 22, 2018 https://www.arre.co.in/first-person/auroville-spirituality-forest-rave-party-2/

[6] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=482439&Print=1

[7] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்றின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

[8] http://secularsim.wordpress.com/2013/03/21/628-why-aurobindo-ashram-attacked-by-the-dravidar-kazhagam/

[9] விகடன், மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்! – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ், வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/06/2019) கடைசி தொடர்பு:20:40 (10/06/2019).

[10] https://www.vikatan.com/news/tamilnadu/159470-viluppuram-police-arrests-16-near-pondicherry-border-over-organizing-mid-night-party.html

[11] தந்தி.டிவி, ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து, பதிவு : ஜூன் 10, 2019, 08:13 AM

[12] https://www.thanthitv.com/News/India/2019/06/10081334/1038816/Puducherry-Arrest-Liquor-Party.vpf

[13] The organisers had given wide publicity for the event on social media platforms and had enabled location sharing feature with Google Maps. The tickets were priced at ₹1,000 per couple. Some youngsters were also found peddling ganja at the party and had also procured IMFL from Puducherry. Mr. Jayakumar said the police trapped them by sending decoys who struck a deal with them in the guise of buying tickets for the event.Over 80 persons, including Aurovillians, foreigners and youngsters from Chennai, were attending the party. No permission was obtained for the event. The orchard is located close to a reserve forest, he said.

https://www.thehindu.com/news/cities/chennai/15-detained-ganja-seized-at-rave-party-near-auroville-township/article27702819.ece

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை- பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)

ஏப்ரல்11, 2018

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவுஎதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறைபிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (2)

Shoe- Tamilian threw chappals 10-04-2018

நாம் தமிழர் ஆட்களின் அநாகரிகமான செயல்ஷோக்களை எரிந்தது[1]: ஆனாலும் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்தது. போட்டியும் திட்டமிட்டபடி நடந்தது. போட்டியின் இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்கலாம் என எதிர்பார்த்து மைதானத்துக்குள்ளே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பவர் பிளே முடிந்த பின்னர் பவுண்டரி லைன் அருகே பட்டாபிராம் முனை பகுதியில் காலரியிலிருந்து ஷூ ஒன்று மைதானத்திற்குள் வீசப்பட்டது[2]. அது நேராகச் சென்று ஜடேஜா அருகில் விழுந்தது. அவர் அதைப் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் அதைக் காலால் உதைக்க முயன்றார். அது மீண்டும் மைதானத்திலேயே விழுந்தது. மைதானக் காவலர்கள் காலணியை எடுத்துச் சென்றனர். உடனடியாக மைதான பாதுகாவலர்களும், போலீஸாரும் ஷூ வீசிய இளைஞர்களைப் பிடித்தனர்.

CSK fas beaten -Anti-national leaders- IPL match-4

மைதானத்துக்குள் காலணி வீசியதாக ராஜ்குமார், அய்யனார், பொன்வேல் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அப்போது அந்த இளைஞர்கள் சற்றும் அஞ்சாமல் நாம் தமிழர் கொடியை எடுத்து விரித்து பிடித்தபடி கோஷமிட்டபடி சென்றனர். படிகட்டில் இறங்கும் நேரத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் அவர்களைத் தாக்க முயன்றார். அவர்கள் பதிலுக்கு தாக்க முயன்ற போது போலீஸார் இழுத்துச் சென்றனர். இதே போல் வாலாஜா சாலையில் நுழைவு வாயில் அருகே போட்டியைக் காணவந்த இரண்டு இளைஞர்களை டிக்கெட்டைக் காட்டுங்கள் என்று கூறி பனியனை கழற்றச்சொல்லி தாக்கியதாக போலீஸார் சிலரை பிடித்தனர். போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் மைதானம் முழுதும் குழுமி இருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச்சை மொத்தமாக அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஷோக்களை எரிந்து தரத்தைக் குறைத்துக் கொண்ட விதம் படு கேவலமாகி விட்டது. கிரிக்கெட் சரித்திரத்திலேயே, சென்னைக்கு இழுக்கை சேர்ததாகி விட்டது.

Anna salai blocked- IPL match

போராட்டம் பெயரில் மாலை நேரத்தில் தெருக்களில் இடைஞ்சல் செய்தது, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்பவர்களை பாதித்தது:  தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை திடீரென தற்போது போராட்டத்தில் குதித்தன[3]. விகடன் “திடீரென தற்போது போராட்டத்தில் குதித்தன,” என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனனில், மற்ற இயக்குனர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாகிறது. அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்றார்.  போராட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர். கொல்கத்தா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தின் உள்ளே சிலர் செருப்பை வீசினர். புலி படம் பொறித்த நாம் தமிழர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர்.  மத்திய அரசுக்கு எதிராகவும், கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக அங்கிருந்து வெளியேற்றி கைது செய்தனர்.  செருப்பு வீசியவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், போட்டி தொடர்ந்து நடைபெற்றது. செருப்பு வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்[4]. இவையெல்லாம் வீரச்செயல்களா இல்லையா என்று ஆராயும் முன்னர், போராட்டம் பெயரில் மாலை நேரத்தில் தெருக்களில் இடைஞ்சல் செய்தது, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்பவர்களை பாதித்தது முதலியன அதிகமாகவே பொது மக்களால் உணரப்பட்டது.

Ameer anti-MODI ranta

அமீர் “செக்யூலரிஸத்திற்குப் புறம்பாக” அடிப்படைவாத துலுக்கனாக பேசி வருவது: கூத்தாடிகள் எந்த அளவுக்கு வரம்புகளை மீறுகிறார்கள் என்பதற்கு, வகுப்புவாத, அடிப்படைவாத துலுக்கரின் பேச்சே ஆதாரமாக உள்ளது. “மத்திய அரசுதான் இறையாண்மைக்கு எதிரான தேசதுரோகி…….தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்,” என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார்[5]. இந்த அமீர், பலதடவை தான் ஒரு துலுக்கன் என்ற ரீதியில் பேசியிர்ந்தது கவனத்தில் கொள்ளத் தக்கது. பிறகு மழுப்பலாக, “மண்வெட்டி, கலப்பையும் ஆயுதமே, அறிவு ஆயுதமாகவும் இருக்கலாம்,” என்றும் அமீர் தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது[6]. மோடி-எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, நீட்-எதிர்ப்பு முகமூடிகளில், செக்யூலரிஸ வரம்புகளை மீறிய பேச்சுகள் அவரது முகத்தை வெளிக் காட்டியுள்ளது. அப்பேச்சுகள் வீடியோவாக இணைதளங்களில் காணக்கிடைக்கிறது. அதை உன்னிப்பாக கேட்கும் போது, மீரின் தராதரம் வெளிப்படுகிறது. ரஜினி எதிர்ப்பு விவகாரத்தில் கூட அது வெளிப்பட்டது. ரஜினி என்னமோ பிஜேபியின் ஆள், கைப்பொம்மை என்ற விதத்தில் பேசியது, காழ்ப்புணர்ச்சிகளை வெளிக்காடியதானது. மேலும், ஊடகங்கள் இத்தகைய பிரிவினைவாதிகளுக்கு, ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதும் புதிராக இருக்கிறது.

Anti-national leaders- IPL match

திடீரென்று உருவான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு  பேரவை: திரைப்பட இயக்குனர்கள் இணைந்து “தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு  பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். ஏன், எப்படி, எவ்வாறு திடீரென்று இவ்வமைப்பு உண்டானது என்று தெரியவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, மற்றவர்களுக்கு, இதில் உடன்பாடில்லை என்று தெரிகிறது. இந்த அமைப்பு குறித்து நடிகர்  சத்யராஜ், இயக்குநர்கள் பாரதி ராஜா, ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச் சான், அமீர்,  வெற்றிமாறன், வி.சேகர், ராம், சுப்பிரமணியம் சிவா, கவுதமன் ஆகியோர்  கூட்டாக  அளித்த பேட்டி வருமாறு[7]:  “………..காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை  மூடும் போராட்டம் நடத்தப்படும். தமிழ் இனத்துக்காகவும் காவிரி பிரச்சினைக்காகவும் ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. இரண்டு கட்சிகளுக்குமே தமிழர்கள் மீது  அக்கறை இல்லை,“ என்றனர்[8]. பாரதி ராஜா, அமீர், கௌதமன் மற்றவர் பேசியதை, கீழ் கண்ட வீடியோவில் காணலாம் / கேட்கலாம்[9]. அவர்களது பேச்சு, பக்குவமாக இல்லை, ஆனால், பிரிவினைவாதமாக [வெள்லைக்காரன் தான் இந்தியாவை உண்டக்கினான்], இனவெறித்தனமாக [இனபடுகொலை முதலிய வெறித்தனமான பேச்சுகள்], தேசவிரோதமாகத் தான் இருந்தது[10].

CSK fas beaten -Anti-national leaders- IPL match

எதிர்காலத்தை நோக்கி: 11-04-2018 அன்று இதனை எழுதி முடிக்கும் தருவாயில், வெளியிடப் பட்டுள்ள வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. மைதானத்தின் அருகே, சென்னை அணியின் டீ-ஷர்ட்டை அணிந்திருந்த சிறுவர்களை / இளைஞர்களை பிடித்து போராட்டக்காரர்கள் பலர் தாக்கிய காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இ-சர்ட்டை கழட்டி, திறந்த மேனியுடன் ஓட-ஓட விரட்டும் காட்சி படுகேவலமாக இருக்கிறது. தவிர, சிலர், வரிசையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்களை நோக்கி, டி-சர்ட்டை கழட்டடி என்று கைகாட்டி கத்துவது, அசிங்கத்தின் உச்சத்தைத் தொட்டதாகியது. காவலர்கள் கூட தாக்கப்பட்டுள்ளார்கள். தாடி வைத்த ஒருவன், ஒரு போலீஸை அடிப்பது திடுக்கிட வைக்கிறது. அரசியலில் ஆர்வம் கொண்டு எழுந்து வரும் இளைஞர்களை, திசைத் திருப்பி, உணர்ச்சிப் பூர்வமாக, அவர்களை உசுப்பி விட்டு, பிரிவினை என்ற நஞ்சை ஊட்டும் விதத்தில், இவர்கள் செயல்பட்டு வருவது தெரிகிறது. மக்களிடையே வெறுப்பையும், துவாசத்தையும், பிரிவினையையும் வளர்ப்பதை விட, தேச ஒற்றுமை சமுதாய அமைதி மற்றும் நேர்மறையான குணங்கள் முதலியவற்றை வளர்ப்பது நல்லது. ஏனெனில் இக்கால இளைஞர்கள், குறுகிய காலத்தில் உண்மையினை அறிந்து கொண்டு விடுவார்கள், அப்பொழுது, இவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்.

© வேதபிரகாஷ்

11-04-2018

CSK fas beaten -Anti-national leaders- IPL match-2

[1] தி.இந்து, ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சியினர் கைது, Published : 10 Apr 2018 21:32 IST; Updated : 10 Apr 2018 21:32 IST

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23495564.ece

[3] விகடன், பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..! உச்சகட்ட பதற்றத்தில் சேப்பாக்கம்,  Posted Date : 17:41 (10/04/2018) Last updated : 21:14 (10/04/2018).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/121796-protest-around-chepauk-stadium-on-cauvery-issue.html?artfrm=related_article

[5] தமிழ்.ஒன்.இந்தியா, காவிரி: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்ஆயுதம் எது என்பதை தீர்மானிப்பது எதிரிஅமீர் மீண்டும் உறுதி, Posted By: Mayura Akhilan Updated: Tuesday, April 10, 2018, 14:43 [IST].

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-need-take-the-weapon-if-necessary-says-director-ameer-316803.html

[7] விடுதலை, காவிரிப் பிரச்சினைக்காக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயார்! திரைப்பட இயக்குநர்கள் கூட்டாகப் பேட்டி, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 15:36.

[8] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/159884-2018-04-10-10-27-39.html

[9] தமிழ்.இந்து, ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்றாலும் போராடுவோம்: அமீர்,

Tamil The Hindu, Published on Apr 9, 2018.

[10] https://www.youtube.com/watch?v=ho9IIKfhbD8

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவு-எதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறை-பிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)

ஏப்ரல்11, 2018

திராவிடர்களின் கிரிக்கெட் ஆதரவுஎதிர்ப்பு, அரசியலாக்கப்படும் பிரச்சினைகள், வன்முறைபிரிவினைவாதம் வெளிப்படும் விதங்கள் (1)

Separate flag for states - IPL match

தனி மாநிலக் கொடிகளுடன் சித்தராமையாவும், செபாஸ்டியன் சீமானும்: காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. உண்மையில் உதிரி கட்சிகள் மற்றும் அரசியல் பலமற்ற தலைவர்கள் தாம் அதிகம் கலாட்டா செய்து வருகின்றனர். இந்தப் பிரச்னைகளில் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி, திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றக்கோரி வலியுறுத்தும் செவி சாய்க்காத ஐபிஎல் நிர்வாகத்திற்கு எதிராக 10-04-2018 அன்று மாலை தமிழ்நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது[1].  சித்தராமையா பாணியில், செபாஸ்டியன் சைமன் செயல்படுவது திகைப்பாக இருக்கிறது. அதாவது, கர்நாடகாவிற்கு தனிக்கொடி என்று சித்தராமையா அறிவித்துள்ள நிலையில், சைமனும், “தமிழ்நாட்டு கொடியுடன் சேப்பாக்கம் மைதானம் முற்றுகையிடப்படும்,” என்றது, சித்து-செபாஸ்டியன் கூட்டணி யாதாவது ரகசியமாக செயல்படுகிறதோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் இந்தியாவை இணைக்கிறது, தேசவிரோதிகளை வெளிப்படுத்துகிறது என்பதால், தமிழக பிரிவினைவாதிகள் இத்தகைய கலாட்டாக்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

Stalin in IPL match

திமுக CSKவுடன் நெருக்கமாக இருப்பதால், ஸ்டாலின்இந்நேரத்தில் திட்டம் போட்டு, “போராட” தூரத்தில் சென்று விட்டார்!: இந்நிலையில், ‘ காவிரி விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும்’ என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர், என்று ஊடகங்கள் கூறுவது வெறும் உபயோகம் இல்லாத வாதம், ஏனெனில், ஐபிஎல்லில் திமுகவுக்கு அதிகமாக வியாபார சம்பந்தங்கள் இருக்கின்றன. சீனிவாசன் முரசொலி மாறன் நெருக்கம் அறிந்ததே[2]. கருணாநிதி என்றுமே சீனிவாசனுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். அதனால் தான், ஸ்டாலின் அமைதியாக இருப்பதும், இந்த நேரத்தில் சென்னையை விட்டு விலகி இருப்பதுக் வெளிப்படுத்துகிறது.கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர், தோனி முதலிய வீரர்களை பாராட்டியது நினைவிருக்கலாம். இதெல்லாம், இந்த போராட்ட வீரர்களுக்கு [கூத்தாடிகளுக்கு] தெரியாதா என்ன?  கோடிகள் புரளும் சினிமா வியாபாரம் என்றால், கிரிக்கெட்டும் வியாபாரம் ஆகிவிட்டது, பல பரஸ்பர உறவுகள், நெருக்கங்கள்மற்றும் இனைப்புகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இரண்டுமே போதை போன்று இந்திய இளைஞர்களைக் கெடுக்கின்றன. ஆக ஒன்று மற்றொன்றை எதிர்ப்பது என்பது போலித் தனமானது! கூத்தாடிகள் கபட நாடகம் ஆடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நிச்சயமாக, எந்த அரசியல்வாதியும், இதனை எதிர்க்க மாட்டான்.

Velmurugan threatened with snake entering IPL pitch - 10-04-2018

.பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல பாம்புகள் உள்ளே வந்தால் நாங்கள் பொறுப்பல்ல….: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ராமர் படத்தை செருப்பால் அடித்த “பேராசிரியர்” ஜெயராமன் தலைமையில் நடந்த தமிழ்நாட்டின் நீர்உரிமைப் பாதுகாப்பு பொதுக், கூட்டத்தில், வேல்முருகன்[3], “……….சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், பாம்புகள் உள்ளே வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, ஹெலிகாப்டர் மறைக்கும் அளவுக்கு பெரிய கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்படும். தமிழக மக்களின் எதிர்ப்பை மோடிக்கு உணர்த்தப்படும்,” ஏன்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது[4]. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ”தமிழகத்தில் .பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது. இதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம். சென்னையில் உள்ள .பி.எல் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல , எனத் தெரிவித்திருந்தார்[5].  இத்தனை வக்கிரமாக ஒருவன் பேச முடியாது. இந்துவிரோத கோஷ்டிகள், மோடி-எதிர்ப்பு போர்வையில் சேர்ந்திருப்பதைத் தான் இது காட்டுகிறது. வழக்கு பதிவு செய்யப் பட்ட இந்துவிரோதி எப்படி கூட்டம் நடத்துவது, அதில், இப்படிபட்ட கிறுக்கர் கலந்து கொள்வது முதலியனவும் திகைப்பாக இருக்கிறது. இதனையடுத்து, ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

Protestors came in disguise - IPL match

கிரிக்கெட் ரசிகர்கள் போல போலித்தனமாக வந்தபோராளிகள்: அதன்படி 10-04-2018 அன்று காலை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்[6] என்று விகடன் வர்ணிக்கிறது. மைதானத்துக்குப் பூட்டுப்போட முயன்ற அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்[7]. “பூட்டுப் போட” என்பதே தமாஷாக இருக்கிறது. அத்தகைய குற்றத்திற்கே, இவர்களை சட்டப் பட்டி சிறையில் அடைக்கலாமே? பிறகு எப்படி உலா வந்து கொண்டிருக்கிறார்கள்? முன்னதாக, ஐ.பி.எல் போட்டியின்போது போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், மைதானத்தைச் சுற்றிலும் சுமார் 4,000 போலீஸார் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 100 ஆட்களை கட்டுப்படுத்த 4,000 போலீஸா தேவைப் படுகிறது? பிறகு லட்சக் கணக்கில் வீட்டிற்கு செல்பவர்கள் பாதிக்கப் படுகின்றனரே அவர்களது நிலை என்ன? இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. காலையிலேயே இத்தகைய ரகளை செயத பிறகு, போலீஸார், அப்பகுதியில் யாரும் கூடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால்,, கார்களில், வேன்களில் வந்து சேர்ந்தது, அவர்கள் அனுமதிக்கப் பட்டார்கள் என்றாகிறது. அதாவது, போலித் தனமாக, கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள்போல பனியன்கள் அணிந்து வந்தார்கள், பிரச்சினை செய்தார்கள்![9] பனியன், காலணிகளைக் கழட்டி ஏறிந்தார்கள், ஆனால், அவர்கள் கைது செய்யப் பட்டனர்[10].

© வேதபிரகாஷ்

11-04-2018

Udhyanidhi family in IPL match

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாட்டு கொடியுடன் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று மாலை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை!, Posted By: Mohan Prabhaharan Published: Tuesday, April 10, 2018, 15:06 [IST]

https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-party-leaders-cine-stars-siege-chepak-groun-316806.html

[2] N. Srinivasan,67,is known to be close to M. Karunanidhi and his nephew Murasoli Maran whose party,the DMK, is credited with allowing his business to grow by creating a favourable policy environment,besides backing him in the state cricket body elections. Until last season,Karunanidhi would be a constant feature at the Chepauk’s VIP box Because of his DMK connections,Srinivasan has rivals in the AIADMK camp. As president of the Tamil Nadu Golf Federation, he came under attack from J Jayalalithaa over the lease for a 77.70-acre golf course in Chennai. In 1996, when holder Cosmopolitan Club’s lease came up for an extension,the federation too petitioned then chief minister Karunanidhi. The lease was eventually granted to both the golf federation and the club. In 2002, when Jayalalithaa became chief minister,she alleged inside the assembly that the lease had been given because Srinivasan was a “benami for Murasoli Maran.  Whenever Srinivasan’s Chennai Super Kings played at home. A source in Tirunelveli says that whenever Karunanidhi visits the district,he stays at India Cements guesthouse. Srinivas’s lawyer P S Raman,who also represents the BCCI,was state advocate general during the DMK regime.

http://indianexpress.com/article/news-archive/web/in-cricket-or-business-n-srinivasan-used-to-having-his-way/

[3] ` விகடன், .பி.எல் போட்டியில் பாம்புகள் புகுந்தால் நாங்கள் பொறுப்பல்ல‘ – வேல்முருகன், Posted Date : 12:10 (10/04/2018) Last updated : 12:32 (10/04/2018).

[4] https://www.vikatan.com/news/tamilnadu/121742-velmurugan-warns-ipl.html

[5] விகடன், `.பி.எல் வீரர்களுக்கு எதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல!’- எச்சரிக்கும் வேல்முருகன், Posted Date : 12:33 (09/04/2018) Last updated : 12:38 (09/04/2018).

[6] https://www.vikatan.com/news/tamilnadu/121635-we-are-not-responsible-for-anything-happen-to-csk-players-says-velmurugan.html

[7] விகடன், பலத்த பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானம் முற்றுகை, Posted Date : 13:27 (10/04/2018) Last updated : 15:44 (10/04/2018)

[8] https://www.vikatan.com/news/tamilnadu/121757-members-of-tamizhaga-vazhvurimai-katchi-protest-oustide-chepauk-stadium.html

[9] புதியதலைமுறை, சேப்பாக்கம் மைதானத்தில் காலணி வீச்சு! ரசிகர்கள் போல் வந்த போராட்டக்காரர்கள், Web Team, Published : 10 Apr, 2018 08:46 pm

[10] http://www.puthiyathalaimurai.com/news/sports/43486-slippers-thrown-in-chennai-chepauk-stadium-between-ipl-match.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (2)!

ஜூன்5, 2016

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (2)!

New Hope Orphanage involved in church planting - baptism,

யார் இந்த பாஸ்டர் ஜியாஜ் பெர்னான்டிஸ்?: பாஸ்டர் ஜியாஜ் பெர்னான்டிஸ் [pastor George Fernandes, 37] பெங்களூரில் நியூ ஹோப் பார் சில்ரன் ஹார்பனேஜ் [New Hope for Children Orphanage] என்ற கிருத்துவ அனாதை இல்லத்தை 2001லிருந்து நடத்தி வருகின்றார். இவரது மனைவி ஜோதி. இத்தம்பதியர் இருவருமே இந்த கிருத்துவ ஊழியத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களை எல்லோருமே அப்பா-அம்மா என்றுதான் கூப்பிடுவார்களாம். அனாதை இல்லத்துக்குக் கூட விதவைகள் இல்லமும் இருக்கிறது. இவரது இணைதளத்தின் படி, இவர் பலவித கிருத்துவ ஊழியங்களில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களிலிலும் ஈடுபட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்[1]. எங்களது அனாதை இல்ல குழந்தைகளை சந்திக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு அதற்கான விவரங்களைக் கொடுத்துளார்[2].  ஒருவேளை ஹக்கெல் இப்படித்தான் வந்தாரோ என்னமோ?  “தத்தெடுப்பது” போன்ற விவகாரங்களிலும் ஈடுப்பட்டிருப்பது “அனாதை இல்ல குழந்தைகளை சந்திக்க விரும்புகிறீர்களா” என்ற அழைப்பு எடுத்துக் காட்டுகிறது. உண்மையில் அயல்நாட்டவர் “தத்தெடுத்து”க் கொள்வது என்றால், நிறைய பணம் அனுப்புவார்கள். வருடத்திற்கு வரும் போது, அக்குழந்தைகளுடன் சேர்ந்து ஜாலியாக இருப்பார்கள்.

New Hope Orphanage involved in church planting program102 சர்ச்சுகளை உருவாக்கிகட்டியிருக்கிறாராம்: சர்ச்சுகளை உருவாக்குவது எப்படி [Church plantimg] என்று இவர் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். சேராத இடங்களுக்கு எல்லாம் பைபிளை எடுத்துச் செல்வது எப்படி [how to reach Bible where unheard] என்று போதித்து 84 சர்ச் உற்பத்தி செய்பவர்களை தயார் செய்துள்ளாராம். அதனால் இதுவரை 102 சர்ச்சுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவாம்[3]. எங்கெல்லாம் எப்படி கட்டியிருக்கிறார் என்று சொல்லவில்லை. அப்படி என்றால், அதற்காக கோடிக் கணக்கில் பணம் செல்வாகியிருக்க வேண்டும். பிறகு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு அமெரிக்கக் கிருத்துவ மிஷினரியின் ஆதரவுடன் செய்து வருகிறார்[4]. ஆகையால் மதப்பிரச்சாரம், மதப்பரப்பு, மதமாற்றம் முதலியவை இவரது சேவையுடன் வெளிப்படையாக பின்னிப்பிணைந்துள்ளது. வெளிநாட்டவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொள்கிறார். பிறகு, பதிலுக்கு அவர்கள் ஏதாவது எதிர்பார்த்தால், இவர் செய்து கொடுப்பது, பரஸ்பரமாகத்தான் எடுத்துக் கொள்ளப் படும். அதிலும், ஏசுவின் பெயரில் அதத்தகைய பரஸ்பரங்கள் நடக்கும் போது, அவையெலாம், கர்த்தரால் ஆசிர்வதிக்கப் படுவதாலும், பரிசுத்த ஆவி பார்த்துக் கொண்டிருப்பதனாலும் புண்ணியமாகி விடும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆமென்!!

New Hope Orphanage involved in church planting program aided by US mission2013 முதல் 2016 வரை விசயம் தெரிந்து அமைதியாக இருந்தது ஏன்: இவ்வழக்கு, விசாரணை முதலியவை லண்டனில் நடந்து கொண்டிருப்பதால், எந்த விவரங்களும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. குற்றம் புரிந்தவனுக்கு எல்லாவிதமான சலுகைகள், விலக்குகள், பாதுகாப்புகள் முதலிய கொடுக்கப் படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவகளின் சார்பில் யார் நீதிமன்றங்களில் ஆஜராகிறார்கள், அவர்கள் என்ன வாதங்களை-ஆதாரங்களை வைக்கின்றனர் என்பதெல்லாம் தெரிவதில்லை. அவனுக்கு ஒத்துழைத்த இந்தியர்களும் மதம் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்கின்றனர். பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமியர், இளம் பையன்கள்-பெண்கள், குமரன்–கன்னிகளுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதெல்லாம் இழப்பீடு கொடுத்து சரிசெய்யும் இழப்புகளே இல்லை. வாழ்க்கையில் இழந்தது, இழந்ததுதான்.

Bhadrachalam children New Hope Orphanageபாதிக்கப்பட்டவர்கள், பலிகடாக்களுக்கு என்ன தீர்வு?: மனம்-உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளினின்று வெளிவர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. அவர்கள் அதே கிருத்துவ அனாதை இல்லங்களில், காப்பகங்களில் இருப்பதனால், என்னவாகும் என்ற தெளிவற்ற நிலையும் அச்சுருத்திக் கொண்டிருக்கிறது. மனோதத்துவரீதியில், அவர்கள் அங்கேயே இருந்தால், அது சிறைத்தண்டனை போலாகத்தான் இருக்கும். இதற்கு அவர்களால் (கிருத்துவ பாஸ்டர்கள் முதலியோர்) எந்த சிகிச்சையும் கொடுக்க முடியாது. மாறாக உண்மைகளை மறைக்கத் தான் பார்ப்பார்கள். அதுதான், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைப் பற்றிய செய்திகள் கூட இன்னும் வெளியே வரவில்லை. குழந்தைகளை காணவில்லை, நடவிடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பக்கம் நீதிமன்றங்கள் விவரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு பக்கம் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவது பற்றி எத்தகைய கொள்கையும் இல்லை என்பது வியப்பாக இட்ருக்கிறது.

New Hope Orphanage Ambur

Hucle tells the story

ஜூன் 2016ல் தண்டனை கொடுக்கப்பட்டது: இங்கிலாந்தில் ஆஷ்ஃபோர்ட், கென்ட் என்ற இடத்தில் வசிப்பவன். அவனை கைது செய்து சோதனை செய்தபோது, அவனது லேப்டாப்பில் 20,000க்கும் மேலான இளம் ஆண்-பெண் ஆபாசப் படங்கள் இருந்தன[5]. இதைவிட வேடிக்கை என்னவென்றால், அவனே எழுதிய “பிடோபைகளும், ஏழ்மையும்: குழந்தைகளை விரும்பும் வழிகாட்டி” [“Paedophiles and Poverty: Child Love Guide”] என்ற புத்தகமும் இருந்ததாம்[6]. அதுமட்டுமல்லாது, இளம் ஆண்-பெண்கள் எவ்வாறு செக்ஸ்-ரீதியில் துன்புருத்தப்பட்டார்கள் என்று ஒரு கணக்குப் புத்தகத்தில் விவரங்களை எழுதி வைத்திருந்ததையும் போலீஸார் கைப்பற்றினர்[7]. அதாவது, இவன் ஒரு குரூரமான காமக் கொடூரன் என்று தெரிகிறது. அயல்நாடுகளில் இத்தகைய வக்கிர பாலியல் குற்றவாளிகள் எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்பது ஆராய்ச்சிக்குரியது. ஓல்ட் பைலி, லண்டன் நீதிமன்றத்தில் வாத்அ-பிரதிவாதங்களுக்குப் பிறகு, இவனுக்கு 70 வருட சிறைத்தண்டனைக் கொடுக்கப்பட்டது. இவ்வனுடைய வழக்கறிஞர் அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும், அதற்காக வருத்தப்படுவதாலும், 20 ஆண்டுகள் குறைக்க வேண்டும் என்று வாதிட்டார்[8]. ஆனால், நீதிபதி மசியவில்லை.

© வேதபிரகாஷ்

05-06-2016

34DB162000000578-3622034-image-m-59_1464881794757

[1] http://www.orphanloveindia.org/2013/03/orphan-and-widow-ministry-in-india.html

[2] http://www.orphanloveindia.org/2013/03/sponsor-orphanage-child-india.html

[3] http://www.orphanloveindia.org/2013/03/orphan-and-widow-ministry-in-india.html

[4] https://secure.etransfer.com/EFT/inactive/index.cfm?d2org=BFM&d2tool=NewHopeChildrenOrphanage

[5] The Guardian,  Richard Huckle ‘deeply remorseful’ for child sex abuse, court told, Haroon Siddique, Friday 3 June 2016 13.36 BST.

[6] Huckle put together a 60-page manual, Paedophiles and Poverty: Child Love Guide, on how to select deprived victims and avoid detection, which was found encrypted on his laptop and which he planned to publish online. The laptop also contained a “Pedopoints” ledger, a game he devised to award himself different points for 15 different levels of depravity with children, and which he also wrote about on a paedophile website.

http://www.theguardian.com/world/2016/jun/03/richard-huckle-deeply-remorseful-for-child-abuse-crimes-court-told

[7] More than 20,000 obscene images of boys and girls were found in his laptop after he was arrested. A book he had authored called “Paedophiles and Poverty: Child Love Guide” was also found on his laptop. Also, a ledger in which he kept points for various levels of abuse inflicted on children was found on his laptop.

[8] http://www.theguardian.com/world/2016/jun/03/richard-huckle-deeply-remorseful-for-child-abuse-crimes-court-told

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (1)!

ஜூன்5, 2016

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (1)!

UK pedophile in Fernades bangalore orphanageகோவா, கேரளா என்று இப்பொழுது பெங்களூரு பிடோபைல்களின் நகரமாகிறதா?:  இந்தியா மறுபடி-மறுபடி குழந்தை (18 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியர்) பாலியலுக்கு தொடர்ந்து அயல்நாட்டு பிடோபைகளினால் தாக்கப்பட்டு வருகிறார்கள். “செக்ஸ்-டூரிஸம்” போர்வையில் கோவா, கேரளா என்று இப்பொழுது சென்னைக்கும் வந்து விட்டது என்று தெரிகிறது. ஏற்கெனவே அனைத்துலக பிடோபைல்கள் சென்னையில் கைதான விசயங்கள் தெரிந்ததே. வில் ஹியூம் என்பவன் இங்கேயே தண்டித்து சிறையில் இருக்கிறான். மற்றவர்கள் தத்தம் நாடுகளுக்கு கைதாகி கூட்டிச் செல்லப்பட்டு, அங்கங்கு விசாரித்து தண்டனை கொடுக்கப்படுகிறது. இப்பொழுது, இன்னொரு பிடோபைலின் அக்கிரமங்கள் வெளி வந்துள்ளன. அவன் சென்னை, ஆம்பூர், ஹூப்ளி, பெங்களூரு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பெங்களூரு ஐ.டி நகரமாகிய பிறகு, அயல்நாட்டவர்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளனர். இதனால், அவர்களது வசதிக்கு ஏற்ப மது-மாது வசதிகள் பப்-ரெஸ்ட்ராரென்ட்-கிளப் போன்ற முறைகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

Richard Huckle pictures for daniel sanderson

Richard Huckle pictures for daniel sanderson

Huckle Fernades e-mail correspondence.1

 

Huckle Fernades e-mail correspondence.2

பெங்களூர் கிருத்துவ அனாதை இல்லத்துடன் தொடர்பு கொண்ட ஆங்கில பிடோபைல்: ரிச்சர்ட் ஹக்கில் [Richard Huckle] என்ற இங்கிலாந்து நாட்டு பிரஜை, பெங்களூரில் உள்ள நியூ ஹோப் பார் சில்ரன் ஹார்பனேஜ் [New Hope for Children Orphanage] என்ற கிருத்துவ அனாதை இல்லத்திற்கு வந்துள்ள செய்தி உலக செய்திகளில் அடிப்படுகிறது[1]. இந்த அனாதை இல்லத்தின் பொறுப்பாளரான பாஸ்டர் ஜியாஜ் பெர்னான்டிஸ் [pastor George Fernandes, 37]க்கு இ-மெயில் மூலம் அவன் தொடர்பு கொண்டு வந்தான்[2]. தான் ஒரு புகைப்படக்காரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த அனாதைல்லத்திற்கு வர விரும்பினான்[3]. “உங்களது மகத்தான சேவைப் பற்றி பேஸ்புக் மூலம் அறிந்தேன். ஆண்டவர் உமக்கு எல்லாவற்றையும் கொடுப்பாராக” என்ற ரீதியில் புகழ்ந்துள்ளான். வீடியோ எப்படி எடுப்பது அதனை தொகுப்பது முதலியவற்றைப் பற்றி சொல்லிக் கொடுப்பதாகவும், உதவுவதாகவும் சொல்லிக் கொண்டு மலேசியா, கம்போடியா, இந்தியா முதலிய நாடுகளுக்கு வந்து தனது குழந்தை கற்பழிப்பு வேலைகளை செய்துள்ளான்[4].

34DB160100000578-3622034-Sick_Richard_Huckle_raped_in_orphanages_and_care_homes_in_Malaysதெற்காசிய நாடுகளில் அவன் செய்துள்ள செக்ஸ்குற்றங்கள்[5]: ரிச்சர்ட் ஹக்கில் 14 கற்பழிப்புகள், ஐந்து புகைப்பட உறவுமுறை [டிஜிடல் பெனிட்ரேஷன், digital penetration] மற்றும் 31 பாலியல் ரீதியிலான தாக்குதல் – வன்புணர்வுகள் [sexual assaults] முதலிய செக்ஸ்-குற்றங்களை புரிந்துள்ளான். ஆறு வயது குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை அந்த காமக் கொடூரன். டீன்-ஏஜில் இருக்கும் சிறுவர்-சிறுமியர் என்றால் சொல்லவே வேண்டாம். 2013ல் பெங்களூக்கு வந்து அந்த அனாதை இல்லத்தில் தங்கியபோது, குழந்தைகளுடன் பாலியல் ரீதியில் விளையாடி இருக்கிறான். இந்த காமக்களியாட்டங்களை 2006 முதல் 2014 ஆண்டுகளில் செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளான். இவையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், அவன், செய்துள்ளான் எனும்போது, திகைப்பாக இருக்கிறது. அந்த 18 வயதுக்கு கீழுள்ள இளம்பெண்கள் மற்றும் பையன்களின் கதி என்ன, அவர்களின் பாதிப்பு எவ்வாறு குணமடையும், சீராகும், சாதாரண வாழ்க்கைக்கு ஏற்றப்படி மாறிவிடுவார்கள் முதலியவை கேள்விக்குறிகளாக இருக்கின்றன.

Huckle 9 year campaign of abuse across SEA2005 முதல் 2016 வரை நடந்தது என்ன?[6]: அயல்நாட்டவரைப் பொறுத்த வரைக்கும், பிடோபைல் என்பது ஒரு வியாதி, வெறி என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்களைத் தண்டிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

2005 – மலேசியாவிற்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வந்து ஓராண்டு தங்கினான்.

2006 – இரண்டு வாரங்கள் கம்போடியாவில் தங்கியபோது, இரு சகோதரிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தான்.

2007 – மறுபடியும் கம்போடியாவுக்கு வந்து அதே குடும்பத்துடன் தங்கினான். கிராமத்தில் படிப்பு சொல்லிக் கொடுத்தான்.

2011 – மலேசியாவுக்குத் திரும்பி, கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் ஐ.டி படிக்க சேர்ந்து கொண்டான். புகைப்படத் தொழிலும் செய்து வந்தான்.

2013 – பேஸ்புக்கில் அனாதை இல்லங்கள் பற்றிய விவரங்களை அறிந்து பெங்களூர் மற்றும் ஆம்பூருக்கு வந்தான்.

2014 – ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து போலீஸார் மூலம், தேசிய குற்றவியல் ஏஜென்சிக்கு, இவனைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன.

டிசம்பர் 2014 – ஹக்கில் தனது பெற்றோரை கிருஸ்துமஸ் நேரத்தில் பார்ர்க்க வந்தபோது, காட்விக் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

பிப்ரவரி 2015 – 90க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவன் மீது சாற்றப்பட்டது.

ஜூன் 2016 – மூன்று நாள் சிறைவாசம் மற்றும் செய்தியாக வெளியிடுவதற்கான காலம் முடிந்தவுடன், இப்ப்பொழுது இவ்விவரங்கள் வெளியிடப் படுகின்றன.

9616109726_7dbfe20a0f_c.jpg

Richard Huckle, Britain’s worst ever paedophile Social media grabs for Rebecca Camber

அனாதை இல்லம் துவக்கவும் ஆலோசனை கூறி ஆவணவிளம்பரப் படத்தை எடுத்துக் கொடுத்தது[7]: சென்னைக்கு வந்து, அங்கிருந்தி வேலூர், ஆம்பூர்[8], பெங்களூர், ஹுஉப்ளி என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளான். ஹூப்ளியில் ஒரு பாஸ்டரை சந்தித்துள்ளான். அந்த பாஸ்டர் ஒரு அனாதை இல்லம் துவக்கவும் ஆலோசனை கூறியுள்ளான். எந்த ஒரு பாஸ்டரும் அப்படி உடனடியாக ஒப்புக் கொள்வாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆவண-விளம்பரப் படத்தை எடுத்துக் கொடுத்து, அவன் அதனை யு-டியூப்பிலும் போட்டுள்ளான்.  இதனால் அனாதை இல்லங்கள் மற்றும் இவனைப் போன்ற பிடோபைகளுக்குள்ள தொடர்புக்களைத் தான் இது வெளிப்படுத்துகிறது. உண்மையில் சேவை செய்பவர்கள் இத்தகைய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏற்க்கெனவே இந்தியா செக்ஸ்-டூரிஸம் மற்றும் பிடோபைகளின் தாக்குதலில் உள்ளது என்ற விசயம் அனைத்துல செய்தியாகி விட்டது. ஆகவே, ஹுப்ளி மற்றும் பெங்களூரு பாஸ்டர்கள் அவனுக்கு இடம் கொடுத்துள்ளனர் என்பது பரஸ்பர ஆதாயங்களுக்குத் தான் என்று தெரிகிறது. இப்பொழுது அவன் மாட்டிக் கொண்டு விட்டதால், இவர்கள் மறுக்கலாம் மற்றும் விசயத்தை தலைகீழாக்கி, மாற்ற முயற்சிக்கலாம். இபொழுதே இந்த இனாதை இல்லத்துக் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, ஜாக்கிரதையாக செயல்பர்டுகிறார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை அக்குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு, பாலிய ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முடிவுகள் வந்து விட்டால் என்ன செய்வார்கள். அந்த ஊட்டி பாதிரி வழக்கு போல மூடிவிடுவார்களா?

© வேதபிரகாஷ்

05-06-2016

[1] https://www.facebook.com/NewHopeOrphanage

[2] mattersindia.com, How UK pedophile accessed Indian kids’ home , Published on: 1:45 am, June 4, 2016 Story By: mattersindia.com.

http://mattersindia.com/2016/06/how-uk-pedophile-accessed-indian-kids-home/

[3] IBTimes, Prolific pedophile Richard Huckle had visited Bangalore orphanage in 2013, June 4, 2016 15:16 IST, By Asmita Sarkar.

[4] http://www.ibtimes.co.in/prolific-pedophile-richard-huckle-had-visited-bangalore-orphanage-2013-681366

[5] Mailonline, Britain’s worst paedophile to worm his way into an Indian kids’, by sanjay jha in bangalore, india and richard shears in kuala lumpur, malaysia, for mailonline, PUBLISHED: 11:46 GMT, 3 June 2016 | UPDATED: 20:56 GMT, 3 June 2016.

[6] Read more: http://www.dailymail.co.uk/news/article-3622034/I-want-visit-orphanage-meet-children-bring-camera-Chilling-emails-Britain-s-worst-paedo-wormed-way-India-kids-home.html#ixzz4AexkIM6n; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] http://www.dailymail.co.uk/news/article-3622034/I-want-visit-orphanage-meet-children-bring-camera-Chilling-emails-Britain-s-worst-paedo-wormed-way-India-kids-home.html

[8] Ambur is located in the state of Tamil Nadu.  One of the problems that Ambur faces is polluted ground water, which is not potable.  This causes the community’s inhabitants to suffer with many ailment like bronchitis and tuberculosis.  Rev. Victor invited Appa George to help his village children at Machumbut. HHI has established a transformation center which serves 25 children in providing food, medical care, education and the love of Christ.  This is helping us to reach parents, siblings, and community through children. http://www.orphanloveindia.org/2013/03/orphan-and-widow-ministry-in-india.html

கிலாபத்தும்-காந்தியும், சூபித்துவமும்-மோடியும், ஜெய்.ஹிந்தும்-பாரத்.மாதா.கி.ஜேயும் மற்றும் தீவிரவாத எதிர்ப்பும்-இஸ்லாம் எதிர்ப்பும்!

மார்ச்18, 2016

கிலாபத்தும்-காந்தியும், சூபித்துவமும்-மோடியும், ஜெய்.ஹிந்தும்-பாரத்.மாதா.கி.ஜேயும் மற்றும் தீவிரவாத எதிர்ப்பும்-இஸ்லாம் எதிர்ப்பும்!

சூபி-மோடி மாநாட்டில்முதலாவது உலக சூஃபி மாநாடு-2016: முதலாவது உலக சூஃபி மாநாடு, அகில இந்திய உலமா மற்றும் மஷாய்க் வாரியம் [ All India Ulama and Mashaikh Board (AIUMB)] என்ற அம்மைப்பின் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்து, சென்ற ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து AIUMB விடுத்துள்ள அறிக்கை[1]: “அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாம் மதத்தின் கொள்கைகளுக்கு பயங்கரவாத அமைப்புகள் தவறான விளக்கத்தை அளித்து வருகின்றன. இஸ்லாம் மதத்தின் நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் பயங்கரவாதம் தூண்டப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் பெருகி வரும் நிலையில், இஸ்லாம் மதத்தின் அடிப்படை நோக்கங்களையும், கொள்கைகளையும் உணர்த்துவதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். அந்த வகையில், இந்த சூஃபி மாநாட்டை நடத்த மஷாய்க் வாரியம் தீர்மானித்துள்ளது.  இந்தியாவில் சூஃபி கொள்கையானது பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருவதால், இந்த மாநாடு தில்லியில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடானது வரும் 17-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சூஃபி அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஆன்மிக மார்க்கமான சூஃபியிஸம் அன்பு, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது[2]. இந்திய சூபிஸம் இந்து மதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது, ஆனால், மேற்கத்தைய திரிபுவாதக்காரர்கள் இந்து மதம், கடவுளின் ஒருத்துவக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு, பக்தி மார்க்கத்திற்கு வழிவகுத்தது என்று கூறுவர்.

amir-khusrau-teaching-his-disciples-miniature-from-a-manuscript-of-majlis-al-ushshaq-by-husayn-bayqarahசூபி மாநாட்டில் மோடியின் பேச்சு: தலைநகர் டெல்லியில் உலக சூபி மாநாடு நடைபெறுகிறது. நேற்று துவங்கிய மாநாடு மார்ச்.17 முதல் வரும் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 20 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய பண்டிதர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். 17-03-2016 வியாழக்கிழமை அன்று மாலை டெல்லியில் முதல் உலக சூஃபி மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்[3]. ஆங்கிலத்தில் உரையாடிய அவரது பேச்சு அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் முறையில் உள்ளது. ஆனால்,, வழக்கம் போல, ஆங்கில ஊடகங்கள் தமக்கு எது முக்கியமாகத் தெரிந்ததோ, அதனை தலைப்பிட்டு செய்தியாக வெளியிட்டுள்ளன. மோடி உரையின் முக்கிய அம்சங்கள் “பல மதங்களை வளப்படுத்திய, அமைதி மற்றும் நம்பிகைகளின் பழம்பெரும் பூமிக்கு உங்களை வரவேற்கிறேன். சூபி மரபு பன்முகத் தன்மையும், கலாச்சாரங்களையும் கொண்டாடுகிறது[4]. புனித குர்ரான் மத நல்லிணக்கத்தை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இந்தியா மத நல்லிணக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா என்பது அனைத்து சிறு பான்மை இனத்தவர்களின் ஐக்கியமாகும். அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன. ஆனால் ஒன்று கூட வன்முறையை குறிக்கவில்லை[5]. அல்லாவின் முதல் இரண்டு பெயர்கள் பரிவையும் இரக்கத்தையும் குறிக்கிறது. இந்து, முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர், புத்தம், பார்சிகள், இறை நம்பிகை உடையவர்கள், அல்லாதவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த இந்தியாவின் பகுதி தான். தீவிரவாதம் நம்மை பிரிகிறது, நம்மை அழிக்கிறது. தீவிரவாத்திற்கு எதிரான நடவடிகைகள் எந்த ஒரு மதத்திற்கு எதிரானது அல்ல[6]. நாம் ஒரு புதிய நூற்றாண்டின் அரிதான, மனித வரலாறு காணாத மாற்றத்திற்கான காலத்தில் இருக்கிறோம். இந்த மாநாடு மிக முக்கியமானது. உலகை வன்முறை என்னும் இருள் நம்மை சூழும் போது நீங்கள் தான் நம்பிகை ஒளியாக இருக்கிறீர்கள்,” என்று மோடி குறிப்பிட்டார்[7]. ஆங்கிலத்தில் ஆற்றிய மோடியின் முழு பேச்சை இங்கே காணலாம்[8].

Sufi shrines-dargahs destroyed by the ISISதீவிரவாதப் பிரச்சினை உலக அளவில் இருந்தாலும், இந்தியாவில் அது அணுகப்படும்ம் முறை, போக்கு, ஆதரவு, எதிர்ப்பு முதலியன: ஒவைசி போன்ற தீவிரவாத-அடிப்படவாத முகமதியர்கள் பலவிதமாமாக ஆக்ரோஷத்துடம் பேசும் வேளையில், ஜே.என்.யூவை மையமாக வைத்துக் கொண்டு பிரிவினை கோஷங்களை வைத்து, சரித்திராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், கம்யூனிஸ்டுகள், செக்யூலரிஸ்டுகள் போன்றோரும் “உரிமைகள்” என்ற போர்வையில், தேச-விரோதத்தைப் பாராட்டும் வேளையில், இந்த மாநாட்டின் குறிக்கோளையும், மோடியின் பேச்சையும் கவனிக்க வேண்டும். “தீவிரவாதத்தை எதிர்ப்பது, மதத்தை எதிர்ப்பதாகாது,” என்பது மோடி சொல்லித்தான்[9], எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, இதனை ஒபாமா, பூடின் போன்ற உலகத் தலைவர்கள் கடந்த ஆண்டுகளாக தமது பேச்சுகளில் சொல்லி வருகிறார்கள். இருப்பினும், இந்திய ஊடகங்களில் சில, இதிற்கு முக்கியத்துவம், கொடுத்துள்ளபோது[10], இந்திய அளவில், இப்பிரச்சினை அணுகப்பட வேண்டியுள்ளது. ஏனெனில், மற்ற நாடுகளில் அந்நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக, மோடிக்கு எதிராகச் செய்யப்படும் பிரச்சாரம் போல செய்யப்படவில்லை. நாட்டுப் பிரச்சினை எனும் போது, ஒற்றுமையாகத்தான் பிரச்சினைகளை அணுகுகிறார்கள். ஆனால் இங்கேயோ, சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளை ஆதரிக்கும் போக்குத்தான் அறியப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்கிறோமே என்று கூட அவர்கள் வெட்கப்படுவதில்லை, மாறாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். டுவிட்டரில் அவர்களது ஆணவத்தின் உச்சமாக, நியாயப்படுத்தும் போக்கு, பிரச்சினைகளை தீர்ப்பதில் இல்லாமல், தூண்டிவிடுவதில் தான் இருக்கின்றன.

khilafat-movement-4-638கிலாபத்தும்-காந்தியும் மற்றும் சூபித்துவமும்-மோடியும்: கிலாபத் இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம், முகமதியர்களை தாஜா செய்து விடலாம், அவர்களின் ஆதரவைப் பெற்று விடலாம் என்று காந்தி, ஒரு பரிசோதனை செய்து, படு தோல்வியடைந்தார். “அலி சகோதர்களிடம்” அவரது யுக்தி பலிக்கவில்லை. இப்பொழுது, ஒரு வேளை, காந்தியைப் போன்று, மோடியும் சூபித்துவத்தை வைத்துக் கொண்டு, முகமதியர்களை கவரலாம் என்று நினைக்கிறார் போலும். ஆனால், சூபித்துவம் இந்தியாவில் போற்றப்பட்டு வந்தாலும், ஆசார இஸ்லாம் அதனைக் கடுமையாக எதிர்க்கிறது என்பதனைக் கவனிக்கலாம். Khilafat movement - Gandhi failedதர்காக்களை மையமாக வைத்து வளர்ந்த இடைக்கால இந்திய சூபித்துவம், இந்துமதத்தை காப்பியடித்து, இந்துக்களைக் கவர உருவாக்கியதாகும். இன்னும் சொல்லப்போனால், பெரும்பான்மையான தர்காக்கள், இந்து கோவில்களை இடித்தும், முந்தைய இந்து மகான்களின் சமாதிகளை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டு, அதே இடத்தில் அத்தகைய “இந்து மதம் போன்ற” நிகழ்ச்சிகள். சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் நடைப்பெற்று வருவதால், அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகிறது. மேலும், இந்துக்கள் மூலம் தான் அவர்களுக்கு பெருத்த வருவாயும் வந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்பற்று-தேசவிரோதம் பற்றி இந்தியர்கள் ஒருமித்தக் கருத்துகளை வெளியிடவில்லை. “ஜெய் ஹிந்த்” மற்றும் “பாரத் மாதா கி ஜேய்” எப்படி முகமதியர்களை ஆட்டிப் படைக்கிறதோ, அப்படித்தான் இந்திய ஊடகங்கள் இரட்டை வேடங்கள் போட்டு வருகின்றன.

© வேதபிரகாஷ்

18-03-2016

[1] தினமணி, தில்லியில் உலக சூஃபி மாநாடு:மோடி பங்கேற்பு, By  புது தில்லி, First Published : 02 March 2016 12:53 AM IST.

[2]http://www.dinamani.com/india/2016/03/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article3305467.ece

[3] மாலைமலர், சூஃபியிசம் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது: பிரதமர் மோடி, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 17, 9:54 PM IST.

[4] http://www.maalaimalar.com/2016/03/17215447/Sufism-Is-Celebration-Of-Diver.html

[5] “When we think of 99 names of Allah, none stands for force and violence. Allah is Rahman and Rahim,” Modi said.

CNN-IBN,  Of 99 names of Allah, none stands for violence: PM Modi at Sufi event, Posted on: 09:17 PM IST Mar 17, 2016, Updated on: 10:19 pm,Mar 17,2016 IST

http://www.ibnlive.com/news/india/of-99-names-of-allah-none-stands-for-violence-pm-modi-at-sufi-meet-1217628.html

[6] தமிழ்.ஓன்.இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்லமோடி, By: Karthikeyan Published: Friday, March 18, 2016, 2:27 [IST].

[7] http://tamil.oneindia.com/news/india/the-fight-against-terrorism-is-not-against-any-religion-mo-249227.html

[8] http://www.ndtv.com/india-news/full-text-of-pm-narendra-modis-speech-at-world-sufi-forum-1288303

[9] Indian Express, Fight against terrorism not against any religion: PM Modi at World Sufi Forum, By: Express Web Desk, New Delhi | Updated: March 17, 2016 10:18 pm

[10] http://indianexpress.com/article/india/india-news-india/modi-world-sufi-forum-islam-noor/

புளூ பிளிம் வழக்கு – ரூ.1.34 கோடி கொடுத்து தப்பித்துக் கொண்டது திருவாளர் சின்னப்பாதான் என்று தெரிய வந்துள்ளது – அவர் பதவி விலக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்!

மார்ச்16, 2016

புளூ பிளிம் வழக்குரூ.1.34 கோடி கொடுத்து தப்பித்துக் கொண்டது திருவாளர் சின்னப்பாதான் என்று தெரிய வந்துள்ளதுஅவர் பதவி விலக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்!

M. Chinnappa, Rector, Gunadala Matha shrineகத்தோலிக்கப் பாதிரி ரெவரென்ட் தூதுவர் எம். சின்னப்பா என்று தெரிய வந்துள்ளது: புளூ பிளிம் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட குணடல பாதிரியின் பெரைக் குறிப்பிடாமல் “தி இந்து”, “டைம்ஸ் ஆப் இந்தியா” போன்ற நாளிதழ்கள் மறைத்து வந்த வேளையில், விஜயவாடா போலீஸ் கமிஷனர், கௌதம் கவாங், ஊடகக்காரர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் “ரெவரென்ட் தூதுவர் எம். சின்னப்பா[1], ரெக்டர் மற்றும் பாரிஷ் பிரீஸ்ட் / மடாலய துறவி (பொறுப்பு), குணடல மேரி மாதா சர்ச், விஜயவாடா” என்று தெரிய வந்துள்ளது. மார்ச்.3, 2016 அன்று சின்னப்பா கொடுத்த புகாரின் மீது, 11 பேர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.  விசாரிக்கப் பிடிபட்டவர்களின் “பென்டி-ரைவ்”வை பரிசோதித்தபோது, சின்னப்பா ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் காணப்பட்டன. இது போன்ற புளூ பிளிம் உள்ளது, கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால், இதனை வெளியிடுவோம் என்று மிரட்டித்தான், அக்கும்பல் சின்னப்பாவிடமிருந்து ரூ.1.34 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. “சின்னப்பா தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை விற்று இந்த பணத்தைக் கொடுத்திருக்கிறார், சர்ச் பணம் இதில் சம்பந்தப்படவில்லை,” என்று கௌதம் கவாங் கூறியதாக, ஒரு கிருத்துவ ஊடகம் [ucanews.com] செய்தி வெளியிட்டுள்ளது[2]. ஆனால், “தி இந்து” வேறுவிதமாக செய்தி வெளியிட்டிருந்ததுடது பின் வருமாறு:

Gunadala church activities- who is the black sheepபாதிரி ஏற்கெனவே நிதி மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்: குணடலாவில் இருக்கும் ஒரு சர்ச்சின் அதிகாரம் செக்ஸ்-விவகாரத்தில் மட்டிக் கொண்ட பாதிரியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளது[3]. அப்பாதிரியைப் பற்றி விசாரித்து வரும் சர்ச் அதிகாரம், அவரது நடவடிக்கை மற்றும் வருமானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. சர்ச்சிற்கு மற்றும் ஏழைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் முறைதவறி உபயோகப்படுத்தியுள்ளதாக தெரிந்து கொண்டது[4]. போலீஸாரும், அந்த ஆபாச விடியோ மற்றும் சிடி பற்றி விசாரித்து வருகின்றனர். அது உண்மையிலேயே நடந்த சமாச்சாரமா- இல்லையா, அப்படியே இருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண் யார், அவள் அத்தகைய வீடியோவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டாள், யார் அந்த விடியோவை எடுத்தது, எங்கு-யார்-எப்படி எடுத்தார்கள் முதலிவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இதில், சில ஊடகக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களிடம் அத்தகைய விடீயோவின் நகல்கள் சிடிக்களில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களும், அதை டிவி-செனல்களில் ஒலி-ஒளிபரப்பாமல் இருக்க, அப்பாதிரியிடமிருந்து பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளன. இதற்குள் சர்ச் நிர்வாகம் அப்பதிரியை நீக்கி வேறு பாதிரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளது[5]. இவையெல்லாம் “தி இந்து” கொடுக்கும் செய்தியாகும். மேலும் ரூ.2.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதால், வேறு வழியின்றி போலீஸாரிடம் சென்று மார்ச்.3, 2016 அன்று புகார் கொடுத்துள்ளார். வழக்கறிஞரை வைத்து தனது நிலையை தெளிவுப் படுத்தியுள்ளார்[6]. ஆனால், ஊடகக்காரகளுக்கு முன் அவர் வரவில்லை, எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.

Father M. Chinnappa has been involved- Gundala Churc 13-03-2016பணியிலிருந்து விலக்கப்பட்ட சின்னப்பாவுக்கு மருத்துவனையில் சிகிச்சை: விசயம் வெளியே கசிய ஆரம்பித்து விட்டதால், பிஷப் அளவில் அழுத்தம் ஆரம்பித்து விட்டது. முதலில் பணம் கொடுத்துதான் சரிகட்ட பார்த்தனர். ஆனால், விவகாரம் எல்லை மீறி போகும் நிலை காணப்பட்டதால், சின்னப்பாவை கழட்டி விட தீர்மானம் செய்யப்பட்டது போலும். பாதிரி முவ்வல பிரசாத் [Father Muvvala Prasad] சர்ச் சார்பில் சொன்னதாவது[7], “பாதிரி சின்னப்பா தென்னிந்தியாவின் மிக்க வருமானம் கொண்ட கத்தோலிக்க சர்ச்சின் மடாலய குருவாக இருந்து வருகிறார். லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வயதான அவரின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் அதிகமாகியுள்ளன. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். மேலும் அவருக்கு மருத்துவ விடுப்பும் தேவைப்படுகிறது. இதனால், விஜயவாடா பிஷப் ஜோஜி கோவிந்து [Joji Govindu] சின்னப்பாவை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக இனி அவரது வேலையை இன்னொருவர் பார்த்துக் கொள்வார்”. பொதுவாக, கத்தோலிக்கச் சர்ச்சுகளில் வகையாக மாட்டிக் கொண்டவர்கள், இவ்வாறு தான் மருத்துவமனையில் அனுப்பட்டு, பதவில்யிலிருந்து நீக்கப்பட்டு, சில நாட்களில் / மாதங்களில் இற்ந்து விடுவர். “காலமானார்” என்ற செய்தி வரும் அல்லது மக்கள் மறந்து விடுவர்.

Father M. Chinnappa has been involved- Gundala Churc 13-03-2016.2சின்னப்பாவுக்கு ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தொடர்பு உள்ளதா?: “கால் மணி செக்ஸ் ராக்கெட்” / “கூப்பிட்டால் பணம் செக்ஸ் மோசடி” என்பது விஜவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அல்லோல-கல்லோலப்பட்டு வருகிறது. போர்ன்-விடியோக்கள், சிடிகள் முதலியவை புழக்கத்தில் உள்ளது. இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், ஒரு புறம் முழுவதுமாக அமுக்க வேண்டும் என்றும், இன்னொரு புறம் எதிர்-எதிராக உள்ள அரசியல்வாதிகளை பழி தீர்த்து கொள்ள இதனை உபயோகிக்கவும் விரும்புகின்றன்னர் என்று தெரிகிறது. தவிர ஊடகக்காரர்கள், வழக்கறிஞர்கள், ரியல் எஸ்டேட் புள்ளிகள் என்று எல்லோரும் சம்பந்தப்பட்டுள்ளனர். விஜயவாடா சீமாந்திராவின் தலைநகராக உருவெடுத்து வருவதால், விஜவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகமாக உயர்ந்து வருகிறது. இதை வைத்துக் கொண்டு, நிலத்தை வாங்கி விற்று, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சிகளும் நடந்து வருகின்றது. இங்கு சின்னப்பா, “சஞ்சீவினி மாக்ஸ் சொசைட்டியில்” முதலீடு செய்டுள்ளதாக [vijayawada pandakalavareddulo sanjeevini max society lo pettupadi] ஆந்திர டிவி-செனல் கூறுகின்றது[8]. இதைப் பற்றி சர்ச் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

Vijayawada Bishop Govindu Joji and Fr Chinnappaபல குற்றங்கள், பலதரப்பட்டவர்கள் சம்பந்தப்படுவதால் பூதாகாரம் எடுக்கும் பிரச்சினை: கடன் கொடுத்தல், “புரோநோட்” வாங்கிக் கொள்ளுதல், பணம் கொடுக்காவிட்டால் நிலத்தை அபகரித்துக் கொள்ளுதல், பெண்ணாக இருந்தால், “ராத்திரிக்கு படுக்க வா” என்று சொல்லி அழைத்தல், அவ்வாறு வரும் போது அப்பெண்களை பெரிய புள்ளிகளுக்கு சப்ளை செய்தல், அந்நிலைகளில் விடியோ எடுத்தல், மறுபடியும் அதை வைத்துக் கொண்டு மிரட்டுதல், சிலவற்றை புளூ பிளிம் சிடி போட்டு விற்றல் என்று அக்கும்பல் தொடர்ச்சியாக வியாபாரம் செய்து வருகிறது. இதைப் பற்றிய செய்திகள் அதிகமாகவே வந்துள்ள்ன. இதனால், இதில் பலதரபட்டவர்கள் சம்பந்தப்படுகின்றனர். அந்நிலையில், ஒரு கத்தோலிக்கப் பாதிரி ஏன் ஈடுபடுகிறார் என்பது தான் புதிராக உள்ளது. ஒருவேளை வாடிகன் பாதிரிகளே, அத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ள்தால், அவர்களை போல தாங்களும் பணம் சம்பாதிக்கலாம் என்று, இந்திய பாதிரிகளும் இறங்கி விட்டார்கள் போலும்!

N Ram with Jennifer Arul etc at CBCI Jan.2004தி இந்துவின்கத்தோலிக்க சார்பு செய்திகள் வெளியீடு முதலியவை ஏன்?: நரசிம்மன் ராம் என்கின்ற என். ராம், “தி இந்துவை” விட்டு விலகினாலும், அதில் தனது அதிகாரத்தைச் செல்லுத்தி வருகிறார் என்று தெரிகிறது. ஆனால், மார்க்சீய ஆதரவோடு, கத்தோலிக்க ஆதரவும் ஏன் அதிகமாகி வருகிறது என்பது மற்றவர்களுக்குப் புதிராக இருந்தாலும், அவர் மிரியம் சாண்டி என்ற “மெம்மன்-மாப்பிள்ளை” குழுமத்தைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவ்வாறு மாறியுள்ளார் என்று தெரிகிறது. “தி இந்து” பல ஆண்டுகளாக, சரித்திர ஆதாரமில்லாத “தாமஸ் கட்டுக்கதையை” வலிய பரப்பி வருகிறது. இத்திருமணத்திற்குப் பிறகு, ராம் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்துள்ளார்[9]. குறிப்பாக சின்னப்பா விசயத்தில், அவரைப் புகழ்ந்து பல செய்திகள் “தி இந்துவில்” வெளியாகி உள்ளது. இது இப்பொழுதும் “கூகுள் செர்ச்” மூலம் கண்டுகொள்ளலாம். இவையல்லாம், நிச்சயமாக, செக்யூலரிஸ வேடம் போடும் “தி இந்துவுக்கு” உருத்தலாக இருக்கிறதுசிப்பொழுது கூட சாமுவேல் ஆரோன் என்கின்ற செக்ஸ்-பாஸ்டர் கைதானதை, ஏதோ சாதாரணமாக, சிறியதாக செய்தியை வெளியிட்டுள்ளது[10].

AG church Samuel Aron - The Hindu way of reporting 16-03-2016© வேதபிரகாஷ்

16-03-2016

[1] Rev.Msgr.M. Chinnappa, Rector & Parish Priest, Gunadala Matha Shrine, Gunadala, Vijayawada – 520004. Ph: 0866-2450244, 2451934; Cell: 9849129069; For Prayers and Counselling Contact: Rev. Sister Josphine D. MSI, Ph: 0866 – 2540309; Cell: 09346502830.

[2] “The priest sold his family property to pay the money. No money form the shrine is involved,” Sawang added…………… city police commissioner Gautam Sawang told ucanews.com March 14, 2016.

 http://www.ucanews.com/news/indian-police-investigate-blackmail-of-priest/75490

[3] The management of a church at Gunadala here, which landed in a major controversy following charges of sexual misconduct of a priest, reportedly began inquiry into the episode. ……The priest is understood to have told the police that he paid more than Rs. 1 crore to the gang. He alleged the extortionists, who befriended him, morphed his image in a pornographic film and collected money from him……. However, the church management is inquiring into the behaviour of the religious head and his source of income. It was alleged that a portion of the funds allocated to the shrine and for the poor were misused by him.

The Hindu, Priest, blackmailed by gang, paid hefty amount, says CP, by Rajulapudi srinivas, Vijayawada, March.14, 2016; Updated: March 14, 2016 05:46 IST.

[4] http://www.thehindu.com/news/cities/Vijayawada/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp/article8351138.ece

[5] http://www.nyoooz.com/vijayawada/389661/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp

[6] http://www.aplatestnews.com/usnewsvideo.php?idx=gang-arrested-in-vijayawada-for-blackmailing-church-father-11-03-2016-2016-03-10&searchtxt=church&vidtype=2

[7] The Catholic shrine that Father Chinnappa is rector of is one of the richest in southern India and attracts millions of pilgrims every year, said diocesan spokesperson Father Muvvala Prasad. Father Chinnappa was not available for comment as he was hospitalized for high blood pressure and blood sugar levels. Father Prasad said the developments “have put severe pressure on the aged priest.” Father Prasad said Bishop Joji Govindu of Vijayawada has freed Father Chinnappa of his responsibilities at the shrine since “he now needs medical leave.”

http://www.ucanews.com/news/indian-police-investigate-blackmail-of-priest/75490

[8] http://www.aplatestnews.com/usnewsvideo.php?idx=3-news-reporters-involvement-suspected-in-church-father-blackmailing-case-2016-03-12&searchtxt=church&vidtype=2

[9] The 26th biennial general body meeting of the Catholic Bishops Conference of India (CBCI) that began at the Marymatha Major Seminary at Mulayam on January.7, 2004. The CBCI is the apex body of the Catholic hierarchy in India, comprising the three rites of Syro-Malabar, Syro- Malankara and Latin. It has taken up “Church and Social Communications” as the theme of this General Assembly, which will continue till January 14, 2004. The Apostolic Nuncio, Archbishop Pedro Lopez Quintana, the Secretary General of the CBCI, Bishop Percival J. Fernandez, the vice president of CBCI, Archbishop Vincent Concessao, and the Archbishop of Thrissur, Mar Jacob Thumkuzhy, were among those who spoke. Media personalities, including the Editor-in-Chief of The Hindu, N. Ram, the Chief of Bureau of NDTV in Chennai, Jennifer Arul, and the General Editor of the Mangalam group of publications, K.M. Roy, are among those who are participating in closed-door sessions at the CBCI event.

http://www.hindunet.org/hvk/articles/0304/1.html; http://www.thehindu.com/2004/01/08/stories/2004010806501200.htm

[10] Samuel Aroan (40), who had been the priest at Shekinah AG Church in Kuppampalayam on Tiruchi Main Road for the past 15 years, was held on charges of rape and sexual harassment of a housemaid on Tuesday. It is said that he sexually abused many woman who came to the church. – Staff Reporter

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-arrested/article8358735.ece

மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]

மார்ச்15, 2016

மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும்செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]

15 வயது பெண் பலரால் கற்பழிக்கப்பட்டாள் - சர்ச் அருகில் 2015

மேரி மாதா சர்ச்சைச் சுற்றியுள்ள இடங்களில் கற்பழிப்பு, செக்ஸ் விவகாரங்கள் நடப்பது ஏன்?: குணடாலாவைச் சுற்றியுள்ள இடங்களில் செக்ஸ்-விவகாரங்கள் பல நடைப்பெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு புண்ணிய ஸ்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வாறு நடக்கலாமா என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும். கடந்த ஜூலை 2015ல், குணடாலாவில் பெத்லஹேம் காலனியில், ஒரு பெண் ஐந்து நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[1]. ஒரு 15 வயது பெண் தன்னுடைய காதலுடன், மேரி மாதா சர்ச்சிற்கு போகும் போது, அவனும் அவனது கூட்டாளிகள் நால்வரும் சேர்ந்து, பெத்லஹேம் காலனியில் உள்ள ஒரு அறைக்கு இழுத்துச் சென்று, இரண்டு நாட்களாக கற்பழித்துள்ளனர். அதாவது, காதலிப்பதைப் போல ஏமாற்றி அவளை சீரழித்திருக்கிறான். அந்த காதலன் ஒரு மொபைல் போன் ரிப்பேர் செய்யும் கடையில் வேலைப் பார்த்து வருகிறான். அவனும் அவனது இரு கூட்டாளிகளும் பிடிபட்டனர், மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[2]. இரண்டு நாட்களாக காணவில்லை என்ற நிலையில் விஜயவாடா முனிசபெல் கார்ப்புரேஷனில் பெருக்கும் வேலையில் உள்ள அப்பெண்ணின் தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இரண்டு நாட்களில் அவர்கள் படங்கள் எடுத்தனரா இல்லையா என்பதனை குறிப்பிடவில்லை. ஏனெனில், விஜயவாடாவில் புழங்கும் ஆபாச வீடியோக்களுக்கு ஆதாரம் தேவையாக உள்ளது.

Bomga Suresh sexual harassment AP

பொங்கா சுரேஷ் என்ற பாதிரியின் லீலைகள்: பொங்கா சுரேஷ், ஒரு “பாரிஷ் ப்ரீஸ்ட்” அதாவது “மடாலய சாமியார்” என்று குறிப்பிட்டப்படுகிறார். கிருஷ்ணா ஜில்லாவில் இர்க்கும் ஒரு சர்ச் பாதிரியாம். இவர் ஒரு பெண்ணை தொடர்ந்து பாலியல் தொல்லைக்குட்படுத்தி வந்தார். கற்பமுற்றதால், கல்யாணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார். ஆனால், சர்ச்சின் மானம் கருதி முடியாது என்றார். அப்பெண் பிஷப்பிடம் கூட முறையிட்டிருக்கிறார், ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஒரு நிலையில் அப்பெண் தான் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்றாள். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. கத்தோலிக்க மதத்திற்கு எந்த இழுக்கும் வரக்கூடாது, அதனால், இவ்விவகாரத்தை முடித்து விட வேண்டும் என்ற வெறித்தனம் தான் அவர்களிடம் வெளிப்படுகிறது. “6-டிவி” என்ற செனலின் வீடியோ இவ்விவரங்களைக் கொடுக்கிறது. அந்த பாதிக்கப்பட்ட பெண்ணே எல்லா விவரங்களையும் கூறுகிறார்[3]. அப்பெண்ணின் கதி என்ன, குழந்தைப் பெற்றுக் கொண்டாளா இல்லையா என்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

Bomga Suresh sexual harassment AP.2தேசிய இளைஞர் கிருத்துவ மாநாட்டில் ஆபாசபடம் / போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது (அக்டோபர் 23-25, 2012): ஹைதராபாதில், “அசெம்பிளி ஆப் காட்” என்ற சர்ச்சின் சார்பில், அக்டோபர் 23-25, 2012 தேதிகளில், தேசிய இளைஞர் கிருத்துவ மாநாடு நடந்தபோது, ஆபாசபடம் / போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது[4]. டுயூக் ஜெயராஜ் என்ற பாதிரி, அதைப் பற்றிய மோசமான விளைவுகளை எடுத்துக் காட்டினார். இருப்பினும், “நான் அதனை ஏன் பார்க்கிறேன் என்றால், திருமணத்திற்கு பிறகு, எப்படி அம்முறைகளை உபயோகப்படுத்தலாம் என்பதனை அறிந்து கொள்ளவே பார்க்கிறேன்”, என்று சொல்வதையும் சுட்டிக் காட்டினார். பொதுவாக கிருத்துவ சாமியார்கள் பிரம்மச்சாரிகளாக, கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலையுள்ளது. அப்படியிருக்கும் போது, பாஸ்டர்கள், பாதிரிகள், இவற்றையெல்லாம் அலசுவது வியப்பாக இருக்கிறது. இதனை “நெகட்டிவ் சஜஸ்ஸன்” [Negative suggestion] முறையில் சொல்வதாக எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விளக்கி விட்டு, இதனை செய்யாதே என்று சொல்லக் கூடிய விசயமா இது என்பது நோக்கத்தக்கது. இந்திய சர்ச்சுகளில் கடந்த 40 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான பாஸ்டர்கள், பாதிரிகள், போதகர்கள், ஏன் பிஷப்புகல் கூட பாலியல் சம்பந்தப்பட்ட கொலைல் கொள்ளை, செக்ஸ், கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், சிறைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அத்தைய நிலையில், இதைப்பற்றிய வாத-விவாதங்கள் ஏன் என்பதனை அவர்கள் தாம் விளக்க வேண்டும்.

Hyderabad Youth fest 2012 Octoberஊடகங்களின் பாரபட்ச முறையிலான அணுகுமுறை, செய்தி வெளியீடு முதலியன[5]: மதத்தலைவர்கள், மடாலய குருக்கள், செமினரி பாதிரிகள், என பலர் இந்தியா முழுவதும், பல மாவட்டங்களில் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை ஊடகங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன. இப்பொழுது, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களைத் தவிர, பெரிய-பெரிய பத்திரிக்கைக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளகளில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், அவை பாரபட்சம், ஒருதலப்பட்சம், குறிப்பிட்ட மதங்களுக்கு ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலைகளில் தான் உள்ளன. குறிப்பாக மார்ச் 10-14 20216 தேதிகளில் இந்தியாவில் அத்தகைய மற்றும் நல்ல நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. ஆனால், அவை திரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 11-23 தேதிகளில் “உலக கலாச்சார விழா” யமுனை ஆற்றங்கரையில் நடந்த போது, பிரபு சாவ்லா, சேகர் குப்தா, பர்கா தத், சித்தார்த் வரதராஜன், சபா நக்வி, ராஜ்தீப் சர்தேஸாய், முதலியோர் அதனை மோசமாக விவரித்தனர், விமர்சித்தனர், குறைகூறினர். ஆனால், விஜயவாடா போர்னோகிராபி பற்றி கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்த்ல், நித்தியானந்தா கோவில்களுக்குச் சென்றது அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பழைய விவாகரங்களைக் குறிப்பிட்டு கோவிலுக்குச் சென்றார், என்று விவரித்தன. ஆனால், கற்பழிப்பு வழக்கில் உலகப் புகழ் பெற்ற ஜோசப் பழனிவேல் ஜெயபால், மறுபடியும் பணியில் அமர்த்தப்பட்டதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை[6]. இத்தகைய போக்கை செக்யூலரிஸம் என்பதா, செலக்டிவ் அம்னிசியா [குறிப்பிட்ட விசயங்களை மற்றும் மற்ந்து விடுவது] என்று கொள்வதா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

15-03-2016

Vijayawada porn - involving politicians, land mafia and loan takers[1] The times of India, Minor girl in Vijaywada sexually abused; 3 held, TNN | Jul 19, 2015, 02.34 PM IST.

[2] http://timesofindia.indiatimes.com/city/vijayawada/Minor-girl-in-Vijaywada-sexually-abused-3-held/articleshow/48132614.cms

[3]  http://yttoons.com/watch/KQCBnGpCR0w/sexual-harassment-by-church-father-6tv

[4]  http://g-4mission.blogspot.in/2012_11_01_archive.html

[5] https://vedaprakash.wordpress.com/2016/03/14/why-the-priest-of-gunadala-mary-matha-church-is-involved-in-sexploitation-and-it-is-reported-selectively/

[6]  http://mattersindia.com/2016/02/queens-woman-shocked-vatican-reinstates-priest-who-raped-her/

ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!

மார்ச்15, 2016

ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும்செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!

நித்தியானந்தா திருமலை தரிசனம், தினமலர், 10-03-2016நித்தமும் ஊடகக்காரர்களை நெருடும் நித்தியானந்தா (2010-2016): 2010ல், +2 தேர்வுகள் சமயத்தில் சன்-குழுமம் டிவி-செனல்கள், நித்தியானந்தாவின் செக்ஸ் வீடியோக்களை 24 x 7 ரீதியில் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தன. கோபாலன் தனது “நக்கீரனில்” தனக்கேயுரிய பாணியில் கொக்கோக புலன்விசாரணை செய்து, பாலியல் செய்திகளை போட்டு, செக்ஸ்-வீடியோக்களை இணைதளத்தில் பரப்பி வந்தார். இந்த இரண்டு வியாபார நிருவனங்களுக்கும் விளம்பரம் அதிகமாகவே கிடைத்தன. நக்கீரன் இதழ் ஒன்று ரூ.100/- வரை விற்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விழித்துக் கொண்ட நித்தியானந்தா, முதலில் “நான் அவனில்லை” என்று ஆரம்பித்து, “நான் ஆணே இல்லை” வரை வாதித்துப் பார்த்தார். எப்படி லெனின் முதல் சன்-குழுமம் வரை பணம் கேட்டு தம்மை மிரட்டியதாகவும், கொடுக்காதல்லால் தான் அவ்வாறு விடியோ, படம், செய்திகள் என்று போட்டு பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரை ஊடகங்கள் விடவில்லை. இன்று வரை, எதிர்மறையாகத்தான் விவரித்து வருகின்றன.  ஆனால், விஜயவாடாவில், ஒரு கத்தோலிக்க பாதிரி சம்பந்தப்பட்டது, சிடி வெளியானது முதலியவற்றை தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

Duke Jeyaraj talks about porn - Hyderabad Youth fest 2012 Octoberகிருத்துவமுகமதிய சாமியார்களின் செக்ஸ் லீலைகள் மறைக்கப்படுகின்றன: இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கிருத்துவர்கள் அதிகமாகவும், முகமதியர்கள் அவர்களை விட கொஞ்சம் குறைவாகவும் அத்தகைய செக்ஸ்-லீலைகளில் ஈடுபட்டு வந்தாலும், பற்பல் பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள், காஜிக்கள், மௌலிகள், சாமியார்கள் மாட்டிக் கொண்டாலும், விவகாரத்தை செய்திகள் மட்டும் போட்டு, அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக ஊடகக்காரர்கள் கொண்டுள்ளனர். அதன்படியே, அப்படியே அமுக்கி வாசித்து விட்டு விட்டனர். நிறைய விவகாரங்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால், நித்தியானந்தாவை அதே ஊடகங்கள் விடுவதில்லை, விடவில்லை. இப்பொழுது 10-03-2016 மற்றும் 11-03-2016 தேதிகளில் காளஸ்தி மற்றும் திருமலை கோவிலுக்குச் சென்ற வரை, துரத்திச் சென்று செய்திகள், படங்கள், விடீயோக்கள் என்று போட்டு கலக்கி வருகின்றன.  “நித்தியானந்தா ரஞ்சிதா உடன் சென்ற வீடியோ” என்று தலைப்பிட்டு செய்திகளைப் போட்டு வருகின்றன. [1]. “செக்ஸ் விவகாரத்தில் மாட்டிய நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் புதிய கோலத்தில் திருமலைக்குச் செல்கும் வீடியோவைப் பாருங்கள்”, என்று தலைப்பிட்டு “ஜீ-டிவி” செய்தி வெளியிட்டுள்ளது[2]. அதாவது தலைப்பிலேயே அத்தனை குசும்புத்தனம், தூஷண காழ்ப்பு முதலியவை தொக்கி நிற்கின்றன[3]. அதாவது, ஏதோ கோவிலுக்குப் போக தகுதியற்ரவர்கள் எல்லாம் போகிறார்கள் என்ற தோரணியில் விரசமாக, விகல்பமாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Mary Matha Church Gunadala, Vijayawada, where a priest is involvedபோர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட விஜயவாடாகுணடாலா பாதிரியார் (மார்ச்.10-14, 2016): அதே நேரத்தில், அதே தேதிகளில் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச்சில் வேலை பார்க்கும் ஒரு பாதிரி போர்னோகிராபி சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்ட செய்திகள், ஆங்கில ஊடகங்களில் இலேசாக கொஞ்சம்-கொஞ்சமாக வந்துள்ளன. அதிலும் அவை அளந்தே செய்திகளைக் கொடுத்துள்ளன. வழக்கம் போல “தி இந்து” அந்த சர்ச்சின் பெயர், இடம், மாட்டிக் கொண்ட கத்தோலிக்க பாதிரியின் பெயர் முதலிவயவற்றைக் குறிப்பிடவில்லை. ஆனால், “டைம்ஸ் ஆப் இந்தியா” மட்டும் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச் என்று வெளியிட்டுள்ளது. இதில் பத்திரிக்கையாளர் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 11 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். மார்ச். 10, 11 மற்றும் 12 தேதிகளில் இவர்கள் பிடிபட்டனர். அதாவது, நித்தியானந்தா கோவில்களுக்கு சென்ற அதே தேதிகளில் இந்நிகழ்ச்சிகள் ஆந்திராவில் நடந்துள்ளன.  ஆனால், தமிழ் ஊடகங்கள் நித்தியானந்தாவைத் தான் பிடித்துக் கொண்டனவே தவிர அந்த கத்தொலிக்க  செக்ஸ் சாமியாரை விட்டுவிட்டன. அவர்களுக்கு விஜயவாடா தூரம், திருப்பதி அருகில் போல. அவருக்கு தொடர்பில்லை என்றால், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Mary Matha Church Gunadala, Vijayawada, where a priest is involved in sex-pornபோர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட பாதிரியார் பணம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டது (மார்ச்.10-14, 2016): அப்பாதிரி செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்ட பிறகு, குணடாலா சர்ச் அதிகாரம் அவரது செக்ஸ் விவகாரங்களை விசாரிக்க ஆரம்பித்தது[4]. ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணாம் கொடுத்தது, அவரது மீதான சந்தேகம் வலுவானது. சம்பந்தப்பட்ட பாதிரி பணம் கொடுத்து மாளாததால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனால், 12-03-2016 சனிக்கிழமை அன்று போலீஸார் விசாரித்து 11 பேரைப் பிடித்தனர்[5]. விஜயவாடா போலீஸ் கமிஷனர், டி. கௌதம் சவாங், அந்த கும்பல், இந்த பாதிரியிடம் மிரட்டிப் பணம் பறித்தது உண்மைதான். பாதிரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாசப் படம் அவர்களில் இருப்பதாகவும், அதனை வெளியிடத் தடுப்பதற்குத்தான் பணம் கொடுத்து மிரட்டியுள்ளதாகவும், தாங்கள் எல்லா கோணங்களிலும் இவ்வழக்கை விசாரித்து வருவதாகவும் கூறினார்[6]. போர்னோகிராபி பணம் எடுத்த கும்பல், இவரை மிரட்டி பணம் கேட்டு வந்தது. பாதிரியாரும், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணம் கொடுத்து, தப்பித்துக் கொண்டுள்ளார். அதாவது, அந்த சிடியை வெளியிடக்கூடாது என்றால், பணம் கேட்டதால், பணம் கொடுத்து தனது செக்ஸ்-விவகாரத்தைதி மறைக்க முய்ன்றுள்ளார்.

விஜயவாடா போர்னோகிராபி மார்ச்.2016, 11 பேர் கைதுபாதிரி ஏற்கெனவே நிதி மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்: அப்பாதிரியைப் பற்றி விசாரித்து வரும் சர்ச் அதிகாரம், அவரது நடவடிக்கை மற்றும் வருமானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. சர்ச்சிற்கு மற்றும் ஏழைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் முறைதவறி உபயோகப்படுத்தியுள்ளதாக  தெரிந்து கொண்டது[7]. போலீஸாரும், அந்த ஆபாச விடியோ மற்றும் சிடி பற்றி விசாரித்து வருகின்றனர். அது உண்மையிலேயே நடந்த சமாச்சாரமா- இல்லையா, அப்படியே இருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண் யார், அவள் அத்தகைய வீடியோவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டாள், யார் அந்த விடியோவை எடுத்தது, எங்கு-யார்-எப்படி எடுத்தார்கள் முதலிவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இதில், சில ஊடகக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களிடம் அத்தகைய விடீயோவின் நகல்கள் சிடிக்களில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களும், அதை டிவி-செனல்களில் ஒலி-ஒளிபரப்பாமல் இருக்க, அப்பாதிரியிடமிருந்து பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளன. இதற்குள் சர்ச் நிர்வாகம் அப்பதிரியை நீக்கி வேறு பாதிரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளது[8].

Vijayawada porn - involving politicians, land mafia and others ‘கால் மணி செக்ஸ் ராக்கெட்மோசடிக்கும் இப்பாதிரிக்கும் தொடர்பு உள்ளதா?: ஆந்திர மாநிலத்தில் ‘கால் மணி’ விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. பணத் திண்டாட்டத்தில் இருப்பவர்கள், போன் செய்தால்போதும், வீட்டிற்கு வந்து பணம் அளிக்கப்படுகிறது. கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி வசூல் செய்ததோடு, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மனைவி உள்பட வீட்டில் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், போலீஸ் உள்பட உயரதிகாரிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, ஆந்திராவில் தற்போது இந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்துள்ளது[9]. ஆந்திர பிரதேச மாநில சட்டசபை கூட்டத்தொடர் ஐதராபாத்தில் டிசம்பர் 8.2015 அன்று காலை நடந்தது. அப்போது நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா எழுந்து பேசுகையில், விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை / ‘கால் மணி செக்ஸ் ராக்கெட்’ என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத இந்த பண அழைப்பு கொடுமை நடக்கிறது[10]. அப்போது குடும்ப பெண்களிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பின்னர் பணத்தை தராதவர்களின் வீட்டில் உள்ள பெண்களை விபசாரத்துக்கு கட்டாயப்படுத்துகின்றனர். அது பற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்[11]. ஆனால், ஆந்திர அரசியல்வாதிகள், பெரிய புள்ளிகள் முதலியோர் சம்பந்தப்பட்டதால் அமுக்க முயற்சி செய்யப்பட்டது[12]. அந்நிலையில் இப்பாதிரியும் சம்பந்தப்பட்டது, சர்ச்சுக்கு சாதகமாகி விட்டது, அதாவது, விசயம் அமுக்கப்பட்டு விடும் என்று நன்றாகத் தெரிந்து விட்டது.

© வேதபிரகாஷ்

15-03-2016

[1] http://v6news.tv/swami-nithyananda-visits-tirumala-tirupathi-temple-teenmaar-news

[2] zee.Tv.news, Watch: Swami Nithyananda and Ranjitha, once embroiled in sex scandal, visit Tirumala in new look, Last Updated: Saturday, March 12, 2016 – 16:39

[3] http://zeenews.india.com/news/india/watch-swami-nithyananda-and-ranjitha-once-embroiled-in-sex-scandal-visit-tirumala-in-new-avatar_1864969.html

[4] The times of India, Catholic priest case: 11 persons taken into custody, Phanindra Papasani | TNN | Mar 13, 2016, 12.36 AM IST.

[5] http://timesofindia.indiatimes.com/city/vijayawada/Catholic-priest-case-11-persons-taken-into-custody/articleshow/51376906.cms

[6] The Hindu, Priest, blackmailed by gang, paid hefty amount, says CP, by Rajulapudi srinivas, Vijayawada, March.14, 2016; Updated: March 14, 2016 05:46 IST.

[7] http://www.thehindu.com/news/cities/Vijayawada/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp/article8351138.ece

[8] http://www.nyoooz.com/vijayawada/389661/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp

[9] http://www.vikatan.com/news/india/56544-one-year-ban-for-actress-roja-to-enter-assembly.art

[10] தினத்தந்தி, ஆந்திரா சட்டசபையில் நடிகை ரோஜாவுக்கு ஒரு ஆண்டு தடை சந்திரபாபு நாயுடுவை விமர்சித்ததாக குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:12 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:15 AM IST.

[11] http://www.dailythanthi.com/News/India/2015/12/19041211/Andhra-PradeshIn-assemblyActress-rojaOne-yearBan.vpf

[12] http://www.punemirror.in/news/india/Moneylenders-force-women-into-sex-trade-grab-land-of-defaulters-in-Vijayawada/articleshow/50164306.cms