Posts Tagged ‘இனம்’

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

ஜூலை16, 2021

இந்திய வம்சாவளியினர் மீது தொடுக்கப் பட்டுள்ள வன்முறை இனரீதியிலானதா, அப்படியென்றால், சமூக வலைதளங்களில் அத்தகைய கருத்துக்களை பரப்பியது, கலவரத்தைத் தூண்டியது யார்? (1)

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் shops-looted-in-south-africa-indian-origin-affected-sikh-times-16-07-2021.jpg

முன்னாள் அதிபர் கைது, கலவரங்கள் ஆரம்பம்: முன்னாள் அதிபர், 75 வயதாகும் ஜேக்கப் ஸூமா இந்த மாதம் 7-ஆம் தேதி (07—06-2021) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரையில் வன்முறையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது [1]. கலவரம், வன்முறை, மற்றும் கடைகளை கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் / 1,200 பேருக்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரேடியோ நிலையம் கூட சூறையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது [2]. ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடங்கிய கலவரங்களை, கடைகளை சூறையாட வாய்ப்பாக சமூக விரோத கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளன என தென்னாப்பிரிக்க அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது [3]. ஸூமா 2009 வருடம் முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு அவர் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது [4]. அவர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்4தில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் [5]. இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக கலவரங்கள் வெடித்தன [6].


மருத்துவ மனை எரியூட்டல், சாலைகளில் கலாட்டா முதலியன: டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்[7]. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார்[8]. இவற்றிலிருந்து கலவரக் காரகளின் ஈவு-இரக்கமற்ற குணாதிசயங்களும், வக்கிரமும் வெளிப்படுகிறது. சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவர கலாட்டாக்களில் இந்திய வம்சாவளி போன்ற விவகாரம் இல்லை. நிறம் சம்பந்தப் பட்டப் பிரச்சினை இல்லை. ஏனெனில், இதில் தாக்கப் பட்டவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமிருக்கின்றனர்.

இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு: இதனிடையே, ஸூமா பதவியில் இருந்தபோது அதுல் குப்தா உள்ளிட்ட பல இந்திய வம்சாவளி தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள்தான் ஊழலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இது இந்திய வம்சாவளி மக்கள் குறிவைத்து தாக்கப்பட்ட காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. “தென்னாப்பிரிக்காவிலுள்ள முக்கிய நிறுவனங்களில், அதுவும் நிதி சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பது இந்தியர்கள்தாம். அவர்களால்தான் நமக்கு பொதிய வேலைவாய்ப்புகளும், பணமும் கிடைப்பதில்லை,” என்று தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது[9]. அதே நேரத்தில், “தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இந்தியர்களையே சாரும். பொருளாதார ரீதியாகத் தென்னாப்பிரிக்கா நாடு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கும் இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது சரியல்ல,” என்று இந்தியர்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பிரிக்க மக்கள் சிலர் துணை நிற்கின்றனர்[10]. நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து, குடியுரிமைகளுடன் வாழும் இந்திய வம்சாவளியினரை குறைக்கூறும் போக்கு சரியில்லை.

இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன: தற்போது தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலில், இந்திய வம்சாவளி மக்கள் நடத்தும் கடைகள், மருந்தகங்கள், மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன[11]. வன்முறை கும்பல்கள் கடைகளை சூறையாடி பொருட்களை அள்ளிச் செல்வது மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன[12]. இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்துதாக்கப்படுகின்றன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது, இப்படித்தான், தமிழ் ஊடகங்கள் விவரிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் சுமார் 6 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 75% பேர் கருப்பின மக்கள். 13% பேர் வெள்ளையின மக்கள். இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இயல்பில் இந்திய மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். தொழிலை தெய்வமாக மதித்துப்போற்றி, சிக்கனமாக வாழக்கூடியவர்கள் என்பதால் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகமாக உள்ளனர். இதன் காரணமாக தற்போதைய வன்முறையில் இந்தியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, பகல் கொள்ளை அரங்கேறுகிறது. இந்திய வம்சாவளியினருக்கு இதுவரை ரூ.512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருப்புவெள்ளை இனத்தவர்களிடம் இருதளைக்கொள்ளி எறும்பு போல வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர்: மேலும் கருப்பின, வெள்ளையின மக்கள் என எந்த பக்கமும் சாராமல் இந்திய வம்சாவளியினர் தனித்து வாழ்கின்றனர். இதுவும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் ஊடகங்கள் திரித்துக் கூறுவதும் விஷமத் தனமானது. உண்மையில், அவர்கள் தாம், இருவகைப் பிரிவினரிடமும், இருதளைக்கொள்ளி எறும்பு போல அகப் பட்டு அவஸ்தை படுகிறார்கள். பொருளாதார ரீதியில் முன்னேறி விட்டதால், ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்கின்றனர். வெள்ளையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று கூறுவதும் முறையற்றது. அப்படியென்றால், கருப்பின மக்கள் தாக்கப் பட்டால், எல்லா ஆப்பிரிக்க நாடுகளும் வரிந்து கட்டும் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, என்று சொல்வதற்கு இல்லை. ஆக, கருப்பு-வெள்ளை இனத்தவர்களிடம் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அரசு கவனிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். .

தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலை: தென்னாப்பிரிக்க போலீசார் இந்தக் கலவரங்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்திய வம்சாவளி மக்கள் தங்களுடைய கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாக்க தனியார் பாதுகாவலர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தான், மேலும் அபாயத்தில் முடியும்நிலையுள்ளது. ஒருவேளை, அந்நாட்டில் அதற்கு அனுமதி இருக்கலாம். ஆனால், அத்தகைய “தனியார் பாதுகாவலர்கள்,” யார், கருப்பினத்தவரா-வெள்ளையினத்தவரா என்று எடுத்துக் கூற முடியுமா? போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவத்தை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-07-2021


[1] புதியதலைமுறை, தென்னாப்பிரிக்க கலவரங்களில் குறிவைக்கப்படும் இந்திய வம்சாவளியினர்என்னதான் நடக்கிறது?,    Web Team Published :15,Jul 2021 08:31 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/109750/Firstlook-Posters-of-Actor-ashok-selvan-Sila-Nerangalil–Sila-Manidhargal.html

[3] தமிழ்.இந்து, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதால் கலவரம்இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, செய்திப்பிரிவு, Published : 16 Jul 2021 03:11 AM; Last Updated : 16 Jul 2021 06:03 AM.

[4]https://www.hindutamil.in/news/world/693700-attack-on-indians.html

[5] தினமணி, தென்னாப்பிரிக்காவில் வெடித்த கலவரம்..காரணம் என்ன?, By DIN  |   Published on : 15th July 2021 05:36 PM.

[6] https://www.dinamani.com/world/2021/jul/15/why-south-africa-is-witnessing-worst-violence-3660820.html

[7] NEWS18 TAMIL, மருத்துவமனைக்கு தீ.. கலவரத்தில் 72 பேர் உயிரிழப்புதென்னாப்பிரிக்காவில் நடப்பது என்ன? ,  LAST UPDATED : JULY 15, 2021, 15:51 IST

[8] https://tamil.news18.com/news/international/south-africa-72-death-after-zuma-arrest-worst-violence-in-years-vjr-506005.html

[9] விகடன், தென்னாப்பிரிக்கா கலவரம்: `ஜூமா கைது‘, `பெருந்தொற்று‘, `வறுமை‘ – உண்மை பின்னணி என்ன?!, வருண்.நா, Published: Today at 4 PM; Updated:Today at 4 PM

[10] https://www.vikatan.com/government-and-politics/international/what-is-the-reason-for-the-south-africa-riots

[11] பாலிமர்.நியூஸ், தென்னாபிரிக்காவில் கலவரம்: 75 பேர் பலி கடைகள் சூறைதீ வைப்பு, 14 ஜூலை 2021, 10.29.16.AM.

[12] https://www.polimernews.com/dnews/150345

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

ஏப்ரல்10, 2013

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

Sarag Groves - different pose

ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியர்களை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். இருப்பினுகம், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்தனர்.

Wife of Richard de Wit

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[1]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[2].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [3].

Sarag Groves - the killed in different pose

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[4].

Sarah went to mosque on Friday and get killed on the same day

கொலைக்குக் காரணம் இனவெறியா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

10-04-2013


[1] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[2] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[4] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

அமெரிக்க சீக்கிய கோவிலில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் காயம்

ஓகஸ்ட்6, 2012

அமெரிக்க சீக்கிய கோவிலில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் காயம்

விஸ்கான்சின் என்ற மாவட்டத்தில் உள்ள சீக்கிய கோவிலில், நேற்றுக் காலை (05-08-2-12 ஞாயிற்றுக் கிழமை) பிரார்த்தனை நேரத்தில் 9/11 முத்திரையுடன் டி-சர்ட்அணிந்த வெள்ளையன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்[1]. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்[2]. சுட்ட நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஆனால் எப்.பி.ஐ விவரங்களை வெளியிடவில்லை. அவர்கள் அதனை “உள்ளூர் தீவிரவாதச் செயல்” என்கிறார்கள்[3]

9/11 தாக்குதலுக்குப் பிறகு, சீக்கியர்களை தவறாக முஸ்லீம்கள் என்று அடையாளங்காணப்பட்டு தாக்குதல்கள் நடந்து வருகின்றன[4]. நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களிலேயே அவ்வாறான தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் இரு சீக்கியர்கள் அவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்[5]. சீக்கியர்கள் முஸ்லீம்கள் அல்ல என்றாலும், அவர்கள் தாடி-மீசை வைத்துக் கொல்வதால் தாக்கப்படுகிறார்கள்[6].

அமெரிக்காவில் துவேச-குரோதக் குற்றங்கள் என்ற போக்கில் இவ்வாறான கொலைகள் இனவெறி ரீதியில் நடக்கின்றன. முன்னரும் இனவெறி ரீதியில், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தாக்கப் பட்டு வந்தனர். இப்பொழுது, இத்தகைய வெறுப்பும் சேர்ந்து விட்டுள்ளது. நவநாகரித்தில் திளைக்கும், பணக்கார நாட்டில் இப்படி காட்டுமிராண்டித்தனமாக அமெரிக்கர்கள் நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. எது நாகரிகம் என்பது அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
இப்பொழுது கிடைத்துள்ள விவரங்களின் படி வடே மைக்கேல் பேஜ் என்பவன் வெள்ளையர்களைத் தவிர மற்ற மக்களின் மீது வெறுப்பைக் கொண்டிருந்தான் என்று தெரிகிறது. அத்தகைய கூட்டத்தாருடன் தொடர்பும் கொண்டிருந்தான். அதை வெளிப்படுத்தும் முறையில் பாடல்களும் பாடியுள்ளான். நண்பர்களிடம் அதைப் பற்றி பேசியுள்ளான். அமெரிக்கர்களிடம் கருப்பர்களை மற்றும் மரக்கலர் இந்தியர்களையும் கண்டால் பிடிக்காத துவேச குணம் இடைக்காலங்களிலிருந்து இருந்து வந்துள்ளது. குறிப்பாக போர்ச்சுகீசிரியரிடம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் சென்றவிடமெல்லாம், அந்தந்த உள்நாட்டு மக்களை பெருமளவில் கொன்று குவித்துள்ளார்கள். பிடித்தவர்களை அடிமையாக்கியுள்ளார்கள். அவர்கள் புரிந்த குற்றம் ஹிட்லரைவிட அதிகமானது. இந்நிலையில், இவனது குற்றத்தை மறைக்க இவன் ஒரு “நியோ நாசி” என்று குறிப்பிடப்படுகிறான்.அமெரிக்கர்களும் குடியேறிய போது, அங்கிருந்த இந்தியர்களை கொன்றொழித்தனர், அடிமையாக்கினர். அக்குற்றங்களை மறைக்கவும் செய்தனர். இன்றும் ஹாலிவுட் படங்களில் அவர்களைப் பற்றி அவதூறு படுத்தியே சித்திரித்துக் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியர்களுக்கு என்ன நியாயம், பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.


[4] Because of their customary beards and turbans, Sikh men are often confused for Hindus or Muslims — and have been the targets of hate crimes since the September 11, 2001, attacks on New York and Washington

[6] Sikh rights groups have reported a rise in bias attacks since the Sept. 11 terrorist attacks. The Washington-based Sikh Coalition has reported more than 700 incidents in the U.S. since 9/11, which advocates blame on anti-Islamic sentiment. Sikhs don’t practice the same religion as Muslims, but their long beards and turbans often cause them to be mistaken for Muslims, advocates say.

http://www.washingtonpost.com/national/police-dispatcher-shooting-at-sikh-temple-in-wis/2012/08/05/66012b9a-df1f-11e1-8d48-2b1243f34c85_story_1.html