Posts Tagged ‘டிஸ்கோ ஜாக்கி’

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

Puduchrry DJ Party 2019

குடித்து கும்மாளம் போது டீஜே பார்ட்டிகள் புதுச்சேரியில் சகஜம் தான்: புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன[1]. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே[2]. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது[3]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. பாண்டிச்சேரி, புதுச்சேரி, ஆரோவில் என்றாலே இதெல்லாம் சகஜமான விசயம் என்றே ஆகிவிட்டது.  இவையெல்லாம் வெளிப்படையாகவே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு, ஓட்டல்களில் நடக்கின்றன[4]. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீகத்தைத் தேடிச் சென்ற பயணம் ரேவ் பார்ட்டியில் முடிந்து விட்டது என்று ஒருவர் எழுதியுள்ளதைப் படிக்கலாம்[5].  அதாவது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்ய, தயாராக அந்தந்த தொழில்கள் செய்பவகள் தயாராக இருக்கின்றனர்.

Puduchrry DJ Party 2019-2

புதுச்சேரி, ஆரோவில், அரவிந்த ஆசிரமம்: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[6]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[7]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[8]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

Puduchrry DJ Party 2019-3

போதைப் பொருட்களின் புழக்கம்: எல்லோருக்கும் பணம் கிடைத்து வருவதால் அமைதியாக நடந்து வருகின்றன. அயல்நாட்டவர்களை வைத்து செய்கின்ற வியாபாரம் அமோகவே நடந்து வருகின்றன. அதிலும், பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் நபர்கள் மூலம் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆரோவில்லில் நடப்பவை வெளியே வருவதில்லை. மற்றவற்றில், உள்ளூர்வாசிகள் எல்லைகளை மீறும் போது, பிரச்சினைகள் உண்டாகின்றன. ஏதாவது உட்பூசல் போன்ற விவகாரம் வந்தால் புகார்களாக வெளிப்படுகின்றன. ஆனால், “விவரம்” தெரிந்தவர் அந்த “வரயறைக்குள்” நடத்தி செல்கின்றனர். இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன[9]. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன[10]. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எப்படி புழக்கத்தில் உள்ளன என்று ஆராய்ந்தால், வேறு விவகாரங்கள் வெளிவரும்.

Puduchrry DJ Party 2019-4

போலீஸார் கண்காணிப்பு, எச்சரிக்கை முதலியன: ஆரோவில் அனைத்துலக விருப்பு-வெறுப்புகளுக்குட்பட்டதாக இருப்பதால், அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறது. அதனை அரசுடமையாக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகளும் தடுக்கப் பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது[11]. ஆனால் ஆரோ வில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன[12]. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Puduchrry DJ Party 2019-11

வளைதளத்தில் விளம்பரம் கொடுத்து, ஜி.பி.எஸ் மூலம் கூட்டிய அதிநவீன ரேவ்பார்ட்டி: இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 08-06-2019 மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. “அரோரா Music contest” என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் கொடுக்காமல் 1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் Navigator (வழிகாட்டி) Map அனுப்பப்படுகிறது. மகாபலிபுரம் மாதிரியாக இருந்தாலும், மாட்டி கொள்ளாமல் இருக்க, இவ்வழி பின்பற்றின போலும். இந்த வகையில் புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடினார்கள். அங்கு அலங்கார மின்விளக்குகள், இசைக்குழு, மது பானங்கள், போதை பொருட்களுடன் மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, சமூக வளைதளங்களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்த நிகழ்சிற்கு பாதுகாக்கப்படும் காட்டிற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டது[13].

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-10

[1] தினத்தந்தி, புதுச்சேரி அருகே முந்திரி தோப்புக்குள் மது விருந்து அளித்து பெண்களுடன் https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4ஆபாச நடனமாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 10, 2019 05:15 AM

[2] A disc jockey, often abbreviated as DJ, is a person who plays existing recorded music for a live audience. Most common types of DJs include radio DJ, club DJ who performs at a nightclub or music festival and turntablist who uses record players, usually turntables, to manipulate sounds on phonograph records.

[3] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/10041439/Near-pondichery-Wine-party-with-women-at-midnight.vpf

[4] https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4

[5]  Nihal Bambulkar, In Auroville, My Search for Spirituality Ended at a Forest Rave Party, BY NIHAL BAMBULKAR AUG. 22, 2018 https://www.arre.co.in/first-person/auroville-spirituality-forest-rave-party-2/

[6] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=482439&Print=1

[7] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்றின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

[8] http://secularsim.wordpress.com/2013/03/21/628-why-aurobindo-ashram-attacked-by-the-dravidar-kazhagam/

[9] விகடன், மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்! – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ், வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/06/2019) கடைசி தொடர்பு:20:40 (10/06/2019).

[10] https://www.vikatan.com/news/tamilnadu/159470-viluppuram-police-arrests-16-near-pondicherry-border-over-organizing-mid-night-party.html

[11] தந்தி.டிவி, ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து, பதிவு : ஜூன் 10, 2019, 08:13 AM

[12] https://www.thanthitv.com/News/India/2019/06/10081334/1038816/Puducherry-Arrest-Liquor-Party.vpf

[13] The organisers had given wide publicity for the event on social media platforms and had enabled location sharing feature with Google Maps. The tickets were priced at ₹1,000 per couple. Some youngsters were also found peddling ganja at the party and had also procured IMFL from Puducherry. Mr. Jayakumar said the police trapped them by sending decoys who struck a deal with them in the guise of buying tickets for the event.Over 80 persons, including Aurovillians, foreigners and youngsters from Chennai, were attending the party. No permission was obtained for the event. The orchard is located close to a reserve forest, he said.

https://www.thehindu.com/news/cities/chennai/15-detained-ganja-seized-at-rave-party-near-auroville-township/article27702819.ece