Posts Tagged ‘சன் செக்ஸ்’

ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!

மார்ச்15, 2016

ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும்செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!

நித்தியானந்தா திருமலை தரிசனம், தினமலர், 10-03-2016நித்தமும் ஊடகக்காரர்களை நெருடும் நித்தியானந்தா (2010-2016): 2010ல், +2 தேர்வுகள் சமயத்தில் சன்-குழுமம் டிவி-செனல்கள், நித்தியானந்தாவின் செக்ஸ் வீடியோக்களை 24 x 7 ரீதியில் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தன. கோபாலன் தனது “நக்கீரனில்” தனக்கேயுரிய பாணியில் கொக்கோக புலன்விசாரணை செய்து, பாலியல் செய்திகளை போட்டு, செக்ஸ்-வீடியோக்களை இணைதளத்தில் பரப்பி வந்தார். இந்த இரண்டு வியாபார நிருவனங்களுக்கும் விளம்பரம் அதிகமாகவே கிடைத்தன. நக்கீரன் இதழ் ஒன்று ரூ.100/- வரை விற்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விழித்துக் கொண்ட நித்தியானந்தா, முதலில் “நான் அவனில்லை” என்று ஆரம்பித்து, “நான் ஆணே இல்லை” வரை வாதித்துப் பார்த்தார். எப்படி லெனின் முதல் சன்-குழுமம் வரை பணம் கேட்டு தம்மை மிரட்டியதாகவும், கொடுக்காதல்லால் தான் அவ்வாறு விடியோ, படம், செய்திகள் என்று போட்டு பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரை ஊடகங்கள் விடவில்லை. இன்று வரை, எதிர்மறையாகத்தான் விவரித்து வருகின்றன.  ஆனால், விஜயவாடாவில், ஒரு கத்தோலிக்க பாதிரி சம்பந்தப்பட்டது, சிடி வெளியானது முதலியவற்றை தமிழ் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

Duke Jeyaraj talks about porn - Hyderabad Youth fest 2012 Octoberகிருத்துவமுகமதிய சாமியார்களின் செக்ஸ் லீலைகள் மறைக்கப்படுகின்றன: இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கிருத்துவர்கள் அதிகமாகவும், முகமதியர்கள் அவர்களை விட கொஞ்சம் குறைவாகவும் அத்தகைய செக்ஸ்-லீலைகளில் ஈடுபட்டு வந்தாலும், பற்பல் பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள், காஜிக்கள், மௌலிகள், சாமியார்கள் மாட்டிக் கொண்டாலும், விவகாரத்தை செய்திகள் மட்டும் போட்டு, அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக ஊடகக்காரர்கள் கொண்டுள்ளனர். அதன்படியே, அப்படியே அமுக்கி வாசித்து விட்டு விட்டனர். நிறைய விவகாரங்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால், நித்தியானந்தாவை அதே ஊடகங்கள் விடுவதில்லை, விடவில்லை. இப்பொழுது 10-03-2016 மற்றும் 11-03-2016 தேதிகளில் காளஸ்தி மற்றும் திருமலை கோவிலுக்குச் சென்ற வரை, துரத்திச் சென்று செய்திகள், படங்கள், விடீயோக்கள் என்று போட்டு கலக்கி வருகின்றன.  “நித்தியானந்தா ரஞ்சிதா உடன் சென்ற வீடியோ” என்று தலைப்பிட்டு செய்திகளைப் போட்டு வருகின்றன. [1]. “செக்ஸ் விவகாரத்தில் மாட்டிய நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் புதிய கோலத்தில் திருமலைக்குச் செல்கும் வீடியோவைப் பாருங்கள்”, என்று தலைப்பிட்டு “ஜீ-டிவி” செய்தி வெளியிட்டுள்ளது[2]. அதாவது தலைப்பிலேயே அத்தனை குசும்புத்தனம், தூஷண காழ்ப்பு முதலியவை தொக்கி நிற்கின்றன[3]. அதாவது, ஏதோ கோவிலுக்குப் போக தகுதியற்ரவர்கள் எல்லாம் போகிறார்கள் என்ற தோரணியில் விரசமாக, விகல்பமாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

Mary Matha Church Gunadala, Vijayawada, where a priest is involvedபோர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட விஜயவாடாகுணடாலா பாதிரியார் (மார்ச்.10-14, 2016): அதே நேரத்தில், அதே தேதிகளில் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச்சில் வேலை பார்க்கும் ஒரு பாதிரி போர்னோகிராபி சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்ட செய்திகள், ஆங்கில ஊடகங்களில் இலேசாக கொஞ்சம்-கொஞ்சமாக வந்துள்ளன. அதிலும் அவை அளந்தே செய்திகளைக் கொடுத்துள்ளன. வழக்கம் போல “தி இந்து” அந்த சர்ச்சின் பெயர், இடம், மாட்டிக் கொண்ட கத்தோலிக்க பாதிரியின் பெயர் முதலிவயவற்றைக் குறிப்பிடவில்லை. ஆனால், “டைம்ஸ் ஆப் இந்தியா” மட்டும் விஜயவாடாவில் உள்ள குணடாலா என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க, மேரி மாதா சர்ச் என்று வெளியிட்டுள்ளது. இதில் பத்திரிக்கையாளர் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 11 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். மார்ச். 10, 11 மற்றும் 12 தேதிகளில் இவர்கள் பிடிபட்டனர். அதாவது, நித்தியானந்தா கோவில்களுக்கு சென்ற அதே தேதிகளில் இந்நிகழ்ச்சிகள் ஆந்திராவில் நடந்துள்ளன.  ஆனால், தமிழ் ஊடகங்கள் நித்தியானந்தாவைத் தான் பிடித்துக் கொண்டனவே தவிர அந்த கத்தொலிக்க  செக்ஸ் சாமியாரை விட்டுவிட்டன. அவர்களுக்கு விஜயவாடா தூரம், திருப்பதி அருகில் போல. அவருக்கு தொடர்பில்லை என்றால், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

Mary Matha Church Gunadala, Vijayawada, where a priest is involved in sex-pornபோர்னோகிராபியில் மாட்டிக் கொண்ட பாதிரியார் பணம் கொடுத்துத் தப்பித்துக் கொண்டது (மார்ச்.10-14, 2016): அப்பாதிரி செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்ட பிறகு, குணடாலா சர்ச் அதிகாரம் அவரது செக்ஸ் விவகாரங்களை விசாரிக்க ஆரம்பித்தது[4]. ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணாம் கொடுத்தது, அவரது மீதான சந்தேகம் வலுவானது. சம்பந்தப்பட்ட பாதிரி பணம் கொடுத்து மாளாததால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனால், 12-03-2016 சனிக்கிழமை அன்று போலீஸார் விசாரித்து 11 பேரைப் பிடித்தனர்[5]. விஜயவாடா போலீஸ் கமிஷனர், டி. கௌதம் சவாங், அந்த கும்பல், இந்த பாதிரியிடம் மிரட்டிப் பணம் பறித்தது உண்மைதான். பாதிரி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாசப் படம் அவர்களில் இருப்பதாகவும், அதனை வெளியிடத் தடுப்பதற்குத்தான் பணம் கொடுத்து மிரட்டியுள்ளதாகவும், தாங்கள் எல்லா கோணங்களிலும் இவ்வழக்கை விசாரித்து வருவதாகவும் கூறினார்[6]. போர்னோகிராபி பணம் எடுத்த கும்பல், இவரை மிரட்டி பணம் கேட்டு வந்தது. பாதிரியாரும், ரூ. ஒரு கோடிக்கும் மேலாக பணம் கொடுத்து, தப்பித்துக் கொண்டுள்ளார். அதாவது, அந்த சிடியை வெளியிடக்கூடாது என்றால், பணம் கேட்டதால், பணம் கொடுத்து தனது செக்ஸ்-விவகாரத்தைதி மறைக்க முய்ன்றுள்ளார்.

விஜயவாடா போர்னோகிராபி மார்ச்.2016, 11 பேர் கைதுபாதிரி ஏற்கெனவே நிதி மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்: அப்பாதிரியைப் பற்றி விசாரித்து வரும் சர்ச் அதிகாரம், அவரது நடவடிக்கை மற்றும் வருமானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. சர்ச்சிற்கு மற்றும் ஏழைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் முறைதவறி உபயோகப்படுத்தியுள்ளதாக  தெரிந்து கொண்டது[7]. போலீஸாரும், அந்த ஆபாச விடியோ மற்றும் சிடி பற்றி விசாரித்து வருகின்றனர். அது உண்மையிலேயே நடந்த சமாச்சாரமா- இல்லையா, அப்படியே இருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண் யார், அவள் அத்தகைய வீடியோவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டாள், யார் அந்த விடியோவை எடுத்தது, எங்கு-யார்-எப்படி எடுத்தார்கள் முதலிவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இதில், சில ஊடகக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களிடம் அத்தகைய விடீயோவின் நகல்கள் சிடிக்களில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களும், அதை டிவி-செனல்களில் ஒலி-ஒளிபரப்பாமல் இருக்க, அப்பாதிரியிடமிருந்து பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளன. இதற்குள் சர்ச் நிர்வாகம் அப்பதிரியை நீக்கி வேறு பாதிரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளது[8].

Vijayawada porn - involving politicians, land mafia and others ‘கால் மணி செக்ஸ் ராக்கெட்மோசடிக்கும் இப்பாதிரிக்கும் தொடர்பு உள்ளதா?: ஆந்திர மாநிலத்தில் ‘கால் மணி’ விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. பணத் திண்டாட்டத்தில் இருப்பவர்கள், போன் செய்தால்போதும், வீட்டிற்கு வந்து பணம் அளிக்கப்படுகிறது. கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி வசூல் செய்ததோடு, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மனைவி உள்பட வீட்டில் உள்ள பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், போலீஸ் உள்பட உயரதிகாரிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து, ஆந்திராவில் தற்போது இந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்துள்ளது[9]. ஆந்திர பிரதேச மாநில சட்டசபை கூட்டத்தொடர் ஐதராபாத்தில் டிசம்பர் 8.2015 அன்று காலை நடந்தது. அப்போது நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா எழுந்து பேசுகையில், விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை / ‘கால் மணி செக்ஸ் ராக்கெட்’ என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத இந்த பண அழைப்பு கொடுமை நடக்கிறது[10]. அப்போது குடும்ப பெண்களிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பின்னர் பணத்தை தராதவர்களின் வீட்டில் உள்ள பெண்களை விபசாரத்துக்கு கட்டாயப்படுத்துகின்றனர். அது பற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்[11]. ஆனால், ஆந்திர அரசியல்வாதிகள், பெரிய புள்ளிகள் முதலியோர் சம்பந்தப்பட்டதால் அமுக்க முயற்சி செய்யப்பட்டது[12]. அந்நிலையில் இப்பாதிரியும் சம்பந்தப்பட்டது, சர்ச்சுக்கு சாதகமாகி விட்டது, அதாவது, விசயம் அமுக்கப்பட்டு விடும் என்று நன்றாகத் தெரிந்து விட்டது.

© வேதபிரகாஷ்

15-03-2016

[1] http://v6news.tv/swami-nithyananda-visits-tirumala-tirupathi-temple-teenmaar-news

[2] zee.Tv.news, Watch: Swami Nithyananda and Ranjitha, once embroiled in sex scandal, visit Tirumala in new look, Last Updated: Saturday, March 12, 2016 – 16:39

[3] http://zeenews.india.com/news/india/watch-swami-nithyananda-and-ranjitha-once-embroiled-in-sex-scandal-visit-tirumala-in-new-avatar_1864969.html

[4] The times of India, Catholic priest case: 11 persons taken into custody, Phanindra Papasani | TNN | Mar 13, 2016, 12.36 AM IST.

[5] http://timesofindia.indiatimes.com/city/vijayawada/Catholic-priest-case-11-persons-taken-into-custody/articleshow/51376906.cms

[6] The Hindu, Priest, blackmailed by gang, paid hefty amount, says CP, by Rajulapudi srinivas, Vijayawada, March.14, 2016; Updated: March 14, 2016 05:46 IST.

[7] http://www.thehindu.com/news/cities/Vijayawada/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp/article8351138.ece

[8] http://www.nyoooz.com/vijayawada/389661/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp

[9] http://www.vikatan.com/news/india/56544-one-year-ban-for-actress-roja-to-enter-assembly.art

[10] தினத்தந்தி, ஆந்திரா சட்டசபையில் நடிகை ரோஜாவுக்கு ஒரு ஆண்டு தடை சந்திரபாபு நாயுடுவை விமர்சித்ததாக குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:12 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 19,2015, 4:15 AM IST.

[11] http://www.dailythanthi.com/News/India/2015/12/19041211/Andhra-PradeshIn-assemblyActress-rojaOne-yearBan.vpf

[12] http://www.punemirror.in/news/india/Moneylenders-force-women-into-sex-trade-grab-land-of-defaulters-in-Vijayawada/articleshow/50164306.cms

நித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்!

பிப்ரவரி2, 2011

நித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்!

நித்யானந்தா என்றாலே, ஊடகங்காரர்களுக்கு கிளுகிளுப்புதான், ஜொல்லுவிடுவதில் அலாதியான திறமைதான், படிப்பவர்களுக்கு ஜிலு-ஜிலுப்புத்தான். என்னடா கிடைக்கும் என்று அலைபாயும் மனங்களுடந்தான் மொய்க்கிறார்கள். அட கோபாலுகுக்குத் தான், என்ன கரிஷனம், நித்தி-நித்தி என்று செம்மொழி மாநாட்டிலேயே கொஞ்சி கொஞ்சி பேசியபோது, கருணாநிதி குடும்பத்தினரே நெளிந்துவிட்டனர். ஆனால், அப்பொழுதுதான், வெளியே விட்டார், ஒரு விஷயத்தை – ஆமாம், மாநாட்டு மலைக்கூட லெனின் குருப்புததான் அமைத்தாராம்! நல்லவேளை, அட்டை பத்திரமாகத்தான் இருந்தது போலும்! நிர்வாணமாக்கப் படவில்லை! செவ்வாய்கிழமை நித்யானந்ததவின் நீண்ட பேட்டியில், பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளது, ஆச்சரியமானதுதான்! ஓரளவிற்கு, அவற்றைத் தொகுத்துக் கீழ்கண்டமுரறையில் அளித்துள்ளேன்.

லிங்கத்தைப் பற்றிய அவதூறான, ஆபாசாமான விளக்கம்[1]: தான் தந்திர ரீதியிலான செக்ஸைப் பற்றிக் குறிப்பிட்டதையும் திரித்துக் கூறப்பட்டது. “லிங்கத்தைப் பற்றி அவதூறான, ஆபாசாமான விளக்கம் கொடுக்கப் பட்டு, சில போலி ஆவணங்களுடன் ஒரு கட்டுரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த அமரிக்கக் கும்பல்[2] அதற்காகவே, பிரத்யேகமாக வேலை செய்ததாகத் தெரிகின்றது. ஊடகங்களில் அவை வெளியானப் பிறகுதான், அதைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது”, என்றார் நித்யானந்தா. வெளிநாட்டவரைப் பொறுத்தவரைக்கும், இன்றளவில் அத்தகைய திரிபுவாத விளக்கத்தைக் கொடுத்துவர்வது, வியப்பான விஷயமாகும்.

மைக்கேல் ஜாக்ஸனும், நிதாயனந்தாவும்[3]: நித்யானந்தா சொல்கிறார், “இணைதளங்கள் வேலைசெய்வதில் நின்று போனதாக, உலகத்தில் இரண்டு முறைதான் நிகழ்ந்துள்ளன. ஒன்று மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோது, இரண்டு, என்னைப் பற்றிய வீடியோ படங்கள் வெளியிட்டபோது. ஆனால், மைக்கேல் ஜாக்ஸன் அதற்காக ஆட்ப்பாடி, குதிக்க வேண்டியிருந்தது, உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியிருந்தது. நான் எதுவுமே செய்யாமல், அந்த நிலை கிடைத்துவிட்டது” (என்று நக்கலாக, ஏளனத்துடன் கூறினார்). அதாவது, ததன் மைக்கேல் ஜாக்ஸனை விட இந்த விஷயத்தில் பெரியவர், என்று முறையில் பேசியது விசித்திரமாக இருந்தது.

இரண்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டினராம்! பெங்களூரு :””நூறு கோடி ரூபாய் கேட்டு, இரண்டு, “சக்தி வாய்ந்த’ மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். அவர்கள் யார் என்பதை, தற்போது என்னால் சொல்ல முடியாது. இதை நான் தெரிவித்தால், என் உயிருக்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை. கர்நாடக-தமிழக போலீஸார் எனக்கு எதிராக வேலை செய்கின்றனர்.[4],” என, சாமியார் நித்யானந்தா நேற்று கூறினார்.

திமுகவிற்கு வேண்டிய சாமியார் யார்? ஆளும் திமுக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சாமியார்தான் இதன் பின்னணியில் உள்ளார், என்பதனை மறைமுகமாக, சில வார்த்தைகளினால் உணர்த்தினார்[5]. அந்த சாமியாரின் பெயரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தாலும், பெங்களூரைச் சேர்ந்தவர்[6] என்று குறிப்பிட்டதால், அது யார் என்று யூகிக்கக் கூடிய முறையில் உள்ளதாக, நிருபர்கள் பேசிக் கொண்டார்கள். ஜக்கி வாசுதேவா அல்லது ஸ்ரீரவிசங்கரா என்றுதான் புதிராக இருந்தது.

வீடியோவில் இருப்பது நான் இல்லை மறுபடியும் நித்யானந்தா சொல்கிறார்! நீண்ட நாட்களுக்கு பின், பிடதி ஆசிரமத்தில் சாமியார் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது[7]:என்னைப் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவில் இருப்பது நானில்லை. முழுக்க, முழுக்க டிஜிட்டல் மூலம் அதை தயாரித்துள்ளனர்; நடிகை ரஞ்சிதாவுடன் நான் இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானோ, எனது உடலோ அல்ல. இந்த வீடியோ காட்சிகள் பொய் என்று அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ காட்சிகளை திரித்து வெளியிட்டு உள்ளனர்[8]. லெனின் மட்டும் செய்த வேலையல்ல இது. லெனினுக்கு பின்னணியில், இரண்டு, “சக்தி வாய்ந்தநபர்கள் உள்ளனர்.

போலீஸாரின் வழக்குப் பதிவே சொதப்பலானது: “போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நான் கற்பழித்ததாக கூறப்படும் பெண் யார் என்றே குறிப்பிடப்படவில்லை. என் மீது 376-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லாத நிலையில் என் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து உள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு வழக்கு முன் எப்போதும் பதிவு செய்யப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் மீது போலீசார் தொடக்கம் முதலே சட்டவிரோதமாக நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். என்னால் செக்ஸ் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையில் கூட தெரிவிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து எனக்கும், எனது பக்தர்களுக்கும் துன்புறுத்தல்களை, தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்தியாவில் இது போன்ற குற்றப்பத்திரிகையை யாரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்[9]. நான் இதுவரை எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொண்டது கிடையாது. எனக்கு சிகரெட், குடி, போதை பழக்கம் எதுவும் கிடையாது; அசைவம் சாப்பிடுவதும் இல்லை.என் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது”.

இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன்: இதன் பின்னணியில் இருக்கும் இரண்டு சக்திவாய்ந்த மனிதர்கள் யார் என்பதை நீதிமன்றத்திலும், சி.ஐ.டி., விசாரணையிலும் கூறியுள்ளேன். நடிகை ரஞ்சிதா, கோபிகா ஆகியோரை சாட்சியாக ஆக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தனர். போலீசார் கூறியதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன். அவர்கள் ஒட்டு மொத்த இந்து மதத்தையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சட்டவிரோதமாக என்னை கைது செய்துவிட்டு தற்போது அதை நியாயப்படுத்துகிறார்கள். இப்போதாவது அதை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். சேனல் மூலம், என் தொடர்பான காட்சிகளை பலமுறை ஒளிபரப்பினர். வீடியோ காட்சியில், 2009 டிச., 25ம் தேதி, எடுக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2010 மார்ச் 3ம் தேதி தான் இதை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதன் உள்நோக்கம் என்ன. வீடியோ பதிவின் போது, காலை 8 மணி என்று காண்பிக்கிறது. ஆனால், அந்த அறையில் உள்ள கடிகாரம், 11 மணியை காண்பிக்கிறது. இதில், எதுவுமே உண்மையல்ல.

கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை: எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கடிதங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படித்தவர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என 1 லட்சம் கடிதங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கடிதம் அனுப்பி உள்ளார். அவரை போன்று பல நாட்டுக்காரர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். வருகிற மார்ச் 2-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை பல்வேறு மத தலைவர்கள் நேரில் சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளேன். அதன் பிறகு அந்த 1 லட்சம் கடிதங்களை பிரதமர், ஜனாதிபதி, கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம்.  அப்போது எங்கள் மீதான அச்சுறுத்தல், அத்துமீறல், துன்புறுத்தல் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்துவோம். ஏனென்றால் இன்னும் கூட எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். வெளியில் நடமாடும் எனது பக்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை நடத்தி வருகிறது[10]. இது ஏன்? என்று எனக்கு புரியவில்லை.  மக்களிடம் நீதி கேட்டு தமிழ்நாடு கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளேன்.

ஏசு பிறந்த தேதியில் ஏன் வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை! இயேசு பிறந்த புனித தினமான, டிச., 25 2009ஐ தேர்வு செய்ய, என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. அந்த தேதியை ஏன் தேர்வு செய்தனர் என்பது எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது! இருப்பினும், மார்ச் வரை தாமதப் படுத்தியதும், படு புதிராக உள்ளது!

உசுப்பிவிட்ட ஊடகங்கள் – பொறுப்புள்ளவை-பொறுப்பற்றவை!: “நக்கீரன் என்ற தமிழ் பத்திரிகையில், 60 முறை கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். பல பத்திரிகைகள் மிகவும் பொறுப்பாக செயல்பட்டன. அதில், தமிழில் தினமலர், தினந்தந்தி, ஆனந்த விகடன், ஜெயா “டிவிராஜ் “டிவிஆகியவை, பொறுப்பான செய்தி வெளியிட்டன. அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இணையதளம், “யு டியூப்பில் என்னைப் பற்றி தான் அதிகமாக தகவல் வெளியிடப்பட்டது.எனக்கு உலகம் முழுவதும், ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து பல அமைப்புகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன”.

தமிழர்கள் தாம் கன்னடர்கள் போலத் தாக்கினர் !நூறு கோடி ரூபாய் கேட்டு இரண்டு, “சக்தி வாய்ந்த மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். பின், 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது[11]. தவறு செய்யாத நான், “ஒரு பைசா கூட தர முடியாதுஎன்று கூறிவிட்டேன். இருந்தாலும், என் கவனத்துக்கு வராமலேயே, ஆசிரமத்திலிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். ஆதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறேன். அதனை கொடுக்காததால் அவர்கள் ஆபாச சிடியை வெளியிட்டனர். வீடியோ காட்சியைப் பார்த்த சிலர் தமிழ்நாடு, பிடதியில் உள்ள ஆஸ்ரமங்களை அடித்து உடைத்தனர். தீ வைத்து கொளுத்தினர் ஆசிரமத்தின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினார்கள். தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பிடுதி ஆசிரமத்திலும் அதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் கன்னடர்கள் இல்லை. கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் கூட அதுபோன்ற செயலை செய்யவில்லை.

3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர்[12]: பிடுதியில் 3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார்கள்[13]. இது போன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் எனக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அதனால் நான் வெளியில் தங்கி இருந்தேன். நான் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கிய அந்த இடத்திலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினேன். வெளிப்படையாக வெளியில் கடைக்கு எல்லாம் சென்று வந்தேன். அப்போது நான் கும்பமேளாவில் இருந்தேன். எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து உடனே நான் ஆஸ்ரமத்திற்கு வரவில்லை. அங்கும் தலைமறைவாக இல்லாமல் கடைக்கும், வெளியேயும் சென்று நடைபயிற்சியும் செய்து வந்தேன். பிறகு போலீஸôர் என்னை கைது செய்தது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில், என் ஆசிரமமும், பக்தர்களும் தாக்கப்பட்டனர்[14]. இதை செய்தது முழுக்க, முழுக்க தமிழர்களே. தமிழகத்தில் தான் அதிகளவில் தாக்குதல் நடந்தது. கர்நாடகத்தில் தாக்கப்பட்டாலும், கன்னடர்கள் தாக்கவில்லை..

நான் ஆண்மையில்லாதவன் என்று திரித்துக் கூறியது போலீஸார்தான்! கன்னடர்கள் போர்வையில், மற்றவர்கள் தாக்கினர்.போலீஸ் விசாரணையில், “ஆணையும் விட, பெண்ணையும் விட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளேன்’ என, நான் கூறியதை, ஆண்மை இல்லாதவன் என்று போலீசார், பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர்[15]. என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை.வீடியோ காட்சிகளை, அமெரிக்க லேபில் பரிசோதித்த போது, இந்த வீடியோ முதலில் எடுக்கப்பட்டது முதல், தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது எல்லாம் இருந்தால் தான், அது உண்மையா என்பதை தெரிவிக்க முடியும், என்று கூறியுள்ளனர்.

அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்: உலகத்துக்கு, என் அர்ப்பணிப்பை புரிந்து கொண்டு, அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். எனக்கும், என் சீடர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சாமியார் நித்யானந்தா கூறினார்.

100 கோடி கேட்டது யார்?: நூறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவர்கள் யார் என்று சொல்ல சாமியார் நித்யானந்தா மறுத்துவிட்டார். பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு, சாமியார் நித்யானந்தா அளித்த பதில்: 

கே: உங்களை, 100 கோடி கேட்டு மிரட்டியது, தமிழக முதல்வர் கருணாநிதியா?
பதில்: இல்லை

கே: தமிழக அரசியல்வாதிகளா?
பதில்: குறிப்பாக தமிழகத்தை சார்ந்தவர்கள் என கூற முடியாது.

கே: லெனின் ஹிந்துவா? கிறிஸ்தவரா?
ப: தெரியாது. இங்கு வரும் யாரிடமும் ஜாதி, மதம் கேட்பது கிடையாது.

கே: ஆஸ்ரமம் செய்து வந்த, தர்ம காரியங்களை நிறுத்துவதற்கு காரணம் என்ன? நீதிமன்றம் தடை விதித்துள்ளதா?
ப: இல்லை. இன்னும் சில மாதங்களில் தொடரும்.

கே: நடிகை ரஞ்சிதா, லெனின் தன்னை கற்பழிக்க வந்ததாக புகார் கூறியுள்ளாரே. அச்சம்பவம் உங்களுக்கு தெரியுமா?
ப: ஆஸ்ரமத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அனைவரையும் நான் கண்காணிக்க முடியாது.

கே: ஆஸ்ரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதா?
ப: அப்படி எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

 

© வேதபிரகாஷ்

02-02-2011


[2] இந்த கும்பல் யார் என்று கூறாவிட்டாலும், அதன் பின்னணியில் ஒரு கிருத்துவ நிறுவனம் உள்ளதாக சூசகமாகத் தெரிவிக்கப் பட்டது.

[6] Choosing his words carefully, he dropped enough hints that it was Sri Sri Ravishankar of Art of Living (AOL) and the DMK leaders in Tamil Nadu behind his defamy.

[7] தினமலர், 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2011,23:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 02,2011,00:50 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178663

[13] ஊடகங்கள் இதனை இரட்டடித்து இருப்பது தான், கிருத்துவர்களின் சதி வெளிப்படுகிறது. இதே ஒரிஸ்ஸாவில், தாங்கள் செய்ததையெல்லாம் மறைத்துவிட்டு, நாடகம் ஆடியதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, வயதான இந்து சாமியாரைச் சுட்டுக் கொன்றதையே மறைத்து, ஏதோ கிருத்துவர்கள் தாக்கப் பட்டனர் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்தனர்.