Archive for the ‘வாய் சவடால்’ Category

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

ஓகஸ்ட்7, 2013

சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது?

Stefano and Paulo Mainoவெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: இந்திய எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது குறித்து பேசிய குர்ஷித், நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம். நாம் உணர்வுடனும், விழிப்புடனும், தீவிர கண்காணிப்புடன் உள்ளோம். எந்த வகையிலும், இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. அது குறித்து கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது. இரு பல காலமாக நடந்து வரும் பேச்சுவார்த்தையாகும். அண்டை நாடுகளுக்குள் உறவு இல்லாமல் இருப்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ளார்[1].

  • நாம் பலமான ராணுவத்துடன் இருக்கிறோம்: அதனால்தான் பாகிஸ்தானியர் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்; நமது வீரர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்; தலைகளையும் கொய்து அனுப்புகிறார்கள்.
  • நாம் உணர்வுடனும்,  விழிப்புடனும்,  தீவிர கண்காணிப்புடன் உள்ளோம்: இப்படி சொல்வதற்கு இந்த ஆளுக்கு என்னதான் மூளை இருக்கிறது என்று தெரியவில்லை.
  • எந்த வகையிலும்,  இந்திய  எல்லைக்குள்  புகுந்து  பாகிஸ்தான்  ராணுவம்  தாக்குதல்  நடத்துவதை  அனுமதிக்க  முடியாது: அதுதான் நடந்து வருகிறாதே, பிறகு என்ன வாய் சவடால்?
  • பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை உடனடியாக முறித்துக் கொள்ள முடியாது: கேடு கெட்ட இந்த ஆள், ஆஜ்மீரில் பாகிஸ்தான் ஜனாதிபதி சாமி கும்பிட வந்தபோது, ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தான்.

Sonia anestral house at Orbassano, Turin, Italyராணுவ அமைச்சர் அந்தோனி வெட்கமில்லாமல் பேசிய விதம், அசிங்கமாக இருந்தது: வழக்கம் போல சோனியா காங்கிரஸ் வெட்கமில்லாமல் பேசியவிதம், அசிங்கமாக இருந்தது. இது குறித்து மாநிலங்களவையில் கடும் அமளி எழுந்ததை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, எல்லைத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்[2]. அதில், “பாகிஸ்தான் ராணுவத்தின் சீருடையில் வந்த சிலரே இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார் அந்தோணி. எந்த நாட்டு ராணுவ மந்திரியும் சூடு-சொரணை இல்லாமல் இப்படி பேசியிருக்க முடியாது. கோழைத்தனத்துடன் பேசிய அவர் மன்னிப்புக் கேட்கவும் மறுத்து விட்டார்[3].

  • பாகிஸ்தான்  ராணுவத்தின்  சீருடையில்  வந்த  சிலரே  இந்திய  ராணுவ  வீரர்கள்  மீது  தாக்குதல்  நடத்தியுள்ளனர்: இப்படி பேசுவது கேடு கெட்டராணுவ மந்திரி. பேசும் போது கூட, ஒன்றும் புரியவில்லை. குழறியபடியே பேசினார். இந்த ஆள் முகத்தைப் பார்த்தாலே, இருக்கும் வீரமும் போய்விடும்.

Sonia Italy connectionராணுவம் கொடுத்த அறிக்கையை மாற்ற வைத்தது: முதலில் ராணுவ அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன், தீவிரவாதிகள் ரஎல்லையில் சுட்டதில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இருந்தது[4]:

In its first statement, the PIB (Defence Wing) stated:“A patrol of Indian Army comprising of one Non Commissioned Officer and five Other Ranks was ambushed by a Pak Border Action Team close to the Line of Control in Punch Sector of J&K early morning on 6 August 2013. In the ensuing firefight, five Indian soldiers were martyred. The ambush was carried out by approximately 20 heavily armed terrorists along with soldiers of Pak Army.”

ஆனால், அந்தோனியின் உளறலுக்குப் பிறகு, அது கீழ்கண்டவாறு மாற்றப் பட்டது. அதாவது, அரசியல்வாதியின் விருப்பத்திற்கு ஏற்ப அறிக்கையை மாற்றி வெளியிட்டது:

 The PIB (Defence Wing) was forced to toe the political leadership line on the subject. Antony effectively changed the Indian army version of incidentThe words “persons dressed in Pakistan army uniform” changed the whole connotation, suggesting that the intruders were not Pakistan army regulars but could be terrorists or non-state actors wearing Pakistan army uniforms.  A fact that was pointed out by Leader of Opposition Arun Jaitley in the Rajya Sabha, but something the Defence Minister refused to accept.As a result of the minister’s statement, the PIB (Defence Wing) issued a second statement titled “REGRET & REVISED PRESS RELEASE”.In it it stated:1. The following Press Release supersedes the earlier Press Release ( No. PRO/Jammu/425/Aug /2013 ) forwarded from this office.

2. You are requested to follow the new one.

3. Inconvenience is deeply regretted.”

It then attached a mirror of the statement made by Antony in Parliament. Incidentally, both the PIB statements were signed by SN Acharya.

முன்பு, எல்லையில் இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பாராளுமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்திய எல்லைக்குள் தீவிர வாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்து தாக்கியதில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்தார். ஏ.கே.அந்தோணி தவறான அறிக்கை வெளியிட்டதாகவும், இதறக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினர் எடுத்துக் காட்டினர்[5]. இத்தகைய முரண்பட்ட காரியத்திற்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டார், ராணுவ அமைச்சர்[6].

sonia with Anushka sisterஊமை பிரத மந்திரி: ஒன்றுக்கும் சளைக்காத ஊமைக் கோட்டன் பிரதம மந்திரி மௌனம் தான் காக்கிறது. இந்த அழகில் எதிர் கட்சியுடமன் பேச வேண்டும் என்கிறாராம்[7]. பாராளுமன்றத்தில் பேசாததை, தனியாக ஏன் பேச வேண்டும்? இப்படி ஒட்டு மொத்தமாக, இந்திய நலன்களில் சிறிதும் அக்கரையில்லாத இவர்களை வைத்துக் கொண்டு, இந்தியர்கள் வாழ்வது வேடிக்கைதான்.  போதாகுறைக்கு நடுவில் கனிமொழி வேறு பேசியது வேடிக்கையாக இருந்தது:

கனிமொழி (தி.மு..):[8] எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிவில் மக்கள் உயிரிழப்பதையும், நடுக்கடலில் மீனவர்கள் கொல்லப்படும் சம்பவத்தையும் மறைப்பது பிரச்னைக்கு தீர்வு தராது. ஆனால், இப்பிரச்னைகளை அரசு நிராகரித்து விட்டு செயல்படுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நிலையை எடுக்க வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டது.

Sonia-Sonia-Soniaஆட்டி வைக்கும் சோனியா கூறுவது[9]: எல்லையில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வஞ்சகத்தனமான செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியும், மன வேதனையையும் அளிப்பதாக உள்ளது. இத்தகைய நயவஞ்சகச் செயல்களால் இந்தியாவை அடிபணியவைத்துவிட முடியாது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘‘இதுபோன்ற அப்பட்டமான வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது’’ என்று கூறிய அவர், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார்[10].  உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த இந்தியாவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

  • வழக்கம் போல இப்படி பேசி ஏமாற்றுவது இவரின் வேலையாக இருக்கிறது.
  • ஜம்முகாஷ்மீரில்நிகழ்ந்துள்ளசம்பவம்அதிர்ச்சியும், மனவேதனையையும்அளிப்பதாகஉள்ளது: இந்த வாய் சவடாலால் என்ன ஆகப் போகிறது? போன உயிர்கள் வந்து விடுமா?

Sonia with friends at a Cambridge Pubஅரசு மீது வீரர்கள் குடும்பத்தினர் புகார்[11]: பூஞ்ச் பகுதியில் நேற்று இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரர்களின் குடும்பத்தினர்கள் மத்திய அரசு மீது புகார் தெரிவித்துள்ளனர். வீரர்கள் தாக்கப்படுவது ‌தொடர்கதையாகி வருவதாகவும், அரசு இதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவி‌ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர். இத்தகைய பொறுப்பற்ற தன்மைக்கு தார்மீக பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மணீஸ் திவாரி இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்கிறார். ஆனால், அவ்வாறு செய்ததே அந்தோனிதான் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளாது. மக்கள் வரும் தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டியே ஆக வேண்டும். இல்லையென்றால்,வட இந்தியாவின் பெர்ம் பகுதி, பாகிஸ்தான்-சீனா ஆக்கிரனித்து விடும். அதற்கு இந்த கேடு கெட்ட காங்கிரஸ்காரர்களே வழி செய்து கொடுப்பார்கள்.

வேதபிரகாஷ்

© 07-08-2013