செபாஸ்டியன் சீமான் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுவது ஏன் – யாசின் மாலிக்கின் தூண்டுதலா, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவா?

செபாஸ்டியன் சீமான் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுவது ஏன் – யாசின் மாலிக்கின் தூண்டுதலா, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவா?

Jawaharulla and Sebastian begging pardonஎல்டிடிஇ.ஐ எதிர்க்கும் முஸ்லிம் இயக்கத்தாரிடம் மன்னிப்புக் கேட்டு,  பிரபாகரனை தூஷிக்கும் கும்பலோடு கூட்டு ஏன்?: ஒரு முஸ்லிம் இணைத்தளம் இப்படி கூரியுள்ளது[1], “இனி இரு தரப்பிலும் நிகழ்ந்த கடந்தகால கசப்புகளை பெருந்தன்மையோடு மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும், இது குறித்து இலங்கை முஸ்லிம் தலைமைகளையும், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் நமது முன்னிலையில் சந்திக்க வைத்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது”. இதனிடையே ஜனவரி 16, 2011 அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற கருத்தரங்கில் சீமானும் அழைக்கப்பட்டிருந்தார். அதில் பேசிய சீமான், “கடந்த காலத்தில் புலிகள் & முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள் ளன. புலிகள் சார்பில் நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசியதும்”, அரங்கமே அதை வரவேற்று ஆதரித்தது.

Kolattu Mani with Muslims demonstration on the roadபுலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும்,  அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம்: 2011ல் இப்படி பேசிய சீமான், இப்பொழுது 2013ல் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுகிறார் என்றால், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் மற்ற எல்லாத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். செபாஸ்டியன் சீமான் கிருத்துவராக இருந்துதான் செயல்பட்டு வந்து, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் என்று வெளிநாடுகளிலும் இவரது தீவிரவாத தொடர்புகளால் நாடு கடத்தப்பட்டார். பிறகு, வெளிநாடுகளில், இனிமேல் தனது பிரச்சாரம், விளம்பரம், படோபடம் முதலியவை எடுபடாது என்றதும், உள்நாட்டில் இந்தியத் தமிழர்களைக்  குழப்ப ஆரம்பித்தார். பிறகு அதுவும் எடுபடவில்லை என்றதும், முஸ்லிம்களுக்குத் துணைபோகலாம் என்று தீர்மானித்துள்ளார் போலும். அதாவது, இலங்கைத் தமிழரை “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தி விட்டப் பிறகு, இனி முஸ்லிம்களை தாஜா செய்தால், வேறுவிதமாக ஆதரவு, பலன், அரபு நாடுகளில் அழைப்பு-பிரயாணம் முதலியவை கிடைக்கும் என்ற எண்ணத்தில் முடிவு செய்து விட்டார் போலும்.

Kolattu Mani with Muslims - supporting communal reservationசெபாஸ்டியன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதியது எதுவும் இல்லை: ஏற்கெனவே பெஙளூரில் நடந்த கூட்டம் மற்றும் “தி ஹிந்து”வில் வெளிவந்துள்ள செய்திகளைத் தாம், இவர் தனது அறிக்கை என்று வெளியிட்டுள்ளார். போலீஸாரின் வேலைக்கு எதிராக எப்படி முஸ்லிம் இயக்கங்கள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டிருக்கின்றன என்பதனை ஏற்கெனவே விவரமாக இக்கட்டுரையில் விளாக்கியுள்ளேன்[2]. “ஆள்-கொணர்வு மனு” தாக்கல் செய்த பிறகு, சட்டப்படித்தானே, நடவடிக்கை எடுக்கப்படும். பிறகு ஏன் இப்பொழுது, சீமான் உருவில் அந்த ஆதரவு வரவேண்டும்? அதிலும் குறிப்பாக கடலூர் பிரச்சினைக்குப் பிறகு வரவேண்டும்.

Kolattur Mani with Viduthalai Rajendran etcஏற்கெனெவே உள்ள மாவை திருப்பி அரைக்கும் சீமான் கூட்டம்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்[3] கூறியிருப்பதாவது[4]: “கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், கோவை கோட்டை மேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல் துறையினர், கைது செய்ய திட்டமிட்டிருந்த இளைஞர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க எந்த பொருளையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். ஆனால் கர்நாடக காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 600 கிராம் வெடி பொருட்கள் அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கோவை மாநகர ஆணையர் மறுத்துள்ளார். சோதனையின் போது சந்தேகிக்கத்தக்க எந்த பொருளும் கைப்பற்றப் படவில்லை என்று கோவை மாநகர ஆணையர் தெளிவாக அறிக்கையும் கொடுத்துள்ளார்.

 nallakannu_thiruma_ansari_maniஎஸ்டிபிஐ எழுதி கொடுத்தது போலிருக்கிறது:  அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பீர் முகமதுவுடன் தங்கியிருந்தார் என்று ஒரே காரணத்திற்காக அலியப்பா என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது கர்நாடக காவல்துறை. ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே, கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப் படுத்தாமலேயே அவரை காவலில் வைத்து விசாரித்துள்ளனர்.என்னிடம் காவல் துறையினர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, எனவே விடுதலை செய்து விட்டனர்என்று அலியப்பா பெங்களூருவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கர்நாடகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அலியப்பாவை விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். ஆனால், அவரால் எங்கு எப்படி செல்வது என்று கூட தெரியாமல் திணறியுள்ளார். கர்நாடகத்தில் இயங்கிவரும் மக்களுக்கான மனித உரிமை சங்கம் வழிகாட்டி பாதுகாத்து அழைத்துவந்துள்ளது. மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க முற்பட்ட தேச புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), விட்டுவிட்டு சென்றுவிட்டது! ஆனால் கர்நாடக காவல்துறையினர் இன்னமும் தமிழ்நாட்டுக்குள் வந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்காக என்ற பெயரில் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே சட்டத்திற்குப் புறம்பாக நடத்துகின்றனர்[5].

 Yasin malik sitting with Yafiz Sayeedமுஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது: இது தடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.

 Afzal-Hyderabad-Kasab-nexusஇந்தியாவில் இந்தியர்களாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளே  நடக்காதே: ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்குரிய சட்ட ரீதியான வழிமுறைகளை கையாளாமல் கைது செய்வதும், அடிப்படை ஆதாரமின்றி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட நபர் சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளாரே என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயமலும் காவல்துறை செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோவையில் ஒரு முறை குண்டு வெடிப்பு நடந்துவிட்டது என்பதற்காகவும், என்றோ நடந்த ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காகவும், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவையிலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்துவரும் முஸ்லீம் இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இப்படிப்பட்ட காவல் துறை அத்துமீறல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படும் ஒரு மன நிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. ஏப்ரல் மாதத்திலேயே, இவ்வழக்கை சிபிஐ எடுத்து நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ அமைப்பு ஆர்பாட்டம் செய்தது[7], போஸ்டர்கள் ஒட்டியது.

Sebastian Seeman with Yasin Malikசந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம்,  போலீஸாரின் மீது சந்தேகத் தைவளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[8]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[9]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[10].

Why Muslim protest against the revival of LTTE in Munnarபெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள்  என்பதனை அறிந்து கொள்ளலாம். செபாஸ்டியன் சீமானும் இதில் சேர்ந்தது, அவரது சுயரூபத்தைக் காட்டுகிறது எனலாம்.

ள்ஏதமிழ் ஜிஹாத், தமிழ் தீவிரவாதம், தமிழ் பயங்கரவாதம் என்று ஆரம்பித்தாலும் ஒடுக்கப்பட வேண்டும்: தமிழ் ஜிஹாத், தமிழ் தீவிரவாதம், தமிழ் பயங்கரவாதம் என்று வேறு உருவில் தமிழகத்தில், வேலை செய்ய சில குழுக்கள் தயாரானால், நிச்சயமாக சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். இச்செயல்களினால்தா, தமிழ்நாட்டில் மறுபடியும் “அல்-உம்மா” தலையெடுக்கிறாதா என்ற கேள்வி ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளது[11]. முஸ்லிம்கள் முதலில் அத்தகைய தொடர்புகளை, மூலங்களை, ஊக்குவிப்புகளை நிறுத்த வேண்டும். நாடு, ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், இந்திய விரோதிகள் என்று அவர்களுக்காக மட்டும் இல்லை. அவர்கள் அப்படி குரூர-கொடிய கொலைகளை, கழுத்தறுப்புகளை செய்து கொண்டிருந்தால், மற்றவர்கள் கண்டித்திருக்க வேண்டும். மனைவி-மக்கள், தாயார்-சகோதரிகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோல நடக்கவில்லை[12]. அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்றாகிறது. மேலும், இக்குண்டுவெடிப்பைப் பொறுத்த வரைக்கும், ஏற்கெனவே குண்டுவெடிப்புகளில் மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்குப் போனவர், தேடப்பட்டு வருபவர்[13], என்றுதான் உள்ளனர்[14] எனும்போது, தார்மீகரீதியில் இத்தகைய கோரிக்கைகள் ஏன் எழுகின்றன என்று தெரியவில்லை[15]. “பாஸ்டன் முதல் பெங்களூரு வரைதீவிரவாதத்தை அணுகும் முறைகள்ஏப்ரல் 15 முதல் 22 வரை” என்ற தலைப்பில் நான்கு பகுதிகளாக இவ்விஷயம் அலசப்பட்டுள்ளது[16].

 

வேதபிரகாஷ்

27-04-2013


[7] Protesting the arrest of 4 people of Melappalayam, Tirunelveli a demonstration took place near the Melappalayam market on behalf of STPI. During the protest the state leader of SDPI Dhehlan Baqavi said, the investigation of the Bangalore bomb blast case to be handed over to the CBI.

http://sathiyam.tv/english/districts/thirunalveli/sdpi-protested-to-handover-bomb-blast-case-to-cbi

[9]  டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….

http://secularsim.wordpress.com/2013/04/27/bangalore-blast-police-investigation-human-rights-thwarting-legal-action/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “செபாஸ்டியன் சீமான் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுவது ஏன் – யாசின் மாலிக்கின் தூண்டுதலா, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவா?”

  1. Adhavan Villavan Says:

    1. இலங்கை முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்களை விரோதிகளாக மதிக்கின்றனர்.

    2. பிரபாகரனை அன்றே கொடுமைக்காரன், அரக்கன், சைத்தான் என்றெல்லாம் வர்ணித்தனர், சித்திரத்தினர்.

    3. அவன் மீது “ஜிஹாத்” என்றும் அறிவித்தனர். அரசு படையினருக்கு தகவல்களும் கொடுத்தனர்.

    4. இன்றும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மறுபடியும் தோன்றவிடக்கூடாது என்று வெளிப்படையாகவே போராட்டங்கள் நடத்துகின்றனர்.

    5. பிரபாகரன் மறைவிடத்தை அருங்காட்சியகமாக மாற்றி விட்டப் பிறகு, முஸ்லிம்கள்தாம் அதிக அளவில் சென்று பார்த்து வருகின்றனர்.

    6. இலங்கையில், இப்படியிருக்கும் போது, தமிழகத்தில் முஸ்லிம்கள் வேறு மாதிரி நாடகம் ஆடுவது துரோகம் ஆகும்.

    7. மேலும், இலங்கை முஸ்லிம்கள், ஒரு புறம் பௌத்தர்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டு, மறுபக்கம், இந்துக்களைடமும் பகமை பாராட்டி வருகின்றனர்.

    8. வளைகுடா நாடுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமும் உதவி பெற்று, முஸ்லிம்கள் என்ற ஸ்தானத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர். இதனால், இந்திய இறையாண்மைக்கும் எதிராக செயல்படுகின்றனர்.

    9. தமிழக தமிழர்கள் அல்லது திராவிட சித்தாந்திகள் இன்னும், தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளம் காட்டாமல் ஏமாற்றி வருகின்றனர். இவ்வகையிலும் அவர்கள் முஸ்லிம்களுக்கு சாதகமாகத்தான் உள்ளனர்.

    10. ஆக இப்படி எல்லா காரணிகளையும் வைத்துப் பார்க்கும் போது, சீமான் முஸ்லிம்களுக்குத் துணை போகிறார் என்பது திண்ணம். ஏனெனில், “கடந்த காலத்தில் புலிகள் & முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. புலிகள் சார்பில்நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும்புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம்”, என்று கேட்டுக் கொள்ள அவருக்கு எந்த யோக்கியதையோ, பாத்தியதையோ, யோக்கியதையோ இல்லை.

  2. Adhavan Villavan Says:

    இனி தமிழ்-முஸ்லிம் உறவில், தமிழர் தரப்பை குற்றம்சாட்ட எவருக்கும் தகுதி இல்லை!
    Published On: Tue, Sep 25th, 2012

    இனி தமிழ்-முஸ்லிம் உறவில், தமிழர் தரப்பை குற்றம்சாட்ட எவருக்கும் தகுதி இல்லை!

    ஹக்கீமினது முடிவு – இதுவரை தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து உரத்துப் பேசி வந்த குறிப்பாக, அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர் தரப்பையே அதிகமாக குற்றம்சாட்டி வந்த அனைவருக்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். இனி தமிழ்-முஸ்லிம் உறவில், தமிழர் தரப்பை நோக்கி விரல் நீட்டும் தகுதிப்பாடு எவருக்கும் இருக்கப் போவதில்லை. முஸ்லிம் சமூகம் விடுதலைப்புலிகளின் மோசமான நடவடிக்கைகளாலும், முஸ்லிம் காடையர்கள் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மீது புரிந்த அட்டூழியங்களாலும், தமிழ்-முஸ்லிம் வெகுசனங்கள் மத்தியில் ஒரு வெறுப்பும் விரிசலும் ஏற்பட்டிருந்தது உண்மை. ஆனால் இரு சமூகங்களுக்குமான தேவைப்பாடு இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தந்த அனுபவங்களை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை வழங்கியிருக்கிறது. அதற்கான ஒரு அரிய சந்தர்ப்பத்தையும் காலம் வழங்கியது. ஆனால் அதனை சரியாக பற்றிப்பிடித்துக் கொள்ளக் கூடிய தலைமை முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை.

    சில நாட்களாக ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இப்போது தெளிவாகிவிட்டது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியுடன், அதுவரை ஒரு புதிராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் வெள்ளிடைமலையானது. தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க மாட்டோம், கிழக்கின் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். அதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – இவ்வாறெல்லாம் ஹக்கீம் சமீபநாட்களாக ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். இறுதியில் அவற்றுக்கு எந்த பெறுமதியும் இல்லாமல் போய்விட்டது. இன்று ஹக்கீம் தன் முடிவால் – தனது கருத்துக்களுக்கு தானே விசுவாசமானவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

    ஹக்கீமின் மேற்படி முடிவு தமிழ் சமூகத்திற்கு பெரியளவில் ஆச்சரியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஹக்கிம் தலைமையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இறுதித் தெரிவு பெரும்பாலும் இவ்வாறுதான் அமையும் என்பதை ஏற்கனவே கணிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை கையாளும் பிரதான தலைமை என்னும் வகையில், த.தே.கூட்டமைப்பு இயலுமானவரை முஸ்லிம் காங்கிரசின் வருகைக்காக காத்திருந்தது. தனது நிலைப்பாட்டில் உறுதியையும் வெளிப்படைத் தன்மையையும் காண்பித்திருந்தது.

    அரசாங்கம் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கிழக்கின் தேர்தல் வெற்றியை அறிவிக்க முடிந்த போதும், அரசின் சார்பில் போட்டியிட்ட ஒருவரை முதலமைச்சராக நியமித்த பின்னர்தான் உண்மையிலேயே கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதற்காகக்தான் இத்தனை நாட்களாக முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் பேரம் பேசலில் ஈடுபட்டது. கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஒரு ஆட்சியை அமைத்துவிடக் கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் பிரதான இலக்காக இருந்தது – அவ்வாறானதொரு கூட்டு ஆட்சி கிழக்கில் ஏற்படுமாயின், அது மத்திய அரசின் தீர்மானங்களை எதிர்க்கும் ஒரு மாகாண ஆட்சியாக அமைந்துவிடும் என்பதே அரசாங்கத்தின் அச்சமாக இருந்தது. இதன் காரணமாகவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்ற ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.

    வட மகாணசபை தேர்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய அழுத்தங்களை தொடர்ந்தும் அரசால் தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் அடுத்த ஆண்டு தேர்தலை அறிவிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும். எனவே வடக்கின் மாகாணசபை அதிகாரமும் கிழக்கின் ஆட்சியதிகாரமும் ஒரே சமயத்தில் அரசுக்கு எதிரானவர்களின் கையில் இருக்குமாயின், இவ்விரு மாகாணசபைகளும் ஒன்றிணைந்து செலாற்றுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றும் நிலைமையும் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளை அரசாங்கம் துல்லியமாக மதிப்பிட்டதன் காரணமாகவே, கிழக்கில் தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் முதல்வராக இருக்க வேண்டுமென்பதில் இந்தளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டது. இந்த பின்புலத்தில்தான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினரான நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    அரசாங்கம் இவ்வாறு சிந்திப்பது ஆச்சரியமான ஒன்றல்ல ஆனால் தேர்தல் மேடைகளில் அரசுக்கு எதிராக த.தே.கூட்டமைப்பையும் விஞ்சிவிடுமளவிற்கு வார்த்தைகளை தாறுமாறாக அள்ளி வீசிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு அரசின் முடிவுக்கு இணங்கினார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேராதுவிட்டாலும் கூட, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்குத்தான் ஹக்கீம் முதலமைச்சர் பதவியை கோருவார் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இறுதியில் அதனையும் ஹக்கீம் தியாகம் செய்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும் ஒருவருக்கு முதலமைச்சர் ஆசனத்தைத் தருவதற்கு தயாராக இருந்த நிலையிலேயே, ஹக்கீம் இவ்வாறானதொரு விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கிறார். ஹக்கீம் இத்தகையதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதற்கு பின்னணியாக இருந்த காரணி எதுவாக இருக்க முடியும்?

    ஹக்கீம் மத்திய அரசில் அமைச்சராக இருந்த நிலையிலேயே கிழக்கில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்திருந்தார். அந்த வகையில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அதன் தனித்துவமான தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளாகும். இவ்வாறான வாக்குபலத்தைக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பேரம் பேசலில் ஈடுபடுவது தவறான ஒன்றல்ல. யாருடன் இருப்பது தங்களுக்கு உகந்தது என்பதை, பேரம்பேசி தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம் காங்கிரசுக்கு உண்டு. ஆனால் அந்த பேரம்பேசலின் முடிவு, முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவியதா அல்லது இல்லையா என்பதுதான் கேள்வி. இன்று ஹக்கீம் எடுத்திருக்கும் முடிவிலிருந்து சிந்திக்கும் ஒருவர், ஹக்கீமிடம் அவ்வாறானதொரு உறுதிப்பாடு இல்லை என்பதை காண்பதில் சிரமப்பட வேண்டியதில்லை.

    ஹக்கீம் ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான விடைகளை ஆராய்வது முஸ்லிம் சமூகத்திற்குரியது. ஹக்கீம் தனது பதவி நலன்களை முன்னிறுத்தித்தான் இத்தகையதொரு முடிவை எடுத்தார் என்பது தமிழ் சூழலின் புரிதலாக இருக்கிறது. ஆனால் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? ஹக்கீம் தனது முடிவுக்கான விளைவுகளை விரைவில் அனுபவிப்பார் என இரா.சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அது முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்படும் விழிப்புணர்வைப் பொறுத்தது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை – ஒரு அரிய வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமினது முடிவால் கைநழுப் போயிருக்கிறது. தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியலாக முன்னெடுப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு இரு பகுதி தலைமைக்கும் வாய்த்தது. இதில் தமிழர் தலைமை உறுதியுடனும் தெளிவுடனும் இருந்தது.

    ஹக்கீமினது முடிவு – இதுவரை தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து உரத்துப் பேசி வந்த குறிப்பாக, அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர் தரப்பையே அதிகமாக குற்றம்சாட்டி வந்த அனைவருக்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். இனி தமிழ்-முஸ்லிம் உறவில், தமிழர் தரப்பை நோக்கி விரல் நீட்டும் தகுதிப்பாடு எவருக்கும் இருக்கப் போவதில்லை. முஸ்லிம் சமூகம் விடுதலைப்புலிகளின் மோசமான நடவடிக்கைகளாலும், முஸ்லிம் காடையர்கள் கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மீது புரிந்த அட்டூழியங்களாலும், தமிழ்-முஸ்லிம் வெகுசனங்கள் மத்தியில் ஒரு வெறுப்பும் விரிசலும் ஏற்பட்டிருந்தது உண்மை. ஆனால் இரு சமூகங்களுக்குமான தேவைப்பாடு இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தந்த அனுபவங்களை கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை வழங்கியிருக்கிறது. அதற்கான ஒரு அரிய சந்தர்ப்பத்தையும் காலம் வழங்கியது. ஆனால் அதனை சரியாக பற்றிப்பிடித்துக் கொள்ளக் கூடிய தலைமை முஸ்லிம் சமூகத்திற்கு இல்லை.

    முஸ்லிம் சமூகத்தின் தலைமை இவ்வாறு நடந்து கொண்டது குறித்து தமிழர் தரப்பில் அதிருப்திகள் உண்டு. ஓர் இக்கட்டான சூழலில் முஸ்லிம் தலைமை காலை வாரிவிட்டது என்னும் ஒரு கருத்து, இன்று தமிழ் வெகுசன அபிப்பிராயமாக மாறியிருக்கிறது. இந்த இடத்தில் முன்னர் முஸ்லிம் சமூகம் விட்ட தவறை தமிழ் சமூகம் விட்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையை இப்பத்தி பதிவு செய்ய விரும்புகிறது.

    தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து நிற்க வேண்டுமென்னும் அபிப்பிராயத்திற்கு ஆதரவானவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்தனர். முஸ்லிம் சமூகத்தின் சிந்திக்கும் தரப்பினர் மத்தியிலும் அவ்வாறானதொரு கருத்திற்கு வலுவான ஆதரவு நிலவியது. இவ்வாறானதொரு சூழலில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கிறார். எனவே தலைமையில் இருப்போரின் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் முடிவாக பார்ப்பது தவறானதாகும். முன்னர் புலிகளின் சில முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் முடிவாகவே முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டது. இதுவே பிற்காலங்களில் முஸ்லிம்கள் தமிழர் விரோத அரசியலுக்கு முண்டு கொடுப்பதற்கு காரணமாகியது. எனவே முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தவறான முடிவை எடுத்திருந்தாலும், தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆரோக்கியமான உரையாடலுக்கான கதவு இன்னும் திறந்தே இருக்கிறது.

  3. செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் Says:

    […] [16] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/30/how-and-why-sebastian-seeman-support-anti-ltte-m… […]

பின்னூட்டமொன்றை இடுக