ஹாவிஸ் சையதும், இந்திய அரசியல் துரோகிகளும்: சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது (2)?

ஹாவிஸ் சையதும், இந்திய அரசியல் துரோகிகளும்: சோனியாக்களும், அந்தோனிகளும், குர்ஷித்துகளுமா இந்தியாவின் வீரத்தை, தைரியத்தை, பராக்கிரமத்தை நிர்ணயிப்பது (2)?

 

 Hafiz-saeed-details

ஹாவிஸ்  சையதுக்குக் கொடுக்கப்படும் ஊடக முக்கியத்துவம்: உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியவன், ஹபீஸ் மொஹம்மது சயீத். பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜமாத்-உத்-தாவா [Jaamat-ud-Dawa (JuD)] இயக்கத்தின் தலைவனாகவும், லஸ்கர்-இ-தொய்பாவை [Lashkar-e-Taiba (LeT)]த் தோற்றுவித்தவனுமான    இருக்கும் இவனது தலைக்கு அமெரிக்க அரசு 2 கோடி டாலர் சன்மானம் அறிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிம் போல, பாகிஸ்தானில், இவனும் தாராளமாக உலவி வருகிறான். ஜனாதிபதியைவிட, இவனுக்குத்தான் இங்கு மவுசு அதிகம். சுதந்திரதின விழாவின் போது கூட இவனுக்குத்தான் கூட்டம் ஜாஸ்தி, ஊடகங்களின் கவரேஜும் ஜாஸ்திதான்!

 Supporters greet Hafiz Saeed after Eid prayers in Lahore, Pakistan

மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய அறிவிக்கப்பட் டகுற்றவாளி: 26-11-2008 அன்று மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவன் ஹபீஸ் சயீத் கான் என்று இந்திய உளவுத் துறை போலீசார் உறுதியாக நம்புகின்றனர். மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தீவிரவாதிகள் 10 பேர் உள்பட 166 பேர் பலியாகினர். 600க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு 21-11-2012 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசால் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சர்வ சுதந்திரமாக சுற்றி வருகிறான். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, நச்சுக் கருத்துகளை பாகிஸ்தான் மக்களுக்கிடையே விதைத்து வருகிறான். அவனை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை பாகிஸ்தான் நீண்ட காலமாகவே புறக்கணித்து வருகிறது. 

 Hafiz threatened to attack Delhi

பாகிஸ்தான் சுதந்திர தினவிழா  (14-08-2013): இந்நிலையில், ஜமாத்-உத்-தாவா சார்பில் பஞ்சாப் மாகாண சட்டசபை அருகே பேரவைக்கு வெளியே, 14-08-2013 அன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் ஹபீஸ் சயீத் பங்கேற்றான்[1]. நீலா கும்பாட் பகுதியில் இருந்து பைசல் சதுக்கம் வரை நடந்த பேரணிக்கு தலைமையேற்று அவனுக்கு நீலச் சீருடை அணிந்த தீவிரவாதிகள் பாதுகாப்பாக வந்தனர். அந்த கூடுதலுக்கு “தக்மீல்-இ-பாகிஸ்தான் கார்வா” [ Takmeel-i-Pakistan Karwan] என்று பெயரிட்டனர்[2]. சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற சுதந்திர தின விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவன், இந்தியாவிற்கு எதிராக பேசினான்.

 10Fir03.qxp

இந்தியாவிற்கு எதிராக பேச்சு: ஹாவிஸ் சையது வழக்கம் போல, இந்திய-விரோத பேசூகளை அள்லிக் கொட்டினான்: “தொடர்ந்து என்னை தீவிரவாதி என்கிறாய், ஆனால், நான் தீவிரவாதி இல்லை. 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது[3]. உனக்கு திருப்தியில்லையென்றால், என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாகிஸ்தானும், இந்தியாவும் சேர்ந்து அந்தந்த நாடுகளைக் கொண்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு கூட்டு விசாரணை குழுவை ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவின் முன் ஆஜராகி நான் நிரபராதி என்பதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்”, கூறினான்[4].

 Afzal-Hyderabad-Kasab-nexus

எல்லையில்  இந்திய  வீரர்கள்  கொல்லப்  பட்டபோது,   நான்  மசூதியில்  உபதேசம்  செய்து  கொண்டிருந்தேன்: ஹாவிஸ் சையது தொடர்கிறான், “எல்லையில் ஏற்பட்ட கொலைகளுக்கும் நாந்தான் காரணம் என்கிறாய். ஆனால், அப்பொழுது நான் மஸ்ஜித்-அல்-கட்சியா [Masjid Al-Qadsia] என்ற மசூதியில் உபதேசம் செய்து கொண்டிருந்தேன். முதலில் நீ எல்லைகளிலிருந்து, உனது துருப்புகளை விலக்கிக் கொள்ளவேண்டும்”, என்றெல்லாம் பேசினான்[5]. ஜமாத்-உல்-தாவா [Jaamat-ud-Dawa (JuD)] வின் தலைவரன் ஹாவிஸ் அப்துல் ரஹ்மான் மக்கி [Hafiz Abdul Rehman Makki] மற்றும் சர்தார் ஷம்சிங் என்ற பஞ்சாபின் குருத்வார கமிட்டியின் தலைவரும் கூட இருந்தனர். மூல்தானில் அவனின் ஆட்கள் இந்தியக் கொடியை எரித்து, சையீதுக்காக உயிரையும் தியாகம் செய்வோம் என்று சூளுரைத்தனர்[6]. 09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று லாகூர் ஸ்டேடியத்தில் ஈத் தொழிகைக் கூட்டத்தில் பங்குக் கொண்டான்[7].

 Yasin malik sitting with Yafiz Sayeed

நான் இந்தியாவிற்கு வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்:  மேலும், ஹாவிஸ் சையது தொடர்கிறான் “என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நானே இந்தியாவிற்கு வருவேன். எங்களுடைய தண்ணீரை உபயோகப் படுத்து மின்சாரம் உற்பத்தி செய்கிறாய். எங்கள் நாட்டில் குறிப்பாக பலூச்சிஸ்தானில் ஏற்படும் குண்டுவெடிப்புகளுக்கு நீதான் காரணம். காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்களைக் கொல்கிறாய்‘ என்று அடுக்கிக் கொண்டே போனான்[8].

 CM just assured that is all

இந்தியாவுக்கு ஹபீஸ் சயீத் சவால்[9]: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தனக்கு தொடர்பு உள்ளது என்பதை இந்தியாவால் நிருபணம் செய்ய முடியுமா என லஷ்கர் தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார், மேலும் அவர், எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தனக்கு தொடர்பு உள்ளது என இந்தியா மீடியாக்கள்செய்தி வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தான் மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆனால் தனது இயக்கத்தை சேர்ந்த ஆட்கள் யாரும் பாகிஸ்தான் ராணுவத்தில் இல்லை என கூறியுள்ளான்[10].

IM-3

தொலைபேசி மூலம் பிரிவினைவாதிகள் பிரச்சாரம்: சையது சப்பீர் ஷா [Sayed Shabbir Shah], அசியா இன்ட்ரபி [Asia Indrabi] மற்றும் சையது அலி ஜிலானி [ Sayed Ali Gilani] முதலிய பிரிவினைவாத தலைவர்கள் தொலைபேசி மூலம் பேசினர்[11]. காஷ்மீரில் அலைபேசிகளுக்கு கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் எப்படி இந்தியாவிலிருந்து, இப்படி பாகிஸ்தான் கூட்டத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. உமர் அப்துல்லாவிற்கு இதெல்லாம் தெரியாமல் நடக்கிறதா? அல்லது பேனாவில் ரத்தைத்தை நிரப்புவேன் என்று வெறிபிடித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு தெரியாதா? இல்லை உள்துறை அமைச்சர் வேடம் போதும் சிதம்பரத்துக்குக் கூட தெரியாதா?

 10Fir12-13.qxp

ராஹாவிஸை கொலை செய்ய சதி செய்துள்ளது: இதற்குள் பாகிஸ்தானின் ஊடகங்கள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பு துறை எனப்படுகின்றா “ரா” [RAW (Research and Analysis Wing)] மூலம் விஸை கொலை செய்ய சதி செய்துள்ளது என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர்[12]. ஆப்கானிஸ்தானில் வேலை செய்துவரும் “ரா” உளவாளிகள், பாகிஸ்தானில் அடியாட்களை வைத்துக் கொண்டு, இந்த திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளனர்[13].

 

Hunt is on for new Pakistani Army Chief[14]

As General Ashfaq Parvez Kayani is to retire in November, mystery shrouds who will succeed him. Amid skirmishes between Pakistani and Indian troops at the LoC and the withdrawal of NATO forces from Afghanistan, the appointment of a new chief will be at the top of PM Nawaz Sharif’s priority list.

The Army has a history of toppling elected governments and, as such, Prime Ministers have always tried to appoint a trusted general as army chief to minimise the threat of a coup. According to local media reports, the names of five generals are doing the rounds for the position: 

  • Lt. Gen. Muhammad Haroon Aslam: A commando of the Special Services Group of the Pakistan Army.Currently Chief of Logistics Staff, General Headquarters, and Colonel Commandant of the Azad Kashmir Regiment. Due to retire April 9, 2014. 
  • Lt. Gen. Rashid Mehmood: Chief of General Staff and due to retire April 9, 2014. 
  • Lt. Gen. Raheel Sharif: I-G, Training and Evaluation at GHQ. Retires October 1, 2014. 
  • Lt. Gen. Tariq Khan: commander of I Strike Corps at Mangla. Retires Oct. 1, 2014. 
  • Lt. Gen. Muhammad Zaheer ul-Islam: ISI chief. Retires Oct. 1, 2014.

According to Pakistan’s Constitution, the outgoing army chief advises the PM to appoint a senior general as the next Chief. But keeping in view the power the Army Chief commands, heads of state have appointed junior generals over their seniors.

Nawaz Sharif appointed Pervez Musharraf as Army Chief in 1998, allowing him to supersede senior generals. Musharraf finally toppled his government in October 1999.

 

இப்பொழுதுள்ள அஸ்பக் பர்வீஸ் கயானி [Ashfaq Parvez Kayani] என்ற பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஓய்வுப் பெறப் போவதால். யார் அப்பதவிக்கு வருவார், அதனால் என்னாகும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது[15]. ஆனால், இந்தியாவில் இருக்கும் அரசியல் துரோகிகள் இந்திய நலன்களுக்கு எதிராக, பாராளுமன்றத்திலேயே பேசி வருகிறார்கள் என்பதனை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

15-08-2013


[1] மாலைமலர், மும்பைகுண்டுவெடிப்புதொடர்பானகூட்டுவிசாரணையின்முன்ஆஜராகதயார்: ஹபீஸ்சயீத்அறிவிப்பு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 15, 4:04 AM IST

[9] தினமலர், இந்தியாவுக்குஹபீஸ்சயீத்சவால், பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013,20:41 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013,20:43 IST

[13] Pakistani security agencies have unearthed a network of India’s premier intelligence agency, the Research and Analysis Wing (RAW), in Lahore which was plotting to assassinate Hafiz Muhammad Saeed, founder of the banned jihadi outfits –Lashkar-e-Tayyaba and Jamaatud Daawa. The plot was revealed during investigations into the gruesome killing of Khalid Bashir, the chief security officer of Hafiz Saeed. Intelligence sources told Pakistan Today that the plot to assassinate Saeed and his close aides was hatched in Dubai allegedly by a RAW agent identified only by one name – Vinod. “On May 15, 2013, Khalid Bashir, a 42-year-old father of seven, was abducted from Lahore by Zafar Qayyum and Bilal Ahmed Cheema, both of whom were enlisted by RAW during their jihadi operations in Afghanistan. Bashir’s body was later found from the Upper Chenab Canal in Sheikhupura on May 17. The body bore multiple torture marks and bullet wounds,” said the sources.

http://www.pakistantoday.com.pk/2013/08/07/news/national/raw-duped-jihadis-into-killing-hafiz-saeeds-security-chief/

குறிச்சொற்கள்: , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக