Posts Tagged ‘வெள்ளையர்’

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (1)!

ஜூன்5, 2016

ஆங்கிலேய குழந்தைக் கற்பழிப்பாளியின் சென்னை, ஆம்பூர், பெங்களூர், ஹூப்ளி விஜயம்: கிருத்துவ அனாதை இல்லங்களுக்கு வந்த விவகாரங்கள் (1)!

UK pedophile in Fernades bangalore orphanageகோவா, கேரளா என்று இப்பொழுது பெங்களூரு பிடோபைல்களின் நகரமாகிறதா?:  இந்தியா மறுபடி-மறுபடி குழந்தை (18 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமியர்) பாலியலுக்கு தொடர்ந்து அயல்நாட்டு பிடோபைகளினால் தாக்கப்பட்டு வருகிறார்கள். “செக்ஸ்-டூரிஸம்” போர்வையில் கோவா, கேரளா என்று இப்பொழுது சென்னைக்கும் வந்து விட்டது என்று தெரிகிறது. ஏற்கெனவே அனைத்துலக பிடோபைல்கள் சென்னையில் கைதான விசயங்கள் தெரிந்ததே. வில் ஹியூம் என்பவன் இங்கேயே தண்டித்து சிறையில் இருக்கிறான். மற்றவர்கள் தத்தம் நாடுகளுக்கு கைதாகி கூட்டிச் செல்லப்பட்டு, அங்கங்கு விசாரித்து தண்டனை கொடுக்கப்படுகிறது. இப்பொழுது, இன்னொரு பிடோபைலின் அக்கிரமங்கள் வெளி வந்துள்ளன. அவன் சென்னை, ஆம்பூர், ஹூப்ளி, பெங்களூரு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பெங்களூரு ஐ.டி நகரமாகிய பிறகு, அயல்நாட்டவர்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளனர். இதனால், அவர்களது வசதிக்கு ஏற்ப மது-மாது வசதிகள் பப்-ரெஸ்ட்ராரென்ட்-கிளப் போன்ற முறைகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

Richard Huckle pictures for daniel sanderson

Richard Huckle pictures for daniel sanderson

Huckle Fernades e-mail correspondence.1

 

Huckle Fernades e-mail correspondence.2

பெங்களூர் கிருத்துவ அனாதை இல்லத்துடன் தொடர்பு கொண்ட ஆங்கில பிடோபைல்: ரிச்சர்ட் ஹக்கில் [Richard Huckle] என்ற இங்கிலாந்து நாட்டு பிரஜை, பெங்களூரில் உள்ள நியூ ஹோப் பார் சில்ரன் ஹார்பனேஜ் [New Hope for Children Orphanage] என்ற கிருத்துவ அனாதை இல்லத்திற்கு வந்துள்ள செய்தி உலக செய்திகளில் அடிப்படுகிறது[1]. இந்த அனாதை இல்லத்தின் பொறுப்பாளரான பாஸ்டர் ஜியாஜ் பெர்னான்டிஸ் [pastor George Fernandes, 37]க்கு இ-மெயில் மூலம் அவன் தொடர்பு கொண்டு வந்தான்[2]. தான் ஒரு புகைப்படக்காரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த அனாதைல்லத்திற்கு வர விரும்பினான்[3]. “உங்களது மகத்தான சேவைப் பற்றி பேஸ்புக் மூலம் அறிந்தேன். ஆண்டவர் உமக்கு எல்லாவற்றையும் கொடுப்பாராக” என்ற ரீதியில் புகழ்ந்துள்ளான். வீடியோ எப்படி எடுப்பது அதனை தொகுப்பது முதலியவற்றைப் பற்றி சொல்லிக் கொடுப்பதாகவும், உதவுவதாகவும் சொல்லிக் கொண்டு மலேசியா, கம்போடியா, இந்தியா முதலிய நாடுகளுக்கு வந்து தனது குழந்தை கற்பழிப்பு வேலைகளை செய்துள்ளான்[4].

34DB160100000578-3622034-Sick_Richard_Huckle_raped_in_orphanages_and_care_homes_in_Malaysதெற்காசிய நாடுகளில் அவன் செய்துள்ள செக்ஸ்குற்றங்கள்[5]: ரிச்சர்ட் ஹக்கில் 14 கற்பழிப்புகள், ஐந்து புகைப்பட உறவுமுறை [டிஜிடல் பெனிட்ரேஷன், digital penetration] மற்றும் 31 பாலியல் ரீதியிலான தாக்குதல் – வன்புணர்வுகள் [sexual assaults] முதலிய செக்ஸ்-குற்றங்களை புரிந்துள்ளான். ஆறு வயது குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை அந்த காமக் கொடூரன். டீன்-ஏஜில் இருக்கும் சிறுவர்-சிறுமியர் என்றால் சொல்லவே வேண்டாம். 2013ல் பெங்களூக்கு வந்து அந்த அனாதை இல்லத்தில் தங்கியபோது, குழந்தைகளுடன் பாலியல் ரீதியில் விளையாடி இருக்கிறான். இந்த காமக்களியாட்டங்களை 2006 முதல் 2014 ஆண்டுகளில் செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளான். இவையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், அவன், செய்துள்ளான் எனும்போது, திகைப்பாக இருக்கிறது. அந்த 18 வயதுக்கு கீழுள்ள இளம்பெண்கள் மற்றும் பையன்களின் கதி என்ன, அவர்களின் பாதிப்பு எவ்வாறு குணமடையும், சீராகும், சாதாரண வாழ்க்கைக்கு ஏற்றப்படி மாறிவிடுவார்கள் முதலியவை கேள்விக்குறிகளாக இருக்கின்றன.

Huckle 9 year campaign of abuse across SEA2005 முதல் 2016 வரை நடந்தது என்ன?[6]: அயல்நாட்டவரைப் பொறுத்த வரைக்கும், பிடோபைல் என்பது ஒரு வியாதி, வெறி என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்களைத் தண்டிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

2005 – மலேசியாவிற்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வந்து ஓராண்டு தங்கினான்.

2006 – இரண்டு வாரங்கள் கம்போடியாவில் தங்கியபோது, இரு சகோதரிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தான்.

2007 – மறுபடியும் கம்போடியாவுக்கு வந்து அதே குடும்பத்துடன் தங்கினான். கிராமத்தில் படிப்பு சொல்லிக் கொடுத்தான்.

2011 – மலேசியாவுக்குத் திரும்பி, கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் ஐ.டி படிக்க சேர்ந்து கொண்டான். புகைப்படத் தொழிலும் செய்து வந்தான்.

2013 – பேஸ்புக்கில் அனாதை இல்லங்கள் பற்றிய விவரங்களை அறிந்து பெங்களூர் மற்றும் ஆம்பூருக்கு வந்தான்.

2014 – ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து போலீஸார் மூலம், தேசிய குற்றவியல் ஏஜென்சிக்கு, இவனைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன.

டிசம்பர் 2014 – ஹக்கில் தனது பெற்றோரை கிருஸ்துமஸ் நேரத்தில் பார்ர்க்க வந்தபோது, காட்விக் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டான்.

பிப்ரவரி 2015 – 90க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவன் மீது சாற்றப்பட்டது.

ஜூன் 2016 – மூன்று நாள் சிறைவாசம் மற்றும் செய்தியாக வெளியிடுவதற்கான காலம் முடிந்தவுடன், இப்ப்பொழுது இவ்விவரங்கள் வெளியிடப் படுகின்றன.

9616109726_7dbfe20a0f_c.jpg

Richard Huckle, Britain’s worst ever paedophile Social media grabs for Rebecca Camber

அனாதை இல்லம் துவக்கவும் ஆலோசனை கூறி ஆவணவிளம்பரப் படத்தை எடுத்துக் கொடுத்தது[7]: சென்னைக்கு வந்து, அங்கிருந்தி வேலூர், ஆம்பூர்[8], பெங்களூர், ஹுஉப்ளி என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளான். ஹூப்ளியில் ஒரு பாஸ்டரை சந்தித்துள்ளான். அந்த பாஸ்டர் ஒரு அனாதை இல்லம் துவக்கவும் ஆலோசனை கூறியுள்ளான். எந்த ஒரு பாஸ்டரும் அப்படி உடனடியாக ஒப்புக் கொள்வாரா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆவண-விளம்பரப் படத்தை எடுத்துக் கொடுத்து, அவன் அதனை யு-டியூப்பிலும் போட்டுள்ளான்.  இதனால் அனாதை இல்லங்கள் மற்றும் இவனைப் போன்ற பிடோபைகளுக்குள்ள தொடர்புக்களைத் தான் இது வெளிப்படுத்துகிறது. உண்மையில் சேவை செய்பவர்கள் இத்தகைய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏற்க்கெனவே இந்தியா செக்ஸ்-டூரிஸம் மற்றும் பிடோபைகளின் தாக்குதலில் உள்ளது என்ற விசயம் அனைத்துல செய்தியாகி விட்டது. ஆகவே, ஹுப்ளி மற்றும் பெங்களூரு பாஸ்டர்கள் அவனுக்கு இடம் கொடுத்துள்ளனர் என்பது பரஸ்பர ஆதாயங்களுக்குத் தான் என்று தெரிகிறது. இப்பொழுது அவன் மாட்டிக் கொண்டு விட்டதால், இவர்கள் மறுக்கலாம் மற்றும் விசயத்தை தலைகீழாக்கி, மாற்ற முயற்சிக்கலாம். இபொழுதே இந்த இனாதை இல்லத்துக் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்பது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, ஜாக்கிரதையாக செயல்பர்டுகிறார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை அக்குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு, பாலிய ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முடிவுகள் வந்து விட்டால் என்ன செய்வார்கள். அந்த ஊட்டி பாதிரி வழக்கு போல மூடிவிடுவார்களா?

© வேதபிரகாஷ்

05-06-2016

[1] https://www.facebook.com/NewHopeOrphanage

[2] mattersindia.com, How UK pedophile accessed Indian kids’ home , Published on: 1:45 am, June 4, 2016 Story By: mattersindia.com.

http://mattersindia.com/2016/06/how-uk-pedophile-accessed-indian-kids-home/

[3] IBTimes, Prolific pedophile Richard Huckle had visited Bangalore orphanage in 2013, June 4, 2016 15:16 IST, By Asmita Sarkar.

[4] http://www.ibtimes.co.in/prolific-pedophile-richard-huckle-had-visited-bangalore-orphanage-2013-681366

[5] Mailonline, Britain’s worst paedophile to worm his way into an Indian kids’, by sanjay jha in bangalore, india and richard shears in kuala lumpur, malaysia, for mailonline, PUBLISHED: 11:46 GMT, 3 June 2016 | UPDATED: 20:56 GMT, 3 June 2016.

[6] Read more: http://www.dailymail.co.uk/news/article-3622034/I-want-visit-orphanage-meet-children-bring-camera-Chilling-emails-Britain-s-worst-paedo-wormed-way-India-kids-home.html#ixzz4AexkIM6n; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] http://www.dailymail.co.uk/news/article-3622034/I-want-visit-orphanage-meet-children-bring-camera-Chilling-emails-Britain-s-worst-paedo-wormed-way-India-kids-home.html

[8] Ambur is located in the state of Tamil Nadu.  One of the problems that Ambur faces is polluted ground water, which is not potable.  This causes the community’s inhabitants to suffer with many ailment like bronchitis and tuberculosis.  Rev. Victor invited Appa George to help his village children at Machumbut. HHI has established a transformation center which serves 25 children in providing food, medical care, education and the love of Christ.  This is helping us to reach parents, siblings, and community through children. http://www.orphanloveindia.org/2013/03/orphan-and-widow-ministry-in-india.html

சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப்படும் உண்மைகள்.

நவம்பர்17, 2013

சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப்படும் உண்மைகள்.

Pedophile conference chennai 2013

சென்னையில்  நடைபெற்ற  கருத்தரங்கம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 குறித்த தென்னிந்தியாவின் இரண்டு நாள் (16-17 நவம்பர் 2013) கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது[1]. தமிழ்நாடு ஜுடீசியல் அகாடமியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தென் மண்டல கருத்தரங்கம் நடந்தது. இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கிவைத்து உரையாற்றினார். (இடமிருந்து) அகாடமி தலைவர் சித்ரா வெங்கட்ராமன், ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜே.செக்குத்தா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், உடனிருந்தனர்[2].

Pedophile conference chennai 2013.2

காலங்காலமாக  குற்றங்கள்  நடந்துவரும்போது  2012ல்  சட்டம்  ஏன்?: குழந்தைகளைப் பாதுகாக்க 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ சட்டம்) Protection of Children from Sexual Offences (POSCO Act, 2012) முதன்முறையாக கொண்டுவரப்பட்டது[3]. இந்தியாவில் வெளிநாட்டுக் காரர்கள் ஏற்கெனவே இக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ள்ஸா . வருகின்ற போது, இச்சட்டம் இவ்வளவு தாமதமாக ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதே சதேகமாக உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழுள்ள ஆண் / பெண் அல்லது சிறுவன் / சிறுமி “சைல்ட்” (Child) என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் வினோதமாக உள்ளது. PCOSOC Act 2012 not applicable to J and K stateவழக்கம் போல இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர மாநிலத்திற்கு பொறுந்தாது என்பதும் வியப்பாக இருக்கிறது.

Pedophile conference chennai 2013.3

குழந்தைகளுக்கு  எதிரான  பாலியல்  குற்றதடுப்புசட்டம்  முதன்முறையாக  கொண்டு  வரப்பட்டது: தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சு: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார். இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது[4]:  “குழந்தைகளைப் பாதுகாக்க 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ சட்டம்) Protection of Children from Sexual Offences (POSCO Act, 2012) முதன்முறையாக கொண்டுவரப்பட்டது[5]. இந்தியாவில் 53.22 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தெரிந்தவர்கள் மூலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கு நீதிபதிகள், அரசு வக்கீல்கள், விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக் கும் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்துவதிலும் மிகவும் கவனம் தேவை. குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்தால் அந்த குழந்தைக்கு மன தளவில் பாதிப்பு ஏற்படும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் உரிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். இதுபோன்றவர்களின் விசா ரணையால் குழந்தைகள் குழம்பி விடுவார்கள். மொழி பிரச்னை உள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தும்போதும் குறுக்கு விசாரணை நடத்தும்போதும் மொழிபெயர்ப்பாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 PCOSOC Act 2012

பாலியல்  தொழிலுக்காக  குழந்தைகளைக்  கடத்துவதும்  இந்தசட்டத்தில்  கடுமையான  குற்றமாகும்: விசாரணை நடத்தும் வக்கீல்களும் தேவையற்ற வார்த்தைகளையும், தேவையற்ற கேள்விகளையும் கேட்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தொட்டோ, தொடாமலோ அல்லது ஆபாசமாகவோ படம் எடுத்தோ பாலியல் வன்முறை செய்வது போக்ஸோ சட்டத்தின்படி குற்றமாகும். பாலியல் தொழிலுக்காக குழந்தைகளைக் கடத்துவதும் இந்த சட்டத்தில் கடுமையான குற்றமாக வகை செய்யப்பட்டுள்ளதுபோக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சிறப்பு நீதிமன்றங்களில் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் செய்தி வெளிவரக்கூடாது”,  இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Punishment to the offenders

குழந்தைகளுக்கு  எதிரான   பாலியல்  வன்முறை  அதிகரிக்க  இன்டர்நெட்டே  காரணம்[6]: கருத்தரங்கில் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட்  ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச் செய்யலாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட் வசதி வந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது.
Wade-Michael-Page photo
இன்டர்நெட்  விசயத்தில்  ஜாக்கிரதையாக  இருக்கவேண்டும்: குழந்தைகளுக்கான மேம்பாடு மற்றும் புதிய உத்திகள் உருவாக்குவதில் இன்டர்நெட் பெரும்பங்கு வகித்தாலும் இதை வரைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. குழந்தைகளை இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகி இருக்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.  பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், குழந்தைகள் நல அமைப்புகள், நீதித்துறை, காவல்துறை போன்றவை குழந்தைகள் நலனில் அதிக பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இன்டர்நெட் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். குடும்பம்தான் குழந்தைகளின் சமூக கல்வி நிறுவனமாகும். நமது கலாச்சாரம் குழந்தைகளை இதுவரை பாதுகாத்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு சதாசிவம் பேசினார்[7].

Crime in India 2010

சென்னையில் வில் ஹியூம் கதை: சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர். வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[8]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[9].

சிறார்களிடம்செக்ஸ்விளையாடல்கள்:  பாட்ரிக் மாத்யூஸ் சென்னை பள்ளியில் பீடோபைல் குணத்தைக் காட்டினான். அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[10]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

விஹியூம்  மற்றும் ரப்பி  ஆலன்ஜேவிற்கு  தொடர்பு  இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[11], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[12], புவனேஸ்வர்[13], பூரி[14] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யாரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[15].  தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், கிருத்துவ பாலியல் அதிகமாகவே இருந்தது[16].

© வேதபிரகாஷ்

17-11-2013


[1] தினமலர், குழந்தைகள் பாதுகாப்பு சட்ட கருத்தரங்கு, பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013,00:00 IST

[7] தினகரன், குழந்தைகளுக்குஎதிரானபாலியல்வன்முறைஅதிகரிக்கஇன்டர்நெட்டேகாரணம் : தலைமைநீதிபதிசதாசிவம்பேச்சு, மாற்றம் செய்த நேரம்:11/17/2013 8:13:45 AM

[11]  வேதபிரகாஷ், ,சென்னை செக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்  குழந்தைக் கற்ப்பழிப்பாளி!,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[12] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[13] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[14]  பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை. http://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[15] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ்ஊடகங்கள்!http://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

சச்சின் புராணமும், அடிமைவிளையாட்டும், பட்டம்-பதவி அரசியலும் – சீரழிம் பாரத இளைஞர் சமுதாயம்!

நவம்பர்17, 2013

சச்சின் புராணமும், அடிமைவிளையாட்டும், பட்டம்-பதவி அரசியலும் – சீரழிம் பாரத இளைஞர் சமுதாயம்!

Daily mail UK photoசச்சின் புராணம் பாடி ஓய்ந்து விட்ட ஊடகங்கள்: கிரிக்கேட்டின் நாறிய ஊழலை அப்படியே மறைக்கப் போட்ட ஆட்டம் தான், மும்பையில் நடந்தேறிய கிரிக்கெட் நாடகம் என்று தெரிகிறது. அதே மாதிரி கிரிக்கெட்டை வைத்துக் கொண்டு ஊழல்களை மறைக்க காங்கிரஸும் தீர்மானித்துள்ளது தெரிகிறது. சச்சின் கிரிக்கெட் ஊழல் மற்றும் காங்கிரஸ் ஊழல் இரண்டையும் எதிர்க்க முடியாது, எதிர்க்க மாட்டார். ஆகவே இரண்டும் புனிதம் அடைந்து விடும். லதா மங்கேஷ்கரே பரிந்துரைத்து விட்டார் என்பது போல டிவிசெனல்களில் காட்டி, அவர் மோடியை ஏற்றுக் கொண்டது போல சச்சினை ஏற்றுக் கொண்டு விட்டார், சச்சின் காங்கிரஸை ஏற்றுக் கொண்டு விட்டார், அதனால், மோடி ஆதரவு குறைந்து விடும், இப்படியும் கணக்குப் போட்டிருக்கலாம்.

Daily mail UK photo. Prof C N R Raoசச்சினை எதிர்த்து விமர்சனம் செய்ய முடியுமா?: சச்சினை இப்பொழுது யாரும்விமர்சனம் செய்யக் கூடாது, செய்தால் அவர் ஒதுக்கப்படுவர், கண்டிக்கப்படுவர், எதிர்க்கப்படுவர். இருப்பினும் அவரது அரசியல் கலப்பை, ஆதாயத்தை, நாட்டத்தை மறுக்க முடியாது.

Lastly… Could Sachin, who is already a member of the Rajya Sabha, become a full-time politician?No… Sachin’s achieved so much and is looked up to as a role model. I wouldn’t like to see Sachin in the dirty world of politics. Frankly, I was surprised when he accepted the nomination to the Rajya Sabha.

வெங்சர்காரிடம், சச்சினின் அரசிய நாட்டத்தைப் பற்றி கேட்டபோது, “சச்சின் நிறைய சாத்தித்தாகி விட்டது, அந்நிலையில் தான் நான் சச்சினைப் பார்க்கிறேன். அழுக்குப்படிந்த அரசியலில் சச்சைன் சேர்வதை நான் விரும்பவில்லை. உண்மையாகவே நான் சச்சின் எப்படி ராஜ்ய சபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டபோது, அதனை ஏற்றுக் கொண்டார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”, என்று வெளிப்படையாக தனது கருத்தை வெளியிட்டார்[1]. எம்.பி நியமனத்திற்கு அன்னா ஹஸாரே பொன்றோரே கடந்த வருடம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[2]. அன்னா ஹஸாரே ஊழலை மறைக்கத்தான் இந்த நாடகம் என்று அப்பொழுதே அறிவித்தார்[3]. கருப்புப் பணம் மற்ரும் ஊழல் விவகாரங்களை மறைக்கத்தான் காங்கிரஸ் இந்த நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டினார்[4]. இதை எதிர்த்து ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது[5]. ஆனால், காங்கிரஸ் அரவிந்த கேசரிவாலை வைத்து, அன்னா ஹஸாரேவை ஒதுக்கி விட்டது. பிறகு அரசு எந்திரங்களை முடிக்கிவிட்டு பாபா ராம்தேவைக் கட்டிப் போட்டது. இவ்விதமாக பிஜேபியை ஒடுக்கப் பார்க்கிறது.

நாட்டின் எல்லைகளைக் காக்கத் தெரியாத இந்தியாவிற்கு இந்த அடிமைமோகம் ஏன்?: கிரிக்கெட் இந்திய விளையாட்டல்ல, வெள்ளைக்காரர்களின் பொழுது போக்கு விளையாட்டு. ஆனால், இந்தியர்கள் அதனைக் கற்றுக் கொண்டு உலகத்தில் முன்னேறியுள்ளனர். அதாவது அடிமைகள், இன்னும் தங்களது விளையாட்டை ஆடிக்கொண்டு, தங்களைப் பின்பற்றியே இருக்கும் என்பது மேனாட்டவர்களின் கணிப்பு. அதனால், சச்சின் இந்த சாதனையை முறியடித்தார், அந்த சாதனையை முறியடித்தார், அதனல் வெள்ளைக்காரர்களை விட பெரிய சாதனையாளர் ஆகிவிட்டார், அதனை வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொண்டு விட்டனர் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தியா என்ன வெற்றிகரமாக தனது எல்லைகளைக் காப்பாற்றி வைத்திருக்கிறதா? இந்திய வீரர்கள் தலைகள் துண்டிக்கப் பட்டபோது எதிர்த்து விளையாடி இருக்கிறதா? ஏன் இதே கிரிக்க்கெட் வீரர்கள் காஷ்மீரில் சென்று விளையாட தைரியம் இருக்கிறதா? இல்லையே, பிறகு எதற்கு சச்சின் புராணம்?

சச்சின் காங்கிரஸுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வாரா?: கடந்த மாத இறுதியில் சச்சின் காங்கிரஸுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று செய்திகள் வெளியாகின[6]. ஆனால், அப்பொழுது சச்சின் அதனை மறுத்தார். இரண்டு மேட்சுகள் உள்ளன, அதில் கவனத்தைச் செல்லுத்தப் போகிறேன், எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றெல்லாம் சொன்னார்[7]. ஆனால், மேட்சுகளும் முடிந்து விட்டது, ஓய்வும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிரிவு உபச்சார விழாவும் கொடுத்து விட்டார்கள். இப்பொழுது சச்சினுக்கு “பாரத் ரத்னா” கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது என்பது மறுபடியும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இனி சச்சினை எது தடுக்க முடியும். நன்றி கடமையோடு பிரச்சாரம் செய்து தானே ஆகவேண்டும்? மறுக்க முடியுமா?

நரேந்திரமோடியை எதிர்த்து சச்சின் பிரச்சாரம் செய்வாரா?: நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சரத்தை காங்கிரஸ் எதிர்கொள்ள முடியவில்லை என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது. மேலும் “பதிலுக்குப்பதில்” என்று பேசி ராகுலோ, சோனியாவோ இந்தியில் பேசி, மோடியை வெல்ல முடியாது என்றும் தெரிந்து விட்டது. இந்நிலையில் கவர்ச்சி அரசியலில் ஈடுபட காங்கிரஸ் இறங்கி விட்டது. ஏனெனில், முதலில் ஊழலை மறைக்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளது. அதைப் பற்றி பேச ஆரம்பித்தால், காங்கிரஸால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, சச்சினை வளைத்துப் போட்டால், அவர் பிரச்சாரம் செய்தால், இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் காங்கிரஸ் பக்கம் இழுக்கப் படுவார்கள் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டுள்ளது. ஆனால், நரேந்திர மோடியை எதிர்த்து சச்சின் பிரச்சாரம் செய்வாரா

நரேந்திரமோடி மேட்ச் பார்க்க வந்திருந்தால் என்னவாகி இருக்கும்?: ராகுல் காந்தி அங்கு வந்து உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டுக் கொள்லவில்லை. “சச்சின்ம் சச்சின், சச்சின்னென்றுதான் பாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, நரேந்திர மோடி வந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி இயற்கையாகவே எழுந்தது. நிச்சயமாக நரேந்திர மோடியை கூட்டம் ஆதரித்திருக்கும், உற்சாகமாக கைகளை ஆட்டியிருக்கும். ஆனால், நல்லவேளை வரவில்லை. ஒருவேளை அது காங்கிரஸ் கூட்டமாகி விட்டது, போதாகுறைக்கு ராகுல் வேறு சென்றிருப்பதால், மோடி செல்லவேண்டாம் என்று தீர்மானித்திருப்பர். என்ன செய்வது, கிரிக்கெட்டில் கூட செக்யூலரிஸம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ராகுல்காந்திதான் அழுத்தம் கொடுத்து உடனே விருது கொடுக்க செய்திருக்கிறார்: கீர்த்தி ஆஜாத், ராஹுல் நவ்ரேகர், என்.ராம் போன்றோர், இப்பொழுது அவ்வாறு அறிவித்துள்ளது அரசியல் நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்று தமது கருத்தை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் கையுள்ளது என்று வெளிப்படையாக விமர்சனம் எழுந்துள்ளது[9]. ஊழலுக்குப் பெயர் போன, பிசிசிஐ ஏற்கெனவே பாட்டுப் பாடியது[10]. ஶ்ரீநிவாசன் சச்சினைப் புகழ்ந்து தள்ளி அவர் அந்த விருதுக்குப் பொறுத்தமானவர் என்று சர்பிடிகேட் கொடுத்தார். வெள்ளிக்கிழமை 15-11-213 பரிந்துரைக்கப் பட்டு, உடனே சனிக்கிழமை 16-11-2013 அறிவிக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. மேலும் முதலில் சச்சினை மட்டும் பரிந்துரை செய்யப் பட்டு, பிறகு சி.என்.ஆர். ராவின் பெயரும் சேர்க்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது[11]

சச்சினுக்கு  தனியாகக்  கொடுத்தால்  நிலைமை  மோசமாகிவிடும்  என்று  இன்னொருவரைச்  சேர்த்து  சமாளித்த   விதம்: அதாவது, சச்சினுக்குக் கொடுப்பது சர்ச்சைக்கு ஆகக் கூடாது என்பதால், அந்த விஞ்ஞானிக்கு கொடுக்க முன்வந்துள்ளது போல இருக்கிறது. ஏனெனில் அவருக்குக் கொடுக்கப் படவேண்டும் என்று ஊடகங்களில் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை, ஏன் செய்திகள் அல்லது முணுமுணுப்புக் கூட இல்லை. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை வெளிப்படையாகவே தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[12], “Sachin’s Bharat Ratna raises questions over Congress playing politics with India’s prestigious civilian order” – “சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டது காங்கிரஸ் அரசியலையும் அந்த விருதையும் அரசியலாக்குகிறது என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன”. இதனை காங்கிரஸ் கட்டுப்படுத்த முடியுமா? கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்கின்ற காங்கிரஸ் இதனை ஒன்றும் செய்ய முடியாதே?

பாரத்ரத்னா”  விருது  எப்பொழுதுமே  அரசியல்  ஆக்கப்  பட்டுள்ளது: இப்பொழுது கூட லதா மங்கேஷ்கர், “நரேந்திர மோடி பிரதமராக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்”, என்று கூறியதற்கு, மும்பை காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் சந்துருகர் உடனே அந்த விருதை பிடுங்க வேண்டும் என்று கோபத்துடன் பேசினார். இதே மாதிரி, அமர்தியே சென் “நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை”, என்றபோது, சந்தன் மித்ரா என்ற பிஜேபி எம்.பி சென்னுக்கு அளிக்கப்பட்ட விருதைத் திரும்பப் பெறவேண்டும் என்றார். சுபாஷ் சந்திரபோசுக்குக் கொடுக்க அறிவிப்பு செய்தபோதும், இதே மாதிரியான சர்ச்சை எழுந்தது. இன்னும் நினைத்துப் பார்த்தால் தகுதி, சிறப்பு முதலியவை உள்ள எத்தனை பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

மற்ற  தகுதியுள்ள  விளையாட்டு  வீரர்களுக்கு  ஏன்  கொடுக்கப்  படவில்லை?: இப்பொழுதோ, விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏன் கொடுக்கப்படவில்லை, என்று திபயேந்து பருவா கேட்கிறார்; அடல் பிஹாரி வாஜ்பேயுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை, என்று பிஜேபி கேட்கிறது; புபேன் ஹஸாரிக்காவிற்கு ஏன் கொடுக்கப்படவில்லை, ஹாக்கி வீரர் மேஜர் தயான் சிங்கிற்கு ஏன் கொடுக்கப்படவில்லை, என்றும் கேட்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

17-11-2013


[3] Social activist and anti corruption leader Anna Hazare has criticized the government for nominating Sachin Tendulkar to the Rajya Sabha, instead of bestowing him with a Bharat Ratna. After some section of the political and social classes reacted against Sachin’s nomination as “suspect move” and “dirty politics” of Congress-led United Progressive Alliance (UPA), the Gandhian too has come out against the government’s move to nominate the cricketer.”

[4] Their (Government) intention is not clear behind this (electing Sachin Tendulkar for Rajya Sabha). If they wanted to honour him, then they could have honoured him with Bharat Ratna,” CNN IBN Live quoted Anna as saying. Expressing his opinion, the 73-year-old anti-corruption leader added, “I feel bad because we are demanding that Sachin should have been facilitated from Bharat Ratna.”Earlier, at a press conference, Yoga Guru Baba Ramdev too opposed the move and called it as a ploy to distract public attention. “Congress, which is a sinking ship, denied him (Tendulkar) the Bharat Ratna but is nominating him to the Rajya Sabha as a tactic to distract the media and people from issues such as black money and corruption,” he told media persons.

[5] Several other leaders have also criticized Sachin’s nomination. Shiv Sena Chief Bal Thackeray said, “It is Congress’s dirtiest play…the real Dirty Picture is this. He also warned Sachin in an editorial in party mouthpiece, Saamna, to restrict himself to cricket instead of making political statements. Some other politicians and analysts believe that if Sachin accepts the Rajya Sabha nomination, it may affect his standing as a man who has been trying to avoid any affiliation with political parties, reports NDTV. “It is Sachin’s and the Congress’ personal matter. But I feel more than a seat, he should be given a Bharat Ratna,” NDTV quoted BJP leader Gopinath Munde as saying.  Meanwhile, an advocate has moved the Madras High Court seeking to stay the cricketer from taking oath in the Parliament, citing a pending case against him. The petition will be heard on Thursday.

[8] Meanwhile, BJP MP Kirti Azad questioned if Sachin would be able to devote time to the Upper House of Parliament. “Sachin is an icon and apolitical but will he find time for Rajya Sabha since he is playing?” asked Azad. Further, the Shiv Sena said the decision was taken in hurry, as Sachin should have first been given the Bharat Ratna. “The government has not given Bharat Ratna that he truly deserves, but it was in a hurry to nominate him to Rajya Sabha,” said Narvekar.

http://ibnlive.in.com/news/is-sachin-tendulkar-being-used-as-a-political-pawn-by-congress/252715-37.html

[11] On Friday, Rahul Gandhi left his hectic election campaign schedule and made it a point to be in the Mumbai stadium to cheer for Sachin. While Sachin Tendulkar became the first sportsperson to be given the Bharat Ratna, Prime Minister Manmohan Singh wrote to President recommending the prestigious award also to eminent scientist Professor C N R Rao. The letter by the prime minister was sent to the President at 1 pm on Saturday, and in half an hour the President had signed the recommendation and put out the official notification.

http://www.rediff.com/news/report/rahul-hand-seen-behind-sachins-bharat-ratna-decision/20131116.htm

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

ஏப்ரல்11, 2013

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

Sarah Groves - passport- PTI

இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரம்[1], இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரம்[2], இந்தியா ஐரோப்பிய பெண்களுக்கு உகந்தது அல்ல[3] என்றெல்லாம் ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம்[4] செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியநாட்டவரை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். வெள்ளையர்களுக்கு தமது நிறப்பற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்துள்ளனர். காதல் வயப்பட்டு சேந்து வாழும் பெண் கிறிஸ்தவர், ஆண் முஸ்லீம், அதிலும், காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லீம். இதை எப்படி மேனாட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை யாரும் விளக்கவில்லை. மேனாட்டு ஊடகங்கள், மற்ற நேரங்களில் அதிகமாக அலசும் போது, இவ்விஷயத்தில் மறைப்பது சந்தேகமாக இருக்கிறது.

Victo-Groves-the-father-of-Sarah-Groves-who-was-stabbed-to-death-in-India-gives-an-emotional-press-conference-at-Guernsey

தந்தை விக்டர் “காஷ்மீருக்குப் போகாதே” என்று உறுதியாகச் சொல்லித் தடுத்தது: சாரா கிரௌஸின் தந்தை, தந்தை விக்டர், “என் மகளை காஷ்மீருக்குப் போகாதே என்று உறுதியாகச் சொல்லித் தடுத்துப் பார்த்தேன். ஆனால், அவள் கேட்கவில்லை” என்கிறார். அதாவது, காஷ்மீருக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அவள் பிழைத்திருப்பாள். சாராவின் காதலனும், “நான் அவளை காஷ்மீரத்திற்குக் கூப்பிட்டதால் தான் கொலையுண்டாள்”, என்றான். ஆனால், இருவர் சொல்வதிலிருந்தும், உண்மை சிறிது மாறுபடுகிறது, தந்தை அவள் ஒரு முஸ்லீமுடன் வாழ்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது. சையிது அஹ்மத் சோடாவோ, கோவாவிலியே இருந்திருந்தால், அவள் கொலயுண்டிருக்க மாட்டாள் என்கிறான். அப்படியென்றால், சாரா ஏன் காஷ்மீரத்திற்கு வலுக்கட்டாயமாக வரவேண்டும் அல்லது வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும்?

Richard-de-Wit-wife-Wit had a history of mental problems -but had never been violent or threatening

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[5]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[6]. அவள் தொடர்ந்து கூறும் விவரங்களில் வேறு விஷயமும் வெளிப்படுகிறது.

Sarah-Rehman-Richard-2013

என் கணவர் அப்பாவி  “அவர் துரத்தப் பட்டதால் இந்தியாவிற்கு சென்றுள்ளார்”: நெதர்லாந்தின் கடற்கரையைச் சேர்ந்த பிரதேசமாகும். டச்சுப் போலீஸார் அவரைத் துரத்தி வருகின்றனர். ஹாலந்தை விட்டு அதனால் தான் அவர் வெளியே வந்தார். ஹாலந்து, அந்த மனோதத்துவ நிபுணரை வைத்துக் கொண்டு வேவு பார்க்கின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என்று பயந்துதான், கடந்த ஆறு மாதங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில், பல கென்யா, டுனிஸியா நாடுகளுக்குச் சென்று பிறகு, கிருஸ்துமஸ் போது சுவிட்சர்லாந்தில் தங்கி விட்டு. இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளார்[7]. 20 வருடங்களுக்கு முன்னர், ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதனால், அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டு பல ஊர்களுக்குச் சென்று பொழுதைப் போக்கி வருகிறார். மனப்பிரச்சினகளினால், எந்த வேலையையும் செய்வதில்லை[8].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”. அதாவது, காஷ்மீருக்குச் செல்வதை விட, ஶ்ரீலங்காவிற்குச் செல், தரும காரியங்கள் செய் என்று சொன்ன அர்த்தம் என்னவென்று தெரியவில்லை

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட (பிரௌன்) பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [9].

Sarah Groves murderer - richard de Wit - Facebook

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[10]. அதிக அளவில் வலதுசாரி-சித்தாந்தம் கொண்ட குடியரசுக் கட்சிக்காரனாக சந்தேகிக்கப்பட்டதால், டச்சு பிலனாய்வுத் துறை, இவன் தம்து நாட்டு அரசிக்கு எதிராக இருக்கக் கூடும் என்று வேவு பார்த்து வந்தனர்[11]. இப்படி பல செய்திகளை வெவ்வேறு நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

கொலைக்குக் காரணம் இனவெறியா, மதமா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது[12]. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் முன்னமே குறிப்பிட்டது போல, சாராவின் பெற்றோர், தம் மகள் ஒரு முஸ்லீமை மணந்து கொள்வதை விரும்பியிருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், சாரா கஆஷ்மீரத்திற்கு வந்தவுடன், சயீதின் தாயார், அவளுக்கு இஸ்லாம் பற்றி போதித்திருப்பது தெரிகிறது. இல்லையென்றால், வெள்ளை மசூதிக்குச் செல்வது, தொழுவது முதலியவை நடந்திருக்காது. நவநாகரிகமான சாரா அந்த அளவிற்கு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரானால், என்பதும் நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

11-04-2013

 

 


[5] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] He believed the Dutch police and authorities were “out to get him” and that his government-appointed psychologist had colluded with them, she told The Daily Telegraph in Rotterdam. In fear that the police would take him into custody, and embarked on a journey across African and Asia to avoid “arrest”, she said.Over the last six months, he travelled first to Kenya and Tunisia, stopping off in Switzerland at Christmas, and arrived earlier this year in Delhi, India.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[8] Describing his decision to leave Holland and go travelling, funded by compensation payments from the accident, she said: “This has been a problem in his life. He is always running away from things. He feels stress and he runs. He is frightened people want to arrest him.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[9] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[10] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[11] He also claimed that as a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election.Mr de Wit said he had been visited by intelligence agents who believed he was a far-Right republican who posed a threat to Queen Beatrix of the Netherlands.

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

ஏப்ரல்10, 2013

சாரா கிரௌஸ் கொலைச் செய்யப் பட்டதற்கு இனவெறி காரணமா?

Sarag Groves - different pose

ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியர்களை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். இருப்பினுகம், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்தனர்.

Wife of Richard de Wit

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[1]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[2].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [3].

Sarag Groves - the killed in different pose

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[4].

Sarah went to mosque on Friday and get killed on the same day

கொலைக்குக் காரணம் இனவெறியா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வேதபிரகாஷ்

10-04-2013


[1] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[2] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[4] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர் – நம்ம ஊர் செய்தி!

ஏப்ரல்7, 2013

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர் – நம்ம ஊர் செய்தி!

Sarah Groves murder - location map

இதை முந்தைய பதிவுகளுடன்[1] சேர்த்துப் படிக்கவும்[2].

Houseboat owner Abdul Rahim Shoda speaks on his mobile phone near the house boat where the body was found

சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள்: காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பிரபல தால் ஏரி உள்ளது. சுற்றுலா இடமான இங்கு தண்ணீரில் மிதக்கும் படகு வீடுகள் ஏராளமாக உண்டு. இதில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள். சாரா எலிசபெத் கிரௌஸ் [Sarah Elizabeth Groves, 24] என்ற இங்கிலாந்து பெண் அங்கு ஒருமாதமாகத் தங்கி வருகிறார். இவள் பள்ளிப்படிப்பை குயர்ன்சே Guernsey என்ற ஊரில் உள்ள பிளாங்செலான்டி கல்லூரியில்  Blanchelande College படித்து, பழைய அரசாங்க ஹோட்டலில்  Old Government House Hotel வேலை பார்த்து வந்தாள்[3]. உடல் ஆரோக்யம் பற்றிய ஆசிரியர். சனிக்கிழமை மதியம் சுமார் 2.30 அளவில் ஏதோ சத்தம் கேட்டதால், தூங்கிக் கொண்டிருந்த படகுவீட்டின் உரிமையாளர் ஜி.எம். சோடா Abdul Rahim Shoda எழுந்து, தனது மகன் இர்பானை அனுப்பி என்னவென்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்ற இர்பான், சாரா கிரௌஸின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். தந்தைக்கு அறிவித்தான். சோடா போலீஸுக்குப் புகார் கொடுத்தார். சமீர் சோடா [Samir Shoda / Syed Ahmad[4]] என்ற படகுவீட்டின் உரிமையாளரின் மகன் போலீஸாருக்கு உதவி வருகிறான்.

Sarah Groves murder - body taken out

நம்ம ஊர் செய்திகள் – அதாவது தமிழில் கிடைக்கும் விவரங்கள்: சாரா எலிச்பெத் கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்[5]. ஒரு படகு வீட்டின் ஒரு அறையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் ஆலந்து நாட்டை சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர். நேற்று காலை எலிசபெத் தங்கி இருந்த அறைக்குள், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டும் உடைகள் கிழிந்தும் காணப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

Sarah Groves murder - floating hotel entrance

மாயமான கொலையாளி: அதே நேரம் இன்னொரு அறையில் தங்கி இருந்த ஆலந்து நாட்டுக்காரரை காணவில்லை. இது குறித்து படகுவீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு ஆலந்தை சேர்ந்த டேவிட் ரிச்சர்டை தேடும்பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தில் அவர் பிடிபட்டார். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக காசிகந்த் பள்ளத்தாக்கு பகுதிக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை காஷ்மீர் டி.ஜி.பி.அப்துல்கனி மிர் நிருபர்களிடம் தெரிவித்தார். இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு, ஆரம்ப கட்ட விசாரணை நடைபெறுகிறது[6]. அவர் கொல்லபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அறை கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் மற்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.

Sarah Groves murderer - richard de Wit - Facebook

டச்சுக்காரன் ஏன் கொலை செய்தான்?: ரிச்சர்ட் டி விட் (Richard de Wit, 43) என்ற டச்சுநாட்டுக் காரர், தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார். ஹெராயினை சாப்பிட்டு வந்ததால், மனநிலை பாதிக்கப்பட்டதால், வெறியுடன் அவளது அறைக்குள் சென்று 40ற்கும் மேலாக கத்தியால் குத்தியதாக கூறினான்[7]. இன்னொரு பத்திரிக்கை 25 தடஐ குத்தினான் என்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா அவன் பெயரை ரிச்சர் காலிபர் டென்னிஸ் (Richard Caliper Dennis) என்று குறிப்பிடுகிறது[8]. இப்படி அவன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாலும், அது கோர்ட்டில் செல்லாது என்று இங்கிலாந்து நாளிதழ்கள் கூறுகின்றன[9]. அதாவது இந்தியர்களை விட, வெளிநாட்டுக் காரர்கள், நமது சட்டங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

07-04-2013


[3] Ms Groves attended secondary school at Guernsey’s Blanchelande College and worked at the Old Government House Hotel. http://www.bbc.co.uk/news/uk-22049453

[9] Under Indian law a confession to a police officer is not admissible in a court of law. http://news.sky.com/story/1074939/india-houseboat-murder-dutch-man-confesses

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

ஏப்ரல்7, 2013

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?

Sample Picture - facebook

இதை முந்தைய பதிவுடன் சேர்த்துப் படிக்கவும்[1].

Sarah Groves

கோவாவில் உல்லாசமாக நண்பர்களுடன் இருந்த சாரா கிரௌஸ்: சாரா கிரௌஸ் கோவாவிற்கு சமீர் சோடாவுடன் சுற்றுலா சென்றாளாம். அங்கு அவளுக்கு நண்பர்கள் இருந்தார்களாம். சாரா மீது காதல் கொண்ட சமீர், “வா, என்னுடன் காஷ்மீருக்கு வா”, என்றழைத்தானாம். அவளோ, “நீ போ, நன்றாக அனுஅவி” என்றாளாம். அவனோ, “நீ இல்லாமல் நான் ஒரு நாள் எப்படி இருப்பேனோ” என்றானாம்[2]. பிறகு காஷ்மீருக்கு வந்தாளாம். நான்கே நாட்கள் தங்குவேன் என்பவள் அங்கேயே தங்கி விட்டாளாம்.

Sarah Groves murder2

நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம்: சமீர் சோடா சொல்வதாவது[3], “நான் சாரா கிரௌஸை கோவாவில் சந்தித்தேன். பிறகு அவளை காஷ்மீருக்கு வருமாறு கேட்டுக் கொண்டேன். அதன்படியே அவள் இங்கு வந்தாள். அவள் மிகவும் அருமையான பெண். எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்து கொண்டாள். அவள் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் புரிந்து கொண்டாள், ஆமாம், அனைத்தையும்…..” . அப்படியென்றால், என்னவென்று புரியவில்லை. ஆங்கிலேயர்கள் இத்தகைய காதலை அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

டைம்ஸ் ஆப் இந்தியாவின் படி[4], அதுல் ரஹிம் சோடாவின் மகன் சையது அஹ்மது கூறுவதாவது, “நான் சாரா கிரௌஸ் கோவாவிற்குச் சென்றபோது சுற்றுலா உதவியாளனாக இருந்தேன். அவள் குல்மார்க் வரை சென்றுள்ளாள். இன்னும் பல இடங்களை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள். எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தாள். எங்களுடன் உணவு உண்டு எங்கள் குடும்பத்தாருடன் தங்கியிருந்தாள், என்று உணர்ச்சியுடன் கூறினான்.

One of the sons of the boathouse owner Abdul Rahim Shoda (pictured) is also helping police with the inquiries, although he has not been arrested, according to reports

டெயிலி மெயிலின் படி[5]: சமீர் சோடா சொல்வதாவது, “நான் அவளுடைய பாய் பிரென்ட். நாங்கள் திருமணம் செய்து கொண்டிருப்போம். நான் அவளை என்னுயிருக்கும் மேலாகக் காதலித்தேன்………அவள் சாவிற்கு நான் தான் காரணம். ஏனெனில், கோவாவில் அவள் தனது நண்பர்களுடன் இருந்தாள். நான் தான் இங்கு வருமாறு அழைத்தேன்”. பொலீஸார், ரிச்சர்ட் டி விட்டிற்கு கன்னபிஸ் / போதை மருந்து விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்று கூறுகிறது.

Richard de Wit - Netherlands

படகுவீட்டின் மகன் சாராவை காதலித்தான் என்றால்,  ரிச்சர்டுக்கு ஏன் போதை மருந்து கொடுத்தான்?: சாராவை உயிருக்கு மேலாகக் காதலித்தான் என்றால், அடுத்த அறையில், ரிச்சர்டை எப்படி தங்க அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. தங்க வைத்த பிறகு, ஏன் போதை மருந்து அவனுக்கு “சப்ளை” செய்தார்கள் என்றும் தெரியவில்லை. சாதாரணமாக காதல் என்றாலே பொறாமை வரும், தன்னுடைய காதலியுடன் யாராவது பேசினாலே கோபம் வரும், பிறகு எப்படி இப்படி?

வேதபிரகாஷ்

07-04-2013


[2] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] Samir Shoda, the son of the houseboat’s owner, was helping police with their inquiries, the Sunday Telegraph reported. He told the paper that he met Groves during a holiday in Goa and that he had invited her to stay at the hotel. Shoda, who said he had been out with friends at the time, added: “She was an amazing person. She understood everything, we shared our problems, everything.”

http://www.guardian.co.uk/world/2013/apr/07/kashmir-police-investigating-murdered-briton

[4] Shoda’s son Syed Ahmad, who works as guide in Goa and had accompanied Sarah, said that the British tourist had so far only gone to Gulmarg and was planning to visit other tourist places. “Sarah had got close to our family. She used to have food with us and stay with my family members,” said the houseboat owner, his voice choking with emotion. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-06/india/38326582_1_houseboat-owner-british-tourist-tourist-police

[5] Samir Shoda, who manages the houseboat, said that he had entered a relationship with Miss Groves, who he described as ‘amazing’ after they met in Goa, according to The Sunday Telegraph.

He said: ‘I was her boyfriend, maybe we would have married. I loved her more than my life.’

He added that he blamed himself for her death because he had been out with friends. ‘I said, “Come with me”, but she said, “You go and enjoy yourself, I will see how I feel without you for one day”,’ he said.

It was reported that police also detained Mr Shoda as they suspect that he might have supplied de Wit with cannabis.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2305253/India-murder-Sarah-Groves-Dutchman-accused-stabbing-24-year-old-British-woman-death-houseboat-Kashmir-confesses-killing.html#ixzz2Pm6cm5nI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

அமெரிக்க சீக்கிய கோவிலில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் காயம்

ஓகஸ்ட்6, 2012

அமெரிக்க சீக்கிய கோவிலில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் காயம்

விஸ்கான்சின் என்ற மாவட்டத்தில் உள்ள சீக்கிய கோவிலில், நேற்றுக் காலை (05-08-2-12 ஞாயிற்றுக் கிழமை) பிரார்த்தனை நேரத்தில் 9/11 முத்திரையுடன் டி-சர்ட்அணிந்த வெள்ளையன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்[1]. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்[2]. சுட்ட நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஆனால் எப்.பி.ஐ விவரங்களை வெளியிடவில்லை. அவர்கள் அதனை “உள்ளூர் தீவிரவாதச் செயல்” என்கிறார்கள்[3]

9/11 தாக்குதலுக்குப் பிறகு, சீக்கியர்களை தவறாக முஸ்லீம்கள் என்று அடையாளங்காணப்பட்டு தாக்குதல்கள் நடந்து வருகின்றன[4]. நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களிலேயே அவ்வாறான தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் இரு சீக்கியர்கள் அவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்[5]. சீக்கியர்கள் முஸ்லீம்கள் அல்ல என்றாலும், அவர்கள் தாடி-மீசை வைத்துக் கொல்வதால் தாக்கப்படுகிறார்கள்[6].

அமெரிக்காவில் துவேச-குரோதக் குற்றங்கள் என்ற போக்கில் இவ்வாறான கொலைகள் இனவெறி ரீதியில் நடக்கின்றன. முன்னரும் இனவெறி ரீதியில், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தாக்கப் பட்டு வந்தனர். இப்பொழுது, இத்தகைய வெறுப்பும் சேர்ந்து விட்டுள்ளது. நவநாகரித்தில் திளைக்கும், பணக்கார நாட்டில் இப்படி காட்டுமிராண்டித்தனமாக அமெரிக்கர்கள் நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. எது நாகரிகம் என்பது அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
இப்பொழுது கிடைத்துள்ள விவரங்களின் படி வடே மைக்கேல் பேஜ் என்பவன் வெள்ளையர்களைத் தவிர மற்ற மக்களின் மீது வெறுப்பைக் கொண்டிருந்தான் என்று தெரிகிறது. அத்தகைய கூட்டத்தாருடன் தொடர்பும் கொண்டிருந்தான். அதை வெளிப்படுத்தும் முறையில் பாடல்களும் பாடியுள்ளான். நண்பர்களிடம் அதைப் பற்றி பேசியுள்ளான். அமெரிக்கர்களிடம் கருப்பர்களை மற்றும் மரக்கலர் இந்தியர்களையும் கண்டால் பிடிக்காத துவேச குணம் இடைக்காலங்களிலிருந்து இருந்து வந்துள்ளது. குறிப்பாக போர்ச்சுகீசிரியரிடம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் சென்றவிடமெல்லாம், அந்தந்த உள்நாட்டு மக்களை பெருமளவில் கொன்று குவித்துள்ளார்கள். பிடித்தவர்களை அடிமையாக்கியுள்ளார்கள். அவர்கள் புரிந்த குற்றம் ஹிட்லரைவிட அதிகமானது. இந்நிலையில், இவனது குற்றத்தை மறைக்க இவன் ஒரு “நியோ நாசி” என்று குறிப்பிடப்படுகிறான்.அமெரிக்கர்களும் குடியேறிய போது, அங்கிருந்த இந்தியர்களை கொன்றொழித்தனர், அடிமையாக்கினர். அக்குற்றங்களை மறைக்கவும் செய்தனர். இன்றும் ஹாலிவுட் படங்களில் அவர்களைப் பற்றி அவதூறு படுத்தியே சித்திரித்துக் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியர்களுக்கு என்ன நியாயம், பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.


[4] Because of their customary beards and turbans, Sikh men are often confused for Hindus or Muslims — and have been the targets of hate crimes since the September 11, 2001, attacks on New York and Washington

[6] Sikh rights groups have reported a rise in bias attacks since the Sept. 11 terrorist attacks. The Washington-based Sikh Coalition has reported more than 700 incidents in the U.S. since 9/11, which advocates blame on anti-Islamic sentiment. Sikhs don’t practice the same religion as Muslims, but their long beards and turbans often cause them to be mistaken for Muslims, advocates say.

http://www.washingtonpost.com/national/police-dispatcher-shooting-at-sikh-temple-in-wis/2012/08/05/66012b9a-df1f-11e1-8d48-2b1243f34c85_story_1.html

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

மார்ச்23, 2012

அன்டேனியோ எட்விகெ அல்பினா மெய்னோவும், டயானா மரியம் குரியனும் திருமலையில் சாமி கும்பிடும் ரகசியம்!

சோனியா மெய்னோவின் திருமலை விஜயங்கள்: இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்பதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[1]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக்

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது. நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[3]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[4]. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த கானங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[5]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது.

திருப்பதிக்கு வந்தாலும் பிரசாதம் கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[6]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா? பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.

மெய்னோ வரும் மர்மம் என்ன?: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[7]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,

Seer opposes helipad at Tirumala
2003-11-28 Published by Sify.com Gathered by Internet Desk – HindunetTIRUPATI,NOVEMBER 28:Sri Tridandi Srimannarayana Ramanuja Chinna seer of the Sriman Narayanana Mutt in Andhra Pradesh expressed reservations over the much-publicised idea of constructing a helipad at Tirumala, the abode of Lord Venkateswara. Talking to reporters at Tirumala, the seer took exception to the reported remarks of the Prakash Singh Commission of inquiry, probing security lapses that led to the naxal ambush on Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on the ghat road recently, that the no-fly zone over the hills was a “farce” and that VVIPs should be allowed to fly by helicopters and land on the sacred hills instead of taking the roads. The seer of the mutt, based in Vijayawada which has a large number of followers, also expressed his dismay over certain practices observed during the performance of rituals in the temple. He urged the temple authorities to immediately stop the use of steam cooking of rice for being offered to the God and instead use firewood. He said the recently demolished centuries-old 1000-pillar mandap infront of the hill temple should be rebuilt at the same place and opposed any move to relocate it. The seer came out against the Government move to construct about 7,300 tiny shrines (Gita Mandirams) in all 294 assembly constituencies by using the Tirumala temple funds.

பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. ஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[8]. ஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு ஜெலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது.

செக்ஸ் நடிகைகள் மற்றவர்கள் திருமலைக்கு வந்து சாமி கும்பிடும் ரகசியம்: செக்ஸ் நடிகைகள் காஜல் அகர்வால், நிஷா அகர்வால் போன்றோரும் திருமலைக்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். கிருத்துவர்களும் முஸ்லீம்களும் கூட சொல்லாமல், நண்பர்களுடனோ, தனியாகவோ வந்து ரகசியமாகவோ, திருட்டுத்தனமாகவோ வந்து சாமி கும்பிட்டுச் செல்கின்றனர். இப்பொழுது டயானா மரியம் குரியன் என்கின்ற நயனதாராவின் முறை போலும். திருமலை இப்படி பொழுது போக்கு ஸ்தலமாக்கி வருகின்றனர் போலும். ஆண்டவன் என்றுதான் இவர்களை வழிப்படுத்துவார் என்று தெரியவில்லை.

நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது: பத்திரிக்கைக் காரர்களின் யோக்கியதை மறுபடியும் நாறுகிறது. திருமலை கோவிலுக்கு முன்பாக 1000-கால் மண்டம் கம்பீரமாக சிற்பங்களுடன் இருந்தது. இப்பொழுது அது எங்கே, என்னவாயிற்று என்று அறிந்து கொள்ள துப்பில்லை; அது வெடி மருந்து வைத்து தகர்க்கப் பட்டபோது செய்தியை வெளியிட யோக்கியதை இல்லை; எதிர்த்துக் கேட்டுப் போராடிய பக்தர்களை அடித்து அமுக்கியதை யாரும் அறியாமல் செய்த போது, இவர்களின் துப்பறியும் அறிவெல்லாம் நடிகைகளின் இடுப்புகளையும்………..சுற்றி வந்தன போலும். அதுபோல இப்பொழுதும் கிளம்பி வந்து விட்டாடர்கள். ஆபாச நடிகை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு உள்ளது, அவர்களது நிலையுள்ளது. முதலில் பத்திரிக்கையாளர்கள், தங்களது முரட்டு சித்தாந்தங்களினின்று விடுபட்டு, உண்மையாக செய்திகளை வெளியிட முன்வர வேண்டும், காசுக்காக, கவருக்காக, பாட்டிலுக்காக செய்தி கொடுத்தால், வேறு மாதிரியாகி விடும்.

புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’: சொல்வது நயனதாரா, சொல்லப்படுவது, அந்த ஊடகக் கூட்டத்திற்கு. “என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமலை கோவிலுக்கு வந்து, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்’ என, நடிகை நயன்தாரா தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம்,

Sonia visits Tirumala templeStaff Reporter, The Hindu, November 26, 2006.TIRUMALA: United Progressive Alliance (UPA) chairperson and AICC president Sonia Gandhi offered prayers at the famous hill temple of Lord Venkateswara here on Saturday (25-11-2006).Accompanied by Chief Minister Y.S. Rajasekhara Reddy, AICC general secretary Digvijay Singh, APCC president K. Kesava Rao and Union Minister T. Subbirami Reddy she reached the main entrance of the temple complex — `Mahadwaram’ — through the darshan queue lines like any other `common pilgrim.’ The priests received them with the traditional temple honours. She reverentially bowed her head when they applied `tilak’ on her forehead. Later she was led into the sanctum sanctorum where she stood in front of the main deity for nearly 10 minutes and offered prayers. The chief priest presented her with the `Sesha vastram’ of the Lord.

She visited the various shrines inside the temple complex and deposited offerings at the `hundi.’ She also visited the Ranganayakula mandapam where the priests rendered `Vedasirvachanam’ while chairman of the Tirumala Tirupati Devasthanams B. Karunakar Reddy presented her with various devotional song CDs, photos and prasadam.

தன் குடும்பத்தினருடன் திருமலையில், மூலவர் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார். கல்யாண உற்சவ சேவைக்கு பின் வைகுண்டம், 1வது கியூ வரிசையில், 30 நிமிடங்கள் வரை காத்திருந்தபடி, சக பக்தர்களுடன் பேசியபடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்[9]. கோவில் சன்னிதியில், கியு வரிசையில் நடிகை நயன்தாரா வருவதை கண்ட பக்தர்கள், அவர் அருகே செல்ல முயற்சித்ததால், சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின், தன் பிரார்த்தனையாக, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் முதன் முறையாக வெங்கடேச பெருமானை தரிசித்தேன். அவரது அருளாசியை பெற்றேன். நான் இப்போது, மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்றார்.அப்போது நிருபர்கள் சிலர், “நடிகர் பிரபுதேவாவுடனான உங்கள் காதல் விவகாரம் என்ன ஆயிற்று?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயன்தாரா, “புண்ணிய தலமான திருமலையில், இது போன்ற காதல் விவகாரங்களை விவாதிப்பதும், அதற்கு நான் பதிலளிப்பதும் நல்லது தானா?’ என, கேள்வி எழுப்பினார்[10]. பின்னர் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.

வேதபிரகாஷ்

23-03-2012


[1] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006, http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[4] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter

http://www.hindu.com/2006/11/23/stories/2006112309120300.htm

[8] Sonia Gandhi’s ‘Evil Eye’ On Tirumala?, Published Date : 07-Feb-2011 22:00:00 GMT; http://greatandhra.com/viewnews.php?id=26839&cat=15&scat=16

“வெள்ளைக்காரர்”களும், “கருப்புக்”காரர்களும்!

ஓகஸ்ட்14, 2011

“வெள்ளைக்காரர்”களும், “கருப்புக்”காரர்களும்!

வெள்ளைக்காரர்கள் வெள்ளையர்-அல்லாதவர்களை நடத்தும் வகை: “வெள்ளைக்காரர் / வெள்ளையர்” என்றாலே, அவ்வாறு சொல்லக்கூடாது என்று பாய்ந்து வந்து எதிர்க்கும் தமிழ்நாட்டில்[1], தமிழர்களை “கருப்பர்” என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது வேடிக்கையாக இருக்கிறது. சென்னையிலேயே “வெள்ளையர் நகரம்” (White town = George town), “கருப்பர் நகரம்” (Black town = outside the area of White town), “வெள்ளையர் வீதி” (the street meant for the Whites), “கருப்பர் வீதி” (the street meant for the blacks) என்றெல்லாம் இருந்திருக்கின்றன[2]. “இந்தியர்களும், நாய்களும் அனுமதிக்கப்படமாட்டாது” (Dogs and Indians are not allowed) என்று அறிவிப்புகள் ஹோட்டல்கள், கிளப்புகள் முதலிய இடங்களில் தொங்கின. வெள்ளைக்காரர்களுக்கு எப்போதுமே அத்தகைய எண்ணம் மனங்களில் இருந்து வருகிறது. இந்தியர்களை 1857ல் வென்றதற்காகக் கட்டப்பட்டுள்ளதுதான் “மெமோரியல் ஹால்”, அது இன்றும் சென்னையில் உள்ளது! அத்தகைய அறிவிப்புப் பலகைகள் இன்றும், நாகாலாந்து, திரிபுரா போன்ற வடகிழக்கு இந்திய மாநிலங்களில் தொங்குவதைப் பார்க்கலாம். அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், இந்தியர்கள் இன்று பெருமளவில் வேலை செய்து வந்தாலும், அவர்கள் இந்தியர்களை ஒருமாதிரி நடத்துவதை சில நேரங்களில் காணலாம். இதேபோலத்தான், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள் அல்லது முஸ்லீம்-அல்லாதவர்கள் நடத்தப் படுகிறர்கள். அதை அந்த இந்தியர்கள் உணர்ந்திரிந்தும், அறிந்திருந்தும் தமக்கு அதிகமாக பணம் கிடைக்கிறது, அனுபவிக்கும் வாழ்க்கை உள்ளது என்று மறைத்து வருகின்றனர்.

இந்தியாவில், ஒரு முறை நீண்ட தூரம் ரயில் பயணம் செய்ததில், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி,கறுத்துப் போனது,” : “இந்தியாவில், ஒரு முறை நீண்ட தூரம் ரயில் பயணம் செய்ததில், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி,கறுத்துப் போனது,” என, அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாயோ, கடுமையாக விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நேற்று முன்தினம் (12-08-2011) நடந்த ஒரு விழாவில், அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் கலந்து கொண்டு பேசியதாவது: “இருபது ஆண்டுகளுக்கு முன்,

“I was on a 24-hour train trip from Delhi to Orissa. But after 72 hours, the train still did not reach the destination… and my skin became dirty and dark like the Tamilians,” US vice-consul Maureen Chao said in a speech at the SRM University on Friday[3]. Chao also said, “Some 20 years ago, I was a student and had an opportunity to do a semester abroad. I chose India, fascinated by its culture and religion. I was amazed at the graciousness of the people.”

நானும் உங்களைப்போல் ஒரு மாணவராக இருந்தேன். வெளிநாட்டில் செமஸ்டர் படிப்பு மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அதற்காக நான் இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் கலாசாரமும், மதகோட்பாடுகளும் என்னை ஈர்த்திருந்தன. நான் பல கிராமங்களை கடந்து பயணித்தபோது, இந்தியாவின் கலாசாரத்தை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் அன்பு உள்ளத்தையும், பாசத்தையும், அவர்கள் நட்பாக பழகும் விதத்தையும் கண்டு வியந்தேன்.ஒரு முறை, நான் டில்லியிருந்து, ஒரிசாவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டேன். அந்த ரயில், 24 மணி நேரத்தில், ஒரிசாவை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், 72 மணி நேரம் கடந்த பிறகும், ரயில் ஒரிசாவை சென்றடையவில்லை. இந்த நீண்ட தூர பயணத்தால், என் தோல் தமிழர்களைப்போல் அழுக்காகி, கறுத்துப் போனது”.
24 மணிக்கு பதிலாக 72 மணி நேரம் பிரயாணம் செய்ததால் கருப்பாகி விட்டேன் என்றதால் அதிர்ச்சி ஏற்பட்டதாம்: இவ்வாறு மவுரீன் பேசியதும், மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வாறு தமிழில் குறிப்பிட்டாலும், அங்கு மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி

 “I was very dirty and dark,” she said, and after a pause, “I was looking like a Tamilian.”

கிளிண்டன் சென்னை வந்திருந்தபோது, “இந்தியாவின் நட்பை, அமெரிக்கா முக்கியமானதாககருதுகிறது. இந்தியா – அமெரிக்கா உறவானது, ஜனநாயகம்,கலாசார ரீதியிலானது’ என தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க துணைத் தூதர், தமிழர்களைப் பற்றி இழிவாக விமர்சனம் செய்து பேசியிருப்பது, அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மன்னிப்பு அறிக்கை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது[4]: இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது: “மவுரீன் சாயோ பேசும்போது பொருத்தமற்ற சில வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அவரது பேச்சு, யாருடைய மனதையாவது துரதிருஷ்டவசமாக புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்துவது அவரது நோக்கமல்ல”, இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னிப்புக் கேட்க ஜெ., வலியுறுத்தல்: முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்[5].

Remarks condemnable, says Jayalalithaa[6]Tamil Nadu Chief Minister Jayalalithaa wrote to Jennifer McIntyre, United States Consul-General in Chennai, on Saturday, observing, “This remark which smacks of racism is highly condemnable.” Ms. Jayalalithaa further went on to add in her letter (a copy of which was released to the media), “You will all agree that this remark of the Vice-Consul is an affront to all Tamils. I would like to request you to impress upon Ms. Maureen Chao that she has to withdraw this remark and also apologise for having made such a comment on the Tamils.”இது அரசியலா நாட்டுப்பற்றா, தமிழர் பற்றா என்றெல்லாம் இனி விவாதங்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அக்கடிதத்தில்,    ‘’அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது’  என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’, என்று கூறியுள்ளார்[7].

 

கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்று பாடினாலும், கருப்புத்தோல் வெளுக்க கிரீம் வாங்குவதேன், விற்பதேன், அத்தகைய விளம்பரங்களைப் போட்டு கொழுப்பதேன்? என்னத்தான் தமிழர்கள் இப்படியெல்லாம் பேசினாலும், எழுதினாலும், கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு என்று பாடினாலும், கருப்புத்தோல் வெளுக்க கிரீம் வாங்குவதேன், விற்பதேன், அத்தகைய விளம்பரங்களைப் போட்டு காசு சம்பாதித்துக் கொழுப்பதேன்? இவையெல்லாம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு விடுமா?

வடகிழக்கு மாநில கிருத்துவர்க ள்இந்தியாவிற்கு எதிராக செயல்படும் விதம்[8]: வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்கள், சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்தே, நாகாலாந்து, மீஸோராம் போன்ற மாநிலங்கள் இந்தியாவுடன் சேர்ந்தது இல்லை என்ற கருத்தினை மக்களிடம் பரப்பி வருகின்றனர். “நாகாலாந்து கிருஸ்துவிற்காக!”, “மீஸோராம் ஏசுவிற்காக” அல்லது”வடகிழக்குப் பகுதியே ஏசுகிருஸ்துவிற்காகத்தான்” என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாகாலாந்தில் 90% மேலான மக்களை மதம் மாற்றியதுடன், ஆங்கிலத்தை அரசு மொழியாக உபயோகித்து வருகின்றனர். இதனால், இப்பொழுதைய சந்ததியர் தாம் இந்தியர் இல்லை என்ற வினோதமான கருத்தைக் கொண்டுள்ளார். அங்குள்ள சர்ச்சுகளில், சுவர்களில் “இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை” என்று எழுதிவைத்துள்ளனர் அல்லது அறிவிப்புகளை வைத்துள்ளனர். இதை, அங்கு செல்லும் எவரும் இன்று கூட பார்க்கலாம்.

தெவிடியாவாகஇருந்தால்கூடவெள்ளச்சித்தெவிடியாகருப்புஇந்தியனுடன்படுக்கக்கூடாது[9]: இப்படி சொன்னது ஒரு நிறவெறி பிடித்த ஆங்கிலேய பெண்மணித்தான். அதாவது, வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியர்களின் மீது அந்த அளவிற்கு வெறுப்பும், காழ்ப்பும், துவேஷமும் இருந்தன. அக்காலத்திலேயே கோவா, கோழிக்கோடு, கல்கத்தா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் ஐரொப்பியர்களுக்கு / ஆங்கிலேயர்களுக்கு என்று விபச்சார விடுதிகள் இருந்தன[10]. அதற்கென ஏஜென்டுகளும் இருந்தனர். அவர்கள் அழகான பெண்களை பிடித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு அடிமைகளாக விற்றுவந்தன[11]. விபச்சாரத்தொழிலும் ஈடுபடுத்தி வந்தனர். உண்மையான கருப்பர்களை ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக்கி, விலங்குகளைப் போல நடத்தி, வேலையை உறிஞ்சி கொன்று குவித்தனர். இந்தியர்களையும் அவ்வாறே கருப்பர்கள் என்றுதான் நினைத்து, அவ்வாறே நடத்தி வந்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது இந்தியர்கள் அப்படியொன்றும் தாங்கள் நினைத்த மாதிரி அறிவில்லாதவர்கள், இளிச்சவாயர்கள், மடையர்கள், ஏமாந்த சோணகிரிகள், அப்பாவிகள் இல்லை எனத் தெரிந்தது. உண்மையில், இந்தியர்கள் தாம், அவர்களை கேவலமாக கருதி, நினைத்து வந்ததனர்.

வேதபிரகாஷ்

14-08-2011


[1] இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில், “வெள்ளையெனே வெளியேறு” இயக்கத்தைப் பற்றிய கொண்டாட்டம் பற்றிய விழா கொண்டாடியபோது, அத்தகைய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.டி.ஸ்பர்கியன் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். அவர் எப்பொழுதும், ஆங்கிலேயர்கள், கிருத்துவர்களை ஆதரித்து கடிதம் எழுதிவருவது வழக்கமாக இருந்தது. ஹாரி மில்லர் என்பவருக்கும் அத்தகைய எண்ணம் இருந்தது. 1986-88 வருடங்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், இதைப் பற்றிய விவாதம், “ஆசிரியருக்குக் கடிதம்” பகுதியில் ஏற்பட்டுள்ளது.

[2] இதைப் பற்றிய விவரங்களை Vestiges of Madras, History of Madras மற்றும் ஐரோப்பிய ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, அவர்கள் வரைந்துள்ள படங்களில், தமிழர்களை “கருப்பர்” அல்லது “நீக்ரோக்களை”ப் போலவே வரந்திருப்பர்.

[9] Coralie Younger, Wicked Women of the Raj, European women who broke society’s rules and married Indian Princes, Hopper Collins, New Delhi, 2006, pp.25-29.

[10] The bothels were at Cursetji Sukhlaji Street, Kamathipura area, Bombay; Elliot Road, Calcutta; Simla, Missourie, Ooty etc.

[11] Shieley Chew and Anna Rutherford, Unbecoming Daughters of the Empire, Dangaroo Press, Sydney, 1993.