Posts Tagged ‘புதுச்சேரி’

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா? தடுப்பது எப்படி? [2]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறதா? தடுப்பது எப்படி? [2]

Puduchrry DJ Party 2019-5

100க்கும் மேலாகக் கலந்து கொண்ட பார்ட்டி: இது குறித்த தகவல் முன்பே போலீசாருக்கு கிடைத்தவுடன் எஸ்.பி. ஜெயக்குமார், போலீஸ்காரர் ஒருவரை இணைய தளம் மூலம் 1000 ரூபாய் செலுத்தி விருந்தில் பங்கேற்று தகவல் தெரிவிக்க வைத்துள்ளார்[1].  இதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி போட்டு பதிவு செய்திருந்தனர்[2]. அவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர்[3]. அவர்களுடன் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்[4]. அதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் மின்விளக்கு அலங்காரம், ஒலிபெருக்கி வசதிகளுடன் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 08-06-2019 இரவு 11 மணி அளவில் மது விருந்துடன் இந்த டி.ஜே. நடன நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது சிலருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களும் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போதையில் அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் இடையூறு தாங்க முடியாமல், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்[5].

Puduchrry DJ Party 2019-12

போலீஸார் வளைத்ததும், சிலர் தப்பியோடிய நிகழ்சியும்: இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நள்ளிரவில் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தார். போலீசாரை பார்த்ததும், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த சிலர் உஷாராகி, தப்பி ஓடிவிட்டனர். மற்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். சென்னை, கோவை, காஞ்சிபுரம், ஆரோவில் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளம் வயது ஆண் பெண் அதிகமாக இருந்துள்ளனர்[6].  சில இளம் பெண்களையும், சில வெளிநாட்டினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Puduchrry DJ Party 2019-6

விசாரணைக்குப் பிறகு கைதானவர்கள்: இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னையை அடுத்த மணப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் யுவராஜ், அவரது நண்பர்களான கோவையை சேர்ந்த பால்சன் என்பவரின் மகன் ஹஜி, காஞ்சீபுரத்தை சேர்ந்த தவுலத்ஷா மகன் அலி ஆகியோர் உள்பட 15 பேர் இந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்[7]. இந்திய குற்றவியல் சட்டம், போதை தடுப்புச் சட்டம், நகர பாதிப்பு சட்டம் முதலியவற்றின் கீழுள்ள பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த நடன நிகழ்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மின்சாதன பொருட்கள், சரக்கு வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடன நிகழ்ச்சிக்கு இடம் கொடுத்தது, இசை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆலங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் பலராமன், லிக்கித், பிரபு, ராமச்சந்திரன், பாலாஜி, நாகப்பன், கூலி தொழிலாளர்களான செல்வம், குமார், அய்யப்பன், முத்து, சரண்ராஜ், பூபாலன், சுரேஷ் உள்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Puduchrry DJ Party 2019-9

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்: பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்சிகள், திடீரென்று, இப்பொழுது வெளி வந்துள்ளது என்றாகாது. புதுவை அருகே நள்ளிரவில் போதை விருந்துடன் நடந்த இந்த ஆபாச நடன நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[8]. இதற்கிடையே போதை மற்றும் ஆபாச நடனம் போன்ற தவறான பாதைகளுக்கு கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி இருப்பதாக காவல்துறையினர் வேதனை தெரிவித்தார்கள்[9]. பெற்றோர்கள் முறையாக தங்களின் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது.

Puduchrry DJ Party 2019-7

அமெரிக்கர் பாதையில் இந்தியர் செல்லலாகாது: அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்கம் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளது சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

Puduchrry DJ Party 2019-8

பெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34.குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன.  தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கீதை.1.40,” என்று குறிப்பிட்டு,கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥1.41, ४१॥

அதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-13

[1] நியூஸ்.18, முந்திரிக்காட்டில் தன்னிலை மறந்து மதுபோதையில் ஆட்டம்பெண்கள் உள்பட 16 பேர் கைது, News18 | June 10, 2019, 11:06 AM IST

[2] https://tamil.news18.com/photogallery/national/puducherry-16-people-were-arrested-in-puducherry-for-organized-drinking-party-vin-165811-page-5.html

[3] பிஹைன்ட்.த.வுட்ஸ், இப்படியா ஆபாசமா ஆடுறது‘…போதையில்டி.ஜே டான்ஸ்‘…சிக்கியஐடிமற்றும்கல்லூரி மாணவிகள்‘!, By Jeno | Jun 10, 2019 01:17 PM

[4] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/16-people-were-arrested-in-puducherry-for-organizing-drinking-party.html

[5] நியூஸ்.18, முந்திரிக்காட்டில் தன்னிலை மறந்து மதுபோதையில் ஆட்டம்பெண்கள் உள்பட 16 பேர் கைது, News18 | June 10, 2019, 11:06 AM IST

[6] Times of India, Villupuram: Cops bust rave party, 16 held, Karal Marx | TNN | Updated: Jun 10, 2019, 11:57 IST

[7] Police officials registered a case on 8 sections including 147 and 294a of IPC , 4(1)a and 4 (1)(i) Tamil Nadu Prohibition act and 3 (A) town nuisance act.

https://timesofindia.indiatimes.com/city/puducherry/cops-bust-rave-party-16-held/articleshow/69717770.cms

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்! By Vishnupriya R | Published: Sunday, June 9, 2019, 9:47 [IST] .

[9] https://tamil.oneindia.com/news/villupuram/15-were-arrested-in-villupuram-arranging-for-a-drinks-party-near-auroville-353518.html

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

Puduchrry DJ Party 2019

குடித்து கும்மாளம் போது டீஜே பார்ட்டிகள் புதுச்சேரியில் சகஜம் தான்: புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன[1]. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே[2]. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது[3]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. பாண்டிச்சேரி, புதுச்சேரி, ஆரோவில் என்றாலே இதெல்லாம் சகஜமான விசயம் என்றே ஆகிவிட்டது.  இவையெல்லாம் வெளிப்படையாகவே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு, ஓட்டல்களில் நடக்கின்றன[4]. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீகத்தைத் தேடிச் சென்ற பயணம் ரேவ் பார்ட்டியில் முடிந்து விட்டது என்று ஒருவர் எழுதியுள்ளதைப் படிக்கலாம்[5].  அதாவது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்ய, தயாராக அந்தந்த தொழில்கள் செய்பவகள் தயாராக இருக்கின்றனர்.

Puduchrry DJ Party 2019-2

புதுச்சேரி, ஆரோவில், அரவிந்த ஆசிரமம்: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[6]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[7]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[8]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

Puduchrry DJ Party 2019-3

போதைப் பொருட்களின் புழக்கம்: எல்லோருக்கும் பணம் கிடைத்து வருவதால் அமைதியாக நடந்து வருகின்றன. அயல்நாட்டவர்களை வைத்து செய்கின்ற வியாபாரம் அமோகவே நடந்து வருகின்றன. அதிலும், பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் நபர்கள் மூலம் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆரோவில்லில் நடப்பவை வெளியே வருவதில்லை. மற்றவற்றில், உள்ளூர்வாசிகள் எல்லைகளை மீறும் போது, பிரச்சினைகள் உண்டாகின்றன. ஏதாவது உட்பூசல் போன்ற விவகாரம் வந்தால் புகார்களாக வெளிப்படுகின்றன. ஆனால், “விவரம்” தெரிந்தவர் அந்த “வரயறைக்குள்” நடத்தி செல்கின்றனர். இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன[9]. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன[10]. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எப்படி புழக்கத்தில் உள்ளன என்று ஆராய்ந்தால், வேறு விவகாரங்கள் வெளிவரும்.

Puduchrry DJ Party 2019-4

போலீஸார் கண்காணிப்பு, எச்சரிக்கை முதலியன: ஆரோவில் அனைத்துலக விருப்பு-வெறுப்புகளுக்குட்பட்டதாக இருப்பதால், அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறது. அதனை அரசுடமையாக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகளும் தடுக்கப் பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது[11]. ஆனால் ஆரோ வில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன[12]. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Puduchrry DJ Party 2019-11

வளைதளத்தில் விளம்பரம் கொடுத்து, ஜி.பி.எஸ் மூலம் கூட்டிய அதிநவீன ரேவ்பார்ட்டி: இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 08-06-2019 மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. “அரோரா Music contest” என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் கொடுக்காமல் 1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் Navigator (வழிகாட்டி) Map அனுப்பப்படுகிறது. மகாபலிபுரம் மாதிரியாக இருந்தாலும், மாட்டி கொள்ளாமல் இருக்க, இவ்வழி பின்பற்றின போலும். இந்த வகையில் புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடினார்கள். அங்கு அலங்கார மின்விளக்குகள், இசைக்குழு, மது பானங்கள், போதை பொருட்களுடன் மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, சமூக வளைதளங்களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்த நிகழ்சிற்கு பாதுகாக்கப்படும் காட்டிற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டது[13].

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-10

[1] தினத்தந்தி, புதுச்சேரி அருகே முந்திரி தோப்புக்குள் மது விருந்து அளித்து பெண்களுடன் https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4ஆபாச நடனமாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 10, 2019 05:15 AM

[2] A disc jockey, often abbreviated as DJ, is a person who plays existing recorded music for a live audience. Most common types of DJs include radio DJ, club DJ who performs at a nightclub or music festival and turntablist who uses record players, usually turntables, to manipulate sounds on phonograph records.

[3] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/10041439/Near-pondichery-Wine-party-with-women-at-midnight.vpf

[4] https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4

[5]  Nihal Bambulkar, In Auroville, My Search for Spirituality Ended at a Forest Rave Party, BY NIHAL BAMBULKAR AUG. 22, 2018 https://www.arre.co.in/first-person/auroville-spirituality-forest-rave-party-2/

[6] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=482439&Print=1

[7] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்றின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

[8] http://secularsim.wordpress.com/2013/03/21/628-why-aurobindo-ashram-attacked-by-the-dravidar-kazhagam/

[9] விகடன், மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்! – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ், வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/06/2019) கடைசி தொடர்பு:20:40 (10/06/2019).

[10] https://www.vikatan.com/news/tamilnadu/159470-viluppuram-police-arrests-16-near-pondicherry-border-over-organizing-mid-night-party.html

[11] தந்தி.டிவி, ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து, பதிவு : ஜூன் 10, 2019, 08:13 AM

[12] https://www.thanthitv.com/News/India/2019/06/10081334/1038816/Puducherry-Arrest-Liquor-Party.vpf

[13] The organisers had given wide publicity for the event on social media platforms and had enabled location sharing feature with Google Maps. The tickets were priced at ₹1,000 per couple. Some youngsters were also found peddling ganja at the party and had also procured IMFL from Puducherry. Mr. Jayakumar said the police trapped them by sending decoys who struck a deal with them in the guise of buying tickets for the event.Over 80 persons, including Aurovillians, foreigners and youngsters from Chennai, were attending the party. No permission was obtained for the event. The orchard is located close to a reserve forest, he said.

https://www.thehindu.com/news/cities/chennai/15-detained-ganja-seized-at-rave-party-near-auroville-township/article27702819.ece

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)

ஓகஸ்ட்31, 2013

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (2)

 

ஶ்ரீஅரவிந்தர்ஆசிரமத்தில்நடக்கும்அதிகாரபோராட்டம்: புதுச்சேரியில் உள்ள, அரவிந்தர் ஆசிரமம், மிகவும் பிரசித்தி பெற்ற ஆசிரமத்தில் உள்ள –

 • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, பாலியல் தொந்தரவு நடக்கிறது;
 • மனித உரிமைகள் மீறப்படுகிறது;
 • ஆசிரம நிதியில் முறைகேடு நடக்கிறது;
 • ஆசிரம சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன;

என, குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை, புதுச்சேரி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், விஷ்ணு லலித் மற்றும் ஆசிரமத்தில் உள்ள சிலர் எழுப்பியுள்ளனர்[1]. உண்மையில், ஒவ்வொரு மடத்திலும், நிறுவனத்திலும், கட்சியிலும் இத்தகைய அதிகார போராட்டங்கள் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற துவேசங்களினால் ஏற்பட்டு வருகின்றன. அவற்றை மறைக்கும் விதமாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது. சங்கம் என்று வைத்துக் கொண்டாலே, பதவி ஆசை வரும்போது அல்லது குறிப்பிட்டவவர்கள் மட்டும் அனுபவிக்கிறார்களே என்று கவனிக்கும் போது, மற்ற உறுப்பினர்களுக்கு ஆசை வரத்தான் செய்யும். ஏனெனில், அந்த 10-20 பேர் மற்ரவர்களை தமக்கு சாதகமாக வைத்துக் கொண்டே, சங்கமே தனக்கு சொந்தம் போல நடந்து கொள்வார்கள். அப்பொழுதுதான், பிரச்சினை வரும்.

புகார்கள் உண்மையா என்று விசாரிக்க உத்தரவு: பாலியல் புகார்கள் உள்பட புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார்கள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. இது தொடர்பாக நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்துள்ள உத்தரவில், அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளனவா என்று நீதிபதி பி.ஆர்.ராமன் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்மையா என்பது பற்றியும், ஆசிரம நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், ஆசிரமச் சொத்துகள் சட்டவிரோதமான முறையில் விற்கப்படுகிறது என்றும் கூறப்படும் புகார்களில் உண்மை உள்ளதா என்பது பற்றியும் நீதிபதி ராமன் விசாரணை நடத்தி, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சசிதரன் தனது உத்தரவில் கூறியுள்ளார். விசாரணை அதிகாரியான நீதிபதி ராமனுக்கு உதவிடும் வகையில் கொச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சத்யா ஸ்ரீ பிரியா ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்[3]. ஏற்கெனவே, கேரளாவைச் சேர்ந்தவர்கள் வங்காள மாநில மக்களுக்கு அடுத்தபடி, அதிகாரம் செல்லுத்தி வருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டும் உள்ளது. பிறகு, இவர்கள் சமநீதி முறையில் வேலை செய்வார்களா அல்லது பாரபட்சமாக நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

இடைக்காலத் த டைநீக்கம்: அரவிந்தர் ஆசிரம செயல்பாடுகள் குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்ளிட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு 1.10.2012 அன்று புதுச்சேரி துணை ஆட்சியர் (வருவாய்) நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த விசாரணைக்கு தடை கோரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து 5.10.2012 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்காலத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஆசிரமம் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றும், எனினும் முன்னரே முடிவு செய்யப்பட்ட விதத்திலான ஆட்சியரின் விசாரணையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆசிரம அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்தலாம் என்ற யோசனையை நீதிபதி சசிதரன் முன் வைத்தார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டதையடுத்து, நீதிபதி பி.ஆர்.ராமனை விசாரணை அதிகாரியாக நியமித்து நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தின் கௌரவம் காக்கப்பட வேண்டும்: அரவிந்தர் ஆசிரமம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஓர் அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது சிலர் ஆசிரமம் குறித்து கூறியுள்ள புகார்களால் அந்த ஆசிரமத்தின் கௌரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. என்ன விலை கொடுத்தாவது ஆசிரமத்தின் புகழும், கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி சசிதரன், தற்போதைய ஆசிரம அறக்கட்டளை சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்[4].

ஶ்ரீஅரவிந்தர் சித்தாந்தங்கள் மறந்தது: ஶ்ரீ அரவிந்தர் சுதந்திர போராட்ட காலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தது, ஆன்மீகத்தை தேடியது என்ற உண்மைகளை மறந்து, நாங்களும் ஆன்மீகத்தில் திளைக்கிறோம், யோகா செய்கிறோம், தியானம் செய்கிறோம் என்று பலர் கிளம்பி விட்டார்கள். அரவிந்தரின் ஆன்மீகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்களா என்ற் தெரியவில்லை. மார்ச் மாதம் ஆசிரமம் தாக்கப்பட்ட போது, இவர்கள் வருத்தம் தெரிவித்தார்களா என்று கூட தெரியவில்லை. தாக்கியவர்களின் மனங்களில் ஒரு துளி ஆன்மீகம் அல்லது தேசப்பற்று இருந்திருந்தால், தாக்கியிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் முகங்களில், செயல்களில் வெறித்தனம் தான் காணப்பட்டது.

அந்நியர்களில் சிலர் இந்தியக்காரணிகளுக்கு எதிராக நடந்து கொள்வது: அந்நியர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது எல்லாவற்றையும் நம்புகிறவர்கள் ஒரு பக்கம், நாத்திகவாதிகள், இந்து-விரோதிகள், கம்யூனிஸ்டுகள், திராவிட-சித்தாந்திகள் போன்றோர் இன்னொரு பக்கம் – இவர்களால் தான் பிரச்சினைகள் வருகின்றன. இப்பொழுது, அனைத்தும் வியாபாராமாக்கப் பட்டு விட்டதால், பணம் சம்பாதிக்கும் வழிகளில் உள்ளவற்றை கொண்டு வருகின்றனர், அல்லது உள்ளவற்றை மாற்றி வியாபாரம் செய்ய பார்க்கின்றனர். உள்ளூர்காரர்களை விட, வெளிநாட்டுக் காரர்களிடம் “அதிகம் பணம் பண்ணலாம்” என்ற எண்ணத்தில் செயல்படும் போது, குற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

சொத்துக்களால் உண்டாகும் குற்றங்கள்: பிரெஞ்சுகாரர்களுக்கு சொத்துரிமை உள்ளது, ஆனால், அவர்களுக்குப் பிறகு, அவை இந்தியர்களுக்கு சில சரத்துகளில் கிடைக்க வழியுள்ளது எனும் போது, அவற்றை இந்தியர்கள் கடைபிடிக்கப் பார்க்கின்றனர். நிலம் மற்ரும் சொத்து மதிப்பு கோடிகளில் உயர்ந்து வரும் இந்நாளில் எதையும் செய்யும் எண்ணமும் உருவாகி விட்டது. பிரெஞ்சு நாட்டிடம் பென்சன் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் உல்லாசிகள், சோம்பேரிகளும் இதில் சேர்ந்து கொள்கின்றனர். இதில் மேற்குறிப்பிட்ட கோஷ்ட்கள் நுழையும் போது அல்லது அவர்கள் பார்வையில் வரும் போது, அவர்களும் அதில் திளைக்கலாம் என்ற எண்ணம் கொள்கின்றனர். இதனால், அரசியல், ரௌடியிஸம், கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்முறை, கொலை செய்யும் அளவிற்கு செல்லுதல் முதலிய வக்கிரங்களும் தலையெடுக்கின்றன. சாதாரண திருட்டு தான், பேராசையில் மற்ற குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. கோஷ்டிகள் இவற்றில் செயல்படும் போது, கோஷ்டி-குற்றங்கள் தாம் ஏற்படுகின்றன.

© வேதபிரகாஷ்

31-08-2013


ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

ஓகஸ்ட்31, 2013

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

அரவிந்தர் ஆசிரமத்தில் செக்ஸ் கொடுமை (2004): இப்படி தலைப்பிட்டு, ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு மேலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1].  பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்ரீதியில்கொடுமைப்படுத்தப்படுவதாக அங்கு தங்கியுள்ள 5 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்கொடுத்துள்ளனர். ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பேரும் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவியான பூர்ணிமா அத்வானி கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பூர்ணிமா, அரவிந்தர் ஆசிரமம் மீது கற்பழிப்பு புகார் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 • பெண்கள் தங்கியுள்ள அறைகளில் வந்து ஆண்கள் சிறு நீர் கழிப்பது,
 • பெண்கள் தங்கியுள்ள அறைகளின் சுவர்களில் அசிங்கமான வார்த்தைகளை எழுதி வைப்பது
 • போன்ற செயல்களில் சில ஆண்கள் ஈடுபடுவதாகவும்

இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம் என்றார். இவையெல்லாம், அரசு அலுவலங்கள், ரெயில்கள் மற்ற கட்டிடங்களின் கழிப்பிடங்கள், முதலியவற்றில் சர்வ சகஜமாகக் காணலாம். அவற்றைப் பற்றி கவலைப் படாத பெண்கள், இதைப் பெரியதாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பக இருக்கிறது. ஆரோவில் ஆசிரமத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், முறைகேடான பாலுறவு போன்றவற்றில் அங்குதங்கியுள்ள வெளிநாட்டவரும், உள்நாட்டினரும் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது[2].

அந்நியர்களால் வரும் விபரீதங்கள்: ஆரோவில் வளாகத்தில் அந்நியர்கள் அதிகமாக இருப்பதினால், அவர்கள் மூலமாக பற்பல பிரச்சினைகள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கு மேலுள்ள அந்நிய பக்தர்கள், சீடர்கள், தியான-யோகா நிகழ்சிகளில் கலந்து கொள்பவர்கள், சுற்றுலா பிரயாணிகள், உல்லாசிகள் என்று அனைத்து வகையினரும் இங்குள்ள கூட்டங்களில் அடங்குவர். அந்நியர்கள் அதிகமாக வருவதால், அவர்கள் தங்களது பழக்க-வழக்கங்களை பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸில் ஈடுபடுவது போன்றவை அவர்களைப் பொறுத்த வரைக்கும், தினசரி காரியங்களாக இருக்கின்றன. தினமும் சாப்பாடு-உணவு போல அவற்றை வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் போதை மருந்தும் உட்கொள்கின்றனர். இதனால், இவையெல்லாம் இங்கு கிடைக்கின்றன அல்லது கிடைக்கக்கூடிய நிலையுள்ளது. இவற்றில் சில சட்டமீறல்கள், குற்றங்கள் எனும்போது, அவை தெரிந்தே அனுமதிக்கப் படுகின்றன என்றாகிறது. இவற்ரின் மூலம் தான் மற்ற குற்றங்கள் நடக்கின்றன.

தொடர்ந்து நடக்கும் கொலைகள்,  கற்பழிப்புகள்: ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அல்லது அதனைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் எல்லாம், பொதுவாக ஆரோவில் மற்றும் அதன் வளகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தாம் அதிகமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள், மற்றும் அவற்றைச் சேர்ந்த குற்றங்கள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் சில கீழே உதாரணத்திற்காகக்  கொடுக்கப்படுகின்றன:

 • அக்டோபர் 2004ல் ஆரோவில் அருகேயிருந்த கிராமத்தில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டன. அதில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் கொல்லப்பட்டார். ஜனவரி 19, 2004ல் அக்கூட்டத்தினர் பெயிலில் வெளியே வந்தபோது, அதில் ஒருவர் இடையாஞ்சாவடியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்[3].
 • ஜனவரி 31, 2004ல் சைடோ வான் லூ [Sydo Van Loo, a Dutch national] என்ற டச்சு நாட்டுக்காரர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்[4].
 • அக்டோபர் 2008ல், இசபெல்லா என்ற பெண் பலரால் கற்பழிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக, ஆரோவில் அருகே முந்திரி புதர்களில் கிடந்தது போலீஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கணவர் ஆல்பர்ட் துபாயில் வேலை செய்கிறான். காணாமல் போன அவளைப் பற்றி, தாயார் போலீஸாரிடத்தில் புகார் கொடுத்திருந்தார்[5].
 • மே 2009ல், ஆன்ட்ரி வயோஜேட் [French industrialist, Andre Viozat, 66] என்பவர் தனது 13-ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்னை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[6]. இவர் சந்திரிகா என்ற கேரள பெண்னை திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து விட்டனர். அவர் அடையாளம் தெரியாத ஆசாகளால் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 • டிசம்பர் 31, 2010 அன்று மதிவளவன் மற்றும் கருணகரன் கோஷ்டி மோதல்களில் கொல்லப்பட்டனர்[7]. இவர்களைக் கொன்ற சுரேஷ் என்பவன் ஆன்ட்ரி வயோஜேட் கொலையிலும் தனக்கு பங்கிருப்பதாக ஒப்புக் கொண்டான்.

வான் லூ கொலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆரோவில்-காரர்களே, வன்முறை ஆரோவில்லில் ஒன்றும் புதியதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்[8]. ஆன்ட்ரி வயோஜேட் கொலையைப் பொறுத்த வரையில் கோடிக்கணக்கான சொத்துதான் பங்கு வகித்துள்ளது. மேலும் ஆரோவில் வளகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் உள்ளூர்வாசிகள் இவர்களிடையே சில பிரச்சினைகள் எழுகின்றன, அவை கொலை, கற்பழிப்பில் கூட முடிகின்றன என்று வெளிநாட்டுக்காரர்களே எடுத்துக் காட்டுகின்றனர்[9].

ஶ்ரீஅரவிந்தர் பெயரில் இயங்கி வரும் இயக்கங்கள்,  நிறுவனங்கள்,  சங்கங்கள் முதலின: ஆரோவில்[10], ஆரோவில் ஆசிரமம், ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம்[11] மற்றும் இதர ஆசிரமங்கள் என்று பல புதுச்சேரியில் / பாண்டிச்சேரியில் இருந்து வருகின்றன. இவற்றை பல இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்கள், டிரஸ்டுகள், சொசைடிகள் நிர்வகித்து வருகின்றன. இவையெல்லாம் முதலியவை தனித்தனியானவை[12]. உள்ளூர்-வெளியூர் இந்தியர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்ற அந்நியர்கள் என்று பலர் அதில் விருப்பங்கலைக் கொண்டுள்ளார்கள்.

ஆரோவில் பகுதியில் நடப்பதை,  ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வரும் நிலை: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[13]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[14]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[15]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

இலங்கை பிரச்சினை வைத்துக் கொண்டு திகவினர் ஆசிரமத்தைத் தாக்கியது  (மார்ச்.2013): இவ்வருடம் மார்ச் மாதம் கூட, சம்பந்தமே இல்லாமல், திராவிட கழக்கத்தினர் ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர். ஆனால், ஆரோவில்லை விட்டுவிட்டனர்[16]. இதேபோலத்தான், ஊடகத்தினரும், ஆரோவில் பகுதியில் நடப்பதை, ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வருகின்றன. சமீபத்தில், ஒரு “டிரான்ஸ்-ஜென்டர்” தான் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் பிரச்சினையை அணுகுவதில் சிக்கலாக இருந்ததால் திகைத்தனர். உடனே “புதுச்சேரி பெண்கள் வாழ ஜாக்கிரதையான இடம் இல்லை” என்றதுபோல “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டது[17]. எப்படி ஒரு அந்நிய பெண் காஷ்மீரத்தில் கொலை செய்யப்பட்டதும், இந்தியா அந்நியர்களுக்கு ஏற்ற நாடல்ல, உமது பெண்கள் அங்கு ஜாக்கிரதையாக இருக்க முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, அதே பாணியில், இந்த பிரச்சாரமும் உள்ளது.

© வேதபிரகாஷ்

31-08-2013


[3] In October 2003, the gang war flared up once again, and another murder took place, this time in another village close by Auroville. The victim was a homeopath who had connections with one of the gangs. It did not take long before the retaliation murder occurred. On January 19th, 2004, one of the senior members of the other gang, who had just been released on bail a few days earlier, was killed in broad daylight in Edaiyanchavadi.

http://www.auroville.org/journals&media/avtoday/archive/2004-2009/2004-03/spiral_violance.htm

[7] A double murder, in which Madhivalavan (26) and Karunakaran (26) were killed in a group rivalry at Periya Mudaliar Chavadi on December 31, 2010,  http://www.hindu.com/2011/01/05/stories/2011010563250900.htm

[12] The disciples and devoted followers of Sri Aurobindo and the Mother, with a view to propagate and practise the ideals and beliefs of Sri Aurobindo formed a Society called Sri Aurobindo Society in the year 1960, which at all material times was and is still a society duly registered under the provisions of the West Bengal Societies Registration Act, 1961. This Society is completely distinct from Aurobindo Ashram in Pondicherry. The Society was established and registered for the purpose of carrying out in and out side India the several objects stated in the memorandum of the Society. http://indiankanoon.org/doc/312939/

[14] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்ரின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.