Posts Tagged ‘தமிழன்’

செபாஸ்டியன் சீமான் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுவது ஏன் – யாசின் மாலிக்கின் தூண்டுதலா, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவா?

மே30, 2013

செபாஸ்டியன் சீமான் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுவது ஏன் – யாசின் மாலிக்கின் தூண்டுதலா, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவா?

Jawaharulla and Sebastian begging pardonஎல்டிடிஇ.ஐ எதிர்க்கும் முஸ்லிம் இயக்கத்தாரிடம் மன்னிப்புக் கேட்டு,  பிரபாகரனை தூஷிக்கும் கும்பலோடு கூட்டு ஏன்?: ஒரு முஸ்லிம் இணைத்தளம் இப்படி கூரியுள்ளது[1], “இனி இரு தரப்பிலும் நிகழ்ந்த கடந்தகால கசப்புகளை பெருந்தன்மையோடு மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும், இது குறித்து இலங்கை முஸ்லிம் தலைமைகளையும், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் நமது முன்னிலையில் சந்திக்க வைத்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது”. இதனிடையே ஜனவரி 16, 2011 அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற கருத்தரங்கில் சீமானும் அழைக்கப்பட்டிருந்தார். அதில் பேசிய சீமான், “கடந்த காலத்தில் புலிகள் & முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள் ளன. புலிகள் சார்பில் நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசியதும்”, அரங்கமே அதை வரவேற்று ஆதரித்தது.

Kolattu Mani with Muslims demonstration on the roadபுலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும்,  அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம்: 2011ல் இப்படி பேசிய சீமான், இப்பொழுது 2013ல் முஸ்லிம்களுக்குப் பரிந்து பேசுகிறார் என்றால், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் மற்ற எல்லாத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். செபாஸ்டியன் சீமான் கிருத்துவராக இருந்துதான் செயல்பட்டு வந்து, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் என்று வெளிநாடுகளிலும் இவரது தீவிரவாத தொடர்புகளால் நாடு கடத்தப்பட்டார். பிறகு, வெளிநாடுகளில், இனிமேல் தனது பிரச்சாரம், விளம்பரம், படோபடம் முதலியவை எடுபடாது என்றதும், உள்நாட்டில் இந்தியத் தமிழர்களைக்  குழப்ப ஆரம்பித்தார். பிறகு அதுவும் எடுபடவில்லை என்றதும், முஸ்லிம்களுக்குத் துணைபோகலாம் என்று தீர்மானித்துள்ளார் போலும். அதாவது, இலங்கைத் தமிழரை “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தி விட்டப் பிறகு, இனி முஸ்லிம்களை தாஜா செய்தால், வேறுவிதமாக ஆதரவு, பலன், அரபு நாடுகளில் அழைப்பு-பிரயாணம் முதலியவை கிடைக்கும் என்ற எண்ணத்தில் முடிவு செய்து விட்டார் போலும்.

Kolattu Mani with Muslims - supporting communal reservationசெபாஸ்டியன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதியது எதுவும் இல்லை: ஏற்கெனவே பெஙளூரில் நடந்த கூட்டம் மற்றும் “தி ஹிந்து”வில் வெளிவந்துள்ள செய்திகளைத் தாம், இவர் தனது அறிக்கை என்று வெளியிட்டுள்ளார். போலீஸாரின் வேலைக்கு எதிராக எப்படி முஸ்லிம் இயக்கங்கள் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டிருக்கின்றன என்பதனை ஏற்கெனவே விவரமாக இக்கட்டுரையில் விளாக்கியுள்ளேன்[2]. “ஆள்-கொணர்வு மனு” தாக்கல் செய்த பிறகு, சட்டப்படித்தானே, நடவடிக்கை எடுக்கப்படும். பிறகு ஏன் இப்பொழுது, சீமான் உருவில் அந்த ஆதரவு வரவேண்டும்? அதிலும் குறிப்பாக கடலூர் பிரச்சினைக்குப் பிறகு வரவேண்டும்.

Kolattur Mani with Viduthalai Rajendran etcஏற்கெனெவே உள்ள மாவை திருப்பி அரைக்கும் சீமான் கூட்டம்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்[3] கூறியிருப்பதாவது[4]: “கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், கோவை கோட்டை மேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல் துறையினர், கைது செய்ய திட்டமிட்டிருந்த இளைஞர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க எந்த பொருளையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். ஆனால் கர்நாடக காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 600 கிராம் வெடி பொருட்கள் அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கோவை மாநகர ஆணையர் மறுத்துள்ளார். சோதனையின் போது சந்தேகிக்கத்தக்க எந்த பொருளும் கைப்பற்றப் படவில்லை என்று கோவை மாநகர ஆணையர் தெளிவாக அறிக்கையும் கொடுத்துள்ளார்.

 nallakannu_thiruma_ansari_maniஎஸ்டிபிஐ எழுதி கொடுத்தது போலிருக்கிறது:  அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பீர் முகமதுவுடன் தங்கியிருந்தார் என்று ஒரே காரணத்திற்காக அலியப்பா என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது கர்நாடக காவல்துறை. ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே, கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப் படுத்தாமலேயே அவரை காவலில் வைத்து விசாரித்துள்ளனர்.என்னிடம் காவல் துறையினர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, எனவே விடுதலை செய்து விட்டனர்என்று அலியப்பா பெங்களூருவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கர்நாடகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அலியப்பாவை விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். ஆனால், அவரால் எங்கு எப்படி செல்வது என்று கூட தெரியாமல் திணறியுள்ளார். கர்நாடகத்தில் இயங்கிவரும் மக்களுக்கான மனித உரிமை சங்கம் வழிகாட்டி பாதுகாத்து அழைத்துவந்துள்ளது. மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க முற்பட்ட தேச புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), விட்டுவிட்டு சென்றுவிட்டது! ஆனால் கர்நாடக காவல்துறையினர் இன்னமும் தமிழ்நாட்டுக்குள் வந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்காக என்ற பெயரில் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே சட்டத்திற்குப் புறம்பாக நடத்துகின்றனர்[5].

 Yasin malik sitting with Yafiz Sayeedமுஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது: இது தடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.

 Afzal-Hyderabad-Kasab-nexusஇந்தியாவில் இந்தியர்களாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளே  நடக்காதே: ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்குரிய சட்ட ரீதியான வழிமுறைகளை கையாளாமல் கைது செய்வதும், அடிப்படை ஆதாரமின்றி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட நபர் சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளாரே என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயமலும் காவல்துறை செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோவையில் ஒரு முறை குண்டு வெடிப்பு நடந்துவிட்டது என்பதற்காகவும், என்றோ நடந்த ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காகவும், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவையிலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்துவரும் முஸ்லீம் இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இப்படிப்பட்ட காவல் துறை அத்துமீறல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படும் ஒரு மன நிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[6]. ஏப்ரல் மாதத்திலேயே, இவ்வழக்கை சிபிஐ எடுத்து நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ அமைப்பு ஆர்பாட்டம் செய்தது[7], போஸ்டர்கள் ஒட்டியது.

Sebastian Seeman with Yasin Malikசந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம்,  போலீஸாரின் மீது சந்தேகத் தைவளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[8]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[9]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[10].

Why Muslim protest against the revival of LTTE in Munnarபெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள்  என்பதனை அறிந்து கொள்ளலாம். செபாஸ்டியன் சீமானும் இதில் சேர்ந்தது, அவரது சுயரூபத்தைக் காட்டுகிறது எனலாம்.

ள்ஏதமிழ் ஜிஹாத், தமிழ் தீவிரவாதம், தமிழ் பயங்கரவாதம் என்று ஆரம்பித்தாலும் ஒடுக்கப்பட வேண்டும்: தமிழ் ஜிஹாத், தமிழ் தீவிரவாதம், தமிழ் பயங்கரவாதம் என்று வேறு உருவில் தமிழகத்தில், வேலை செய்ய சில குழுக்கள் தயாரானால், நிச்சயமாக சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். இச்செயல்களினால்தா, தமிழ்நாட்டில் மறுபடியும் “அல்-உம்மா” தலையெடுக்கிறாதா என்ற கேள்வி ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ளது[11]. முஸ்லிம்கள் முதலில் அத்தகைய தொடர்புகளை, மூலங்களை, ஊக்குவிப்புகளை நிறுத்த வேண்டும். நாடு, ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், இந்திய விரோதிகள் என்று அவர்களுக்காக மட்டும் இல்லை. அவர்கள் அப்படி குரூர-கொடிய கொலைகளை, கழுத்தறுப்புகளை செய்து கொண்டிருந்தால், மற்றவர்கள் கண்டித்திருக்க வேண்டும். மனைவி-மக்கள், தாயார்-சகோதரிகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோல நடக்கவில்லை[12]. அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்றாகிறது. மேலும், இக்குண்டுவெடிப்பைப் பொறுத்த வரைக்கும், ஏற்கெனவே குண்டுவெடிப்புகளில் மாட்டிக் கொண்டவர், ஜெயிலுக்குப் போனவர், தேடப்பட்டு வருபவர்[13], என்றுதான் உள்ளனர்[14] எனும்போது, தார்மீகரீதியில் இத்தகைய கோரிக்கைகள் ஏன் எழுகின்றன என்று தெரியவில்லை[15]. “பாஸ்டன் முதல் பெங்களூரு வரைதீவிரவாதத்தை அணுகும் முறைகள்ஏப்ரல் 15 முதல் 22 வரை” என்ற தலைப்பில் நான்கு பகுதிகளாக இவ்விஷயம் அலசப்பட்டுள்ளது[16].

 

வேதபிரகாஷ்

27-04-2013


[7] Protesting the arrest of 4 people of Melappalayam, Tirunelveli a demonstration took place near the Melappalayam market on behalf of STPI. During the protest the state leader of SDPI Dhehlan Baqavi said, the investigation of the Bangalore bomb blast case to be handed over to the CBI.

http://sathiyam.tv/english/districts/thirunalveli/sdpi-protested-to-handover-bomb-blast-case-to-cbi

[9]  டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….

http://secularsim.wordpress.com/2013/04/27/bangalore-blast-police-investigation-human-rights-thwarting-legal-action/

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

kalanithi_maran,_kaviya_and_kaveriவருடத்திற்கு ரூ 85 கோடி என்று ஏலத்தில் கலாநிதி மாறன் “ஹைதரபாத் ரைடர்ஸ்” என்ற கிரிக்கெட் கூட்டத்தை குத்தகைக்கு எடுத்தபோது[1], திராவிட இனமானங்களுக்கு, ரத்தங்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது போலும். “டெக்கான் சார்ஜர்ஸ்” காசுப் பிரச்சினையில் சிக்கியதால் அக்கூட்டம் மூடப்பட்டு, பிசிசிஐ தேடிக்கொண்டிருந்தபோது தான், இந்த திராவிட செல்லப்பிள்ளைக் கிடைத்தாராம்[2]. வருடத்திற்கு ரூ 85 கோடி என்பது 2008ல் ஒப்பந்த ஏலத்தில் 100% மேலாகக் கேட்கப்பட்ட பணத்தைவிட அதிகமாம். சன்டிவி மற்றும் பிவிபி வென்சூர்ஸ் [ராஜசேகர ரெட்டி கம்பனி ஷக்‌ஷி டிவியின் பங்குதாரர்[3]] என்று இரண்டே கம்பெனிகள் ஏலத்தில் இருந்தனராம், மற்றவர்கள் ஏலம் கேட்காமல் அமைதியாக இருந்தார்களாம்[4]. பிவிபி வென்சூர்ஸ் ரூ.69.03 கோடி என்றபோது, சன்டிவி ரூ 85 கோடிக்கு கேட்டதால், ஏலம் முடிவு செய்யப்பட்டதாம்[5]. திராவிட கண்மணிகளுக்கு இவையெல்லாம் கூட புரியவில்லை போலும்.

Cheer-girls-sponsored- Spicejet2சன்டிவி, ஷக்‌ஷி டிவியை வென்றது எப்படி?: கத்தோலிக்க சோனியா காங்கிரஸ், கிறிஸ்தவ ராஜசேகர ரெட்டி காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது தெரிந்த விஷயமே. இருப்பினும்,  பிசிசிஐ திராவிட, நாத்திக, இந்து விரோத கூட்டத்திற்கு எப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் குத்தகைக்குக் கொடுத்தார் என்பது விளங்கவில்லை. குங்குமம் வைத்தவர்களை[6] ஏசிய தாத்தாவின் பேரனுக்குக் கொடுக்கிறோமே என்று கவலைப் படவில்லை. கலாநிதிக்கு சாதகமாக ஏலம் இருந்தது என்பதை, அவர் கொடுத்த விலை அல்லது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்தது. அவர் அத்தகைய மதிப்பீட்டை சரியாக செய்தாரா என்று கூட கேள்வியை எழுப்பினர்[7]. எப்படியிருந்தாலும், யுபிஏ வியாபாரக் கூட்டு நன்றகத்தான் செயல்படுகிறது என்பது தெரிகிறது.

Sun risers -Sri Lanka- riticized4ஒருகோவில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால்,  அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்: கருணாநிதி இப்படி சொன்னது[8] ஞாபகத்தில் உள்ளதா, “ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்”. அதற்கு முன்னர்என்ன நெற்றியில் ரத்தம் வருகிறதேஎன்று கிண்டல் அடித்துள்ளார். அதே போல நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் கலாநிதிக்கு, பேரனுக்கு உதவியிருக்கிறாரா? நல்லவேளை, நாளைக்கு இதெல்லாம் “பாப்பான்களின் சதி”, “ஆரியத்தின் சூது”, “தமிழருக்கு சூதாட்டம் தெரியாது”, “ஆரியன் வந்துதான் கெடுத்தான்”, என்றெல்லாம் கூட திராவிட சித்தாந்திகள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

கீழ்காணும் படம், இந்த டளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது – நன்றி.

http://www.facebook.com/photo.php?fbid=550737211623599&set=a.295437630486893.76949.293309174033072&type=1&relevant_count=1

Sun risers -Sri Lanka- Karu familiy criticizedகைமாறி கலாநிதிக்கு வந்தது எப்படி?: முன்னர் டெக்கான் குரோனிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் [Deccan Chronicle Holdings Limited] ரூ 428 கோடிகள் கொடுத்து பத்தாண்டுகளுக்கு ஏலம் எடுத்திருந்தது, அதாவது வருடத்திற்கு 42.8 கோடி என்றாகிறது. கடந்த செப்டம்பர் 2012ல் காசுப்பிரச்சினைக்காக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அக்டோபர் 15, 2012 மாலை 5 வரை இதனால் ரூ.100 கோடிக்கு பேங்க் கேரண்டி கொடுக்கமுடியவில்லை. “டெக்கான் சார்ஜர்ஸ்” பிசிசிஐன் மீது வழக்குத் தொடர்ந்தாலும், உச்சநீதி மன்றத்தில் பின்னருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதனால், மறுபடியும் பிசிசிஐ ஏலத்தை ஆரம்பித்தது. ஆனால், இப்பொழுது குறைந்த பட்சம் ரூ.60 கோடி என்று நியாயமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆரம்ப ஏலத்தொகையாக வைக்கப்பட்டதாம்[9]. மார்ச் 2013 ல் தான் இவையெல்லாம் நடந்தது. ஆனால், திராவிடப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஐயோ, மாறனே அந்த கும்பலுடன் சேராதே என்று அறிவுருத்தவில்லை.

Sun risers -Sri Lanka- riticizedசன்ரைசர்ஸ்” என்ற ஆங்கிலப் பெயர் சூட்டிய புராணம்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஐபிஎல் சீசன் 1 தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது. ‘டெக்கான் சார்ஜர்ஸ்’ என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது.  இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் அது தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த அக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டு, கலாநிதி வாங்கியது மேலே விவரிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்து, “சன் ரைசர்ஸ்” என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்விதமாக திருவாளர் டி. வெங்கட்ராம ரெட்டி [T. Venkattram Reddy] அவர்கள் வியாபரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[10].

Deccan chargers T Venkattram Reddy the looser of the dealதிராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது?: மார்ச் முதல் மே வரை வள்ளுவர் கோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல, பிரபாகரன் மகனின் படத்தை வைத்துக் கொண்டு வெவ்வேறு கோஷ்டிகள் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், ஒரு கும்பல் கூட இதனைத் தட்டிக் கேட்கவில்லை.திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது என்ற ரகசியம் இனமான போரளொகளுக்குப் புரியவில்லை. குமார் சங்கக்காரா [Kumar Sangakkara] மற்றும் திஸரா பெரேரா [Thisara Perera] போன்ற ஶ்ரீலங்கா வீரர்கள் எப்படி திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று கேட்கவில்லை. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இக்கூட்டத்தில் உள்ளார்கள்[11]. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால், தயாநிதி, ஏலம் எடுக்கும் போது இப்பிரசினை இல்லை அல்லது அப்பொழுது இந்தியா-இலங்கை உறவு சுமுகமாக இருந்தது என்பார்[12]. கலாநிதி பணம் கொடுக்கமலா சேர்ந்து கொண்டார்கள். ஜெயலலிதாவும் இதனை கிண்டலடித்துள்ளார்[13].

கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டிய லலித் மோடி: முந்தைய ஐபில் தலைவர், இந்த பேரத்தில் ஏதோ சூது இருப்பதைக் கண்டறிந்து, தனது நண்பர் கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்து விட்டர் என்று குற்றஞ்சாட்டினார். “ஆக, ஒருவழியாக, சன்டிவி இந்த குத்தகையப் பெற்று விட்டது. இவ்வாறு நடக்கும் என்று நான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கூறினேன், ஏனனில் ஶ்ரீனிவாசன் அவ்வாறு விரும்பினார். இதைவிட பெரிய ஊழல் / மோசடி இருக்க முடியாது. இந்த ஶ்ரீனிவாசன் மற்றும் இந்தியா சிமென்ட் முதலியவற்றின் சன்டிவியுடனான உறவுகளை ஆராய வேண்டும். ஏனெனில் கலைஞர் டிவிஞஊழலை மறக்க வேண்டாம்”, என்று டுவிட்டரில் வெளியிட்டார்[14]. கலாநிதியின் முதலாளித்துவத்தில் அசுரத்தனமான தீவிரவாதம் இருப்பதை விமர்சகர்கள் காண்கின்றனர். சிபிஐ அவரது சகோதரனின் ஊழலைப் பற்றி விசாரித்து வருகிறது. 2004 முதல் 2007 வரை அவர் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாருக்கெல்லாம் வாரி வழங்கும் முறையில் பரிந்துரை செய்துள்ளார் என்று விசாரித்து வருகிறது. நிச்சயமாக யுபிஏ-1 அரசாங்கம் மாறன் வியாபாரத்திற்கு உதவியிருக்கிறது. எது எப்படியாகிலும், இந்த பேரத்தின் மூலம் சன்டிவி மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் விளம்பர முத்திரை, வணிக மதிப்பு, வியாபார ஆதிக்கம் முதலியவற்றை அதிகமாக்குவார் என்று தெரிகிறது[15].

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] Kalanithi Maran’s Sun TV Network today won the Hyderabad franchise of the Indian Premier League for an amount of Rs 85.05 crores per year, marking an end to BCCI’s hunt for a new team in the wake of the controversial termination of cash-strapped Deccan Chargers. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/#sthash.UsjLLnim.dpuf

[3]  PVP is also a film financier, interestingly, is an investor in YSR Congress leader Y S Jaganmohan Reddy’s Sakshi TV.

http://timesofindia.indiatimes.com/business/india-business/Did-Maran-pitch-it-right-on-valuation/articleshow/16961258.cms

[4] The source said that Sun TV and PVP Ventures were the only two companies which bid for the new IPL team. Four other companies had collected the forms but did not bid. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[5] “SUN TV Network have won the Hyderabad Franchise for an amount of Rs 85.05 crores per year. This Franchise fee represents a premium of over a 100 % above the amount paid by DCHL for the Hyderabad Franchise in 2008,” BCCI Secretary Sanjay Jagdale said in a release. “The SUN TV Network bid was substantially higher than the second bid of PVP Ventures, which was Rs 69.03 crores,” Jagdale said.- See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[9] In an effort to attract more bidders, the BCCI had kept the base price at a reasonable Rs 60 crores per year. Deccan Chronicle Holdings Limited had bought the Hyderabad franchise for Rs 428 crores for a period of 10 years. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[11] IPL organisers decided that the 13 Lankan players in the tournament would sit out matches in Chennai.

http://www.ndtv.com/article/india/two-lankan-players-in-sun-group-owned-ipl-team-dmk-double-speak-on-lanka-row-347232

[12] DMK leader and actor Khushbu said she was “sure the Sun Group will take a call on this”. Sun Group officials were not available for comment, but sources close to Kalanidhi Maran’s younger brother and former minister Dayanidhi Maran argue that matters on the Sri Lanka front were much more cordial last year when the team purchased the Sri Lankan players. Saravan, a cricket fan, pointed out that the IPL was a “business model” and about winning a cricket tournament.

[14] Former IPL chairman Lalit Modi smelt a rat in the deal. He accused BCCI President N. Srinivasan of ‘gifting’ the franchise to his friend. “So, finally Sun TV has got an IPL franchise. I had predicted three months ago it will be Sun, as BCCI president wanted it that way. Can’t be a bigger scam than this. Someone should see Srinivasan and India Cements’ relationships with Sun TV. Don’t forget Kalaignar TV scam,” tweeted Modi. “While Sahara pays $370 million (Rs.1,990.6 crore) for its team, this one goes for pennies. How and why?” he asked in another tweet. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

[15] Critics say Maran’s growth is a classic example of crony capitalism. CBI is probing whether Maran’s brother Dayanidhi may have used his position as telecom minister between 2004 and 2007 in UPA-1, to win favours for Maran’s business. Whatever the outcome of the probe, the buying of an IPL team gives Sun a chance to promote its TV business and ensure brand recall of SpiceJet across India. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

மே21, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன. இனி இதனால், தமிழர்களுக்கு என்ன லாபம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

பிரிவினைஒற்றுமை பேசி சொகுசு வாழ்க்கை வாழும் தலைவர்கள்: யாசின் மாலிக் “காஷ்மீர் அரசியலில் சித்தாந்தம் எதுவும் இல்லை, எல்லாமே பணம் தான்”, என்று அமெரிக்கத் தூதரகத்திடம் ஒப்புக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது[4]. இவரும் சளைத்தவர் அல்ல, பாகிஸ்தானில் அழகிய மனைவி, மற்ற இடங்களில் குடி, கூத்து, கும்மாளம்[5] என்று தான் அனுபவித்து வருகிறார். அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பதாவது[6], “ஒமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா செயிக் குடும்பத்தில் வந்தவர்கள். அவர்கள் தில்லியின் பண விளையாட்டுகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள். ஶ்ரீநகர் மற்றும் தில்லியில் சொகுசான பங்களாக்களில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து வருபவர்கள். தமது உடைக்கேற்றபடி, விலையுயர்ந்த பனேரை கைக்கடிகரங்களைக் கட்டிக் கொள்பவர்கள், வரும் விருந்தாளிகளுக்குக் கூடபிளாக் லேபிள்என்ற உயர்ந்த வகை மதுவை கொடுத்து உபசரிப்பவர்கள்[7]. உலகம் முழுவதும் சுற்றிவரும்போது கூட விமானங்களில் முதல் வகுப்பில் சொகுசாக பிரயாணம் செய்பவர்கள். இப்படி எல்லாமே இந்திய அரசாங்கத்தின் தயவில் நடந்து வருகிறது. மீர்வாயிஸைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, பாகிஸ்தானின் தயவில், துபாயில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைச் செய்து வருகிறார்”. அதாவது, இந்தியா ஏமாளி என்பதைவிட, நேரு-சோனியா அந்நிய அடிவருடி கும்பல்கள் அத்தகைய தேசவிரோத சக்திகளை ஊக்குவித்து, சமரசம் செய்து கொண்டு, தங்களது பரம்பரை ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமான்: காஷ்மீர் பிரிவினைவாதிகளைப் போலவே, தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு, தமிழ் உணர்வுகளைத் துண்டிவிட்டுக் கொண்டு[8], இவரும் ராஜபோக வாழ்க்கையினைத்தான் வாழ்ந்து வருகிறார். சினிமாக்காரர் என்பதால் சொல்லவே வேண்டாம். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால், அத்தகைய உபசரிப்பு, கவனிப்பு, முதலிய விவரங்கள் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. கோயில் பணம் கூட எப்படி துஷ்பிரயோகப் படுத்தப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது[9]. அதாவது இந்துமதத்தை தமிழகத்தில் தூஷிப்பது, ஆனால், வெளிநாடுகளில் இந்து கோயில்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது என்று இவர்கள் சித்தாந்தம் உள்ளது. இயக்குனர், நடிகர் என்று பல வேடங்களில் சுகங்களை அனுபவித்து வருகிறார். யாசின் மாலிக்கின் விவகாரங்கள் வெளிவந்துள்ளன, ஆனால், “தமிழ்” பந்தத்தினால், சீமானின் விவகாரங்கள் அடக்கி வாசிக்கப்படுகின்றன போலும். இருப்பினும், விஜயலட்சுமி மற்றும் இலங்கைப் பெண் பற்றிய விசயங்கள் வெளியாகியுள்ளன[10]. மற்றபடி, காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமானும் குடிப்பாரா, கும்மாளம் போடுவாரா என்பதெலாம் தெரியவில்லை. ஒருவேளை யாசின் மாலிக் தெரியாமல் சொல்லி விட்டார் போலும்!

யாசின் மாலிக் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லையாம்: யாசின் மாலிக் பாகிஸ்தானிற்குப் போவதும், வருவதும் தெரிந்திருக்கிறது, புகைப் படங்கள், விடியோக்கள் எல்லாமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவர் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. கடலூரில், “நாம் தமிழர்” கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானாராம்[11]. அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனராம். நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி., கண்ணப்பன், டி.ஐ.ஜி., முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும்மேற்பட்டபோலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர். யாசின் மாலிக் பங்கேற்கும் விஷயம் அவ்வளவு தாமதமாக எப்படி தமிழகத்து போலீஸாருக்குக் கிடைக்கும்?

.பி., க்யூ., உளவுப்பிரிவு போலீசார் தூங்கி விட்டனரா: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, நிழல்போல் உளவு பார்க்க, ஐ.பி., க்யூ., உளவுப் பிரிவுபோலீசார், புதுச்சேரி மற்றும் கடலூரில் குவிக்கப்பட்டனராம். 18-05-2013 சனிக்கிழமை காலை, 10:20 மணிக்கு புதுச்சேரியில் தங்கியிருந்த சீமான், யாசின் மாலிக் மற்றும் மாநில நிர்வாகிகள் கடலூருக்கு புறப்பட்ட தகவல் கிடைத்ததும், கருத்தரங்கம் நடைபெற்ற திருமண மண்டபம் முன், ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படைபோலீசார் 200பேர் குவிக்கப்பட்டனராம். யாசின் மாலிக்கை கைது செய்யவே போலீசார் குவிக்கப்பட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் கருதினராம். காலை, 11:10 மணிக்கு, சீமான் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டுமே கருத்தரங்கமேடைக்கு வந்தனராம். ஆனால், அங்கு யாசின் மாலிக் இல்லாததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனராம். புதுச்சேரியில் புறப்பட்டவர் எங்குபோனார் என புரியாமல் குழம்பினராம். இந்நிலையில் பகல், 1:35 மணிக்கு, திடீரென யாசின் மாலிக் கருத்தரங்கு மேடையில்தோன்றியதும், எப்படி வந்தார், எந்த வழியில், எந்த வாகனத்தில் வந்தார் என புரியாமல், போலீசார் திண்டாடினராம்[12]. கருத்தரங்கில் பங்கேற்ற யாசிம் மாலிக், மாலை, 5:00 மணிக்கு திடீரென காணவில்லையாம்! இதெல்லாம் ஏதோ பெரிய தமாஷா போல செய்திகளை  வெளியிட்டியிருக்கிறார்கள்.

வந்தார், பேசினார், மறைந்து விட்டார்: அதிர்ச்சியடைந்தபோலீசார், விழா ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரித்தனராம். அவர் அப்போதேபோய்விட்டதாகக் கூறியதும், எப்படி, எந்த வாகனத்தில் சென்றார் என, வியப்படைந்தனராம். அதுகுறித்த தகவலை, தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியாமல் திணறினராம். இரவு, சீமான்பேச்சை முடித்த பிறகு, நிர்வாகி ஒருவர் நன்றி கூறிக் கொண்டிருந்தாராம். தொண்டர்களின் கெடுபிடியைத் தாண்டி போலீசார் 10:23க்கு மண்டப மேடைக்குச் சென்றனராம். அங்கு சீமான் இல்லையாம். அவர் 10:21 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டதாக நிர்வாகிகள் கூறினராம். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆஹா, இங்குதான் உண்மை புலப்படுகிறது. அதாவது “நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது” என்பதிலிருந்து, யாசின் மாலிக் என்பது யாரென்றே போலீஸாறுக்குத் தெரியவில்லை என்றாகிறது.

தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று தெரியும்?: மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி குறிப்புகளினின்று, அறியப்படுபதாவது, தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று அடையாளம் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக் பாகிஸ்தானிலிருந்து தில்லிக்கு வந்ததும் கைது செய்யப்பட்டு, காஷ்மிருக்கு எட்த்துச் செல்லப்பட்டு, அங்கு “வீட்டுக் காவலில்” வைக்கப்பட்டான்[13]. ஏப்ரலில் கைது செய்யப்பட்டான்[14]. மே மாதமும் கைது செய்யப்பட்டான்[15]. ஆகவே, அவன் காஷ்மீரிலிருந்து, கடலூருக்கு வந்தது கண்காணிக்கப்பட்டிருக்கும். அதனையும் மீறி அவன் வந்து போய் மறைந்து விட்டான் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பிறகு, அத்தகைய பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வந்து போய் கொண்டிருக்கலாம், யாருக்கும் ஒன்றும் தெரியாது எனும் நிலையில் இந்தியா உள்ளது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்[16]: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டினா. 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கினான்[17]. 1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும், என்று எச்சரித்து சில மாதங்கள் தான் ஆகின்றன[18]. இப்பொழுது, கடலூரில் இரண்டு போராட்டங்களுக்கு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்று பேசினால், செபாஸ்டியன் சீமானும் அதே வழியில் செல்வாரா?

தில்லியில் கைது செய்யாமல்ஶ்ரீநகரில் கைது ஏன்?:  இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது[19]. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[20]. இப்படி தில்லியில் கூத்து நடந்துள்ளது என்றால், கடலூரிலும் இன்னொரு கூத்தா?

ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் தமிழகக் கட்சிகள்: “காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை என்பதை, மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், “யாசின் மாலிக்கை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது’ என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்[21]. ஞானதேசிகன், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்களை, பேனர், போஸ்டர்களில் பிரசுரிப்பது போன்ற நடவடிக்கைகள், சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை, கடலூருக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தவும், முயற்சி செய்துள்ளனர். கடலூர் கூட்டத்தை தடை செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை சரியானது. இதை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. காஷ்மீர் பிரினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு உதவிகள் இருப்பதாக, பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின், இறையாண்மையை கேள்வி கேட்டு, காஷ்மீரத்தை துண்டாட துடிக்கிற, யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு கூட்டி வருவதற்கு உதவி செய்த சக்தி எது? இந்த நிகழ்ச்சிக்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை, எவை என்பதையெல்லாம், மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்”, என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக பா..க, தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது: “இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும் போராட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் காஷ்மீர் பிரினைவாதி, யாசின் மாலிக்கை கலந்து கொள்ளச் செய்தது, தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலை குனியச் செய்துள்ளது. இழக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற, 60 ஆண்டுகளாக, இலங்கை தமிழர்கள் தமக்கு ஆதரவாக தமிழகம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதரவையும் தான் எதிர்பார்த்தார்களே தவிர, இந்தியாவை துண்டாடத் துடிக்கும் எந்த ஒரு தீய சக்தியுடனும், அவர்கள் கைகோர்க்க முன் வரவில்லை என்பதை, யாசின் மாலிக்கின் தலைமை ஏற்கத் துடிக்கும் தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது, மிகவும் அபாயகரமானது என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியும் வழக்கம் போல மனு கொடுக்கிறது: கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய, காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் மற்றும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.,யிடம், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்[22]. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர், முத்து ரமேஷ்குமார் அளித்துள்ள புகார் மனு: “இம்மாதம், 18ம் தேதி, கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில், இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும், காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் பேசியுள்ளார். இந்த யாசின் மாலிக், பயங்கரவாதியான அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட போது, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஹபீஸ் சையது என்ற பயங்கரவாதியுடன், இணைந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர். இவ்வாறு பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்படும், யாசின் மாலிக், தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சக்திகளை உருவாக்க முயற்சிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளின் மௌனம் ஏன்?: பாஜப, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தெரிந்திருப்பது, போலீஸாருக்குத் தெரியவில்லை. இந்து மக்கள் கட்சிக்குத் தெரிந்துள்ள விசயங்கள் கூட திராவிட கட்சிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தெரிந்திருக்கும் அளவிற்கு, செபாஸ்டியன் சீமானைப் பற்றி இந்தியாவிற்குத் தெரியாமல் இருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கோ ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறார்கள். தமிழ் ஊடகங்களோ, இப்படி ஏனோதானோ என்று செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் உண்மையினை அறிந்து கொள்ல வேண்டும்.

யாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோ, இலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

21-05-2013


[6] Yasin Malik informed the US embassy – “Kashmiri politics is no longer about ideology, it’s all a money game.”  The US embassy says, “Omar and Farooq Abdullah, descendants of the Shaikh who first figured out Delhi’s money game, live in fabulous houses in Srinagar and Delhi, wear matching Panerai watches, serve Blue Label to the guests, and travel all over the world first class courtesy of the Indian Government. The Mirwaiz is alleged to have real estate in Dubai courtesy of Pakistan.”

[7] ஆனால், முஸ்லீம்கள் குடிக்கமாட்டார்கள் என்றெல்லாம் ஜம்பம் அடித்துக் கொள்வார்கள், பேசுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள் என்பதனையும் மக்கள் கவனிக்க வேண்டும்.

[12] தினமலர், பதிவு செய்த நாள் : மே 20,2013,00:27 IST

[17]  Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[18] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

மே20, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

இந்திய பிரஜைகள், இந்திய நாட்டு நலனுக்காக, இப்பொழுதுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்க் கொண்டு, இவ்வாறான, தேசவிரோத சக்திகள் எப்படி செயல்படுகின்றன என்பதனை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். இதில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மொழிரீதியாக எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கலாகாது. தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் இப்படிச் சொல்லியே விஷயத்தைத் திசைத் திருப்பும் போக்கிலும் உள்ளார்கள். ஏனெனில் தீவிரவாதிகள் அவற்றையும் கடந்து தான் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால், அக்காரணிகளை வைத்துக் கொண்டி அதே அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

LTTE_tourist_hub Sri Lankaசெபாஸ்டியன் சீமான் அமெரிக்க அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரங்கள்: நவம்பர் 2011ல் சீமான் உலக தமிழ் அமைப்பு [World Tamil Forum at New York] சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தபோது, நியூயார்க் விமான நிலையத்திலிருந்து திரும்ப அனுப்பட்டார்[1]. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்திற்கு சார்பாக அவரது நடவடிக்கைகள் உள்ளதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னர் அவர் அமெரிக்காவில் 10 நாட்கள் இருப்பதற்காக உரிய அனுமதி, விசா முதலியவற்றைப் பெற்றுக் கொண்டுதான் சென்றிருந்தார். ஆனால், பிறகு இம்மிக்ரேஷன் டிபார்ட்மென்ட் சோதனையில் அவரது பின்னணி அறியப்பட்டு, அவரை அனுமதித்தால் அமைதிக்குக் குந்தகம் நேர வாய்ப்புள்ளது[2] என்று தெரியவந்ததால் அவ்வாறு மறுக்கப்பட்டதாக அறிவித்தனர்[3]. உலக தமிழ் அமைப்பு என்றால் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் நலனுக்காக ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டும். பிறகு அவர்கள் எப்படி இப்படி தேசவிரோதக் கொள்கையாளர்களுக்கு இடம் கொடுக்க முற்பட்டார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான நிலை ஏற்படும் என்று அறிந்துள்ளப் பட்சத்தில், இத்தகைய நிகழ்வுகளை தாராளமாக தவித்திருக்கலாம். ஏனெனில், நாளைக்கு தமிழர் என்று யாராவது செல்லும் போது, அமெரிக்கர்கள் சந்தேகத்துடன் பார்ர்க்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

Hindu temples misused for LTTE activities - Canada - literature saleசெபாஸ்டியன் சீமான் கனடா அரசாங்கத்தினால் நாடு கடத்தப் பட்ட விவகாரங்கள்: கனடா நெடுங்காலமாகவே, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் தமிழ் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது. இலங்கை அகதிகள் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக எல்லைகள் கடந்து வந்து சேருகின்றனர். டோரோன்டோ என்ற நகரத்தில் தமிழர்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. நிச்சயமாக, எல்லா தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் இந்தியா வம்சாவளியினர் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும், இலங்கையைச் சேர்ந்தவர் மற்ற சித்தாந்திகள் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. நவம்பர் 2009ல் டோரோன்டோவில் எல்டிடிஇ ஆதரவு என்ற நிலையில் ஶ்ரீலங்காவிற்கு எதிராக செபாஸ்டியன் சீமான் பேசியதால், கனடா அரசாங்கம், அவரை நாடு கடத்தியது[4]. ஏப்ரல் 2012ல் ரமணன் மயில்வாகனம் என்ற கனடா நாட்டுப் பிரஜை, அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது[5]. அதாவது, எப்படி கனடா-அமெரிக்கா தமிழ் பேசும் மக்களால் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டு, தமிழருக்குக் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொடுக்கப்படுகிறது.

Hindu temples misused for LTTE activities - Canadaடோரோன்டோ இந்து கோயில்கள் எல்டிடிஇ  நிதிவிநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன: ஆனால் அதே டோரோன்டோவில் உள்ள இந்து கோயில்கள் எல்டிடிஇ பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன என்பது மட்டும் அல்லாது கோயில் பெயரில் பணம் வசூல் செய்து அது எல்டிடிஇ மற்றும் இதர இயக்கத்தினருக்கு அனுப்பப் பட்டு வந்தது. நிச்சயமாக இந்துக்கள் இவ்வாறு செய்திருக்க முடியாது. ஆனால், திராவிட சித்தாந்தத்தில் மூளை சலவை செய்யப்பட்டு, இந்துவிரோத சக்திகளுடன் சேர்ந்து, உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால், “இந்துக்கள்ளென்ற போர்வையில் மற்றவர்கள் இக்காரியங்களைச் செய்யலாம். இதில் செபாஸ்டியன் சீமானும் அடக்கம். இதில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அம்மாதிரியான பணப்போக்குவரத்துகள் செய்துள்ளார்கள். அதாவது இந்து கோயில்கள் கிறிஸ்தவர்களினால், தேசவிரோதச் செயல்களுக்கு உப்யோகப் படுத்தி கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதனால், அக்கோயில்கள் கனடா அரசாங்கத்தினால் தண்டம் செல்லுத்தப்பட வேண்டியதாயிற்று[6]. ரிச்மான்ட் ஹில் ஹிந்து டெம்பிள் மற்றும் ஹிந்து மிஷன் மிசிசௌகா என்ற இரண்டு கோயில்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டன[7].

Hindu temples misused for LTTE activities - Canada - Hundi collectionசெபாஸ்டியன் இந்தியாவில் தேசவிரோத செயல்களுக்காக கைது செய்யப் பட்டது: சரி, மற்ற நாடுகளில் பிரச்சினை செய்து வரும் இந்த ஆள் தமிழகத்தில் என்ன செய்கிறார் என்றால், அதே மாதியான போக்குத்தான் காணப்படுகிறது. தேசவிரோத பேச்சுகளுக்காக, இரண்டு முறை ஜூலை 2010 மற்றும் பிப்ரவரி 2009 தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்[8]. மே.18, 2010ல் “நாம் தமிழர்” என்ற இயக்கம் இவரால் உண்டாக்கப்பட்டது[9]. எல்டிடிஇன் நிதியுதவி மூலம் இந்தியாவில் இவ்வாறு குறிப்பாக தமிழ்நாட்டில், கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோருக்குக் கிடைப்பதாகவும், அதனால் தேர்தல் அல்லது நிதி ஆதாயத்திற்காக அவர்கள் அவ்வாறு பேசி வருவதாக இலங்கை அரசு குற்றஞ்ச்சாட்டுகிறது[10]. ஜெயராம் என்ற மலையாள நடிகர், சினிமாவில் ஒரு தமாஷா காட்சியில் ஒரு தமிழ் பெண்ணை இழிவு படுத்தி பேசுவதாக வந்த காட்சியினால், சென்னையில் உள்ள அவரது வீடு தாக்கப் பட்டது. அதற்காக, செபாஸ்டியன் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீடர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் செபாஸ்டியன் சீமானும் மறைந்திருந்து, பிறகு பெயில் பெற்றார்[11].

Hindu temples misused for LTTE fundingதமிழ் அமைதிக்காக உபயோகப்படுத்தப் படவேண்டும்: தமிழ் பேச்சாளியாக இருந்தால், அத்திறமை தமிழர்கள் நன்றாக இருக்க, சிறக்க, உபயோகப்படுத்த வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாக, ஆபாசமாக, அசிங்கமாக, கொச்சையாக இந்தியா, இந்தியர்கள், இந்திய மதம் முதலியவற்றிற்கு எதிராகப் பேசுவது, நடந்து கொள்வது தகாது. இதனை தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். “யாது ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லிக் கொண்டு அமைதிக்கு ஊறுவிளைவித்துப் பேசினால், செயல்பட்டால் அது நன்மையாகாது. திராவிடப் பேச்சாளிகள் தமிழர்களை பேசிப்பேசியே பின் தள்ளிவிட்டனர். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்தி பேசும் மாநிலங்களில் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தி பேசுபவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை” என்றெல்லாம் விதண்டாவாதம் பேசி, பிறகு “இந்தி பேசியே” பெரிய அரசியல்வாதிகள் ஆகி, மத்திய அமைச்சர்களாகவும் ஆகிவிட்டனர்.

Hindu temples funds diverted to LTTEசெபாஸ்டியன் சீமானுக்கு எதற்கு “ஆரிய-திராவிட” சித்தாந்தம்?: நாங்கள் “திராவிடர்கள்” அவர்கள் “ஆரியர்கள்” என்று சொல்லிக் கொண்டு, கூட்டு வைத்துக் கொண்டனர். இதெல்லாம் ஏன் எடுத்துக் காட்டப்படுகிறது என்றால், இந்த செபாஸ்டொயன் சீமானும் இந்த செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? தமிழர்களா, திராவிட சித்தாந்திகளா, கிறிஸ்தவர்களா?

© வேதபிரகாஷ்

20-05-2013


[1] Seeman, a pro-LTTE activist, was invited to attend a conference organised by the World Tamil Forum at New York. The film director had obtained all the necessary permissions and a visa from US authorities for his travel.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[3]  When Seema landed at New York, the authorities denied him permission to enter the country on the grounds that he is known for his “pro-LTTE activities”. The US authorities said if Seeman was permitted into the US, he would disrupt the peace of the land.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[5] The U.S. Department of Justice is seeking a 15-year prison sentence for a Canadian who pleaded guilty to terrorism conspiracy for his role in a plot to supply separatist rebels in Sri Lanka.

In a sentencing report filed in a Brooklyn, N.Y. court, U.S. attorney Loretta Lynch said Ramanan Mylvaganam had committed “a gravely serious offence” by attempting to procure equipment for the Tamil rebels.

http://news.nationalpost.com/2012/04/30/u-s-wants-15-years-for-toronto-man-convicted-in-tamil-tigers-terror-plot/

[7] The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE.

http://news.nationalpost.com/2012/06/04/two-toronto-hindu-temples-fined-by-cra-for-sending-money-to-suspected-tamil-tigers/

[8] Tamil Nadu Government has detained the film director and staunch supporter of LTTE, Sebastian Seeman under National Security Act (NSA). The Government of Tamil Nadu slapped NSA against Seeman, even as he was trying to secure bail after he was arrested early this week on charges of making inflammatory speech during a demonstration to condemn the attack on Tamil Nadu fishermen by the Sri Lankan Navy (July 2010). A day after the Principal Sessions Court dismissed Seeman’s bail plea (16-07-2010), the City Police Commissioner (In-charge) Sanjay Arora ordered his detention under NSA, stating that his speeches made during the agitation were against the interest of national security and disrupt harmony. After the Commissioner passed the order, Mr Bhaskar, Inspector of Police, North Beach Station, served the same to Seeman at Vellore Central Prison. Second time, Seeman was detained under the NSA by the Tirunelveli City Police in February 2009, but was released by the High Court later.

http://www.asiantribune.com/news/2010/07/18/pro-ltte-supporter-sebastian-seeman-booked-under-national-security-act

[10] In turn the LTTE is funding several Tamil Nadu politicians who are now lobbying the Central government in New Delhi. For example, Tamil Nadu politicians and film stars from Karunanidhi to Neduman and Vaiko and Seeman are continuing to support the LTTE either for electoral or for financial gain. They do not speak about 30 years of killings of Tamils by the LTTE from Duraiappa, the Mayor of Jaffna to Amirthalingam, the TULF leader or the Rajiv Gandhi assassination, but exaggerate the Tamil civilian deaths in the final phase and weep over Prabhakaran’s loss.

http://www.dailynews.lk/2013/02/20/fea03.asp

[11] In 2010, Chennai police registered a case against Seeman in connection with the attack on the house of actor Jayaram accusing him of instigating the attack on the actor, who allegedly made a comical derogatory remark on a Tamil woman in an interview. Eight persons were held soon after the attack and a special team investigating the case arrested four more later, including Seeman’s brother James Peter. Mr. Jayaram’s house was damaged after a group of youths threw stones and set on fire to the furniture at the main entrance. Seeman was initially absconding but later got anticipatory bail.

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.4தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் “நாம்தமிழர்” கட்சி சீமான்: சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. பொலீஸார், சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள், தட்டிகள் முதலியவற்றை அகற்றினர்[2]. ராதிகா, டி.எஸ்.பி கூறும்போது, நாம் தமிழர் கட்சி, சில சரத்துகளை மீறியுள்ளதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்[3]. அனுமதி மறுப்பப்பட்ட பிறகு, ஊருக்கு வெளியில் இருந்த திருமண ம்,அண்டபத்திற்குச் சென்று, கருத்தரங்கம் நடத்தினர். சீமான், யாசின் மாலிக்கை அங்கு அழைத்துச் சென்றார்[4].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013இந்தியவிரோதி யாசின்மாலிக், சீமானின் கூட்டத்தில் பேசுவது: கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: “இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை[5]. இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல். இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற அதே சமயத்தில், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் அங்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது”, என்றார்[6].  தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[7] தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது[8] தெரியுமா?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.2யாசின் மாலிக்கைப் போல, சீமான் ஆயுத போராடத்திற்கு தயாரா?: சட்டங்களை மீறியதற்குத்தான், மார்ச் மாதம் 2013 யாசின் மாலிக் கைது செய்யப்பட்டான்[9].  ஆனால், கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது என்றிருப்பதால், இவர்களுக்கும் அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறது. போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனோபாவம் வளர்கிறது[10]. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[11].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[12].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013யாசின் மாலிக்கைப் போல காந்திவழி செல்லும் சீமானா: சீமான் பேசும்போது, “கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2000 அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்”, என்றார்.

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guruஇந்தியவிரோதிகளும், தேசபக்தர்களும்: தேசவிரோத காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான்[13]. சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு[14] கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்[15]. சினிமா மற்ற இதர வழிகளில் ணம் வந்து கொண்டிருப்பதனால், செலவு பற்றி கவலைப் படாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[16]. தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது, யார் இந்தியவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்பதுதான்.

Yasin malik sitting with Yafiz Sayeedதமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-05-2013


[3] Police withdrew the permission granted to Naam Tamizhar Katchi headed by film director Seeman to hold the meeting in support of separate Tamil Eelam as the organisers violated certain conditions, DSP Radhika told reporters here. The party violated the conditions and erected banners and pasted posters with photographs of Prabhakaran all over the town, she said. See more at: http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/#sthash.R2SA3lei.dpuf

[11] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[12] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[13] Malik said he spent several years in jails in Rajasthan, Kashmir and Delhi for helping the victims of atrocities unleashed by the Indian Army. He regretted that none of the Indian states expressed solidarity with the people of Kashmir, who have been struggling and suffering for several years, he said.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-voices-support-for-Tamil-Eelam/articleshow/20128987.cms

டாக்டர் பட்டம்: சோனியாவும், ஆனந்தும் – “செக்மேட்” செய்யப்பார்த்த கேடுகெட்ட அரசியல்வாதிகள்!

ஓகஸ்ட்25, 2010

டாக்டர் பட்டம்: சோனியாவும், ஆனந்தும் – “செக்மேட்” செய்யப்பார்த்த கேடுகெட்ட அரசியல்வாதிகள்!

கண்டவர்கள் எல்லாம் டாக்டர் பட்டம் பெறும் போது கவலைப்படாது குடிமைப் பிரச்சினை திடீரென்று சிலருக்கு மட்டும் ஏன் அதிகவனமாக பார்க்கப்படுகிறது? சென்னைப்பல்கலைகழகம் சோனியாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது. அப்பொழுது, யாரும் அவர் இந்தியரா, இத்தாலியரா என்று ஆராய்ச்சி செய்யவில்லை. அவர் இத்தாலியர் என்பதும், பல கோர்ட்டுகளில் பல வழக்குகள் போட்டிருக்கிறார்கள் என்பதும், சென்ற தேர்தலில் கூட, காங்கிரஸ் வென்றும் கூட, இவர் பிரதமர் ஆக முயன்றபோது, அதிக எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அந்நியர் / இத்தாலியர் பிரதமர் ஆகக் கூடாது என்றதால், சோனியாவும் மன்மோஹன் சிங்கை பிரதமர் ஆக்கி அமைதியாகி விட்டார். இதெல்லாம், எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் தாம். இருப்பினும், கருணாநிதிக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசை, கொடுத்தாகி விட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், யார்-யாருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல்தான் இருக்கிறது[1]. கண்டவர்களுக்கு எல்லாம் கொடுக்கிறார்கள் என்றாலும், அது சரியான விமர்சனம் தான்[2].

இந்தியாவில் கொலைக்காரன், கொள்ளைக்காரன், சாராய வியாபாரி, லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவன், விபச்சர புரோக்கர்…………….என அனைவர்க்கும் டாட்டர் பட்டம் கொடுத்தாகி விட்டது[3]: டாக்டர் பட்டம் என்பது, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அந்த அளவிற்கு கேவலமாகி விட்டது. இந்த தடவை காஷ்மீர் தீவிரவாதி, சால்வை விற்ப்பவன், முதலியோருக்கு எல்லாம், பத்மஸ்ரீ பட்டங்கள் கொடுத்து இருக்கிறர்கள் ஆகையால், இனி டாக்டர் பட்டங்கள் பற்றி கவலையில்லை. இதனால், கஷ்டப்பட்டு, படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள், தாங்கள் டாக்டர் என்று போட்டுக் கொள்ளவே கூச்சப்படும் அளவிற்கு வந்து விட்டது. ஏனெனில், பல விழாக்களில் அத்தகைய டாக்டர்களுடன், இவர்களும் சேர்ந்து உட்கார வேண்டியிருக்கிறது, அதுமட்டுமல்லாது, அவர்களை விளிக்கும் பொது, “டாக்டர்” சொல்ல வேண்டியிருக்கிறது! இல்லையென்றல் படித்த டாக்டர்களின் கதி அதோகதிதான்! படிக்காத பொறுக்கிகளுக்கே “டாக்டர்” பட்டம் வாங்கியவுடன், ஒரு திமிர் வரும் போது, உண்மையாக கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கியவனுக்கு எப்படி இருக்கும்? இதனால், படித்தவர்கள், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் காசு கொடுத்து “டாக்டர்” பட்டம் வாங்கிக் கொள்ளலாம், என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, அரசியல்-பணபலம் இல்லாமல், படித்து வாங்கினால், மரியதை இல்லை என்றால், படிப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்ன?

ஒரு தமிழருக்கு ஏன் பட்டம் கொடுக்கப்படவில்லை அல்லது ஏன் அவமதிக்கப் பட்டார் என்று எந்த தமிழனும் குரல் எழுப்பவில்லை: விஸ்வநாத் ஆனந்த் உலக அளவில் வெற்றிப் பெற்று சென்னைக்கு வந்தால், பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கிறார்கள். “தமிழன்-தமிழன்” என்று சொல்லிக் கொண்டு விளம்பரம் செய்து கொள்கிறார்கள். ஆனால், இப்பொழுது ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? “தமிழர்” என்றெல்லாம் பேசி, தம்பட்டம் அடிக்கும் கூட்டங்கள், இப்பொழுது ஒன்றயும் பேசக்காணோமே? ஒருவேளை, அவர் பிராமணர் / பார்ப்பான் என்ற ஒரே காரணத்திற்காக அலட்சியப்படுத்தப் படுகிறாரா? நிச்சயமாக அத்தகைய துவேஷம் தமிழகத்தில் உள்ளது. திக-திமுகவினர்[4] குறிப்பாக அத்தகைய காழ்ப்பை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியர் தானா என்று கேள்வி: ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர் தானா’ என, மத்திய மனிதவள அமைச்சகம் கேள்வி எழுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனக்கு ஐதராபாத் பல்கலை வழங்கவிருந்த கவுர டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க மறுத்துள்ளார். பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஆடிப் போன மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்,  செஸ் சாம்பியன் ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்[5]. ஒருவேளை, கபிலுக்கு விஷயம் தெரிந்து விட்டதோ என்னவோ, நாளைக்கு சோனியா விவகாரம் வந்தால், மக்கள் இதைப்பற்றிக் கேட்கக் கூடும். அப்பொழுது குட்டு வெளிப்பட்டுவிடிமோ என்று உஷாராகி விட்டார் போலும்!

தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் உலகப்புகழ் ஆனந்த் ஆனது: இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. உலக செஸ் சாம்பியனும் கூட. இந்தியாவைச்  சேர்ந்த இளைய தலைமுறையினர், செஸ் விளையாட்டில் சாதிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவர்.இவரது சாதனைகளை பாராட்டும் வகையில், இந்திய அரசு இவருக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இவர், ஸ்பெயினில் தங்கியுள்ளார். இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக் கழகம், ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க  முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கடந்தாண்டு மத்திய மனித வள அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இது தொடர்பாக முடிவு எடுப்பதில் மனிதவள அமைச்சகம் தாமதித்தது[6]. அனைத்துலக கணித பேரவையே இதுபற்றி வருத்ததுடன் தெரிவித்திருந்தது[7]. ஆனந்த், ஸ்பெயின் குடியுரிமை பெற்றவர் என்ற தகவல், மனிதவள அமைச்சகத்துக்கு கிடைத்தது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, ஆனந்த் இந்திய குடியுரிமை உடையவர் தான் என்பதை நிரூபிக்கும்படியும், அதற்கான சான்றுகளை அளிக்கும்படியும் மனிதவள அமைச்சகம் சார்பில், ஐதராபாத் பல்கலைக்கு வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, ஐதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆனந்த் நேற்று வந்தார். அந்த தேதியிலேயே அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க, ஐதராபாத் பல்கலை திட்டமிட்டது. ஆனால், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் இருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், பட்டமளிப்பு விழாவை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இந்த தகவலால், ஆனந்த்  வருத்தம் அடைந்தார்.இதற்கு பதிலடியாக,”எனது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி, சர்ச்சையை கிளப்பிய இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப்போவது இல்லை என, ஆனந்த் அதிரடியாக அறிவித்தார்.

கபில் சிபல் மன்னிப்புக் கேட்டது, கோப்புகளின் மீது குற்றத்தைப் போட்டது: இதுகுறித்து அவர் கூறுகையில், “ஸ்பெயினில் வசித்து வந்தாலும், நான் இந்திய குடிமகன் தான். இந்திய பாஸ்போர்ட்டைத் தான் வைத்துள்ளேன்’ என்றார். மன்னிப்பு: ஆனந்தின் குடியுரிமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மத்திய மனிதவள அமைச்சகம் கலக்கம் அடைந்தது. உடனடியாக, ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் கபில் சிபல், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து கபில் சிபல் கூறியதாவது: “கோப்புகளை கையாளும் நடைமுறையில் ஏற்பட்ட ஒரு தவறு தான், இந்த பிரச்னைக்கு காரணம். இதற்காக, ஆனந்தை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்[8]. ஆனந்தின் இந்திய குடியுரிமை குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பப்படவில்லை. அதுகுறித்த பிரச்னையே எழவில்லை. டாக்டர் பட்டத்தை இன்றே வழங்குவதாக அவரிடம் தெரிவித்தேன். அவருக்கு இன்று மாலை வேறு சில வேலைகள் இருப்பதாக கூறினார். அவருக்கு வசதியான வேறு ஒரு நாளில் பட்டம் வழங்க தயாராக உள்ளதாக கூறினேன். இதை அவர் ஏற்றுக் கொண்டார். கூடிய விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்”, இவ்வாறு கபில் சிபல் கூறினார். விஸ்வநாத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்[9].

இப்படியான பட்டங்களை எதிர்பார்க்கவிலை, ஏமாற்றம் அடையவில்லை ஆனந்த் மனைவி பேட்டி[10]: ஆனந்தின் மனைவி அருணா கூறியதாவது:ஆனந்தின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை எழுந்தது எங்களுக்கு ஏமாற்றத்தை தரவில்லை. எரிச்சலைத் தான் ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் இந்திய பாஸ்போர்ட்டைத் தான் வைத்துள்ளார். இந்த பிரச்னையில் ஏற்கனவே ஆனந்த்தின் பாஸ்போர்ட் நகலை கேட்டனர். அதை அனுப்பி வைத்தோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. போட்டிகளில் ஆனந்த் வெற்றி பெறும்போதெல்லாம், அவருக்கு அருகில் இந்திய தேசியக் கொடி இருப்பதை காணலாம்.அவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கு இது ஒன்று போதாதா? ஐதராபாத் பல்கலையில் டாக்டர் பட்டம் பெறுவது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், தற்போது நடக்கும் விஷயங்கள் அதற்கு சாதகமாக இல்லையே.இவ்வாறு அருணா கூறினார்.

ரிலாக்ஸ் ஆனந்த் 35 பேருடன் ஒரே நேரத்தில் செஸ் ஆடிக்கொண்டிருந்தார்: குடியுரிமை தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஸ்வநாதன் ஆனந்த், கணிதவியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ஐதராபாத் வந்தார். தன் மீதான குடியுரிமை குறித்த சர்ச்சை எழுந்துள்ளதை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல் சாதாரணமாகவே இருந்தார். மாநாட்டு அறையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். அங்கிருந்த 35க்கும் மேற்பட்ட கணிதவியலாளர்களுடன் ஒரே நேரத்தில் செஸ் விளையாடினார்.


[1] சினிமாக்காரர்கள், நடிகர்கள்…………..எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இதனால், கொடுத்தப் பல்கலைகழகங்களுக்குப் பெருமையா, இல்லை வாங்கியவர்களுக்குப் பெருமையா என்று காலம்தான் பதில் சொல்லும்.

 

[2] தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும், எந்த கௌரம் ஆனாலும், அரசியல் கட்சி ஆதரவு, ஜாதி என்று பார்த்து தான் கொடுக்கிறார்கள். பாரதியார் பரிசு, டி. என், ராமச்சந்திரன் என்பருக்குக் கொடுக்கப் பட்டபோது கூட, சில திமுக பெரிய ஆட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்பொழுது, சொல்லப்பட்டது, “பாப்பான் பெயரில் இருக்கிறத பாப்பானுக்கே கொடுத்தால் என்னப்பா?”, என்று கேட்டதும், அடங்கி விட்ட்டார்களாம்!.

[3] இவர்கள் பெயர்களையெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், அவ்வப்போது, அவட்களே பாராட்டு விழாக்கள் நடத்து, சுவரொட்டிகள் ஒட்டி, நாளிதழ்களில் பாராட்டுத் தெரிவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார்கள்!

[4] விடுதலை/முரசொலியைப் படித்தாலே போதும், எந்த அளவிற்கு, பிராமணர்கள் தாக்கப்படுகிறார்கள், அவதூறுக்குள்ளாகிறார்கள் என்பதனைப் பார்க்கலாம். இருப்பினும், பெரும்பாலோர் அதைப் படிக்காததால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை எனலாம். கருணநிதி மட்டும் நக்கலாக, சில விமர்சனங்கள் செய்வதுண்டு..

[5] தினமலர், இந்தியர் தானா என்று கேள்வி: ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம், ஆகஸ்ட் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=69399

[6] http://ibnlive.in.com/generalnewsfeed/news/icm-anand-row-due-to-insensitive-bureaucratic-obstructions/257270.html

[7] http://www.hindu.com/2010/08/25/stories/2010082559280100.htm

[8] Aarti Dhar, Sorry, Kapil Sibal tells Anand , The Hindu dated Wednesday, Aug 25, 2010

http://www.hindu.com/2010/08/25/stories/2010082559230100.htm

[9] Economic Times, Sibal says sorry to Anand for nationality goof-up, 25 Aug, 2010, 04.44AM IST, ET Bureau

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Sibal-says-sorry-to-Anand-for-nationality-goof-up/articleshow/6429668.cms

[10] DNA, Viswanathan Anand is never bothered about these awards: Aruna; Published: Wednesday, Aug 25, 2010, 2:03 IST ; By Vijay Tagore | Place: Mumbai | Agency: DNA

http://www.dnaindia.com/sport/report_viswanathan-anand-is-never-bothered-about-these-awards-aruna_1428329