Posts Tagged ‘சோனியா காங்கிரஸ்’

ஶ்ரீசாந்தின் விளையாட்டு விபரீதமாகத்தான் உள்ளது – நடிகைகளுடன் நடனம், மைதானத்தில் ஆட்டம், ஓட்டல்களில் கொண்டாட்டம்!

மே21, 2013

ஶ்ரீசாந்தின் விளையாட்டு விபரீதமாகத்தான் உள்ளது – நடிகைகளுடன் நடனம், மைதானத்தில் ஆட்டம், ஓட்டல்களில் கொண்டாட்டம்!

First in Openers Vijay Merchant and Mushtaq Ali at Old Trafford 19361960 முதல் 2000 வரை இந்திய கிரிக்கெட் சீரழிந்த வரும் விதம்: 60-70 வயதுகளில் உள்ளவர்களுக்கு ஐபிஎல் என்ற கிரிக்கெட் ஆரம்பித்ததிலிருந்தே, அது கிரிக்கெட் இல்லை, ஏதோ பொழுது போக்கிற்கு நடத்தப் படுகிறது, விளையாடுபவர்கள் சரியாக விளையாடுவதில்லை, வேண்டுமென்றே, காட்சுகளை விடுகிறார்கள், நோ-பால்களைப் போடுகிறார்கள், வெல்ல வேண்டிய மேட்சுகளில் தோற்கிறார்கள், தோற்பார்கள் என்றால், திடீரென்று ஆட்டத்தின் போக்கு மாற்றப் பட்டு, வெல்கிறார்கள் போன்ற முரண்பாடுகளை சுலபமாக கவனித்தார்கள். அவர்கள் விளையாடுபவர்களை உன்னிப்பாகக் கவனிப்பதால், இந்த பந்தில் அடிப்பார்கள், லொட்டு வைப்பார்கள், அவுட் கூட ஆவார்கள் என்று சொல்லக்கூடிய விதத்தில் பார்த்து வந்திருக்கிறார்கள். அதனால், சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால், அதிலிருக்கும் ஊழல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

England Bob Taylor recalled by G.R. Viswanath in the Golden Jubilee Test at Bombay in 1980.விளையாட்டில் சிரத்தை குறைந்து வருவது: அப்பொழுது கிரெக்கெட் விளையாடுபவர்கள் சிரத்தையுடன் விளையாடுவார்கள், அதற்காக ரசிகர்கள் வருவார்கள். ஆனால், போகப் போக அதன் தன்மை, குணாதிசயம், போக்கு முதலியவை மாறின. ஒழுக்கம், நேர்மை, சுத்தம், திறமை என்றில்லாமல், பணம், அதிகாரம் கொண்டவர்கள் தங்களது வாரிசுகளை விளையாட வைத்தார்கள். அரசியலும் சேர்ந்த பிறகு, கிரிக்கெட் குழுவினர் அதன் ஆதாரமாகவே, வீரர்களும் சேர்க்கப்பட்டார்கள். ஒருநிலையில் ஜாதி, மதம், மொழி என்று கூட பேதம் பார்த்து வீரர்கள் குழுக்களில் சேர்க்கப்பட்டனர். திறமையுள்ளவர்களை கடைசியாக வைத்து ஆடாமல் கூட பொம்மைகளாக வைக்கப்பட்டனர். அதாவது, சட்டப்படி குழுவில் அங்கத்தினர் என்ற அந்தஸ்து கொடுத்தாகி விட்டது, ஆனால் ஆடமுடியாது. அதற்கும் பிறகு, பணம், அரசியல் அதிகமாகவே வேலை செய்ய ஆரம்பித்தன.

A catch 1971 Londonமுதலில் அரசியல் பிறகு சினிமா கிரிக்கெட்டை சீரழித்தது: பிறகு சினிமா சேர்ந்ததும், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுடன் அல்லது கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளுடன் ஜோடி சேந்து சுற்ற ஆரம்பித்தார்கள்.  நட்சத்திர ஓட்டல்கள் பெருகின, பார்ட்டிகள் வளர்ந்தன, ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் சேர்ந்தன. அவற்றில் பங்கு கொள்ளவில்லை என்றால், ஏதோ குறைவாக மதிக்கப்படுவர் அல்லது மதிப்பீடு செய்யப்படுவர் என்ற நிலையும் உருவாகியது.

Gavaskar out2000 முதல் 2007 வரை – சீரழிவிலிருந்து சூதாட்டம் வரை: கிரிக்கெட் ஒரு உலக விளையாட்டு, பல நாடுகளில் நடக்கும் விளையாட்டு என்பதனால், இவையெல்லாம் வேண்டாம் என்றலும், ஒப்புக் கொள்ளப்பட்டன. இதனால், ஒரு நாட்டிலிருந்து அடுத்த நாட்டிற்கு ரசிகர்கள் போர்வையில் அனைத்துவிதமான பேர்வழிகளும் செல்ல ஆரம்பித்தார்கள். அரசியல், சினிமா, பணம், நடிகைகள் என்ற நிலைகளினின்று, போதைப்பொருள், மேட்ச்-பிக்ஸிங் என்ற சூதாட்டம் ஆரம்பித்தது. அதற்காக, மாடல்கள், பெண்கள், தரகர்கள் என்று வந்தனர். கள்ளக்கடத்தல், விபச்சாரம், வரியேய்ப்பு போன்ற தொழில்களை செய்து வந்தவர்கள் இதனை சூதாட்டத்தில் சேர்த்து பணம் பண்ன ஆரம்பித்தார்கள். இதனால், வீரர்கள் விலை பேசப்பட்டனர்.

Kalicharan battingஐந்து நடசத்திர ஓட்டல்களில் நடக்கும் கூத்துகள், சீரழிவுகள், ஊழல்கள்: வெளிநாடுகளில் விளையாட வரும்போது, அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் சென்று அவர்களுடன் பேசி, அவர்களின் /பலவீனங்களுக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள், பணம், பெண்கள், முதலியவற்றல் வளைத்து சூதாட்டத்தில் விழவைத்தார்கள். போட்டியில் பங்கேற்று கஷ்டப்பட்டு விளையாடி, பணம் சம்பாதிப்பதை விட, இம்முறையில் அதிகமாக சம்பாதிக்கலாம் மற்றும் சுகபோக வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் வந்த்வுடன், பல கிரிக்கெட் வீரர்கள், பிரபல வீரர்கள் கூட சபலம், ஆசை, பேராசை, முதலியவற்றால் சூதாட்டத்துடன் இணைந்தனர். இதனால் 2000 ஆண்டில், இதனை ஆய்ந்து “Report on Cricket match fixing and related malpractices October, 2000” ஒரு அறிக்கையே வெளியிடப்பட்டது.

zaheer-abbas-tonks-dilip-doshi-for-a-six2007 முதல் 2013 வரை சூதாட்டம் பேராட்டமாகியது: இக்காலக்கட்டம் சோனியா காங்கிரஸ் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்த நிலையில் மேலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. சோனியா காங்கிரஸ் இரண்டாவது முறையாக வென்றதே சூதாட்டம் / சத்தா பஜார் மூலம் தான் என்ற விவரங்களும் வெளிவந்தன. மும்பை மற்றும் மஹாராஷ்ட்ராவில் பலமிக்க அரசியல்வாதியான சரத் பவார் சோனியா காங்கிரஸ் வெல்வதற்கு பெரும் பங்கு வகித்தார். இவருக்கு நிறைய வியாபாரங்கள் இருப்பதினால், அவை சுமுகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன என்றால், எல்லோருக்கும் எல்லாம் செய்து கொடுக்கிறார், அனுசரித்துப் போகிறார் என்றாகிறது[1]. சோனியாவை மோசமாக விமர்சித்தவர், சோனியாவுடன் சேர்ந்தே ஆட்சி அதிகாரப் பகிர்வை மஹாராஷ்ட்ரா மற்றும் மத்தியில் செல்வாக்குப் பெற்றார். பிரபுல் படேல் என்பவர் மூலம் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இவருடைய தொடர்பு இவ்வாறாக உள்ளது[2]:

Underworld Operator Political/Bureaucratic Patronage
Maharashtra

  • Dawood Ibrahim : Sharad Pawar, Salim Zakaria, Javed Khan (both ex-ministers close to Pawar)
  • Mohammed Dosa : Madan Baffna (ex-minister)
  • P. Raj Koli : Arun Mehta (former home minister)
  • Haji Ahmed : D.V. Patil, Javed
  • Khan Khan Brothers : Arun Mehta, Salim Zakaria (ex-ministers)
  • Tiger Memon: Javed Khan
Gujarat

  • Abdul Latif : Chimanbhai Patel (ex-chief minister)
  • Rati Lal Deva Navik : Cadir Peerjada ( PCC vice-president),
  • Izzu Sheikh, Haji : Ahmed Patel, AICC general secretary
  • Hassana Dada : C.D. Patel (home minister), Thakor Nair (supply minister).
  • Amar Subhania : Chimanbhai Patel
  • Ram Bhai Gadwai : Ashok Lal (” s/o Babu Lal, minister of sports”) Santosheben Jadeja, MLA: “Earlier of Janata Dal. Joined Congress. Known as mafia queen.”

2009ல் சூதாட்டத்தினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் கட்டுவதற்கு பதிலாக பாஜக அல்லது காங்கிரஸ், என்டிஏ அல்லது யுபிஏ, அத்வானி அல்லது மன்மோஹன் சிங்[3], இப்படி யார் வருவார் என்று பெட் கட்ட ஆரம்பித்தார்கள்[4]. ஊடகங்களும் மறைமுகமாக பேட்டி, கருத்து கணிப்பு, புள்ளி விவரம், ஆராய்ச்சி, என்று நடத்தி, விளம்பரங்கள் செய்து, முடிவுகளை வெளியிட்டு வேட்பாளர்களை குழப்பினர், மாற்றினர், மாற்றி வாக்களிக்கச் செய்தனர். வெல்லும் கட்சிற்கு ஓட்டு போட வேண்டும் என்ற பலமான கருத்தையும் உருவாக்கின. ஒரு முறை ஒரு கட்சி ஆட்சி செய்தால், மறுமுறை அது எதிர்கட்சியாக்க வேண்டும், அதாவது, ஆளும் கட்சி ஆட்சி செய்து தேர்ந்து, தோய்ந்து விட்டது, இனிமேல் தரமாக ஆட்சியைக் கொடுக்க முடியாது, அதனால், எதிர் கட்சி அல்லது அடுத்த கட்சிக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன. இப்படி ஆட்சி மாற்றத்தையே மாற்றலாம் அல்லது சீர்குலைக்கலாம் என்ற போக்கு வந்தவுடன், கிரிக்கெட்டை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள முயன்றன, தீர்மானித்தன[5]. விளைவு 2007ல் – ஐபிஎல் – இந்திய பிரீமியர் லீக்கின் உதயம்.

The-Kallicharans-and-Kanhais-Photo-courtesy-of-Rohan-Kallicharan2007லிருந்து ஐபிஎல்லின் அபார வளர்ச்சி: 2007ல் – ஐபிஎல் – இந்திய பிரீமியர் லீக்கின் உதயம் பி.சி.சி.ஐயினால் ஏற்பட்டது. அதன் வளர்ச்சி, பெருக்கம், தாக்கம் தான் 2013ல் பார்க்கிறோம். ஏப்ரல்-மே 2009ல் இந்தியாவில் நடத்த பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று தென்னாப்பிரிக்காவில் பி.சி.சி.ஐயின் ஒப்புதலுடன்[6] நடத்தப்பட்டது[7]. இந்தியாவில் நடத்தினால் இன்னொரு 26/11 போன்று தீவிரவார்த தாக்குதல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது[8]. அப்பொழுது 2009ல் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், இப்பொழுது முன்னமே ஆரம்பித்து விட்டது. 2010ல் சரத் பவார் ஐசிசிவின் தலைவர் ஆகிறார். ஐபிஎல்ற்கு வரி சலுகையும் கொடுக்கிறார்[9], ஆனால், ஆதாரம் இல்லை என்று மறுக்கப்பட்டது[10].

Viswanath, Bishen Singh Bedi inspect pitchசட்டங்களுக்கு அடங்காத பி.சி.சி.: ஐபிஎல் வியாபாரம் மேனாட்டு வணிகமுறையை ஒத்து வருவது. அதில் எந்த தர்மம், நியாயம், ஒழுக்கம், எதையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் என்றாலே லாபம் எனும்போது, முடிவுகளைப் பார்ப்பார்களே தவிர, முறைகளைப் பார்க்க மாட்டார்கள். இது விளம்பர பகிர்வு, பங்கு, நிநியோகம் ஒளிபரப்பு என்று வரும்போது, அப்பட்டமாக வெளிவந்தது. மேலும் ஜீ-டிவி, பி.சி.சி.ஐ.யின் மீது தொடர்ந்த வழக்கில் பி.சி.சி.ஐ.யின் முழு சுயரூபம் வெளிப்பட்டு விட்டது[11]. அதாவது, அது சட்டப்படி இந்தியாவில் யாருக்குமே அடங்காத ஒரு கொடிய மிருகம் என்பதுதான்[12]. எல்லாவிதமான பாவம், அநியாயம், அக்கிரமம் முதலியவற்றை ஊக்குவிக்கும் மூலமாக இருப்பது அறியப்பட்டது. மொஹம்மது அசாருத்தீன்[13], அஜய் ஜெடேஜா[14] போன்றவர்கள் மேட்ச்-பிக்ஸிங்கில் ஈடுபட்டபோதும், சட்டப்படி அவர்களை ஆயுள் தடை என்ற பிரயோகத்தில் கட்டுப்படுத்தி, தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படி, அது “ராஜ்ஜியம் / மாநிலம்” என்ற முறையில் கூட வராது[15], அதனால், வியாபாரிகள், வணிகர்கள் தனது சொந்த லாபங்களுக்காக, கிரிக்கெட்டை பயன்படுத்தினால், அதற்கு தான் பொறுப்பாகாது, மற்றும் தான் யாருக்கும் கட்டுப்பட முடியாது என்று சாதித்து வந்துள்ளது[16].

© வேதபிரகாஷ்

21-05-2013


[3] S Balakrishnan, Satta market: Manmohan still tops list of PM hopefuls, 14 May, 2009, 1131 hrs IST,TNN:Economic Times, May 14, 2009:http://m.economictimes.com/PDAET/articleshow/4528516.cms

[4] Rahul Tripathi, In satta market, UPA return near certain, 16 May 2009, 0424 hrs IST, TNN ; http://timesofindia.indiatimes.com/In-satta-market-UPA-return-near-ce…

[11] The Board is not created by any statute and is only registered under the Societies Registration Act 1860 and that it is an autonomous body, administration of which is not controlled by any other authority including Union of India, (U.O.I.)

Zee Telefilms Ltd. & Anr vs Union Of India & Ors on 2 February, 2005, http://indiankanoon.org/doc/404603/

[12] Board Of Control For Cricket In … vs Zee Telefilms Limited, Rep. By Its … on 2 May, 2005

http://indiankanoon.org/doc/419797/

[13] Board Of Control For Cricket In … vs Mohammed Azharuddin And Ors. on 23 April, 2003

http://indiankanoon.org/doc/63740/

Be it noted, proceedings dated 5-12-2000 was issued by the BCCI imposing a life ban on the first respondent herein on the allegations of match fixing, under-performance of the players, and having relations or nexus with various bookies. The BCCI filed a written statement contesting the suit. On the completion of pleadings, issues were framed and the matter went into trial. The petitioner herein filed an interlocutory application being I.A. No. 568 of 2003 under Order XVI, Rule 6 of the Code of Civil Procedure, 1908 (CPC) praying the trial Court to issue summons to the Director of Central Bureau of Investigation (CBI), New Delhi to produce the “Report on Cricket match fixing and related malpractices” submitted to the Central Government on 31-10-2000 and related record. The trial Court, by an order dated 24-2-2003, directed to issue summons to the Director of CBI to produce the report relating to cricket match fixing and related malpractices.

[14] Ajay Jadeja vs Union Of India And Ors. on 17 September, 2001

http://indiankanoon.org/doc/527494/

ustice Y.V. Chandrachud in an Enquiry concluded in 1999 at the behest of BCCI examined the allegations of betting and match fixing in cricket and found that there was no matchfixing though possibility of players laying bets was not ruled out. Pursuant to a registration of a FIR on 5.4.2000 against some bookies and Hansie Cronje, the then cricket captain of South Africa, and the admissions made by him about match fixing, a public outcry arose in the country and the Parliament, and consequently at the behest of Ministry of Culture, Youth Affairs & Sports, an enquiry was conducted by CBI into the allegations of match-fixing and related malpractice connected with the game of cricket.

[15] N. Chandrasekar vs The Tamil Nadu on 30 June, 2006, http://indiankanoon.org/doc/1275853/

[16] Rahul Mehra And Anr. vs Union Of India (Uoi) And Ors. on 4 October, 2004, http://indiankanoon.org/doc/730954/

BCCI and DDCA which have been created for the purpose of promotion of cricket in the country and which have acquired a monopoly status by virtue of alleged Government recognition and patronage, perform their duties and obligations which is to promote and develop cricket in the country and that they do not function as private empires of some businessmen and traders who have allegedly come to control it and abuse it for their own interests and profits.

Advertisements

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.4தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் “நாம்தமிழர்” கட்சி சீமான்: சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. பொலீஸார், சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள், தட்டிகள் முதலியவற்றை அகற்றினர்[2]. ராதிகா, டி.எஸ்.பி கூறும்போது, நாம் தமிழர் கட்சி, சில சரத்துகளை மீறியுள்ளதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்[3]. அனுமதி மறுப்பப்பட்ட பிறகு, ஊருக்கு வெளியில் இருந்த திருமண ம்,அண்டபத்திற்குச் சென்று, கருத்தரங்கம் நடத்தினர். சீமான், யாசின் மாலிக்கை அங்கு அழைத்துச் சென்றார்[4].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013இந்தியவிரோதி யாசின்மாலிக், சீமானின் கூட்டத்தில் பேசுவது: கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: “இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை[5]. இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல். இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற அதே சமயத்தில், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் அங்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது”, என்றார்[6].  தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[7] தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது[8] தெரியுமா?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.2யாசின் மாலிக்கைப் போல, சீமான் ஆயுத போராடத்திற்கு தயாரா?: சட்டங்களை மீறியதற்குத்தான், மார்ச் மாதம் 2013 யாசின் மாலிக் கைது செய்யப்பட்டான்[9].  ஆனால், கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது என்றிருப்பதால், இவர்களுக்கும் அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறது. போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனோபாவம் வளர்கிறது[10]. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[11].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[12].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013யாசின் மாலிக்கைப் போல காந்திவழி செல்லும் சீமானா: சீமான் பேசும்போது, “கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2000 அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்”, என்றார்.

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guruஇந்தியவிரோதிகளும், தேசபக்தர்களும்: தேசவிரோத காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான்[13]. சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு[14] கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்[15]. சினிமா மற்ற இதர வழிகளில் ணம் வந்து கொண்டிருப்பதனால், செலவு பற்றி கவலைப் படாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[16]. தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது, யார் இந்தியவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்பதுதான்.

Yasin malik sitting with Yafiz Sayeedதமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-05-2013


[3] Police withdrew the permission granted to Naam Tamizhar Katchi headed by film director Seeman to hold the meeting in support of separate Tamil Eelam as the organisers violated certain conditions, DSP Radhika told reporters here. The party violated the conditions and erected banners and pasted posters with photographs of Prabhakaran all over the town, she said. See more at: http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/#sthash.R2SA3lei.dpuf

[11] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[12] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[13] Malik said he spent several years in jails in Rajasthan, Kashmir and Delhi for helping the victims of atrocities unleashed by the Indian Army. He regretted that none of the Indian states expressed solidarity with the people of Kashmir, who have been struggling and suffering for several years, he said.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-voices-support-for-Tamil-Eelam/articleshow/20128987.cms

கிருத்துவர்கள் முறையைப் பின்பற்றும் சோனியா காங்கிரஸ்!

ஓகஸ்ட்2, 2010

கிருத்துவர்கள் முறையைப் பின்பற்றும் சோனியா காங்கிரஸ்!

தினமலர் முன்பு எப்படி கிருத்துவர்கள் ரூ.500/- நோட்டுகளில் “ஏசுவே கடவுள்” என்று அச்சிட்டு மதம் பரப்ப, நமது நாட்டுச் சிண்ணங்களை அவமதிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இப்பொழுது, அவர்களை மிஞ்சும் வகையில், சோனியா காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் இப்படி போஸ்டர் போட்டுள்ளனர்.

சிதம்பரத்திற்கு மொட்டை போட்டு காந்தியாக்கியது சரிதான், ஆனால், அவர் ஏற்கெனவே, நிதியமைச்சராக இருந்து மக்களுக்கு பலமுறை மொட்டை போட்டிருக்கிறார். இப்பொழுது, கேட்கவே வேண்டாம், உள்துறை அமைச்சராகி புகுந்து விளையாடுகிறார். அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சரே தான் தான் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார்!

காந்தியை-கேவலப்படுத்தும்-சோனியா-மெய்னோ-காங்கிரஸ்

காந்தியை-கேவலப்படுத்தும்-சோனியா-மெய்னோ-காங்கிரஸ்

விலைவு, இதோ –

காந்தியை-கேவலப்படுத்தும்-சோனியா-காங்கிரஸ்

காந்தியை-கேவலப்படுத்தும்-சோனியா-காங்கிரஸ்