Posts Tagged ‘காஷ்மீர்’

பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் புளூ-பிளிம், போர்னோகிராபி முதலியவற்றில் நடிக்க உரிமைகள் உண்டா-இல்லையா, அவற்றை அனுமதிக்கலாமா-கூடாதா, ஆபாச சிடிக்களை விற்கலாமா-கூடாதா போன்ற வாத-விவாதங்கள் 2011ல் ஏன் நடக்கவில்லை?

மார்ச்12, 2016

பல்கலைக்கழக மாணவமாணவிகள் புளூபிளிம், போர்னோகிராபி முதலியவற்றில் நடிக்க உரிமைகள் உண்டாஇல்லையா, அவற்றை அனுமதிக்கலாமாகூடாதா, ஆபாச சிடிக்களை விற்கலாமாகூடாதா போன்ற வாதவிவாதங்கள் 2011ல் ஏன் நடக்கவில்லை?

we wont allow this on campus - JNU

we wont allow this on campus – JNU

ஜே.என்.யூவில் ஏற்படுத்தப் பட்ட கட்டுப்பாடும், அதனை எதிர்த்த இடதுசாரி கொஷ்டிகளும்: ஜே.என்.யூவில் பிப்ரவரியில் திடீரென்று ஆண்-பெண் மாணவர்கள் விசயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

  1. இரவு30க்குப் பிறகு வெளி மாணவர்கள் ஜே.என்.யூவில் இருக்கக் கூடாது.
  2. இரவு30க்குப் பிறகு பெண்கள், பையன்கள் அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் / இருக்கக் கூடாது.
  3. பையன்கள், பெண்களின் அறைகளுக்குள் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் / இருக்கக் கூடாது.

என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது[1]. வழக்கம் போல அகில இந்திய மாணவர்கள் சங்கம் [All India Students Association (AISA], இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு [Students Federation of India (SFI)], சம-உரிமைகளுக்காக இளைஞர்கள்  [Youth for Equality (YFE)] போன்றவை அத்தகைய “காப் பஞ்சாயத்து” எல்லாம் கொண்டு வரமுடியாது, அச்சுற்றறிக்கை வாபஸ் வாங்கப்பட வேண்டும் என்று கத்தி கலாட்டா செய்தனர்[2]. ஆனால், ஆபாச படம் எடுத்தது, சிடி போட்டது, விற்பனை செய்தது பற்றி கண்டுகொள்ளவில்லை[3]. என்.டி.டிவி போன்ற செனல்களும், “தி இந்து” போன்ற நாளிதழ்களும் செய்திகளை தினம்-தினம் வெளியிட்டு ஆர்பாட்டம் செய்யவில்லை. பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் புளூ-பிளிம், போர்னோகிராபி முதலியவற்றில் நடிக்க உரிமைகள் உண்டா-இல்லையா, அவற்றை அனுமதிக்கலாமா-கூடாதா, ஆபாச சிடிக்களை விற்கலாமா-கூடாதா போன்ற வாத-விவாதங்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

JUN porn- school of languages.1

JUN porn- school of languages.1

ஜே.என்.யூவில்புளூ பிளிம்” 2011ல் எடுக்கப்பட்ட விவகாரம்: ஜே.என்.யூவில் ஏற்கெனவே “புளூ பிளிம்” 2011ல் எடுக்கப்பட்டது, அதிலும் ஹாஸ்டலில் எடுக்கப்பட்டது நிதர்சனமான உண்மையும் என்ற உள்ளது[4]. செக்யூரிடி அதிகாரி புகார் கொடுத்த பிறகு, கல்கலை பொறுப்பு அதிகாரி “மொழிகள் பள்ளி”யின் சில மாணவர்களால் எடுக்கப்பட்டது என்று தெரிந்ததால், அவர்கள் விசாரிக்கப்பட்டனர். பீஹாரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பையன் அவ்வாறு கொக்கோக லீலைகளில் ஈடுபட்டு, கம்ப்யூடர் சைன்ஸ் மாணவன் ஷூட்டிங் எடுத்தானாம்[5]. ஜேஏன்யூ அதிகாரம் அந்த சிடியை அழித்து விட்டு விசயத்தை மறைக்க முயன்றுள்ளது. போலீஸாரிடம் கூட புகார் கொடுக்கவில்லை[6]. அந்த “புளூ பிளிமை” மாணவர்கள் விற்கவும் செய்தார்கள்[7]. இதுதான் அவர்களது யோக்கியதை என்று தெரிகிறது. அத்தகைய “போர்ன்” விடீயோ மற்றும் செய்திகள் இன்றும் இணைதளங்களில் உள்ளன[8].

For-making-porn-clip,-3-JNU-Students-rusticated-New-Delhi.2011

For-making-porn-clip,-3-JNU-Students-rusticated-New-Delhi.2011

அந்நிலையில், ஜே.என்.யூ மாணவிகள், அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் [மாணவி, ஆராய்ச்சியாளர், ஆசிரியர், பேராசிரியர் என்று] ஒழுங்காக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து யாதாவது இருக்க முடியுமா? இல்லை, குஷ்பு பாணியில், இந்தியா டுடே சர்வே போல அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது, நாங்கள் எல்லைகளைக் கடந்தவர்கள், எங்களை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்று “அமேஸான்”களைப் போன்று முழக்கமிடுவார்களா?

S K Sopory and M Jagadish Kumar JNU VCs

S K Sopory and M Jagadish Kumar JNU VCs

ரொமிலா தாபர் முதல் மற்ற பண்டிதர்கள் எல்லாம் இதைப் பற்றி ஏன் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை?: சரித்திரம் (History), சரித்திரவரைவியல் (Historiography) முதலியவற்றில் தான் பாரபட்சத்துடன் செயல்படுகிறார்கள் என்றால், ஜே.என்.யூ பண்டிதர்கள், விற்பனர்கள், அறிவிஜீவிகள் இவ்விவகாரங்களிலும் அப்படியே இருக்கிறார்கள். “மறைப்பு சித்தாந்தத்தில்” (negationism) வல்லவர்கள் என்பதனை மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர். ரோமிலா தாபர் இப்பொழுது கூட கண்னையா விவகாரங்களில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். பிறகு, புளுபிளிமைப் பற்றி எப்படி மௌனமாக இருக்க முடியும்? எல்லோருமே பிஹாரைச் சேர்ந்தவர்கள் என்பதினால் மறைக்க முயல்கிறார்களா? ஒழுக்கம் என்பதை கூட நிரம் பார்த்துதான் கண்டிப்பார்களா? கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டால் கண்டுகொள்ளாமல் இருப்பார்களா? அப்படியென்றால், அத்தகைய சித்தாந்தம் என்ன? ஈ.கே.நாயனார் சொன்ன “கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல” என்பதை ஒப்புக் கொண்டு தான் அப்படி இருந்து விட்டார்களா? பர்கா தத், சபா நக்வி, சேகர் குப்தா, போன்றோர் அப்பொழுது ஏன் பொங்கவில்லை என்று தெரியவில்லை.

For-making-porn-clip,-3-JNU-Students-rusticated-New-Delhi- June 5, 2011

For-making-porn-clip,-3-JNU-Students-rusticated-New-Delhi- June 5, 2011

© வேதபிரகாஷ்

12-03-2016

[1] http://www.sinlung.com/2011/02/porn-mms-breeds-at-jnu.html

[2] A two-and-a-half-hour demonstration had a huge gathering of students from All India Students Association (AISA), Students Federation of India (SFI) and Youth for Equality (YFE) shouting slogans like ‘Moral policing down down’, ‘JNU mei khap panchayat nahi chalega’ etc. Student leaders demanded the immediate withdrawal of the circular issued by Chief Proctor’s office. According to the JNU Hostel Rule Book which never came into effect, claim the students, the circular enforced three basic rules to be implemented. They are:
1. No non-residents (JNU) allowed inside the hostel after 10.30 pm. 
2. Girls not allowed in boys’ hostel after 10.30 pm
3. Boys not allowed in girls’ hostel at any time (Apart from public meetings) 

[3]  Delhi’s prestigious Jawaharlal Nehru University is in a state of shock after a CD with lewd images of one of its female students is doing the rounds. The CD was allegedly shot by some students from the School of Language Studies. The students initially tried to extort money from the girl in the video but when they failed the culprits put the video out on mobile phones, on the internet and even sold it as a CD in the blue film market. The victim has been sent home by the authorities and the police are investigating the case. They claim that the culprits have been identified though no arrests have been made so far. “The girl and her friend were intimately involved. Another boy allegedly shot the video. JNU is yet to verify this,” said HS Dhaliwal, DCP, South zone.

http://www.sinlung.com/2011/02/mms-scandal-hits-jnu-2-students-being.html

[4] http://www.ndtv.com/delhi-news/jnu-mms-clip-shocked-university-orders-probe-447229

[5] A day after media reported that two former students of Jawaharlal Nehru University (JNU) had shot a blue film inside a hostel, the university authorities have initiated an inquiry into the matter. “We will not tolerate such things inside the university complex. We already have initiated inquiry and have questioned a few persons in this connection,” said HB Bohidar, Chief Proctor of JNU. The move came after the Procter office  received a complaint in this regard from the chief security officer of the university.  The film was reportedly shot around six month ago by a couple of students of School of Languages. It is believed that the boy and the girl in the film, who are natives of Bihar, were provided with the equipment for shooting by a student of Computer Science. When other students of the university came to know about the incident, they bashed up the boy who had ‘acted’ in the film.

http://www.thelotpot.com/shocking-blue-film-was-shot-inside-jnu-campus-and-was-leaked-by-students/

[6] The university officials then reportedly destroyed the CD and tried to hush up the matter. This act of university officials however came a bit late because by then the copies of the CD had already been taken out of the university. The CD has the girl watching a pornographic movie while indulging in the sexual acts that are getting recorded by a camera. Meanwhile, police said that the university authorities have not informed them about the matter. “We have not received any complaint either from the girl or university,” said DCP (South), HGS Dhaliwal. Police sources say that the blue film might have been made to earn money. “It is a possibility that the gangs who run pornography racket could be behind the incident as the picture quality of the movie is fine,” the sources added. Story First Published:February 08, 2011 11:32 IST

[7] http://www.ibtimes.co.in/porn-mms-scandal-shakes-jawaharlal-nehru-university-3-students-suspended-348761

[8]http://www.xvideos.com/video898236/jawaharlal_nehru_university_jnu_campus_mms_scandal_video_4

ஜே.என்.யூ வளாகத்தில் வெளிப்படையாக சிறுநீர் கழித்த கண்ணையாவும், தட்டிக் கேட்ட மாணவியை மிரட்டிய புரட்சிக்கார காம்ரேடும்!

மார்ச்11, 2016

ஜே.என்.யூ வளாகத்தில் வெளிப்படையாக சிறுநீர் கழித்த கண்ணையாவும், தட்டிக் கேட்ட மாணவியை மிரட்டிய புரட்சிக்கார காம்ரேடும்!

Kamalesh Parameshwari Kamalesh letter exposing Kanhaiyaதெருவில் மூத்திரம் பெய்யாதே என்ற மாணவியைத் திட்டிய கண்ணையா: கடந்த அக்டோபர் மாதம் 2015ல் ஒரு மாணவியுடன் முறைதவறி நடந்து கொண்டதனால், கண்ணையா ரூ.3,000/- அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளான்[1]. இதற்கான உத்தரவு கிருஷ்ண குமார் என்ற பொறுப்பாளர் மூலம் 16-10-2015 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதாவது, இந்த “சிறுநீர் கழித்த” விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவே மூன்று மாதங்கள் மேலாகியிருக்கிறது! கண்ணையா ஜூன் 10.2015ல் வெளிப்படையாக சிறுநீர் கழித்ததைப் பார்த்தபோது, அவ்வாறு செய்யக்கூடாது என்று அம்மாணவி கண்டித்தாள்[2]. அதற்கு அவன் அவளை மிரட்டியிருக்கிறான். “இதெல்லாம் சகஜம் தான், மூடிக் கொண்டு போ, பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால், மனோநல மருத்துவரைப் போய் பார், என்னிடம் விளையாடாதே”, என்று நக்கலாகவும் பேசியிருக்கிறான். இதனால், அம்மாணவி முறைப்படி புகார் கொடுத்தார்[3]. விசாரணைக்குப் பிறகு, கண்ணையா அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறான் என்பது நிரூபணம் ஆனதால், ஜே.என்.யூ அவனைக் கண்டித்து, ரூ.3,000/- அபராதம் விதித்தது.  துணைவேந்தர் அவனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதனால் இச்சலுகையைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இனிமேல் அத்தகைய செயல்களில் அவன் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டான்.

Parameshari Kamalesh exposing urinating Kannaiah on the road of JNU campusமாற்றுக்கருத்துகளை ஜே.என்.யூவில் அமுக்கப்பார்க்கும் கூட்டங்கள் எவை?: பாதிக்கப்பட்ட கமலேஷ் பரமேஸ்வரி இவ்வருடம் மார்ச்.3ம், 2016 அன்று அவ்விவரங்களை ஒரு கடிதம் மூலம் எழுதி வெளியிட்டாள்[4]. மார்ச்.2ம், 2016 அன்று அவன் திஹார் ஜெயிலிலிருந்து பிணையில் வெளியே விடப்பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது.  மாற்றுக் கருத்துகளை வரவேறகப்பட வேண்டும் என்று ஊடகக்காரர்கள், சித்தாந்திகள் முதலியோர் அறிவுரை கூறி வருவது தெரிந்த விசயமே. ஆனால், ஊடகங்கள் அதை இப்பொழுதுதான் கவனித்தது போல செய்திகளை வெளியிடுகின்றன. அப்படியென்றால், யார்-எந்த விசயங்களை மறைக்கிறார்கள்? ஜே.என்.யூவிலேயே மாற்றுக் கருத்துகளை கொண்டவர்களை அமுக்கப் பார்க்கும் எதிர்-சித்தாந்த கூட்டங்கள் யாவை? அவை இடதுசாரிக் கூட்டங்கள் தான் என்று நன்றாகவே தெரிகின்றதே? தில்லி மாணவர்கள் சங்கம், ஜனநாயக வாலிப்ர்கள் சங்க, முற்போக்கு இளைஞர்கள் சங்கம் என்றெல்லாம் பற்பல பெயர்களை வைத்துக் கொண்டலும், அவற்றின் கொள்கை ஒன்று தான் என்று நன்றாகவே தெரிகின்றதே? சில ஏபிவிபி-காரர்கள் ஏபிவிபியை விட்டு விலகினார்கள், மனுஸ்மிருதியை எதிர்த்தார்கள் போன்ற செய்திகள் மட்டும் உடனடியாக வெலியிடப்பட்டன. ஆனால், இதற்கு ஏன் அப்படி மந்தமாக செயல்பட்டுள்ளனர்.

கண்ணையா, சௌம்யா - JNU confirmation - Picture illustrative purpose onlyஜே.என்.யூ வளாகத்தின் தெருவில் வெளிப்படையாக மூத்திரம் பெய்தவன் செகுவேராவா, வீரனாகேட்டது பரமேஸ்வரி: கமலேஷ் பரமேஸ்வரி என்ற அம்மாணவி, இப்பொழுது ஜே.என்.யூவில் துணை பேராசிரியராக வேலை செய்து வருகிறார். பெண்களை மதிக்கத்தெரியாத, கண்ணையா போன்றவர்கள், ஏதோ பெரிய “புரட்சியாளன்” போன்று இன்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு வருகிறான். ஆனால், அவன், என்னை அவமதித்துள்ளான் என்று பேஸ்புக்கில் விவரங்களை வெளியிட்டுள்ளார்[5]. பல்கலைக்கழகத்தின் அபராதம் மற்றும் கண்டிப்பு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது[6].  ஆனால், கம்யூனிஸ மாணவர் அமைப்புகள், இதெல்லாம் அவன் தலைவனாக இல்லாதபோது நடந்தது, இப்பொழுது, வேண்டுமென்றே வெளியிட்டு பிரச்சினையைக் கிளப்பப் பார்க்கிறார்கள் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்துள்ளன. தலைவனாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, ஜே.என்.யூ வளாகத்தில் வெளிப்படையாக சிறுநீர் கழிப்பது நாகரிகமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாசாரமா? அதிலும் சக-மாணவியர் பார்க்கும் விதத்தில் மூத்திரம் பெய்வது அழகா?

விகடனும், மூத்திரம் பெய்த தலைவனும்பெண்எதிரி, பெண்விரோதக்காரன் புரட்சியாளன் ஆவானா?: “தி இந்துவும்”[7], என்.டி.டிவியும், வழக்கம் போல, “வெளியாள்” கண்ணையாவை தாக்க முயற்சித்தான் என்று செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளன. ஒரு “மனிதன்”, “நாட்டை தூஷிப்பதற்காகவும், தேசவிரோத நடவடிக்கைளை மேற்கொண்டதற்காகவும்” கண்ணையாவுக்கு தகுந்த பாடம் புகட்டுகிறேன் என்று கூவிக்கொண்டு ஜே.என்.யூ வளாகத்தில் நுழைந்தான்[8] என்கின்றன. “பிசினஸ் ஸ்டேன்டெர்ட்” அவனை விகாஸ் சௌத்ரி என்று குறிப்பிட்டு அதே தோணியில் செய்தியை வெளியிட்டுள்ளது[9]. ஆனால், செக்யூரிடி ஆட்கள் அவனை வெளியே கொண்டு சென்றனர். குமார் என்பவர், இத்தகைய பெண்-எதிரி-விரோதக்காரனை எப்படி “புரட்சிக்காரன்” என்று சொல்கிறார்களோ என்று தெரியவில்லை, என்றார்[10]. அந்த “வெளியாள்” மற்றும் “மனிதன்” இளைஞனாக இருப்பது, அந்த “தி இந்து”, என்.டி.டிவி மேதாவிகளுக்குத் தெரியவில்லை போலும். செய்திகளைத் திரித்து வெளியிட வேண்டும் என்று குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இத்தகைய ஊடகங்கள் எப்படித்தான் நம்பகத் தன்மைக்கு உகந்ததாக இருக்க முடியும். இத்தகைய பாரபட்ச குணாதிசயங்களுடன் தான் சகிப்புத்தன்மை, மனித உரிமைகள் என்றெல்லாம் வேறு வியாக்கியானம் செய்து கொண்டு தெரிகிறார்கள். “பஸ்ட் போஸ்ட்” முழு விவரங்களையும் கொடுத்துள்ளது[11].

Daniel Raja and his daughter Aparajitha 14-02-2016பெண்ணை மதிக்கத் தெரியாதவனை வீரனாக்குவது ஏன்?: பெண்ணுரிமை, பெண்ணியம் என்றேல்லாம் வாய் கிழிய பேசும் கம்யூனிஸ வகையறாக்களிடம் தாம், பெண்ணை மதிக்கத் தெரியாத குணங்கள் வெளிப்படுகின்றன. கண்ணையா அவ்வாறு நடந்து கொண்டதில் என்ன வியப்பும் இல்லை, ஏனெனில், அவன் ஒரு கம்யூனிஸ்ட் என்று தான் சொல்லிக் கொள்கிறான், யச்சூரி முதல் மற்ற காம்ரேடுகளும் அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகின்றன. கவிதா கிருஷ்ணன், மாலினி பார்த்தசாரதி முதலிய நாரிமணிகளும் கண்டு கொள்ளாமல், மற்ற விசயங்களைப் பற்றி அலச ஆரம்பித்து விடுவர். கொம்யூன்களில் கற்பு தேவையில்லை என்று பெண்மையினை சித்தாந் த ரீதியில் பொதுவுடமை ஆக்கி விட்டதால் தானே, அப்பொழுது, இ.கே. நாயனார், “கற்பழிப்பது டீ குடிப்பது போன்று”, என்று விசயத்தைப் போட்டு உடைத்தார். உண்மையைச் சொல்லி கேட்டால் காம்ரேடுகளுக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. ஆமாம், அவர்களுக்கு மனைவிகள், துணைவிகள், சகோதரிகள், மகள்கள் எல்லோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். சித்தாந்தம் பேசினாலும், விட்டுக் கொடுக்க முடியாது. அதனால், கோபம் வரத்தான் செய்யும். பிறகு, இரட்டை வேடங்கள் போடுவானேன்? “ஏன்டா அறிவு கெட்டவனே, உனக்கு தெருவில், அதிலும் படிக்க வந்த இடத்தில் மூத்திரம் பெய்கிறாயே, வெட்கமில்லையா”, என்று கேட்க அந்த ராஜாவின் மகள் அபராஜிதாக்கும், யச்சூரிக்கும் யோக்கியதை இல்லை போலும்!

© வேதபிரகாஷ்

11-03-2016

[1] New Indian Express, Kanhaiya Kumar faced university action for ‘misbehaving’ with woman last year, By: Express News Service | New Delhi | Updated: March 11, 2016 4:01 am

[2] “The university… has found Kanhaiya Kumar guilty of misbehaving with an ex-student (female) and threatening her. “This act is serious in nature and unbecoming of a student of JNU and calls for a strict disciplinary action against him (Kanhaiya)… keeping his career prospects in mind, the Vice Chancellor has taken a lenient view in the matter,” said the office order issued on 16 October, 2015 by the then Chief Proctor, Krishna Kumar. “Kanhaiya is fined Rs 3,000 and also warned to be careful and not get involved in any such incidents in future. Otherwise, strict disciplinary action will be taken against him,” the order said.

http://indianexpress.com/article/india/india-news-india/kanhaiya-was-fined-by-jnu-for-alleged-misbehaviour-with-girl-student/

[3] Jawaharlal Nehru University Students Union President (JNUSU) Kanhaiya Kumar found himself in the middle of another row Thursday 10-03-2016, after it emerged that the university had taken disciplinary action against him and fined him in October last year for allegedly misbehaving with a woman. The woman, in her complaint to the university, had accused Kumar of threatening her when she objected to him urinating in public. The woman, who is an alumnus of JNU, had written an open letter with details of the alleged incident, which, she said, took place in June last year. The letter was written on March 3, a day after Kumar was released from Tihar jail on bail. – See more at: http://indianexpress.com/article/india/india-news-india/kanhaiya-was-fined-by-jnu-for-alleged-misbehaviour-with-girl-student/#sthash.1HlUT4b2.dpuf

[4] https://www.facebook.com/kamlesh.pn/posts/930662580336654

[5] https://www.facebook.com/kamlesh.pn/posts/930662580336654

[6] Firstpost, A slap and an open letter: How JNUSU president Kanhaiya Kumar’s fame took a nosedive in one day, by FP Staff,  Mar 10, 2016 21:07 IST.

[7] இந்துவுக்கு நான் அனுப்பிய கமென்ட்ஸ் – Kanhaiya Kumar faced university action for ‘misbehaving’ with womanl on June 10, 2015, when a girl student asked Kanhaiya, who at the time was not the students’ union president, to not urinate in the open inside the campus. But, he misbehaved with and  as she complained, he was fined with Rs.3,000/- bu JNU. He is only now talking about the rights of women and so on! Even, this “outsider” / student as mentioned by you, also questioned him pointing out the facts of his misbehavior with girl-student. But, you report differently, suppressing the facts!

[8] NDTV, Outsider Tries To Assault Student Leader Kanhaiya Kumar On JNU Campus, All India | Edited by Abhinav Bhatt | Updated: March 10, 2016 20:47 IST

[9] http://www.business-standard.com/article/news-ians/kanhaiya-kumar-roughed-up-on-jnu-campus-116031001228_1.html

[10] The university has confirmed the letter’s authenticity, claims news agency Press Trust of India. “I am shocked to see how a misogynist like Kanhaiya is being hailed as revolutionary,” the woman who he harassed was reported as saying. “We do respect the girl’s right to criticise Kanhaiya but we want to reiterate that he has always stood for gender justice,” said a statement from the union that is headed by Mr Kumar.

http://www.ndtv.com/india-news/jnu-student-kanhaiya-kumar-attacked-on-campus-allegedly-by-outsider-1285854

[11] http://www.firstpost.com/india/a-slap-and-an-open-letter-how-jnusu-president-kanhaiya-kumars-fame-took-a-nosedive-in-one-day-2668426.html?utm_source=FP_CAT_LATEST_NEWS

கண்ணையாவும், மல்லையாவும்: இந்திய சமூக சீரழிவு மற்றும் பொருளாதார ஊழல்களின் சின்னங்கள்!

மார்ச்9, 2016

கண்ணையாவும், மல்லையாவும்: இந்திய சமூக சீரழிவு மற்றும் பொருளாதார ஊழல்களின் சின்னங்கள்!

JNU students supporting Afzal.who was hanged

தில்லியும், இந்தியாவும்: தில்லி ஊடகங்கள் தாங்கள் வெளியிடும், உருவாக்கி வெளியிடும் செய்திகள் தாம் இந்தியாவின் செய்திகள் போல திருப்பி-திருப்பி ஒலி-ஒளிபரப்பி பிரச்சாரம் செய்து வருகின்றன. நாங்கள் கொடுப்பது தான் செய்திகள், அவற்றைத்தான் எல்லோரும் கேட்க வேன்டும், ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற ரீதியில் அவை செயல்பட்டு வருகின்றன. தில்லி செய்திகள் தான் இந்தியாவின் செய்திகள், அதனால், தில்லிதான் இந்தியா போன்ற கருத்தையும் உருவாக்கி வருகின்றன. முகலாயர், ஆங்கிலேயர்களும் இதே கருத்தைத்தான் வைத்து இந்தியர்களை ஏமாற்றினர். பரந்து கிடக்கும் இந்திய சரித்திரத்தை பதிவு செய்ய வேண்டும் அவர்கள் என்றுமே எண்ணிப்பார்த்ததில்லை, அப்படியே அறிந்தாலும் மறைக்கவே செய்துள்ளனர். அதுபோலத்தான், கண்ணையா-மல்லையா கதைகளும் அமைந்து வருகின்றன. ஊடகங்களின் தரம் குறைந்து, கேவலமாகி விட்டதால், ஊடகக்காரர்கள் தங்களது நிலையை புதுப்பித்துக் கொள்ள கண்ணையா பிரச்சினையை வைத்துக் கொண்டு “எண்ணவுரிமை, பேச்சுரிமை” என்றெல்லாம் வேடம் போட்டன. இதனால், நாட்டுப்பற்று என்ன தேசவிரோதம் என்ன என்றெல்லாம் கட்டுரைகளை எழுதி வியாக்கியானம் செய்தன, திருத்தி-திருத்தி செய்திகளை வெளியிட்டன.

JNU61 Afzal rememberance

பாகிஸ்தான் வாழ்கஎன்றால், ஒன்றும் குற்றமில்லை: பர்கா தத், சேகர் குப்தா, பிரபு சாவ்லா, சித்தார்த் வரதராஜன், சபா நக்வி, என்று எல்லோருமே ஒட்டு மொத்தமாக கண்ணையாவை ஆதரித்தனர். அதனால், போலீஸ், நீதிமன்றம், முதலியவற்றை அதிகமாகவே விமர்சித்தனர். கண்ணையாவுக்கு எதிராக எந்த ஆதாரத்தை வைத்தாலும், அதை குறைகூறுவது, மறுப்பது, எதிர்ப்பது போன்ற முரட்டுத்தனமான சித்தாந்த ரீதியில் செயல்பட்டனர், இன்றளவிலும் செயல்பட்டு வருகின்றனர். இவற்றை அவர்களது பேஸ்புக்-டுவிட்டர் பதிவுகளில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பிரிவினை, பிரிவினைவாதம், தேசதுரோகம் முதலியவற்றின் முழுமையான சட்டநிலையை வெளிப்படையாக தெரிவிக்காமல், அரைகுறை விவரங்களைக் கொடுத்து, எண்ணவுரிமை, பேச்சுரிமை போர்வையில் மறைக்கின்றனர். சீதாராம் யச்சூரி போன்ற கம்யூனிஸவாதிகள் “பாகிஸ்தான் வாழ்க” என்றால், ஒன்றும் குற்றமில்லை என்ற அளவுக்கு இறங்கி வந்து விட்டார்கள். கரன் தாபர் பேட்டியில், யச்சூரி அவ்வாறு கூறியிருப்பது பதிவாகியுள்ளது. காம்ரேடு ராஜாவின் மகள் அபராஜிதா இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர், அவ்வாறு பேசுவது தெரிகிறது. அதாவது காலிஸ்தான் கேட்டவர்கள் அப்படித்தான் கத்தினார்கள், அப்பொழுது, உச்சநீதி மன்றம் அது தேசவிரோதம் இல்லை என்று எடுத்துக் காட்டியதாம்!

Anna-cartoon-on-Dravida-Nadu-policy-1958

இந்திரா காந்தி அகற்றப்பட்டது போல, மோடி சகற்றப்படுவார்: சரி அப்படியென்றால், கண்ணையாவை, இன்னொரு பிந்தரன்வாலேயாக்கி, ராணுவ நடவடிக்கை மூலம் தான் இத்தகைய தேசவிரோத கூச்சல்களை, நடவடிக்கைகளை, ஒடுக்க வேண்டும் என்று யச்சூரி கூறுகிறார்போல! இப்பொழுது அவசரநிலை / எமர்ஜென்ஸி சூழல் வரவில்லை, ஆனால், வந்துவிடும் என்ற ரீதியில் பேசினார். அதாவது, 2019ற்குள் அத்தகைய நிலை ஏற்படும், மோடி அரசாங்கம் அகற்றப்படும் என்றெல்லாம் கூட யச்சூரி பேசியது குறிப்பிடத் தக்கது[1]. ஜனநாயகரீதியில் தேர்தலில் ஈடுபடும் கம்யூனிஸகட்சிகளின் தலைவர் இவ்வாறெல்லாம் பேசியுள்ளது ஏன் என்றும் நோக்கத்தக்கது. பிரச்சினைகளை உருவாக்கி, இந்திரா காந்தி அரசை எவ்வாறு நீக்கப்பட்டதோ, அதே போன்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்ற ரீதியில் பேசினார்[2].

Anna-punished-for-Dravida-propaganda-cartoon-1958

 “கருப்பு பாரத மாதாவும், தேசவிரோத நாட்டுப்பற்றும்: தேசப்பற்றைப் பற்றி புதிய விளக்கங்களையும் அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாக இருக்கலாம். பார்லி., கட்டிட தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு உள்ளதா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது[3]. இப்படி பொறுப்புள்ளவர்கள் உமர் காலித்தையும் ஆதரிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பேசுவது தேசதுரோகம் ஆகாது. உங்களது பேச்சுக்கள் விஷத்தை கக்குவதாக இருந்தால் மட்டுமே அது தேசதுரோகம் ஆகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளதும் நோக்கத்தக்கது[4]. சித்தார்த் வரதராஜன் ஓன்றோர் தமது இணைதள செய்திதாளில் “கருப்பு பாரத மாதாவும், தேசவிரோத நாட்டுப்பற்றும்” மற்றும் “ஆரியமயமாக்கப்பட்ட பாரத மாதா” என்ற நிலையில் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர்[5]. அதாவது, அந்த அளவுக்கு, அவர்களுக்கு கருத்து சுதந்திரம் அதிகமாகி விட்டது[6]. ஒரு தவறை, அதிலும் குற்றத்தை செய்து விட்டு, அதனை நியாயப்படுத்த இவர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளார்கள், அதன்படியே தினமும் வேலை செய்து வருகிறார்கள். நாட்டுப்பற்று, தேசப்பற்று என்றால் இந்தியர்கள் இவர்களிடம் தான் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்று மடத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். ஊடகபலத்தை வைத்துக் கொண்டு, மக்களின் மீது, எந்த கருத்தையும் திணிக்கலாம், ஆங்கில டிவி-செனல்கள் மூலம் அத்தகைய ஒருதலைப்பட்சமான செய்திகளை பரப்பலாம், மக்கள் அவற்றைத்தான் நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்றெல்லாம் இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போலும். இந்தியர்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களாகவா இருக்கிறார்கள்? ஆங்கில ஊடகங்களை வைத்து, ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களை எடைபோட்டு விட முடியுமா?

Karunanidhi rhetoric talk on Dravida nadu in 2014

சட்டம் நீதி, நீதிமன்றங்களை மீறும் ஊடகக்காரர்கள்: ஃபாலி நாரிமன் போன்றோர் நீதிமன்றத்திற்கு வெளியில் சொல்லும் கருத்தை வைத்துக் கொண்டு, இதற்கு வியாக்கியானம் செய்வது தான் வேடிக்கை. இந்திய எதிர்ப்பு (தேச விரோதம்) என்பது குற்றம் ஆகாது, அது ராஜதுரோகமும் (செடிஷன்) ஆகாது, என்று சிலர் பிப்ரவரி 17ஆம் தேதி 2016 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதியதை வைத்துக் கொண்டு, எந்த முடிவுக்கும் வரமுடியாது. பிறகு, 1962 மே மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல்முறையாக உரையாற்றிய சி.என். அண்ணாதுரை, திராவிடர்களுக்கு சுய நிர்ணய உரிமையையும், “தென்னிந்தியாவுக்கு தனி நாட்டையும்” கோரினார், அப்போது அது தேசவிரோதமாக்க் கருதப்படவில்லை.  என்ற வாதத்தை வைக்கிறர்கள். ஆனால், பிறகு கொண்டு வந்த அரசியல் நிர்ணய சட்டத் திருத்தங்களைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள். 1960ல் திமுக “திராவிட நாடு” கோரிக்கயை கட்சிதிட்டத்திலிருந்து எடுத்து விட்டது. மூன்றாவது பொதுத்தேர்தல் 1962-இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க சார்பில் 50 பேர் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆனால், அண்ணா தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலில் காமராஜருக்காகத் தீவிரப்பிரச்சாரம் செய்தார் பெரியார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார் அண்ணா. 1963ல் நேரு அதை தேசதுரோகக் குற்றமாக சட்டரீதியாக – பிரிவினைத் தடைச்சட்டம் – அறிவித்தவுடன், அண்ணாதுரையே பல்டி அடித்தார். பிறகு “திராவிட நாடு” அறவே மறக்கப்பட்டது[7]. ஏனெனில், அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் பிரமாணம் எடுத்துக் கொள்பவர் அவ்வாறான தேசவிரோத குற்றத்தைச் செய்ய முடியாது, அதாவது, அத்தகையவரை பதவியிலிருந்து கூட தூக்கிவிடலாம் / விலக்கிவிடலாம். தனிநாடு கோரினால், கட்சி தடை செய்யப்படும் என்ற நிலையில், அந்தக் கோரிக்கையை தி.மு.க கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். ஆனால், இந்த உண்மைகளை மறைத்து அரைகுறையாக செய்திகளை வெளியிட்டு, மக்களை திசைத்திருப்பும் போக்கு ஏன் என்பது வியப்பாக இருக்கிறது!

© வேதபிரகாஷ்

08-03-2016

[1] Communist Party of India (Marxist) General Secretary and Rajya Sabha leader Sitaram Yechury today said that through the sedition row at JNU, the BJP is trying to replace history with mythology and philosophy with theology. “JNU has been used as a launchpad to unleash an insurrection against the constitution. It may not be a largescale attack on democratic rights like what happened during Emergency but I can foresee that coming. We face a much bigger attack,” said Yechury in an exclusive interview to India Today’s Karan Thapar on the show To The Point. “If you look at the bail order the judge has given in Kanhaiya’s case, there are certain serious doubts over what is happening also in the judiciary. But I am not saying this is Emergency yet,” said Yechury.

[2] http://indiatoday.intoday.in/story/exclusive-modi-made-an-icon-out-of-kanhaiya-by-mishandling-jnu-says-sitaram-yechury/1/614236.html

[3] தினமலர், அப்சல் குருவுக்கு ஆதரவாக சிதம்பரம் கருத்து, பிப்ரவரி.25, 2016.08.41

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1465270

[5] http://thewire.in/2016/03/08/the-black-bharat-mata-and-the-nationalism-of-sedition-24148/

[6] Karen Gabriel and P. K. Vijayan, The Black Bharat Mata and the Nationalism of Sedition, the Wire.in, 08-03-2016.

[7]  In 1960, the DMK leaders decided to delete the demand of Dravida Nadu from the party programme at a meeting held in absence of Annadurai. In 1963, the Government of India led by Jawaharlal Nehru, declared secessionism as an illegal act. Subsequently, Annadurai abandoned the claim for Dravida Nadu – now geographically limited to modern Tamil Nadu – completely in 1963.

சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப்படும் உண்மைகள்.

நவம்பர்17, 2013

சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப்படும் உண்மைகள்.

Pedophile conference chennai 2013

சென்னையில்  நடைபெற்ற  கருத்தரங்கம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 குறித்த தென்னிந்தியாவின் இரண்டு நாள் (16-17 நவம்பர் 2013) கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது[1]. தமிழ்நாடு ஜுடீசியல் அகாடமியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தென் மண்டல கருத்தரங்கம் நடந்தது. இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கிவைத்து உரையாற்றினார். (இடமிருந்து) அகாடமி தலைவர் சித்ரா வெங்கட்ராமன், ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜே.செக்குத்தா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், உடனிருந்தனர்[2].

Pedophile conference chennai 2013.2

காலங்காலமாக  குற்றங்கள்  நடந்துவரும்போது  2012ல்  சட்டம்  ஏன்?: குழந்தைகளைப் பாதுகாக்க 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ சட்டம்) Protection of Children from Sexual Offences (POSCO Act, 2012) முதன்முறையாக கொண்டுவரப்பட்டது[3]. இந்தியாவில் வெளிநாட்டுக் காரர்கள் ஏற்கெனவே இக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ள்ஸா . வருகின்ற போது, இச்சட்டம் இவ்வளவு தாமதமாக ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதே சதேகமாக உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழுள்ள ஆண் / பெண் அல்லது சிறுவன் / சிறுமி “சைல்ட்” (Child) என்று குறிப்பிடப்பட்டுள்ளதும் வினோதமாக உள்ளது. PCOSOC Act 2012 not applicable to J and K stateவழக்கம் போல இச்சட்டம் ஜம்மு-காஷ்மீர மாநிலத்திற்கு பொறுந்தாது என்பதும் வியப்பாக இருக்கிறது.

Pedophile conference chennai 2013.3

குழந்தைகளுக்கு  எதிரான  பாலியல்  குற்றதடுப்புசட்டம்  முதன்முறையாக  கொண்டு  வரப்பட்டது: தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சு: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்தார். இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது[4]:  “குழந்தைகளைப் பாதுகாக்க 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ சட்டம்) Protection of Children from Sexual Offences (POSCO Act, 2012) முதன்முறையாக கொண்டுவரப்பட்டது[5]. இந்தியாவில் 53.22 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தெரிந்தவர்கள் மூலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கு நீதிபதிகள், அரசு வக்கீல்கள், விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக் கும் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்துவதிலும் மிகவும் கவனம் தேவை. குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்தால் அந்த குழந்தைக்கு மன தளவில் பாதிப்பு ஏற்படும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் உரிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். இதுபோன்றவர்களின் விசா ரணையால் குழந்தைகள் குழம்பி விடுவார்கள். மொழி பிரச்னை உள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தும்போதும் குறுக்கு விசாரணை நடத்தும்போதும் மொழிபெயர்ப்பாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 PCOSOC Act 2012

பாலியல்  தொழிலுக்காக  குழந்தைகளைக்  கடத்துவதும்  இந்தசட்டத்தில்  கடுமையான  குற்றமாகும்: விசாரணை நடத்தும் வக்கீல்களும் தேவையற்ற வார்த்தைகளையும், தேவையற்ற கேள்விகளையும் கேட்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தொட்டோ, தொடாமலோ அல்லது ஆபாசமாகவோ படம் எடுத்தோ பாலியல் வன்முறை செய்வது போக்ஸோ சட்டத்தின்படி குற்றமாகும். பாலியல் தொழிலுக்காக குழந்தைகளைக் கடத்துவதும் இந்த சட்டத்தில் கடுமையான குற்றமாக வகை செய்யப்பட்டுள்ளதுபோக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சிறப்பு நீதிமன்றங்களில் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் செய்தி வெளிவரக்கூடாது”,  இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Punishment to the offenders

குழந்தைகளுக்கு  எதிரான   பாலியல்  வன்முறை  அதிகரிக்க  இன்டர்நெட்டே  காரணம்[6]: கருத்தரங்கில் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட்  ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச் செய்யலாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட் வசதி வந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது.
Wade-Michael-Page photo
இன்டர்நெட்  விசயத்தில்  ஜாக்கிரதையாக  இருக்கவேண்டும்: குழந்தைகளுக்கான மேம்பாடு மற்றும் புதிய உத்திகள் உருவாக்குவதில் இன்டர்நெட் பெரும்பங்கு வகித்தாலும் இதை வரைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. குழந்தைகளை இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகி இருக்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.  பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், குழந்தைகள் நல அமைப்புகள், நீதித்துறை, காவல்துறை போன்றவை குழந்தைகள் நலனில் அதிக பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இன்டர்நெட் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். குடும்பம்தான் குழந்தைகளின் சமூக கல்வி நிறுவனமாகும். நமது கலாச்சாரம் குழந்தைகளை இதுவரை பாதுகாத்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு சதாசிவம் பேசினார்[7].

Crime in India 2010

சென்னையில் வில் ஹியூம் கதை: சென்னையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்தில், பீடோபைல் / பிடோபைல் என்கின்ற குழந்தைக் கற்பழிப்பாளர்கள் பிடிபட்டுள்ளனர். வில் ஹியூம் என்பவன், சென்னையில் 30 வருடங்களாகத் தங்கியிருந்தவன் 2011லந்தான் பிடிபட்டான்[8]. பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் தப்பி மறைந்து விட்டானாம்.  08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டான்[9].

சிறார்களிடம்செக்ஸ்விளையாடல்கள்:  பாட்ரிக் மாத்யூஸ் சென்னை பள்ளியில் பீடோபைல் குணத்தைக் காட்டினான். அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[10]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

விஹியூம்  மற்றும் ரப்பி  ஆலன்ஜேவிற்கு  தொடர்பு  இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[11], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[12], புவனேஸ்வர்[13], பூரி[14] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யாரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[15].  தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், கிருத்துவ பாலியல் அதிகமாகவே இருந்தது[16].

© வேதபிரகாஷ்

17-11-2013


[1] தினமலர், குழந்தைகள் பாதுகாப்பு சட்ட கருத்தரங்கு, பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2013,00:00 IST

[7] தினகரன், குழந்தைகளுக்குஎதிரானபாலியல்வன்முறைஅதிகரிக்கஇன்டர்நெட்டேகாரணம் : தலைமைநீதிபதிசதாசிவம்பேச்சு, மாற்றம் செய்த நேரம்:11/17/2013 8:13:45 AM

[11]  வேதபிரகாஷ், ,சென்னை செக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக்கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்  குழந்தைக் கற்ப்பழிப்பாளி!,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[12] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[13] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[14]  பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை. http://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[15] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ்ஊடகங்கள்!http://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

மே21, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன. இனி இதனால், தமிழர்களுக்கு என்ன லாபம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

பிரிவினைஒற்றுமை பேசி சொகுசு வாழ்க்கை வாழும் தலைவர்கள்: யாசின் மாலிக் “காஷ்மீர் அரசியலில் சித்தாந்தம் எதுவும் இல்லை, எல்லாமே பணம் தான்”, என்று அமெரிக்கத் தூதரகத்திடம் ஒப்புக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது[4]. இவரும் சளைத்தவர் அல்ல, பாகிஸ்தானில் அழகிய மனைவி, மற்ற இடங்களில் குடி, கூத்து, கும்மாளம்[5] என்று தான் அனுபவித்து வருகிறார். அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பதாவது[6], “ஒமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா செயிக் குடும்பத்தில் வந்தவர்கள். அவர்கள் தில்லியின் பண விளையாட்டுகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள். ஶ்ரீநகர் மற்றும் தில்லியில் சொகுசான பங்களாக்களில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து வருபவர்கள். தமது உடைக்கேற்றபடி, விலையுயர்ந்த பனேரை கைக்கடிகரங்களைக் கட்டிக் கொள்பவர்கள், வரும் விருந்தாளிகளுக்குக் கூடபிளாக் லேபிள்என்ற உயர்ந்த வகை மதுவை கொடுத்து உபசரிப்பவர்கள்[7]. உலகம் முழுவதும் சுற்றிவரும்போது கூட விமானங்களில் முதல் வகுப்பில் சொகுசாக பிரயாணம் செய்பவர்கள். இப்படி எல்லாமே இந்திய அரசாங்கத்தின் தயவில் நடந்து வருகிறது. மீர்வாயிஸைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, பாகிஸ்தானின் தயவில், துபாயில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைச் செய்து வருகிறார்”. அதாவது, இந்தியா ஏமாளி என்பதைவிட, நேரு-சோனியா அந்நிய அடிவருடி கும்பல்கள் அத்தகைய தேசவிரோத சக்திகளை ஊக்குவித்து, சமரசம் செய்து கொண்டு, தங்களது பரம்பரை ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமான்: காஷ்மீர் பிரிவினைவாதிகளைப் போலவே, தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு, தமிழ் உணர்வுகளைத் துண்டிவிட்டுக் கொண்டு[8], இவரும் ராஜபோக வாழ்க்கையினைத்தான் வாழ்ந்து வருகிறார். சினிமாக்காரர் என்பதால் சொல்லவே வேண்டாம். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால், அத்தகைய உபசரிப்பு, கவனிப்பு, முதலிய விவரங்கள் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. கோயில் பணம் கூட எப்படி துஷ்பிரயோகப் படுத்தப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது[9]. அதாவது இந்துமதத்தை தமிழகத்தில் தூஷிப்பது, ஆனால், வெளிநாடுகளில் இந்து கோயில்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது என்று இவர்கள் சித்தாந்தம் உள்ளது. இயக்குனர், நடிகர் என்று பல வேடங்களில் சுகங்களை அனுபவித்து வருகிறார். யாசின் மாலிக்கின் விவகாரங்கள் வெளிவந்துள்ளன, ஆனால், “தமிழ்” பந்தத்தினால், சீமானின் விவகாரங்கள் அடக்கி வாசிக்கப்படுகின்றன போலும். இருப்பினும், விஜயலட்சுமி மற்றும் இலங்கைப் பெண் பற்றிய விசயங்கள் வெளியாகியுள்ளன[10]. மற்றபடி, காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமானும் குடிப்பாரா, கும்மாளம் போடுவாரா என்பதெலாம் தெரியவில்லை. ஒருவேளை யாசின் மாலிக் தெரியாமல் சொல்லி விட்டார் போலும்!

யாசின் மாலிக் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லையாம்: யாசின் மாலிக் பாகிஸ்தானிற்குப் போவதும், வருவதும் தெரிந்திருக்கிறது, புகைப் படங்கள், விடியோக்கள் எல்லாமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவர் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. கடலூரில், “நாம் தமிழர்” கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானாராம்[11]. அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனராம். நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி., கண்ணப்பன், டி.ஐ.ஜி., முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும்மேற்பட்டபோலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர். யாசின் மாலிக் பங்கேற்கும் விஷயம் அவ்வளவு தாமதமாக எப்படி தமிழகத்து போலீஸாருக்குக் கிடைக்கும்?

.பி., க்யூ., உளவுப்பிரிவு போலீசார் தூங்கி விட்டனரா: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, நிழல்போல் உளவு பார்க்க, ஐ.பி., க்யூ., உளவுப் பிரிவுபோலீசார், புதுச்சேரி மற்றும் கடலூரில் குவிக்கப்பட்டனராம். 18-05-2013 சனிக்கிழமை காலை, 10:20 மணிக்கு புதுச்சேரியில் தங்கியிருந்த சீமான், யாசின் மாலிக் மற்றும் மாநில நிர்வாகிகள் கடலூருக்கு புறப்பட்ட தகவல் கிடைத்ததும், கருத்தரங்கம் நடைபெற்ற திருமண மண்டபம் முன், ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படைபோலீசார் 200பேர் குவிக்கப்பட்டனராம். யாசின் மாலிக்கை கைது செய்யவே போலீசார் குவிக்கப்பட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் கருதினராம். காலை, 11:10 மணிக்கு, சீமான் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டுமே கருத்தரங்கமேடைக்கு வந்தனராம். ஆனால், அங்கு யாசின் மாலிக் இல்லாததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனராம். புதுச்சேரியில் புறப்பட்டவர் எங்குபோனார் என புரியாமல் குழம்பினராம். இந்நிலையில் பகல், 1:35 மணிக்கு, திடீரென யாசின் மாலிக் கருத்தரங்கு மேடையில்தோன்றியதும், எப்படி வந்தார், எந்த வழியில், எந்த வாகனத்தில் வந்தார் என புரியாமல், போலீசார் திண்டாடினராம்[12]. கருத்தரங்கில் பங்கேற்ற யாசிம் மாலிக், மாலை, 5:00 மணிக்கு திடீரென காணவில்லையாம்! இதெல்லாம் ஏதோ பெரிய தமாஷா போல செய்திகளை  வெளியிட்டியிருக்கிறார்கள்.

வந்தார், பேசினார், மறைந்து விட்டார்: அதிர்ச்சியடைந்தபோலீசார், விழா ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரித்தனராம். அவர் அப்போதேபோய்விட்டதாகக் கூறியதும், எப்படி, எந்த வாகனத்தில் சென்றார் என, வியப்படைந்தனராம். அதுகுறித்த தகவலை, தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியாமல் திணறினராம். இரவு, சீமான்பேச்சை முடித்த பிறகு, நிர்வாகி ஒருவர் நன்றி கூறிக் கொண்டிருந்தாராம். தொண்டர்களின் கெடுபிடியைத் தாண்டி போலீசார் 10:23க்கு மண்டப மேடைக்குச் சென்றனராம். அங்கு சீமான் இல்லையாம். அவர் 10:21 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டதாக நிர்வாகிகள் கூறினராம். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆஹா, இங்குதான் உண்மை புலப்படுகிறது. அதாவது “நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது” என்பதிலிருந்து, யாசின் மாலிக் என்பது யாரென்றே போலீஸாறுக்குத் தெரியவில்லை என்றாகிறது.

தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று தெரியும்?: மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி குறிப்புகளினின்று, அறியப்படுபதாவது, தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று அடையாளம் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக் பாகிஸ்தானிலிருந்து தில்லிக்கு வந்ததும் கைது செய்யப்பட்டு, காஷ்மிருக்கு எட்த்துச் செல்லப்பட்டு, அங்கு “வீட்டுக் காவலில்” வைக்கப்பட்டான்[13]. ஏப்ரலில் கைது செய்யப்பட்டான்[14]. மே மாதமும் கைது செய்யப்பட்டான்[15]. ஆகவே, அவன் காஷ்மீரிலிருந்து, கடலூருக்கு வந்தது கண்காணிக்கப்பட்டிருக்கும். அதனையும் மீறி அவன் வந்து போய் மறைந்து விட்டான் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பிறகு, அத்தகைய பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வந்து போய் கொண்டிருக்கலாம், யாருக்கும் ஒன்றும் தெரியாது எனும் நிலையில் இந்தியா உள்ளது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்[16]: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டினா. 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கினான்[17]. 1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும், என்று எச்சரித்து சில மாதங்கள் தான் ஆகின்றன[18]. இப்பொழுது, கடலூரில் இரண்டு போராட்டங்களுக்கு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்று பேசினால், செபாஸ்டியன் சீமானும் அதே வழியில் செல்வாரா?

தில்லியில் கைது செய்யாமல்ஶ்ரீநகரில் கைது ஏன்?:  இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது[19]. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[20]. இப்படி தில்லியில் கூத்து நடந்துள்ளது என்றால், கடலூரிலும் இன்னொரு கூத்தா?

ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் தமிழகக் கட்சிகள்: “காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை என்பதை, மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், “யாசின் மாலிக்கை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது’ என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்[21]. ஞானதேசிகன், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்களை, பேனர், போஸ்டர்களில் பிரசுரிப்பது போன்ற நடவடிக்கைகள், சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை, கடலூருக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தவும், முயற்சி செய்துள்ளனர். கடலூர் கூட்டத்தை தடை செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை சரியானது. இதை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. காஷ்மீர் பிரினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு உதவிகள் இருப்பதாக, பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின், இறையாண்மையை கேள்வி கேட்டு, காஷ்மீரத்தை துண்டாட துடிக்கிற, யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு கூட்டி வருவதற்கு உதவி செய்த சக்தி எது? இந்த நிகழ்ச்சிக்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை, எவை என்பதையெல்லாம், மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்”, என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக பா..க, தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது: “இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும் போராட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் காஷ்மீர் பிரினைவாதி, யாசின் மாலிக்கை கலந்து கொள்ளச் செய்தது, தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலை குனியச் செய்துள்ளது. இழக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற, 60 ஆண்டுகளாக, இலங்கை தமிழர்கள் தமக்கு ஆதரவாக தமிழகம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதரவையும் தான் எதிர்பார்த்தார்களே தவிர, இந்தியாவை துண்டாடத் துடிக்கும் எந்த ஒரு தீய சக்தியுடனும், அவர்கள் கைகோர்க்க முன் வரவில்லை என்பதை, யாசின் மாலிக்கின் தலைமை ஏற்கத் துடிக்கும் தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது, மிகவும் அபாயகரமானது என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியும் வழக்கம் போல மனு கொடுக்கிறது: கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய, காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் மற்றும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.,யிடம், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்[22]. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர், முத்து ரமேஷ்குமார் அளித்துள்ள புகார் மனு: “இம்மாதம், 18ம் தேதி, கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில், இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும், காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் பேசியுள்ளார். இந்த யாசின் மாலிக், பயங்கரவாதியான அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட போது, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஹபீஸ் சையது என்ற பயங்கரவாதியுடன், இணைந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர். இவ்வாறு பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்படும், யாசின் மாலிக், தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சக்திகளை உருவாக்க முயற்சிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளின் மௌனம் ஏன்?: பாஜப, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தெரிந்திருப்பது, போலீஸாருக்குத் தெரியவில்லை. இந்து மக்கள் கட்சிக்குத் தெரிந்துள்ள விசயங்கள் கூட திராவிட கட்சிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தெரிந்திருக்கும் அளவிற்கு, செபாஸ்டியன் சீமானைப் பற்றி இந்தியாவிற்குத் தெரியாமல் இருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கோ ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறார்கள். தமிழ் ஊடகங்களோ, இப்படி ஏனோதானோ என்று செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் உண்மையினை அறிந்து கொள்ல வேண்டும்.

யாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோ, இலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

21-05-2013


[6] Yasin Malik informed the US embassy – “Kashmiri politics is no longer about ideology, it’s all a money game.”  The US embassy says, “Omar and Farooq Abdullah, descendants of the Shaikh who first figured out Delhi’s money game, live in fabulous houses in Srinagar and Delhi, wear matching Panerai watches, serve Blue Label to the guests, and travel all over the world first class courtesy of the Indian Government. The Mirwaiz is alleged to have real estate in Dubai courtesy of Pakistan.”

[7] ஆனால், முஸ்லீம்கள் குடிக்கமாட்டார்கள் என்றெல்லாம் ஜம்பம் அடித்துக் கொள்வார்கள், பேசுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள் என்பதனையும் மக்கள் கவனிக்க வேண்டும்.

[12] தினமலர், பதிவு செய்த நாள் : மே 20,2013,00:27 IST

[17]  Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[18] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

மே20, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

இந்திய பிரஜைகள், இந்திய நாட்டு நலனுக்காக, இப்பொழுதுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்க் கொண்டு, இவ்வாறான, தேசவிரோத சக்திகள் எப்படி செயல்படுகின்றன என்பதனை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். இதில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மொழிரீதியாக எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கலாகாது. தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் இப்படிச் சொல்லியே விஷயத்தைத் திசைத் திருப்பும் போக்கிலும் உள்ளார்கள். ஏனெனில் தீவிரவாதிகள் அவற்றையும் கடந்து தான் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால், அக்காரணிகளை வைத்துக் கொண்டி அதே அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

LTTE_tourist_hub Sri Lankaசெபாஸ்டியன் சீமான் அமெரிக்க அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரங்கள்: நவம்பர் 2011ல் சீமான் உலக தமிழ் அமைப்பு [World Tamil Forum at New York] சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தபோது, நியூயார்க் விமான நிலையத்திலிருந்து திரும்ப அனுப்பட்டார்[1]. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்திற்கு சார்பாக அவரது நடவடிக்கைகள் உள்ளதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னர் அவர் அமெரிக்காவில் 10 நாட்கள் இருப்பதற்காக உரிய அனுமதி, விசா முதலியவற்றைப் பெற்றுக் கொண்டுதான் சென்றிருந்தார். ஆனால், பிறகு இம்மிக்ரேஷன் டிபார்ட்மென்ட் சோதனையில் அவரது பின்னணி அறியப்பட்டு, அவரை அனுமதித்தால் அமைதிக்குக் குந்தகம் நேர வாய்ப்புள்ளது[2] என்று தெரியவந்ததால் அவ்வாறு மறுக்கப்பட்டதாக அறிவித்தனர்[3]. உலக தமிழ் அமைப்பு என்றால் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் நலனுக்காக ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டும். பிறகு அவர்கள் எப்படி இப்படி தேசவிரோதக் கொள்கையாளர்களுக்கு இடம் கொடுக்க முற்பட்டார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான நிலை ஏற்படும் என்று அறிந்துள்ளப் பட்சத்தில், இத்தகைய நிகழ்வுகளை தாராளமாக தவித்திருக்கலாம். ஏனெனில், நாளைக்கு தமிழர் என்று யாராவது செல்லும் போது, அமெரிக்கர்கள் சந்தேகத்துடன் பார்ர்க்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

Hindu temples misused for LTTE activities - Canada - literature saleசெபாஸ்டியன் சீமான் கனடா அரசாங்கத்தினால் நாடு கடத்தப் பட்ட விவகாரங்கள்: கனடா நெடுங்காலமாகவே, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் தமிழ் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது. இலங்கை அகதிகள் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக எல்லைகள் கடந்து வந்து சேருகின்றனர். டோரோன்டோ என்ற நகரத்தில் தமிழர்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. நிச்சயமாக, எல்லா தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் இந்தியா வம்சாவளியினர் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும், இலங்கையைச் சேர்ந்தவர் மற்ற சித்தாந்திகள் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. நவம்பர் 2009ல் டோரோன்டோவில் எல்டிடிஇ ஆதரவு என்ற நிலையில் ஶ்ரீலங்காவிற்கு எதிராக செபாஸ்டியன் சீமான் பேசியதால், கனடா அரசாங்கம், அவரை நாடு கடத்தியது[4]. ஏப்ரல் 2012ல் ரமணன் மயில்வாகனம் என்ற கனடா நாட்டுப் பிரஜை, அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது[5]. அதாவது, எப்படி கனடா-அமெரிக்கா தமிழ் பேசும் மக்களால் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டு, தமிழருக்குக் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொடுக்கப்படுகிறது.

Hindu temples misused for LTTE activities - Canadaடோரோன்டோ இந்து கோயில்கள் எல்டிடிஇ  நிதிவிநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன: ஆனால் அதே டோரோன்டோவில் உள்ள இந்து கோயில்கள் எல்டிடிஇ பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன என்பது மட்டும் அல்லாது கோயில் பெயரில் பணம் வசூல் செய்து அது எல்டிடிஇ மற்றும் இதர இயக்கத்தினருக்கு அனுப்பப் பட்டு வந்தது. நிச்சயமாக இந்துக்கள் இவ்வாறு செய்திருக்க முடியாது. ஆனால், திராவிட சித்தாந்தத்தில் மூளை சலவை செய்யப்பட்டு, இந்துவிரோத சக்திகளுடன் சேர்ந்து, உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால், “இந்துக்கள்ளென்ற போர்வையில் மற்றவர்கள் இக்காரியங்களைச் செய்யலாம். இதில் செபாஸ்டியன் சீமானும் அடக்கம். இதில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அம்மாதிரியான பணப்போக்குவரத்துகள் செய்துள்ளார்கள். அதாவது இந்து கோயில்கள் கிறிஸ்தவர்களினால், தேசவிரோதச் செயல்களுக்கு உப்யோகப் படுத்தி கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதனால், அக்கோயில்கள் கனடா அரசாங்கத்தினால் தண்டம் செல்லுத்தப்பட வேண்டியதாயிற்று[6]. ரிச்மான்ட் ஹில் ஹிந்து டெம்பிள் மற்றும் ஹிந்து மிஷன் மிசிசௌகா என்ற இரண்டு கோயில்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டன[7].

Hindu temples misused for LTTE activities - Canada - Hundi collectionசெபாஸ்டியன் இந்தியாவில் தேசவிரோத செயல்களுக்காக கைது செய்யப் பட்டது: சரி, மற்ற நாடுகளில் பிரச்சினை செய்து வரும் இந்த ஆள் தமிழகத்தில் என்ன செய்கிறார் என்றால், அதே மாதியான போக்குத்தான் காணப்படுகிறது. தேசவிரோத பேச்சுகளுக்காக, இரண்டு முறை ஜூலை 2010 மற்றும் பிப்ரவரி 2009 தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்[8]. மே.18, 2010ல் “நாம் தமிழர்” என்ற இயக்கம் இவரால் உண்டாக்கப்பட்டது[9]. எல்டிடிஇன் நிதியுதவி மூலம் இந்தியாவில் இவ்வாறு குறிப்பாக தமிழ்நாட்டில், கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோருக்குக் கிடைப்பதாகவும், அதனால் தேர்தல் அல்லது நிதி ஆதாயத்திற்காக அவர்கள் அவ்வாறு பேசி வருவதாக இலங்கை அரசு குற்றஞ்ச்சாட்டுகிறது[10]. ஜெயராம் என்ற மலையாள நடிகர், சினிமாவில் ஒரு தமாஷா காட்சியில் ஒரு தமிழ் பெண்ணை இழிவு படுத்தி பேசுவதாக வந்த காட்சியினால், சென்னையில் உள்ள அவரது வீடு தாக்கப் பட்டது. அதற்காக, செபாஸ்டியன் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீடர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் செபாஸ்டியன் சீமானும் மறைந்திருந்து, பிறகு பெயில் பெற்றார்[11].

Hindu temples misused for LTTE fundingதமிழ் அமைதிக்காக உபயோகப்படுத்தப் படவேண்டும்: தமிழ் பேச்சாளியாக இருந்தால், அத்திறமை தமிழர்கள் நன்றாக இருக்க, சிறக்க, உபயோகப்படுத்த வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாக, ஆபாசமாக, அசிங்கமாக, கொச்சையாக இந்தியா, இந்தியர்கள், இந்திய மதம் முதலியவற்றிற்கு எதிராகப் பேசுவது, நடந்து கொள்வது தகாது. இதனை தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். “யாது ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லிக் கொண்டு அமைதிக்கு ஊறுவிளைவித்துப் பேசினால், செயல்பட்டால் அது நன்மையாகாது. திராவிடப் பேச்சாளிகள் தமிழர்களை பேசிப்பேசியே பின் தள்ளிவிட்டனர். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்தி பேசும் மாநிலங்களில் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தி பேசுபவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை” என்றெல்லாம் விதண்டாவாதம் பேசி, பிறகு “இந்தி பேசியே” பெரிய அரசியல்வாதிகள் ஆகி, மத்திய அமைச்சர்களாகவும் ஆகிவிட்டனர்.

Hindu temples funds diverted to LTTEசெபாஸ்டியன் சீமானுக்கு எதற்கு “ஆரிய-திராவிட” சித்தாந்தம்?: நாங்கள் “திராவிடர்கள்” அவர்கள் “ஆரியர்கள்” என்று சொல்லிக் கொண்டு, கூட்டு வைத்துக் கொண்டனர். இதெல்லாம் ஏன் எடுத்துக் காட்டப்படுகிறது என்றால், இந்த செபாஸ்டொயன் சீமானும் இந்த செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? தமிழர்களா, திராவிட சித்தாந்திகளா, கிறிஸ்தவர்களா?

© வேதபிரகாஷ்

20-05-2013


[1] Seeman, a pro-LTTE activist, was invited to attend a conference organised by the World Tamil Forum at New York. The film director had obtained all the necessary permissions and a visa from US authorities for his travel.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[3]  When Seema landed at New York, the authorities denied him permission to enter the country on the grounds that he is known for his “pro-LTTE activities”. The US authorities said if Seeman was permitted into the US, he would disrupt the peace of the land.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[5] The U.S. Department of Justice is seeking a 15-year prison sentence for a Canadian who pleaded guilty to terrorism conspiracy for his role in a plot to supply separatist rebels in Sri Lanka.

In a sentencing report filed in a Brooklyn, N.Y. court, U.S. attorney Loretta Lynch said Ramanan Mylvaganam had committed “a gravely serious offence” by attempting to procure equipment for the Tamil rebels.

http://news.nationalpost.com/2012/04/30/u-s-wants-15-years-for-toronto-man-convicted-in-tamil-tigers-terror-plot/

[7] The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE.

http://news.nationalpost.com/2012/06/04/two-toronto-hindu-temples-fined-by-cra-for-sending-money-to-suspected-tamil-tigers/

[8] Tamil Nadu Government has detained the film director and staunch supporter of LTTE, Sebastian Seeman under National Security Act (NSA). The Government of Tamil Nadu slapped NSA against Seeman, even as he was trying to secure bail after he was arrested early this week on charges of making inflammatory speech during a demonstration to condemn the attack on Tamil Nadu fishermen by the Sri Lankan Navy (July 2010). A day after the Principal Sessions Court dismissed Seeman’s bail plea (16-07-2010), the City Police Commissioner (In-charge) Sanjay Arora ordered his detention under NSA, stating that his speeches made during the agitation were against the interest of national security and disrupt harmony. After the Commissioner passed the order, Mr Bhaskar, Inspector of Police, North Beach Station, served the same to Seeman at Vellore Central Prison. Second time, Seeman was detained under the NSA by the Tirunelveli City Police in February 2009, but was released by the High Court later.

http://www.asiantribune.com/news/2010/07/18/pro-ltte-supporter-sebastian-seeman-booked-under-national-security-act

[10] In turn the LTTE is funding several Tamil Nadu politicians who are now lobbying the Central government in New Delhi. For example, Tamil Nadu politicians and film stars from Karunanidhi to Neduman and Vaiko and Seeman are continuing to support the LTTE either for electoral or for financial gain. They do not speak about 30 years of killings of Tamils by the LTTE from Duraiappa, the Mayor of Jaffna to Amirthalingam, the TULF leader or the Rajiv Gandhi assassination, but exaggerate the Tamil civilian deaths in the final phase and weep over Prabhakaran’s loss.

http://www.dailynews.lk/2013/02/20/fea03.asp

[11] In 2010, Chennai police registered a case against Seeman in connection with the attack on the house of actor Jayaram accusing him of instigating the attack on the actor, who allegedly made a comical derogatory remark on a Tamil woman in an interview. Eight persons were held soon after the attack and a special team investigating the case arrested four more later, including Seeman’s brother James Peter. Mr. Jayaram’s house was damaged after a group of youths threw stones and set on fire to the furniture at the main entrance. Seeman was initially absconding but later got anticipatory bail.

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

ஏப்ரல்11, 2013

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

Sarah Groves - passport- PTI

இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரம்[1], இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரம்[2], இந்தியா ஐரோப்பிய பெண்களுக்கு உகந்தது அல்ல[3] என்றெல்லாம் ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம்[4] செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியநாட்டவரை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். வெள்ளையர்களுக்கு தமது நிறப்பற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்துள்ளனர். காதல் வயப்பட்டு சேந்து வாழும் பெண் கிறிஸ்தவர், ஆண் முஸ்லீம், அதிலும், காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லீம். இதை எப்படி மேனாட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை யாரும் விளக்கவில்லை. மேனாட்டு ஊடகங்கள், மற்ற நேரங்களில் அதிகமாக அலசும் போது, இவ்விஷயத்தில் மறைப்பது சந்தேகமாக இருக்கிறது.

Victo-Groves-the-father-of-Sarah-Groves-who-was-stabbed-to-death-in-India-gives-an-emotional-press-conference-at-Guernsey

தந்தை விக்டர் “காஷ்மீருக்குப் போகாதே” என்று உறுதியாகச் சொல்லித் தடுத்தது: சாரா கிரௌஸின் தந்தை, தந்தை விக்டர், “என் மகளை காஷ்மீருக்குப் போகாதே என்று உறுதியாகச் சொல்லித் தடுத்துப் பார்த்தேன். ஆனால், அவள் கேட்கவில்லை” என்கிறார். அதாவது, காஷ்மீருக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அவள் பிழைத்திருப்பாள். சாராவின் காதலனும், “நான் அவளை காஷ்மீரத்திற்குக் கூப்பிட்டதால் தான் கொலையுண்டாள்”, என்றான். ஆனால், இருவர் சொல்வதிலிருந்தும், உண்மை சிறிது மாறுபடுகிறது, தந்தை அவள் ஒரு முஸ்லீமுடன் வாழ்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது. சையிது அஹ்மத் சோடாவோ, கோவாவிலியே இருந்திருந்தால், அவள் கொலயுண்டிருக்க மாட்டாள் என்கிறான். அப்படியென்றால், சாரா ஏன் காஷ்மீரத்திற்கு வலுக்கட்டாயமாக வரவேண்டும் அல்லது வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும்?

Richard-de-Wit-wife-Wit had a history of mental problems -but had never been violent or threatening

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[5]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[6]. அவள் தொடர்ந்து கூறும் விவரங்களில் வேறு விஷயமும் வெளிப்படுகிறது.

Sarah-Rehman-Richard-2013

என் கணவர் அப்பாவி  “அவர் துரத்தப் பட்டதால் இந்தியாவிற்கு சென்றுள்ளார்”: நெதர்லாந்தின் கடற்கரையைச் சேர்ந்த பிரதேசமாகும். டச்சுப் போலீஸார் அவரைத் துரத்தி வருகின்றனர். ஹாலந்தை விட்டு அதனால் தான் அவர் வெளியே வந்தார். ஹாலந்து, அந்த மனோதத்துவ நிபுணரை வைத்துக் கொண்டு வேவு பார்க்கின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என்று பயந்துதான், கடந்த ஆறு மாதங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில், பல கென்யா, டுனிஸியா நாடுகளுக்குச் சென்று பிறகு, கிருஸ்துமஸ் போது சுவிட்சர்லாந்தில் தங்கி விட்டு. இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளார்[7]. 20 வருடங்களுக்கு முன்னர், ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதனால், அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டு பல ஊர்களுக்குச் சென்று பொழுதைப் போக்கி வருகிறார். மனப்பிரச்சினகளினால், எந்த வேலையையும் செய்வதில்லை[8].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”. அதாவது, காஷ்மீருக்குச் செல்வதை விட, ஶ்ரீலங்காவிற்குச் செல், தரும காரியங்கள் செய் என்று சொன்ன அர்த்தம் என்னவென்று தெரியவில்லை

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட (பிரௌன்) பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [9].

Sarah Groves murderer - richard de Wit - Facebook

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[10]. அதிக அளவில் வலதுசாரி-சித்தாந்தம் கொண்ட குடியரசுக் கட்சிக்காரனாக சந்தேகிக்கப்பட்டதால், டச்சு பிலனாய்வுத் துறை, இவன் தம்து நாட்டு அரசிக்கு எதிராக இருக்கக் கூடும் என்று வேவு பார்த்து வந்தனர்[11]. இப்படி பல செய்திகளை வெவ்வேறு நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

கொலைக்குக் காரணம் இனவெறியா, மதமா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது[12]. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் முன்னமே குறிப்பிட்டது போல, சாராவின் பெற்றோர், தம் மகள் ஒரு முஸ்லீமை மணந்து கொள்வதை விரும்பியிருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், சாரா கஆஷ்மீரத்திற்கு வந்தவுடன், சயீதின் தாயார், அவளுக்கு இஸ்லாம் பற்றி போதித்திருப்பது தெரிகிறது. இல்லையென்றால், வெள்ளை மசூதிக்குச் செல்வது, தொழுவது முதலியவை நடந்திருக்காது. நவநாகரிகமான சாரா அந்த அளவிற்கு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரானால், என்பதும் நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

11-04-2013

 

 


[5] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] He believed the Dutch police and authorities were “out to get him” and that his government-appointed psychologist had colluded with them, she told The Daily Telegraph in Rotterdam. In fear that the police would take him into custody, and embarked on a journey across African and Asia to avoid “arrest”, she said.Over the last six months, he travelled first to Kenya and Tunisia, stopping off in Switzerland at Christmas, and arrived earlier this year in Delhi, India.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[8] Describing his decision to leave Holland and go travelling, funded by compensation payments from the accident, she said: “This has been a problem in his life. He is always running away from things. He feels stress and he runs. He is frightened people want to arrest him.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[9] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[10] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[11] He also claimed that as a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election.Mr de Wit said he had been visited by intelligence agents who believed he was a far-Right republican who posed a threat to Queen Beatrix of the Netherlands.

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர் – நம்ம ஊர் செய்தி!

ஏப்ரல்7, 2013

“இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர் – நம்ம ஊர் செய்தி!

Sarah Groves murder - location map

இதை முந்தைய பதிவுகளுடன்[1] சேர்த்துப் படிக்கவும்[2].

Houseboat owner Abdul Rahim Shoda speaks on his mobile phone near the house boat where the body was found

சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள்: காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பிரபல தால் ஏரி உள்ளது. சுற்றுலா இடமான இங்கு தண்ணீரில் மிதக்கும் படகு வீடுகள் ஏராளமாக உண்டு. இதில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள். சாரா எலிசபெத் கிரௌஸ் [Sarah Elizabeth Groves, 24] என்ற இங்கிலாந்து பெண் அங்கு ஒருமாதமாகத் தங்கி வருகிறார். இவள் பள்ளிப்படிப்பை குயர்ன்சே Guernsey என்ற ஊரில் உள்ள பிளாங்செலான்டி கல்லூரியில்  Blanchelande College படித்து, பழைய அரசாங்க ஹோட்டலில்  Old Government House Hotel வேலை பார்த்து வந்தாள்[3]. உடல் ஆரோக்யம் பற்றிய ஆசிரியர். சனிக்கிழமை மதியம் சுமார் 2.30 அளவில் ஏதோ சத்தம் கேட்டதால், தூங்கிக் கொண்டிருந்த படகுவீட்டின் உரிமையாளர் ஜி.எம். சோடா Abdul Rahim Shoda எழுந்து, தனது மகன் இர்பானை அனுப்பி என்னவென்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்ற இர்பான், சாரா கிரௌஸின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். தந்தைக்கு அறிவித்தான். சோடா போலீஸுக்குப் புகார் கொடுத்தார். சமீர் சோடா [Samir Shoda / Syed Ahmad[4]] என்ற படகுவீட்டின் உரிமையாளரின் மகன் போலீஸாருக்கு உதவி வருகிறான்.

Sarah Groves murder - body taken out

நம்ம ஊர் செய்திகள் – அதாவது தமிழில் கிடைக்கும் விவரங்கள்: சாரா எலிச்பெத் கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்[5]. ஒரு படகு வீட்டின் ஒரு அறையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் ஆலந்து நாட்டை சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர். நேற்று காலை எலிசபெத் தங்கி இருந்த அறைக்குள், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டும் உடைகள் கிழிந்தும் காணப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

Sarah Groves murder - floating hotel entrance

மாயமான கொலையாளி: அதே நேரம் இன்னொரு அறையில் தங்கி இருந்த ஆலந்து நாட்டுக்காரரை காணவில்லை. இது குறித்து படகுவீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு ஆலந்தை சேர்ந்த டேவிட் ரிச்சர்டை தேடும்பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தில் அவர் பிடிபட்டார். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக காசிகந்த் பள்ளத்தாக்கு பகுதிக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை காஷ்மீர் டி.ஜி.பி.அப்துல்கனி மிர் நிருபர்களிடம் தெரிவித்தார். இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு, ஆரம்ப கட்ட விசாரணை நடைபெறுகிறது[6]. அவர் கொல்லபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அறை கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் மற்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.

Sarah Groves murderer - richard de Wit - Facebook

டச்சுக்காரன் ஏன் கொலை செய்தான்?: ரிச்சர்ட் டி விட் (Richard de Wit, 43) என்ற டச்சுநாட்டுக் காரர், தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார். ஹெராயினை சாப்பிட்டு வந்ததால், மனநிலை பாதிக்கப்பட்டதால், வெறியுடன் அவளது அறைக்குள் சென்று 40ற்கும் மேலாக கத்தியால் குத்தியதாக கூறினான்[7]. இன்னொரு பத்திரிக்கை 25 தடஐ குத்தினான் என்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா அவன் பெயரை ரிச்சர் காலிபர் டென்னிஸ் (Richard Caliper Dennis) என்று குறிப்பிடுகிறது[8]. இப்படி அவன் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாலும், அது கோர்ட்டில் செல்லாது என்று இங்கிலாந்து நாளிதழ்கள் கூறுகின்றன[9]. அதாவது இந்தியர்களை விட, வெளிநாட்டுக் காரர்கள், நமது சட்டங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

07-04-2013


[3] Ms Groves attended secondary school at Guernsey’s Blanchelande College and worked at the Old Government House Hotel. http://www.bbc.co.uk/news/uk-22049453

[9] Under Indian law a confession to a police officer is not admissible in a court of law. http://news.sky.com/story/1074939/india-houseboat-murder-dutch-man-confesses

அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம் (2)

மே4, 2012

அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம் (2)

கொல்லப்பட்ட இருவரின் கதி என்ன? அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்ட போது இரண்டு பாதுகாப்பு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்[1]. அதில் ஒருவர் முஸ்லீம் மற்றொருவர் காட்டுவாசி[2]. ஆனால் அவர்களைப் பற்றி அலெக்ஸ் பால் பாண்டியனோ, அவரது மனைவியோ, மாமனாரோ, தந்தையாரோ அல்லது ஊடகங்களோ கவலைப் படவில்லை. அவர்களது மனைவி-மக்களைப் பற்றி பேச்சு-மூச்சு இல்லை. ஆனால், அலெக்ஸ் விடிவிக்கப்பட்டவுடன், பட்டாசுகள் வெடிப்பு, சரவெடிகள் வெடிப்பு, இனிப்பு விநியோகம், ……………என ஒரே கொண்டாட்டம்! இதென்ன, ஏற்புடையதா? ஆக இறந்தவர்களின் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியிருக்க இங்கு கொண்டாட்டம்!

மற்ற இடைத் தரகர்கள் செய்யமுடியாததை தான் செய்வேன் என்கிறார் ஜெ.ஜோயல்: இவரை இப்பொழுது காணவில்லை – தனது உயிரை பணயம் வைத்தாவது கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் மேனனை நிச்சயமாக மீட்டு வருவேன் என சட்டீஸ்கர் சென்றதாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதல்வர் ஜெ. ஜோயல் தெரிவித்தார்[3]. சட்டீஸ்கரில் முதல்வர் ராமன்சிங்கை சந்தித்து விட்டு நமது நெல்லை நிருபருக்கு தொலை பேசி மூலம் சிறப்பு பேட்டியை அளித்தார். இந்த பேட்டியில் இவ்வாறு கூறினார்[4]. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், மாவோ தீவிரவாதிகளால் பாஸ்டர் வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்டு வர மீட்புகுழுவினராக சென்ற பேராசிரியர் ஹர்கோபால், ஓய்வுபெற்ற அதிகாரி சர்மா ஆகியோர் தற்போது திரும்பிவந்துவிட்டனர். அவர்கள் அலெக்ஸ் பால் மேனனை சந்திக்கவில்லை……இப்படி தடபுடலாக செய்திகள், பேட்டிகள்………………..


என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”: இவரை மீட்க தான் தயாராக இருப்பதாக தானாக முன்வந்த நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முதல்வர் ஜோயலுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அங்கு சென்று முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். தற்போது சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜோயல் நமது நிருபரிடம் கூறியதாவது[5]: “சென்னையில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்தேன். இங்கு முதல்வர் ராமன்சிங்கை நேரில் சந்தித்தேன். கலெக்டர் மீட்பு நடவடிக்கை குழுவினர் என்னிடம் பேசினார்கள். ராய்ப்பூரில் இருந்து 300 கி.மீ.,தொலைவில் பாஸ்டர் வனப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்துசெல்கிறார்கள். அங்கு காத்திருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கி.மீ.,தூரம் அழைத்துசெல்வார்களாம். அதன்பின்னர் நடந்துசெல்லவேண்டும். எப்படியும் கலெக்டரை மீட்டுவருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முயற்சியில் விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நான் சொந்தமாகவே மேற்கொள்கிறேன். நான் இங்கு வந்ததும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்னிடம் நேரில் பேசினார்கள். என்னைப்பற்றி விபரங்களை தெரிவித்தேன். அதனை அங்கு கூறியிருப்பார்கள் என நம்புகிறேன். நான் கலெக்டரை மீட்கபோகும் விஷயத்தை அவரது தந்தை வரதாசிடமும் போனில் தெரிவித்தேன். அவரும் சந்தோஷமடைந்தார். மாவோயிஸ்ட்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம், மற்றும் தெலுங்கில் பேசலாம். என்னை பலரும் கண்காணிப்பது நன்றாக தெரிகிறது. என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”, என்றார் நம்பிக்கையோடு. ஆனால், இப்பொழுது இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள விலை: மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மாவோயிஸ்ட்டுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார்[6]. அவர் ஏடோ பெரிய தியாகம் செய்துவிட்டதைப் போல ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் “ரன்னிங் கமன்டரி’ போல விவரித்தன. ஆனால், இரு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் விடுவிக்கப் படவேண்டும், மற்ற ஐந்து பேரும் பிறகு விடுவிக்க வேண்டும் போன்ற விஷயங்களைப் பற்றி அவை மூச்சுக்கூட விடவில்லை[7]. ஏற்கெனெவே 17 பேர் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்[8]. மாவோயிஸ்ட்டுகளின் இடைதரகர்கள் பேராசிரியர் ஜி. ஹர்கோபால் மற்றும் பி.டி.சர்மா அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உரிமையுடன் கேட்டனர். துரித நீதிமன்றம் மூலம் வழக்குகள் மறுபரீசீலினை வழியில் விசாரிக்கப் பட்டு சிறையில் இருக்கும் 400 மாவோயிஸ்ட்டுகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அதட்டிக் கேட்டுள்ளனர். “நிர்மலா பக் கமெட்டி” (Nirmala Buch committee) எங்களுக்காக அமைக்கப்பட வேண்டும்[9]. வழக்குத்தன்மை எப்படியாக இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப் படவேண்டும். ஏனெனில் அவர்கள் காட்டுவாசிகள் என்றும் நியாயப்படுத்திப் பேசினர்[10].

அந்த கொல்லப்பட்டவர்களின் கிராமங்களில் நிலை என்ன? கலெக்டரான நெல்லையை சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் கலெக்டரரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வள்ளியூர் சமாதானபுரம் மற்றும் பாளை தியாகராஜநகர் ராம்நகரில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். வள்ளியூர் சமாதானபுரம் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. அது சரி, அந்த கொல்லப்பட்டவர்களின் கிராமங்களில் நிலை என்ன, யாரும் ஒன்றும் சொல்லவில்லையே?

இங்கு இனிப்பு, பட்டாசு, கொண்டாட்டம் சரி, ஆனால் அங்கு நடப்பது என்ன? கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் காணப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்டு 12 நாட்கள் ஆன நிலையில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் 03-05-2012 அன்று விடுவிக்கப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் சொந்த ஊரான வள்ளியூர் சமாதானபுரத்தில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல் பாளை பகுதியில் உள்ள அவரது பள்ளி நண்பர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கலெக்டரின் விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதவிர கலெக்டரின் விடுதலையை கொண்டாடும் விதமாக நெல்லை சந்திப்பு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்[11].

காஷ்மீரில் நடந்தது மற்ற இடங்களில் நடப்பதை அனுமதிக்கலாமா? காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, வீட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர்[12]. அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. அவளை மீட்க இஸ்லாமிய தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டனர். இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். அதாவது, பதிலுக்கு ஜெயிலில் இருக்கும் நக்சலைட்டுகளை விடுவித்து மீட்டனர். ஆனால், எம்.எல்.ஏ வெளிவந்த பிறகு, செய்தி அடங்கி விட்டது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடித்து வைத்து விடுவித்துள்ளனர். ஆகையால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் பட்டன[13]. மத்தியஸ்தம் பேசுகின்றவர்கள் தாராளமாகச் சென்று வந்தனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[14]. இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்றும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வேலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை? ஆக இதுவும் ருபையா சையிது நாடகம் போல[15] என்றால் என்னாவது?

 

மனித உரிமைகள் என்று வரும்போது ஏன் அவை வேறுபடுகின்றன? காஷ்மீரில் லட்சக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்; அங்கிருந்து விரட்டப் பட்டு, தலைநகர் தில்லியிலேயே அக்திகளாக முகாம்களில் வாழ்கின்றார்; அவர்களிம் மனித உரிமைகள் பற்றி யாரும் பேசுவதில்லை. அருந்ததீ ராய் போன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு, ஜிஹாதிகளுக்கு பரிந்து பேச் வருகிறார். அதே போல செக்யூலரிஸ போதையில் ஊரியுள்ள ராமச்சந்திர குஹா, இ.ஏ.எஸ். சர்மா, நந்தினி சுந்தர் போன்றவர்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பரிந்து பேசுகின்றனர்[16]. ஆனால், கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்கள், போலீஸார் முதலியோரது மனித உரிமைகளைப் பற்றி அவர்கள் பேசாதது விசித்திரமே. பதிலுக்கு இப்படி தொடர்ந்து தீவிரவாதிகளை விடுவித்துக் கொண்டேயிருந்தால் சட்டத்தின் நிலை என்னாவது? நீதிமன்றங்களின் தேவை இருக்குமா? பிறகு போலீஸார் கஷ்டப்பட்டு, பல உயிர்களைக் கொடுத்து, கோடிகளை செலவழித்து பிடித்ததற்கு என்ன அர்த்தம்?

வேதபிரகாஷ்

04-05-2012


[10] Two Maoist mediators – Prof G Hargopal and B D Sharma in the Sukma Collector abduction episode demanded that cases against about 400 tribals languishing in jails in Chhattisgarh be taken up on a fast-track mode for review and maximum of them released. “We want the Nirmala Buch committee, set up to review the cases, should be take up on a fast track mode the cases of tribals in the entire region and release as many as possible– where the cases are minor and even where the cases are stronger because they are tribals,” The mediators……….told reporters

[13] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[14] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily

[16] Ramachandra Guha, E.A.S. Sarma & Nandini Sundar, Co-petitioners to the Supreme Court in WP 250 of 2007; http://www.thehindu.com/opinion/letters/article3346314.ece