Posts Tagged ‘இலங்கை’

சரித்திர மற்றும் கற்பனையில் புண்ணிய பூகோளங்கள், சமய கலாச்சாரங்கள் மற்றும் பிரபலமான பழக்க – வழக்கங்கள் – திருவண்ணாமலையில் நடந்த மாநாடு (1)

ஜூலை8, 2014

சரித்திர மற்றும் கற்பனையில் புண்ணிய பூகோளங்கள், சமய கலாச்சாரங்கள் மற்றும் பிரபலமான பழக்க-வழக்கங்கள் – திருவண்ணாமலையில் நடந்த மாநாடு (1)

 

முதல் நாள் துவக்க விழா (26-06-2014):

முதல் நாள் துவக்க விழா (26-06-2014):

மாநாட்டின் தலைப்பு, அரசு நிதியுதவி: “வரலாற்றாய்வு நோக்கில் ஆன்மீகத் தலங்கள் மற்றும் மரபுசார் சமய பண்பாட்டு களங்கள்” [“Sacred geographies, Religious cultures and Popular practices in History and Imagination [ICSGRCPPHI – 2014]”] என்ற ரீதியில் ஒரு அனைத்துலக மாநாடு ஜூன் 26 முதல் 28 வரை பல்கலை மானிய குழு  (UGC), இந்திய சரித்திர ஆராய்ச்சிக் கழகம் (ICHR) மற்றும் இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) முதலியவற்றின் நிதியுதவியுடன், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்து முடிந்துள்ளது.  இத்தலைப்பைப் “சரித்திர மற்றும் கற்பனையில் புண்ணிய பூகோளங்கள்,  சமய கலாச்சாரங்கள் மற்றும் பிரபலமான பழக்க-வழக்கங்கள்” என்றும் தமிழில் குறிப்பிட்டால்,  தமிழ் தெரிந்திருந்தவர்களுக்கு எளிதில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  பார்வையாளராக கலந்து கொண்ட அதில் எனக்கு பற்பல வியப்புகள் ஏற்பட்டன.

 

 துவக்க விழா

துவக்க விழா

                                                                                                                                                                                                                                                                           மாநாடு நடந்த இடம் – பாவேந்தர் அரங்கம், அரசு கல்லூரி, திருவண்ணாமலை: உள்ளே நுழையும் போதே,  சிலர் நோட்டீஸை சிலருக்கு மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வாங்கிப் பார்த்ததில்,  ஶ்ரீலங்கைப் பிரச்சினைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு,  அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தோரணையில் பதிவு செய்திருந்தார்கள்.  அரங்கத்திற்கான வழி கேட்டு அமைதியாக உள்ளே சென்று கொண்டிருந்த போது, சிலர் வலது பக்கத்திலுள்ள மாடி படிகட்டுகளிலும்,  சிலர் இடது பக்கத்திலும் சென்று கொண்டிருந்னர். சிலர் திடீரென்று வலது வேகமாக ஓடி மாடி படிகட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.  சந்தேகம் எழ, மாநாடு மேலேயே, கீழேயா என்ற கேட்டபோது, “இல்லை,  நீங்கள் இப்படி வலது பக்கமாக செல்லுங்கள் எதிரில்தான் அரங்கம் உள்ளது”, என்றார்கள்.  மாடியிலிருந்து யாரோ கத்திக் கொண்டிருக்கும் குரல்கள் கேட்டது. யாரோ இருவருக்குள் சண்டை நடப்பதுபோன்றிருந்தது. நான் நேராக “பாவேந்தர் அரங்க”த்தில் நுழைந்தேன் அனைத்துலக மாநாடு என்பதால் அரங்கத்தில் உட்கார்ந்து கொண்டு “வெளிநாட்டவர்கள் யார் வந்திருக்கிறார்கள் என்று ஆவலுடன் சுற்றிலும் பார்த்தேன். ஆமாம், சிலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சிலருடன் பேசி விசாரித்துப் பார்த்தேன். அப்பொழுது தான் அவர்களில் பெரும்பாலானவர்கள் ரமணாஷ்ரமத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது. ஆக, இனி உண்மையிலேயே வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவர்கள் யார் என்று பார்க்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

 Tamil daily news cutting


Tamil daily news cutting

முதல் நாள் துவக்க விழா (26-06-2014): ஜூன் 26, 2014 முதல் நாள் வழக்கம் போல,  தொடக்க விழாவில் மேடையில் அமர்ந்திருந்தவர்கள், ஒருவரையொருவர் பரஸ்பரமாகப் புகழ்ந்து கொண்டு,  சால்வைகளைப் போர்த்திக் கொண்டு தங்களது கடந்த கால அந்நியோன்னியங்களை வெளிப்படுத்திக் கொண்டு,  பேசித் தீர்த்தனர். சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் தலைமை தாங்க,  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எம்.சுப்பிரமணியன் வரவேற்க,  சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.தாண்டவன்[1] சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைக்க[2], வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகதுணை வேந்தர் பி.குணசேகரன்,  கனடா மனிடோபா பல்கலைக் கழக வரலாற்று துறை பேராசிரியர் வி.ரவி வைத்தீஸ், சென்னை பச்சையப்பா கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர்கள் பி.கந்தசாமி[3], பி.ஆர். , அரியலூர்அரசு கலைக் கல்லூரி முதல்வர் எல்.தியாகராஜன்,  பேராசிரியர்கள் என்.முத்துமோகன், வி.பெருவழுதி, எஸ்.கீதாகண்ணம்மாள், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜான்ஸ் கிரீம்ஸ்[4], வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக சின்டிகேட் உறுப்பினர் முனவராஜன்[5],  திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரம தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் பலர் பேசினர். ரவி வைத்தீஸ்   மாநாட்டின் தலைப்பு மற்றும் குறிக்கோள் பற்றி கூறினார் என்று தினமணி பதிவு செய்தது.  கருத்தரங்கின் விழா மலரை ஆர்.தாண்டவன் வெளியிட திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந்தர் குணசேகரன் பெற்றுக் கொண்டார்[6]. ஆனால்,  இது மாநாட்டின் ஆய்வு கட்டுரை வாசிப்பவர்கள் மற்றும்  பதிவு செய்த பேராளர்களுக்குக் கொடுக்கப் படவில்லை.  விழாவை உதவி பேராசிரியர் ஆர். ஸ்தனிஸ்லாஸ் தொகுத்து வழங்க முடிவில் பேராசிரியர் ஆர். குணசேகரன் நன்றி கூறினார்[7], தினமணி முடித்துள்ளது.

 

DISEPLINARY was changed to DISCIPLINARY

DISEPLINARY was changed to DISCIPLINARY

மாநாட்டின் தலைப் பற்றிய சர்ச்சை, விளக்கம், முடிவு ஏற்பட்ட விதம்: மேலேயே குறிப்பிட்ட படி, “Sacred geographies, Religious cultures and Popular practices in History and Imagination [ICSGRCPPHI – 2014] என்பதை “வரலாற்றய்வு நோக்கில் ஆன்மீகத் தலங்கள் மற்றும் மரபுசார் சமய பண்பாட்டு களங்கள்”  என்று மொழி பெயர்த்துள்ளதில் மாநாட்டு அமைப்பாளர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. பி.குணசேகரன், பி. பெருவழுதி, ஜான்ஸ் கிரீம்ஸ் மற்றும் என். முத்துமோகன் மட்டும் தான் கருத்தரங்க தலைப்புப் பற்றி பேசினர். பி. பெருவழுதி மாநாட்டின் தலைப்பை கலந்தாலோசித்து,  வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து தீர்மானித்ததை விளக்கிச் சொன்னார். ஜான்ஸ் கிரீம்ஸ் “புனிதவெளி” பற்றிபுனிதமான, தெய்வீகமான, ஆன்மீகமான வெளி / பூகோள இடம் என்பது அதுவே ஏற்படுத்திக் கொள்கிறது,  அது மனிதனை ஈர்க்கிறது என்று சுருக்கமாக விளக்கினார். குறிப்பாக முத்துமோகன் தமிழில், எவ்வாறு இந்திய வரலாற்று வரைவியல் முறை அமைந்துள்ளது,  அதிலும் உண்மைகள் இருக்கின்றன, ஆனால், அந்நியர்களால் அது ஏற்றுக் கொள்ளப் படாமல் இருக்கின்றது, என்று விவரித்தார். “புண்ணிய பூகோளங்கள், சமய கலாச்சாரங்கள் மற்றும் பிரபலமான பழக்க-வழக்கங்கள்” பற்றி அறிய வேண்டுமானால், ஸ்தலப் புராணங்களைப் படித்து,  அவற்றிலுள்ள உண்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும்,  மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. இவ்விசயத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கும், அந்நியர்கள் /  வெளி நாட்டவர்களுக்கும் மிகுந்த அளவில் கருத்து வேறுபாடுள்ளதால், போராட்டமே நடந்து வருகிறது. ஆகவே,  இந்தியர்கள் தொடர்ந்து தமது விசயங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது,  என்றெல்லாம் அவர் விளக்கினார். இவ்வாறு காலை 9.30 முதல் 11.30 வரை நடந்து முடிக்க வேண்டிய துவக்க விழா மதியம் 1.40 வரை நடந்தது.

 

Banner put up outside

Banner put up outside

வேதபிரகாஷ்

07-07-2014

[1] சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் நியமிக்கப் பட்டுள்ளார். இவர், பல்கலையின் 43வது துணைவேந்தர் ஆவார். முந்தைய துணைவேந்தர் திருவாசகம், அக்., 12ம்தேதி ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு  டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக, முன்னாள் துணைவேந்தர், ஆதிசேஷன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக இயக்குனர் பாலசுப்பிரமணியன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் குழுஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என, 80க்கும் மேற்பட்டோர், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இவர்களிலிருந்து,  தகுதியான மூவர் பெயரை, கவர்னருக்கு தேர்வுகுழு பரிந்துரைந்தது. இம்மூவரில்,  புதிய துணைவேந்தராக தாண்டவனை, கவர்னர் நியமித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம்,  பனப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாண்டவன், 63;  விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில், பி.யூ.சி., மற்றும் வரலாற்றுத்துறையில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றவர். “எம்.ஜி.ராமச்சந்திரனும், தமிழக அரசும்’ என்ற தலைப்பிலும், “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பார்வை’  என்ற தலைப்பிலும் டாக்டர் பட்டங்கள் பெற்றவர்.  சென்னை பச்யைப்பன் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியராக, 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். மாணவர் பருவத்தில் இருந்தே அ.தி.மு.க.,  ஆதரவளராக இருந்தவர். சென்னை பல்கலையின், 125வது ஆண்டு விழா, 1983ல் கொண்டாடப் பட்டது. அப்போது, அ.தி.மு.க., நிதியிலிருந்து, 33 லட்ச ரூபாய் வழங்கி, அண்ணா பொது வாழ்வியல் மையத்தை,  சென்னை பல்கலையில் எம்.ஜி.ஆர்., துவங்கினார்.  திராவிட இயக்கங்களின் அரசியல் கொள்கைகளை ஆய்வு செய்வதற்காக இம்மையம் துவங்கப்பட்டது. 1990ம் ஆண்டு முதல்,  அண்ணா பொது வாழ்வியல் மையத்தின் துறைதலைவராக தாண்டவன் நியமிக்கப்பட்டார். பதவி ஓய்வு பெறும் வரை, துறை தலைவராக செயல்பட்டார்.  சென்னை பல்கலையில் மூன்று முறை சிண்டிகேட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.  பல்கலையின் பல்வேறு குழுக்களிலும் உறுப்பினராக இருந்துள்ளார். தியாகராஜர், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை  தலைவராகவும் தாண்டவன் பொறுப்பு   வகித்துள்ளார். இவரின் சகோதரர் வேடியப்பன், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாகவும், மாவட்ட செயலராகவும் இருந்தவர். http://www.dinamalar.com/news_detail.asp?id=622773

[2]தினகரன், திருவண்ணாமலை கல்லூரியில் வரலாற்றுயர்வு சர்வதேச கருத்தரங்கு பதிவுசெய்தநேரம்:2014-06-27 11:59:06

[3]இவர் வரவில்லை, வந்ததாக தினகரன் வெளியிட்டுள்ளது.

[4]இவர் பெயர் ஜான் கிரைம்ஸ், ஓய்வு பெற்ற மிச்சிகன் பல்கலைக் கழக பேராசிரியர்.  ஶ்ரீரமணரின் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்.  பாலமீரா என்கின்ற இந்திய வம்சாவளி பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டவர். ஈஸா என்ற மகன், அமெரிக்காவில் நிர்வாகத் துறை வல்லுனராக உள்ளார்.

[5]எச். முனவர்ஜான்என்றஇவரதுபெயர்பலவிதமாகஅச்சடிக்கப்பட்டிருந்தது.

[6]http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=336523&cat=504

[7]http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2014/06/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article2302173.ece

Advertisements

பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்கத் திட்டம்!

ஓகஸ்ட்22, 2013

பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்கத்  திட்டம்!

இலங்கை, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு

இலங்கை, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு

தென்னிந்தியா மென்மையான இலக்காக இருக்கிறாதா?: பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர்[1].  கடந்த 2008ம் ஆண்டு, நவம்பரில் பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக – குஜராத்தின் வழியாக – மும்பைக்குள் ஊடுருவி இப்படிதான் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. ஆகவே, தமிழகத்துக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[2]. தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் வரவேண்டும் என்றால், அதற்காக உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்[3]. முன்பு டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற ஜிலானி மூணாறில் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கிச் சென்றதாக உள்ளது[4]. சென்னை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர் கலவரம், ஹைதராபாத், பெங்களூரு வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் தென்னிந்தியா மென்மையான இலக்காக இருக்கிறாதா என்று பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதாவது, தென்னிந்தியாவில் தீவிரவாத கொடூரங்கள் நிகழாமல் இல்லை.

இலங்கை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் வரவேற்பு

இலங்கை, பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் வரவேற்பு

தமீம் அன்சாரி வழக்கும், குழப்பங்களும்: மதுரையில் இருக்கும் சிலர், இந்திய ராணுவ விவரங்களை சேகரித்து தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது. தமீம் அன்சாரி என்பவன் ஐ.எசஸ்.ஐ.க்கு விவரங்களை அனுப்பினான் என்று கடந்த செப்டம்பர் 2012ல் கைது செய்யப்பட்டான்[5].

தமீம் அன்சாரி தான் பலிகடாவாக்கப் படுவதாக கூறினான்

தமீம் அன்சாரி தான் பலிகடாவாக்கப் படுவதாக கூறினான்

இதில் என்ன வேடிக்கை என்றால், அவன் எஸ்.எப்.ஐ என்ற கம்யூனிஸ்ட் இளைஞர் இயகத்தின் தலைவராக இருந்துள்ளான். அதாவது, கம்யூனிஸ்ட் போர்வையில் முஸ்லிம்கள் வேலைசெய்கிறார்கள் என்றாகிறது. எனவே, மீனவர்கள் போல வேலைசெய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஹாஜி மற்றும் ஷாஜி என்ற இலங்கை பிரஜைகள் மூலம் தொடர்புகள் ஏற்பட்டன, ஏனெனில், பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை செய்யும் அவர்களை ஒரு கொழும்பு ஹோட்டலில் சந்தித்துள்ளான்.

தமீம் அன்சாரி வழக்கு , ஊடக ரோமாஞ்சகமா, உளவுத் துறையின் மெத்தனமா

தமீம் அன்சாரி வழக்கு , ஊடக ரோமாஞ்சகமா, உளவுத் துறையின் மெத்தனமா

இதனால், “Q” பிரிவு போலீஸார், கொழும்பு சென்று விசாரிப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன[6]. தேசிய புலானாய்வு ஏஜென்சி  இவனைப்பற்றிய விவரங்களைக் கேட்டது[7]. பிறகு வழக்கையும் எடுத்துக் கொண்டது[8]. டிசம்பரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது[9]. இந்த வருடம் மே.2013ல், சென்னை உயர்நீதி மன்றம் இவனது கைதை ரத்து செய்தது. அப்பொழுது, தன்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றாஞ்சாட்டினான்[10].

என்.ஐ.ஏ வழக்கு தள்ளுபடி என்றால் யோசிக்க வேண்டும்

என்.ஐ.ஏ வழக்கு தள்ளுபடி என்றால் யோசிக்க வேண்டும்

போலீஸ் அதிகாரியை மிரட்டியதற்காக, ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது[11]. மனித உரிமைக்காரர்கள் எப்படி வாதங்கள் செய்தாலும், சந்தேகிக்கும் முறையில், நாட்டுநலன்களை மீறிய காரியங்களில் ஏன் ஈடுபடவேண்டும், அவற்றை ஏன் விடுக்கக் கூடாது என்பது பற்ரியெல்லாம் விவாதிப்பதில்லை.

இலங்கை-பாகிஸ்தான் வியாபாரங்களா, ஒப்பந்தங்களா

இலங்கை-பாகிஸ்தான் வியாபாரங்களா, ஒப்பந்தங்களா

இலங்கை “இலங்கையில், எந்த பாகிஸ்தானிய தீவிரவாதியும் இல்லை” என்று மறுத்தல்: “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழின் செய்தியை வைத்துக் கொண்டு, மற்ற ஊடகங்கள் இதனை பெரிதாக்கி அலசி வருகின்றன. இதற்குள், இலங்கையின் ராணுவ அதிகாரி ஜகத் ஜெயசூரியா, “இலங்கையில், எந்த பாகிஸ்தானிய தீவிரவாதியும் இல்லை”, என்று இந்த செய்திகளை மறுத்துள்ளார்[12]. ஆகவே, இந்தியா ஏனோ-தானோ என்று வழக்குகளை அணுகக்கூடாது. தேவையில்லாமல், நிறைய விஷயங்களை ஊடகங்களுக்குக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் அவற்றைப் பயன்படுத்து, மக்களை திசைத்திருப்பி, ஆனால், தீவிரவாதிகளுக்களூதவி செய்வது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். மேலே குறிப்பிட்ட தமீம் அன்சாரி வழக்கில் அத்தகையப் போக்கைக் காணலாம். பாகிஸ்தான் மட்டும் என்ன, ஒசாமா பின் லேடன் இங்கிருந்தான் என்றா சொல்லிக் கொண்டது? இப்பொழுதுகூட, தாவூத் இப்ராஹிம் இருக்கிறான்-இல்லை என்று தான் பாட்டுப் பாடி வருகிறது. மாமனார் என்ன மறுமகனை வந்துப் பார்க்கக்கூடாதா?

இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தாக்கினான் என்று குற்றாஞ்சாட்டப் பட்டவன் விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தாக்கினான் என்று குற்றாஞ்சாட்டப் பட்டவன் விடுதலை

இலங்கைஉளவுத்துறைபாகிஸ்தானியர்களைபிடித்துவிசாரணைசெய்தனர்: கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இலங்கை உளவுத்துறை 3 பாகிஸ்தானியர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்கு செல்ல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி சதி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. முதல் கட்டமாக 8-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஊடுருவ வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதும் விசாரணையில் தெரிந்தது. இவர்களில் 4 தீவிரவாதிகள் பஞ்சாப் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலுக்கு களமாக இலங்கை பயன்படுத்தப்பட உள்ளது[13]. இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் மற்ற தீவிரவாத அமைப்புகளான சர்வதேச பப்பர் கல்சா, ஜெய்ஷ் இ முகமது, ஜமாத் உத் தவா, லஷ்கர் இ ஜாங்வி, அல் உமர் முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகியவையும் முயற்சிக்கின்றன[14]. இதன் பின்னணியில் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கும் இலங்கை தரப்பில் ஒப்புக்கொள்ளவும்-மறுக்கவும் இல்லாத நிலையில், ஊடகங்களில் இவ்வாறு அலச வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை, பாகிஸ்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

இலங்கை, பாகிஸ்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

மகாராஷ்டிரமாநிலஉளவுத்துறைஎச்சரித்தது ஏன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்த  வேண்டும்?: இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது[15]: பாகிஸ்தானின், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த பிப்ரவரி மாதம், 2ம் தேதி. 2013, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது. சிலர் ஏற்கெனவே ஶ்ரீலங்கா பாஸ்போர்ட்டில் திருவனந்தபுரத்திற்கு வந்து சென்றாதாகக் கூறுகின்றனர்[16]. இதனால், சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது[17].

இலங்கை எல்லா நாடுகளுடனும் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது

இலங்கை எல்லா நாடுகளுடனும் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறது

கடலோரப் பாதுகாப்பு என்பது எப்பொழுதும் இருக்க வேண்டும்: இது குறித்த எச்சரிக்கை மத்திய உளவுத்துறையினர் தமிழக காவல்துறைக்கு அளித்துள்ளனர். இந்த எச்சரிக்கையின் விளைவாக தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர எல்லையான சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்[18]. மேலும், மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் விளைவாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் முழு அளவில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்[19]. மற்ற நேரத்தில் சும்மா இருப்பது போல இச்செய்திகள் இருக்கின்றன. முதலில் “தமிழ் மீனவர்கள்” என்று சொல்லிக் கொண்டு, சட்டங்களை மீறி காரியங்களை செய்து வருவது, மாநில-மத்திய அரசுகள் முழுவதுமாக தடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இத்தகைய விஷயங்களை ஜனரங்கமாக்கி, மதிப்புக் குறையுமாறு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

சைனாவுடன் நட்பு

சைனாவுடன் நட்பு

இந்தியா எப்பொழுதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது: ஶ்ரீலங்கா, மற்ற நாடுகளுடன் சுமுகமான உறவுகளை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஆனால், இந்தியா அந்த சிறிய நாட்டுடன் உறவை சரியாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. கடந்த 60 வருடங்களாக, இலங்கைப் பிரச்சினைகள், இந்தியாவை மிகவலுவாகவே பாதித்துள்ளன. இப்பொழுதும், சைனா-பாகிஸ்தான் மிக வேகமாக நெருங்கி வருகின்றன. ஏனெனில், ஶ்ரீலங்காவின் இருப்பிடம் அப்படி. இந்து மகா சமுத்திரத்தில் முக்கியமான இடத்தில் இருப்பதால், அதன் மீது ஆதிக்கம் செல்லுத்த எல்லா நாடுகளும் விரும்புகின்றன. இது இடைக்காலத்திலிருந்தே தொடர்கிறது. உண்மையில் ஶ்ரீலங்காவின் கலாச்சாரம் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அதிக அளவில் பாதித்தது டச்சுக் காரர்கள் தாம். ஆக, பக்கத்தில் இருக்கும் இந்தியா சரியாக உறவை வைத்துக் கொள்ளமுடியாத நிலையைக் கண்டு சரிசெய்து கொள்ளவேண்டும்.

உள்ளூர் அமைச்சரின் தைரியம் - இது இந்தியர்களுக்கு வருமா?

உள்ளூர் அமைச்சரின் தைரியம் – இது இந்தியர்களுக்கு வருமா?

உள்ளூரில் (இலங்கையில்) நடக்கும் பிரச்சினைப் பற்றி இங்கு விவாதிக்கிறார்கள். இங்கு வரும் புத்தபிக்குகளைத் தாக்குகிறார்கள். ஆனால், இங்கிருக்கும் பௌத்தர்கள் அவர்களைப் போல எதையும் எதிர்ப்பதில்லையே?

முஸ்லிம் பண்டிகையின் போது பசுவதை தடை

முஸ்லிம் பண்டிகையின் போது பசுவதை தடை

மாறாக, அவர்களது புத்தகயா கோவில் தாக்கப்படுகிறது.

இந்தியா உதவாது, இந்தியாவால் பிரயோஜனம் இல்லை என்பதால் தான், தூரத்தில் இருக்கும் எதிரி நாடுகளுடன் நட்பை வைத்துக் கொள்கிறது ஶ்ரீலங்கை. இதில் தான் “தமிழர்கள்”, “முஸ்லிம்கள்”, “கம்யூனிஸ்ட்டுகள்”, “மனித உரிமைக் காரர்கள்” என்று பலரும் இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீனா-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சென்றால், யாரும் எதிர்ப்பதில்லை; அவர்கள் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் ஆர்பாட்டம் செய்வதில்லை; இந்தியர்கள், ஏன் பல தமிழர்கள் (எல்லா கட்சிகள், மதங்கள், ஜாதிகள் சேர்த்து) இலங்கையுடன் வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்து வருகிறார்கள்; யாரும் தட்டிக் கேட்பதில்லை. ஆனால், இலங்கை வீரர்களுக்கு வெல்லிங்டனில் பயிற்சி கொடுத்தால் ஆர்பாட்டம் செய்கிறார்கள். வேவு பார்த்தால் கூட தப்பிக்க வைக்க பாடுபடுகிறார்கள். இப்படித்தான், இந்தியர்களின் நிலையுள்ளது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நாட்டிற்கு எதிராக வேலைசெய்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

22-08-2013


[3] இப்படி எடுத்துக் காட்டினால், அத்தகையத் திரைப்படங்களை எதிர்க்கிறார்கள்.

[4] அந்த அளவிற்கு அவனது போக்குவரத்து, தங்கும் விவகாரங்கள் ரகசியமாக வைக்கப் பட்டன என்றால், உதவியது யார் என்று கண்டுகொள்ள வேண்டும்.

[6] Alleging that Ansari was an ISI operative, Superintendent of Police (‘Q’ Branch CID) G. Sampath Kumar claimed the suspect worked for the Pakistani intelligence agency through two Sri Lankan nationals – known only as Haji and Shaji – whom he met during a business trip to Colombo. Ansari studied in a Chennai college and actively participated in the Students Federation of India (SFI). “He suffered losses in an import/export business venture. During one of his visits to Colombo, Ansari met Haji in a restaurant. Haji and Shaji worked for an official working in the Pakistani High Commission in Sri Lanka,” he said. Sources in the intelligence agencies said Ansari was using a debit card that had frequent credit from Sri Lanka. “A team of ‘’ Branch officials might visit Colombo soon for further investigation,” a top police official said and added that the entire operation was closely monitored and coordinated by Intelligence Bureau officials.

http://www.thehindu.com/news/national/exsfi-leader-held-on-charge-of-spying-for-isi/article3908201.ece

[17] தினமலர், மதுரை, மயிலாடுதுறையில்தாக்குதல்நடத்ததீவிரவாதிகள்சதி, பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013,23:54 IST

[18] தினமணி, பயங்கரவாதிகள்ஊடுருவத்திட்டம்: தமிழககடலோரப்பகுதியில்பலத்தபாதுகாப்பு, 22-0-8-2013.

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

kalanithi_maran,_kaviya_and_kaveriவருடத்திற்கு ரூ 85 கோடி என்று ஏலத்தில் கலாநிதி மாறன் “ஹைதரபாத் ரைடர்ஸ்” என்ற கிரிக்கெட் கூட்டத்தை குத்தகைக்கு எடுத்தபோது[1], திராவிட இனமானங்களுக்கு, ரத்தங்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது போலும். “டெக்கான் சார்ஜர்ஸ்” காசுப் பிரச்சினையில் சிக்கியதால் அக்கூட்டம் மூடப்பட்டு, பிசிசிஐ தேடிக்கொண்டிருந்தபோது தான், இந்த திராவிட செல்லப்பிள்ளைக் கிடைத்தாராம்[2]. வருடத்திற்கு ரூ 85 கோடி என்பது 2008ல் ஒப்பந்த ஏலத்தில் 100% மேலாகக் கேட்கப்பட்ட பணத்தைவிட அதிகமாம். சன்டிவி மற்றும் பிவிபி வென்சூர்ஸ் [ராஜசேகர ரெட்டி கம்பனி ஷக்‌ஷி டிவியின் பங்குதாரர்[3]] என்று இரண்டே கம்பெனிகள் ஏலத்தில் இருந்தனராம், மற்றவர்கள் ஏலம் கேட்காமல் அமைதியாக இருந்தார்களாம்[4]. பிவிபி வென்சூர்ஸ் ரூ.69.03 கோடி என்றபோது, சன்டிவி ரூ 85 கோடிக்கு கேட்டதால், ஏலம் முடிவு செய்யப்பட்டதாம்[5]. திராவிட கண்மணிகளுக்கு இவையெல்லாம் கூட புரியவில்லை போலும்.

Cheer-girls-sponsored- Spicejet2சன்டிவி, ஷக்‌ஷி டிவியை வென்றது எப்படி?: கத்தோலிக்க சோனியா காங்கிரஸ், கிறிஸ்தவ ராஜசேகர ரெட்டி காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது தெரிந்த விஷயமே. இருப்பினும்,  பிசிசிஐ திராவிட, நாத்திக, இந்து விரோத கூட்டத்திற்கு எப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் குத்தகைக்குக் கொடுத்தார் என்பது விளங்கவில்லை. குங்குமம் வைத்தவர்களை[6] ஏசிய தாத்தாவின் பேரனுக்குக் கொடுக்கிறோமே என்று கவலைப் படவில்லை. கலாநிதிக்கு சாதகமாக ஏலம் இருந்தது என்பதை, அவர் கொடுத்த விலை அல்லது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்தது. அவர் அத்தகைய மதிப்பீட்டை சரியாக செய்தாரா என்று கூட கேள்வியை எழுப்பினர்[7]. எப்படியிருந்தாலும், யுபிஏ வியாபாரக் கூட்டு நன்றகத்தான் செயல்படுகிறது என்பது தெரிகிறது.

Sun risers -Sri Lanka- riticized4ஒருகோவில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால்,  அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்: கருணாநிதி இப்படி சொன்னது[8] ஞாபகத்தில் உள்ளதா, “ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்”. அதற்கு முன்னர்என்ன நெற்றியில் ரத்தம் வருகிறதேஎன்று கிண்டல் அடித்துள்ளார். அதே போல நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் கலாநிதிக்கு, பேரனுக்கு உதவியிருக்கிறாரா? நல்லவேளை, நாளைக்கு இதெல்லாம் “பாப்பான்களின் சதி”, “ஆரியத்தின் சூது”, “தமிழருக்கு சூதாட்டம் தெரியாது”, “ஆரியன் வந்துதான் கெடுத்தான்”, என்றெல்லாம் கூட திராவிட சித்தாந்திகள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

கீழ்காணும் படம், இந்த டளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது – நன்றி.

http://www.facebook.com/photo.php?fbid=550737211623599&set=a.295437630486893.76949.293309174033072&type=1&relevant_count=1

Sun risers -Sri Lanka- Karu familiy criticizedகைமாறி கலாநிதிக்கு வந்தது எப்படி?: முன்னர் டெக்கான் குரோனிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் [Deccan Chronicle Holdings Limited] ரூ 428 கோடிகள் கொடுத்து பத்தாண்டுகளுக்கு ஏலம் எடுத்திருந்தது, அதாவது வருடத்திற்கு 42.8 கோடி என்றாகிறது. கடந்த செப்டம்பர் 2012ல் காசுப்பிரச்சினைக்காக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அக்டோபர் 15, 2012 மாலை 5 வரை இதனால் ரூ.100 கோடிக்கு பேங்க் கேரண்டி கொடுக்கமுடியவில்லை. “டெக்கான் சார்ஜர்ஸ்” பிசிசிஐன் மீது வழக்குத் தொடர்ந்தாலும், உச்சநீதி மன்றத்தில் பின்னருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதனால், மறுபடியும் பிசிசிஐ ஏலத்தை ஆரம்பித்தது. ஆனால், இப்பொழுது குறைந்த பட்சம் ரூ.60 கோடி என்று நியாயமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆரம்ப ஏலத்தொகையாக வைக்கப்பட்டதாம்[9]. மார்ச் 2013 ல் தான் இவையெல்லாம் நடந்தது. ஆனால், திராவிடப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஐயோ, மாறனே அந்த கும்பலுடன் சேராதே என்று அறிவுருத்தவில்லை.

Sun risers -Sri Lanka- riticizedசன்ரைசர்ஸ்” என்ற ஆங்கிலப் பெயர் சூட்டிய புராணம்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஐபிஎல் சீசன் 1 தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது. ‘டெக்கான் சார்ஜர்ஸ்’ என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது.  இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் அது தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த அக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டு, கலாநிதி வாங்கியது மேலே விவரிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்து, “சன் ரைசர்ஸ்” என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்விதமாக திருவாளர் டி. வெங்கட்ராம ரெட்டி [T. Venkattram Reddy] அவர்கள் வியாபரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[10].

Deccan chargers T Venkattram Reddy the looser of the dealதிராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது?: மார்ச் முதல் மே வரை வள்ளுவர் கோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல, பிரபாகரன் மகனின் படத்தை வைத்துக் கொண்டு வெவ்வேறு கோஷ்டிகள் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், ஒரு கும்பல் கூட இதனைத் தட்டிக் கேட்கவில்லை.திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது என்ற ரகசியம் இனமான போரளொகளுக்குப் புரியவில்லை. குமார் சங்கக்காரா [Kumar Sangakkara] மற்றும் திஸரா பெரேரா [Thisara Perera] போன்ற ஶ்ரீலங்கா வீரர்கள் எப்படி திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று கேட்கவில்லை. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இக்கூட்டத்தில் உள்ளார்கள்[11]. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால், தயாநிதி, ஏலம் எடுக்கும் போது இப்பிரசினை இல்லை அல்லது அப்பொழுது இந்தியா-இலங்கை உறவு சுமுகமாக இருந்தது என்பார்[12]. கலாநிதி பணம் கொடுக்கமலா சேர்ந்து கொண்டார்கள். ஜெயலலிதாவும் இதனை கிண்டலடித்துள்ளார்[13].

கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டிய லலித் மோடி: முந்தைய ஐபில் தலைவர், இந்த பேரத்தில் ஏதோ சூது இருப்பதைக் கண்டறிந்து, தனது நண்பர் கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்து விட்டர் என்று குற்றஞ்சாட்டினார். “ஆக, ஒருவழியாக, சன்டிவி இந்த குத்தகையப் பெற்று விட்டது. இவ்வாறு நடக்கும் என்று நான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கூறினேன், ஏனனில் ஶ்ரீனிவாசன் அவ்வாறு விரும்பினார். இதைவிட பெரிய ஊழல் / மோசடி இருக்க முடியாது. இந்த ஶ்ரீனிவாசன் மற்றும் இந்தியா சிமென்ட் முதலியவற்றின் சன்டிவியுடனான உறவுகளை ஆராய வேண்டும். ஏனெனில் கலைஞர் டிவிஞஊழலை மறக்க வேண்டாம்”, என்று டுவிட்டரில் வெளியிட்டார்[14]. கலாநிதியின் முதலாளித்துவத்தில் அசுரத்தனமான தீவிரவாதம் இருப்பதை விமர்சகர்கள் காண்கின்றனர். சிபிஐ அவரது சகோதரனின் ஊழலைப் பற்றி விசாரித்து வருகிறது. 2004 முதல் 2007 வரை அவர் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாருக்கெல்லாம் வாரி வழங்கும் முறையில் பரிந்துரை செய்துள்ளார் என்று விசாரித்து வருகிறது. நிச்சயமாக யுபிஏ-1 அரசாங்கம் மாறன் வியாபாரத்திற்கு உதவியிருக்கிறது. எது எப்படியாகிலும், இந்த பேரத்தின் மூலம் சன்டிவி மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் விளம்பர முத்திரை, வணிக மதிப்பு, வியாபார ஆதிக்கம் முதலியவற்றை அதிகமாக்குவார் என்று தெரிகிறது[15].

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] Kalanithi Maran’s Sun TV Network today won the Hyderabad franchise of the Indian Premier League for an amount of Rs 85.05 crores per year, marking an end to BCCI’s hunt for a new team in the wake of the controversial termination of cash-strapped Deccan Chargers. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/#sthash.UsjLLnim.dpuf

[3]  PVP is also a film financier, interestingly, is an investor in YSR Congress leader Y S Jaganmohan Reddy’s Sakshi TV.

http://timesofindia.indiatimes.com/business/india-business/Did-Maran-pitch-it-right-on-valuation/articleshow/16961258.cms

[4] The source said that Sun TV and PVP Ventures were the only two companies which bid for the new IPL team. Four other companies had collected the forms but did not bid. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[5] “SUN TV Network have won the Hyderabad Franchise for an amount of Rs 85.05 crores per year. This Franchise fee represents a premium of over a 100 % above the amount paid by DCHL for the Hyderabad Franchise in 2008,” BCCI Secretary Sanjay Jagdale said in a release. “The SUN TV Network bid was substantially higher than the second bid of PVP Ventures, which was Rs 69.03 crores,” Jagdale said.- See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[9] In an effort to attract more bidders, the BCCI had kept the base price at a reasonable Rs 60 crores per year. Deccan Chronicle Holdings Limited had bought the Hyderabad franchise for Rs 428 crores for a period of 10 years. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[11] IPL organisers decided that the 13 Lankan players in the tournament would sit out matches in Chennai.

http://www.ndtv.com/article/india/two-lankan-players-in-sun-group-owned-ipl-team-dmk-double-speak-on-lanka-row-347232

[12] DMK leader and actor Khushbu said she was “sure the Sun Group will take a call on this”. Sun Group officials were not available for comment, but sources close to Kalanidhi Maran’s younger brother and former minister Dayanidhi Maran argue that matters on the Sri Lanka front were much more cordial last year when the team purchased the Sri Lankan players. Saravan, a cricket fan, pointed out that the IPL was a “business model” and about winning a cricket tournament.

[14] Former IPL chairman Lalit Modi smelt a rat in the deal. He accused BCCI President N. Srinivasan of ‘gifting’ the franchise to his friend. “So, finally Sun TV has got an IPL franchise. I had predicted three months ago it will be Sun, as BCCI president wanted it that way. Can’t be a bigger scam than this. Someone should see Srinivasan and India Cements’ relationships with Sun TV. Don’t forget Kalaignar TV scam,” tweeted Modi. “While Sahara pays $370 million (Rs.1,990.6 crore) for its team, this one goes for pennies. How and why?” he asked in another tweet. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

[15] Critics say Maran’s growth is a classic example of crony capitalism. CBI is probing whether Maran’s brother Dayanidhi may have used his position as telecom minister between 2004 and 2007 in UPA-1, to win favours for Maran’s business. Whatever the outcome of the probe, the buying of an IPL team gives Sun a chance to promote its TV business and ensure brand recall of SpiceJet across India. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

மே21, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (4).

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன. இனி இதனால், தமிழர்களுக்கு என்ன லாபம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

பிரிவினைஒற்றுமை பேசி சொகுசு வாழ்க்கை வாழும் தலைவர்கள்: யாசின் மாலிக் “காஷ்மீர் அரசியலில் சித்தாந்தம் எதுவும் இல்லை, எல்லாமே பணம் தான்”, என்று அமெரிக்கத் தூதரகத்திடம் ஒப்புக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது[4]. இவரும் சளைத்தவர் அல்ல, பாகிஸ்தானில் அழகிய மனைவி, மற்ற இடங்களில் குடி, கூத்து, கும்மாளம்[5] என்று தான் அனுபவித்து வருகிறார். அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பதாவது[6], “ஒமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா செயிக் குடும்பத்தில் வந்தவர்கள். அவர்கள் தில்லியின் பண விளையாட்டுகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள். ஶ்ரீநகர் மற்றும் தில்லியில் சொகுசான பங்களாக்களில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்து வருபவர்கள். தமது உடைக்கேற்றபடி, விலையுயர்ந்த பனேரை கைக்கடிகரங்களைக் கட்டிக் கொள்பவர்கள், வரும் விருந்தாளிகளுக்குக் கூடபிளாக் லேபிள்என்ற உயர்ந்த வகை மதுவை கொடுத்து உபசரிப்பவர்கள்[7]. உலகம் முழுவதும் சுற்றிவரும்போது கூட விமானங்களில் முதல் வகுப்பில் சொகுசாக பிரயாணம் செய்பவர்கள். இப்படி எல்லாமே இந்திய அரசாங்கத்தின் தயவில் நடந்து வருகிறது. மீர்வாயிஸைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, பாகிஸ்தானின் தயவில், துபாயில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைச் செய்து வருகிறார்”. அதாவது, இந்தியா ஏமாளி என்பதைவிட, நேரு-சோனியா அந்நிய அடிவருடி கும்பல்கள் அத்தகைய தேசவிரோத சக்திகளை ஊக்குவித்து, சமரசம் செய்து கொண்டு, தங்களது பரம்பரை ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமான்: காஷ்மீர் பிரிவினைவாதிகளைப் போலவே, தமிழ், தமிழர் என்று பேசிக்கொண்டு, தமிழ் உணர்வுகளைத் துண்டிவிட்டுக் கொண்டு[8], இவரும் ராஜபோக வாழ்க்கையினைத்தான் வாழ்ந்து வருகிறார். சினிமாக்காரர் என்பதால் சொல்லவே வேண்டாம். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால், அத்தகைய உபசரிப்பு, கவனிப்பு, முதலிய விவரங்கள் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. கோயில் பணம் கூட எப்படி துஷ்பிரயோகப் படுத்தப்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது[9]. அதாவது இந்துமதத்தை தமிழகத்தில் தூஷிப்பது, ஆனால், வெளிநாடுகளில் இந்து கோயில்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது என்று இவர்கள் சித்தாந்தம் உள்ளது. இயக்குனர், நடிகர் என்று பல வேடங்களில் சுகங்களை அனுபவித்து வருகிறார். யாசின் மாலிக்கின் விவகாரங்கள் வெளிவந்துள்ளன, ஆனால், “தமிழ்” பந்தத்தினால், சீமானின் விவகாரங்கள் அடக்கி வாசிக்கப்படுகின்றன போலும். இருப்பினும், விஜயலட்சுமி மற்றும் இலங்கைப் பெண் பற்றிய விசயங்கள் வெளியாகியுள்ளன[10]. மற்றபடி, காஷ்மீர் பிரிவினைவாதிகளின் பாணியில் செபாஸ்டியன் சீமானும் குடிப்பாரா, கும்மாளம் போடுவாரா என்பதெலாம் தெரியவில்லை. ஒருவேளை யாசின் மாலிக் தெரியாமல் சொல்லி விட்டார் போலும்!

யாசின் மாலிக் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லையாம்: யாசின் மாலிக் பாகிஸ்தானிற்குப் போவதும், வருவதும் தெரிந்திருக்கிறது, புகைப் படங்கள், விடியோக்கள் எல்லாமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அவர் வந்ததும், போனதும் தமிழகப் போலீஸாருக்குத் தெரியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. கடலூரில், “நாம் தமிழர்” கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானாராம்[11]. அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனராம். நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி., கண்ணப்பன், டி.ஐ.ஜி., முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும்மேற்பட்டபோலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர். யாசின் மாலிக் பங்கேற்கும் விஷயம் அவ்வளவு தாமதமாக எப்படி தமிழகத்து போலீஸாருக்குக் கிடைக்கும்?

.பி., க்யூ., உளவுப்பிரிவு போலீசார் தூங்கி விட்டனரா: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, நிழல்போல் உளவு பார்க்க, ஐ.பி., க்யூ., உளவுப் பிரிவுபோலீசார், புதுச்சேரி மற்றும் கடலூரில் குவிக்கப்பட்டனராம். 18-05-2013 சனிக்கிழமை காலை, 10:20 மணிக்கு புதுச்சேரியில் தங்கியிருந்த சீமான், யாசின் மாலிக் மற்றும் மாநில நிர்வாகிகள் கடலூருக்கு புறப்பட்ட தகவல் கிடைத்ததும், கருத்தரங்கம் நடைபெற்ற திருமண மண்டபம் முன், ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படைபோலீசார் 200பேர் குவிக்கப்பட்டனராம். யாசின் மாலிக்கை கைது செய்யவே போலீசார் குவிக்கப்பட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் கருதினராம். காலை, 11:10 மணிக்கு, சீமான் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டுமே கருத்தரங்கமேடைக்கு வந்தனராம். ஆனால், அங்கு யாசின் மாலிக் இல்லாததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனராம். புதுச்சேரியில் புறப்பட்டவர் எங்குபோனார் என புரியாமல் குழம்பினராம். இந்நிலையில் பகல், 1:35 மணிக்கு, திடீரென யாசின் மாலிக் கருத்தரங்கு மேடையில்தோன்றியதும், எப்படி வந்தார், எந்த வழியில், எந்த வாகனத்தில் வந்தார் என புரியாமல், போலீசார் திண்டாடினராம்[12]. கருத்தரங்கில் பங்கேற்ற யாசிம் மாலிக், மாலை, 5:00 மணிக்கு திடீரென காணவில்லையாம்! இதெல்லாம் ஏதோ பெரிய தமாஷா போல செய்திகளை  வெளியிட்டியிருக்கிறார்கள்.

வந்தார், பேசினார், மறைந்து விட்டார்: அதிர்ச்சியடைந்தபோலீசார், விழா ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரித்தனராம். அவர் அப்போதேபோய்விட்டதாகக் கூறியதும், எப்படி, எந்த வாகனத்தில் சென்றார் என, வியப்படைந்தனராம். அதுகுறித்த தகவலை, தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியாமல் திணறினராம். இரவு, சீமான்பேச்சை முடித்த பிறகு, நிர்வாகி ஒருவர் நன்றி கூறிக் கொண்டிருந்தாராம். தொண்டர்களின் கெடுபிடியைத் தாண்டி போலீசார் 10:23க்கு மண்டப மேடைக்குச் சென்றனராம். அங்கு சீமான் இல்லையாம். அவர் 10:21 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டதாக நிர்வாகிகள் கூறினராம். தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆஹா, இங்குதான் உண்மை புலப்படுகிறது. அதாவது “நன்கு அறியப்பட்ட சீமானையும், புதிதாக வந்த யாசின் மாலிக்கை போல கோட்டை விட்டது” என்பதிலிருந்து, யாசின் மாலிக் என்பது யாரென்றே போலீஸாறுக்குத் தெரியவில்லை என்றாகிறது.

தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று தெரியும்?: மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி குறிப்புகளினின்று, அறியப்படுபதாவது, தமிழக போலீஸ்காரகளில் எத்தனை பேருக்கு யாசின் மாலிக் யார் என்று அடையாளம் தெரியுமா, தெரியாதா என்ற சந்தேகம் எழுகிறது. யாசின் மாலிக் பாகிஸ்தானிலிருந்து தில்லிக்கு வந்ததும் கைது செய்யப்பட்டு, காஷ்மிருக்கு எட்த்துச் செல்லப்பட்டு, அங்கு “வீட்டுக் காவலில்” வைக்கப்பட்டான்[13]. ஏப்ரலில் கைது செய்யப்பட்டான்[14]. மே மாதமும் கைது செய்யப்பட்டான்[15]. ஆகவே, அவன் காஷ்மீரிலிருந்து, கடலூருக்கு வந்தது கண்காணிக்கப்பட்டிருக்கும். அதனையும் மீறி அவன் வந்து போய் மறைந்து விட்டான் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பிறகு, அத்தகைய பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வந்து போய் கொண்டிருக்கலாம், யாருக்கும் ஒன்றும் தெரியாது எனும் நிலையில் இந்தியா உள்ளது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்[16]: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டினா. 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கினான்[17]. 1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும், என்று எச்சரித்து சில மாதங்கள் தான் ஆகின்றன[18]. இப்பொழுது, கடலூரில் இரண்டு போராட்டங்களுக்கு ஒன்றும் வித்தியாசம் இல்லை என்று பேசினால், செபாஸ்டியன் சீமானும் அதே வழியில் செல்வாரா?

தில்லியில் கைது செய்யாமல்ஶ்ரீநகரில் கைது ஏன்?:  இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்! உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம்! கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது[19]. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[20]. இப்படி தில்லியில் கூத்து நடந்துள்ளது என்றால், கடலூரிலும் இன்னொரு கூத்தா?

ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் தமிழகக் கட்சிகள்: “காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை என்பதை, மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், “யாசின் மாலிக்கை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது’ என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்[21]. ஞானதேசிகன், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்களை, பேனர், போஸ்டர்களில் பிரசுரிப்பது போன்ற நடவடிக்கைகள், சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை, கடலூருக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தவும், முயற்சி செய்துள்ளனர். கடலூர் கூட்டத்தை தடை செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை சரியானது. இதை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. காஷ்மீர் பிரினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு உதவிகள் இருப்பதாக, பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின், இறையாண்மையை கேள்வி கேட்டு, காஷ்மீரத்தை துண்டாட துடிக்கிற, யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு கூட்டி வருவதற்கு உதவி செய்த சக்தி எது? இந்த நிகழ்ச்சிக்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை, எவை என்பதையெல்லாம், மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்”, என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழக பா..க, தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது: “இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும் போராட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் காஷ்மீர் பிரினைவாதி, யாசின் மாலிக்கை கலந்து கொள்ளச் செய்தது, தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலை குனியச் செய்துள்ளது. இழக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற, 60 ஆண்டுகளாக, இலங்கை தமிழர்கள் தமக்கு ஆதரவாக தமிழகம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதரவையும் தான் எதிர்பார்த்தார்களே தவிர, இந்தியாவை துண்டாடத் துடிக்கும் எந்த ஒரு தீய சக்தியுடனும், அவர்கள் கைகோர்க்க முன் வரவில்லை என்பதை, யாசின் மாலிக்கின் தலைமை ஏற்கத் துடிக்கும் தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது, மிகவும் அபாயகரமானது என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியும் வழக்கம் போல மனு கொடுக்கிறது: கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய, காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் மற்றும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.,யிடம், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்[22]. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர், முத்து ரமேஷ்குமார் அளித்துள்ள புகார் மனு: “இம்மாதம், 18ம் தேதி, கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில், இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும், காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் பேசியுள்ளார். இந்த யாசின் மாலிக், பயங்கரவாதியான அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட போது, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஹபீஸ் சையது என்ற பயங்கரவாதியுடன், இணைந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர். இவ்வாறு பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்படும், யாசின் மாலிக், தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சக்திகளை உருவாக்க முயற்சிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகளின் மௌனம் ஏன்?: பாஜப, காங்கிரஸ் கட்சிகளுக்குத் தெரிந்திருப்பது, போலீஸாருக்குத் தெரியவில்லை. இந்து மக்கள் கட்சிக்குத் தெரிந்துள்ள விசயங்கள் கூட திராவிட கட்சிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தெரிந்திருக்கும் அளவிற்கு, செபாஸ்டியன் சீமானைப் பற்றி இந்தியாவிற்குத் தெரியாமல் இருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கோ ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறார்கள். தமிழ் ஊடகங்களோ, இப்படி ஏனோதானோ என்று செய்திகளை வெளியிட்டு அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் உண்மையினை அறிந்து கொள்ல வேண்டும்.

யாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோ, இலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

21-05-2013


[6] Yasin Malik informed the US embassy – “Kashmiri politics is no longer about ideology, it’s all a money game.”  The US embassy says, “Omar and Farooq Abdullah, descendants of the Shaikh who first figured out Delhi’s money game, live in fabulous houses in Srinagar and Delhi, wear matching Panerai watches, serve Blue Label to the guests, and travel all over the world first class courtesy of the Indian Government. The Mirwaiz is alleged to have real estate in Dubai courtesy of Pakistan.”

[7] ஆனால், முஸ்லீம்கள் குடிக்கமாட்டார்கள் என்றெல்லாம் ஜம்பம் அடித்துக் கொள்வார்கள், பேசுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள் என்பதனையும் மக்கள் கவனிக்க வேண்டும்.

[12] தினமலர், பதிவு செய்த நாள் : மே 20,2013,00:27 IST

[17]  Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[18] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.4தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் “நாம்தமிழர்” கட்சி சீமான்: சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. பொலீஸார், சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள், தட்டிகள் முதலியவற்றை அகற்றினர்[2]. ராதிகா, டி.எஸ்.பி கூறும்போது, நாம் தமிழர் கட்சி, சில சரத்துகளை மீறியுள்ளதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்[3]. அனுமதி மறுப்பப்பட்ட பிறகு, ஊருக்கு வெளியில் இருந்த திருமண ம்,அண்டபத்திற்குச் சென்று, கருத்தரங்கம் நடத்தினர். சீமான், யாசின் மாலிக்கை அங்கு அழைத்துச் சென்றார்[4].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013இந்தியவிரோதி யாசின்மாலிக், சீமானின் கூட்டத்தில் பேசுவது: கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: “இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை[5]. இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல். இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற அதே சமயத்தில், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் அங்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது”, என்றார்[6].  தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[7] தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது[8] தெரியுமா?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.2யாசின் மாலிக்கைப் போல, சீமான் ஆயுத போராடத்திற்கு தயாரா?: சட்டங்களை மீறியதற்குத்தான், மார்ச் மாதம் 2013 யாசின் மாலிக் கைது செய்யப்பட்டான்[9].  ஆனால், கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது என்றிருப்பதால், இவர்களுக்கும் அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறது. போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனோபாவம் வளர்கிறது[10]. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[11].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[12].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013யாசின் மாலிக்கைப் போல காந்திவழி செல்லும் சீமானா: சீமான் பேசும்போது, “கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2000 அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்”, என்றார்.

Yasin Malik  sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guruஇந்தியவிரோதிகளும், தேசபக்தர்களும்: தேசவிரோத காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான்[13]. சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு[14] கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்[15]. சினிமா மற்ற இதர வழிகளில் ணம் வந்து கொண்டிருப்பதனால், செலவு பற்றி கவலைப் படாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[16]. தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது, யார் இந்தியவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்பதுதான்.

Yasin malik sitting with Yafiz Sayeedதமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-05-2013


[3] Police withdrew the permission granted to Naam Tamizhar Katchi headed by film director Seeman to hold the meeting in support of separate Tamil Eelam as the organisers violated certain conditions, DSP Radhika told reporters here. The party violated the conditions and erected banners and pasted posters with photographs of Prabhakaran all over the town, she said. See more at: http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/#sthash.R2SA3lei.dpuf

[11] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[12] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[13] Malik said he spent several years in jails in Rajasthan, Kashmir and Delhi for helping the victims of atrocities unleashed by the Indian Army. He regretted that none of the Indian states expressed solidarity with the people of Kashmir, who have been struggling and suffering for several years, he said.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-voices-support-for-Tamil-Eelam/articleshow/20128987.cms