Archive for the ‘திராவிடன்’ Category

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

ஓகஸ்ட்31, 2013

ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மீது செக்ஸ், பிடோபைல் முதலிய குற்றச்சாட்டுகள் – ஆரோவில் குற்றங்களும், ஆசிரமத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் (1)

அரவிந்தர் ஆசிரமத்தில் செக்ஸ் கொடுமை (2004): இப்படி தலைப்பிட்டு, ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு மேலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[1].  பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல்ரீதியில்கொடுமைப்படுத்தப்படுவதாக அங்கு தங்கியுள்ள 5 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்கொடுத்துள்ளனர். ஆசிரமத்தைச் சேர்ந்த 5 பேரும் தங்களது பெயர்களைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவியான பூர்ணிமா அத்வானி கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பூர்ணிமா, அரவிந்தர் ஆசிரமம் மீது கற்பழிப்பு புகார் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • பெண்கள் தங்கியுள்ள அறைகளில் வந்து ஆண்கள் சிறு நீர் கழிப்பது,
  • பெண்கள் தங்கியுள்ள அறைகளின் சுவர்களில் அசிங்கமான வார்த்தைகளை எழுதி வைப்பது
  • போன்ற செயல்களில் சில ஆண்கள் ஈடுபடுவதாகவும்

இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம் என்றார். இவையெல்லாம், அரசு அலுவலங்கள், ரெயில்கள் மற்ற கட்டிடங்களின் கழிப்பிடங்கள், முதலியவற்றில் சர்வ சகஜமாகக் காணலாம். அவற்றைப் பற்றி கவலைப் படாத பெண்கள், இதைப் பெரியதாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பக இருக்கிறது. ஆரோவில் ஆசிரமத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், முறைகேடான பாலுறவு போன்றவற்றில் அங்குதங்கியுள்ள வெளிநாட்டவரும், உள்நாட்டினரும் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது[2].

அந்நியர்களால் வரும் விபரீதங்கள்: ஆரோவில் வளாகத்தில் அந்நியர்கள் அதிகமாக இருப்பதினால், அவர்கள் மூலமாக பற்பல பிரச்சினைகள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கு மேலுள்ள அந்நிய பக்தர்கள், சீடர்கள், தியான-யோகா நிகழ்சிகளில் கலந்து கொள்பவர்கள், சுற்றுலா பிரயாணிகள், உல்லாசிகள் என்று அனைத்து வகையினரும் இங்குள்ள கூட்டங்களில் அடங்குவர். அந்நியர்கள் அதிகமாக வருவதால், அவர்கள் தங்களது பழக்க-வழக்கங்களை பெரும்பாலும் மாற்றிக் கொள்வதில்லை. சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸில் ஈடுபடுவது போன்றவை அவர்களைப் பொறுத்த வரைக்கும், தினசரி காரியங்களாக இருக்கின்றன. தினமும் சாப்பாடு-உணவு போல அவற்றை வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் போதை மருந்தும் உட்கொள்கின்றனர். இதனால், இவையெல்லாம் இங்கு கிடைக்கின்றன அல்லது கிடைக்கக்கூடிய நிலையுள்ளது. இவற்றில் சில சட்டமீறல்கள், குற்றங்கள் எனும்போது, அவை தெரிந்தே அனுமதிக்கப் படுகின்றன என்றாகிறது. இவற்ரின் மூலம் தான் மற்ற குற்றங்கள் நடக்கின்றன.

தொடர்ந்து நடக்கும் கொலைகள்,  கற்பழிப்புகள்: ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் அல்லது அதனைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் எல்லாம், பொதுவாக ஆரோவில் மற்றும் அதன் வளகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தாம் அதிகமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள், மற்றும் அவற்றைச் சேர்ந்த குற்றங்கள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் சில கீழே உதாரணத்திற்காகக்  கொடுக்கப்படுகின்றன:

  • அக்டோபர் 2004ல் ஆரோவில் அருகேயிருந்த கிராமத்தில் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டன. அதில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் கொல்லப்பட்டார். ஜனவரி 19, 2004ல் அக்கூட்டத்தினர் பெயிலில் வெளியே வந்தபோது, அதில் ஒருவர் இடையாஞ்சாவடியில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்[3].
  • ஜனவரி 31, 2004ல் சைடோ வான் லூ [Sydo Van Loo, a Dutch national] என்ற டச்சு நாட்டுக்காரர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்[4].
  • அக்டோபர் 2008ல், இசபெல்லா என்ற பெண் பலரால் கற்பழிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக, ஆரோவில் அருகே முந்திரி புதர்களில் கிடந்தது போலீஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கணவர் ஆல்பர்ட் துபாயில் வேலை செய்கிறான். காணாமல் போன அவளைப் பற்றி, தாயார் போலீஸாரிடத்தில் புகார் கொடுத்திருந்தார்[5].
  • மே 2009ல், ஆன்ட்ரி வயோஜேட் [French industrialist, Andre Viozat, 66] என்பவர் தனது 13-ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்னை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[6]. இவர் சந்திரிகா என்ற கேரள பெண்னை திருமணம் செய்து கொண்டு, பின்னர் பிரிந்து விட்டனர். அவர் அடையாளம் தெரியாத ஆசாகளால் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
  • டிசம்பர் 31, 2010 அன்று மதிவளவன் மற்றும் கருணகரன் கோஷ்டி மோதல்களில் கொல்லப்பட்டனர்[7]. இவர்களைக் கொன்ற சுரேஷ் என்பவன் ஆன்ட்ரி வயோஜேட் கொலையிலும் தனக்கு பங்கிருப்பதாக ஒப்புக் கொண்டான்.

வான் லூ கொலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆரோவில்-காரர்களே, வன்முறை ஆரோவில்லில் ஒன்றும் புதியதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்[8]. ஆன்ட்ரி வயோஜேட் கொலையைப் பொறுத்த வரையில் கோடிக்கணக்கான சொத்துதான் பங்கு வகித்துள்ளது. மேலும் ஆரோவில் வளகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் உள்ளூர்வாசிகள் இவர்களிடையே சில பிரச்சினைகள் எழுகின்றன, அவை கொலை, கற்பழிப்பில் கூட முடிகின்றன என்று வெளிநாட்டுக்காரர்களே எடுத்துக் காட்டுகின்றனர்[9].

ஶ்ரீஅரவிந்தர் பெயரில் இயங்கி வரும் இயக்கங்கள்,  நிறுவனங்கள்,  சங்கங்கள் முதலின: ஆரோவில்[10], ஆரோவில் ஆசிரமம், ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம்[11] மற்றும் இதர ஆசிரமங்கள் என்று பல புதுச்சேரியில் / பாண்டிச்சேரியில் இருந்து வருகின்றன. இவற்றை பல இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்கள், டிரஸ்டுகள், சொசைடிகள் நிர்வகித்து வருகின்றன. இவையெல்லாம் முதலியவை தனித்தனியானவை[12]. உள்ளூர்-வெளியூர் இந்தியர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றவர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்ற அந்நியர்கள் என்று பலர் அதில் விருப்பங்கலைக் கொண்டுள்ளார்கள்.

ஆரோவில் பகுதியில் நடப்பதை,  ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வரும் நிலை: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[13]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[14]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[15]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

இலங்கை பிரச்சினை வைத்துக் கொண்டு திகவினர் ஆசிரமத்தைத் தாக்கியது  (மார்ச்.2013): இவ்வருடம் மார்ச் மாதம் கூட, சம்பந்தமே இல்லாமல், திராவிட கழக்கத்தினர் ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர். ஆனால், ஆரோவில்லை விட்டுவிட்டனர்[16]. இதேபோலத்தான், ஊடகத்தினரும், ஆரோவில் பகுதியில் நடப்பதை, ஆசிரமத்தில் நடப்பதைப் போல சித்தரித்து வருகின்றன. சமீபத்தில், ஒரு “டிரான்ஸ்-ஜென்டர்” தான் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் பிரச்சினையை அணுகுவதில் சிக்கலாக இருந்ததால் திகைத்தனர். உடனே “புதுச்சேரி பெண்கள் வாழ ஜாக்கிரதையான இடம் இல்லை” என்றதுபோல “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டது[17]. எப்படி ஒரு அந்நிய பெண் காஷ்மீரத்தில் கொலை செய்யப்பட்டதும், இந்தியா அந்நியர்களுக்கு ஏற்ற நாடல்ல, உமது பெண்கள் அங்கு ஜாக்கிரதையாக இருக்க முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, அதே பாணியில், இந்த பிரச்சாரமும் உள்ளது.

© வேதபிரகாஷ்

31-08-2013


[3] In October 2003, the gang war flared up once again, and another murder took place, this time in another village close by Auroville. The victim was a homeopath who had connections with one of the gangs. It did not take long before the retaliation murder occurred. On January 19th, 2004, one of the senior members of the other gang, who had just been released on bail a few days earlier, was killed in broad daylight in Edaiyanchavadi.

http://www.auroville.org/journals&media/avtoday/archive/2004-2009/2004-03/spiral_violance.htm

[7] A double murder, in which Madhivalavan (26) and Karunakaran (26) were killed in a group rivalry at Periya Mudaliar Chavadi on December 31, 2010,  http://www.hindu.com/2011/01/05/stories/2011010563250900.htm

[12] The disciples and devoted followers of Sri Aurobindo and the Mother, with a view to propagate and practise the ideals and beliefs of Sri Aurobindo formed a Society called Sri Aurobindo Society in the year 1960, which at all material times was and is still a society duly registered under the provisions of the West Bengal Societies Registration Act, 1961. This Society is completely distinct from Aurobindo Ashram in Pondicherry. The Society was established and registered for the purpose of carrying out in and out side India the several objects stated in the memorandum of the Society. http://indiankanoon.org/doc/312939/

[14] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்ரின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

மே20, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (3).

இந்திய பிரஜைகள், இந்திய நாட்டு நலனுக்காக, இப்பொழுதுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்க் கொண்டு, இவ்வாறான, தேசவிரோத சக்திகள் எப்படி செயல்படுகின்றன என்பதனை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். இதில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று மொழிரீதியாக எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கலாகாது. தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் இப்படிச் சொல்லியே விஷயத்தைத் திசைத் திருப்பும் போக்கிலும் உள்ளார்கள். ஏனெனில் தீவிரவாதிகள் அவற்றையும் கடந்து தான் மக்களைக் கொன்று வருகின்றனர். ஆனால், அக்காரணிகளை வைத்துக் கொண்டி அதே அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

LTTE_tourist_hub Sri Lankaசெபாஸ்டியன் சீமான் அமெரிக்க அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரங்கள்: நவம்பர் 2011ல் சீமான் உலக தமிழ் அமைப்பு [World Tamil Forum at New York] சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்தபோது, நியூயார்க் விமான நிலையத்திலிருந்து திரும்ப அனுப்பட்டார்[1]. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்திற்கு சார்பாக அவரது நடவடிக்கைகள் உள்ளதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்னர் அவர் அமெரிக்காவில் 10 நாட்கள் இருப்பதற்காக உரிய அனுமதி, விசா முதலியவற்றைப் பெற்றுக் கொண்டுதான் சென்றிருந்தார். ஆனால், பிறகு இம்மிக்ரேஷன் டிபார்ட்மென்ட் சோதனையில் அவரது பின்னணி அறியப்பட்டு, அவரை அனுமதித்தால் அமைதிக்குக் குந்தகம் நேர வாய்ப்புள்ளது[2] என்று தெரியவந்ததால் அவ்வாறு மறுக்கப்பட்டதாக அறிவித்தனர்[3]. உலக தமிழ் அமைப்பு என்றால் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் நலனுக்காக ஒருமித்த நிலையில் செயல்பட வேண்டும். பிறகு அவர்கள் எப்படி இப்படி தேசவிரோதக் கொள்கையாளர்களுக்கு இடம் கொடுக்க முற்பட்டார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான நிலை ஏற்படும் என்று அறிந்துள்ளப் பட்சத்தில், இத்தகைய நிகழ்வுகளை தாராளமாக தவித்திருக்கலாம். ஏனெனில், நாளைக்கு தமிழர் என்று யாராவது செல்லும் போது, அமெரிக்கர்கள் சந்தேகத்துடன் பார்ர்க்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

Hindu temples misused for LTTE activities - Canada - literature saleசெபாஸ்டியன் சீமான் கனடா அரசாங்கத்தினால் நாடு கடத்தப் பட்ட விவகாரங்கள்: கனடா நெடுங்காலமாகவே, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் தமிழ் தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது. இலங்கை அகதிகள் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக எல்லைகள் கடந்து வந்து சேருகின்றனர். டோரோன்டோ என்ற நகரத்தில் தமிழர்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. நிச்சயமாக, எல்லா தமிழர்கள் அல்லது தமிழ் பேசும் இந்தியா வம்சாவளியினர் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும், இலங்கையைச் சேர்ந்தவர் மற்ற சித்தாந்திகள் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள் என்பது தெரிகிறது. நவம்பர் 2009ல் டோரோன்டோவில் எல்டிடிஇ ஆதரவு என்ற நிலையில் ஶ்ரீலங்காவிற்கு எதிராக செபாஸ்டியன் சீமான் பேசியதால், கனடா அரசாங்கம், அவரை நாடு கடத்தியது[4]. ஏப்ரல் 2012ல் ரமணன் மயில்வாகனம் என்ற கனடா நாட்டுப் பிரஜை, அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது[5]. அதாவது, எப்படி கனடா-அமெரிக்கா தமிழ் பேசும் மக்களால் துஷ்பிரயோகப்படுத்தப் பட்டு, தமிழருக்குக் கெட்டப் பெயரை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொடுக்கப்படுகிறது.

Hindu temples misused for LTTE activities - Canadaடோரோன்டோ இந்து கோயில்கள் எல்டிடிஇ  நிதிவிநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன: ஆனால் அதே டோரோன்டோவில் உள்ள இந்து கோயில்கள் எல்டிடிஇ பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டன என்பது மட்டும் அல்லாது கோயில் பெயரில் பணம் வசூல் செய்து அது எல்டிடிஇ மற்றும் இதர இயக்கத்தினருக்கு அனுப்பப் பட்டு வந்தது. நிச்சயமாக இந்துக்கள் இவ்வாறு செய்திருக்க முடியாது. ஆனால், திராவிட சித்தாந்தத்தில் மூளை சலவை செய்யப்பட்டு, இந்துவிரோத சக்திகளுடன் சேர்ந்து, உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட்டால், “இந்துக்கள்ளென்ற போர்வையில் மற்றவர்கள் இக்காரியங்களைச் செய்யலாம். இதில் செபாஸ்டியன் சீமானும் அடக்கம். இதில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அம்மாதிரியான பணப்போக்குவரத்துகள் செய்துள்ளார்கள். அதாவது இந்து கோயில்கள் கிறிஸ்தவர்களினால், தேசவிரோதச் செயல்களுக்கு உப்யோகப் படுத்தி கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதனால், அக்கோயில்கள் கனடா அரசாங்கத்தினால் தண்டம் செல்லுத்தப்பட வேண்டியதாயிற்று[6]. ரிச்மான்ட் ஹில் ஹிந்து டெம்பிள் மற்றும் ஹிந்து மிஷன் மிசிசௌகா என்ற இரண்டு கோயில்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டன[7].

Hindu temples misused for LTTE activities - Canada - Hundi collectionசெபாஸ்டியன் இந்தியாவில் தேசவிரோத செயல்களுக்காக கைது செய்யப் பட்டது: சரி, மற்ற நாடுகளில் பிரச்சினை செய்து வரும் இந்த ஆள் தமிழகத்தில் என்ன செய்கிறார் என்றால், அதே மாதியான போக்குத்தான் காணப்படுகிறது. தேசவிரோத பேச்சுகளுக்காக, இரண்டு முறை ஜூலை 2010 மற்றும் பிப்ரவரி 2009 தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்[8]. மே.18, 2010ல் “நாம் தமிழர்” என்ற இயக்கம் இவரால் உண்டாக்கப்பட்டது[9]. எல்டிடிஇன் நிதியுதவி மூலம் இந்தியாவில் இவ்வாறு குறிப்பாக தமிழ்நாட்டில், கருணாநிதி, வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோருக்குக் கிடைப்பதாகவும், அதனால் தேர்தல் அல்லது நிதி ஆதாயத்திற்காக அவர்கள் அவ்வாறு பேசி வருவதாக இலங்கை அரசு குற்றஞ்ச்சாட்டுகிறது[10]. ஜெயராம் என்ற மலையாள நடிகர், சினிமாவில் ஒரு தமாஷா காட்சியில் ஒரு தமிழ் பெண்ணை இழிவு படுத்தி பேசுவதாக வந்த காட்சியினால், சென்னையில் உள்ள அவரது வீடு தாக்கப் பட்டது. அதற்காக, செபாஸ்டியன் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீடர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் செபாஸ்டியன் சீமானும் மறைந்திருந்து, பிறகு பெயில் பெற்றார்[11].

Hindu temples misused for LTTE fundingதமிழ் அமைதிக்காக உபயோகப்படுத்தப் படவேண்டும்: தமிழ் பேச்சாளியாக இருந்தால், அத்திறமை தமிழர்கள் நன்றாக இருக்க, சிறக்க, உபயோகப்படுத்த வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாக, ஆபாசமாக, அசிங்கமாக, கொச்சையாக இந்தியா, இந்தியர்கள், இந்திய மதம் முதலியவற்றிற்கு எதிராகப் பேசுவது, நடந்து கொள்வது தகாது. இதனை தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். “யாது ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லிக் கொண்டு அமைதிக்கு ஊறுவிளைவித்துப் பேசினால், செயல்பட்டால் அது நன்மையாகாது. திராவிடப் பேச்சாளிகள் தமிழர்களை பேசிப்பேசியே பின் தள்ளிவிட்டனர். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், இந்தி பேசும் மாநிலங்களில் ஏன் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தி பேசுபவர்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை” என்றெல்லாம் விதண்டாவாதம் பேசி, பிறகு “இந்தி பேசியே” பெரிய அரசியல்வாதிகள் ஆகி, மத்திய அமைச்சர்களாகவும் ஆகிவிட்டனர்.

Hindu temples funds diverted to LTTEசெபாஸ்டியன் சீமானுக்கு எதற்கு “ஆரிய-திராவிட” சித்தாந்தம்?: நாங்கள் “திராவிடர்கள்” அவர்கள் “ஆரியர்கள்” என்று சொல்லிக் கொண்டு, கூட்டு வைத்துக் கொண்டனர். இதெல்லாம் ஏன் எடுத்துக் காட்டப்படுகிறது என்றால், இந்த செபாஸ்டொயன் சீமானும் இந்த செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? தமிழர்களா, திராவிட சித்தாந்திகளா, கிறிஸ்தவர்களா?

© வேதபிரகாஷ்

20-05-2013


[1] Seeman, a pro-LTTE activist, was invited to attend a conference organised by the World Tamil Forum at New York. The film director had obtained all the necessary permissions and a visa from US authorities for his travel.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[3]  When Seema landed at New York, the authorities denied him permission to enter the country on the grounds that he is known for his “pro-LTTE activities”. The US authorities said if Seeman was permitted into the US, he would disrupt the peace of the land.

http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366348_1_film-director-seeman-pro-ltte-sri-lankan-government

[5] The U.S. Department of Justice is seeking a 15-year prison sentence for a Canadian who pleaded guilty to terrorism conspiracy for his role in a plot to supply separatist rebels in Sri Lanka.

In a sentencing report filed in a Brooklyn, N.Y. court, U.S. attorney Loretta Lynch said Ramanan Mylvaganam had committed “a gravely serious offence” by attempting to procure equipment for the Tamil rebels.

http://news.nationalpost.com/2012/04/30/u-s-wants-15-years-for-toronto-man-convicted-in-tamil-tigers-terror-plot/

[7] The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE.

http://news.nationalpost.com/2012/06/04/two-toronto-hindu-temples-fined-by-cra-for-sending-money-to-suspected-tamil-tigers/

[8] Tamil Nadu Government has detained the film director and staunch supporter of LTTE, Sebastian Seeman under National Security Act (NSA). The Government of Tamil Nadu slapped NSA against Seeman, even as he was trying to secure bail after he was arrested early this week on charges of making inflammatory speech during a demonstration to condemn the attack on Tamil Nadu fishermen by the Sri Lankan Navy (July 2010). A day after the Principal Sessions Court dismissed Seeman’s bail plea (16-07-2010), the City Police Commissioner (In-charge) Sanjay Arora ordered his detention under NSA, stating that his speeches made during the agitation were against the interest of national security and disrupt harmony. After the Commissioner passed the order, Mr Bhaskar, Inspector of Police, North Beach Station, served the same to Seeman at Vellore Central Prison. Second time, Seeman was detained under the NSA by the Tirunelveli City Police in February 2009, but was released by the High Court later.

http://www.asiantribune.com/news/2010/07/18/pro-ltte-supporter-sebastian-seeman-booked-under-national-security-act

[10] In turn the LTTE is funding several Tamil Nadu politicians who are now lobbying the Central government in New Delhi. For example, Tamil Nadu politicians and film stars from Karunanidhi to Neduman and Vaiko and Seeman are continuing to support the LTTE either for electoral or for financial gain. They do not speak about 30 years of killings of Tamils by the LTTE from Duraiappa, the Mayor of Jaffna to Amirthalingam, the TULF leader or the Rajiv Gandhi assassination, but exaggerate the Tamil civilian deaths in the final phase and weep over Prabhakaran’s loss.

http://www.dailynews.lk/2013/02/20/fea03.asp

[11] In 2010, Chennai police registered a case against Seeman in connection with the attack on the house of actor Jayaram accusing him of instigating the attack on the actor, who allegedly made a comical derogatory remark on a Tamil woman in an interview. Eight persons were held soon after the attack and a special team investigating the case arrested four more later, including Seeman’s brother James Peter. Mr. Jayaram’s house was damaged after a group of youths threw stones and set on fire to the furniture at the main entrance. Seeman was initially absconding but later got anticipatory bail.