Archive for the ‘கொண்டாட்டம்’ Category

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

ஜூன்13, 2019

புதுச்சேரி முந்திரி காட்டில் அனுமதி இல்லாமல் நடந்த போதை மருந்து பார்ட்டியும், விவகாரங்களும்: தமிழகம் போதை பாதையில் செல்கிறாதா? [1]

Puduchrry DJ Party 2019

குடித்து கும்மாளம் போது டீஜே பார்ட்டிகள் புதுச்சேரியில் சகஜம் தான்: புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. ரிசார்ட், ஹோம்ஸ்டே, குடில்கள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன[1]. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே[2]. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது[3]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. பாண்டிச்சேரி, புதுச்சேரி, ஆரோவில் என்றாலே இதெல்லாம் சகஜமான விசயம் என்றே ஆகிவிட்டது.  இவையெல்லாம் வெளிப்படையாகவே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு, ஓட்டல்களில் நடக்கின்றன[4]. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீகத்தைத் தேடிச் சென்ற பயணம் ரேவ் பார்ட்டியில் முடிந்து விட்டது என்று ஒருவர் எழுதியுள்ளதைப் படிக்கலாம்[5].  அதாவது, வாடிக்கையாளர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் சேவை செய்ய, தயாராக அந்தந்த தொழில்கள் செய்பவகள் தயாராக இருக்கின்றனர்.

Puduchrry DJ Party 2019-2

புதுச்சேரி, ஆரோவில், அரவிந்த ஆசிரமம்: குறிப்பாக ஶ்ரீ அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் – இரண்டில் எங்கே எது நடக்கிறது என்று செய்திகளில் குறிப்பாக தெரிவிக்கப் படுவதில்லை. ஆரோவில்லில் நடப்பதை ஆசிரமத்தில் நடந்தது என்றும், ஆசிரமத்தில் நடப்பதை ஆரோவில்லில் நடந்தது என்றும் செய்திகளில் குறிப்பிட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இல்லை ஆரோவில் அருகிலுள்ள ஆசிரமத்தில் நடந்தது என்றும் குறிப்பிடுவர்[6]. போதாகுறைக்கு திராவிட சித்தாந்திகள், பகுத்தறிவு வகையறாக்களும் இதில் சேர்ந்து கொண்டு குட்டையைக் குழப்பி வருகின்றன[7]. கம்யூனிஸ நித்தாந்திகள், இப்பொழுது ஊடகத்துறைகளில் பயிற்சி பெற்றவர்கள், தேர்ந்தவர்கள், தங்களுக்கே உரிய பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறர்கள். செய்திகளை போட்டு வருகிறார்கள். ஆரிய—திராவிட இனவெறி சித்தாந்தங்களில் ஊரியவர்கள் வடநாட்டவரை, வங்காள மொழிபேசுபவரை எதிரிகள் போல நடத்தி வருகின்றனர்[8]. ஆன்மீகம் என்று பேசிக்கொண்டு, இவர்கள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதில் குளிர்காய விரும்புகின்றனர்.

Puduchrry DJ Party 2019-3

போதைப் பொருட்களின் புழக்கம்: எல்லோருக்கும் பணம் கிடைத்து வருவதால் அமைதியாக நடந்து வருகின்றன. அயல்நாட்டவர்களை வைத்து செய்கின்ற வியாபாரம் அமோகவே நடந்து வருகின்றன. அதிலும், பணம் இல்லை என்ற நிலைக்கு வரும் நபர்கள் மூலம் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆரோவில்லில் நடப்பவை வெளியே வருவதில்லை. மற்றவற்றில், உள்ளூர்வாசிகள் எல்லைகளை மீறும் போது, பிரச்சினைகள் உண்டாகின்றன. ஏதாவது உட்பூசல் போன்ற விவகாரம் வந்தால் புகார்களாக வெளிப்படுகின்றன. ஆனால், “விவரம்” தெரிந்தவர் அந்த “வரயறைக்குள்” நடத்தி செல்கின்றனர். இதையொட்டி அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன[9]. இதனால் போதை அதிகமாகி அரை குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடுவதாகவும் புகார்கள் எழுந்தன[10]. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எப்படி புழக்கத்தில் உள்ளன என்று ஆராய்ந்தால், வேறு விவகாரங்கள் வெளிவரும்.

Puduchrry DJ Party 2019-4

போலீஸார் கண்காணிப்பு, எச்சரிக்கை முதலியன: ஆரோவில் அனைத்துலக விருப்பு-வெறுப்புகளுக்குட்பட்டதாக இருப்பதால், அரசியல் கலந்தே செயல்பட்டு வருகிறது. அதனை அரசுடமையாக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகளும் தடுக்கப் பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஆரோவில் போலீசார் இந்த விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி அதுபோன்ற ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதுபோல் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் இந்த கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது[11]. ஆனால் ஆரோ வில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன[12]. இதுபற்றி தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Puduchrry DJ Party 2019-11

வளைதளத்தில் விளம்பரம் கொடுத்து, ஜி.பி.எஸ் மூலம் கூட்டிய அதிநவீன ரேவ்பார்ட்டி: இந்தநிலையில் ஆலங்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தையொட்டிய முந்திரி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 08-06-2019 மது விருந்துடன் பெண்களின் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. “அரோரா Music contest” என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் கொடுக்காமல் 1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் Navigator (வழிகாட்டி) Map அனுப்பப்படுகிறது. மகாபலிபுரம் மாதிரியாக இருந்தாலும், மாட்டி கொள்ளாமல் இருக்க, இவ்வழி பின்பற்றின போலும். இந்த வகையில் புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடினார்கள். அங்கு அலங்கார மின்விளக்குகள், இசைக்குழு, மது பானங்கள், போதை பொருட்களுடன் மதுவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, சமூக வளைதளங்களில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்த நிகழ்சிற்கு பாதுகாக்கப்படும் காட்டிற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டது[13].

© வேதபிரகாஷ்

11-05-2019

Puduchrry DJ Party 2019-10

[1] தினத்தந்தி, புதுச்சேரி அருகே முந்திரி தோப்புக்குள் மது விருந்து அளித்து பெண்களுடன் https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4ஆபாச நடனமாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 10, 2019 05:15 AM

[2] A disc jockey, often abbreviated as DJ, is a person who plays existing recorded music for a live audience. Most common types of DJs include radio DJ, club DJ who performs at a nightclub or music festival and turntablist who uses record players, usually turntables, to manipulate sounds on phonograph records.

[3] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/10041439/Near-pondichery-Wine-party-with-women-at-midnight.vpf

[4] https://www.youtube.com/watch?v=jGJXSslYdl4

[5]  Nihal Bambulkar, In Auroville, My Search for Spirituality Ended at a Forest Rave Party, BY NIHAL BAMBULKAR AUG. 22, 2018 https://www.arre.co.in/first-person/auroville-spirituality-forest-rave-party-2/

[6] https://www.dinamalar.com/News_Detail.asp?Id=482439&Print=1

[7] உள்ளூர் நந்தி வர்மனை உதாரணமாகச் சொல்லலாம். இதைத் தவிர, தலித், பெரியார் போர்வைகளில் கிருத்துவ, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் வேலை செய்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள், தேதிமுக போன்றோரும் அவற்றின் அமைப்புகளும் வேலை செய்து வருகின்றன.

[8] http://secularsim.wordpress.com/2013/03/21/628-why-aurobindo-ashram-attacked-by-the-dravidar-kazhagam/

[9] விகடன், மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்! – கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ், வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/06/2019) கடைசி தொடர்பு:20:40 (10/06/2019).

[10] https://www.vikatan.com/news/tamilnadu/159470-viluppuram-police-arrests-16-near-pondicherry-border-over-organizing-mid-night-party.html

[11] தந்தி.டிவி, ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து, பதிவு : ஜூன் 10, 2019, 08:13 AM

[12] https://www.thanthitv.com/News/India/2019/06/10081334/1038816/Puducherry-Arrest-Liquor-Party.vpf

[13] The organisers had given wide publicity for the event on social media platforms and had enabled location sharing feature with Google Maps. The tickets were priced at ₹1,000 per couple. Some youngsters were also found peddling ganja at the party and had also procured IMFL from Puducherry. Mr. Jayakumar said the police trapped them by sending decoys who struck a deal with them in the guise of buying tickets for the event.Over 80 persons, including Aurovillians, foreigners and youngsters from Chennai, were attending the party. No permission was obtained for the event. The orchard is located close to a reserve forest, he said.

https://www.thehindu.com/news/cities/chennai/15-detained-ganja-seized-at-rave-party-near-auroville-township/article27702819.ece

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் (2)

ஜூலை27, 2013

மோடி-எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய-விரோத வேலைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்-கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் (2)

Letter to obama.LS1அமெரிக்காவின் இரட்டை வேடங்கள்: குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வருகிறது. அமெரிக்கா விசா வழங்கவே கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபரில் 12 கட்சிகளை சேர்ந்த 65 எம்.பிக்கள் கையெழுத்திட்டாதாக சொல்லப்படும், ஒரு கடிதத்தின் நகலை ஒபாமாவுக்கு பேக்ஸ் ஒன்றை அனுப்பியிருந்தனர். இந்நிலையில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க லாபியில் ஈடுபட்டிருந்தார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் நரேந்திரமோடி அமோக வெற்றி பெற்றதாலும் மற்றும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாலும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது[1].  நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்களது வெளிநாடு கொள்கை காரணமாகத்தான் நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து அவருக்கு விசா வழங்குவது பற்றி பரிசீலித்து முடிவு எடுப்போம்’’ என்றார்[2]. ஏற்கெனவே, ஐரோப்பிய யூனியன் மோடியை சந்தித்துப் பேசியுள்ளது.

Letter to obama.LS2முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்து வரும் தீஸ்தா செதல்வாத், கலவர இழப்பீடு பணம் கையாடல் செய்து விட்டார், என்று ஒரு முஸ்லிமே புகார் கொடுத்தபோது, அவர்களின் இரட்டை வேடங்கள் வெளிப்பட்டன. பணம், வியாபாரம் எனும் போது, பகிர்ந்து கொள்வதில் அவர்களது புத்தி வெளிப்பட்டு விடுகிறது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், ரபீக் அஹமது மோடியுடன் நெருக்கமாக இருக்கிறார். இவர் மீது எந்த முஸ்லிம் அமைப்பும் பத்வா போடவில்லை. ஏற்றுமதி-இறக்குமதி வணிகங்களில் அதிகமாக இருப்பது முஸ்லிம்கள்தான்.  பிறகு அவர்கள் மோடியை எதிர்த்துக் கொண்டிருந்தால், வியாபாரம் நடக்குமா? இதேபோல, பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடந்துவரும் பிரச்சாரத்தால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார்கள். இது முஸ்லிம்களின் வழக்கமான நாடக தந்திரங்கள் தாம். நாளைக்கு செக்யூலஸித்திற்கு இதெல்லாம் சிறந்த உதாரணம் என்றும் சொல்வார்கள். ஆனால், இப்பொழுது, மோடி அவர்களை பயத்தின் மூலம் கட்டுப் படுத்தி வருகிறார் என்று மற்ற முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள். பிறகு முஸ்லிம்களிலேயே, இத்தகைய வெவ்வேறு வெளிப்பாடுகள் ஏன் என்று தெரியவில்லை.

Letter to obama.LS3அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் இந்திய விரோத பிரச்சாரம்[3]:  அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் அதற்கு செக் வைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அதே பேக்ஸ் கடிதம் மீண்டும் ஒபாமாவுக்கு அனுப்பி தங்களது மதவெறியை “மோடி–எதிர்ப்பு” முகமூடியிட்டு வெளிப்படுத்தியுள்ளனர். இது வெறும் கேவலமான பிரச்ச்ச்சார யுக்தி என்பது தெரிந்து விட்டது. ஆனால் இந்த கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மறுத்தார். இதையெடுத்து திமுகவின் கே.பி. ராமலிங்கமும் மறுத்தார்[4]. அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் வியாபாரம் தான் முக்கியம். மோடி பிரதம மந்திரி ஆனால், அவருடன் தானே ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும். பிறகு அவர்கள் மோடியை எதிர்த்துக் கொண்டிருந்தால், இந்தியாவில் அமெரிக்க வியாபாரம் நடக்குமா? அப்பொழுது, அமெரிக்காவின் நிலை அசிங்கமாகி விடும். எனவே, தேர்தலுக்கு முன்னமே, தனது நிலைப்பாட்டை சரிசெய்து கொண்டு விடும் என்று நினைக்கிறது போலும்.

Letter to obama.LS4சீதாராம் யெச்சூரி தான் கையெழுத்திடவில்லை என்று மறுத்தார்: இக்கடிதத்தில் மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன், அலி அன்வர் அன்சாரி (ஐக்கிய ஜனதா தளம்), எஸ்.அகமது (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்ட எம்.பி.க்களும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்[5].  ஆனால், சீதாராம் யெச்சூரி, ராஜ்யசபா எம்.பி,, தான் அந்த கடித்திலும் கையெழுத்திடவில்லை என்றும்[6], அது ஏதோ “வெட்டி-ஓட்டிய” வேலையாகத் தெரிகிறது என்கிறார்[7].

The latter includes the signature of Sitaram Yechury of the CPI; however, he told NDTV that this appears to have been “a cut and paste job.”He added, “I would be the last person to write to the US Administration and to do something like this. We don’t want anyone to interfere in the internal affairs of the country. These are issues which will have to be settled in India politically.

மேலும் அக்டோபர் 2012ல் எழுதப்பட்ட அந்த கடிதங்களை, இப்பொழுது, ஒரு முஸ்லிம் ஆதரவு இயக்கம் – மனிதக்கொலைகளுக்கு எதிரான கூட்டணி [Coalition Against Genocide (CAG)] ஆதரிக்கிறது என்று இன்னொரு முஸ்லிம் இணைதளம் – “டூ-சர்கிள்ஸ்” வெளியிட்டுள்ளது[8]. அதன் இணைதளத்தில் உள்ள பதிவுகள் மோடிக்கு எதிராக உள்ளன[9]. ஜூலை 1, 2008ல் எழுதப்பட்ட ஒரு கடிதம் இங்குள்ளது[10]. அமெரிக்காவில் இப்படி முஸ்லிம் சார்புடைய இயக்கங்கள், மோடி-எதிர்ப்பு என்ற பெயரில், இந்திய—விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது[11]. இந்தியர்களை எதிர்த்துக் கொண்டிருந்தால், நாளைக்கு இந்தியர்கள் அதனை உணர்ந்தால், என்னவாகும்? சி.ஏ.ஜி என்ற பெயரை வைத்துக் கொண்டு “சி.ஏ.ஜி.ரிபோர்ட்” என்று மோடிக்கு எதிராக அறிக்கை ஒன்றையும் தயாரித்து இணைதளத்தில் போட்டுள்ளது[12]. சாதாரணமான மக்கள் இதனை “சி.ஏ.ஜி. ரிபோர்ட்” என்றே எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

Letter to obama.3காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக என்று அனைவரும் மறுப்பது ஏன்?: இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்து விட்டால் அவரது ‘இமேஜ்’ உயர்ந்து விடும் என்ற பயத்தில் இந்த கடிதம் அவசரம், அவசரமாக எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறாமலே தயாரிக்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. 65 எம்.பி.க்களின் கையெழுத்து இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் அந்த கடிதத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி தலைவர்கள் கையெழுத்து போட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த கடிதம் தில்லுமுல்லு செய்து தயாரிக்கப்பட்ட மோசடி கடிதம் என்று இப்போது தெரிய வந்துள்ளது[13]. தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், இடது சாரி கட்சிகளின் எம்.பி.க்கள் விளக்கத்தால், ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பது உறுதியாக உள்ளது. அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் வேறு ஆவணங்களில் போட்ட கையெழுத்தை வெட்டி பிரதி எடுத்து, ஒட்டி மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்களின் கையெழுத்தும் இப்படி தில்லுமுல்லு செய்துதான் தொகுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. மோடி பிரதம மந்திரி ஆனால், கூட்டணி ஆட்சியில் யாரையாவது ஆதரித்தால் தான் பிழைப்பு நடக்கும் என்று எம்பிக்களுக்குத் தெரியும். அதனால், “நான் போடவில்லை”, என்று மறுக்கிறார்கள் போலும்!

Letter to obama.2அரசியல் மோசடியா, செக்யூலரிஸ விபச்சாரமா?: மோடிக்கு எதிராக சிலர் திட்டமிட்டு இந்த மோசடியை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அரை குறை வேலையால் இந்த தில்லுமுல்லு வெட்ட வெளிச்சமாகி விட்டது. மோடிக்கு எதிராக நடந்துள்ள இந்த சதி பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு  ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தகா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. சுதர்சன் பகத் ஒரு கடிதம் அனுப்பிய்யுள்ளாறர்[14]. அதில், ‘‘ஒபாமாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில் நாங்கள் கையெழுத்து போடவில்லை என்ற பல எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இது மோசடி செயலுக்கு நிகரானது.  எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள்[15]. Letter to obama.1செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா தளம், திமுக போன்ற அரசியல் விபச்சாரிகளுக்கு மோசடி செய்வது என்பது சகஜமான வேலைதான். பிஜேபி மதவாத கட்சி என்று சொல்வதால், தங்க்களுக்கு “செக்யூலரிஸ” சான்றிதழ் கிடைத்து விடுகிறது என்று அரசியல் செய்து வருகின்றார்கள். ஆனால், உண்மையில் இந்த கட்சிகள் தாம் வெறிபிடித்த மதவாத கட்சிகள் என்பது மக்கள் அறியும் போது, தூக்கியெறியப்படுவார்கள். சரித்திரத்தில் அவர்கள் யாரும் நினைத்துப் பார்க்கப் போவதில்லை.

வேதபிரகாஷ்

© 27-07-2013


தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

மே24, 2013

ஆசாத் ரௌபின் “சிலீஸ்” கதை பழையது. ஆதை இப்பொழுது மறுபடியும் எடுத்து, புதியது போல படம் போட்டுக் காட்டுகிறார்கள். ஆகவே, இது மறுபடியும் பதிவூட்டப்படுகிறது.

Asad Rauf with Leena Kapoor1

லீனா கபூர் என்ற மும்பை மாடல் மற்றும் அழகி அசாத் ரௌப் தன்னுடன் இருந்து வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார்.

Asad Rauf with Leena Kapoor2

ஆனால், அம்பயரான ரௌப், இந்த தடவை தனது கிரிக்கெட்டில் “கிளீன் போல்ட்” ஆனாலும், முதலில் மறுத்தார்.

Asad Rauf with Leena Kapoor3

நொந்து போன லீனா அவர் எப்படி தன்னுடன் இருந்தார், சாப்பிட்டார், கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார் என்பதையெல்லாம் விளக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டார்.

Asad Rauf with Leena Kapoor4

ஆனால், அவருக்கு புகாரை வாபஸ் வாங்கிக் கொள் என்று மிரட்டல்கள் வந்தன என்பதையும் தெரிவித்தார்.

எது எப்பட் இருப்பினும், கிரிக்கெட் ஆடும் ஆட்டக்காரர்களுக்கு, அதிலும் “அம்பயர்” என்ற இந்த ஆள் இதுமாதிரி செய்யலாமா?

கிரிக்கெட் விளையாட்டைஆசிங்கமக்கலாமா, ஆபாசமாக்கலாமா,……………என்று ரசிகர்கள் கொதிப்புடம் கேட்கத்தான் செய்கிறார்கள்.

குறிப்பு: புகைப்படங்கள் இணைத்தளத்திலிருந்து எடுத்து உபயோகப் படுத்தப் பட்டுள்ளன. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் எடுத்தாளப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு நன்றி.

இஸ்லாம்-இந்தியா

இஸ்லாம், செக்ஸ், கிர்க்கெட், சூதாட்டம்: தொடரும் உல்லாசங்கள்!

 

பாகிஸ்தான் கிரெக்கெட் வீரர் மீது செக்ஸ் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்றாலே செக்ஸ்[1], போதை மருந்து, பெட்டிங் / சூதாட்டம்[2] என்றுதான் வழக்கமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது[3].  சோயப் மாலிக்கின் மீது புகார்கள் வந்தன, ஆனால் அவர் சானியாவுடன் திருமணம் செய்து கொண்டார்[4]. இப்பொழுது இன்னிமொரு பாலியல் புகார் வந்துள்ளது.  பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராவுப். பழைய இலங்கை கிரிக்கெட் வீரரான இவர்[5], பல்வேறு சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் வந்துள்ளார்.  சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போதும் இந்தியா வந்துள்ளார். 56 வயதாகும் ஆசாத் மீது மும்பையைச் சேர்ந்த 21 வயது முன்னணி மாடல் அழகி லீனா கபூர் மும்பை துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகவ்கரைச் சந்தித்து செக்ஸ் புகார் கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது[6]:-

56 வயதான ஆன் 21 வயது பெண் சந்தித்தால் எப்படி காதல் வரும் இல்லை செக்ஸ் வரும்?: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராவுப்பை இலங்கையின் ஒசிவாராவில் 6 மாதங்களுக்கு முன் சந்தித்தேன். அவர் என்னிடம் நட்பு முறையில் பழகினார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம். 3 நாட்கள் இலங்கைத் தீவில் தங்கி உல்லாசமாக இருந்தோம். அப்பொழுது…

View original post 767 more words

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (3).

மே23, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (3).

Stalin cricket September 2010ஸ்டாலின் தனக்கு பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட் என்று கூரிக் கொண்டதுடன், தனது இணைதளத்தில் பாட்டை வைத்துக் கொண்டு ஆடுவதைப் போல, இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்[1]. இதைத் தவிர கிரிக்கெட்டும் ஆடியுள்ளதாகத் தெரிகிறது. பார்ப்பன விளையாட்டை இவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதெல்லாம் தெரியவில்லை.

Stalin-cricket-2010மார்ச் 16, 2008: அன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றலும், ஸ்டாலின் சிறந்த பௌலர் என்று அங்கீகரிக்கப்படார்.

Aryan-dravidian spectrum and cricket scams6For a cricket frenzied Chennai, beating an Australian team always brings joy. It becomes a greater entertainment, when the home team is filled with politicians, cine and sports stars. Add to it, Local Administration Minister and son of Chief Minister, MK Stalin walking away with the best bowler award. What else can one ask for on a Sunday afternoon? This is what unfolded at the Pachiappas College MRF Pace Foundation ground in the city on March 16, when the Tamil Nadu Chief Minister’s XI met Premier South Australia XI in a Twenty20 friendly match. Stalin led the home team against South Australian premier Mike Rann’s visiting team. Unlike the recent India-Australia matches, the one organised by the State Government and the Sports Development Authority of India was filled with all fun and no anger.

Aryan-dravidian spectrum and cricket scams7After Stalin won the toss and elected to bat, cricketer Dinesh Kaarthick and Handloom Minister NKKP Raja opened the innings. Raja was bowled out for a duck, and in came the Stalin, the crowd, which seemed to be quiet jumped into life and started cheering their Thalapathi. However, Stalin retired the very next over scoring just one run. Replacing him was former cricketer Srikkanth who was bowled out for 17 by Senior Trade Commissioner, India, AK Tareen. All this while, Dinesh Kaarthick was smashing sixes and fours and retired after scoring 73, the highest score in the team. Highways Minister Vellakoil Saminathan scored four.

Aryan-dravidian spectrum and cricket scams8While Fisheries Minister KPP Sami, Higher Education Minister K Ponmudi and Dairy Development Minister were out for ducks, actor Jeeva scored 41. Ashok Ponmudi, son of Ponmudi, added 14 to the score while actors Srikanth, Vikranth and Ramesh con tributed 2, 7 and 9 respectively. The TN Chief Minister’s side scored 191 runs in 20 overs. For the fielding side, AK Tareen took two wickets. Initially what seemed to be an achievable target for the the South Australians, started looking like a distant dream as many batsmen from the Aussie side were out for single digits. The highlight was Mike Rann getting out for a duck in Stalin’s over. Stephen Parsons, an official from the University of South Australia, top-scored for the visitors with 45. When the Premier South Australia XI were all out for 124 runs with nine balls to spare, the crowd celebrated.

Aryan-dravidian spectrum and cricket scams9சிறந்த பௌலர் ஸ்டாலின்: Stalin was adjudged the best bowler while Dinesh Karthik was the best batsman. Stephen Parsons was declared the best all rounder and AK the man of the match. Governor Surjith Singh Barnala presented both teams with a bat signed by Sachin Tendulkar. “Today was more than a competition,” Thiru Stalin said. “It is about improving cooperation and friendship, and furthering ties between the two states. It is about creating a conducive environment to develop friendship.

Aryan-dravidian spectrum and cricket scams10”So no sledging then? “Definitely no sledging,” he confirmed.Mike Rann, the South Australian Premier, shared his sentiment. “We’re having a great mining boom and economic growth in South Australia, but we are short of people,” Mr. Rann said. “We are here to recruit migrants and students to come from our sister-state Tamil Nadu and share in this growth.” Judging by India’s recent cricket history, you might not think that staging a cricket match between Indians and Australians is the best way to foster friendship. But believe it or not, it worked this Sunday afternoon[2].

Stalin cricket with Srinanth brahminமார்ச் 31, 2008 – ஸ்டாலின்பௌலிங்மற்றும்ஶ்ரீகாந்த்பேட்டிங்: திராவிடப் பழங்களான அண்ணதுரை மற்றும் கருணாநிதி பிறந்த நாட்களில் கிரிக்கெட் விளையாட, ஶ்ரீகாந்த போன்ற பார்ப்பன கிரிக்கெட்காரர்களை அழைத்து, ஸ்டாலின் விளையீடி இருக்கிறார் என்றல், அதற்கு, வீரமணி என்ன செய்தார்? பகுத்தறிவுப் பகலவன் வழை வந்து, திடராவிடத்தில் ஊறிய அண்ணதுரை மற்றும் கருணாநிதி பிறந்த நாட்களில் பார்ப்பனீய கிரிக்கெட்டை ஆடலாமா? யாரும் கேட்கவில்லையே? இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இந்த திராவிட-ஆரிய கூத்து கோபாலபுரம் மைதானத்தில் நடந்தது. இவ்விவரங்களைக் கொடுப்பது, திருவாளர் ஸ்டாலின் இணைதளம் தான்[3]. ஆற்காடு வீராசாமி, நேரு போன்ற அமைச்சர்கள் பார்த்து ரசித்தார்கள். 2000களிலேயே கிரிக்கெட் ஊழல் அம்பலமாகி விட்டபடியால், எவ்வாறு திராவிடர்கள் இதனை ஏற்றுக் கொண்டு நடத்தனார்கள் என்ரு தெரியவில்லை.

Stalin cricket players with his logo baniansசெப்டம்பர் 5, 2010 – ஸ்டாலின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய கிரிக்கெட்: சென்னையில் 05-09-2010 அன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக விளையாட்டு வளர்ச்சி ஆணைய உறுப்பினர் செயலாளர் சத்யப்ரதா சாஹூ கூறுகையில், தமிழகத்திற்கும், தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது[4]. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இப்போட்டி மெரீனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் லெவன் அணிக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு அந்த மாநில முதல்வர் மைக்ரான் தலைமை தாங்கினார். வெற்றி பெறுபவர்களுக்கு ஆளுநர் பர்னாலா கோப்பையை வழங்கினார். தமிழக முதல்வர் லெவன் அணியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் இடம் பெறுவர். திரைப்பட நடிகர்களும் இடம் பெறுகிறார்கள் என்றார்[5].

Stalin cricket players with his logo banians girls tooமாட்ச் நடந்தே விட்டது: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் நடத்தப்பட்ட “நட்பு’ கிரிக்கெட் போட்டியில், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி வெற்றி பெற்றது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வரின் தமிழக அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா மாகாண முதல்வர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே, சென்னை திருவல்லிக்கேணி மெரீனா கிரிக்கெட் மைதானத்தில், “நட்பு’ கிரிக்கெட் போட்டி நேற்று மாலை நடத்தப்பட்டது[6]. தமிழக அணியில்  துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சபீதா ஐ.ஏ.எஸ்., மற்றும் திரைப்பட நடிகர்கள் உட்பட 15 பேர் இடம் பெற்றிருந்தனர். தெற்கு ஆஸ்திரேலியா முதல்வர் மைக்ரான் தலைமையிலான அணியில் பீட்டர் வர்கீஸ், மைக்கேல், துஸ்கர் அகர்வால் உட்பட 12 பேர் இடம் பெற்றிருந்தனர். பத்து ஓவர் போட்டியாக இது நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து ஓவரில் நான்கு விக்கெட் இழந்து 37 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி, ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் பெற்று வெற்றியடைந்தது.

Stalin bowlingஸ்டாலினுக்கு மேன்ஆப்மேட்ச்பரிசுவழங்கப்பட்டது: “மேன் ஆப் மேட்ச்’ பரிசு துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், அவருடன் இணைந்து விளையாடிய அசோக், பொன்முடிக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணியினருக்கும் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பரிசு வழங்கி பாராட்டினார். இப்போட்டி குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் கூறும் போது, “”ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் ஏராளமானோர் உயர் கல்வி கற்று வருகின்றனர். ஆஸ்திரேலியா – இந்தியா மாணவர்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் இருநாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் சார்பில்  இப்போட்டி நடத்தப்பட்டது,” என்றார். போட்டியின் இடைவேளையின் போது, “எத்திராஜ் கல்லூரி, சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மற்றும் ஷிவாணி நாட்டியாலயாவின் ஷாலினி விஸ்வநாதன் மற்றும் பிரகாஷ் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதென்ன, ஒரே பார்ப்பனக் கூத்துகளக இருக்கின்றனவே, திருமாவிடம் கான்டிராக்ட் கொடுத்திருந்தால், தாரை-தப்பட்டைகளோடு வந்து ஆட்டம் போட்டிருப்பார்களே[7].

Karunanidi award to Dhoni, Ashwini etc 2011ஆரிய விளையாட்டிற்கு திராவிட தலைவர் கோடிகளை அள்ளிக் கொடுத்தது – 05-05-2011: உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ.4 கோடி பரிசுத் தொகையை முதல்வர் கருணாநிதி 05.05.2011 அன்று வழங்கினார். அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் முதல்வரிடம் இருந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்[8]. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்று 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. மத்திய, மாநில அரசுகளும் பரிசுகளை அறிவித்தன.

Karunanidi award to Dhoniகோடிகளை அள்ளிக் கொடுத்த திராவிடத் தலைவர்: இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி பரிசுத் தொகை வழங்கும் விழா, புதிய தலைமைச் செயலகத்தில் 05.05.2011 அன்று காலை 11.15 மணிக்கு நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

Stalin-took-dhoni--raina-around Sec.complexவீரர்களுக்கு பொன்னாடை, பாராட்டு: விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின் கலந்து கொண்டனர். முதல்வர் கருணாநிதி, கேப்டன் டோனியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதேபோல சுரேஷ் ரெய்னாவுக்கும் முதல்வர் பொன்னாடை அணிவித்து காசோலை வழங்கினார். மற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகையை கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடியை முதல்வர் வழங்கினார். இங்கு சாதி பார்த்து கொடுத்தார்களா என்று தெரியவில்லை. வீரமணி போன்றோர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரியவில்லை.

Dayanidhi bowling Stalin battingடோனி, அஸ்வின் நன்றி தெரிவித்தனர்: இதுகுறித்து டோனி கூறுகையில், “முதல்வரிடம் நேரில் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எங்களை நேரில் அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமிழக வீரர் அஸ்வின் கூறுகையில், “முதல்வரிடம் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி” என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு, டி.பி.எம்.மைதீன்கான், தலைமைச் செயலாளர் மாலதி, அட்வகேட் ஜெனரல் ராமன், இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன்[9] மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Arayan-dravidian nexusபுதியசட்டமன்றபேரவைவளாகத்தைச் சுற்றிப் பார்த்த வீரர்கள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், புதிய சட்டமன்ற பேரவை வளாகத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், கருணாநிதிக்கு வணக்கம் தெரிவித்து விடைபெற்றனர். அதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை மு.க.ஸ்டாலின் புதிய சட்டமன்ற பேரவை வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். பேரவையினை பார்வையிட வருகை தந்த கிரிக்கெட் வீரர்களை இரா.ஆவுடையப்பன் வரவேற்றார். அவரை மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பேரவையினை எம்.எஸ்.டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பார்த்து வியந்து, மகிழ்ந்தனர். பேரவையின் பல்வேறு மாடங்களையும், சிறப்பு அம்சங்களையும், கிரிக்கெட் வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விளக்கி கூறினார். பின்னர், பேரவையில் நின்றவாறு கிரிக்கெட் வீரர்கள் மு.க.ஸ்டாலின், ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பேரவையினை சுற்றிக்காண்பித்து, தங்களை சிறப்பித்த மு.க.ஸ்டாலினுக்கு கிரிக்கெட் வீரர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டு விடை பெற்றனர். பிறகு அவர்களை, தலைமைச்செயலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்[10].

Spectrum corruptionதுபாயிலும் கிரிக்கெட் நடப்பது ஆச்சரியம் தான்: U.A.E.தமிழ் சங்கமும் துபாயில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்கிறது[11]. இதற்கான விவரங்களும் தெரிவிக்கப்படுகின்றன[12]. ஆனால், தாவூத் இபாஹிம் மற்றும் வனுடைய ஆடகள் அங்கேயே இருப்பதலால், மேட்ச் பிக்சிங் நடந்ததா இல்லையா என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஒருவேளை டி-கம்பனி மற்றும் இதர புக்கீஸ்களே ஸ்போன்சர் செய்து விட்டார்களோ என்னமோ?

Mumbai D-co nexus IPL bettingதுபாயில் கிரிக்கெட் நடந்தால், அபுதாபிகாரர்கள் சும்மா இருப்பார்களா?: அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ.டி.எஃப்.சி. அணி வெற்றி பெற்றது. அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்ட‌ம் நேஷ‌ன‌ல் ட‌வ‌ர் ஸ்டேடிய‌த்தில் கடந்த 18ம் தேதி டிசம்பர் 2011 ந‌டைபெற்ற‌து[13]. இப்போட்டிக‌ளில் ஆறு  அணிகள் பங்கேற்றன. ஏ பிரிவில் அபுதாபி ஸ்டார், பிரேவ்ஸ்  ப‌ட்டாலிய‌ன், ஈடிஏ மெல்கோ ஆகிய 3 அணிக‌ளும், பி-பிரிவில் பைட்ட‌ர்ஸ் 11, ஏ.டி.எஃப்.சி., எம்.எம்.சி.சி. ஆகிய 3 அணிகளும் பங்கேற்றன. வெற்றிக் கோப்பையை ஸ்பான்ச‌ர் செய்த ஈடிஏ மெல்கோ[14] மேலாள‌ர் முஹ‌ம்ம‌து உம‌ர் அன்சாரி ஏ.டி.எஃப்.சி. அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிக‌ளை சிறப்பாக நடத்தித் தந்த எம்.எம்.சி.சி. அணியின் நிர்வாகிக‌ள் பிஎஸ் காஜா மொஹிதீன், த‌ப்ரே ஆல‌ம் மற்றும் அந்த அணிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது[15].

Yasin malik with his wifeஆரிய-திராவிட சித்தாந்தம் அமீரகத்தில் பேசப்படுவதில்லையா?: அமீரகத்தில் தமிழர்கள் ஆரியம்-திராவிடம் என்று பிரித்துப் பேசப்படுவதில்லை போலும். இருப்பினும் திராவிடத் தலைவர்கள், சித்தாந்திகள், பேச்சாளிகள், எழுத்தாளர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். ஒருவேளை அப்படி பேசினால், பருப்பு வேகாது என்று சுமுகமாகப் பேசி, வந்துபோவதற்கான காசு வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

23-05-2013


[3] Sports events on Anna, Kalaignar birth anniversaries: Stalin, Chennai | Monday, March 31 2008 IST, http://mkstalin.net/news/31March2008/chennai_cricket.html

[7] குறிப்பு: தமாஷாவிற்காக இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. சித்தாந்தம் பேசி மக்களை திசைத் திருப்பும் இவ்ர்கள், அவவ்வப்போது, கொள்கைகளையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் படுகிறது.

[9] இப்பொழுதுள்ள என். சீனிவாசனா, அல்லது வேறொருவரா என்று தெரியவில்லை.

[14]  Genex holds a 5.27% stake in Etisalat DB (earlier called Swan Telecom), which is under scrutiny for its alleged link with Dubai-headquartered firm ETA Star that is implementing many projects in Tamil Nadu and is said to be close to the ruling DMK party headed by chief minister K Karunanidhi. A Raja, who lost his job as telecom minister on Sunday over the 2G scam, is a member of the DMK. ETA Star had close ties with the DMK chief, having bagged several projects in Tamil Nadu. the financial connections between Karunanidhi and the ETA directors

http://articles.economictimes.indiatimes.com/2010-11-17/news/27624585_1_eta-star-spectrum-scam-shahid-balwa.

As per the charge sheets of CBI, a bribe of Rs. 200 crore was given by Swan Telecom Pvt. Ltd. (now M/s Etisalat DB Telecom Pvt. Ltd.) to Kalaignar TV through a number of intermediary companies in the garb of loan or share application money.

http://www.thehindu.com/news/national/2g-scam-ed-to-attach-properties-worth-rs-223-cr/article2790423.ece

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (2).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (2).

Sun risers -Sri Lanka- riticized2தமிழகத்தில் கிரிக்கேட்டை இனவெறி ரீதியில் வாதிப்பது: தமிழகத்தில் 1960களிலிருந்து திராவிட சித்தாந்தம் பேசப்பட்டு வருகின்றது. ஆரியர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்து, திராவிடர்களை வென்று, அவர்களது கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை திராவிடர்களின் மீது திணித்தார்கள் என்று பேசுவது, எழுதுவது நடந்து வந்தது. 1990களில் சரித்திர ஆசிரியர்கள், தொல்துறை நிபுணர்கள் முதலியோர் அத்தகைய வாதங்கள் எல்லாமே சரித்திர ஆதாரமற்றவை, மாயை என்று ஒதுக்கிவிட்டால் கூட, அவ்வப்போது, இச்சித்தாந்திகள் “ஆரிய-திராவிட” தொணியில் பேசுவார்கள். கிரிக்கெட்டும் இதில் விதிவிலக்கல்ல. கபில் தேவை “திராவிடன்” என்று வர்ணித்து எழுதினர். அதற்கு முன்பாக கிரிக்கெட் ஆரியமயமாக்கப் பட்டிருந்தது என்றும் வாதித்தனர். அதாவது பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தது என்றும் பிரச்சாரம் செய்தனர்.

Sun risers -Sri Lanka- riticized4வடஇந்தியர்களின் தாக்கம் அதிகம் தான்: இந்தியாவைப் பொறுத்த வரையில் பார்ஸிஸ் எனப்படும் இரானியர்கள் – அந்த மக்களின் வியாபாரிகள் தாம் 19ம் நூற்றாண்டு இறுதியில் பிரபலமாக்கினர். சிலருடைய கருத்தின் படி, மும்பையில் கிரிக்கெட் வகுப்புவாத ரீதியில் ஏற்படுத்தப்பட்டது. கல்கட்டாவில் நடுத்தர சமூகத்தினரின் பொழுது போக்காக இருந்தது.  மதராஸில் ஆங்கிலேயரை வெல்வதில் பெருமைக் கொண்டனர். ஹாக்கியில் தேசியத்தைப் போறிய இந்தியர்கள், திடீரென்று 1970களில் கிரிக்கெட்டில் மோகம் கொள்ள ஆரம்பித்தனர். இந்திய-பாகிஸ்தான் போட்டிகள் யுத்தமாகவே சித்தரிக்கப் பட்டன. அதனால், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் வென்றபோது கொண்டாடினர். இதனை, இந்தியர்கள் வெறுத்தனர், குறைகூறினர். பிறகு, வீரர்களையும் போற்ற ஆரம்பித்தனர். இதனால், ரசிப்புத்தன்மை வெறியாக மாறியது.

Sun risers -Sri Lanka- riticized3பாலிவுட்டுடன் சேர்ந்த மும்பை கிரிக்கெட்: 2001ல் மைக் டென்னிஸ் என்பவர் பந்தை உருகுலைக்கும் காரணத்திற்காக, சச்சின் டென்டுல்கருக்கு ஒரு ஆட்டத்திற்கு தடை விதித்தார். அப்பொழுது, ரசிகர்கள் கொதித்து, அவரது கொடும்பாவியை எரித்து ஆர்பாட்டம் செய்தனர். பிசிசிஐ அப்பொழுது ஐசிசியிலிருந்து விலகிக்கொள்வோம் என்று கூட மிரட்டியது. கிரிக்கெட் பாலிவுட்டின் வியாபாரப் பொருளாகவும் மாற்றப்பட்டது. “லகான்” என்ற திரைப்படத்தில் கிராமத்து மக்கள், ஆளும் ஆங்கிலேயரை கிரிக்கெட்டில் தோற்கடிப்பது போல காட்டினர். தொடர்ந்து இக்பால், ஹாட்ரிக், சே சலாம் இந்தியா என்று பல படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டன.

Sun risers -Sri Lanka- riticized5தென்னாப்பிரிக்காவின் இனவெறி: தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர்கள் இனவெறி சித்தாந்தத்தினால், கருப்பர்களுடன் விளையாட மாட்டோம் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தனர். இந்தியா 1970ல் தான் முதன் முதலில் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ரு விளையாடியது. அப்பொழுது வெள்லையர்கள் இந்தியர்களை ஒருமாதிரித்தான் பார்த்தனர், நடத்தினர். 1991ல் பாகிஸ்தானியர் இந்தியாவில் ஆட மறுத்தனர். இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்திய வீரர்கள் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தான் அங்குச் சென்று விளையாடி வந்தனர். இதைப் பற்றியெல்லாம் எந்த திராவிட சித்தாந்தியும் அறிவதில்லை, அலசுவதில்லை, ஆராய்ச்சி செய்வதில்லை. இருப்பினும் ஆரியம்-திராவிடம், பார்ப்பனீயம்-பிராமணம் என்று பேசிக் கொண்டிருப்பர்.

Sun risers -Sri Lanka- riticized6ஆஸ்திரேலியர் இனவாதிகள் தாம்: ஆஸ்திரேலியர்கள் ஆரம்பத்திலிருந்தே இனசித்தாந்த்தில் பிடிப்புள்ளவர்களாக இருந்தனர். இந்தியர்கள் அங்குச் சென்று விளையாடுவது மிகவும் கடுமையாக இருந்தது. அதே நேரத்தில், அவர்கள் இந்தியாவில் வந்து ஆடவேண்டும் என்றால் ஏகப்பட்ட கன்டிஷன்களை போடுவார்கள். ஆனால், இந்தியர்கள் அவர்களை நன்றகத்தான் நடத்தியுள்ளார்கள். 1986ல் ஒரு ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் – டீன் ஜோன்ஸ் வாந்தியெடுத்தபோது, இந்தியர்கள் உதவினர். அப்பொழுது எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை.

Dean Jones vomiting at Chepauk 1986 courtesy Wisdenசென்னை சிதம்பரம் ஸ்டேடியம்: சென்னையில் சிதம்பரம் ஸ்டேடியம் 1916ல் ஆரம்பிக்கப்பட்டது. பிசிசிஐ 1928ல் மும்பையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் 1932ல் தொடங்கியது[1].  ரஞ்சித் டிராபி போட்டி 1934ல் தொடங்கியது. இதில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் யார் என்பது படித்துத் தெரிந்து கொள்ளலாம். அப்பொழுது, இவ்விஷயங்களில் ஏன் திராவிடவாதிகள் அல்லது அத்தகைய அரசியல்வாதிகள் இதை எதிர்க்கவில்லகென்று தெரியவில்லை. பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் தோன்றி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, எப்படி இத்தகைய பிரபலமான கிரிக்கெட்டை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அதிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டித்தான் அப்பொழுது மேட்சுகளே நடக்கும். தமிழர் திருவிழாவை பாதிக்கும் முறையில் நடத்தினார்களா, அதனை எதிர்த்தார்களா என்று தெரியவில்லை.

Indian cricketers of those days1967 முதல் 1987 வரை: திராவிட கட்சிகளின் ஆதிக்கம், இக்காலத்தில் அதிகமாக இருந்தது. அப்பொழுது பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி எதிராக யாரும் பேசிவிட முடியாது. அப்படி பேசினால் அவர்கள் கதி அதோகதிதான்[2]. 1967-68களில் இந்தியா நியூஸிலாந்த்தை அவர்கள் நாட்டிலேயே வென்றது. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கீழ்கண்ட ஆண்டுகளில் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான போட்டிகள் நடந்துள்ளன.

1972-73 இங்கிலாந்து

1974-75 மேற்கு இந்திய தீவுகள்

1976-77 நியூசிலாந்து, இங்கிலாந்து

1978-79 மேற்கு இந்திய தீவுகள்

1979-80 ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்

1981-82 இங்கிலாந்து

1982-83 இலங்கை

1984-85 மேற்கு இந்திய தீவுகள்

1969 பிப்ரவரியில் அண்ணாதுரை இறக்கும் வரையிலும், அவர் கிரிக்கெட்டிற்கு எதிராக யாதாவது பேசினாரா என்று தெரியவில்லை. பிறகு வந்த கருணாநிதி மாநில சுயாட்சி பற்றி பேசும் போதும், அதில் கிரிக்கெட் வரவில்லை. பெரியார் 24-12-1973ல் காலமானார், ஆனால், அவர் கிரிக்கெட்டிற்கு எதிராக யாதாவது செய்தாரா என்ற குறிப்புக் காணப்படவில்லை. அப்பொழுதெல்லாம் இத்தகைய பேச்சுகளோ, பிரச்சினகளோ, ஊழல்களோ இருந்ததில்லை. பழையதைப் பற்றி நினைவு கூர்ந்தாலும், சந்தோஷமாகத்தான் இருக்கும்[3]. ஆனால், இவற்ரையெல்லாம் விடுத்து அவர்கள் அலசப்படுத்துவது இதோ இப்படித்தான் உள்ளது.

EVR-karu-atheist-path-of-jihadiகிரிக்கெட் ஒரு பார்ப்பனீய விளையாட்டு, அவர்களுக்குத் தான் வரும்: சென்னை மெரினாவில் கிரிக்கெட் ஆடக்கூடாது என்று போலீஸார் தடைவிதித்தனர். திராவிட சித்தாந்தி சின்னக் குத்தூசி, “கிரிக்கெட் விளையாட்டையும், மெரினாவில் கிரிக்கெட் ஆடுவதையும் ஆதரித்து, தினமணி வைத்தியனாத அய்யர் தலையங்கம் எழுதியிருக்கிறார்.  என்ன காரணம் என்றால் (ஓட்டப் பந்தயம்), (தடை ஓட்டம்), (நெடுந்தூர ஓட்டம்), (நீளம் தாண்டுதல்), (உயரம் தாண்டுதல்), (மும்முறை தாண்டுதல்), (குண்டு எறிதல்), (தட்டு எறிதல்), (ஈட்டி எறிதல்), (நீச்சல்), (தடகளம்), (கூடைப்பந்து), (வளைகோல் பந்து), (கையுந்துபந்து), (கால்பந்து), (கராத்தே), (குத்துச்சண்டை), (கபடி) என்று எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் அதெல்லாம் பார்ப்பனச் சிறுவர்களின் பூப்போன்ற உடலமைப்புக்கு ஒத்து வராது! பார்ப்பனர்களின் ஒரே விளையாட்டு கிரிக்கெட்தான்! மெரினாவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் யார்? மாம்பலம் – மைலாப்பூர் – திருவல்லிக்கேணிப் பகுதிகளைச் சேர்ந்த பார்ப்பனச்சிறுவர்கள்தான்! மெரினாவில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிப்பதால் – இந்த மூன்று பகுதிப் பார்ப்பனச் சிறுவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நஷ்டம்?”, என்று முடிக்கிறார். இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய இடம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்யர் – அய்யங்கார் பிரச்னை பெரிதாக இருக்கிறதாம். எஸ்.வி.டி. சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், ராமன், சடகோபன் ரமேஷ் என்று அய்யங்கார்கள் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவராமகிருஷ்ணன், வி.வி.குமார் என்ற இருவர் மட்டும்தான் அய்யர்கள் என்கிறது சேப்பாக்க கிரிக்கெட் வட்டாரம்[4]. டிராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரைக் கூட இனவாத ரீதியில் திராவிட சித்தாந்திகள் அலசும் போக்கை என்னென்பது[5]. ஆனால், இப்படியெல்லாம் அலசிவிட்டு, இப்படியும் சொல்கிறர்கள்.

2G - Karu-wife - cartoonபார்ப்பனர் அல்லாதவர் தலைமை தாங்கியதால் தான் இந்தியா உலககோப்பையை வென்றது: ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த்,   ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல்கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார், டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல்[6]. இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைத்தது! இப்படித்தான் இன்றும் எழுதி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] ஆரியமாயை, கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் நடந்த கருத்தரங்களைப் பற்றி படித்தால், அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியும். ரா.பி. சேதுபிள்ளை, ஈழத்து அடிகள், சீனிவாசன் முதலியோரை நடத்திய விதம் ஞாபகத்தில் வர வேண்டும்.

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

மே22, 2013

திராவிடர்களின் கிரிக்கெட்டும், கிரிக்கெட் ஏலமும், குத்தகை சூதாட்டமும், சேர்ந்துள்ள அரசியலும், பிணைந்துள்ள ஒளிக்கற்றை ஊழலும் (1).

kalanithi_maran,_kaviya_and_kaveriவருடத்திற்கு ரூ 85 கோடி என்று ஏலத்தில் கலாநிதி மாறன் “ஹைதரபாத் ரைடர்ஸ்” என்ற கிரிக்கெட் கூட்டத்தை குத்தகைக்கு எடுத்தபோது[1], திராவிட இனமானங்களுக்கு, ரத்தங்களுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது போலும். “டெக்கான் சார்ஜர்ஸ்” காசுப் பிரச்சினையில் சிக்கியதால் அக்கூட்டம் மூடப்பட்டு, பிசிசிஐ தேடிக்கொண்டிருந்தபோது தான், இந்த திராவிட செல்லப்பிள்ளைக் கிடைத்தாராம்[2]. வருடத்திற்கு ரூ 85 கோடி என்பது 2008ல் ஒப்பந்த ஏலத்தில் 100% மேலாகக் கேட்கப்பட்ட பணத்தைவிட அதிகமாம். சன்டிவி மற்றும் பிவிபி வென்சூர்ஸ் [ராஜசேகர ரெட்டி கம்பனி ஷக்‌ஷி டிவியின் பங்குதாரர்[3]] என்று இரண்டே கம்பெனிகள் ஏலத்தில் இருந்தனராம், மற்றவர்கள் ஏலம் கேட்காமல் அமைதியாக இருந்தார்களாம்[4]. பிவிபி வென்சூர்ஸ் ரூ.69.03 கோடி என்றபோது, சன்டிவி ரூ 85 கோடிக்கு கேட்டதால், ஏலம் முடிவு செய்யப்பட்டதாம்[5]. திராவிட கண்மணிகளுக்கு இவையெல்லாம் கூட புரியவில்லை போலும்.

Cheer-girls-sponsored- Spicejet2சன்டிவி, ஷக்‌ஷி டிவியை வென்றது எப்படி?: கத்தோலிக்க சோனியா காங்கிரஸ், கிறிஸ்தவ ராஜசேகர ரெட்டி காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது தெரிந்த விஷயமே. இருப்பினும்,  பிசிசிஐ திராவிட, நாத்திக, இந்து விரோத கூட்டத்திற்கு எப்படி நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் குத்தகைக்குக் கொடுத்தார் என்பது விளங்கவில்லை. குங்குமம் வைத்தவர்களை[6] ஏசிய தாத்தாவின் பேரனுக்குக் கொடுக்கிறோமே என்று கவலைப் படவில்லை. கலாநிதிக்கு சாதகமாக ஏலம் இருந்தது என்பதை, அவர் கொடுத்த விலை அல்லது மதிப்பீட்டின் மூலம் தெரியவந்தது. அவர் அத்தகைய மதிப்பீட்டை சரியாக செய்தாரா என்று கூட கேள்வியை எழுப்பினர்[7]. எப்படியிருந்தாலும், யுபிஏ வியாபாரக் கூட்டு நன்றகத்தான் செயல்படுகிறது என்பது தெரிகிறது.

Sun risers -Sri Lanka- riticized4ஒருகோவில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால்,  அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்: கருணாநிதி இப்படி சொன்னது[8] ஞாபகத்தில் உள்ளதா, “ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்”. அதற்கு முன்னர்என்ன நெற்றியில் ரத்தம் வருகிறதேஎன்று கிண்டல் அடித்துள்ளார். அதே போல நெற்றியில் குங்குமம் வைக்கும் ஶ்ரீனிவாசன் கலாநிதிக்கு, பேரனுக்கு உதவியிருக்கிறாரா? நல்லவேளை, நாளைக்கு இதெல்லாம் “பாப்பான்களின் சதி”, “ஆரியத்தின் சூது”, “தமிழருக்கு சூதாட்டம் தெரியாது”, “ஆரியன் வந்துதான் கெடுத்தான்”, என்றெல்லாம் கூட திராவிட சித்தாந்திகள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.

கீழ்காணும் படம், இந்த டளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது – நன்றி.

http://www.facebook.com/photo.php?fbid=550737211623599&set=a.295437630486893.76949.293309174033072&type=1&relevant_count=1

Sun risers -Sri Lanka- Karu familiy criticizedகைமாறி கலாநிதிக்கு வந்தது எப்படி?: முன்னர் டெக்கான் குரோனிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் [Deccan Chronicle Holdings Limited] ரூ 428 கோடிகள் கொடுத்து பத்தாண்டுகளுக்கு ஏலம் எடுத்திருந்தது, அதாவது வருடத்திற்கு 42.8 கோடி என்றாகிறது. கடந்த செப்டம்பர் 2012ல் காசுப்பிரச்சினைக்காக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அக்டோபர் 15, 2012 மாலை 5 வரை இதனால் ரூ.100 கோடிக்கு பேங்க் கேரண்டி கொடுக்கமுடியவில்லை. “டெக்கான் சார்ஜர்ஸ்” பிசிசிஐன் மீது வழக்குத் தொடர்ந்தாலும், உச்சநீதி மன்றத்தில் பின்னருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதனால், மறுபடியும் பிசிசிஐ ஏலத்தை ஆரம்பித்தது. ஆனால், இப்பொழுது குறைந்த பட்சம் ரூ.60 கோடி என்று நியாயமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆரம்ப ஏலத்தொகையாக வைக்கப்பட்டதாம்[9]. மார்ச் 2013 ல் தான் இவையெல்லாம் நடந்தது. ஆனால், திராவிடப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஐயோ, மாறனே அந்த கும்பலுடன் சேராதே என்று அறிவுருத்தவில்லை.

Sun risers -Sri Lanka- riticizedசன்ரைசர்ஸ்” என்ற ஆங்கிலப் பெயர் சூட்டிய புராணம்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிடப்பட்டது. ஐபிஎல் சீசன் 1 தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கிள் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஐதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது. ‘டெக்கான் சார்ஜர்ஸ்’ என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது.  இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன்களால் பாதிக்கப்பட்ட டெக்கான் க்ரானிக்கிள் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி உத்தரவாதத் தொகை மற்றும் கட்டணங்களை செலுத்த தவறியதால், உரிமம் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் அது தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த அக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டு, கலாநிதி வாங்கியது மேலே விவரிக்கப்பட்டது. ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்து, “சன் ரைசர்ஸ்” என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்விதமாக திருவாளர் டி. வெங்கட்ராம ரெட்டி [T. Venkattram Reddy] அவர்கள் வியாபரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[10].

Deccan chargers T Venkattram Reddy the looser of the dealதிராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது?: மார்ச் முதல் மே வரை வள்ளுவர் கோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்தது போல, பிரபாகரன் மகனின் படத்தை வைத்துக் கொண்டு வெவ்வேறு கோஷ்டிகள் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், ஒரு கும்பல் கூட இதனைத் தட்டிக் கேட்கவில்லை.திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டி எப்படி இலங்கை வீரர்களை குத்தகைக்கு எடுத்தது என்ற ரகசியம் இனமான போரளொகளுக்குப் புரியவில்லை. குமார் சங்கக்காரா [Kumar Sangakkara] மற்றும் திஸரா பெரேரா [Thisara Perera] போன்ற ஶ்ரீலங்கா வீரர்கள் எப்படி திராவிட பச்சைத் தமிழ் கிரிக்கெட் கோஷ்டிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்று கேட்கவில்லை. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இக்கூட்டத்தில் உள்ளார்கள்[11]. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதால், தயாநிதி, ஏலம் எடுக்கும் போது இப்பிரசினை இல்லை அல்லது அப்பொழுது இந்தியா-இலங்கை உறவு சுமுகமாக இருந்தது என்பார்[12]. கலாநிதி பணம் கொடுக்கமலா சேர்ந்து கொண்டார்கள். ஜெயலலிதாவும் இதனை கிண்டலடித்துள்ளார்[13].

கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டிய லலித் மோடி: முந்தைய ஐபில் தலைவர், இந்த பேரத்தில் ஏதோ சூது இருப்பதைக் கண்டறிந்து, தனது நண்பர் கலாநிதிக்கு பரிசாக ஶ்ரீனிவாசன் கொடுத்து விட்டர் என்று குற்றஞ்சாட்டினார். “ஆக, ஒருவழியாக, சன்டிவி இந்த குத்தகையப் பெற்று விட்டது. இவ்வாறு நடக்கும் என்று நான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே கூறினேன், ஏனனில் ஶ்ரீனிவாசன் அவ்வாறு விரும்பினார். இதைவிட பெரிய ஊழல் / மோசடி இருக்க முடியாது. இந்த ஶ்ரீனிவாசன் மற்றும் இந்தியா சிமென்ட் முதலியவற்றின் சன்டிவியுடனான உறவுகளை ஆராய வேண்டும். ஏனெனில் கலைஞர் டிவிஞஊழலை மறக்க வேண்டாம்”, என்று டுவிட்டரில் வெளியிட்டார்[14]. கலாநிதியின் முதலாளித்துவத்தில் அசுரத்தனமான தீவிரவாதம் இருப்பதை விமர்சகர்கள் காண்கின்றனர். சிபிஐ அவரது சகோதரனின் ஊழலைப் பற்றி விசாரித்து வருகிறது. 2004 முதல் 2007 வரை அவர் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாருக்கெல்லாம் வாரி வழங்கும் முறையில் பரிந்துரை செய்துள்ளார் என்று விசாரித்து வருகிறது. நிச்சயமாக யுபிஏ-1 அரசாங்கம் மாறன் வியாபாரத்திற்கு உதவியிருக்கிறது. எது எப்படியாகிலும், இந்த பேரத்தின் மூலம் சன்டிவி மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் விளம்பர முத்திரை, வணிக மதிப்பு, வியாபார ஆதிக்கம் முதலியவற்றை அதிகமாக்குவார் என்று தெரிகிறது[15].

© வேதபிரகாஷ்

22-05-2013


[2] Kalanithi Maran’s Sun TV Network today won the Hyderabad franchise of the Indian Premier League for an amount of Rs 85.05 crores per year, marking an end to BCCI’s hunt for a new team in the wake of the controversial termination of cash-strapped Deccan Chargers. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/#sthash.UsjLLnim.dpuf

[3]  PVP is also a film financier, interestingly, is an investor in YSR Congress leader Y S Jaganmohan Reddy’s Sakshi TV.

http://timesofindia.indiatimes.com/business/india-business/Did-Maran-pitch-it-right-on-valuation/articleshow/16961258.cms

[4] The source said that Sun TV and PVP Ventures were the only two companies which bid for the new IPL team. Four other companies had collected the forms but did not bid. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[5] “SUN TV Network have won the Hyderabad Franchise for an amount of Rs 85.05 crores per year. This Franchise fee represents a premium of over a 100 % above the amount paid by DCHL for the Hyderabad Franchise in 2008,” BCCI Secretary Sanjay Jagdale said in a release. “The SUN TV Network bid was substantially higher than the second bid of PVP Ventures, which was Rs 69.03 crores,” Jagdale said.- See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[9] In an effort to attract more bidders, the BCCI had kept the base price at a reasonable Rs 60 crores per year. Deccan Chronicle Holdings Limited had bought the Hyderabad franchise for Rs 428 crores for a period of 10 years. – See more at: http://www.indianexpress.com/news/kalanithi-marans-sun-tv-net-wins-new-ipl-hyderabad-bid/1021853/0#sthash.vJPkpLFe.dpuf

[11] IPL organisers decided that the 13 Lankan players in the tournament would sit out matches in Chennai.

http://www.ndtv.com/article/india/two-lankan-players-in-sun-group-owned-ipl-team-dmk-double-speak-on-lanka-row-347232

[12] DMK leader and actor Khushbu said she was “sure the Sun Group will take a call on this”. Sun Group officials were not available for comment, but sources close to Kalanidhi Maran’s younger brother and former minister Dayanidhi Maran argue that matters on the Sri Lanka front were much more cordial last year when the team purchased the Sri Lankan players. Saravan, a cricket fan, pointed out that the IPL was a “business model” and about winning a cricket tournament.

[14] Former IPL chairman Lalit Modi smelt a rat in the deal. He accused BCCI President N. Srinivasan of ‘gifting’ the franchise to his friend. “So, finally Sun TV has got an IPL franchise. I had predicted three months ago it will be Sun, as BCCI president wanted it that way. Can’t be a bigger scam than this. Someone should see Srinivasan and India Cements’ relationships with Sun TV. Don’t forget Kalaignar TV scam,” tweeted Modi. “While Sahara pays $370 million (Rs.1,990.6 crore) for its team, this one goes for pennies. How and why?” he asked in another tweet. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

[15] Critics say Maran’s growth is a classic example of crony capitalism. CBI is probing whether Maran’s brother Dayanidhi may have used his position as telecom minister between 2004 and 2007 in UPA-1, to win favours for Maran’s business. Whatever the outcome of the probe, the buying of an IPL team gives Sun a chance to promote its TV business and ensure brand recall of SpiceJet across India. Read more at:http://indiatoday.intoday.in/story/sun-tv-network-kalanidhi-maran-business-of-sports/1/227444.html

ஶ்ரீசாந்தின் விளையாட்டு விபரீதமாகத்தான் உள்ளது – நடிகைகளுடன் நடனம், மைதானத்தில் ஆட்டம், ஓட்டல்களில் கொண்டாட்டம் (2)

மே21, 2013

ஶ்ரீசாந்தின் விளையாட்டு விபரீதமாகத்தான் உள்ளது – நடிகைகளுடன் நடனம், மைதானத்தில் ஆட்டம், ஓட்டல்களில் கொண்டாட்டம் (2)

Photo1115முந்தைய இடுகையில் 30-70 வருடங்களுக்கு முன்பான கிரிக்கெட் எவ்வளவு தூய்மையாக, அழகாக, அமைதியாக, எளிமையாக இருந்தது என்பதனை அந்த கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் மூலமாக அறியும் வண்ணம் எடுத்துக் கஆட்டப் பட்டது[1]. அப்பொழுதைய மைதானம், மைதானத்தின் அமைப்பு, பார்வையாளர்களின் கீற்றுக் கொட்டகை, ஆடுபவர்களின் நளினம், மதிப்பு, மரியாதை முதலியவற்றை அப்படங்களின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். அப்பொழுது, டப்பா கேமராவை வைத்துதான் இப்புகைப்படங்களை எடுத்தார்கள். ஆனால், புகைப்படங்கள் மட்டுமல்லாது, அவற்ரில் உள்ளவர்களின் தரம், நாணயம், முதலியவை அந்த அளவிற்கு உயர்வாக இருந்தன. விளையாட்டு வீரர்களும் ரசிகர்களுக்கு ஏற்றவர்களக இருந்தனர். அப்பொழுதும் சிதம்பரம், ஏடன் கார்டன்ஸ் முதலிய மைதானங்கள் இருந்தன. வெற்றிகள், கொண்டாட்டங்கள் இருந்தன. ஆனால், இத்தகைய……………………….இல்லை.

Photo1118இக்காலக் கிரிக்கெட்டும், ஊழலும், ஒழுங்கீனமும்: இனி ஶ்ரீசாந்தின் விவகாரகத்திற்கு வந்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஶ்ரீனிவாசனைப் பார்க்கும் போது கோபம், எரிச்சல் வருகிறது. இதில் நெற்றியில் வேறு குங்குமம்! ஆனால், பேசுகின்ற விதம், நடந்து கொள்லும் விதம், எடுக்கப்படும் முடிவுகள் முதலியன அந்த கஷ்டத்தைப் போக்குவதாக இல்லை. புகைப்படங்களில் இப்பொழுது  வண்ணங்கள் அதிகமாகி விட்டன, ஆனால், எண்ணங்கள் கருத்து விட்டன. தொழிற்நுட்பம் சிறந்து விட்டது, ஆனால், அதன் உபயோகம் நிர்வாணத்தில் தான் முடிகின்றது. வேறு வழியில்லை என்றலும், ஶ்ரீசாந்தைப் பற்றி அலச வேண்டியுள்ளது.

Photo112115-05-2013 (புதன்கிழமை): பெண்களிடம் பலஹீனம் இருந்ததினால் தான் ஶ்ரீசாந்த் மாட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது. டிரைடென்ட் ஓட்டலில், ஶ்ரீசாந்தைப் பிடிப்பதற்காக, போலீஸார் திட்டம் தீட்டினர்[2]. ஏற்கெனவே ஶ்ரீசாந்த அன்றிரவு முழுவதும், முடிந்த அளவிற்கு பல பெண்களை அழைத்து ஒரு பார்ட்டி நடத்துவதற்காக திட்டமிட்டிருந்தார்[3]. இதை அறிந்து ஜீஜு ஜனார்த்தனன் என்ற ஶ்ரீசாந்தின் நண்பனை வைத்து, ஓட்டலுக்கு வருமாறு பணித்துள்ளனர். காரில் தனது “கார்ல் பிரென்டுடன்”, ஶ்ரீசாந்தி கிளம்பியுள்ளார்[4]. அப்பொழுதுதான், போலீஸார் இடை மறித்து, குறிப்பிட்ட ஓட்டலுக்கு வருமாறு பணித்தனர். அப்பொழுது, தனக்கு முதலமைச்சர் தெரியும் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி அழைத்துச் சென்றனர். அஜித் சந்திலா, ஆங்கித் சௌஹான் முதலியோரும் பிடிக்கப்பட்டனர்.

Photo112216-05-2013 (வியாழக்கிழமை): முக்கியமான மூவரைப் பிடித்த பிறகு சுனில் பாடியா (Sunil Bhatia), கிரண் டோல் (Kiran Dole) மற்றும் மணீஸ் குடேவா (Manish Gudewa) என்ற மூவரை ஔரங்காபாதிலிருந்து கைது செய்தனர். இதில் மணீஸ் குடேவா என்பவர் 2003 மற்றும் 2005 ஆண்டுகளில் ரஞ்சி ட்ராபியில் விளையாடியவர்[5]. பாபு ராம் யாதவ் என்ற இவர்களது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இவ்வளவும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது என்பதைக் கவனிக்கவும்.

Photo112017-05-2013 (வெள்ளிக்கிழமை): ஓட்டல் சோபிடெல் அறை எண் 1213லிருந்து லேப்டாப், ஐ-பாட், இரண்டு செல்போன்கள், ரூ.75,000 பணம் முதலியவை கைப்பற்றப் பட்டன. கைப்பற்றப் பட்ட லேப்டாப்பில் பல நிர்வாண பெண்களின் புகைப்படங்கள் முதலியவை இருந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[6]. மேலும் 2011, 2012 மற்றும் 2013 ஆண்டுகளுக்கான ஶ்ரீசாந்தின் டைரிகளும் கண்ண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள விவரங்களினின்று, எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது, எதற்கு உபயோகப்படுத்தப் பட்டது, முதலியவை உள்ளன. கேரளாவில் இரண்டு புக்கீஸ், தில்லி, மும்பை, அஹமதாபாத், ஜெய்பூர் போன்ற இடங்களிலுள்ள புக்கீஸ்களின் பெயர்கள், போன் நெம்பர்களும் உள்ளன. சார், பீகி என்று எழுதப்பட்டுள்ள புக்கீஸ் யார் என்று தெரியவில்லை[7].

Photo1123

குறிப்பு: இப்படங்கள், கீழ்கண்ட வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது.

http://indiatoday.intoday.in/video/ipl-spot-fixing-sreesanth-ankeet-chavan-ajit-chandila-delhi-police/1/271855.html

ஶ்ரீசாந்த்தின்லேப்டாப், டைரிகளிலிருந்துஅறியப்படும்விவரங்கள்: இதனிடையே ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டபோது அவர் மாடல் அழகிகள் மற்றும் முன்னணி நடிகை ஒருவருடன் இருந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அவரது லேப்டாப்பில் பாலிவுட் இயக்குனர் ஒருவர் ஸ்ரீசாந்துக்கு அனுப்பிவைத்த மாடல் அழகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக தற்போது காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன[8].  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ஶ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் உல்லாசமாக இருப்பதற்காக, புக்கிகள் பெண்களையும் சப்ளை செய்திருப்பது தெரியவந்துள்ளது[9]. புக்கிகளுக்கும், ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.  மானன் மற்றும் சந்த் ஆகிய புக்கிகள் ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சந்திலா ஆகிய வீரர்களுக்கு மூன்று முறை பெண்களை சப்ளை செய்துள்ளனர்[10]. ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டபோது கூட அவரது அறையில் பெண் ஒருவர் இருந்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு ராஜஸ்தான் ராயல் அணி வீரரான அங்கித் சவாணுக்கு, பெண் எஸ்கார்ட் சேவை அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Sreesanth with such women18-05-2013 (சனிக்கிழமை): பி.சி.சி.ஐ தலைவர் என்.ஶ்ரீனிவாசன் கரண் தாபருடன் நடந்தடெவில்ஸ் அட்வொகேட்என்ற உரையாடலில், அந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும்அழுக்குப் பிடித்தவர்கள்என்று விமர்சித்தார். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு, நேரிடையாக பதில் கூறாமல், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதால், அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, என்றெல்லாம் மழுப்பினார். சட்டத்தை வளைத்து விடலாம் என்பதால் அல்லது ஏற்கெனவே உள்ள வழக்குகளில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் அப்படி கூறியிருக்கலாம். அல்லது அந்நிகழ்ச்சியே, ரசிகர்களை ஏமாற்ரக் கூடியதாக இருக்கலாம். பார் நான் எப்படிப் பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சிஒல்லியிருக்கிறேன், ஒன்றும் ஓடியொளியவில்லை என்றும் மார்தட்டிக் கொள்ளலாம்.

sreesanth-with such women19-05-2013 (ஞாயிற்றுக்கிழமை): ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ முறைகேடுகள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: “கிரிக்கெட் என்பது பண்பட்ட மனிதர்களுக்கான விளையாட்டு. இனி ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் நடத்தையையும் கண்காணித்து இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாதபடி தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். தற்போது எழுந்துள்ள சர்ச்சை மீது நடவடிக்கை எடுக்க முழு விசாரணை அறிக்கையை எதிர்பார்க்கிறோம். பி.சி.சி..யை பொருத்தவரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வளையத்திற்குள் வராத ஓர் அமைப்பாகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தால் கிரிக்கெட் சூதாட்டத்தை நிறுத்தி விட முடியாது. சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் தடுப்பு பிரிவால் போலீசாரைப் போல் எல்லா தகவல்களையும் சேகரிக்க முடியாது. அதற்கு பல தடைகள் உள்ளன. போலீசாரை போல் எல்லா சூதாட்ட தரகரையும் கண்காணித்து கட்டுப்படுத்த எங்களால் முடியாது[11]. இனி ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் தனித்தனியாக  ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்படும். தற்போது எழுந்துள்ளஸ்பாட் பிக்சிங்தொடர்பாக விசாரணை நடத்தும் கமிஷனராக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் ஏஜென்டும் இனி பி.சி.சி.. யின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். சூதாட்ட தரகர்களை பி.சி.சி..யால் கட்டுப்படுத்த முடியாது. அணியில் இருந்து நீக்கப்பட்ட மூவர் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் போலீசில் முதல் தகவல் அறிக்கை (எப்..ஆர்.) பதிவு செய்ய உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்.

Sreesanth Laksmi roy romance battingசென்னையில் தரகர்கள் கைது: அதே நேரத்தில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சென்னையில் தரகர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் முக்கிய புள்ளியாக பிரசாந்த் என்பவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணை நடத்துவது தெரிந்த பிரசாந்த் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி உத்தரவின் பேரில் பிரசாந்த் வீட்டில் இன்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்[12].

 SREESANTH-joky women

20-05-2013 (திங்கட்கிழமை): காஜியாபதில் உள்ள மாமாவின் வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் பணத்தை கண்டெடுத்துள்ளனர். ரூ 40 லட்சம் தருவதாகவும், முதலில் ரூ.20 லட்சம், பிறகு ரூ.20 லட்சம் தருவதாக போனில் நடந்த உரையாடலை வைத்து, சோதனை போட்டபோது, இப்பணம் கிடைத்துள்ளது.

© வேதபிரகாஷ்

21-05-2013


[2] Delhi Police have claimed that Sreesanth had plans to party all night “with as many women as possible” on May 15 and this helped the police lay a bait for the cricketer who was lured into Mumbai’s Trident hotel before arrest.

http://daily.bhaskar.com/article/DEL-ipl-6-delhi-police-have-claimed-that-rajasthan-royals-player-sreesanth-had-plans-4268960-NOR.html

[4] Police sought the help of Sreesanth’s bookie friend, Jiju Janardhan, to force the Kerala speedster arrive before the police. An investigating officer said that Janardhan, who was in police custody, was made to call him and tell him to come to the Trident, so he could be introduced to a female friend.

http://daily.bhaskar.com/article/DEL-ipl-6-delhi-police-have-claimed-that-rajasthan-royals-player-sreesanth-had-plans-4268960-NOR.html

[5] Gudewa was a Ranji cricketer who played for Vidharbha between 2003 and 2005. Police are also trailing their associate Babu Ram Yadav.

[7] rom Room 1213 (Sreesanth’s), crime branch recovered three diaries for the years 2011, 2012 and 2013, in which the bowler had made entries both in English and Malayalam, mentioning his day-to-day routine.  The diaries also have details of money taken for different activities, including modelling. The diaries have names of two bookies from Kerala, and six bookies from Delhi, Mumbai, Ahmedabad and Jaipur alongwith their phone numbers, sources said. At several points, Sreesanth has written SIR, Boss, BIGI with the names of bookies.

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

Yasin-maliok-with-seeemanசெபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக்சில ஒற்றுமைகள்: செபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் இவர்களது தொடர்புகள், அயல்நாட்டில் வைத்திருக்கும் உறவுகள், பெண்களிடம் நெருக்கம் அல்லது பலஹீனம் முதலியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. தமது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், வெற்றி-தோல்விகளை முதலியவற்றை ஜீரணிக்க முடியாமல், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னத்தான், மனித உரிமைகள், மக்களின் போராட்டம் என்றெல்லாம் பேசிவந்தாலும் தங்களது மதநம்பிக்கைகள், உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பேச்சுகளில், தொடர்புகளில், காரியங்களில் வெளிப்படுகின்றன. யாசின் மாலிக் குடித்து கும்மாளம் அடித்து, பெண்களுடன் ஆடியது, நடுவில் ஒரு பெண்ணை அலேக்காகத் தூக்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, மற்றவர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர். இவையனைத்தும் கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டது[1]. பெண்களின் உரிமைகள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு அக்கரை எதுவும் இல்லையா?

Yasin malik at Caddalore meetingகுடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[2]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Mushaal-mallickசீமானின் விஜய லட்சுமி நடிகையுடனான பிரச்சினை: விஜயலட்சுமி என்ற நடிகை, சீமான் தன்னை காதலித்து, உறவாடி, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக ஜூன் 2011ல் புகார் கொடுத்தார்[3]. பிறகு, சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறனார். விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், டைரக்டர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார். முதலில் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

Seeman with Vjayalakshmiகணவன்மனைவியாக வாழ்ந்தோம்: இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் – மனைவியாக வாழ்ந்தோம்[4]. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

Vijayalakshmi mother seemanநடிகை கொடுத்துள்ள ஆதாரங்கள் முதலியன: சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார்[5] விஜயலட்சுமி நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி[6]. சீமான், நடிகை மற்றும் நடிகையின் தாய் மூவரும் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் வெளியாகின. இதற்குள், சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.   இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.

seeman andசீமானின் வக்கீல் சொன்னது: வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது[7]: “நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. Seeman with womanசீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்”, இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்[8]. பிறகு சீமானே தனக்கு காதல், டூயட் என்றெல்லாம் செய்ய நேரம் இல்லை என்று சொன்னதாக செய்து வந்தது[9]. சினிமா பாணியில் பதில் இருந்தாலும், ஐபிஎல் சீனிவாசன் சொன்ன பதில் மாதிரி இருந்தது!Poster demanding to arrest Seeman for affair

சீமானுக்கும், இலங்கைப் பெண்ணுக்கும் தொடர்பு: சீமான் சினிமா உலகத்தைச் சேர்ந்ததால், நடிகைகள், பெண்கள் என்று பல தொடர்புகள் இருப்பதில் வியப்பில்லை. அதனால்தான், மேலே விவரித்த விஜயலட்சுமி விவகாரம் வந்துள்ளது. இருப்பினும், ஒரு இலங்கைப் பெண்னுடனான விவகாரங்கள், புகைப் படங்கள் முதலியன, யாசின் மாலிக்கைப் போன்றே ஒரு மனிதனாகக் காட்டுகிறது. Yasin malik with his wifeயாசின் மாலிக்கின் மனைவி மிகவும் அழகானவள், ஒரு நடிகையை விட அழகாக இருப்பாள். Yasin malik with his wife and othersஆனால், அவள் பாகிஸ்தானில் உள்ளாள். ஆகவே, பொழுது போக்கிற்காக, குடித்து பெண்களுடம் கும்மாளம் போட்டிருக்கலாம். Yasin malik and wife Mushalஆனால், சீமானின் பிரச்சினை என்ன என்பது தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சோயிப் மாலிக்-ஆயிஷா பிரச்சினை போன்றேயுள்ளது[10]. சானியா மிர்ஸாவுடன் திருமணம் செய்து கொள்ளும் முன்னர், ஆயிஷா என்ற பெண்மணி சோயிப் தன்னை கர்ப்பமாக்கினார் என்று வழக்குத் தொடர்ந்தார்[11]. பின்னர் சமரசம் செய்து கொண்டனர்[12]. அதற்கு முன்னர் சாயாலி என்ற மாடலுடன் உறவு இருந்தது[13]. இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில், ஷரீயத் என்ற முஸ்லிம் சட்டத்தின் படி, இப்படி பல பென்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்ளலாம்[14]. இருப்பினும் பிரபங்கஙளின் மணம் என்பதால் முரண்பட்ட கருத்துகள், தீர்மானங்கள் என்று வெளிவந்தன[15]. பிறகு ஒரு வழியாக திருமணம் முடிந்தது[16]. ஏனெனில், அவர்களுக்கு அந்த பந்தம் ஒரு கான்ட்ராக்ட் / ஒப்பந்தம் தான். ஆனால், சீமான் அப்படி செய்ய முடியாதே?

© வேதபிரகாஷ்

19-05-2013


இந்தியா பெண்களுக்கு உகந்த இடமில்லை ஆகையால், இனி உங்கள் பெண்களை இனிமேல் பாகிஸ்தானிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பி வையுங்கள், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்!

ஏப்ரல்8, 2013

இந்தியா பெண்களுக்கு உகந்த இடமில்லை ஆகையால், இனி உங்கள் பெண்களை இனிமேல் பாகிஸ்தானிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பி வையுங்கள், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்!

Srinagar-India-Kashmir-map-Mirror-UK

திசைமாறும் இந்தியவிரோத பிரசாரம்: இந்தியாவின் மீது பிரச்சார ரீதியில் மேனாட்டு ஊடகங்கள் தாக்குதல் நடத்துவது கண்டு, நான் கீழ்கண்ட இடுகைகளை மற்றொரு தளத்தில் பதிவு செய்தேன்.

  1. காஷ்மீர் கொலையை வைத்துக் கொண்டு இந்தியவிரோத பிரச்சாரம் – “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை”!
  2. “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து[1] காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?
  3. “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” [2] – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர்[3] – நம்ம ஊர் செய்தி!

ஒரு குறிப்பிட்ட இணைத்தளம் அளவிற்கு அதிகமாகவே அதைப்பற்றிய செய்திகள், புகைப்படங்கள் முதலியவற்றை உடனுக்குடன் வெளியிட்டு வந்தது, வருகின்றது[4]. மெயில் ஆன்லைன் என்ற இங்கிலாந்து நாளிதழும் விவரங்களைக் கொடுத்து வருகின்றது[5].

Sarah went to mosque on Friday and get killed on the same day

சாரா கிரௌஸ்  மசுதிக்குத் தொழச் சென்றது ஏன்?: ஆனால், இப்பொழுது சாராவின் “பாய்-பிரென்ட்” இன் தாயார் ஹாபியா கூறுவதாவது[6], “போற்றப்படும் ஶ்ரீநகர் வெள்ளை மசுதிக்குச் சென்று வெள்ளிக்கிழமை அன்று தொழுகை செய்தாள். ஆனால், அந்நாளிலியே அவள் கொல்லப்பட்டுள்ளாள்”. போற்றப்படும் ஶ்ரீநகர் வெள்ளை மசுதி என்று குறிப்பிட்டது, ஹஜரத்பல் என்ற மசூதியாகும், அங்கு முஹ்ஹம்மது நபியின் தலைமுடி உள்ளது. அத்தகைய மசூதிக்கு, சாரா ஏன் சென்றாள் என்று தெரியவில்லை. “வெள்ளிக்கிழமை அன்று தொழுகை செய்தாள்”, என்று சொல்லப்படுவதால், ஒருவேளை, அவளை இஸ்லாம்பால் இழுக்கும் முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை. தன் மகனை காதலிப்பதாலும், நிக்காஹ் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதாலும், நிச்சயமாக அவள் முஸ்லீமாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால், மகன் கிருத்துவன் ஆக வேண்டும். குறைகூறும் ஆங்கிலேயர்கள் தான் இவ்விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், இவற்றை விடுத்து, இந்தியாவை குறைகூற, இப்படி பட்டியல் இடுகிறார்கள்[7].

sarah Groves - Tanzeel ur Rehman

சாராவின் பல புகைப்படங்களை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. அத்தகைய நவநாகரிக மங்கையாக இருந்திருக்கிறாள் என்கிறார்களா அல்லது ஒரு முஸ்லீமை காதலித்து மணந்து கொள்ள தயாரானாள் என்பதை மறைக்கப் பார்க்கிறார்களா? சாவிலும் இந்தியவைத் தாக்கி அல்ப சந்தோஷம் அடையாளம் என்று இப்படி இறங்கிவிட்டார்களா?

Sarah-exercising

இந்தியாவில் ஐரோப்பியப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் – பாதுபாப்பு இல்லை:

  • கடந்தடிசம்பர் 23, 2012ல் தில்லி பேர்ந்தில், பிசியோதெராபிஸ்ட் மாணவி, பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். பிறகு காயங்களினால் இறந்துள்ளாள்.
  • மார்ச் 2012ல் ஒரு ஸ்விட்சர்லாந்து சுற்றுலா பெண் பலரால் மத்தியபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டுள்ளாள்.
  • அதற்கு சில நாட்கள் பிறகு, 31-வயதான ஆங்கிலேய சுற்றுலா பயணி, ஆக்ரா ஹோட்டல் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துள்ளாள். விடியற்காலை 4மணிக்கு, தனது அறைக்குச் செல்லும் போது, அந்த ஹோட்டலின் முதலாளி தன்னை கற்பழித்து விடுவானோ என்று பயந்து குதித்தாளாம்.
  • இவ்வளவு நடந்திருந்தாலும், ஐரோப்பிய உல்லாச பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், ஏற்கெனவே 25% வரவு குறைந்து விட்டது[8].
  • இதனால், இனிமேல் அதிக அளவில் இந்திய சுற்றுலா வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறான முடிவுக்கு வந்த பிறகு, இனிமேல் அவர்கள் தங்கள் பெண்களை பாகிஸ்தானிற்கோ, ஆப்கானிஸ்தானிற்கோ அனுப்பி வைக்கலாம், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்.

வேதபிரகாஷ்

08-04-2013