Archive for the ‘கிறிஸ்தவர்’ Category

புளூ பிளிம் வழக்கு – ரூ.1.34 கோடி கொடுத்து தப்பித்துக் கொண்டது திருவாளர் சின்னப்பாதான் என்று தெரிய வந்துள்ளது – அவர் பதவி விலக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்!

மார்ச்16, 2016

புளூ பிளிம் வழக்குரூ.1.34 கோடி கொடுத்து தப்பித்துக் கொண்டது திருவாளர் சின்னப்பாதான் என்று தெரிய வந்துள்ளதுஅவர் பதவி விலக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்!

M. Chinnappa, Rector, Gunadala Matha shrineகத்தோலிக்கப் பாதிரி ரெவரென்ட் தூதுவர் எம். சின்னப்பா என்று தெரிய வந்துள்ளது: புளூ பிளிம் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட குணடல பாதிரியின் பெரைக் குறிப்பிடாமல் “தி இந்து”, “டைம்ஸ் ஆப் இந்தியா” போன்ற நாளிதழ்கள் மறைத்து வந்த வேளையில், விஜயவாடா போலீஸ் கமிஷனர், கௌதம் கவாங், ஊடகக்காரர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் “ரெவரென்ட் தூதுவர் எம். சின்னப்பா[1], ரெக்டர் மற்றும் பாரிஷ் பிரீஸ்ட் / மடாலய துறவி (பொறுப்பு), குணடல மேரி மாதா சர்ச், விஜயவாடா” என்று தெரிய வந்துள்ளது. மார்ச்.3, 2016 அன்று சின்னப்பா கொடுத்த புகாரின் மீது, 11 பேர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.  விசாரிக்கப் பிடிபட்டவர்களின் “பென்டி-ரைவ்”வை பரிசோதித்தபோது, சின்னப்பா ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் காணப்பட்டன. இது போன்ற புளூ பிளிம் உள்ளது, கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால், இதனை வெளியிடுவோம் என்று மிரட்டித்தான், அக்கும்பல் சின்னப்பாவிடமிருந்து ரூ.1.34 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. “சின்னப்பா தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை விற்று இந்த பணத்தைக் கொடுத்திருக்கிறார், சர்ச் பணம் இதில் சம்பந்தப்படவில்லை,” என்று கௌதம் கவாங் கூறியதாக, ஒரு கிருத்துவ ஊடகம் [ucanews.com] செய்தி வெளியிட்டுள்ளது[2]. ஆனால், “தி இந்து” வேறுவிதமாக செய்தி வெளியிட்டிருந்ததுடது பின் வருமாறு:

Gunadala church activities- who is the black sheepபாதிரி ஏற்கெனவே நிதி மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்: குணடலாவில் இருக்கும் ஒரு சர்ச்சின் அதிகாரம் செக்ஸ்-விவகாரத்தில் மட்டிக் கொண்ட பாதிரியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துள்ளது[3]. அப்பாதிரியைப் பற்றி விசாரித்து வரும் சர்ச் அதிகாரம், அவரது நடவடிக்கை மற்றும் வருமானம் பற்றி ஆராய்ந்து வருகிறது. சர்ச்சிற்கு மற்றும் ஏழைகளுக்கு உதவ ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் முறைதவறி உபயோகப்படுத்தியுள்ளதாக தெரிந்து கொண்டது[4]. போலீஸாரும், அந்த ஆபாச விடியோ மற்றும் சிடி பற்றி விசாரித்து வருகின்றனர். அது உண்மையிலேயே நடந்த சமாச்சாரமா- இல்லையா, அப்படியே இருந்தாலும், அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண் யார், அவள் அத்தகைய வீடியோவில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டாள், யார் அந்த விடியோவை எடுத்தது, எங்கு-யார்-எப்படி எடுத்தார்கள் முதலிவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இதில், சில ஊடகக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களிடம் அத்தகைய விடீயோவின் நகல்கள் சிடிக்களில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவர்களும், அதை டிவி-செனல்களில் ஒலி-ஒளிபரப்பாமல் இருக்க, அப்பாதிரியிடமிருந்து பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளன. இதற்குள் சர்ச் நிர்வாகம் அப்பதிரியை நீக்கி வேறு பாதிரியை நியமிக்க முடிவு எடுத்துள்ளது[5]. இவையெல்லாம் “தி இந்து” கொடுக்கும் செய்தியாகும். மேலும் ரூ.2.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதால், வேறு வழியின்றி போலீஸாரிடம் சென்று மார்ச்.3, 2016 அன்று புகார் கொடுத்துள்ளார். வழக்கறிஞரை வைத்து தனது நிலையை தெளிவுப் படுத்தியுள்ளார்[6]. ஆனால், ஊடகக்காரகளுக்கு முன் அவர் வரவில்லை, எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.

Father M. Chinnappa has been involved- Gundala Churc 13-03-2016பணியிலிருந்து விலக்கப்பட்ட சின்னப்பாவுக்கு மருத்துவனையில் சிகிச்சை: விசயம் வெளியே கசிய ஆரம்பித்து விட்டதால், பிஷப் அளவில் அழுத்தம் ஆரம்பித்து விட்டது. முதலில் பணம் கொடுத்துதான் சரிகட்ட பார்த்தனர். ஆனால், விவகாரம் எல்லை மீறி போகும் நிலை காணப்பட்டதால், சின்னப்பாவை கழட்டி விட தீர்மானம் செய்யப்பட்டது போலும். பாதிரி முவ்வல பிரசாத் [Father Muvvala Prasad] சர்ச் சார்பில் சொன்னதாவது[7], “பாதிரி சின்னப்பா தென்னிந்தியாவின் மிக்க வருமானம் கொண்ட கத்தோலிக்க சர்ச்சின் மடாலய குருவாக இருந்து வருகிறார். லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், வயதான அவரின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் அதிகமாகியுள்ளன. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். மேலும் அவருக்கு மருத்துவ விடுப்பும் தேவைப்படுகிறது. இதனால், விஜயவாடா பிஷப் ஜோஜி கோவிந்து [Joji Govindu] சின்னப்பாவை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக இனி அவரது வேலையை இன்னொருவர் பார்த்துக் கொள்வார்”. பொதுவாக, கத்தோலிக்கச் சர்ச்சுகளில் வகையாக மாட்டிக் கொண்டவர்கள், இவ்வாறு தான் மருத்துவமனையில் அனுப்பட்டு, பதவில்யிலிருந்து நீக்கப்பட்டு, சில நாட்களில் / மாதங்களில் இற்ந்து விடுவர். “காலமானார்” என்ற செய்தி வரும் அல்லது மக்கள் மறந்து விடுவர்.

Father M. Chinnappa has been involved- Gundala Churc 13-03-2016.2சின்னப்பாவுக்கு ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தொடர்பு உள்ளதா?: “கால் மணி செக்ஸ் ராக்கெட்” / “கூப்பிட்டால் பணம் செக்ஸ் மோசடி” என்பது விஜவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அல்லோல-கல்லோலப்பட்டு வருகிறது. போர்ன்-விடியோக்கள், சிடிகள் முதலியவை புழக்கத்தில் உள்ளது. இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், ஒரு புறம் முழுவதுமாக அமுக்க வேண்டும் என்றும், இன்னொரு புறம் எதிர்-எதிராக உள்ள அரசியல்வாதிகளை பழி தீர்த்து கொள்ள இதனை உபயோகிக்கவும் விரும்புகின்றன்னர் என்று தெரிகிறது. தவிர ஊடகக்காரர்கள், வழக்கறிஞர்கள், ரியல் எஸ்டேட் புள்ளிகள் என்று எல்லோரும் சம்பந்தப்பட்டுள்ளனர். விஜயவாடா சீமாந்திராவின் தலைநகராக உருவெடுத்து வருவதால், விஜவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகமாக உயர்ந்து வருகிறது. இதை வைத்துக் கொண்டு, நிலத்தை வாங்கி விற்று, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சிகளும் நடந்து வருகின்றது. இங்கு சின்னப்பா, “சஞ்சீவினி மாக்ஸ் சொசைட்டியில்” முதலீடு செய்டுள்ளதாக [vijayawada pandakalavareddulo sanjeevini max society lo pettupadi] ஆந்திர டிவி-செனல் கூறுகின்றது[8]. இதைப் பற்றி சர்ச் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

Vijayawada Bishop Govindu Joji and Fr Chinnappaபல குற்றங்கள், பலதரப்பட்டவர்கள் சம்பந்தப்படுவதால் பூதாகாரம் எடுக்கும் பிரச்சினை: கடன் கொடுத்தல், “புரோநோட்” வாங்கிக் கொள்ளுதல், பணம் கொடுக்காவிட்டால் நிலத்தை அபகரித்துக் கொள்ளுதல், பெண்ணாக இருந்தால், “ராத்திரிக்கு படுக்க வா” என்று சொல்லி அழைத்தல், அவ்வாறு வரும் போது அப்பெண்களை பெரிய புள்ளிகளுக்கு சப்ளை செய்தல், அந்நிலைகளில் விடியோ எடுத்தல், மறுபடியும் அதை வைத்துக் கொண்டு மிரட்டுதல், சிலவற்றை புளூ பிளிம் சிடி போட்டு விற்றல் என்று அக்கும்பல் தொடர்ச்சியாக வியாபாரம் செய்து வருகிறது. இதைப் பற்றிய செய்திகள் அதிகமாகவே வந்துள்ள்ன. இதனால், இதில் பலதரபட்டவர்கள் சம்பந்தப்படுகின்றனர். அந்நிலையில், ஒரு கத்தோலிக்கப் பாதிரி ஏன் ஈடுபடுகிறார் என்பது தான் புதிராக உள்ளது. ஒருவேளை வாடிகன் பாதிரிகளே, அத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ள்தால், அவர்களை போல தாங்களும் பணம் சம்பாதிக்கலாம் என்று, இந்திய பாதிரிகளும் இறங்கி விட்டார்கள் போலும்!

N Ram with Jennifer Arul etc at CBCI Jan.2004தி இந்துவின்கத்தோலிக்க சார்பு செய்திகள் வெளியீடு முதலியவை ஏன்?: நரசிம்மன் ராம் என்கின்ற என். ராம், “தி இந்துவை” விட்டு விலகினாலும், அதில் தனது அதிகாரத்தைச் செல்லுத்தி வருகிறார் என்று தெரிகிறது. ஆனால், மார்க்சீய ஆதரவோடு, கத்தோலிக்க ஆதரவும் ஏன் அதிகமாகி வருகிறது என்பது மற்றவர்களுக்குப் புதிராக இருந்தாலும், அவர் மிரியம் சாண்டி என்ற “மெம்மன்-மாப்பிள்ளை” குழுமத்தைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவ்வாறு மாறியுள்ளார் என்று தெரிகிறது. “தி இந்து” பல ஆண்டுகளாக, சரித்திர ஆதாரமில்லாத “தாமஸ் கட்டுக்கதையை” வலிய பரப்பி வருகிறது. இத்திருமணத்திற்குப் பிறகு, ராம் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்துள்ளார்[9]. குறிப்பாக சின்னப்பா விசயத்தில், அவரைப் புகழ்ந்து பல செய்திகள் “தி இந்துவில்” வெளியாகி உள்ளது. இது இப்பொழுதும் “கூகுள் செர்ச்” மூலம் கண்டுகொள்ளலாம். இவையல்லாம், நிச்சயமாக, செக்யூலரிஸ வேடம் போடும் “தி இந்துவுக்கு” உருத்தலாக இருக்கிறதுசிப்பொழுது கூட சாமுவேல் ஆரோன் என்கின்ற செக்ஸ்-பாஸ்டர் கைதானதை, ஏதோ சாதாரணமாக, சிறியதாக செய்தியை வெளியிட்டுள்ளது[10].

AG church Samuel Aron - The Hindu way of reporting 16-03-2016© வேதபிரகாஷ்

16-03-2016

[1] Rev.Msgr.M. Chinnappa, Rector & Parish Priest, Gunadala Matha Shrine, Gunadala, Vijayawada – 520004. Ph: 0866-2450244, 2451934; Cell: 9849129069; For Prayers and Counselling Contact: Rev. Sister Josphine D. MSI, Ph: 0866 – 2540309; Cell: 09346502830.

[2] “The priest sold his family property to pay the money. No money form the shrine is involved,” Sawang added…………… city police commissioner Gautam Sawang told ucanews.com March 14, 2016.

 http://www.ucanews.com/news/indian-police-investigate-blackmail-of-priest/75490

[3] The management of a church at Gunadala here, which landed in a major controversy following charges of sexual misconduct of a priest, reportedly began inquiry into the episode. ……The priest is understood to have told the police that he paid more than Rs. 1 crore to the gang. He alleged the extortionists, who befriended him, morphed his image in a pornographic film and collected money from him……. However, the church management is inquiring into the behaviour of the religious head and his source of income. It was alleged that a portion of the funds allocated to the shrine and for the poor were misused by him.

The Hindu, Priest, blackmailed by gang, paid hefty amount, says CP, by Rajulapudi srinivas, Vijayawada, March.14, 2016; Updated: March 14, 2016 05:46 IST.

[4] http://www.thehindu.com/news/cities/Vijayawada/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp/article8351138.ece

[5] http://www.nyoooz.com/vijayawada/389661/priest-blackmailed-by-gang-paid-hefty-amount-says-cp

[6] http://www.aplatestnews.com/usnewsvideo.php?idx=gang-arrested-in-vijayawada-for-blackmailing-church-father-11-03-2016-2016-03-10&searchtxt=church&vidtype=2

[7] The Catholic shrine that Father Chinnappa is rector of is one of the richest in southern India and attracts millions of pilgrims every year, said diocesan spokesperson Father Muvvala Prasad. Father Chinnappa was not available for comment as he was hospitalized for high blood pressure and blood sugar levels. Father Prasad said the developments “have put severe pressure on the aged priest.” Father Prasad said Bishop Joji Govindu of Vijayawada has freed Father Chinnappa of his responsibilities at the shrine since “he now needs medical leave.”

http://www.ucanews.com/news/indian-police-investigate-blackmail-of-priest/75490

[8] http://www.aplatestnews.com/usnewsvideo.php?idx=3-news-reporters-involvement-suspected-in-church-father-blackmailing-case-2016-03-12&searchtxt=church&vidtype=2

[9] The 26th biennial general body meeting of the Catholic Bishops Conference of India (CBCI) that began at the Marymatha Major Seminary at Mulayam on January.7, 2004. The CBCI is the apex body of the Catholic hierarchy in India, comprising the three rites of Syro-Malabar, Syro- Malankara and Latin. It has taken up “Church and Social Communications” as the theme of this General Assembly, which will continue till January 14, 2004. The Apostolic Nuncio, Archbishop Pedro Lopez Quintana, the Secretary General of the CBCI, Bishop Percival J. Fernandez, the vice president of CBCI, Archbishop Vincent Concessao, and the Archbishop of Thrissur, Mar Jacob Thumkuzhy, were among those who spoke. Media personalities, including the Editor-in-Chief of The Hindu, N. Ram, the Chief of Bureau of NDTV in Chennai, Jennifer Arul, and the General Editor of the Mangalam group of publications, K.M. Roy, are among those who are participating in closed-door sessions at the CBCI event.

http://www.hindunet.org/hvk/articles/0304/1.html; http://www.thehindu.com/2004/01/08/stories/2004010806501200.htm

[10] Samuel Aroan (40), who had been the priest at Shekinah AG Church in Kuppampalayam on Tiruchi Main Road for the past 15 years, was held on charges of rape and sexual harassment of a housemaid on Tuesday. It is said that he sexually abused many woman who came to the church. – Staff Reporter

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/priest-arrested/article8358735.ece

மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும் – செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]

மார்ச்15, 2016

மதத்தலைவர்கள் பற்றிய செய்திகளில் ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன? [ஒரு கோடி கொடுத்துத் தப்பித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியும், பணம் கொடுக்காமல் மாட்டிக் கொண்ட நித்தியானந்தாவும்செக்ஸ் வீடியோக்களும், ஊடகக்காரர்களின் வேசித்தனம்!]

15 வயது பெண் பலரால் கற்பழிக்கப்பட்டாள் - சர்ச் அருகில் 2015

மேரி மாதா சர்ச்சைச் சுற்றியுள்ள இடங்களில் கற்பழிப்பு, செக்ஸ் விவகாரங்கள் நடப்பது ஏன்?: குணடாலாவைச் சுற்றியுள்ள இடங்களில் செக்ஸ்-விவகாரங்கள் பல நடைப்பெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு புண்ணிய ஸ்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வாறு நடக்கலாமா என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும். கடந்த ஜூலை 2015ல், குணடாலாவில் பெத்லஹேம் காலனியில், ஒரு பெண் ஐந்து நபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[1]. ஒரு 15 வயது பெண் தன்னுடைய காதலுடன், மேரி மாதா சர்ச்சிற்கு போகும் போது, அவனும் அவனது கூட்டாளிகள் நால்வரும் சேர்ந்து, பெத்லஹேம் காலனியில் உள்ள ஒரு அறைக்கு இழுத்துச் சென்று, இரண்டு நாட்களாக கற்பழித்துள்ளனர். அதாவது, காதலிப்பதைப் போல ஏமாற்றி அவளை சீரழித்திருக்கிறான். அந்த காதலன் ஒரு மொபைல் போன் ரிப்பேர் செய்யும் கடையில் வேலைப் பார்த்து வருகிறான். அவனும் அவனது இரு கூட்டாளிகளும் பிடிபட்டனர், மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[2]. இரண்டு நாட்களாக காணவில்லை என்ற நிலையில் விஜயவாடா முனிசபெல் கார்ப்புரேஷனில் பெருக்கும் வேலையில் உள்ள அப்பெண்ணின் தாயார் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இரண்டு நாட்களில் அவர்கள் படங்கள் எடுத்தனரா இல்லையா என்பதனை குறிப்பிடவில்லை. ஏனெனில், விஜயவாடாவில் புழங்கும் ஆபாச வீடியோக்களுக்கு ஆதாரம் தேவையாக உள்ளது.

Bomga Suresh sexual harassment AP

பொங்கா சுரேஷ் என்ற பாதிரியின் லீலைகள்: பொங்கா சுரேஷ், ஒரு “பாரிஷ் ப்ரீஸ்ட்” அதாவது “மடாலய சாமியார்” என்று குறிப்பிட்டப்படுகிறார். கிருஷ்ணா ஜில்லாவில் இர்க்கும் ஒரு சர்ச் பாதிரியாம். இவர் ஒரு பெண்ணை தொடர்ந்து பாலியல் தொல்லைக்குட்படுத்தி வந்தார். கற்பமுற்றதால், கல்யாணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார். ஆனால், சர்ச்சின் மானம் கருதி முடியாது என்றார். அப்பெண் பிஷப்பிடம் கூட முறையிட்டிருக்கிறார், ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஒரு நிலையில் அப்பெண் தான் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்றாள். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. கத்தோலிக்க மதத்திற்கு எந்த இழுக்கும் வரக்கூடாது, அதனால், இவ்விவகாரத்தை முடித்து விட வேண்டும் என்ற வெறித்தனம் தான் அவர்களிடம் வெளிப்படுகிறது. “6-டிவி” என்ற செனலின் வீடியோ இவ்விவரங்களைக் கொடுக்கிறது. அந்த பாதிக்கப்பட்ட பெண்ணே எல்லா விவரங்களையும் கூறுகிறார்[3]. அப்பெண்ணின் கதி என்ன, குழந்தைப் பெற்றுக் கொண்டாளா இல்லையா என்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

Bomga Suresh sexual harassment AP.2தேசிய இளைஞர் கிருத்துவ மாநாட்டில் ஆபாசபடம் / போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது (அக்டோபர் 23-25, 2012): ஹைதராபாதில், “அசெம்பிளி ஆப் காட்” என்ற சர்ச்சின் சார்பில், அக்டோபர் 23-25, 2012 தேதிகளில், தேசிய இளைஞர் கிருத்துவ மாநாடு நடந்தபோது, ஆபாசபடம் / போர்னோகிராபி பற்றி விவாதிக்கப்பட்டது[4]. டுயூக் ஜெயராஜ் என்ற பாதிரி, அதைப் பற்றிய மோசமான விளைவுகளை எடுத்துக் காட்டினார். இருப்பினும், “நான் அதனை ஏன் பார்க்கிறேன் என்றால், திருமணத்திற்கு பிறகு, எப்படி அம்முறைகளை உபயோகப்படுத்தலாம் என்பதனை அறிந்து கொள்ளவே பார்க்கிறேன்”, என்று சொல்வதையும் சுட்டிக் காட்டினார். பொதுவாக கிருத்துவ சாமியார்கள் பிரம்மச்சாரிகளாக, கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலையுள்ளது. அப்படியிருக்கும் போது, பாஸ்டர்கள், பாதிரிகள், இவற்றையெல்லாம் அலசுவது வியப்பாக இருக்கிறது. இதனை “நெகட்டிவ் சஜஸ்ஸன்” [Negative suggestion] முறையில் சொல்வதாக எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விளக்கி விட்டு, இதனை செய்யாதே என்று சொல்லக் கூடிய விசயமா இது என்பது நோக்கத்தக்கது. இந்திய சர்ச்சுகளில் கடந்த 40 வருட காலத்தில் ஆயிரக்கணக்கான பாஸ்டர்கள், பாதிரிகள், போதகர்கள், ஏன் பிஷப்புகல் கூட பாலியல் சம்பந்தப்பட்ட கொலைல் கொள்ளை, செக்ஸ், கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், சிறைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அத்தைய நிலையில், இதைப்பற்றிய வாத-விவாதங்கள் ஏன் என்பதனை அவர்கள் தாம் விளக்க வேண்டும்.

Hyderabad Youth fest 2012 Octoberஊடகங்களின் பாரபட்ச முறையிலான அணுகுமுறை, செய்தி வெளியீடு முதலியன[5]: மதத்தலைவர்கள், மடாலய குருக்கள், செமினரி பாதிரிகள், என பலர் இந்தியா முழுவதும், பல மாவட்டங்களில் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை ஊடகங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன. இப்பொழுது, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களைத் தவிர, பெரிய-பெரிய பத்திரிக்கைக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளகளில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், அவை பாரபட்சம், ஒருதலப்பட்சம், குறிப்பிட்ட மதங்களுக்கு ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலைகளில் தான் உள்ளன. குறிப்பாக மார்ச் 10-14 20216 தேதிகளில் இந்தியாவில் அத்தகைய மற்றும் நல்ல நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. ஆனால், அவை திரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 11-23 தேதிகளில் “உலக கலாச்சார விழா” யமுனை ஆற்றங்கரையில் நடந்த போது, பிரபு சாவ்லா, சேகர் குப்தா, பர்கா தத், சித்தார்த் வரதராஜன், சபா நக்வி, ராஜ்தீப் சர்தேஸாய், முதலியோர் அதனை மோசமாக விவரித்தனர், விமர்சித்தனர், குறைகூறினர். ஆனால், விஜயவாடா போர்னோகிராபி பற்றி கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்த்ல், நித்தியானந்தா கோவில்களுக்குச் சென்றது அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பழைய விவாகரங்களைக் குறிப்பிட்டு கோவிலுக்குச் சென்றார், என்று விவரித்தன. ஆனால், கற்பழிப்பு வழக்கில் உலகப் புகழ் பெற்ற ஜோசப் பழனிவேல் ஜெயபால், மறுபடியும் பணியில் அமர்த்தப்பட்டதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை[6]. இத்தகைய போக்கை செக்யூலரிஸம் என்பதா, செலக்டிவ் அம்னிசியா [குறிப்பிட்ட விசயங்களை மற்றும் மற்ந்து விடுவது] என்று கொள்வதா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

15-03-2016

Vijayawada porn - involving politicians, land mafia and loan takers[1] The times of India, Minor girl in Vijaywada sexually abused; 3 held, TNN | Jul 19, 2015, 02.34 PM IST.

[2] http://timesofindia.indiatimes.com/city/vijayawada/Minor-girl-in-Vijaywada-sexually-abused-3-held/articleshow/48132614.cms

[3]  http://yttoons.com/watch/KQCBnGpCR0w/sexual-harassment-by-church-father-6tv

[4]  http://g-4mission.blogspot.in/2012_11_01_archive.html

[5] https://vedaprakash.wordpress.com/2016/03/14/why-the-priest-of-gunadala-mary-matha-church-is-involved-in-sexploitation-and-it-is-reported-selectively/

[6]  http://mattersindia.com/2016/02/queens-woman-shocked-vatican-reinstates-priest-who-raped-her/

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

மே26, 2013

ஆடு-மாடு இறைச்சி தின்பது சரியா-தவறா – முஸ்லீம்-பௌத்த உரையாடல்களும், முரண்பாடுகளும் (1)

வெள்ளிக்கிழமை தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை இறந்தார்: ஆடு, மாடுகள் இறைச்சிக்காக கொல்லக்கூடாது என வலியுறுத்தி இலங்கையில் புத்தமத அமைப்பு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா / கண்டி என்ற இடத்தில் புத்தரின் பல் இருக்கும் விஹாரத்தின் முன்பு தீக்குளித்தார்[1]. சாகரிகா ராஜகருணாநாயகே (Sagarika Rajakarunanayake) என்ற சத மித்ரா (Sathva Mithra, or friends of animals movement) என்ற அமைப்பின் துறவி கூறுவதாவது, மிருகங்கள் கொல்லப்படுவதும் தவறு, பௌத்தர்கள் இத்தகைய தீக்குளிப்பு செய்வதும் தவிர்க்கப்படவேண்டியது, என்றார்[2]. ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்ததாக அந்த புத்த சாமியார் கூறியிருக்கிறார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வந்தார்கள், ஆனால், தீக்காயங்களினால் பலனின்று இறந்தார். வெள்ளிக்கிழமை (24-05-2013) தீக்குளித்த பிக்கு ஞாயிற்றுக் கிழமை (26-05-2013) இறந்தார்.

உயிக்கொலை, போர் முதலியவற்றைப் பற்றிய முஸ்லீம்-பௌத்தர்களின் முரண்பட்ட வாதங்கள்: இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அப்போது எந்த ஒரு புத்த துறவியும் அதை கண்டு கொள்ளவில்லை[3]. ஆனால் ஆடு, மாடுகளை கொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து புத்த துறவி தீக்குளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4]. இப்படி தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. பௌத்தம் அமைதியாக, இந்தியா அல்லாத மற்ற வெளிநாடுகளில், பரவியது என்பது ஓரளவிற்கே உண்மை. போர்களில் ஜைனர்கள், பௌத்தர்கள், மற்றும் முஸ்லீம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். ஜைன-பௌத்த மதங்கள் ஜீவகாருண்யத்தை போதித்தாலும், சத்திரியர்கள் அதாவது ஆட்சி செய்த ஜைன-பௌத்தர்கள், அதனைக் கடைப் பிடிக்கவில்லை. புத்தர் காலத்தில் தான், கொல்லாமை, புலால்-உண்ணாமை கடுமையாகப் பின்பற்றப் பட்டது. ஆனால், பிறகு, பௌத்தம் பல நாடுகளில் பலவித பிரிவுகளாகப் பிரிந்த பின், அக்கொள்கைகள் கடைப் பிடிக்கப் படவில்லை[5]. மாறாக பௌத்தர்கள், குறிப்பாக இந்தியாவில் இல்லாத புத்தர்கள், எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராகவே வேலை செய்து வந்தனர். முஸ்லீம்களை பொறுத்தவரையில் அத்தகையக் கொள்கைகளே – கொல்லாமை, புலால்-உண்ணாமை, ஜீவகாருண்யம், சாத்துவிகம் இல்லை.

முன்னேஸ்வரம் இந்துக்கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம்: இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர். “முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து அமைச்சர் மேர்வின் சில்வா  செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது: “முன்னேஸ்வரம் இந்து ஆலயத்தில் நடைபெறும் மிருகவதைகளை தடுக்கபோவதாகவும், மிருகங்கள் பலியிடப்படுவதை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யபோவதாக  அமைச்சர் மேர்வின் சில்வா முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்[6].

மனிதர்கள்,  மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப் படுவதையும், வதை செய்யப் படுவதையும் இந்துமதம் ஏற்றுக் கொள்ளவில்லை: மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பெளத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்த மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது. எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.  எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம், சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும்

கடந்த வருடம் – 2011- மேர்வின் சில்வா நடந்து கொண்ட முறைமை உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது: இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பூசகர்களையும் பக்தர்களையும்  அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன் சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு  பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல”.  ஆக, இது உள்ளூர் அரசியல் என்று தெரிகிறது.

முஸ்லீகளுக்கு எதிரான போராட்டம்: இந்துகோயில்கள் மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிராகவும், பௌத்தர்கள் ஆர்பாட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான “பொது பல சேனா” (the Bodu Bala Sena – the Buddhist Brigade) கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது. முஸ்லீம்களின் கடைகள் மற்றும் வியாபாரங்களை விலக்கச் சொல்லியும், அவர்களது பெரிய குடும்பங்களைப் பற்றி விமர்சித்தும் போராட்டங்கள் நடத்தின[7]. பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான வெள்ளிக்கிழமை அன்று (24-05-2013) பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது[8]. இந்நாள் புத்தருடைய பிறந்த நாள், ஞானம் பெற்ற நாள் மற்றும் நிரியாண நாள் என்று கொண்டாடப்படுகிறது[9].

அரசியலுக்காக பௌத்தர்கள் நடத்தும் நாடகம் தான் இது: பௌத்தர்களின் விசித்திரமான போக்கு, ஆராய்ச்சிற்கு சிறப்பாகவே உள்ளது. இதனை அரசியலாக்கியுள்ளனர் என்று தெரிகிறது. இன்று ஶ்ரீலங்கை பௌத்தர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், அதனை, தமிழகத் தமிழர்கள், குறிப்பாக திராவிட சித்தாந்திகள், நாத்திகவாதிகள், இந்துவிரோதி பிரச்சாரவாதிகள் முதலியோர் புர்ந்து கொள்ளா வேண்டும். அம்பேத்கர் “இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்” எல்லோரும், சமம், அவ்வாறே சமூக நிறுவனங்கள் பாவிக்கப்படவேண்டும் என்று இந்திய நிர்ணய சட்டத்தில் பிரிவை ஏற்படுத்தினார். திராவிட சித்தாந்திகள் “ஆரியர்-திராவிடர்” என்று பிரித்துப் பேசினர். அதன்படி அவர்களுக்கு பௌத்தர்கள், முஸ்லீம்கள் எல்லொரும் “திராவிடர்கள்” ஆவார்கள். ஆனால், இக்கதை அங்கு ஏற்பதில்லை. அதனால் அவர்களுக்கு அங்கு சிங்களவர் “ஆரியர்கள்” ஆகிறார்கள்! பாவம், திராவிடர்களான முஸ்லீம்களும், பௌத்தர்களும் தமிழர்களை எதிர்ப்பது அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக “திராவிடத்திலேயே”, தென்னிந்தியாவிலேயே, தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள், மராத்தியர் முதலியோர் தாங்கள் “திராவிடர்” என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

26-05-2013


[2] An animal rights activist said she did not condone the monk’s action, but she added that the unprecedented move demonstrated the anger towards the inhuman treatment of animals.“Taking one’s life (for this cause) is also wrong,” said Sagarika Rajakarunanayake of Sathva Mithra, or friends of animals, movement. “But this also shows that many people are frustrated over the cruelty to animals.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130525167131

[5] மின்தமிழ் – என்ற வளைதளத்தில் இதைப் பற்றி அதிகமாகவே, ஆதாரங்களுடன் 2009ல் எழுதி வந்தேன். இன்றும் அவை உள்ளனவா, அழிக்கப்பட்டு விட்டனவா என்று தெரியவில்லை. இருந்தால், அவற்றைப் படிக்கவும்.

https://groups.google.com/forum/?hl=es&fromgroups#!topic/mintamil/gIZuEvmr_lk

https://groups.google.com/forum/?hl=en&fromgroups#!msg/mintamil/gIxAoVyAcfE/g-hM97JsMx0J

[7] In Sri Lanka, the issue of halal slaughter has been a flashpoint. Led by monks, members of the Bodu Bala Sena – the Buddhist Brigade – hold rallies, call for direct action and the boycotting of Muslim businesses, and rail against the size of Muslim families.

http://www.bbc.co.uk/news/magazine-22356306

[9] The incident marred the Wesak festival celebrations, an important day among the island nation’s Buddhist majority population. Wesak is a public holiday throughout the country. Meat stalls and liquor shops remain closed for two days during this time which signifies the birth, enlightenment and the death of Lord Buddha.

http://www.business-standard.com/article/pti-stories/lanka-monk-in-self-immolation-bid-to-protest-animal-killing-113052400387_1.html

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

ஏப்ரல்11, 2013

சாரா கிரௌஸ் கொலையில் மறைக்கப்படுவது என்ன?

Sarah Groves - passport- PTI

இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீரம்[1], இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரம்[2], இந்தியா ஐரோப்பிய பெண்களுக்கு உகந்தது அல்ல[3] என்றெல்லாம் ஒரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம்[4] செய்து வரும் அதே வேளையில், கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டவள் இருவருமே, தங்கள் இனத்தை விட்டு, ஆசியநாட்டவரை காதலித்து, மணம் செய்து கொள்ளுதல் என்ற நிலையில் இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளையர்களாக இருக்கும் அவர்களது பெற்றோர்கள் எதிர்த்திருக்கக்கூடும். வெள்ளையர்களுக்கு தமது நிறப்பற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இருப்பினும், தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப, தங்களது வாழ்க்கையினை அமைத்து கொள்ள இருவரும் தீர்மானித்துள்ளனர். காதல் வயப்பட்டு சேந்து வாழும் பெண் கிறிஸ்தவர், ஆண் முஸ்லீம், அதிலும், காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லீம். இதை எப்படி மேனாட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பதை யாரும் விளக்கவில்லை. மேனாட்டு ஊடகங்கள், மற்ற நேரங்களில் அதிகமாக அலசும் போது, இவ்விஷயத்தில் மறைப்பது சந்தேகமாக இருக்கிறது.

Victo-Groves-the-father-of-Sarah-Groves-who-was-stabbed-to-death-in-India-gives-an-emotional-press-conference-at-Guernsey

தந்தை விக்டர் “காஷ்மீருக்குப் போகாதே” என்று உறுதியாகச் சொல்லித் தடுத்தது: சாரா கிரௌஸின் தந்தை, தந்தை விக்டர், “என் மகளை காஷ்மீருக்குப் போகாதே என்று உறுதியாகச் சொல்லித் தடுத்துப் பார்த்தேன். ஆனால், அவள் கேட்கவில்லை” என்கிறார். அதாவது, காஷ்மீருக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அவள் பிழைத்திருப்பாள். சாராவின் காதலனும், “நான் அவளை காஷ்மீரத்திற்குக் கூப்பிட்டதால் தான் கொலையுண்டாள்”, என்றான். ஆனால், இருவர் சொல்வதிலிருந்தும், உண்மை சிறிது மாறுபடுகிறது, தந்தை அவள் ஒரு முஸ்லீமுடன் வாழ்வதை விரும்பவில்லை என்று தெரிகிறது. சையிது அஹ்மத் சோடாவோ, கோவாவிலியே இருந்திருந்தால், அவள் கொலயுண்டிருக்க மாட்டாள் என்கிறான். அப்படியென்றால், சாரா ஏன் காஷ்மீரத்திற்கு வலுக்கட்டாயமாக வரவேண்டும் அல்லது வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும்?

Richard-de-Wit-wife-Wit had a history of mental problems -but had never been violent or threatening

உமா ருபன்யா என்ற ரிச்சர்ட் டி விட்டின் மனைவி கூறுவது: உமா ருபன்யா என்ற தாய்நாட்டைச் சேர்ந்த, ரிச்சர்ட் டி விட்டின் மனைவி இனி வாழ்க்கையை எப்படி கழிப்பது என்றே புரியவில்லை என்று தெரிவித்தாள். அவர்களுக்கு 12 மற்றும் 10 வயதுகளில் இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர்கள், “எதற்கம்மா, அப்பா அந்த பெண்ணைக் கொல்லவேண்டும்?” என்று கேட்பதாகக் கூறி வருத்தப்பட்டாள். தனது கணவன் மனநிலை சரியில்லாதவர் என்பதால், மனோதத்துவ நிபுணரிடத்தில் சென்றுவருவதாகக் குறிப்பிட்டார்[5]. ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தை விடுத்து, ஊர் சுற்றக் கிளம்பி விட்டதாக கூறினார்[6]. அவள் தொடர்ந்து கூறும் விவரங்களில் வேறு விஷயமும் வெளிப்படுகிறது.

Sarah-Rehman-Richard-2013

என் கணவர் அப்பாவி  “அவர் துரத்தப் பட்டதால் இந்தியாவிற்கு சென்றுள்ளார்”: நெதர்லாந்தின் கடற்கரையைச் சேர்ந்த பிரதேசமாகும். டச்சுப் போலீஸார் அவரைத் துரத்தி வருகின்றனர். ஹாலந்தை விட்டு அதனால் தான் அவர் வெளியே வந்தார். ஹாலந்து, அந்த மனோதத்துவ நிபுணரை வைத்துக் கொண்டு வேவு பார்க்கின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என்று பயந்துதான், கடந்த ஆறு மாதங்களாக ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில், பல கென்யா, டுனிஸியா நாடுகளுக்குச் சென்று பிறகு, கிருஸ்துமஸ் போது சுவிட்சர்லாந்தில் தங்கி விட்டு. இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளார்[7]. 20 வருடங்களுக்கு முன்னர், ஒரு மோட்டர் சைக்கிள் விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதனால், அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை வைத்துக் கொண்டு பல ஊர்களுக்குச் சென்று பொழுதைப் போக்கி வருகிறார். மனப்பிரச்சினகளினால், எந்த வேலையையும் செய்வதில்லை[8].

Sarah father did not want her to go to India

சாரா கிரௌசின் தந்தை கூறுவது: கிரௌஸ் என்ற 70 வயதான சாராவின் தந்தை, “அவளை ஸ்திரமில்லாத இந்திய நாட்டிற்குச் செல்லாதே என்று அறிவுருத்தினேன். குறிப்பாக காஷ்மீரத்திற்குச் செல்லாதே என்றேன். இலங்கைக்குச் சென்று யாதாவது தரும காரியங்களைச் செய் என்றேன். ஆனால், அவள் 23 வயதான சையீது அஹமது சோடாவின் காதல் வலையில் வீழ்ந்தாள். குடும்ப வாழ்க்கையில் இறங்கிவிடுகிறேன் என்று எனக்கு சமாதம் சொன்னாள். ”. அதாவது, காஷ்மீருக்குச் செல்வதை விட, ஶ்ரீலங்காவிற்குச் செல், தரும காரியங்கள் செய் என்று சொன்ன அர்த்தம் என்னவென்று தெரியவில்லை

Richard de Wit - the murderer

ரிச்சர்ட் டி விட்டின் மற்ற விவகாரங்கள்: தான் ஒரு மரக்கலர் நிறங்கொண்ட (பிரௌன்) பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால், தனது அரசாங்கமே தன்னை வேவு பார்த்ததாகக் கூறினான். மேலும் தான் விந்துகளை தானம் செய்ய தயாரான போது, தனது மனோதத்துவ நிபுணர் தான் குடித்த தேநீரில், ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்து, குடிக்க வைத்து, தன்னை, ஆண்மையில்லாதவனாகச் செய்துவிட்டதாகக் கூறினான். இதைத்தவிர, தனது ஸ்கூட்டரில் GPS கருவியைப் பொறுத்தி, தன்னைக் கண்காணித்து வருவதாகவும் கூறினான் [9].

Sarah Groves murderer - richard de Wit - Facebook

மற்றவர் குடியேற்றத்தை எதிர்ப்பவன்: இளைஞனாக இருந்தபோது, ஹாலந்தின் மத்திய குடியரசுக் கட்சியின் உருப்பினனாக இருந்து, குடியேற்ற கொள்கைகளில் தீவிரமாக இருந்தான். இதனால், மொரோக்கோ நாட்டினர் இவனை எதிர்த்தனர், தாக்கினர். இருப்பினும், தான் ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றதாகவும் கூற்றிக்கொண்டான்[10]. அதிக அளவில் வலதுசாரி-சித்தாந்தம் கொண்ட குடியரசுக் கட்சிக்காரனாக சந்தேகிக்கப்பட்டதால், டச்சு பிலனாய்வுத் துறை, இவன் தம்து நாட்டு அரசிக்கு எதிராக இருக்கக் கூடும் என்று வேவு பார்த்து வந்தனர்[11]. இப்படி பல செய்திகளை வெவ்வேறு நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன.

he son of the houseboat owner said Sarah had been enjoying her time with the family

கொலைக்குக் காரணம் இனவெறியா, மதமா?: மேற்கண்ட விவரங்களினின்று, இருவரும் ஆசிய இன மக்களுடன் உறவு கொண்டதை, வெள்ளையினரான பெற்றொர், மற்றவர் விரும்பவில்லை என்று தெரிகிறது[12]. அதனால், டி விட்டை, மனோரீதியிலாக உசுப்பி விட்டிருக்கலாம். இல்லையென்றால், சரியாக, அதே படகு ஹோட்டலில், அடுத்த அறைக்கு வந்து தங்கியிருக்க முடியாது. காதலனான் சையீது அஹ்மது சோடாவும் ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், எல்லாமே நடந்துள்ளது, எனும்போது, கொலைக்குக் காரணம் இனவெறி இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் முன்னமே குறிப்பிட்டது போல, சாராவின் பெற்றோர், தம் மகள் ஒரு முஸ்லீமை மணந்து கொள்வதை விரும்பியிருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், சாரா கஆஷ்மீரத்திற்கு வந்தவுடன், சயீதின் தாயார், அவளுக்கு இஸ்லாம் பற்றி போதித்திருப்பது தெரிகிறது. இல்லையென்றால், வெள்ளை மசூதிக்குச் செல்வது, தொழுவது முதலியவை நடந்திருக்காது. நவநாகரிகமான சாரா அந்த அளவிற்கு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரானால், என்பதும் நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது.

 

வேதபிரகாஷ்

11-04-2013

 

 


[5] Miss Rupanya, 31, said she was in a state of shock and felt immense sorrow for Miss Groves’s family. She told the Daily Mail: ‘My husband left us in November. He was seeing a psychiatrist but had become increasingly irrational and paranoid.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mXUnpO
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] Thai bride Uma Rupanya said her husband of ten years, Richard de Wit, had become increasingly paranoid and psychotic before abandoning the family six months ago to go travelling.

Read more: http://www.dailymail.co.uk/news/article-2306628/Sarah-Groves-murder-suspect-Richard-Wits-wife-tells-childrens-disbelief-Why-did-daddy-kill-girl.html#ixzz2Q4mJcbUN
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[7] He believed the Dutch police and authorities were “out to get him” and that his government-appointed psychologist had colluded with them, she told The Daily Telegraph in Rotterdam. In fear that the police would take him into custody, and embarked on a journey across African and Asia to avoid “arrest”, she said.Over the last six months, he travelled first to Kenya and Tunisia, stopping off in Switzerland at Christmas, and arrived earlier this year in Delhi, India.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[8] Describing his decision to leave Holland and go travelling, funded by compensation payments from the accident, she said: “This has been a problem in his life. He is always running away from things. He feels stress and he runs. He is frightened people want to arrest him.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9982808/Sarah-Groves-wife-of-accused-killer-swears-he-is-innocent.html

[9] The psychologist, from the government’s health department, had put drugs in his tea to make him impotent after he had said he wanted to become a sperm donor, while members of the security services had put a GPS tracker under his scooter to monitor his movements, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[10] As a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election, he claimed.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9979823/Sarah-Groves-murder-suspect-suffering-from-paranoia.html

[11] He also claimed that as a young man he had joined Holland’s Central Democrats, a nationalist, anti-immigration political party, after he was attacked by Moroccans, and had won a seat for the party in an election.Mr de Wit said he had been visited by intelligence agents who believed he was a far-Right republican who posed a threat to Queen Beatrix of the Netherlands.

இந்தியா பெண்களுக்கு உகந்த இடமில்லை ஆகையால், இனி உங்கள் பெண்களை இனிமேல் பாகிஸ்தானிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பி வையுங்கள், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்!

ஏப்ரல்8, 2013

இந்தியா பெண்களுக்கு உகந்த இடமில்லை ஆகையால், இனி உங்கள் பெண்களை இனிமேல் பாகிஸ்தானிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் அனுப்பி வையுங்கள், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்!

Srinagar-India-Kashmir-map-Mirror-UK

திசைமாறும் இந்தியவிரோத பிரசாரம்: இந்தியாவின் மீது பிரச்சார ரீதியில் மேனாட்டு ஊடகங்கள் தாக்குதல் நடத்துவது கண்டு, நான் கீழ்கண்ட இடுகைகளை மற்றொரு தளத்தில் பதிவு செய்தேன்.

  1. காஷ்மீர் கொலையை வைத்துக் கொண்டு இந்தியவிரோத பிரச்சாரம் – “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை”!
  2. “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” – கோவாவிலிருந்து[1] காஷ்மீருக்கு வந்த பெண் ஏன் கொலை செய்யப்பட்டாள்?
  3. “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் ஆங்கில பெண் கொலை” [2] – ஒரு அறையில் 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர்[3] – நம்ம ஊர் செய்தி!

ஒரு குறிப்பிட்ட இணைத்தளம் அளவிற்கு அதிகமாகவே அதைப்பற்றிய செய்திகள், புகைப்படங்கள் முதலியவற்றை உடனுக்குடன் வெளியிட்டு வந்தது, வருகின்றது[4]. மெயில் ஆன்லைன் என்ற இங்கிலாந்து நாளிதழும் விவரங்களைக் கொடுத்து வருகின்றது[5].

Sarah went to mosque on Friday and get killed on the same day

சாரா கிரௌஸ்  மசுதிக்குத் தொழச் சென்றது ஏன்?: ஆனால், இப்பொழுது சாராவின் “பாய்-பிரென்ட்” இன் தாயார் ஹாபியா கூறுவதாவது[6], “போற்றப்படும் ஶ்ரீநகர் வெள்ளை மசுதிக்குச் சென்று வெள்ளிக்கிழமை அன்று தொழுகை செய்தாள். ஆனால், அந்நாளிலியே அவள் கொல்லப்பட்டுள்ளாள்”. போற்றப்படும் ஶ்ரீநகர் வெள்ளை மசுதி என்று குறிப்பிட்டது, ஹஜரத்பல் என்ற மசூதியாகும், அங்கு முஹ்ஹம்மது நபியின் தலைமுடி உள்ளது. அத்தகைய மசூதிக்கு, சாரா ஏன் சென்றாள் என்று தெரியவில்லை. “வெள்ளிக்கிழமை அன்று தொழுகை செய்தாள்”, என்று சொல்லப்படுவதால், ஒருவேளை, அவளை இஸ்லாம்பால் இழுக்கும் முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை. தன் மகனை காதலிப்பதாலும், நிக்காஹ் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதாலும், நிச்சயமாக அவள் முஸ்லீமாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால், மகன் கிருத்துவன் ஆக வேண்டும். குறைகூறும் ஆங்கிலேயர்கள் தான் இவ்விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், இவற்றை விடுத்து, இந்தியாவை குறைகூற, இப்படி பட்டியல் இடுகிறார்கள்[7].

sarah Groves - Tanzeel ur Rehman

சாராவின் பல புகைப்படங்களை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. அத்தகைய நவநாகரிக மங்கையாக இருந்திருக்கிறாள் என்கிறார்களா அல்லது ஒரு முஸ்லீமை காதலித்து மணந்து கொள்ள தயாரானாள் என்பதை மறைக்கப் பார்க்கிறார்களா? சாவிலும் இந்தியவைத் தாக்கி அல்ப சந்தோஷம் அடையாளம் என்று இப்படி இறங்கிவிட்டார்களா?

Sarah-exercising

இந்தியாவில் ஐரோப்பியப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் – பாதுபாப்பு இல்லை:

  • கடந்தடிசம்பர் 23, 2012ல் தில்லி பேர்ந்தில், பிசியோதெராபிஸ்ட் மாணவி, பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். பிறகு காயங்களினால் இறந்துள்ளாள்.
  • மார்ச் 2012ல் ஒரு ஸ்விட்சர்லாந்து சுற்றுலா பெண் பலரால் மத்தியபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டுள்ளாள்.
  • அதற்கு சில நாட்கள் பிறகு, 31-வயதான ஆங்கிலேய சுற்றுலா பயணி, ஆக்ரா ஹோட்டல் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துள்ளாள். விடியற்காலை 4மணிக்கு, தனது அறைக்குச் செல்லும் போது, அந்த ஹோட்டலின் முதலாளி தன்னை கற்பழித்து விடுவானோ என்று பயந்து குதித்தாளாம்.
  • இவ்வளவு நடந்திருந்தாலும், ஐரோப்பிய உல்லாச பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், ஏற்கெனவே 25% வரவு குறைந்து விட்டது[8].
  • இதனால், இனிமேல் அதிக அளவில் இந்திய சுற்றுலா வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறான முடிவுக்கு வந்த பிறகு, இனிமேல் அவர்கள் தங்கள் பெண்களை பாகிஸ்தானிற்கோ, ஆப்கானிஸ்தானிற்கோ அனுப்பி வைக்கலாம், அவர்கள் அங்கு நன்றாகப் போற்றப்படுவார்கள்.

வேதபிரகாஷ்

08-04-2013


ரஷ்யன் ஆர்தோடாக்ஸ் சர்ச் பகவத் கீதையை தடை செய்ய சைபீரியாவில் வழக்கு தொடுத்துள்ளது!

திசெம்பர்19, 2011

ரஷ்யன் ஆர்தோடாக்ஸ் சர்ச் பகவத் கீதையை தடை செய்ய சைபீரியாவில் வழக்கு தொடுத்துள்ளது!

பகவத் கீதையை தடை செய்ய சைபீரியாவில் வழக்கு: கடந்த செப்டம்பர் மாதம் டோம்ஸ்க் வழக்கறிஞர் குழுமம், லெனின்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில், பகவத் கீதை மற்ற மதத்தவர்களை, “முட்டாள்கள்”, “ராட்சஸர்கள்”, “பன்றிகள்” என்றெல்லாம் சொல்வதாக வழக்கு தொடர்ந்தனர்[1]. நீதிபதி கலினா புடெங்கோ, கெமெரோவோ மாநில பல்கலைக் கழகத்து விற்பன்னர்களை, இவ்விஷயத்தை பரிசீலினை செய்து கருத்தைச் சொல்லுமாறு பணித்துள்ளார்[2]. டிசம்பர் 28ம் தேதி வரை வழக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. கிருத்துவர்கள் இங்கு பெரும்பாலும் இந்துக்களுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கம் என்ற நிருவனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். 2006ல் கிருஷ்ண ஜெயந்திற்கு விடுமுறைக் கொடுக்கக் கூடாது என்று துலா ஆர்தோடாக்ஸ் சர்ச் புகார் கொடுத்தது[3].

இஸ்கான் என்ற அனைத்துலக கிருஷ்ண வழிபாட்டு சங்கம் என்ற நிருவனம் கூறுவது: இஸ்கான் தரப்பில் யூரி பிளிஷகோவ் என்பவர், “கிருஷ்ணரை வழிபடுவோர் மற்ற மதத்தினரையும் மதிக்கின்றனர். அதனால், சட்டரீதியாக இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல”, என்றார்.[4] சமீக காலங்களில் கிருஷ்ண வழிபாடு நிறுவனத்தினரின் தாக்கம், மேலைநாடுகளில், மறுபடியும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, ரஷ்யர்கள் அதில் அதிக நாட்டத்தைக் காட்டி வருகிறார்கள். இது கிருத்துவர்களுக்குப் பிடிக்காமல், அதற்கு எதிராக வேலை செய்து வருகின்றனர்.

சோனியாவின் பங்கு இதில் உள்ளதா? இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்று-இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், இவ்விஷயம் இந்தியாவில் தெரிய வந்து, பாராளுமன்றத்தில், இதைப் பற்றி அரசியல் கட்சிகள் விவாதிக்க ஆரம்பித்துள்ளன.[5] அதுவும் மன்மோஹன்சிங் ரஷ்யாவிலிருந்து திரும்ப வந்ததும் இவ்விஷயம் பேசப்படுகிறது. இதனால், காங்கிரஸ் பிரச்சினைகளை திசைத் திருப்ப இவ்விஷயத்தை கையால்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது. உண்மையில் ரஷ்யா சோனியா மெய்னோவிற்கு மிகவும் பிடித்தமான நாடாகும். தனது பிள்ளை ரவுல் ராபர்ட் என்று பெயர் வைத்து, ஒரு ரஷ்ய ஆர்தோடக்ஸ் சர்ச்சில் தான் பாப்டிஸம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதையும் இங்கு நோக்கத்தக்கது.                                                                                    அபாயம் அணுவுலையிலிருந்து வரப்போகிறதா இல்லை பகவத் கீதையிலிருந்துவரப்போகிறதா என்று உதயகுமார் அல்லது பாதிரிகள் சொல்வார்கள் என நம்பலாம்!

வேதபிரகாஷ்

19-12-2011


[1] The case against the widely distributed book began in September when Tomsk prosecutors filed charges in the city’s Leninsky District Court saying the text attacks practitioners of other religions as “fools,” “demons” and “pigs.”
Read more:http://www.themoscowtimes.com/news/article/krishna-holy-book-faces-ban-in-tomsk/448803.html#ixzz1h33Bqmxr  The Moscow Times

[2] The case is currently on hold after Judge Galina Butenko ordered experts at Kemerovo State University in Tomsk to present further analysis.
Read more:http://www.themoscowtimes.com/news/article/krishna-holy-book-faces-ban-in-tomsk/448803.html#ixzz1h34CDMet The Moscow Times

[3] n 2006, officials in the Tula Orthodox diocese filed a complaint after local Krishnas tried to involve residents in the celebration of a Krishna holiday.
Read more:http://www.themoscowtimes.com/news/article/krishna-holy-book-faces-ban-in-tomsk/448803.html#ixzz1h353yWCv  The Moscow Times

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (1)!

நவம்பர்13, 2011

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (1)!

 

கல்பாக்கத்திலிருந்து கூடங்குளம் வரை: கூடங்குளத்தைப் பற்றி அதிகமாகவே விவாதங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் வியாபார ரீதியில் தான் இதனை

போரட்டம் திசை மாறுகிறதா[1]: ஜனநாயகப் பாதைபோராட்டம் நடக்கும் சர்ச் வளாகம் அருகே சென்ற, உளவுத்துறை போலீஸ்காரர், கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்கப்பட்டார். “இடிந்தகரைக்குள் போலீசார் வரக்கூடாது’ என, போராட்டக்காரர்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், காங்கிரஸ் பிரமுகர் மற்றும் “டிவி’ நிருபர் தாக்கப்பட்டு, கார் உடைக்கப்பட்டுள்ளது.இதுவரை, ஜனநாயக முறையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நடத்தப்பட்ட போராட்டம், தற்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்னையாக மாறி வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

எதிர்ப்பது-ஆதரிப்பது என்ற நிலைகள் உள்ளன. கல்பாக்கத்தில் அணுவுலை வேலை மேற்கொண்டபோது, அத்தகைய எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அதற்கேற்றபடி இழப்பீடு, ஆதாயம் என்றெல்லாம் பெற்றபிறகு அமைதியாகி விட்டனர். அங்கு வியாபாரம், பணி மற்ற இதர விஷயங்களுக்காக மக்கள் வந்து போவது முதலிய போக்குவரத்துகளினால் கடைகள் வைத்து கொள்வது, ஆட்களை வேலைக்குப் பிடித்துக் கொடுப்பது, வீடு வாடகை விடுவது என பலவிதங்களில் சுற்றியுள்ள மக்களுக்கு ஆதாயங்கள் கிடைத்தன. அதேப்போலத்தான் இங்கும் நிகழப்போகிறது. அதற்குத்தான் முன்னமே இடம் பிடிக்க, இவ்வாறு போராட்டம் என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் “அஹிம்சை” என்ற பெயரில் மக்களை குறிப்பிட்டவர்கள் ஏமாற்றி வருவதுதான்[2].

சேது சமுத்திரமும், கூடங்குளமும்: சேது சமுத்திர திட்டத்தின் போது எப்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, தத்தமது பங்கைப் பெறத்துடித்தார்களோ, அதே நிலைதான் இங்குள்ளது. அணுவுலை செயல்பட ஆரம்பித்து, கல்பாகத்தைப் போல “டவுன்சிப்” என்றெல்லாம் வந்த பிறகு, எப்படி அந்நிலையில் பணம் பண்ணலாம் என்ற எண்ணத்துடன் தான் போராட்டக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்த வரைக்கும்,  இந்தியா அணுதொழிற்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடாது. அதற்காக எல்லாவிதங்களிலும் வேலை செய்யும் என்பதை, அவர்கள் வியாபாரத்தடை விதித்தபோதே இந்தியர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். விற்பனை என்று வந்துவிட்டால் “பொருள்” அல்லது “சேவை” என்பவற்றை யார் விற்க வருகிறார்களோ அவர்களிடம் வாங்கிக் கொள்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அமெரிக்கா மறுத்தபோது, இந்தியாவின் தன்னிரைவு ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டபோது, முடக்க நினைத்தபோது தான் இந்தியர்கள் ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கூடங்குளம் திட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அத்தகைய வீயாபாரத்தை தமது அரசியல், மதம், மற்ற லாபங்களுடன் இணைத்து முடிச்சுப் போட்டிருப்பது சாதாரண இந்திய குடிமகன்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

காலக்கிரமத் திட்டப் பணிகள், நிறைவேற்றும் நிலை: வியாபார ரீதியில் 2008-09களில் முடிவடைய வேண்டியிருந்த திட்டம், 2010 இறுதியில் முடியும் நிலைக்கு தள்ளப்பட்டது. விவரங்கள் கிழ்ழ்கண்ட அட்டவணைகளில் காணலாம்:

Location Kudankulam, District : Tirunellveli-Kattabomman, Tamil Nadu State.
Reactor type V V E R -1000 (PWR)
Capacity 2 x1000 MWe
Scheduled Date of Commercial Operation Unit-1 : Dec ’07
Unit-2 : Dec ’08
Expected Date of Commercial Operation Unit-1 : Jun ’09
Unit-2 : Mar ’10
P hysical progress achieved Kudankulam – 1 : 85 % as on Apr. , 2008
Kudankulam – 2 : 75.4 % as on Apr. , 2008
Kudankulam – 1 & 2 : 81.2 % as on Apr. , 2008

இவ்விதமாக முன்னேறும் நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட விபத்தினால், பயம் ஏற்பட்டது. ஆனால் பயத்தை பீதியாக மாற்றி எதிப்பு இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது, அதனால் தான் இப்பிரச்சினை உருவாகியுள்ளது.

 Major Milestones Achieved 
Activity

Unit – 1

Unit – 2

Construction of Inner Containment (IC) Dome

Oct – 2007

Construction of Primary Containment Wall upto 43.9M

May – 2005

Construction upto + 5.4 Slab

Sept-2003

Dec-2003

Completion of 0.00m Slab

March – 2003

June-2003

Completion of Foundation Slab

July – 2002

Sept. – 2002

First Pour of Concrete

March-2002

July – 2002

Ground Break

Sept-2001

Sept-2001

இல்லையென்றால், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் சாதாரண மக்களுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

செப்டம்பரில் உதயகுமாரின் “தீக்குளிப்பு” பேச்சு – கூடங்குள ம்அணுமின்நிலையத்தை மூடக்கோரி. நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்[3]:கூடங்குளம் போராட்ட மக்கள் குழு அமைப்பாளர் உதயகுமார் பேசியதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடந்து வருகிறது. காசு வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்இந்த போராட்டத்தின் பின்னணியில் காசு வாங்கி இருக்கிறோம் என்று மத்திய அரசு நிரூபித்தால், இதே போல் மக்களை திரட்டி தீக்குளிப்பேன். இந்த போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து மிரட்டுகிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு உதயகுமார் கூறினார். இதில் ஏதோ திராவிட அரசியல்கட்சிக்காரர் போல தீக்குளிப்பேன் என்பதை விட, “இதே போல் மக்களை திரட்டி தீக்குளிப்பேன்”,  என்ற ரீதியில் பேசி மிரட்டியிருப்பது, வன்முறையைத் தூண்டுவது போல உள்ளது. இலையென்றால் இல்லை என்று தைரியமாக சொல்லிவிட்டு போயிருக்கலாம். எதிர்ப்பில் கூட சித்தாந்த ரீதியில் குழுக்கள் சேர்வது வியப்பாக உள்ளது. இடதுசாரி சித்தாந்தத்தைப் இன்பற்றும் பத்திரிக்கைகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன[4].

கூடங்குளம் அணு உலை தொடர்பாக, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூடங்குளம் அணு உலையில், டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை துவக்கியிருக்கலாம். ஆனால், பிரிவினை சக்தி போராட்டங்களால், மின்

Foreign environmental activists have joined hands with locals opposing the Kudankulam Atomic Power Project (KAPP), alleged Dr S. K. Jain, Chairman and Managing Director of the Nuclear Power Corporation of India………Dr Jain said the foreign activists along with a splinter group of Tamil Nadu-based anti-nuclear activists were creating all the trouble. All the activists were receiving foreign funding in abundance, he added…………Dr Jain also alleged that some of the churches in the area were participating in the agitation………[5]

நிலையத்திற்குள் செல்லவே முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும், அடிப்படைத் தேவைகளை சிரமப்பட்டு பராமரிக்கிறோம். அணு உலையில், “ஹாட் ரன்’ எனப்படும் தொழில்நுட்பப் பணி முடிந்ததால், அங்கு குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்கு தண்ணீர் சுழற்சி, மின்சாரம் மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகள் தேவை. இல்லையென்றால், குளிரூட்டும் இயந்திரத்தில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படும். “அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், கூடங்குளம் அணு உலைக்கு பிரிவினை சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின் தெரிவித்துள்ளார்[6]. இக்கருத்தை ஏற்கெனவே சென்ற மாதம் எம்.ஆர்.சீனிவாசன் சொல்லியிருந்தார்.

அக்டோபரில் “வெளிநாட்டு சக்தி’ குற்றச்சாட்டு: “கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாடுகளிலிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல்

For months, a coalition of activists from Australia, Germany, the Scandinavian countries and Canada have swarmed across the 27 villages in Kudankulam, trying to persuade inhabitants from five of these to join in the protests. Many of the local protestors are Christian, and they appear to have bought the argument of foreign activists that Kudankulam would be a disaster beside which Fukushima would seem a picnic. However, the overwhelming majority of the local population does not buy this negative view, seeing in the plant opportunities for economic advancement. That priests have been active in the agitation against the Kudankulam plant is not surprising, as the Catholic Church in India has a long tradition of its clergy getting involved in anti-nuclear activities[7].

அமைப்பினரின் பின்னணியில், இந்த போராட்டம் நடக்கிறது[8].  கூடங்குளம் பகுதியைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் வசிக்கும் பிரிவினை சக்திகள் உதயகுமார் என்பவரின் தலைமையில், அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சில கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அதை சேர்ந்தவர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்”. 22-09-2011 அன்று தமிழக முதல்வரை சந்திப்பதற்காக, உதயகுமார் அவர்கள் தலைமையிலான போராட்டக் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தக் குழுவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமடியஸ் உட்பட மூத்த கிறித்துவ குருமார்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்[9].
                                                                                                                      நினைத்தவுடன் மூட கார் தொழிற்சாலையல்ல...: கூடங்குளம் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளன. மத்திய அணுசக்தி கமிஷன் மற்றும் ஒழுங்கு முறை கமிஷனின் வழிகாட்டுதல்படி, கூடங்குளத்தில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இது, பாதுகாப்பு

அதாவது கிராமங்களில் இருக்கும் கிருத்துவர்கள் அனைவரையும் இதில் ஈடுபடுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கத்தோலிக்க சர்ச் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஏற்பாடுகளை சரிபார்க்க நடத்தப்பட்ட ஒத்திகை. ஆனால், பிரிவினை சக்திகள் இதை பயன்படுத்தி, அங்குள்ள கிராமங்களில், “மக்களை இங்கிருந்து காலி செய்து விடுவர்’ எனக் கூறி, பீதியை ஏற்படுத்திவிட்டனர். இந்த உண்மைக்கு மாறான வதந்தியால் பீதியடைந்த மக்களை பயன்படுத்தி, போராட்டம் நடத்துகின்றனர். கூடங்குளத்தைச் சுற்றி 27 கிராமங்கள் உள்ளன. இதில், 22 கிராமத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்காமல், திட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர். அணு உலையை பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் நிறுவவும், மூடவும் கார் தொழிற்சாலை கிடையாது. இதற்கென பல தொழில்நுட்பப் பணிகள் உள்ளன. ஒரு இடத்தில் அணு உலை நிறுவப்பட்டால், அதை பராமரிக்க மட்டுமே முடியும். மாறாக, நினைத்த நேரத்தில் மூட முடியாது. அவ்வாறு மூடினால், பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தற்போதைய நிலையில், அணு உலையை மூடுவதற்கு சாத்தியமே இல்லை”, இவ்வாறு ஜெயின் கூறினார்.
                                                                                                                                                                                                                                                  மத்திய நிபுணர் குழுவுடன் அணு விஞ்ஞானிகள் ஆலோசனை *அடுக்கடுக்காக கேள்வி கேட்ட உறுப்பினர்கள்: கூடங்குளம் விவகாரத்தில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், இந்திய அணுமின் கழக தலைவர் ஜெயின், அணுசக்தி இயக்குனரக செயலர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பங்கேற்று, நிபுணர் குழுவின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்க, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்த 15 நிபுணர்கள் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து, கடலியல் மற்றும் விண்வெளித் துறை விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, வாழ்வியல் அறிவியல் துறை பேராசிரியர் சுகுமாறன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினரின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிபுணர் குழுவினர் அனைவரும் தனித்தனியாக அறிமுகம் செய்யப்பட்டனர்.இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையிலுள்ள இந்திய அணுமின் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி தொழில்நுட்ப இயக்குனர் பரத்வாஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, கூடங்குளம் அணு உலை குறித்து, நிபுணர் குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.
                                                                                                                                                                                                                                        அளிக்கப்பட்ட விளக்கம்: அணுமின் விஞ்ஞானிகளிடம் நிபுணர் குழுவினர், பொதுமக்களின் அச்சம் குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், தங்களது அச்சம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த மனுக்களின் பிரதிகள், ஒவ்வொரு நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்ட அச்சம் தொடர்பான பதில்களையும், அவை தொடர்பான ஆய்வு புத்தகங்கள், உலக அளவில் வெளியான குறிப்புகள் ஆகியவற்றின் நகல்களையும், அணுமின் கழக அதிகாரிகள், நிபுணர் குழுவினருக்கு வழங்கினர்.இதுதொடர்பாக நிபுணர் குழுவினர், தாங்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகள் தொடர்பான காரணங்களுக்கு ஆய்வு செய்து, குறிப்புகள் தயார் செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசிடம் பேசி, விரைவில் மாநில கமிட்டி அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டியினரும் மத்திய நிபுணர் குழுவினருடன் இணைந்து செயல்படுவர் என, அணுமின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மீண்டும் அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
                                                                                                                                                                                                                                          முதல்வரை சந்திக்க முடியாத விஞ்ஞானிகள்: கூடங்குளம் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, அணுமின் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்காததால், விஞ்ஞானிகள் காத்திருந்து விட்டு, மும்பைக்கு திரும்பி விட்டனர். அரசியல் ரீதியில் ஏற்படும் சங்கடத்தை தவிக்கவே, ஜெயலலிதா இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.

வேதபிரகாஷ்

13-11-2011.


[1] தினமலர், கூடங்குளம்காங்கிரஸ்பிரமுகருக்குஅடி, உதை: கார்உடைப்பு, 13-11-2011 (ஞாயிறு, ப,2), http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348435

[2]  கூடன்குளம் போராட்டகுழு அமைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, “கூடன்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்து பொதுமக்களை திரட்டி அஹிம்சை முறையில் போராடி வருகிறோம்”.

http://tamil.oneindia.in/news/2011/09/14/request-pass-resolution-against-koodankulam-plant-aid0175.html

Until recently, some may have still wondered whether the tradition of civil disobedience – the force of non-violent resistance that fuelled Mahatma Gandhi’s historic campaign as he led his country to independence – was still alive in India. The People’s Movement Against Nuclear Energy not only answered that question, but also laid a first brick in the road that will take India toward a safe and environmentally clean future. http://www.bellona.org/articles/articles_2011/protests_succeeding

[4] பிரஃபுல் பித்வாய், நியூகிளியார் சேனிடி, பிரன்ட் லைன் பத்திரிக்கை, Volume 28 – Issue 21 :: Oct. 08-21, 2011, http://www.frontline.in/fl2821/stories/20111021282110100.htm

[6] தினமலர், கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர்ஜெயின்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339970

[8] M R Srinivasan, former chairman of the Atomic Energy Commission, who sniffed at a gathering of non-government organisations from countries like Germany, France and the US, and also some religious organisations to oppose the Kudankulam project, told Business Standard [11 Oct 2011]: “This is clearly a campaign against India, in particular, which has attracted the world’s attention for proposed nuclear capacity addition. This is also to run down the Russian VVER-1,000 reactors which are deployed in the Kudankulam project.”

http://www.nuclearfriendsfoundation.com/nuclearArticle-indias-track-record-in-nuclear-sector-impeccable.aspx

Asked if he thought that the anti-nuclear lobby was also behind the protests in Kudankulam, Mr. Srinivasan said there was an organised anti-nuclear sentiment in certain advanced parts of the world, including Germany and Australia, especially after the “Fukushima event.”But he also stressed that France continued to operate its nuclear reactors as also are Korea and Russia, whereas China is building them at a furious pace. “So, we have to look at it from totality.”

http://www.thehindu.com/news/national/article2472871.ece

நித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்!

பிப்ரவரி2, 2011

நித்தமும் நித்யானந்தா: ஊடகங்களை உசுப்பிவிடும், மனங்களை கிளப்பிவிடும் மற்றவர்களை அலையவிடும் பித்தம்!

நித்யானந்தா என்றாலே, ஊடகங்காரர்களுக்கு கிளுகிளுப்புதான், ஜொல்லுவிடுவதில் அலாதியான திறமைதான், படிப்பவர்களுக்கு ஜிலு-ஜிலுப்புத்தான். என்னடா கிடைக்கும் என்று அலைபாயும் மனங்களுடந்தான் மொய்க்கிறார்கள். அட கோபாலுகுக்குத் தான், என்ன கரிஷனம், நித்தி-நித்தி என்று செம்மொழி மாநாட்டிலேயே கொஞ்சி கொஞ்சி பேசியபோது, கருணாநிதி குடும்பத்தினரே நெளிந்துவிட்டனர். ஆனால், அப்பொழுதுதான், வெளியே விட்டார், ஒரு விஷயத்தை – ஆமாம், மாநாட்டு மலைக்கூட லெனின் குருப்புததான் அமைத்தாராம்! நல்லவேளை, அட்டை பத்திரமாகத்தான் இருந்தது போலும்! நிர்வாணமாக்கப் படவில்லை! செவ்வாய்கிழமை நித்யானந்ததவின் நீண்ட பேட்டியில், பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளது, ஆச்சரியமானதுதான்! ஓரளவிற்கு, அவற்றைத் தொகுத்துக் கீழ்கண்டமுரறையில் அளித்துள்ளேன்.

லிங்கத்தைப் பற்றிய அவதூறான, ஆபாசாமான விளக்கம்[1]: தான் தந்திர ரீதியிலான செக்ஸைப் பற்றிக் குறிப்பிட்டதையும் திரித்துக் கூறப்பட்டது. “லிங்கத்தைப் பற்றி அவதூறான, ஆபாசாமான விளக்கம் கொடுக்கப் பட்டு, சில போலி ஆவணங்களுடன் ஒரு கட்டுரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த அமரிக்கக் கும்பல்[2] அதற்காகவே, பிரத்யேகமாக வேலை செய்ததாகத் தெரிகின்றது. ஊடகங்களில் அவை வெளியானப் பிறகுதான், அதைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது”, என்றார் நித்யானந்தா. வெளிநாட்டவரைப் பொறுத்தவரைக்கும், இன்றளவில் அத்தகைய திரிபுவாத விளக்கத்தைக் கொடுத்துவர்வது, வியப்பான விஷயமாகும்.

மைக்கேல் ஜாக்ஸனும், நிதாயனந்தாவும்[3]: நித்யானந்தா சொல்கிறார், “இணைதளங்கள் வேலைசெய்வதில் நின்று போனதாக, உலகத்தில் இரண்டு முறைதான் நிகழ்ந்துள்ளன. ஒன்று மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோது, இரண்டு, என்னைப் பற்றிய வீடியோ படங்கள் வெளியிட்டபோது. ஆனால், மைக்கேல் ஜாக்ஸன் அதற்காக ஆட்ப்பாடி, குதிக்க வேண்டியிருந்தது, உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியிருந்தது. நான் எதுவுமே செய்யாமல், அந்த நிலை கிடைத்துவிட்டது” (என்று நக்கலாக, ஏளனத்துடன் கூறினார்). அதாவது, ததன் மைக்கேல் ஜாக்ஸனை விட இந்த விஷயத்தில் பெரியவர், என்று முறையில் பேசியது விசித்திரமாக இருந்தது.

இரண்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டினராம்! பெங்களூரு :””நூறு கோடி ரூபாய் கேட்டு, இரண்டு, “சக்தி வாய்ந்த’ மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். அவர்கள் யார் என்பதை, தற்போது என்னால் சொல்ல முடியாது. இதை நான் தெரிவித்தால், என் உயிருக்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை. கர்நாடக-தமிழக போலீஸார் எனக்கு எதிராக வேலை செய்கின்றனர்.[4],” என, சாமியார் நித்யானந்தா நேற்று கூறினார்.

திமுகவிற்கு வேண்டிய சாமியார் யார்? ஆளும் திமுக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சாமியார்தான் இதன் பின்னணியில் உள்ளார், என்பதனை மறைமுகமாக, சில வார்த்தைகளினால் உணர்த்தினார்[5]. அந்த சாமியாரின் பெயரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தாலும், பெங்களூரைச் சேர்ந்தவர்[6] என்று குறிப்பிட்டதால், அது யார் என்று யூகிக்கக் கூடிய முறையில் உள்ளதாக, நிருபர்கள் பேசிக் கொண்டார்கள். ஜக்கி வாசுதேவா அல்லது ஸ்ரீரவிசங்கரா என்றுதான் புதிராக இருந்தது.

வீடியோவில் இருப்பது நான் இல்லை மறுபடியும் நித்யானந்தா சொல்கிறார்! நீண்ட நாட்களுக்கு பின், பிடதி ஆசிரமத்தில் சாமியார் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது[7]:என்னைப் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவில் இருப்பது நானில்லை. முழுக்க, முழுக்க டிஜிட்டல் மூலம் அதை தயாரித்துள்ளனர்; நடிகை ரஞ்சிதாவுடன் நான் இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானோ, எனது உடலோ அல்ல. இந்த வீடியோ காட்சிகள் பொய் என்று அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோ காட்சிகளை திரித்து வெளியிட்டு உள்ளனர்[8]. லெனின் மட்டும் செய்த வேலையல்ல இது. லெனினுக்கு பின்னணியில், இரண்டு, “சக்தி வாய்ந்தநபர்கள் உள்ளனர்.

போலீஸாரின் வழக்குப் பதிவே சொதப்பலானது: “போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நான் கற்பழித்ததாக கூறப்படும் பெண் யார் என்றே குறிப்பிடப்படவில்லை. என் மீது 376-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லாத நிலையில் என் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து உள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு வழக்கு முன் எப்போதும் பதிவு செய்யப்படவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் மீது போலீசார் தொடக்கம் முதலே சட்டவிரோதமாக நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். என்னால் செக்ஸ் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையில் கூட தெரிவிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து எனக்கும், எனது பக்தர்களுக்கும் துன்புறுத்தல்களை, தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்தியாவில் இது போன்ற குற்றப்பத்திரிகையை யாரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்[9]. நான் இதுவரை எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொண்டது கிடையாது. எனக்கு சிகரெட், குடி, போதை பழக்கம் எதுவும் கிடையாது; அசைவம் சாப்பிடுவதும் இல்லை.என் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது”.

இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன்: இதன் பின்னணியில் இருக்கும் இரண்டு சக்திவாய்ந்த மனிதர்கள் யார் என்பதை நீதிமன்றத்திலும், சி.ஐ.டி., விசாரணையிலும் கூறியுள்ளேன். நடிகை ரஞ்சிதா, கோபிகா ஆகியோரை சாட்சியாக ஆக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தனர். போலீசார் கூறியதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்துக்களில், நான் ஒரு மைனாரிட்டி இந்துவாக உள்ளேன். அவர்கள் ஒட்டு மொத்த இந்து மதத்தையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சட்டவிரோதமாக என்னை கைது செய்துவிட்டு தற்போது அதை நியாயப்படுத்துகிறார்கள். இப்போதாவது அதை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். சேனல் மூலம், என் தொடர்பான காட்சிகளை பலமுறை ஒளிபரப்பினர். வீடியோ காட்சியில், 2009 டிச., 25ம் தேதி, எடுக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2010 மார்ச் 3ம் தேதி தான் இதை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதன் உள்நோக்கம் என்ன. வீடியோ பதிவின் போது, காலை 8 மணி என்று காண்பிக்கிறது. ஆனால், அந்த அறையில் உள்ள கடிகாரம், 11 மணியை காண்பிக்கிறது. இதில், எதுவுமே உண்மையல்ல.

கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை: எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவு கடிதங்கள் வந்து கொண்டு இருக்கிறது. படித்தவர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என 1 லட்சம் கடிதங்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும் கடிதம் அனுப்பி உள்ளார். அவரை போன்று பல நாட்டுக்காரர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். வருகிற மார்ச் 2-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை பல்வேறு மத தலைவர்கள் நேரில் சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளேன். அதன் பிறகு அந்த 1 லட்சம் கடிதங்களை பிரதமர், ஜனாதிபதி, கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம்.  அப்போது எங்கள் மீதான அச்சுறுத்தல், அத்துமீறல், துன்புறுத்தல் ஆகியவற்றை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்துவோம். ஏனென்றால் இன்னும் கூட எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். வெளியில் நடமாடும் எனது பக்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை நடத்தி வருகிறது[10]. இது ஏன்? என்று எனக்கு புரியவில்லை.  மக்களிடம் நீதி கேட்டு தமிழ்நாடு கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பீதர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளேன்.

ஏசு பிறந்த தேதியில் ஏன் வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை! இயேசு பிறந்த புனித தினமான, டிச., 25 2009ஐ தேர்வு செய்ய, என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. அந்த தேதியை ஏன் தேர்வு செய்தனர் என்பது எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது! இருப்பினும், மார்ச் வரை தாமதப் படுத்தியதும், படு புதிராக உள்ளது!

உசுப்பிவிட்ட ஊடகங்கள் – பொறுப்புள்ளவை-பொறுப்பற்றவை!: “நக்கீரன் என்ற தமிழ் பத்திரிகையில், 60 முறை கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். பல பத்திரிகைகள் மிகவும் பொறுப்பாக செயல்பட்டன. அதில், தமிழில் தினமலர், தினந்தந்தி, ஆனந்த விகடன், ஜெயா “டிவிராஜ் “டிவிஆகியவை, பொறுப்பான செய்தி வெளியிட்டன. அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இணையதளம், “யு டியூப்பில் என்னைப் பற்றி தான் அதிகமாக தகவல் வெளியிடப்பட்டது.எனக்கு உலகம் முழுவதும், ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து பல அமைப்புகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன”.

தமிழர்கள் தாம் கன்னடர்கள் போலத் தாக்கினர் !நூறு கோடி ரூபாய் கேட்டு இரண்டு, “சக்தி வாய்ந்த மனிதர்கள், என் சீடர்கள் மூலம் மிரட்டினர். பின், 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது[11]. தவறு செய்யாத நான், “ஒரு பைசா கூட தர முடியாதுஎன்று கூறிவிட்டேன். இருந்தாலும், என் கவனத்துக்கு வராமலேயே, ஆசிரமத்திலிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். ஆதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறேன். அதனை கொடுக்காததால் அவர்கள் ஆபாச சிடியை வெளியிட்டனர். வீடியோ காட்சியைப் பார்த்த சிலர் தமிழ்நாடு, பிடதியில் உள்ள ஆஸ்ரமங்களை அடித்து உடைத்தனர். தீ வைத்து கொளுத்தினர் ஆசிரமத்தின் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கினார்கள். தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆசிரமங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பிடுதி ஆசிரமத்திலும் அதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் கன்னடர்கள் இல்லை. கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் கூட அதுபோன்ற செயலை செய்யவில்லை.

3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர்[12]: பிடுதியில் 3 பிரமச்சாரினி பெண்களை அறையில் வைத்து பூட்டு போட்டு தீ வைத்தனர். ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார்கள்[13]. இது போன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் எனக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அதனால் நான் வெளியில் தங்கி இருந்தேன். நான் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கிய அந்த இடத்திலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினேன். வெளிப்படையாக வெளியில் கடைக்கு எல்லாம் சென்று வந்தேன். அப்போது நான் கும்பமேளாவில் இருந்தேன். எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து உடனே நான் ஆஸ்ரமத்திற்கு வரவில்லை. அங்கும் தலைமறைவாக இல்லாமல் கடைக்கும், வெளியேயும் சென்று நடைபயிற்சியும் செய்து வந்தேன். பிறகு போலீஸôர் என்னை கைது செய்தது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்தில், என் ஆசிரமமும், பக்தர்களும் தாக்கப்பட்டனர்[14]. இதை செய்தது முழுக்க, முழுக்க தமிழர்களே. தமிழகத்தில் தான் அதிகளவில் தாக்குதல் நடந்தது. கர்நாடகத்தில் தாக்கப்பட்டாலும், கன்னடர்கள் தாக்கவில்லை..

நான் ஆண்மையில்லாதவன் என்று திரித்துக் கூறியது போலீஸார்தான்! கன்னடர்கள் போர்வையில், மற்றவர்கள் தாக்கினர்.போலீஸ் விசாரணையில், “ஆணையும் விட, பெண்ணையும் விட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளேன்’ என, நான் கூறியதை, ஆண்மை இல்லாதவன் என்று போலீசார், பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர்[15]. என் மீது கூறப்பட்ட புகார்களுக்கு, எந்தவித சாட்சிகளும் இல்லை. என் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இதனால், சட்ட உதவியை நாட முடியவில்லை.வீடியோ காட்சிகளை, அமெரிக்க லேபில் பரிசோதித்த போது, இந்த வீடியோ முதலில் எடுக்கப்பட்டது முதல், தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது எல்லாம் இருந்தால் தான், அது உண்மையா என்பதை தெரிவிக்க முடியும், என்று கூறியுள்ளனர்.

அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்: உலகத்துக்கு, என் அர்ப்பணிப்பை புரிந்து கொண்டு, அனைத்து இந்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். எனக்கும், என் சீடர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு சாமியார் நித்யானந்தா கூறினார்.

100 கோடி கேட்டது யார்?: நூறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியவர்கள் யார் என்று சொல்ல சாமியார் நித்யானந்தா மறுத்துவிட்டார். பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு, சாமியார் நித்யானந்தா அளித்த பதில்: 

கே: உங்களை, 100 கோடி கேட்டு மிரட்டியது, தமிழக முதல்வர் கருணாநிதியா?
பதில்: இல்லை

கே: தமிழக அரசியல்வாதிகளா?
பதில்: குறிப்பாக தமிழகத்தை சார்ந்தவர்கள் என கூற முடியாது.

கே: லெனின் ஹிந்துவா? கிறிஸ்தவரா?
ப: தெரியாது. இங்கு வரும் யாரிடமும் ஜாதி, மதம் கேட்பது கிடையாது.

கே: ஆஸ்ரமம் செய்து வந்த, தர்ம காரியங்களை நிறுத்துவதற்கு காரணம் என்ன? நீதிமன்றம் தடை விதித்துள்ளதா?
ப: இல்லை. இன்னும் சில மாதங்களில் தொடரும்.

கே: நடிகை ரஞ்சிதா, லெனின் தன்னை கற்பழிக்க வந்ததாக புகார் கூறியுள்ளாரே. அச்சம்பவம் உங்களுக்கு தெரியுமா?
ப: ஆஸ்ரமத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அனைவரையும் நான் கண்காணிக்க முடியாது.

கே: ஆஸ்ரமத்துக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதா?
ப: அப்படி எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

 

© வேதபிரகாஷ்

02-02-2011


[2] இந்த கும்பல் யார் என்று கூறாவிட்டாலும், அதன் பின்னணியில் ஒரு கிருத்துவ நிறுவனம் உள்ளதாக சூசகமாகத் தெரிவிக்கப் பட்டது.

[6] Choosing his words carefully, he dropped enough hints that it was Sri Sri Ravishankar of Art of Living (AOL) and the DMK leaders in Tamil Nadu behind his defamy.

[7] தினமலர், 100 கோடி கேட்டு சக்தி வாய்ந்த மனிதர்கள் மிரட்டல்: நித்யானந்தா பரபரப்பு பேட்டி, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2011,23:10 IST; மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 02,2011,00:50 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178663

[13] ஊடகங்கள் இதனை இரட்டடித்து இருப்பது தான், கிருத்துவர்களின் சதி வெளிப்படுகிறது. இதே ஒரிஸ்ஸாவில், தாங்கள் செய்ததையெல்லாம் மறைத்துவிட்டு, நாடகம் ஆடியதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, வயதான இந்து சாமியாரைச் சுட்டுக் கொன்றதையே மறைத்து, ஏதோ கிருத்துவர்கள் தாக்கப் பட்டனர் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்தனர்.