Archive for the ‘காஷ்மீர சைவம்’ Category

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


Advertisements

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

மே19, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (2).

Yasin-maliok-with-seeemanசெபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக்சில ஒற்றுமைகள்: செபாஸ்டியன் சீமான் மற்றும் யாசின் மாலிக் இவர்களது தொடர்புகள், அயல்நாட்டில் வைத்திருக்கும் உறவுகள், பெண்களிடம் நெருக்கம் அல்லது பலஹீனம் முதலியவை ஒரேமாதிரியாக இருக்கின்றன. தமது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், வெற்றி-தோல்விகளை முதலியவற்றை ஜீரணிக்க முடியாமல், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்னத்தான், மனித உரிமைகள், மக்களின் போராட்டம் என்றெல்லாம் பேசிவந்தாலும் தங்களது மதநம்பிக்கைகள், உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் பேச்சுகளில், தொடர்புகளில், காரியங்களில் வெளிப்படுகின்றன. யாசின் மாலிக் குடித்து கும்மாளம் அடித்து, பெண்களுடன் ஆடியது, நடுவில் ஒரு பெண்ணை அலேக்காகத் தூக்கி, சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, மற்றவர்கள் அவர்களைப் பிரித்து விட்டனர். இவையனைத்தும் கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டது[1]. பெண்களின் உரிமைகள் பற்றி அப்பொழுது அவர்களுக்கு அக்கரை எதுவும் இல்லையா?

Yasin malik at Caddalore meetingகுடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[2]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Mushaal-mallickசீமானின் விஜய லட்சுமி நடிகையுடனான பிரச்சினை: விஜயலட்சுமி என்ற நடிகை, சீமான் தன்னை காதலித்து, உறவாடி, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக ஜூன் 2011ல் புகார் கொடுத்தார்[3]. பிறகு, சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறனார். விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், டைரக்டர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார். முதலில் கொடுத்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

Seeman with Vjayalakshmiகணவன்மனைவியாக வாழ்ந்தோம்: இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம். புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது, எனக்கு பல கடிதங்களை எழுதினார். அதில், என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் – மனைவியாக வாழ்ந்தோம்[4]. என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது. சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். `இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

Vijayalakshmi mother seemanநடிகை கொடுத்துள்ள ஆதாரங்கள் முதலியன: சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார்[5] விஜயலட்சுமி நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி[6]. சீமான், நடிகை மற்றும் நடிகையின் தாய் மூவரும் இருப்பது போன்ற சில புகைப்படங்களும் வெளியாகின. இதற்குள், சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நடிகை கூறியுள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.   இந்த புகார் தொடர்பாக, சீமானிடம் கருத்து கேட்க செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால், அவர் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் நிருபர்களிடம் பேசினார்.

seeman andசீமானின் வக்கீல் சொன்னது: வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது[7]: “நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. Seeman with womanசீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்”, இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் செய்த நடிகை விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்[8]. பிறகு சீமானே தனக்கு காதல், டூயட் என்றெல்லாம் செய்ய நேரம் இல்லை என்று சொன்னதாக செய்து வந்தது[9]. சினிமா பாணியில் பதில் இருந்தாலும், ஐபிஎல் சீனிவாசன் சொன்ன பதில் மாதிரி இருந்தது!Poster demanding to arrest Seeman for affair

சீமானுக்கும், இலங்கைப் பெண்ணுக்கும் தொடர்பு: சீமான் சினிமா உலகத்தைச் சேர்ந்ததால், நடிகைகள், பெண்கள் என்று பல தொடர்புகள் இருப்பதில் வியப்பில்லை. அதனால்தான், மேலே விவரித்த விஜயலட்சுமி விவகாரம் வந்துள்ளது. இருப்பினும், ஒரு இலங்கைப் பெண்னுடனான விவகாரங்கள், புகைப் படங்கள் முதலியன, யாசின் மாலிக்கைப் போன்றே ஒரு மனிதனாகக் காட்டுகிறது. Yasin malik with his wifeயாசின் மாலிக்கின் மனைவி மிகவும் அழகானவள், ஒரு நடிகையை விட அழகாக இருப்பாள். Yasin malik with his wife and othersஆனால், அவள் பாகிஸ்தானில் உள்ளாள். ஆகவே, பொழுது போக்கிற்காக, குடித்து பெண்களுடம் கும்மாளம் போட்டிருக்கலாம். Yasin malik and wife Mushalஆனால், சீமானின் பிரச்சினை என்ன என்பது தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சோயிப் மாலிக்-ஆயிஷா பிரச்சினை போன்றேயுள்ளது[10]. சானியா மிர்ஸாவுடன் திருமணம் செய்து கொள்ளும் முன்னர், ஆயிஷா என்ற பெண்மணி சோயிப் தன்னை கர்ப்பமாக்கினார் என்று வழக்குத் தொடர்ந்தார்[11]. பின்னர் சமரசம் செய்து கொண்டனர்[12]. அதற்கு முன்னர் சாயாலி என்ற மாடலுடன் உறவு இருந்தது[13]. இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில், ஷரீயத் என்ற முஸ்லிம் சட்டத்தின் படி, இப்படி பல பென்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் முறித்துக் கொள்ளலாம்[14]. இருப்பினும் பிரபங்கஙளின் மணம் என்பதால் முரண்பட்ட கருத்துகள், தீர்மானங்கள் என்று வெளிவந்தன[15]. பிறகு ஒரு வழியாக திருமணம் முடிந்தது[16]. ஏனெனில், அவர்களுக்கு அந்த பந்தம் ஒரு கான்ட்ராக்ட் / ஒப்பந்தம் தான். ஆனால், சீமான் அப்படி செய்ய முடியாதே?

© வேதபிரகாஷ்

19-05-2013


நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)!

மே6, 2012

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம் (3)!

கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ அல்லது திட்டமிட்டு நடக்கும் நாடகமா – யார் சூத்திரதாரி? சொல்லிவைத்தால் போல, மதுரை ஆதீனத்தில் தொடர்ந்து ஏற்படும் நிகழ்ச்சிகள், அதுவும், குறிப்பாக விஷேச நாட்களில் – மதுரை கோவிலில் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது, சித்திரா பௌர்ணமி முதலியவை, முன்பு காஞ்சிமடம் சங்கராச்சாரியாரை தீபாவளி சமயத்தில் கைது செய்ததைப் போலவே நடக்கின்றன.

மற்றமத மடாதிபதிகள் ஏகப்பட்ட குற்றங்களில் சிக்கியுள்ளபோதிலும், அங்குக் காட்டப்படாத அக்கரை, கவனம், ஜாக்கிரதை, சாமர்த்தியம், சாதுர்யம் எல்லாமே இங்குக் காட்டப் படுகின்றன. ஆக இது திட்டமிட்டு நடக்கும் நாடகமே என்றுதான் எண்ணத்தோன்றுகிறடது. அதாவது, “நித்யானந்தா” என்ற பெயரில் இந்து மடாயத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. முடிவில் அரசே இந்த மடாலயத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனவே கருணாநிதி பாதையில் ஜெயலலிதா செல்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. கடந்த 1300 ஆண்டுகளாக இந்துக்கள் பலத்ரப்பட்ட தாக்குதல்களுக்குட்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள். இஸ்லாமிய-கிருத்துவ ஆட்சிகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்தாலும், செக்யூலரிஸம் என்ற போர்வையில், எல்லோரும் சேர்ந்து இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி ஆண்டு வருகிறார்கள். இந்துக்களின் பற்பல உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. செக்யூலரிஸ மாயையில் அவ்வாறு ப்பறிக்கப்பட்டுள்ளதே தெரியாமல் இந்துக்கள் தங்களது சொந்த நாட்டில் அடிமைகளாக வாந்து வருகிறார்கள்.

ஒருபக்கம் ரெய்டு நடந்து கொண்டேயிருக்கிறது, மறுபக்கம் மீனாட்சி-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குவது முதலியவற்றைப் பற்றி அந்த நாத்திக ஊடகங்கள் வெட்கமில்லாமல் நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்து வருகின்றன.

மதுரை ஆதீனம் மடத்தில் ரெய்டு: மதுரை ஆதீன மடத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்[1]. இதில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆதீனம் அருணகிரிநாதர் உள்பட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்[2]. இதனால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் திருஞானசம்பந்தரால் மதுரை ஆதீனம் தோற்றுவிக்கப் பட்டது. இங்கு 1980,ல் 292வது அருணகிரிநாதர் ஆதீனமாக பொறுப்பேற்றார். இவர் 2004ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 15 வயது சிறுவனை அறிவித்தார். அதன்பின் சில நாட்களிலேயே சுவாமிநாதன் நீக்கப்பட்டார்.  8 ஆண்டுகளாக தனக்கு வாரிசாக யாரையும் நியமிக்காத மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்தியானந்தாவை 293வது ஆதீனமாக அறிவித்தார்.

இதற்கு இந்து மத அமைப்புகள் (இந்து மக்கள் கட்சி) மற்றும் பக்தர்கள் (அல்லது பக்தர்கள் போர்வைல் நாத்திகர்கள், இந்துமத விரோதிகள்) இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நியமனத்தை எதிர்த்து போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் பழைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள் நித்தியானந்தா நியமனத்தை ஏற்கவில்லை. இந்த ஆதீனங்கள் சேர்ந்து, நித்தியானந்தாவின் நியமனத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இப்படி இவ்வளவு வேகமாக அரசு எந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, அவை உடனே விடுமுறை நாட்களில் துரிதமாக வேலை செய்கின்றன என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் குண்டு வைத்தால் கூட தூங்கிக் கொண்டிருக்கும் மத்தொய சோனியா மெய்னோ அரசு, எப்படி இந்த விஷயத்தில் இவ்வளவு வேகமால்ச் செயல்படுகிறது என்பதனைப் பார்க்க வேண்டும். உண்மையில் தில்லியில் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கத்தான் பெரிய கூட்டமே கூட்டப்பட்டுள்ளது. அங்கு தமிழக முதல்வரும் சென்றுள்ளார். அந்நேரத்தில் தான் தில்லியிலிருந்து வந்துள்ள ஆணையின்படி சோதனை நல்லநாளில் நடக்கிறதாம்!

தில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது: 12 அதிகாரிகள் குழு இந்நிலையில், மதுரை ஆதீன மடத்திற்கு 05-05-2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வருமான வரி மண்டல இயக்குனர் கிருஷ்ணசாமி உத்தரவுப்படி, வருமானவரித் துறை துணை இயக்குநர் சுந்தரேசன் தலைமையில், 3 கார்களில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 அதிகாரிகள் வந்தனர். காலை 7.30 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது[3]. மடத்திற்குள் 4 பிரிவுகளாக பிரிந்து இவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆதீன மடத்தின் மூன்று வாசல்களும் அடைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய புறநகர் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்துக்குள் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆதீனத்திடம் விசாரணை சித்ரா பவுர்ணமி நாளான அன்று, திருவண்ணாமலையில் நித்யானந்தாவுக்கு நடத்திய பட்டாபிஷேகத்தில் பங்கேற்க நேற்று காலை மதுரையில் இருந்து ஆதீனம் அருணகிரிநாதர் கிளம்புவதாக இருந்தார். வருமான வரித் துறையினர் சோதனை நடத்த மடத்திற்கு வந்ததால் அவரது பயணத்தை ஒத்திவைத்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆதீன மடத்திலிருந்த அவரது பெண் உதவியாளர் வைஷ்ணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நித்தியானந்தா, அருணகிரிநாத சுவாமிகளின் ஆட்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். மடத்திலுள்ள வரவு, செலவு ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

தில்லியிலிருந்து வந்துள்ள உத்தரவு படி தாங்கள் சோதனை நடத்துவதாகவும், அதற்குமேல் ஒன்றும் சொல்லமுடியாது என்று மடத்திற்கு வந்திருந்த வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்[4]. ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். அப்படியென்ன மதுரையில் விஷேசம் என்று தெரியவில்லை. ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். மூன்று / நான்கு பெட்டிகளில் ஆவணங்கள் அள்ளிச் செல்லப் பட்டதாக ஊடகங்கள் அறிவித்தன, காண்பித்தன. மடத்தின் கணக்குகள் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் பட்டியல் கணக்காளர்களால் சரிபார்க்கப் பட்டு, சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் அவர்கள் இடங்களிலும் ரெய்டு நடத்தப்படுமா என்று தெரியவில்லை. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மடத்தில் இப்படி ரெய்டு நடந்தால், அரசு என்ன செய்யும், குறிப்பாக இந்து அறநிலையத்துறை என்ன செய்யும் என்று பார்க்க வேண்டும். பக்தர்களால் கொடுக்கப் படும் “பாதக்காணிக்கை” வருவாய் துறை சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. Officials said they were conducting the raid on orders from their Delhi counterparts and they had seized some documents and cash but declined to give details[5]……………They assessed the value of the “golden” crown and “golden” throne, which was brought to the mutt before anointment of Nityananda as the 293rd mutt head besides the jewellery in the mutt premises, IT officials said……..The officials also made inquiries with the Adheenam Arunagirinatha Gnanasambandha Desiga Paramacharya Swami……….their accounts were audited both by the Hindu Religious and Charitable Endowments department and their own auditors. They said the Adheenam (mutt head) would be offered “Padakanikai” (money given by devotees), which was exempted from Income Tax[6]. …………...Nityananda, who is the first person outside the Saiva Velalar community to be appointed as Mutt chief, had landed in a controversy after a video footage showing him in a compromising position with an actress was telecast by local TV channels in March 2010.  He was arrested on Apr 21, 2010 from Solan in Himachal Pradesh and granted bail on June 11, 2010 by the Karnataka High Court.

மதுரை ஆதீனத்திற்கு ஒரு கோடி ரூபாய் குரு காணிக்கை அளித்துள்ளதாக நித்தியானந்தா, பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் ரூ.4 கோடி அளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆதீனம் நியமனத்தில் பல கோடிகள் கைமாறியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 4 பெட்டிகளில்  ஆவணங்கள் மதுரை ஆதீனத்திற்கு ரூ.1,300 கோடி மதிப்பில் மதுரை, திருச்செந்தூர், தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதிலும் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. தற்போது நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து இந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சொத்துக்களுக்கான வாடகை வசூலிப்பது, மடத்தின் கணக்குகள் பராமரிப்பதில் பல கோடிக்கு குளறுபடி நடந்துள்ளதாகவும் ரகசிய தகவல்கள் அடங்கிய ஏராளமான கடிதங்கள் வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன[7]. இதன் பேரிலேயே வருமான வரித் துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. சோதனையின் முடிவில், ஆதீன மடத்துக்கு வந்த வருவாய், செலவு, சொத்து விவரங்கள், மடத்துக்கு பெறப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான ஆவணங்களை 4 பெட்டிகளில் அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.   நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ரெய்டு குறித்து கூற அதிகாரிகள் மறுத்தனர்.  இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகே மதுரை ஆதீனம் வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதா என்பது தெரிய வரும்[8].

மதுரை ஆதீன மடத்தின் சொத்து ரூ.1,300 கோடி: மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ளது மதுரை ஆதீன மடம். இந்த மடத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு தற்போது நகைக் கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. தற்போது இது காலியிடமாக உள்ளது. இங்குதான் மருத்துவமனை அமைக்க உள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். அவனியாபுரத்தில் 100 ஏக்கர் நிலம் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலமும் ஆதீன மடத்திற்கு சொந்தமானது. இது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டிடங்கள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன் 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்திற்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தவிர தஞ்சாவூரில் உள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இதன் மதிப்பு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

நித்தியானந்தாவால் தலைகுனிவு[9]: சைவ சமயம் பரப்பும் உயர்ந்த நோக்கில் துவக்கப்பட்ட ஆதீன மடத்திற்குள் நேற்று முதல் முறையாக வருமான வரித் துறை புகுந்து சோதனை நடத்தியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக் கண்ணன் கூறுகையில், “ஆதீன மடத்தில் வருமான வரித்துறைச் சோதனையை வரவேற்றபோதும், கடந்த காலத்தில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்த இம்மடத்தில் இப்போது பாலியல் புகாருக்கு ஆளான நித்தியானந்தா நியமனத்தால் இம்மடம் அதிகாரிகளின் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. இது சிவனடியார்களையும், பக்தர்களையும் வேதனைப்படுத்துகிறது. இம்மடத்தின் புனிதம் காக்க தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என்றார்

மதுரை மீனாட்சியம்மன் பிள்ளைகள் அமைப்பு நிர்வாகி ஜானகிராமன் கூறுகையில், மதுரையின் தொன்மையான ஆதீனமடம் தவறான நபருக்கு தரப்பட்ட தலைமையால் புனிதம் இழந்திருக்கிறது. இச்சோதனை நடத்தும் அளவிற்கு இம்மடம் சென்றிருப்பது பக்தர்களான எங்களையும், மதுரை மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது என்றார். ஊடகங்கள் ஜாதி அடிப்படையில் விளக்கம் அளிப்பது, நித்யானந்தா முதலியார், ஆகையால் மடாதிபதி ஆகக்கூடாது, சைவப்பிள்ளைமார் தான் ஆகலாம் என்றெல்லாம் விளக்கம் அளிப்பது, அதுபோல, அச்சங்கத்தின் சார்பாக திடீரென்று வந்து பேட்டிக் கொடுப்பது, முதலியன இயற்கையாக நடப்பது போல இல்லை.

பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் “இந்து மக்கள் கட்சி” இவ்வாறேல்லாம் பேசுவது வேடிக்கைதான். உண்மையிலேயே இந்துக்கள் கோவில்களில், மடாலயங்களில் அக்கரைக் காடுவதாக இருந்தால், அவை முதலில் அரசின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும் என்பதனை உணரவேண்டும்.

தி.மு.க., மீது குற்றச்சாட்டு: நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ., பாண்டிசெல்வம், “பிடதி ஆசிரமத்தில் நடக்காத ரெய்டா, இங்கு நடந்து விடப்போகிறது. அங்கு, ருத்ராட்சம் மாலைக்கு கூட கணக்கு இருந்தது. மதுரை ஆதீனத்தில் ரெய்டு நடக்கும் என தெரியும். ஆதீனம், நித்தியானந்தா மீது தமிழக அரசு நல்ல மதிப்பு வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் தி.மு.க., மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருக்கிறார். மேலும் ஆதீனம் திருவண்ணாமலைக்கு செல்வதும்[10] தடுக்கப் பார்க்கிறார்கள்,” என்றார்[11]. ரெய்டுக்கு பின் ஆதீனம் திருவண்ணாமலை சென்றார். அவர், “கணக்குகளை சரிபார்க்க வந்தனர். அவ்வளவு தான்,” என்றார். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பாரம்பரியத்திற்கு விரோதமானது என்று யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. குறிப்பாக இந்து மக்கள் கட்சிற்கு புரியவில்லை போலும்!

நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது[12]. தினமலர் இப்படி “கொசுரு” சேர்ந்துப் போட்டுள்ளது. மடாலயங்களில் முருங்கைக்காய் சாம்பார் முதலியன போடுவது ஒன்றும் அதிசயமான நிகழ்வல்ல. இருப்பினும் அதில் குதர்க்கத்தைக் காணுவது தினமலர் நாகரிகம் போலும். மடத்தில் ரெய்டு நடந்ததால் காலை, மதிய அன்னதானம் மற்றும் உச்சிகால பூஜை நிறுத்தப்பட்டது, என்று சொல்லும் போது, நித்தியானந்தாவின் சீடர்களுக்கு மதியம் சாதத்துடன் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்கீரை மற்றும் “புடலை’ பொறியல் பரிமாறப்பட்டது என்று தினமலருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை!

வக்கிரபுத்தியுடன் இப்படி மேன்மேலும் அவதூறுகளை வாரியிரைக்கத்தான் இத்தனையும் நடக்கிறது என்று நினைத்தது, இவ்வாறு பல இடங்களில் வெளிப்படுகிறது. இதனால்தான், இந்துக்களின் நலன்களுக்கு எதிராக இவையெல்லாம் திட்டமிட்டே நடக்கின்றன என்று பலமுறை எடுத்துக் காட்டப்படுகின்றன.

மத்திய புலனாய்வு, உளவுத்துறை உஷார்[13]: மத்திய புலனாய்வு, மாநில உளவுத்துறையினர் மடத்திற்குள்ளும், வெளியிலும் கண்காணித்தனர். ஆஹா அவர்களின் தேசபக்தி, நாட்டுப் பற்று புல்லரிக்க வைக்கிறது. இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன்

உட்பட சிலர் “மடத்தை மீட்கும் வரை போராடுவோம். முதற்கட்டமாக போலீஸ் கமிஷனிடம் புகார் அளித்தோம்,” என்றனர். அதாவது, இந்துமடத்தை மொத்தமாக இழுத்து மூடுவோம் அல்லது தனியார் மயமாக்கிக் கொள்ளையெடிப்போம் என்கிறார்கள் போலும். அர்சிடமிருந்து மீட்போம் என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை? மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு விழித்துக் கொண்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை[14]. மாநில அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துக்களை மீட்க வேண்டும் என்றார். இந்தியாவில் இஸ்லாமிய-ஜிஹாத் தீவிரவாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் (இதில் கிருத்துவ-முஸ்லீம்கள் அடக்கம்) செய்யும் மனிதவிரோத குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் தாம் அதிகம். அவர்கள் தாராளமாக உலா வருகிறார்கள். அரசுடன் ஜாலியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிகாரிகளை [பிட்த்து வைத்துக் கொண்டு பணம் கேட்டுப் பெறுகிறார்கள்; பாதக கொடூர குரூர குற்றங்களை செய்தவர்களை மீட்டுச் செல்கிறார்கள்; ஆனால்  இந்த மத்திய புலனாய்வு, உளவுத்துறைகள் அங்கு ஏன் ஒன்றும் செயவதில்லை என்று தெரியவில்லை. ஆனால், இந்து மடாலயங்கள் என்றால் அணிவகுத்துக் கொண்டு வந்து விடுகின்றன. அதெப்படி?

இங்குதான் இந்திய செக்யூலரிஸத்தின் மீது சந்தேகம் வருகிறது. சோனியா மெய்னோவின் மீதும் சந்தேகம் வலுப்படுறது. ஏனெனில், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல், இந்தத் துறையினர் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்ய முடியாது. தில்லியிலிருந்து ஆணைப் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

  • Ø  ஆகவே, யார் இவர்களுக்கு ஆணையிட்டது?
  • Ø  ஏன் அத்தகைய அதிரடி ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன?
  • Ø  அதன் பின்னணி என்ன?
  • Ø  தீவிரவாதிகளைக் கண்காணிப்பதைவிட, ஒரு சாதாரண மடத்தலைவரை ஏன் இப்படி கண்காணிக்க வேண்டும்?
  • Ø  அந்த அளவிற்கு அப்படியென்ன பெரிய முக்கியத்துவம், மகத்துவம் இவ்விஷயத்தில் வந்து விட்டது?

 இந்துக்கள் இத்தகைய கேள்விகளுக்கு நிச்சயமாக இதற்கு விடை காண வேண்டும். “இந்து மக்கள் கட்சி” போன்ற ஆட்களிடம் கேட்கவேண்டும்.

  • Ø  ஒருவேளை “நித்யானந்தாவே” இந்துக்களுக்கு எதிராக உருவாக்கப் பட்ட ஒரு அடையாளச் சின்னமா?
  • Ø  தாக்குதலுக்குட்பட்டு வரும் குறியா-குறியீடா?
  • Ø  அத்தகைய போர்வையில் இந்துமதம் வசதியாகத் தாக்கப் பட்டு வருகிறதா?
  • Ø  படித்த அல்லது விஷயம் தெரிந்த இந்துக்கள் இவற்றால் குழப்பப் பட்டு வருகிறார்களா?
  • Ø  வ்வாறே அவர்கள் இந்துமத நலன்களுக்கு எதிராக பேச, செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்களா?
  • Ø  இவையெல்லாம் மனோதத்துவ ரீதியில் இந்துக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் போரா?
  • Ø  அவ்வாறான அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்கள் அவர்கள் மீது நடக்கின்றன என்பதனை இந்துக்கள் அறிவார்களா?
  • Ø  இந்துக்கள் இத்தகைய அதிநவீன மனோதத்துவ-பிரச்சார போர்முறைகளினின்று மீள முட்யுமா?
  • Ø  அவற்றிலிருந்து தம்மை முதலில் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்கள்?
  • Ø  பிறகு அவற்றை தகுந்தமுறையில் எதிர்கொண்டு போராட என்ன யுக்திகளை வைத்துள்ளார்கள்?
  • Ø  இல்லை ஒன்றுமே தெரியாமல் “பலி ஆடுகளாக” அப்படியே இருந்து சாகப்போகிறார்களா?

 

வேதபிரகாஷ்

06-05-2012


[7] அதெப்படி மதுரை ஆதின மடத்தை மட்டும் குறிவைத்து அத்தகைய கடிதங்கள் வருவாய் துறைக்குச் செல்கின்றன என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும், அதெப்படி குறிப்பாக இப்படி நல்ல நாட்களில் வந்து ரெய்டு செய்ய வேண்டும் என்று தில்லியில் யார் சொல்லி அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

காஷ்மீர் கூட்டத்தில் அம்மண்ணின் மைந்தர்கள் காஷ்மீர இந்துக்கள் எங்கே?

செப்ரெம்பர்23, 2010

காஷ்மீர் கூட்டத்தில் அம்மண்ணின் மைந்தர்கள் காஷ்மீர இந்துக்கள் எங்கே?

பிரிவினைவாதிகளுடன் பேச்சா? காஷ்மீர் இந்துக்கள் / பண்டிட்கள்அதிருப்தி[1]:  காஷ்மீரில் நடந்த கூட்டத்தில் இந்துக்கள் தவிர்க்கப் பட்டு, அவமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நேரத்தைக் கொடுக்காதது மட்டுமன்றி, அவர்கள் இருந்ததை யாரும் கண்டு கொள்ளவேயில்லையாம்[2]. “காஷ்மீர் பிரச்னையில், சட்டத்தை மீறுபவர்களான பிரிவினைவாதிகளுடன் வலியச் சென்று பேசத்தயாராக உள்ள மத்தியஅரசு, சொந்த மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட, அமைதி விரும்பும் எங்கள் சமூகத்தவரை, இதுவரை கலந்து ஆலோசிக்காமல் புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது‘ என, காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.

மண்ணின் மைந்தர்களான பண்டிட் சமூகத்தினர் விரட்டப் பட்டனர்: இந்துக்களின் புண்ணிய பூமியாக, சைவத்தின் ஆதாரமான இடமாக இருந்த காஷ்மீர் படிப்படியாக இஸ்லாம் மயமக்கப் பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நேருவின் அபத்தமான கொள்கையால்தான், இன்று அப்பிரச்சினை இப்படி வளஎர்ந்துள்ளது. ஜகன் மோஹன் என்பவர் ஆளுனராக இருந்தபோது, ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர், அவருக்குப் பிறகு, பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தில் வந்து விட்டது. காஷ்மீரில் அவாறு மறுப்டியும் பிரிவினைவாதிகள் தலையெடுத்த பின், 1987ல் இருந்து படிப்படியாக, அம்மண்ணின் மைந்தர்களான பண்டிட் சமூகத்தினர் அங்கிருந்து விரட்டப்பட்டனர். காஷ்மீரில் உள்ள பிராமணர்கள் அங்கு பண்டிட்கள் ஆவர்[3]. பண்டித நேரு முன்னோர்களும் இவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களே. அகதிகளாக வெளியேறிய பண்டிட்கள், தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் பிரச்னையில் தங்களை ஒரு பொருட்டாகக் கருதாத மத்திய அரசு மீது, அவர்கள் வருத்தம் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையை அறியாத சில தமிழக அறிவுஜீவிகள் முஸ்லீம்கள் கூட பண்டிட் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள் என்ரு அபத்தமாக எழுதி வருகின்றன. மதம் மாறிய மாற்றப்பட்ட முஸ்லீம்கள் தான் தங்கள் முஸ்லீம் பெயர்களுடன் பட், லோன், டிக்கூ, கஞ்சு என்ற தமது குடும்பப்பெயர்களை விடாமல் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

சட்டத்தை மீறுபவர்கள், அரசைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள் தான் காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தின் குரலாக இருக்க முடியுமா?: இதுகுறித்து, “அகில இந்திய காஷ்மீரி சமாஜ்’ அமைப்பைச் சேர்ந்த பி.என்.சர்க்கா கூறியதாவது: ‘சட்டத்தை மீறுபவர்களும், அரசைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களும் தான் இன்றைக்கு காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தின் குரலாகிவிட்டனர். இந்திய அரசை எதிர்ப்பவர்களுக்குத் தான் நாட்டின் அனைத்து வளங்களும் கோடிக்கணக்கான ரூபாய்களும் திருப்பிவிடப்பட்டு செலவழிக்கப் படுகின்றன[4]. ஆனால், அந்த மண்ணைச் சேர்ந்த அமைதியை விரும்பும் சமூகத்தவர், அகதிகளா கவறுமையிலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்[5]. காஷ்மீர் பண்டிட்களின் அனைத்து அமைப்புகளும், சர்வகட்சிக் குழுவிடம் ஒரே குரலில் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். மத்தியஅரசு பிரிவினைவாதிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்”, இவ்வாறு சர்க்கா தெரிவித்தார்.

இந்துக்களை, சீக்கியர்களை விரட்டும் முஸ்லீம்களுடன் எதற்கு பேச்சு? லக்னோ காஷ்மீரி பண்டிட் அசோசியேஷன் பொதுச் செயலர் கேதார் நாத் பக்க்ஷி கூறுகையில், “எந்தசக்திகள் எங்களை எங்கள் மண்ணிலிருந்து அன்று விரட்டினவோ, அதே சக்திகள் இன்று அங்கிருந்து சீக்கியர்களை விரட்டி வருகிறது என்பதை அரசு கவனிக்க வேண்டும்[6]. அந்தசக்திகள், காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வர்த்தகம் மற்றும் தொழிலில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அது பிரிவினைவாதிகள் தங்கள் நோக்கத்தை அடையும் விதத்தில் காஷ்மீர் மற்றும் காஷ்மீரத்துவத்தைப் பாதிக்காதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

.நா., கோரிக்கை: இந்நிலையில், “காஷ்மீரில் நிலவும் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; அங்குள்ள அனைத்துப் பிரிவினரும் (இந்துக்களையும் சேர்த்து) தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி திரும்ப முயற்சி செய்ய வேண்டும்’ என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு நடக்கும் சம்பவங்களை அவர் தொடர்ந்து கவனித்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்[7].


[1] தினமலர், பிரிவினைவாதிகளுடன்பேச்சா? காஷ்மீர்பண்டிட்கள்அதிருப்தி, செப்டம்பர் 22, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=90742

[2] The Jammu representatives argued that this was a “disincentive to nationalism”.
“Kashmiri pundits were not being given time to meet the delegation. But a few members of the team found it convenient to meet leaders such as Geelani, whose anti-India views are known to everyone,” members of a student group from Jammu are learnt to have said.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/JK-Groups-representing-Jammu-denounce-NCs-demand-for-autonomy/articleshow/6610392.cms

[3] இது ஊடகங்களின் திரிபுவாதமேயாகும். காஷ்மீரத்தில் இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் என்றுள்ளனர். முஸ்லீம்களை, முஸ்லீம்கள் என்று குறிப்பிடும் போது, இந்துக்களை இந்துக்கள் என்று குறிப்பிடாமல் இருப்பது சட்டவிரோதமானது, உண்மையினை மறைப்பது. ஸ்ரீலங்கா பிரச்சினையில், இப்படித்தான் தமிழர்கள் இந்துக்கள் என்று குறிப்பிடாமல், கடைசி நேரத்தில் பிஜேபி போன்ற கட்சிகளிடம் இலங்கை தமிழ் பிரதிநிதிகள் வந்து ஆதரவ்ய் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளாவேண்டும். அவ்விஷயத்தில் முஸ்லீம்கள், தமிழர்கள் என்ரு குறிப்பிட்டு, முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுத்தது ஊடகங்களே.

[4] வேலையே செய்யாமல், அதாவது அரசு அலுவலங்கள் இயங்கமல் மூடப்பட்ட நிலையில், மாதம்-மாதம் தவறாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு செல்வதே அகோரம் தான். அதுமட்டுமல்ல, வேடிக்கையென்னவென்றால், இதற்காக, முஸாரபாதிலிருந்து (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) வந்து சமளம் வாங்கிச் செல்வதுதான் கேவலத்தில் கேவலம்.

[5] பிறந்த நாட்டிலேயே அகதிகளாக, தில்லியில் கூடாரங்களில் வாழும் இவர்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும். ஆனால், தில்லிக்குச் செல்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை. அவர்களுக்குத் தெரியவும் தெரியாது என்ற நிலை உள்ளது, ஏனெனில் ஊடகங்கள் அதைப் பற்றிச் சொல்வதில்லை, அதாவது அவ்வாறு உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

[6] இதல்லாம் கூட இவர்கள் சொல்லித்தான் இந்திய அரசுக்குத் தெரிய வேண்டுமா? அந்த குப்தாவிற்கும், யச்சூரிக்கும், பாஷ்வானுக்கும் ஏன் தெரியவில்லை?

[7] ஆமாம், இந்தியாவில் பிரச்சினை என்றல் கூர்ந்துதான் கவனிப்பார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம், இலங்கை என்றால், கண்களை மூடி கொள்வார் அல்லது நிம்மதியாக தூங்குவார் போலும்!