Archive for the ‘இந்திய விடுதலைப் போராளிகள்’ Category

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

மே29, 2013

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் (5).

Sebastian Seeman with Yasin Malik

கடலூர் கூட்டம், பேச்சு, முதலியன முதல் பகுதியிலும்[1], யாசின் மாலிக், செபாஸ்டியன் சீமான் இல்லற வாழ்க்கை, சொகுசு, சுகபோகம் முதலியவை இரண்டாம் பகுதியிலும்[2], கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு, இந்துக்களை ஏமாற்றியது, கோயில் பணத்தைத் துர்பிரயோகம் செய்தது, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது போன்ற விஷயங்கள் மூன்றாம் பகுதியிலும்[3], தனிமனிதர்களாக தங்களது வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு பொழுது போக்கிற்காக இப்பிரச்சினை எடுத்துக் கொண்ட விதத்தை நான்காம் பகுதியிலும்[4], “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்பில் விளக்கப்பட்டன.

Afzal-Hyderabad-Kasab-nexus

“இனியொரு.காம்” இவர்களை ஆதரிப்பது ஏன்?: மற்றும் இதற்குள், “யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி”, என்ற பதில் “இனியொரு.காம்” என்ற தளத்தில் வெளியாகிது[5]. அதற்கு உரியதளத்திலும், பேஸ்புக்கிலும் பதில் கொடுத்தும் அதற்கு அசையாதது மட்டுமன்றி, என்னுடைய பதிலையும் போடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஆகையால், மறுபடியும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியதாகிறது. இதுதான் கருத்துரிமை என்றெல்லாம் வக்காலத்து வாங்குபவர்களின் லட்சணம் போலும்.

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013

யாசின்மாலிக்தமிழகத்திற்குள் வருவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால், தமிழர்கள் ஜம்மு-காஷ்மீரத்திற்குள் செல்லமுடியாது: இதுதான் நிதர்சனம், உண்மை. இங்குதான் அவர்களது மனப்பாங்கு வெளிப்படுகிறது. யாசின் மாலிக்கைக் கூப்பிட்டவுடன் வந்து விட்டார் என்றால், விளம்பரத்திற்காக வந்துள்ளார் அவ்வளவே. நாளைக்கு, தான் எப்படி தமிழகத்திற்குச் சென்று முஸ்லீம்களின் உரிமைகளுக்காகப் பேசி வந்தேன் என்று தப்பட்டம் அடித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல, தமிழர்களும் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு போராட தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்லக்கூடும். ஆனால், இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதனை சொல்லமாட்டார். தமிழகத்தில் காஷ்மீர்காரர் கடை வைத்துக் கொள்ளாலாம், ஆனால், அங்கு தமிழ்நாட்டுக்காரர் கடை வைக்க முடியாது. கிரிக்கெட்டினால் மக்களை இணைப்போம் என்பவரால் கூட, காஷ்மீரத்தில் கிரிக்கெட் மேட்ச் நடத்த முடியாது[6]. சென்னை சூப்பர் சிங்ஸ் கூட அங்கு செல்லமுடியாது!

Yasin malik sitting with Yafiz Sayeed

காஷ்மீரத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டது, விரட்டியடிக்கப்பட்டது: காஷ்மீர முஸ்லீம்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வீடு, இடம் வாங்கலாம், ஆனால், எந்த இந்தியனும் அங்கு வாங்க முடியாது. காஷ்மீர இந்துக்கள் தங்களது வீடு-நிலம்-சொத்து எல்லாவற்றையும் விடுத்து விரட்டப்பட்டுள்ளனர். ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் தாம் இந்த வேலையைச் செய்துள்ளனர், ஆனால், எந்த மனித உரிமை அல்லது கருத்துரிமையாளரும் இதைப் பற்றி பேசமாட்டார், எழுத மாட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் ராஜிவ் காந்தி கொலையில் சோனியா சம்பந்தப்பட்டாதாக குறிப்பிட்டதற்கு, காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது[7]. அப்படியென்றால், சீமான் அவரை அழைத்திருக்கலாமே? குறிப்பாக இந்த கூட்டங்கள் செய்யாது. ஏனென்றால் அவர்களது உள்நோக்கம் வேறு.

No Tamil in the - We hate LTTE facebook
கருத்துக் கூற இந்தியாவில் உரிமை இருக்கிறது: ஆமாம், எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், தில்லியில் அருந்ததி ராய், லோனி போன்றோர் கருத்தரங்கள் நடத்தினால்[8], அதில் காஷ்மீர இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசுவது கிடையாது[9]. இங்கும், இலங்கை தமிழர் என்றெல்லாம் பேசலாம், ஆனால், இலங்கை இந்துக்களின் உரிமைகள் பற்றி பேசமாட்டார்கள். காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தான், இந்துக்களும் காஷ்மீரத்தின் அங்கம் தான், ஆனால், அது யாசின் மாலிக் ;போன்றோர்க்கு கவலை இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்திய நாட்டில், இந்துக்கள் உரிமைகளைப் பற்றியும் யாரும் பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் சகோதரர்கள் இல்லையா? அட, இந்த முஸ்லீம்களே இந்துக்கள் தாமே, அவர்கள் என்ன ஆகாசத்திலிருந்து குதித்தார்களா என்ன? இங்குதான் “செக்யூலரிஸம்” வைத்துக் கொண்டு, இந்திர்களை எல்லோரும் ஏமாற்றி வருகிறார்கள். பக்ரீத் போன்ற பண்ட்கைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்களுக்கு[10], இந்துக்களின் பண்டிகைகளை தூஷிக்கத்தான் தெரியும். இதேபோலத்தான் இப்பொழுதும் செய்கிறார்கள்.

blackoctobr-2012 poster by Muslims similar to Dec.6 in India

இந்திய நாட்டில் பெரும்பாலான சட்டங்கள் காஷ்மீரத்தில் செல்லுபடியாவதில்லை: இந்தியாவில் காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீர் மக்கள், 370 பிரிவுபடி, பற்பல இந்திய சட்டங்கள் அவர்களுக்கு செல்லுபடியாகாது. வரிச்சட்டங்களிலேயே, பல சட்டங்கள் அமூலில் கொண்டு வரமுடியாது. வீடு-சொத்து வாங்க முடியாது என்பதை முன்னமே சுட்டிக் காட்டப் பட்டது. இருப்பினும் கோடிக்கணக்கான வரிப்பணம் அங்கு செலவழிக்கப்படுகிறது. அது பெரும்பாலும், நலதிட்டங்களைவிட, ஜிஹாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள் முதலியோர்களின் சட்டவிரோத, மனிதத்தன்மையில்லாத, செயல்களைத் தடுக்க விரயமாகிறது. அங்குதான் யாசின் மாலிக்கும், செபாஸ்டியன் சீமானும் ஒன்றுபடுகிறார்கள்.

Muslims hate LTTE

தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை: “இலங்கைத் தமிழர்கள்” என்று இன்று சீமானோ, வைகோவோ, நெடுமாறானோ மற்றெவரோ பேசுவது அயோக்கியத்தனம், ஏனெனில், அவர்கள் இன்று “இந்துக்கள்” என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த நாட்டுப் பிரச்சினையை அங்கங்கு பேசவேண்டும். தமிழீழப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை, அதை ஶ்ரீலங்காவில் பேசவேண்டும். ஆனால், பிரபாகரன் உரிரோடு இருந்தபோதும், பிறகும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டனர். அப்பொழுது இந்த மாலிக்கோ, சீமானோ வரவில்லை. காஷ்மீர் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை, அதனால், இந்தியாவில் பேசுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ ஒன்றும் இல்லை[11]. தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுவது இதனால்தான்.

ள்ஏ

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள்: இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு விட்டதால், இனி உள்ளவர்கள் இந்துக்கள் தாம், அதை புரிந்தும் புரிந்து கொள்ளாமல், மற்றவர்கள் சதி செய்துதான், தமிழ்பேசும் இந்துக்களை அழித்து வருகிறார்கள். இலங்கை முஸ்லீம்களின் இரட்டை வேடம், பாகிஸ்தானின் சார்பு, இந்திய விரோதம், என்பனவற்றை பலவிதங்களில் காணலாம். “மன்னாரில் புலிகளின் மறுபிறப்பை நிறுத்து” என்று ஒருபக்கம் போராடுகிறார்கள்.

Why Muslim protest against the revival of LTTE in Munnarஇன்னொரு பக்கம், “ஶ்ரீலங்கை மக்கள் ஒரு நாடாக வாழ உதவுங்கள்” என்றும் கொடிபிடிக்கிறார்கள். கூட, “நாங்கள் எல்லா அரபு நாடுகளையும் சின்ன ஶ்ரீலங்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்”, என்றும் “ஶ்ரீலங்கா முஸ்லிம் பிரதர்வுட்” (ஶ்ரீலங்கை முஸ்லிம் சகோதரத்துவம்) என்ற அமைப்பு போராடுகிறது.

How Muslims demand that Sri lankans should live as one nationமுன்னரில் தமிழ் உள்ளது, பின்னரில் தமிழில்லை, மாறாக அரேபிய எழுத்துகள் உள்ளன. இதுதான் ஶ்ரீலங்கை முஸ்லிம்களின் குணம். அதுமட்டுமல்லாது, “ஶ்ரீலங்கை முஸ்லிம்களான நாங்கள் ஏன் எல்டிடிஇ.ஐ வெறுக்கிறோம்”, என்று அவர்களே கொடுக்கும் விளக்கத்தை இங்கே காணலாம்[12]. இதைப் பற்றி யாசின் மாலிக் ஒன்றும் கூறக்காணோமே? செபாஸ்டியன் சீமானும் கண்டு கொள்ளவில்லையே? பிறகு தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் திடீரென்று எப்படி தமிழ் விரோதிகள் ஆனார்கள்? சகோதரன் என்று உறவு பாராட்டும் சீமான், அந்த முஸ்லிம்களை ஏன் என்று கேட்கவில்லையே?

SDPI protesting against Lanka in Delhi

இலங்கை இந்துக்களும், காஷ்மீரஇந்துக்களும்: “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள், இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வதில்லை[13]. கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர். மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர். எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில், முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[14]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன. இதே நிலையில் தான், இலங்கை இந்துக்கள் இருக்கிறார்கள் மற்றும் இலங்கை அகதிகளும் இருக்கிறார்கள்.

Sri Lankan Muslims against Cocacola-Mcdonald-KFC-etcஜிஹாதிதாக்குதலில்தமிழகவீரர்இறப்பு[15]: மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை, காஷ்மீர தீவிரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொன்றனர்[16]. அவரது உடல் தான் திரும்பி வந்தது[17]. அப்பொழுது யாசின் மாலிக்கோ, சீமானோ வருத்தப்படவில்லையே? பிரபாகரன் போட்டோவை வைத்து வியாபாரம் செய்யும் சீமான், அந்த வீரரின் படத்தை வைத்து மதிக்கவில்லையே? மற்ற விஷயங்களுக்கு (கசாப் தூக்கு முதலியவை) போராட்டம் நடத்தும் தமிழக முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கிண்டலாக, லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?, என்ற தலைப்பில் இவ்விவரங்களை பதிவு செய்தேன்.

Sri Lankan Muslims against Cocacolaயாசின்மாலிக் இந்தியத் தமிழருக்கோஇலங்கைத் தமிழருக்கோ உதவமாட்டார்: இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை[18]. இப்பொழுது கூட, வீடுகள் கட்டுவது, அவற்றை ஒதுக்கீடு செய்வது, குடியமர்த்துவது முதலிய விஷயங்களில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்[19].

 

© வேதபிரகாஷ்

28-05-2013


அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம் (2)

மே4, 2012

அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம் (2)

கொல்லப்பட்ட இருவரின் கதி என்ன? அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்ட போது இரண்டு பாதுகாப்பு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்[1]. அதில் ஒருவர் முஸ்லீம் மற்றொருவர் காட்டுவாசி[2]. ஆனால் அவர்களைப் பற்றி அலெக்ஸ் பால் பாண்டியனோ, அவரது மனைவியோ, மாமனாரோ, தந்தையாரோ அல்லது ஊடகங்களோ கவலைப் படவில்லை. அவர்களது மனைவி-மக்களைப் பற்றி பேச்சு-மூச்சு இல்லை. ஆனால், அலெக்ஸ் விடிவிக்கப்பட்டவுடன், பட்டாசுகள் வெடிப்பு, சரவெடிகள் வெடிப்பு, இனிப்பு விநியோகம், ……………என ஒரே கொண்டாட்டம்! இதென்ன, ஏற்புடையதா? ஆக இறந்தவர்களின் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியிருக்க இங்கு கொண்டாட்டம்!

மற்ற இடைத் தரகர்கள் செய்யமுடியாததை தான் செய்வேன் என்கிறார் ஜெ.ஜோயல்: இவரை இப்பொழுது காணவில்லை – தனது உயிரை பணயம் வைத்தாவது கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் மேனனை நிச்சயமாக மீட்டு வருவேன் என சட்டீஸ்கர் சென்றதாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதல்வர் ஜெ. ஜோயல் தெரிவித்தார்[3]. சட்டீஸ்கரில் முதல்வர் ராமன்சிங்கை சந்தித்து விட்டு நமது நெல்லை நிருபருக்கு தொலை பேசி மூலம் சிறப்பு பேட்டியை அளித்தார். இந்த பேட்டியில் இவ்வாறு கூறினார்[4]. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், மாவோ தீவிரவாதிகளால் பாஸ்டர் வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்டு வர மீட்புகுழுவினராக சென்ற பேராசிரியர் ஹர்கோபால், ஓய்வுபெற்ற அதிகாரி சர்மா ஆகியோர் தற்போது திரும்பிவந்துவிட்டனர். அவர்கள் அலெக்ஸ் பால் மேனனை சந்திக்கவில்லை……இப்படி தடபுடலாக செய்திகள், பேட்டிகள்………………..


என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”: இவரை மீட்க தான் தயாராக இருப்பதாக தானாக முன்வந்த நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முதல்வர் ஜோயலுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அங்கு சென்று முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். தற்போது சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜோயல் நமது நிருபரிடம் கூறியதாவது[5]: “சென்னையில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்தேன். இங்கு முதல்வர் ராமன்சிங்கை நேரில் சந்தித்தேன். கலெக்டர் மீட்பு நடவடிக்கை குழுவினர் என்னிடம் பேசினார்கள். ராய்ப்பூரில் இருந்து 300 கி.மீ.,தொலைவில் பாஸ்டர் வனப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்துசெல்கிறார்கள். அங்கு காத்திருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கி.மீ.,தூரம் அழைத்துசெல்வார்களாம். அதன்பின்னர் நடந்துசெல்லவேண்டும். எப்படியும் கலெக்டரை மீட்டுவருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முயற்சியில் விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நான் சொந்தமாகவே மேற்கொள்கிறேன். நான் இங்கு வந்ததும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்னிடம் நேரில் பேசினார்கள். என்னைப்பற்றி விபரங்களை தெரிவித்தேன். அதனை அங்கு கூறியிருப்பார்கள் என நம்புகிறேன். நான் கலெக்டரை மீட்கபோகும் விஷயத்தை அவரது தந்தை வரதாசிடமும் போனில் தெரிவித்தேன். அவரும் சந்தோஷமடைந்தார். மாவோயிஸ்ட்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம், மற்றும் தெலுங்கில் பேசலாம். என்னை பலரும் கண்காணிப்பது நன்றாக தெரிகிறது. என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”, என்றார் நம்பிக்கையோடு. ஆனால், இப்பொழுது இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள விலை: மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மாவோயிஸ்ட்டுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார்[6]. அவர் ஏடோ பெரிய தியாகம் செய்துவிட்டதைப் போல ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் “ரன்னிங் கமன்டரி’ போல விவரித்தன. ஆனால், இரு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் விடுவிக்கப் படவேண்டும், மற்ற ஐந்து பேரும் பிறகு விடுவிக்க வேண்டும் போன்ற விஷயங்களைப் பற்றி அவை மூச்சுக்கூட விடவில்லை[7]. ஏற்கெனெவே 17 பேர் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்[8]. மாவோயிஸ்ட்டுகளின் இடைதரகர்கள் பேராசிரியர் ஜி. ஹர்கோபால் மற்றும் பி.டி.சர்மா அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உரிமையுடன் கேட்டனர். துரித நீதிமன்றம் மூலம் வழக்குகள் மறுபரீசீலினை வழியில் விசாரிக்கப் பட்டு சிறையில் இருக்கும் 400 மாவோயிஸ்ட்டுகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அதட்டிக் கேட்டுள்ளனர். “நிர்மலா பக் கமெட்டி” (Nirmala Buch committee) எங்களுக்காக அமைக்கப்பட வேண்டும்[9]. வழக்குத்தன்மை எப்படியாக இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப் படவேண்டும். ஏனெனில் அவர்கள் காட்டுவாசிகள் என்றும் நியாயப்படுத்திப் பேசினர்[10].

அந்த கொல்லப்பட்டவர்களின் கிராமங்களில் நிலை என்ன? கலெக்டரான நெல்லையை சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் கலெக்டரரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் வள்ளியூர் சமாதானபுரம் மற்றும் பாளை தியாகராஜநகர் ராம்நகரில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். வள்ளியூர் சமாதானபுரம் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. அது சரி, அந்த கொல்லப்பட்டவர்களின் கிராமங்களில் நிலை என்ன, யாரும் ஒன்றும் சொல்லவில்லையே?

இங்கு இனிப்பு, பட்டாசு, கொண்டாட்டம் சரி, ஆனால் அங்கு நடப்பது என்ன? கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் காணப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்டு 12 நாட்கள் ஆன நிலையில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் 03-05-2012 அன்று விடுவிக்கப்பட்டார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் சொந்த ஊரான வள்ளியூர் சமாதானபுரத்தில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல் பாளை பகுதியில் உள்ள அவரது பள்ளி நண்பர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கலெக்டரின் விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதவிர கலெக்டரின் விடுதலையை கொண்டாடும் விதமாக நெல்லை சந்திப்பு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்[11].

காஷ்மீரில் நடந்தது மற்ற இடங்களில் நடப்பதை அனுமதிக்கலாமா? காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, வீட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர்[12]. அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. அவளை மீட்க இஸ்லாமிய தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டனர். இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். அதாவது, பதிலுக்கு ஜெயிலில் இருக்கும் நக்சலைட்டுகளை விடுவித்து மீட்டனர். ஆனால், எம்.எல்.ஏ வெளிவந்த பிறகு, செய்தி அடங்கி விட்டது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடித்து வைத்து விடுவித்துள்ளனர். ஆகையால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் பட்டன[13]. மத்தியஸ்தம் பேசுகின்றவர்கள் தாராளமாகச் சென்று வந்தனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[14]. இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்றும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வேலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை? ஆக இதுவும் ருபையா சையிது நாடகம் போல[15] என்றால் என்னாவது?

 

மனித உரிமைகள் என்று வரும்போது ஏன் அவை வேறுபடுகின்றன? காஷ்மீரில் லட்சக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்; அங்கிருந்து விரட்டப் பட்டு, தலைநகர் தில்லியிலேயே அக்திகளாக முகாம்களில் வாழ்கின்றார்; அவர்களிம் மனித உரிமைகள் பற்றி யாரும் பேசுவதில்லை. அருந்ததீ ராய் போன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு, ஜிஹாதிகளுக்கு பரிந்து பேச் வருகிறார். அதே போல செக்யூலரிஸ போதையில் ஊரியுள்ள ராமச்சந்திர குஹா, இ.ஏ.எஸ். சர்மா, நந்தினி சுந்தர் போன்றவர்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்குப் பரிந்து பேசுகின்றனர்[16]. ஆனால், கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்கள், போலீஸார் முதலியோரது மனித உரிமைகளைப் பற்றி அவர்கள் பேசாதது விசித்திரமே. பதிலுக்கு இப்படி தொடர்ந்து தீவிரவாதிகளை விடுவித்துக் கொண்டேயிருந்தால் சட்டத்தின் நிலை என்னாவது? நீதிமன்றங்களின் தேவை இருக்குமா? பிறகு போலீஸார் கஷ்டப்பட்டு, பல உயிர்களைக் கொடுத்து, கோடிகளை செலவழித்து பிடித்ததற்கு என்ன அர்த்தம்?

வேதபிரகாஷ்

04-05-2012


[10] Two Maoist mediators – Prof G Hargopal and B D Sharma in the Sukma Collector abduction episode demanded that cases against about 400 tribals languishing in jails in Chhattisgarh be taken up on a fast-track mode for review and maximum of them released. “We want the Nirmala Buch committee, set up to review the cases, should be take up on a fast track mode the cases of tribals in the entire region and release as many as possible– where the cases are minor and even where the cases are stronger because they are tribals,” The mediators……….told reporters

[13] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[14] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily

[16] Ramachandra Guha, E.A.S. Sarma & Nandini Sundar, Co-petitioners to the Supreme Court in WP 250 of 2007; http://www.thehindu.com/opinion/letters/article3346314.ece

வீர் சவர்க்கரை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?

மே20, 2010

வீர் சவர்க்கரை காங்கிரஸ் புறக்கணிப்பது ஏன்?

ஆங்கிலேயர் பயந்த இந்திய விடுதலைப் போராளிகள்: ஆங்கிலேயேர் மிகவும் பயந்த இந்திய சுதந்திர போராளிகள் என்ற பட்டியலில் வருபர்கள் – வீர் சவர்க்கர் (1883-1966), நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மதன்லால் திங்ரா, அரபிந்த கோஸ் …………………போன்றவர்களே. உண்மையில் ரத்ததைச் சிந்தியவர்கள், உயிரை துச்சமாக மதித்து வீரச்செயல்களை செய்தவர்கள் இவர்கள் தாம். ஆனால், பாடப்புத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிச் சொல்லப்படுவதில்லை.

“வீர் சவர்க்கர்” பெயர் பெயர் ஏன் மறைக்கப்படுகிறது? “வீர் சவர்க்கர்” பெயர் இப்பொழுது மறுபடியும் ஊடகங்களில் அடிபடுகிறது. ஆனால், மும்பைக்கு வெளியே அந்த செய்திகள் வருவதில்லை. ஏனெனில், ஊடகங்களுக்கு அத்தகையான நாட்டுப்பற்று! எங்கே வீர் சவர்க்கர் போன்ற உண்மையாள விடுதலை போராளிகளைப் பற்றித் தெரிந்து கொண்டால், மற்ற ஆங்கிலேய அடிவருடி “காங்கிரஸ் தியாகிகளின்” உண்மை உருவம் புலப்பட்டு விடுமே என்ற அச்சமும், கூட உண்மைகளை அமுக்கவேண்டும் என்ற எண்ணமும் வெளிப்படுகின்றன.

முதல் விடுதலை போராட்ட நூற்றாண்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்ட போராளி யாராவது உண்டா? முதல் இந்திய விடுதலை போராட்டம் 1857ல் நடந்தது என்று சில இந்தியர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதன் நூற்றாண்டு விழா 1957ல் நடந்தது என்று ஒருவேளை மிகச்சிலருக்கே நினைவிருக்கலாம். ஆனால், நவம்பர் 10, 1957 – புது தில்லியில் நடந்த அந்த முதல் விடுதலை போராட்ட நூற்றாண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக வீர் சவர்க்கர் கலந்து கொண்டார் என்ற உண்மை எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும் என்பதனை விரல் விட்டு எண்ணிவிடலாம்!.

பம்பாய் / மும்பை முனிசபல் கார்பரேஷனின் இரட்டை வேடம்: பம்பாய் முனிசபல் கார்பரேஷனின் வெள்ளிவிழா மே.28 1958 நிகழ்ச்சியில் வீர் சவர்க்கருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப் படுகிறது. ஆனால், அவர் இறந்த பிறகு, அதே பாம்பே / மும்பை முனிசபல் கார்பரேஷன் மே 19, 2010 அன்று வீர் சவர்க்கரின் நினைவு தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கிறது! ஆமாம், இந்திய சுதந்திரத்திற்காக போராடி, சிறையில் கொடுமைப் படுத்தப் பட்டு, சுதந்திரம் கிடைத்தப் பிறகும் 1966 வரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த வீ சவர்க்கார் தான் அத்தகைய பேரைப் பெற்றார் எனலாம்.

பாரத் ரத்னா கொடுக்க வக்கற்ற இந்திய அரசு: “மதம் மாற்றத்தான் நான் சேவை செய்கிறேன்”, என்று பலமுறை ஊடகங்களில் பேட்டியளித்தப் பிறகும், “பாரத் ரத்னா” விருது அந்த கத்தோலிக்க – தெரஸா கன்னியாஸ்திரீக்குக் கொடுக்கப் பட்டது. ஆனால், 1966ம் ஆண்டு வரை இந்தியா விடுதலைப் பெற்றப் பிறகும் உயிர்வாந்த வீர் சவர்க்கரைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை!

மே 28, 2010: வீர் சவர்க்கர் பிறந்த தினம்: இப்பொழுது உள்ள அரசியல், சினிமா, கிரிக்கெட்,………………………..முதலிய விவகாரங்களில், இதைப் பற்றி யார்ன் கவலைப்படப் போவதில்லை. ஆனால், பாவம், மும்பையில் அதைக் கொண்டாட ஒரு சங்கம் ஏற்படு செய்யும்வேளையில், அதற்கு தடை விதிக்கப் பட்டதாம். மறுபடியும் விண்ணபித்தபோது, ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது, அந்த வீர சிவாஜி பூங்காவிற்கு வெளியே சத்தம் வரக்கூடாது……………..என்றெல்லாம் கண்டிஷன்கள் போட்டனராம். ஆங்கிலேய அடக்குமுறை இப்பொழுது வேறுவிதமாக செயல்படுவது அறிந்து, மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன், தடை நீக்கப் பட்டுவிட்டதாம்!

வேதபிரகாஷ்

21-05-2010

வீர்சவர்க்கரும், தெரசாவும்: எதிர்பார்த்தபடியே, வீர் சவர்க்காரை இருட்டடிப்பு செய்ய தெரசா உபயோகப்படுத்தப்படுகிறது. 21ம் தேதி அன்று, இவ்விஷயம் கேள்விபட்டபோது, கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்:

பாரத் ரத்னா கொடுக்க வக்கற்ற இந்திய அரசு: “மதம் மாற்றத்தான் நான் சேவை செய்கிறேன்”, என்று பலமுறை ஊடகங்களில் பேட்டியளித்தப் பிறகும், “பாரத் ரத்னா” விருது அந்த கத்தோலிக்க – தெரஸா கன்னியாஸ்திரீக்குக் கொடுக்கப் பட்டது. ஆனால், 1966ம் ஆண்டு வரை இந்தியா விடுதலைப் பெற்றப் பிறகும் உயிர்வாந்த வீர் சவர்க்கரைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை!

அதுமாதிரியே, செய்தி வருகிறது:

அன்னை தெரசா நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8753

சென்னை: மிஷனரீஸ் ஆப் சாரிட்டிஎன்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தெரசாவுக்கு ஏற்கனவே நோபல் பரிசு, பாரத ரத்னா விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் உருவம் பொறித்த நாணயத்தையும் வெளியிட வேண்டும் என, சென்னையில் இயங்கும் அன்னை தெரசா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, “தெரசாவின் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 26ம் தேதி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும்என அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அன்னை தெரசா நூற்றாண்டு விழாவாகவும், நாணய வெளியீட்டு விழாவாகவும் கோல்கட்டாவில் நடத்தப் படுகிறது.