தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.4தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும் “நாம்தமிழர்” கட்சி சீமான்: சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் இன்று பேரணி, கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கருத்தரங்கம் மட்டும் நடந்தது. இதில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என வலியுறுத்தி வரும் யாசின் மாலிக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. பொலீஸார், சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட சுவரொட்டிகள், பேனர்கள், தட்டிகள் முதலியவற்றை அகற்றினர்[2]. ராதிகா, டி.எஸ்.பி கூறும்போது, நாம் தமிழர் கட்சி, சில சரத்துகளை மீறியுள்ளதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்[3]. அனுமதி மறுப்பப்பட்ட பிறகு, ஊருக்கு வெளியில் இருந்த திருமண ம்,அண்டபத்திற்குச் சென்று, கருத்தரங்கம் நடத்தினர். சீமான், யாசின் மாலிக்கை அங்கு அழைத்துச் சென்றார்[4].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013இந்தியவிரோதி யாசின்மாலிக், சீமானின் கூட்டத்தில் பேசுவது: கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: “இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை[5]. இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல். இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற அதே சமயத்தில், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் அங்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது”, என்றார்[6].  தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[7] தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது[8] தெரியுமா?

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013.2யாசின் மாலிக்கைப் போல, சீமான் ஆயுத போராடத்திற்கு தயாரா?: சட்டங்களை மீறியதற்குத்தான், மார்ச் மாதம் 2013 யாசின் மாலிக் கைது செய்யப்பட்டான்[9].  ஆனால், கைது செய்யப்படுவது, விடுவிக்கப்படுவது என்றிருப்பதால், இவர்களுக்கும் அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருக்கிறது. போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியாது என்ற மனோபாவம் வளர்கிறது[10]. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[11].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[12].

Yasin malik - Sebastian seeman - caddalore - 2013யாசின் மாலிக்கைப் போல காந்திவழி செல்லும் சீமானா: சீமான் பேசும்போது, “கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2000 அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது? என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்”, என்றார்.

Yasin Malik sitting with Hafiz Saeed of Jamat-ud-Dawa protesting against the hanging of Mohammed Afzal Guruஇந்தியவிரோதிகளும், தேசபக்தர்களும்: தேசவிரோத காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான்[13]. சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு[14] கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்[15]. சினிமா மற்ற இதர வழிகளில் ணம் வந்து கொண்டிருப்பதனால், செலவு பற்றி கவலைப் படாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[16]. தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது, யார் இந்தியவிரோதிகள், யார் தேசபக்தர்கள் என்பதுதான்.

Yasin malik sitting with Yafiz Sayeedதமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

19-05-2013


[3] Police withdrew the permission granted to Naam Tamizhar Katchi headed by film director Seeman to hold the meeting in support of separate Tamil Eelam as the organisers violated certain conditions, DSP Radhika told reporters here. The party violated the conditions and erected banners and pasted posters with photographs of Prabhakaran all over the town, she said. See more at: http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/#sthash.R2SA3lei.dpuf

[11] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[12] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[13] Malik said he spent several years in jails in Rajasthan, Kashmir and Delhi for helping the victims of atrocities unleashed by the Indian Army. He regretted that none of the Indian states expressed solidarity with the people of Kashmir, who have been struggling and suffering for several years, he said.

http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-voices-support-for-Tamil-Eelam/articleshow/20128987.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

24 பதில்கள் to “தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”

 1. vedaprakash Says:

  Yasin Malik voices support for Tamil Eelam
  TNN | May 19, 2013, 02.33 AM IST
  http://timesofindia.indiatimes.com/india/Yasin-Malik-voices-support-for-Tamil-Eelam/articleshow/20128987.cms

  Kashmir separatist leader Yasin Malik spoke about the ‘Eelam dream’ on the eve of the death anniversary of LTTE leader Velupillai Prabhakaran.

  CUDDALORE: In a rare collaboration, two groups espousing the cause of separatism came together at a marriage hall in Cuddalore in northern Tamil Nadu on Saturday. Striking a chord with pro-Tamil activists, Kashmir separatist leader YasinMalik spoke about the ‘Eelam dream’ on the eve of the death anniversary of LTTE leader VelupillaiPrabhakaran. This is the first time that a Kashmiri separatist leader has been invited to Tamil Nadu to talk about the emotive Eelam (Tamil land) issue.

  Addressing the gathering, mostly members of Naam Tamilar, a pro-LTTE outfit, Malik said the Sri Lankan government might have wiped out the LTTE but not its dream of a separate Tamil Eelam. “Tamil Eelam is the goal of each and every Tamil person,” he said. He regretted that India failed to intervene and stop the genocide in the island nation. Malik came down heavily on the Sri Lankan government for foiling the international community’s mediation efforts with the LTTE and its attempts to restore peace during the final stages of the ethnic war. He urged the people to join the protest against countries indulging in racial discrimination and genocide.

  Malik said he spent several years in jails in Rajasthan, Kashmir and Delhi for helping the victims of atrocities unleashed by the Indian Army. He regretted that none of the Indian states expressed solidarity with the people of Kashmir, who have been struggling and suffering for several years, he said.

  Earlier, police removed the posters and banners of Naam Tamilar at the Manjakuppam grounds after permission to hold the public meeting was withdrawn. A heavy posse of policemen was deployed at the grounds and at the wedding hall where the organisers hosted ‘remembrance meeting’ to mark Prabhakaran’s death anniversary.

  High drama preceded the visit of Malik, who is the chairman of one of the two factions of the separatist group Jammu Kashmir Liberation Front. A wary district police, just recovering from arson and violence unleashed by PMK cadres across the state until a week ago, withdrew the permission granted to Naam Tamilar to organise the public meeting at Manjakuppam grounds at the last minute. But the organisation, launched started by film director-turned-activist Seeman, quickly shifted the venue of the meeting to a marriage hall in the town. Later, addressing the gathering, Malik slammed the Tamil Nadu government for withdrawing permission for the public meeting at the eleventh hour.

  Police also denied permission to Naam Tamilar to take out a rally to mark the LTTE leader’s death anniversary, observed as ‘remembrance day’. Prabhakaran was killed in the final phase of the Eelam war in Mullivaikal in northern Sri Lanka on May 19, 2009.

  • Adhavan Villavan Says:

   பிரபாகரனோடு தமீழம் செத்துவிட்டது.

   தமிழகத்தவரே, குறிப்பாக திராவிடம் பேசும் பேமாணிகளே, காட்டிக் கொடுத்து அவனைக் கொலைசெய்து விட்டனர்.

   இனிமேல், வேறொருவரும் அதை சொல்லிக் கொண்டு ஏமாற்ற முடியாது.

   யாசின் மாலிக் போன்ற பாகிஸ்தானின் கைகூலிகள், சீமான் போன்ற சினிமாக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை மனித உரிமைகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஏமாற்றி வரலாம்.

   ஆனால், இவர்களால், இந்தியர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

 2. vedaprakash Says:

  காஷ்மீர் – தமிழர் போராட்டங்கள் ஒரேமாதிரியானவை.. ஆதரவு தொடரும்! – யாசின் மாலிக்
  Posted by: Shankar Published: Saturday, May 18, 2013, 17:35 [IST]
  http://tamil.oneindia.in/news/2013/05/18/tamilnadu-yasin-malik-compares-tamil-s-fight-175541.html

  கடலூர்: காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக் கூறினார். கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் யாசின் மாலிக். இது பெரும் அளவிலான அதிர்ச்சி அலைகளை அனைவர் மத்தியிலும் உருவாக்கியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர் காஷ்மீர் பிரச்சினையையும் தமிழர்களின் ஈழப் போராட்டத்தையும் ஒரே மாதிரியானவை என்று கூறினார். அவர் கூறுகையில், “இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான். தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ. போலீஸைக் கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது. தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும்,” என்று பேசினார் யாசின் மாலிக்.

  Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/18/tamilnadu-yasin-malik-compares-tamil-s-fight-175541.html

  • Adhavan Villavan Says:

   “காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும்”, என்று யாசின் மாலிக் கூறியுள்ளது மிகவும் ஆபத்தானது.

   அதை நீங்களும் கவனிக்காமல் 1, 2, 3…..என்று எழுதி வருகின்றீர்கள்.

   அதாவது, தமிழீழம் என்ற போர்வையில், தமிழகத்தை மறுபடியும் “திராவிட நாடு” பாணியில் பிரிவினையை வித்திடும் போக்கில் இதை அவன் கூறியுள்ளதை பார்க்க வேண்டும்.

   “தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டம்” என்றால் என்ன அர்த்தம்?

   இதற்கு இந்த சீமான் கைகூலியும் எப்படி ஒப்புக் கொண்டு கூட்டம் போடுவார்?

   தமிழர்களையும் இப்படியும் ஏமாற்றலாமா?

   “காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டம்”, இந்தியாவிற்கு எதிராக நடக்கும் ஜிஹாதி தீவிரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் ஆகும். ஆனால், இப்பொழுது தமிழ் மண்ணில், தமிழகத்தில் அத்தகைய போராட்டம் எதுவும் இல்லை.

   பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் பேசி அலுத்து, மக்களை மாநில சுய ஆட்சி என்றும் சொல்லிக் கொண்டு அடங்கிப் போயினர்.

   ஆகவே இனியும், இத்தகைய பேச்சுகளை இங்கு அனுமதிக்கலாகாது.

   நிச்சயம் இது, முஸ்லிம்கள் ஊக்குவித்து நடத்தும் கூட்டம் என்றே தோன்றுகிறது.

   • vedaprakash Says:

    எடுத்துக் காட்டிய குறிப்புக்கு நன்றி.

    ஒருவேளை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் சரியாக செய்யவில்லையா அல்லது யாசின் மாலிக்கே அவ்வாறு பேசியுள்ளாரா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    நன்றி.

 3. vedaprakash Says:

  Tamil Nadu police ban Yasin Malik-linked pro-Eelam public meeting
  Press Trust of India : Cuddalore, TN, Sun May 19 2013, 00:06 hrs
  http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/

  A pro-Tamil Eelam public meeting, which was to be held here today and participated by JKLF leader Yasin Malik among others, was banned by police after the organisers put up banners carrying pictures of slain LTTE chief V Prabhakaran.

  Police withdrew the permission granted to Naam Tamizhar Katchi headed by film director Seeman to hold the meeting in support of separate Tamil Eelam as the organisers violated certain conditions, DSP Radhika told reporters here.

  The party violated the conditions and erected banners and pasted posters with photographs of Prabhakaran all over the town, she said.

  Police removed the banners and posters and served a notice on the organisers demanding an explanation, Inspector of Police V Ramachandran said.

  Arriving here shortly after the police announced the ban, Seeman, who was accompanied by Jammu and Kashmir Liberation Front leader Malik, went into a huddle with party leaders at a marriage hall on the outskirts of the town.

  Seeman had invited Malik among others to attend the meeting.

  Police said the leaders were holding an indoor meeting at the hall.

  A tense situation prevailed in the town and police pickets had been posted.

  – See more at: http://www.indianexpress.com/news/tamil-nadu-police-ban-yasin-maliklinked-proeelam-public-meeting/1117560/#sthash.R2SA3lei.dpuf

  • Adhavan Villavan Says:

   இலங்கை முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்களை விரோதிகளாக மதிக்கின்றனர்.

   பிரபாகரனை அன்றே கொடுமைக்காரன், அரக்கன், சைத்தான் என்றெல்லாம் வர்ணித்தனர், சித்திரத்தினர்.

   அவன் மீது “ஜிஹாத்” என்றும் அறிவித்தனர்.

   இன்றும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மறுபடியும் தோன்றவிடக்கூடாது என்று வெளிப்படையாகவே போராட்டங்கள் நடத்துகின்றனர்.

   பிரபாகரன் மறைவிடத்தை அருங்காட்சியகமாக மாற்றி விட்டப் பிறகு, முஸ்லிம்கள்தாம் அதிக அளவில் சென்று பார்த்து வருகின்றனர்.

   அந்த அளவிற்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் தமிழர்களின் மீது வெறுப்பை சொல்லிக் கொடுத்து துவேஷத்தை வளர்க்கின்றனர்.

   அப்படியிருக்கும் போது, சீமான் எப்படி பிரபாகரன் பதாகைகளை வைத்துக் கொண்டு கூட்டம் நடத்துவான்.

   ஒருவேளை, யாசின் மாலிக்கைத் திருப்தி படுத்த, அவனே போலீஸாரிடம் சொல்லி நீக்கி விட்டானா?

 4. vedaprakash Says:

  போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க முடியாது: சீமான் By dn, கடலூர்
  First Published : 19 May 2013 01:45 AM IST
  http://dinamani.com/tamilnadu/2013/05/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/article1596272.ece

  போராட்டங்களை, அடக்குமுறையால் ஒடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இன எழுச்சிக் கருத்தரங்கில் பேசினார்.

  கடலூரில், நிபந்தனையை மீறியதாக அக்கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு காவல்துறை வெள்ளிக்கிழமை இரவு தடை விதித்தது. இதையடுத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம், கடலூரில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  கருத்தரங்கில் சீமான் பேசியது: விதிமுறை மீறல் என்ற பெயரில், கடலூரில் பொதுக் கூட்டம் நடைபெறும் நாளில் அதிகாலை வேளையில் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடக்குமுறையாக கருதுகிறோம்.

  இன விடுதலைக்கான போராட்டங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை.

  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நான் வாக்கு சேகரித்த மேடை பந்தல்களில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, இப்போது பயன்படுத்தக் கூடாது என்கிறார்.

  தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், இந்த தீர்மானம் குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்.

  இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசி இருக்கிறேன். மேடைகள் அனைத்திலும் பிரபாகரன் படம் இருக்கும். அவ்வாறு பேசும்போது எங்காவது வன்முறை நிகழ்ந்ததா?

  ஜாதி, மதங்களை மறந்து தமிழர்கள் என்ற பொது எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை தொடங்கியுள்ளோம்.

  ஆனால் ஜாதி அரசியல் செய்யும் சிலர், எங்களின் முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், தாம் அரசியல் அனாதைகளாகிவிடுவோம் எனக் கருதி, இப்போது ஜாதிய மோதல்களை தூண்டி விடுகின்றனர்.

  மரக்காணம் கலவரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், என்னை மட்டும் சந்திக்கவில்லை. தமிழர்களுக்கென பொதுத் தலைமை உருவாவதை இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.

  தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுகவை எதிர்த்த நாங்கள், வரும் மக்களவைத் தேர்தலில் ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்று பேசினார் சீமான்.

  திடீர் தடையால் பரபரப்பு

  நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையின்பேரில் அனுமதி வழங்கியது. பேரணி, பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செய்து வந்தனர். மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டன.

  பேனர்களில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படங்கள் இடம் பெற்றிருந்ததால் அவற்றை வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக போலீஸார் அகற்றினர். மேலும், நிபந்தனைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் மற்றும் பேரணிக்கு எஸ்.பி. ராதிகா திடீர் தடை விதித்தார்.

  இது குறித்த உத்தரவை, கடலூரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி கடல் தீபன் வீட்டில் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒட்டினர். தடையை மீறி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு சீமான் உள்ளிட்டவர்கள் புறப்பட்டால் அவர்களை கைது செய்ய எஸ்.பி. ராதிகா தலைமையில் 2 ஏ.எஸ்.பி., 8 டி.எஸ்.பி., அதிரடி படை போலீஸார் உள்ளிட்ட 1,000 போலீஸார் மண்டபத்தைச் சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

  • Adhavan Villavan Says:

   நன்றாக தமிழில் பேசத்தெரிகிறது.

   அவ்வளவே.

   ஆனால், தமிழர்களை இப்படியே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

   ஏதோ, ஒரு கூட்டம் காசு கிடைக்கிறது அல்லது சினிமாக்காரன் நட்பு கிடைக்கிறது அல்லது ஓசியில் ஏதோ கிடைக்கிறது என்று அந்த கூட்டம் வேலை செய்யலாம்.

   ஆனால், அது நின்றவுடன், உண்மை வெளிப்பட்டு விடும்.

 5. vedaprakash Says:

  ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்டபோது, பிடித்திருந்தது, இப்பொழுது பிடிக்கவில்லையா?

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=99616

  கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது.

  இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,

  கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?

  என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.

  • Adhavan Villavan Says:

   அது அரசியல் என்பது அம்மாவிற்கும் தெரியும், சீமானுக்கும் தெரியும்.

   பிறகென்ன வெட்டிப் பேச்சு?

 6. vedaprakash Says:

  கடலூரில் சீமான் கூட்டத்தில் போலீசார்- நாம் தமிழர் கட்சியினர் தள்ளு- முள்ளு
  பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, மே 19, 9:29 AM IST
  http://www.maalaimalar.com/2013/05/19092938/cuddalore-seeman-meeting-polic.html

  கடலூர், மே 19-

  கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது.

  கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது.

  இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து அதே திருமண மண்டபத்தில் மாலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இளம் புரட்சியாளர் விருது, தகைசால் ஆன்றோர் விருது உள்பட 8 விருதுகள் வழங்கப்பட்டன. இறுதியில் சீமான் பேசத் தொடங்கினார்.

  அவர் அனுமதிக்கப்பட்ட இரவு 10 மணியை கடந்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் மண்டபத்துக்குள் நுழைந்து கூட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறினர். உடனே கட்சி நிர்வாகிகள் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீசாருக்கும், நாம் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். தொடர்ந்து சீமான் இரவு 10.20 மணி வரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் போலீசார் திருமண மண்டபத்துக்குள் உள்ளே சென்று கூட்டத்தை முடிக்க உத்தரவிட்டனர்.

  இதையடுத்து சீமான் கூட்டத்தை முடித்துவிட்டு மற்றொரு வாசல் வழியாக மண்டபத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Adhavan Villavan Says:

   போலீஸார் ஒத்துழைத்திருப்பதுதான் தெரிகிறது.

   பல புகைப்படங்களில் சீமானுடன் போலீஸார் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது.

 7. vedaprakash Says:

  Seeman gets JKLF’s Malik for Eelam meet
  DC | S. Prasad | 3 hours 48 min ago
  http://www.deccanchronicle.com/130519/news-current-affairs/article/seeman-gets-jklf%E2%80%99s-malik-eelam-meet

  JKLF chairman Yasin Malik speaking at an indoor meeting organised by Naam Tamizhar Katchi at Cuddaloreon Saturday to observe the fourth anniversary of the Mullivaikkal massacre. — DC
  Cuddalore: Naam Tamizhar Katchi chief Seeman on Saturday sprang a surprise on the state police when he brought in JKLF leader Yasin Malik to address his public rally here for commemorating the fourth anniversary of the Mulliv­aikkal massacre at the end of the Eelam war.

  “We were totally in the dark until Yasin Malik landed here for the rally. Seeman did not inform us”, district SP Ms A. Radhika told DC. She said the police had no option but to withdraw the permission given to Nam Tamizhar Katchi as the party had put up many posters and banners hailing the LTTE and its slain leader.
  Tamils, Kashmiris have similar destinies: Yasin

  Sri Lankan Tamils and the people of Kashmir have id­entical views and destinies, said JKLF chairman Yasin Malik, who insisted that ‘nothing on earth’ can sm­ash their ‘democratically justified protests’. He was addressing an indoor meeting organised by Ee­lam campaigner and movie actor-director See­man to observe the fourth anniversary of the Mullivaikkal massacre at the end of the Eelam war in 2009.

  The Kashmiri leader criticised the state government for what he termed as ‘shifting stand’ in first giving po­lice permission to hold the rally at a public ground and withdrawing it at the last minute. “This is undemocratic. I am here only to sh­ow solidarity with the Sri Lankan Tamils”, he said.

  Malik said the rulers in Sri Lanka might have succeeded in killing some individuals championing the Tamil cause in the is­land but they would never succeed in dismantling the principles evolved by the organization (LTTE) for the cause of Eelam Tamils. “Ta­mil Eelam is in the heart and soul of Tamilians.

  The philosophy of Tamil Eelam has been uppermost in the minds of all sections of people irrespective of age. There was no incident in history that organisations or movements fighting for liberation of people had met with failure. And so our fight should continue till the end”, he declared.

  Referring to his own pli­ght, Malik said since he fought for the cause of the families affected by the ar­my in Kashmir, he had to suffer incarceration in prisons in Kashmir, Delhi and Rajasthan. “Kashmir is the most militarised zone in the world right now but then, no military might will ever break the will of the Ka­sh­miri people. The non-violent and democratic pri­n­ciple of Gandhi had ins­pired great leaders like Ne­lson Mandela but this has not happened in the country of his (Gandhi) birth. On the other hand, only the principles of Godse seem to be ruling the roost”.

  Naam Tamizhar Katchi leader Seeman told repo­r­te­rs said that the meeting was held for pressing the dem­and for a referendum on creating Eelam and to de­clare Sri Lankan Presi­dent Mahi­nda Rajapaksa as a war cri­minal. “Police wi­thdrew pe­r­­mission at the last minute. Had they asked us to remove the posters of Prabhakaran, we wou­ld have removed them”, he said.

  • Adhavan Villavan Says:

   இதெல்லாம் போலீஸாறின் நாடகம் தான்.

   ஒன்றுமே தெரியாது என்றால், பிறகு எதற்கு போலீஸ் வேலை செய்கிறார்கள்?

   ஹைதராபாதில், ஒரு சூதாட்டக் காரனை போட்டோவை வைத்துக் கொண்டு, விமானத்தில் ஏறி துபாய்க்குத் தப்பிச் செல்லும் வேளையில் பிடித்து, கைது செஉய்துள்ளனர்.

   அவர்களும் போலீஸ்காரர்கள் தானே?

 8. vedaprakash Says:

  Not alone in fight, Malik tells Tamils
  By K Ezhilarasan | ENS – CUDDALORE 19th May 2013 08:12 AM
  http://newindianexpress.com/states/tamil_nadu/Not-alone-in-fight-Malik-tells-Tamils/2013/05/19/article1596365.ece?pageNumber=1&parentId=71305&operation=comment

  Jammu Kashmir Liberation Front leader Yasin Malik speaking at a function organised by Naam Tamizhar Katchi in Cuddalore on Saturday | Express
  The visit of Jammu Kashmir Liberation Front (JKLF) leader Yasin Malik to Cuddalore on Saturday for a public meeting organised by the Naam Tamizhar Katchi witnessed high drama, with the police denying permission for the event.

  Malik later spoke at an indoor meeting held as part of a day-long pro-Eelam symposium by the Seeman-led party.

  Pointing at similarities between the struggles in Kashmir and Sri Lanka, Malik said, “You are not alone in this struggle. We are together. Our sufferings are the same. I am here to show solidarity with the Tamil people in Sri Lanka, who are affected by war. But unfortunately, the permission to the public meeting was withdrawn at midnight. It is undemocratic.”

  Malik said military operation was launched against the Tamils in Sri Lanka while the dialogue process was on and accused the army of killing thousands of people there.

  “You can kill people but you cannot kill the idea and the ideology. It will pass on to the younger generation. Throughout world history, no freedom movement was defeated. Right now, Kashmir is the most militarised zone in the world. Every military option was used to break the will of the people there but they could not succeed,” Malik said. He urged Gandhians to protest against the massacre in Sri Lanka.

  “We all should come together to oppose the imperialist power in the whole world,” he said.

  Earlier on Friday night, the police cancelled the permission for the party’s public meeting at Manjakuppam ground and pulled down several banners and hoardings put up by the cadre carrying pictures of the slain LTTE chief V Prabakaran.

  On Saturday morning, Seeman and other leaders, along with Malik, arrived at the marriage hall for the day-long event and went into a huddle. Seeman then invited Malik to speak at the indoor meet.

  Later in the evening, Seeman urged youngsters at the gathering to sport Prabakaran’s pictures on their shirts, cars and motorbikes proclaiming that “Prabhakaran and Veerappan are our leaders. For others, Prabhakaran is a terrorist and Veerappan is thief. But they are our leaders”.

  He added, “I am working hard to bring together the people of Tamil Nadu under one banner: Tamils. They should drop their caste identities and should unite as Tamils.”

  A heavy posse of police was deployed at the venue of the meeting.

  A little after 10 pm, even as Seeman was speaking, policemen entered the meeting hall and asked the crowd to disperse. This was followed by a scuffle between the policemen and the partymen and a round of slogan-shouting by the members against the police. However, Seeman appealed for calm and left the venue following which the crowd dispersed.

  • Adhavan Villavan Says:

   இவர்களுடைய சித்தாந்தமே மக்களை ஏமாற்றுவதுதானே?

   பிறகென்ன, சித்தாந்தத்தைக் கொலைசெய்ய முடியாது என்ற பேச்செல்லாம்.

   மக்களையே குண்டு வைத்தும் கொடுங்கோலர்கள் தாமே இவர்கள், அதுதானே அவர்களது சித்தாந்தம் – அதை ஜிஹாத் என்று வேறு சொல்கிறாற்கள்.

   பிறகென்ன வெட்டிப் பேச்சு?

 9. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [1] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seema… […]

 10. கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எத Says:

  […] [7] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seema… […]

 11. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [1] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seema… […]

 12. Adhavan Villavan Says:

  நிச்சயமாக முஸ்லிம்களுக்கு இந்தியர்கள் மீது எந்த நட்பும், பாசமும் கிடையாது.

  தமிழ், தமிழர் என்று சொல்லிக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

  இல்ங்கையிலும், பௌத்தர்களுடன் சேர்ந்து கொண்டு,ஈழத்தமிழர்களை, இந்துக்களை எல்லாவிதங்களிலும் கொடுமைப் படுத்தினர்.

  பிறகு பிரபாகரனை சாக்கு வைத்துக் கொண்டு தமீழ விடுதலை இயக்கத்தினரையே எதிரிகளாக பாவித்து சதி செய்தனர்.

  இன்றும் வளைகுடா நாடுகளிலிருந்து ப்ணத்தைப் பெற்றுக் கொண்டு வீடுக்ஜள் கட்டிக் கொண்டு, பிறகு இந்திய அரசு கொடுக்கும் சலுகைகளையும் பெற்று வருகின்றனர்.

  ஆனால், அவர்கள் தாக்குவது கோவில்களையும், கோவில் நிலங்களையும் தான்.

  இதையெல்லாம் மறைத்து, சீமான் போன்ற சினிமாக்காரர்கள், பணத்தை வைத்துக் கொண்டு, யாசின் போன்ற இந்திய துரோகிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இந்தியர்களையும் மோசடி செய்யவே இக்கூட்டம் எனலாம்.

 13. செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் Says:

  […] [10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seema… […]

 14. செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு Says:

  […] [8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seem… […]

 15. செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு Says:

  […] [8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seem… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: