பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்!

பெண்ணுறுப்பு வெண்மையாக வைத்திருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்!

பெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா? இப்படி விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன. இது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை / பகுதிகளை பாதுகாக்கிறது, வெண்ணிற திரவம், மாத விடாய் ஈரம், முதலியவற்றிலிருந்து சுத்தமாக வைத்துக் கொள்கிறது என்றெல்லாம் விவரிக்கின்றது[1] (This unique product has transformed private care for women. It takes care of feminine wetness, itching, burning sensations and white discharge. This simple solution is effective from the very first use and is already trusted by lots of women all across the country.) “கிளீன் அண்ட் டிரை” என்ற அந்த கிரீமின் விளம்பரம் எற்கெனவே சில டிவி-செனல்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண்மணி எப்படி பெண்ணுருப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார். உருவகமாக, திரையில் உள்ள பெண் சித்திரம் அந்த கிரீமை தனது பெண்ணுறுப்பைச் சுற்றி தடவிக் கொள்கிறாள். இன்னொரு விளம்பரத்தில், ஒரு பெண் தனது கணவனுக்கு டீ கொடுத்துக் கொண்டே அழைக்கிறாள். ஆனால், அவன் அசட்டையாக இருப்பதைக் கண்டு அவள் அந்த கிரீமை தடவிக் கொண்டு சுத்தமானவுடன், மோகம் பிறப்பதாகக் காட்டுகின்றனர்[2]. இந்நிலையில் அது மத்திய அரசுக்கு தெரியவந்து, அம்பிகா சோனி அம்மையார் தடைவிதிக்க ஏற்பாடு செய்துள்ளாராம். விளம்பர தரநிர்ணய சங்கத்திற்கு வந்துள்ள புகாரை அனுப்பியுள்ளாராம். “மைதாஸ் கேர்” என்ற கம்பெனிக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி, பெண்கள் தாமதமாகத்தான் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்[3]. இனிமேல், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடும். அந்த விளம்பரத்தைவிட, அரசு அதிகமாக விளம்பரம் செய்துவிடும்.

இந்திய பெண்ணுரிமைக்காகப் பாராடும் அரைக்கை ஜாக்கேட்டுகள், பாப் வெட்டிக் கொண்ட நாரிகள், முதுகை-மார்பை காட்டும் ஸ்திரீக்கள், கற்பு தேவையில்லை என்ற நடிகைகள், பப்பில் இளம் பெண்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று குரக் கொடுத்த அம்மையார்கள்………………………………..இவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை போலும். பாவம் இந்திய மனைவிகள் தங்கள் கணவன்மார்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமானால், இப்படி இந்த கிரிமைத் தடவி சுத்தம் செய்து கொண்டு தான் போய் படுக்க வேண்டும் போல இருக்கிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு வரும் போல இருக்கிறது. இதெல்லா இந்த பாரத நாட்டிற்கு அவசியம் தேவைதான்!

ஏமாற்று விளம்பரங்களில் தேவையில்லாத சரக்குகளை விற்கும் அந்நிய கம்பெனிகள்: ஆனால், நாம் இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால், மேனாட்டு சரக்குகளை இந்தியாவில் பொய் சொல்லி விற்பதற்கு என்னெவெல்லாம் கேவலமான யுக்திகளை கையாளுகிறது என்பது தான். “பேர் அண்ட் லௌலி” கிரிமால் எந்த உபயோகமும் இல்லை என்று அக்கம்பெனியே ஒப்புக் கொண்டு விட்டது. இருப்பினும் பெண்கள் அதனை வாங்காமல் நிறுத்தவில்லை. போதாகுறைக்கு, ஆண்களை மயக்க விளம்பரம் செய்து அதே கிரீமை விற்று வருகிறது. இதெல்லாம் கலாச்சார சீரழிவிற்கு அடிகோலும் வேலைகளேயன்றி உண்மையில் நாகரிகமான செயலோ, பொருளே, தேவையோ இல்லை.

அனைத்துலக கை கழுவும் நாள் முதல் காதலர் தினம் வரை: இந்நிலையில் தான் மற்ற விவகாரங்கள் வருகின்றன. அனைத்துலக கை கழுவும் நாள் என்று கொண்டாடுகிறார்கள்[4]. ஏதோ இந்தியர்களுக்கு கைகழுவவே தெரியாதது போலவும், இவர்கள் வந்துதான் நமக்கு சுத்தம்-சுகாதாரம் சொல்லிக் கொடுப்பதைப் போலவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள், உண்மையில் மேற்கத்தைய நாட்டினருக்கு, ஐரோப்பியர்களுக்குத் தான் அத்தகைய சுகாதார பழக்க-வழக்கங்கள் இல்லாமல் இருந்தனர். அவர்கள் அவ்வாறு இருந்ததினால்தான், இந்தியர்கள் அவர்களை ஃபிரெங்கி, பிரெங்கி, பறங்கி என்றெல்லாம் சொல்லிவந்தனர். அதாவது சுத்தமாக இல்லாததினால் – தினமும் குளிக்காமல் இருப்பது, கொள்ளைக்குப் போகாமல் கண்ட இடத்தில் மலம் கழிப்பது, மலம் கழித்தாலும் அலம்பாமல் துடைத்துக் கொண்டு போவது, கண்ட நேரங்களில்-கண்ட இடங்களில் பெண்களுடன் புணர்வது, அவ்வாறு புணர்ந்த பின்னர் குளிக்காமல் இருப்பது போன்ற காரியங்களால் அவர்கள் மேகவியாதி, பிரங்கி வியாதி, பறங்கி வியாதியஸ்தரர்களக இருந்ததினால்[5], பிறகு ஃபிரெங்கியர், பிரெங்கியர், பறங்கியர் ( Frenghi, Franconians or Franks[6]) என்றே இந்திய மொழிகளில் குறிப்பிடப்பட்டனர்[7]. அந்நோய் தீர்க்க உபயோகிக்கப் பட்ட பட்டைக்கே அப்பெயர் கொடுக்கப் பட்டது (Parangi pattai = Smilax chinensis). ஆக அவர்கள் தாம், இன்றைக்கு நமக்கு நாகரிகத்தைப் பற்றியும், சுத்தத்தை பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். போதாகுறைக்கு அனைத்துலக அம்மாக்கள் தினம்[8], அனைத்துலக அப்பாக்கள் தினம்[9], என்றெல்லாம் ஆரம்பித்துள்ளனர். காதலர் தினம் என்ற வேலன்டைன் தினத்தைப் பற்றி சொன்னால் அசிங்கமாகி விடும், ஏனெனில் அத்தகைய மோசமான ஒரு ஆளின் நினைவாக அது கொண்டாடப் படுகிறது[10].

கலாச்சார தாக்குதல்: இந்தியாவில் மக்கள் – ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும், காலையிலிருந்து மாலை வரை, அவர்களுக்கென்று உகந்த, தேவையான வேலைகளை, கடமைகளை செய்து வந்தனர். அதனால் உடல் ஆரோக்கியம், வசதி, கட்டுப்பாடு முதல்ய விசயங்களுக்கு யாருக்கும் எந்த உபயோகமும், தேவையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது, எல்லாவற்றிற்கும் கிரீம், பவுடர், எண்ணை என்று செயற்கையாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் கிடைப்பவை, ஏதோ உபயோகமற்றது போல, அயல்நாட்டு காடுகளில் கிடப்பவை, விளைந்தவை என்று வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படி இறக்குமது செய்யப்படும் பொருட்கள் எல்லைகளைத் தாண்டி செல்லும்போது, பெண்ணுறுப்பை வெண்மையாக வைத்துக் கொள்ள கிரீம் என்று கிளம்பி விட்டனர்.

Fairness Creams Are Now Targeting The Vagina[11].

A TV advertisement that sparked outrage among women activists now has the attention of the government as well[12].

Taking obsession with skin lightening to a new level, the ad shows a hygiene wash called Clean & Dry Intimate Wash and promises to bring “fairness” and “freshness” to women’s private parts[13].

The outrage that followed has spurred the  I&B ministry into action. It has written to the Advertising Standards Council of India (ASCI) – an independent authority that promotes self-regulation – asking for the removal of the commercial. “This issue was raised in the House recently during the Zero Hour. The advertisement was also brought to my notice by Brinda Karat. Our complaint has been sent to ASCI,” I&B minister Ambika Soni said.

Ambika Soni said a complaint has been sent to the Advertising Standards Council of India.

The hate-campaign against the ad first started online right after writer Rupa Subramanya tweeted, “Ok this is the ultimate insult. Skin whitening for your vagina.” Since then the ad has spawned several write-ups of protest on the web.

In the commercial, a couple is shown lounging in their house. The man is reading the paper and the women looks visibly upset because she feels ignored. The man’s lack of interest, as the advertisement would want the viewer to believe, is because of the women’s dark private parts. This is where the hygiene wash is introduced as a solution.

“In the name of personal care it shows intimate details of a woman’s body which is offensive. It equates fairness with freshness to promote the skin lightening property of the wash,” said Karat[14].

The ASCI has asked the ad, a Mumbai-based firm called Midas Care, to respond to the ministry’s complaint.

வேதபிரகாஷ்

02-05-2012


[2] The ad shows a wife serving tea to a disinterested husband and after she cleans herself their romance perks up.  The advertisement on television has also shown graphics that show this product lightens the private parts and how the life for women will now be fresher, cleaner, and fairer. Read more at:

http://www.merinews.com/article/tv-ad-for-fair-private-parts-is-ridiculous-women-activists/15868268.shtml&cp

[4] http://www.globalhandwashingday.org/

Global Handwashing Day (GHD) was created by the Global Public-Private Partnership for Handwashing in 2008 to:

• Foster and support a global culture of handwashing with soap.

• Shine a spotlight on the state of handwashing in every country.

• Raise awareness about the benefits of handwashing with soap.

Global Handwashing Day was originally created for children and schools, but can be celebrated by anyone promoting handwashing with soap. Each year, over 200 million people are involved in celebrations in over 100 countries around the world. Global Handwashing is endorsed by a wide array of governments, international institutions, civil society organizations, NGOs, private companies, and individuals.

http://www.globalhandwashingday.org/About.asp

[5] “The disease in question is called “parangi,” and is defined by Mr. Kinsey (British Medical Journal) as a specific disease, produced by such causes as lead to debilitation of the system; propagated by contagion, generally through an abrasion or sore, but sometimes by simple contact with a sound surface; marked by an ill-defined period of incubation, followed by certain premonitory symptoms referable to the general system, then by the evolution of successive crops of a characteristic eruption, which pass on in weakly subjects into unhealthy and spreading ulcers whose cicatrices are very prone to contraction; running a definite course; attacking all ages, and amenable to appropriate treatment.”

Scientific American Supplement, No. 315, January 14, 1882; The history of venereal disease and yaws (parangi) in Sri Lanka 

[6] Frenghi [Franconians or Franks] is the common name for the European Christians.

[8] Mother’s Day is a celebration honoring mothers and celebrating motherhood, maternal bonds and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, yet most commonly in March, April, or May. It complements Father’s Day, the celebration honoring fathers. Celebrations of mothers and motherhood occur throughout the world; many of these can be traced back to ancient festivals, like the Greek cult to Cybele, the Roman festival of Hilaria or the Christian Mothering Sunday celebration.

[9] Father’s Day is a celebration of fathers inaugurated in the early twentieth century to complement Mother’s Day in celebrating fatherhood and male parenting.One early observance of a Father’s Day took place in Fairmont, West Virginia on July 5, 1908. It was organized by Mrs. Grace Golden Clayton, who wanted to celebrate the lives of the 210 fathers who had been lost in the Monongah Mining disaster several months earlier in Monongah, West Virginia, on December 6, 1907.

http://en.wikipedia.org/wiki/Father’s_Day


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: