ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம்!

ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம்!

ருபையா சையது – முந்தைய உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மடு சையிதின் மகள்; ஜீனா ஜிக்காகா சமீபத்தில் நக்சலைட்டுகளினால் கடத்தப் பட்டு விடுவிக்கப் பட்ட ஒரிசா எம்.எல்.ஏ.; அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்ட்டுகளினால் கடத்தப் பட்டூள்ள சத்தீஸ்கரின் கலெக்டர்; இவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டன்ர் அல்லது விடுவிக்க கோரிக்கைகள் உள்ளன. விடுவித்தாலும், தீவிரவாதம் தொடரும் என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் உயிர்களை உயிர்களாக மதிப்பதில்லை. இருப்பினும் கைதிகள் ஏன் விடுவிக்க வேண்டும் என்று யாரும் கவனிப்பதில்லை. ஒரு தடவை குற்றத்தில் மாட்டிக் கொண்டவன், அதே குற்றத்தை மறுபடியும் செய்தால் ஒரே தண்டனை என்று சட்டம் சொல்கிறது. ஆகையால், இரண்டு முறை தீவிரவாதத்தில் உயிர்க்கொலைகள் செய்தால், அவன் பெரிய வீரனாகிறான்; இறந்தால் தியாகி ஆகிறான்; பிறகு போராட்ட சித்தாந்தம் தான்; கொலைகள் தாம்; ரத்தம் தான்!

மற்ற இடைத் தரகர்கள் செய்யமுடியாததை தான் செய்வேன் என்கிறார் ஜெ.ஜோயல்: தனது உயிரை பணயம் வைத்தாவது கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் மேனனை நிச்சயமாக மீட்டு வருவேன் என சட்டீஸ்கர் சென்றுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதல்வர் ஜெ. ஜோயல் தெரிவித்தார்[1]. சட்டீஸ்கரில் முதல்வர் ராமன்சிங்கை சந்தித்து விட்டு நமது நெல்லை நிருபருக்கு தொலை பேசி மூலம் சிறப்பு பேட்டியை அளித்தார். இந்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்[2]. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், மாவோ தீவிரவாதிகளால் பாஸ்டர் வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்டு வர மீட்புகுழுவினராக சென்ற பேராசிரியர் ஹர்கோபால், ஓய்வுபெற்ற அதிகாரி சர்மா ஆகியோர் தற்போது திரும்பிவந்துவிட்டனர். அவர்கள் அலெக்ஸ் பால் மேனனை சந்திக்கவில்லை.

என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”: இவரை மீட்க தான் தயாராக இருப்பதாக தானாக முன்வந்த நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முதல்வர் ஜோயலுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து அங்கு சென்று முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். தற்போது சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜோயல் நமது நிருபரிடம் கூறியதாவது[3]: “சென்னையில் இருந்து விமானத்தில் ராய்ப்பூர் வந்தேன். இங்கு முதல்வர் ராமன்சிங்கை நேரில் சந்தித்தேன். கலெக்டர் மீட்பு நடவடிக்கை குழுவினர் என்னிடம் பேசினார்கள். ராய்ப்பூரில் இருந்து 300 கி.மீ.,தொலைவில் பாஸ்டர் வனப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்துசெல்கிறார்கள். அங்கு காத்திருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கி.மீ.,தூரம் அழைத்துசெல்வார்களாம். அதன்பின்னர் நடந்துசெல்லவேண்டும். எப்படியும் கலெக்டரை மீட்டுவருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முயற்சியில் விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நான் சொந்தமாகவே மேற்கொள்கிறேன். நான் இங்கு வந்ததும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்னிடம் நேரில் பேசினார்கள். என்னைப்பற்றி விபரங்களை தெரிவித்தேன். அதனை அங்கு கூறியிருப்பார்கள் என நம்புகிறேன். நான் கலெக்டரை மீட்கபோகும் விஷயத்தை அவரது தந்தை வரதாசிடமும் போனில் தெரிவித்தேன். அவரும் சந்தோஷமடைந்தார். மாவோயிஸ்ட்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம், மற்றும் தெலுங்கில் பேசலாம். என்னை பலரும் கண்காணிப்பது நன்றாக தெரிகிறது. என் உயிரை பணயம் வைத்தாவது கலெக்டரை நிச்சயம் மீட்பேன்”, என்றார் நம்பிக்கையோடு.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிபந்தனைஇதற்கிடையில் அவரரை விடுவிக்க வேண்டுமானால் 75 கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இதனையடுத்து இன்று முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்க 17 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர். இப்படி தீவிரவாதிகளை, அதிலும் ஜெயிலில் பிடித்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுவித்துக் கொண்தேயிருந்தால், நாட்டின் கதி என்ன ஆகும்? காஷ்மீரில் விடுவிக்கப்பட்டவர்கள் தாம் இந்திய விமானத்தைக் கடத்திக் கொண்டு சென்று, கந்தஹாரில் சிலரைக் கொன்றனர். இப்பொழுது விடுவிக்கப்பட்டவர்கள் / விடுவிக்கப்படப்போகிறவர்கள் என்னமெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

காஷ்மீரில் நடந்தது மற்ற இடங்களில் நடப்பதை அனுமதிக்கலாமா? காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, வீட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர்[4]. அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. அவளை மீட்க இஸ்லாமிய தீவிரவாதிகள் விடுவிக்கப் பட்டனர். இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். அதாவது, பதிலுக்கு ஜெயிலில் இருக்கும் நக்சலைட்டுகளை விடுவித்து மீட்டனர். ஆனால், எம்.எல்.ஏ வெளிவந்த பிறகு, செய்தி அடங்கி விட்டது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடித்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[5]. மத்தியஸ்தம் பேசுகின்றவர்கள் தாராளமாகச் சென்று வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[6]. இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்றும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வேலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?


[5] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[6] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily

குறிச்சொற்கள்: , , , , ,

4 பதில்கள் to “ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: கடத்தல், விடுவிக்க தீவிரவாதிகள் விடுதலை, தொடரும் தீவிரவாதம்!”

 1. அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: Says:

  […] [15] https://atrocitiesonindians.wordpress.com/2012/04/30/rubaiya-sayeed-jina-jikakka-alex-paul-menon-modu… […]

 2. அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: Says:

  […] [15] https://atrocitiesonindians.wordpress.com/2012/04/30/rubaiya-sayeed-jina-jikakka-alex-paul-menon-modu… […]

 3. S. K. Kannan. Says:

  The Christrian nexus with Maoists has been visible in the transaction as could be seen in other activities.

  Why the so-dear Maoists should prefer Alex Paul has to be probed, as otherwise, the same Maoists would not have killed Valsa John – a Christian and Swami Lakshmanananda – Hindu both were social workers.

  The killers have been Christians only, though they are mentioned as “Maoists” or maoists with Christian names.

  The Church also kept silence, the moment they come to know that the rapists of the so-called Odhisha or Kerala nun were none other than Christians themselves, just like Jabua.

  The Church never disowns such Christian maoists or maoists with Christian names.

  As “Liberation theology” is practiced, it is all the part of their game to create problem in India. In Tamilnadu, they have created enough trouble in 1980s. In Minsurutti, the Christian priests were involved in bank robbery and killing of the branch manager also. Their nexus with others was not revealed.

  Conniving with the Jihadi groups, they hae been aiding and abetting the anti-Indian forces as could be seen from the change of goivernment in Nepal, excessive insurgency in NE, cross-border terrorist activities at the borders connecting India with Bangladesh, Burma, and of course Nepal.

 4. காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது! | இஸ்லாம்-இந்தியா Says:

  […] [7] https://atrocitiesonindians.wordpress.com/2012/04/30/rubaiya-sayeed-jina-jikakka-alex-paul-menon-modu… […]

அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு கொடுத்த விலை – ருபையா சையது, ஜீனா ஜிக்காகா, அலெக்ஸ் பால்மேனன்: க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: