கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (1)!

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (1)!

 

கல்பாக்கத்திலிருந்து கூடங்குளம் வரை: கூடங்குளத்தைப் பற்றி அதிகமாகவே விவாதங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் வியாபார ரீதியில் தான் இதனை

போரட்டம் திசை மாறுகிறதா[1]: ஜனநாயகப் பாதைபோராட்டம் நடக்கும் சர்ச் வளாகம் அருகே சென்ற, உளவுத்துறை போலீஸ்காரர், கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்கப்பட்டார். “இடிந்தகரைக்குள் போலீசார் வரக்கூடாது’ என, போராட்டக்காரர்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், காங்கிரஸ் பிரமுகர் மற்றும் “டிவி’ நிருபர் தாக்கப்பட்டு, கார் உடைக்கப்பட்டுள்ளது.இதுவரை, ஜனநாயக முறையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நடத்தப்பட்ட போராட்டம், தற்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்னையாக மாறி வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

எதிர்ப்பது-ஆதரிப்பது என்ற நிலைகள் உள்ளன. கல்பாக்கத்தில் அணுவுலை வேலை மேற்கொண்டபோது, அத்தகைய எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், அதற்கேற்றபடி இழப்பீடு, ஆதாயம் என்றெல்லாம் பெற்றபிறகு அமைதியாகி விட்டனர். அங்கு வியாபாரம், பணி மற்ற இதர விஷயங்களுக்காக மக்கள் வந்து போவது முதலிய போக்குவரத்துகளினால் கடைகள் வைத்து கொள்வது, ஆட்களை வேலைக்குப் பிடித்துக் கொடுப்பது, வீடு வாடகை விடுவது என பலவிதங்களில் சுற்றியுள்ள மக்களுக்கு ஆதாயங்கள் கிடைத்தன. அதேப்போலத்தான் இங்கும் நிகழப்போகிறது. அதற்குத்தான் முன்னமே இடம் பிடிக்க, இவ்வாறு போராட்டம் என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் “அஹிம்சை” என்ற பெயரில் மக்களை குறிப்பிட்டவர்கள் ஏமாற்றி வருவதுதான்[2].

சேது சமுத்திரமும், கூடங்குளமும்: சேது சமுத்திர திட்டத்தின் போது எப்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, தத்தமது பங்கைப் பெறத்துடித்தார்களோ, அதே நிலைதான் இங்குள்ளது. அணுவுலை செயல்பட ஆரம்பித்து, கல்பாகத்தைப் போல “டவுன்சிப்” என்றெல்லாம் வந்த பிறகு, எப்படி அந்நிலையில் பணம் பண்ணலாம் என்ற எண்ணத்துடன் தான் போராட்டக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்த வரைக்கும்,  இந்தியா அணுதொழிற்நுட்பத்தில் சிறந்து விளங்கக் கூடாது. அதற்காக எல்லாவிதங்களிலும் வேலை செய்யும் என்பதை, அவர்கள் வியாபாரத்தடை விதித்தபோதே இந்தியர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். விற்பனை என்று வந்துவிட்டால் “பொருள்” அல்லது “சேவை” என்பவற்றை யார் விற்க வருகிறார்களோ அவர்களிடம் வாங்கிக் கொள்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அமெரிக்கா மறுத்தபோது, இந்தியாவின் தன்னிரைவு ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டபோது, முடக்க நினைத்தபோது தான் இந்தியர்கள் ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கூடங்குளம் திட்டத்தை ஆரம்பித்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அத்தகைய வீயாபாரத்தை தமது அரசியல், மதம், மற்ற லாபங்களுடன் இணைத்து முடிச்சுப் போட்டிருப்பது சாதாரண இந்திய குடிமகன்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

காலக்கிரமத் திட்டப் பணிகள், நிறைவேற்றும் நிலை: வியாபார ரீதியில் 2008-09களில் முடிவடைய வேண்டியிருந்த திட்டம், 2010 இறுதியில் முடியும் நிலைக்கு தள்ளப்பட்டது. விவரங்கள் கிழ்ழ்கண்ட அட்டவணைகளில் காணலாம்:

Location Kudankulam, District : Tirunellveli-Kattabomman, Tamil Nadu State.
Reactor type V V E R -1000 (PWR)
Capacity 2 x1000 MWe
Scheduled Date of Commercial Operation Unit-1 : Dec ’07
Unit-2 : Dec ’08
Expected Date of Commercial Operation Unit-1 : Jun ’09
Unit-2 : Mar ’10
P hysical progress achieved Kudankulam – 1 : 85 % as on Apr. , 2008
Kudankulam – 2 : 75.4 % as on Apr. , 2008
Kudankulam – 1 & 2 : 81.2 % as on Apr. , 2008

இவ்விதமாக முன்னேறும் நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட விபத்தினால், பயம் ஏற்பட்டது. ஆனால் பயத்தை பீதியாக மாற்றி எதிப்பு இயக்கம் ஆரம்பிக்கப் பட்டது, அதனால் தான் இப்பிரச்சினை உருவாகியுள்ளது.

 Major Milestones Achieved 
Activity

Unit – 1

Unit – 2

Construction of Inner Containment (IC) Dome

Oct – 2007

Construction of Primary Containment Wall upto 43.9M

May – 2005

Construction upto + 5.4 Slab

Sept-2003

Dec-2003

Completion of 0.00m Slab

March – 2003

June-2003

Completion of Foundation Slab

July – 2002

Sept. – 2002

First Pour of Concrete

March-2002

July – 2002

Ground Break

Sept-2001

Sept-2001

இல்லையென்றால், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் சாதாரண மக்களுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

செப்டம்பரில் உதயகுமாரின் “தீக்குளிப்பு” பேச்சு – கூடங்குள ம்அணுமின்நிலையத்தை மூடக்கோரி. நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்[3]:கூடங்குளம் போராட்ட மக்கள் குழு அமைப்பாளர் உதயகுமார் பேசியதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடந்து வருகிறது. காசு வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்இந்த போராட்டத்தின் பின்னணியில் காசு வாங்கி இருக்கிறோம் என்று மத்திய அரசு நிரூபித்தால், இதே போல் மக்களை திரட்டி தீக்குளிப்பேன். இந்த போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து மிரட்டுகிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு உதயகுமார் கூறினார். இதில் ஏதோ திராவிட அரசியல்கட்சிக்காரர் போல தீக்குளிப்பேன் என்பதை விட, “இதே போல் மக்களை திரட்டி தீக்குளிப்பேன்”,  என்ற ரீதியில் பேசி மிரட்டியிருப்பது, வன்முறையைத் தூண்டுவது போல உள்ளது. இலையென்றால் இல்லை என்று தைரியமாக சொல்லிவிட்டு போயிருக்கலாம். எதிர்ப்பில் கூட சித்தாந்த ரீதியில் குழுக்கள் சேர்வது வியப்பாக உள்ளது. இடதுசாரி சித்தாந்தத்தைப் இன்பற்றும் பத்திரிக்கைகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன[4].

கூடங்குளம் அணு உலை தொடர்பாக, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூடங்குளம் அணு உலையில், டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை துவக்கியிருக்கலாம். ஆனால், பிரிவினை சக்தி போராட்டங்களால், மின்

Foreign environmental activists have joined hands with locals opposing the Kudankulam Atomic Power Project (KAPP), alleged Dr S. K. Jain, Chairman and Managing Director of the Nuclear Power Corporation of India………Dr Jain said the foreign activists along with a splinter group of Tamil Nadu-based anti-nuclear activists were creating all the trouble. All the activists were receiving foreign funding in abundance, he added…………Dr Jain also alleged that some of the churches in the area were participating in the agitation………[5]

நிலையத்திற்குள் செல்லவே முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும், அடிப்படைத் தேவைகளை சிரமப்பட்டு பராமரிக்கிறோம். அணு உலையில், “ஹாட் ரன்’ எனப்படும் தொழில்நுட்பப் பணி முடிந்ததால், அங்கு குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்கு தண்ணீர் சுழற்சி, மின்சாரம் மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகள் தேவை. இல்லையென்றால், குளிரூட்டும் இயந்திரத்தில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படும். “அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், கூடங்குளம் அணு உலைக்கு பிரிவினை சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,” என, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின் தெரிவித்துள்ளார்[6]. இக்கருத்தை ஏற்கெனவே சென்ற மாதம் எம்.ஆர்.சீனிவாசன் சொல்லியிருந்தார்.

அக்டோபரில் “வெளிநாட்டு சக்தி’ குற்றச்சாட்டு: “கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாடுகளிலிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல்

For months, a coalition of activists from Australia, Germany, the Scandinavian countries and Canada have swarmed across the 27 villages in Kudankulam, trying to persuade inhabitants from five of these to join in the protests. Many of the local protestors are Christian, and they appear to have bought the argument of foreign activists that Kudankulam would be a disaster beside which Fukushima would seem a picnic. However, the overwhelming majority of the local population does not buy this negative view, seeing in the plant opportunities for economic advancement. That priests have been active in the agitation against the Kudankulam plant is not surprising, as the Catholic Church in India has a long tradition of its clergy getting involved in anti-nuclear activities[7].

அமைப்பினரின் பின்னணியில், இந்த போராட்டம் நடக்கிறது[8].  கூடங்குளம் பகுதியைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் வசிக்கும் பிரிவினை சக்திகள் உதயகுமார் என்பவரின் தலைமையில், அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சில கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அதை சேர்ந்தவர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்”. 22-09-2011 அன்று தமிழக முதல்வரை சந்திப்பதற்காக, உதயகுமார் அவர்கள் தலைமையிலான போராட்டக் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தக் குழுவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமடியஸ் உட்பட மூத்த கிறித்துவ குருமார்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்[9].
                                                                                                                      நினைத்தவுடன் மூட கார் தொழிற்சாலையல்ல...: கூடங்குளம் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளன. மத்திய அணுசக்தி கமிஷன் மற்றும் ஒழுங்கு முறை கமிஷனின் வழிகாட்டுதல்படி, கூடங்குளத்தில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இது, பாதுகாப்பு

அதாவது கிராமங்களில் இருக்கும் கிருத்துவர்கள் அனைவரையும் இதில் ஈடுபடுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கத்தோலிக்க சர்ச் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஏற்பாடுகளை சரிபார்க்க நடத்தப்பட்ட ஒத்திகை. ஆனால், பிரிவினை சக்திகள் இதை பயன்படுத்தி, அங்குள்ள கிராமங்களில், “மக்களை இங்கிருந்து காலி செய்து விடுவர்’ எனக் கூறி, பீதியை ஏற்படுத்திவிட்டனர். இந்த உண்மைக்கு மாறான வதந்தியால் பீதியடைந்த மக்களை பயன்படுத்தி, போராட்டம் நடத்துகின்றனர். கூடங்குளத்தைச் சுற்றி 27 கிராமங்கள் உள்ளன. இதில், 22 கிராமத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்காமல், திட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர். அணு உலையை பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் நிறுவவும், மூடவும் கார் தொழிற்சாலை கிடையாது. இதற்கென பல தொழில்நுட்பப் பணிகள் உள்ளன. ஒரு இடத்தில் அணு உலை நிறுவப்பட்டால், அதை பராமரிக்க மட்டுமே முடியும். மாறாக, நினைத்த நேரத்தில் மூட முடியாது. அவ்வாறு மூடினால், பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தற்போதைய நிலையில், அணு உலையை மூடுவதற்கு சாத்தியமே இல்லை”, இவ்வாறு ஜெயின் கூறினார்.
                                                                                                                                                                                                                                                  மத்திய நிபுணர் குழுவுடன் அணு விஞ்ஞானிகள் ஆலோசனை *அடுக்கடுக்காக கேள்வி கேட்ட உறுப்பினர்கள்: கூடங்குளம் விவகாரத்தில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், இந்திய அணுமின் கழக தலைவர் ஜெயின், அணுசக்தி இயக்குனரக செயலர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பங்கேற்று, நிபுணர் குழுவின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்க, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்த 15 நிபுணர்கள் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து, கடலியல் மற்றும் விண்வெளித் துறை விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, வாழ்வியல் அறிவியல் துறை பேராசிரியர் சுகுமாறன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினரின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிபுணர் குழுவினர் அனைவரும் தனித்தனியாக அறிமுகம் செய்யப்பட்டனர்.இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையிலுள்ள இந்திய அணுமின் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி தொழில்நுட்ப இயக்குனர் பரத்வாஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, கூடங்குளம் அணு உலை குறித்து, நிபுணர் குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.
                                                                                                                                                                                                                                        அளிக்கப்பட்ட விளக்கம்: அணுமின் விஞ்ஞானிகளிடம் நிபுணர் குழுவினர், பொதுமக்களின் அச்சம் குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், தங்களது அச்சம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த மனுக்களின் பிரதிகள், ஒவ்வொரு நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்ட அச்சம் தொடர்பான பதில்களையும், அவை தொடர்பான ஆய்வு புத்தகங்கள், உலக அளவில் வெளியான குறிப்புகள் ஆகியவற்றின் நகல்களையும், அணுமின் கழக அதிகாரிகள், நிபுணர் குழுவினருக்கு வழங்கினர்.இதுதொடர்பாக நிபுணர் குழுவினர், தாங்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகள் தொடர்பான காரணங்களுக்கு ஆய்வு செய்து, குறிப்புகள் தயார் செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசிடம் பேசி, விரைவில் மாநில கமிட்டி அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டியினரும் மத்திய நிபுணர் குழுவினருடன் இணைந்து செயல்படுவர் என, அணுமின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மீண்டும் அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
                                                                                                                                                                                                                                          முதல்வரை சந்திக்க முடியாத விஞ்ஞானிகள்: கூடங்குளம் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, அணுமின் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்காததால், விஞ்ஞானிகள் காத்திருந்து விட்டு, மும்பைக்கு திரும்பி விட்டனர். அரசியல் ரீதியில் ஏற்படும் சங்கடத்தை தவிக்கவே, ஜெயலலிதா இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.

வேதபிரகாஷ்

13-11-2011.


[1] தினமலர், கூடங்குளம்காங்கிரஸ்பிரமுகருக்குஅடி, உதை: கார்உடைப்பு, 13-11-2011 (ஞாயிறு, ப,2), http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348435

[2]  கூடன்குளம் போராட்டகுழு அமைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, “கூடன்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்து பொதுமக்களை திரட்டி அஹிம்சை முறையில் போராடி வருகிறோம்”.

http://tamil.oneindia.in/news/2011/09/14/request-pass-resolution-against-koodankulam-plant-aid0175.html

Until recently, some may have still wondered whether the tradition of civil disobedience – the force of non-violent resistance that fuelled Mahatma Gandhi’s historic campaign as he led his country to independence – was still alive in India. The People’s Movement Against Nuclear Energy not only answered that question, but also laid a first brick in the road that will take India toward a safe and environmentally clean future. http://www.bellona.org/articles/articles_2011/protests_succeeding

[4] பிரஃபுல் பித்வாய், நியூகிளியார் சேனிடி, பிரன்ட் லைன் பத்திரிக்கை, Volume 28 – Issue 21 :: Oct. 08-21, 2011, http://www.frontline.in/fl2821/stories/20111021282110100.htm

[6] தினமலர், கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர்ஜெயின்தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339970

[8] M R Srinivasan, former chairman of the Atomic Energy Commission, who sniffed at a gathering of non-government organisations from countries like Germany, France and the US, and also some religious organisations to oppose the Kudankulam project, told Business Standard [11 Oct 2011]: “This is clearly a campaign against India, in particular, which has attracted the world’s attention for proposed nuclear capacity addition. This is also to run down the Russian VVER-1,000 reactors which are deployed in the Kudankulam project.”

http://www.nuclearfriendsfoundation.com/nuclearArticle-indias-track-record-in-nuclear-sector-impeccable.aspx

Asked if he thought that the anti-nuclear lobby was also behind the protests in Kudankulam, Mr. Srinivasan said there was an organised anti-nuclear sentiment in certain advanced parts of the world, including Germany and Australia, especially after the “Fukushima event.”But he also stressed that France continued to operate its nuclear reactors as also are Korea and Russia, whereas China is building them at a furious pace. “So, we have to look at it from totality.”

http://www.thehindu.com/news/national/article2472871.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (1)!”

 1. கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (3)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] [1] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 2. கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்! « Says:

  […] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 3. கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்! « Says:

  […] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 4. கூடங்குளமும், பகவத் கீதையும்: மன்மோஹன் சிங்கும், சோனியா மெய்னோவும், கிருத்துவ பாதிரிகளும்! « Says:

  […] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 5. ரூ. 54 கோடி – இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட பணம் பெற்றது தெரிய வந Says:

  […] [9] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 6. கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)! « இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் Says:

  […] [4] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 7. சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? கூடங்குளம் அணுவுலை: விய Says:

  […] [4] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 8. கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா? « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] [4] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

 9. கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (1)! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] https://atrocitiesonindians.wordpress.com/2011/11/13/kudankulam-nuclear-plant-business-support-opposi… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: