ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம் நைட்ரேட், குண்டுவெடிப்பு!

ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம் நைட்ரேட், குண்டுவெடிப்பு

குண்டு வெடிப்பில் இறந்தவன் யார்? ஜோசப் மகன் பாஸ்கரன்[1] (41). தமிழ் நாளிதழ்கள் “ஜோசப் மகன் பாஸ்கரன்” என்று குறிப்பிட்டாலும், ஆங்கில நாளிதழ்கள் Joseph Bhaskaran, அதாவது “ஜோசப் பாஸ்கரன்” என்றே குறிப்பிடுகின்றன[2]. தினமலரின் முந்தைய செய்தியில்[3] “ஜோசப் பாஸ்கரன்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தினமலரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் கட்டிலுக்கு அருகே ஏசுநாதர் படம் காணப்படுகிறது. ஆனால், ஊடகங்கள் “ஜோசப் பாஸ்கரனையும்”, விடுதலை இறையியலையும் சேர்த்து / இணைத்து எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. முன்பு, பிரக்யா தாகூர் விஷயத்தில் அவளுடைய பிளாட்டில் கிடைத்த துண்டு பிரச்சாரங்களைக் காட்டி, அந்த பிளாட்டிலுள்ள அறைகளைக் காட்டி “ஆரஞ்சு தீவிரவாதம்” என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது இப்படி விசாரணை உள்ளது.

திக்திக்திருப்பூரில் தொடர்ந்து நடைபெறும் பயங்கர செயல்கள்: 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு மற்றும் கலவரங்களுக்குப் பிறகு, கடந்த பத்து நாட்களில் இரண்டு குண்டு வெடிப்புகள் 25-10-2010 மற்றும் 03-11-2010 திருப்பூரில் நடந்துள்ளது வெறும் விபத்தா அல்லது வரப்போகின்ற ஆபத்தின் அறிகுறியா என்று தெரியவில்லை. பனியன் தொழிற்கூடங்கள் அதிகம் இருப்பதால் திருப்பூரில் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்களின் முழு விவரம் கூட வீட்டு உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை. இதனால் தொழிலாளர்கள் என்ற போர்வையில் பலர் சமூக விரோத செயல்களில் ஈடு படுகிறார்கள்[4].

*         2006: திருப்பூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன், போயம்பாளையம் பகுதியில் தர்மபுரியைச் சேர்ந்த சில நக்ஸலைட் தீவிரவாதிகள் பிடிபட்டனர்.

*         2008: இரு ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்., நகர் பகுதியில், இரண்டு பைப் வெடிகுண்டுகள், குப்பை பாறைக்குழியில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.

*         2010: கடந்த நான்கு மாதங்களாக, திருப்பூர் – ஈரோடு பகுதிகளுக்கு இடையில் ரயில் தண்டவாளங்களில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

*         2008: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டு தலை வர் சுந்தரமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் துப்பாக்கி, தோட்டாக்களுடன் திருப்பூர் பச்சம்பாளையம் புதூரில் 6 மாதமாக தங்கி இருந்தான். அவனை சேலம் போலீசார் கைது செய்தனர்.

*         2007: இதே போல் விடுதலைப் புலிகளுக்கு இரும்பு பால்ரஸ் குண்டுகளை சப்ளை செய்ததாக விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

*         2007: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பனியன் அதிபர் ஒருவருக்கு ஜெலட்டின் குச்சிகள் தபால் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டது.

*         2009: கடந்த ஆண்டு பனியன் தொழிலாளர்கள் 3 பேர் ஜெலட்டின் குச்சிகளை பயன் படுத்தி “பைக்” வெடிகுண்டு தயாரித்த போது போலீசார் கைது செய்தனர்.

*         2010: கடந்த வாரம் திருப்பூரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஒரு கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சிக்கியது.

*         மேலும் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் நைஜீரியாவை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.

இப்படி அடுக்கடுக்கான சம்பவங்களால் திருப்பூர் நகர மக்களும், தொழில் அதிபர்களும் பீதியில் உள்ளனர்.

குண்டு வெடித்து இறந்தவன் கூலிப்படை கொலைகாரனா? தனிப்படை போலீசார் விசாரணை[5]: திருப்பூரில் குண்டு வெடித்து இறந்தவனின் அறையில் சிக்கிய சிம்கார்டுகளை வைத்து, அவனது தொடர்புகளை அறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர். துப்பாக்கிகள் கைபற்றப்பட்டதால், அவன் கூலிப்படை கொலைகாரனாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பிச்சம்பாளையம் ஸ்ரீநகர் நான்காவது வீதியில் வசித்தவன், ஜோசப் மகன் பாஸ்கரன்[6] (41). தமிழ் நாளிதழ்கள் “ஜோசப் மகன் பாஸ்கரன்” என்று குறிப்பிட்டாலும், ஆங்கில நாளிதழ்கள் Joseph Bhaskaran, அதாவது “ஜோசப் பாஸ்கரன்” என்றே குறிப்பிடுகின்றன[7]. தங்கியிருந்த அறையில், கடந்த நவம்பர் 2ம் தேதி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, குண்டு வெடித்து உயிரிழந்தான்[8].

கைத்துப்பாக்கிகள் மற்றும் 54 தோட்டாக்கள் அத்துடன், ஐந்து சிம்கார்டுகள் சிக்கின: அவன் அறையில் போலீசார் நடத்திய தேடுதலில், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 54 தோட்டாக்கள் சிக்கின. அத்துடன், ஐந்து சிம்கார்டுகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளன. கைப்பற்றப்பட்ட அவனது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சில ஆவணங்களில் சரியான தகவல்களே உள்ளன; குடும்பம் சார்ந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலும், பின்னணியில் தீவிரவாத இயக்கம் சார்ந்தவனாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் உறுதியாக கூறுகின்றனர். அதேநேரத்தில், பட்டன், ஜிப், ஊசி போன்றவை விற்கும் சிறுதொழில் வியாபாரியாக இருந்த பாஸ்கரன், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தீவிரவாத இயக்கம் சாராதவனாக உள்ள பட்சத்தில், துப்பாக்கிகள் வைத்திருப்பதால் ரவுடி கும்பலை சேர்ந்தவனாகவோ, கூலிப்படை கொலைகாரனாகவோ இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்[9].

அடையாளம் தெரியாதபடி தன் தோற்றத்தை அடிக்கடி மாற்றிக் கொண்ட ஜோஸப்: பாஸ்கரன் அறையில் சில தங்க நகைகளும் கிடைத்துள்ளதால் வழிப்பறி, செயின்பறிப்பு போன்ற குற்றங்களில் அவன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. தலையில் வழுக்கை உள்ள அவன், “விக்’ அணிந்தபடியும், சில நேரங்களில் “விக்’ அணியாமலும் சென்று வருவதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். எனவே, மற்றவர்களுக்கு தெளிவாக அடையாளம் தெரியாதபடி தன் தோற்றத்தை அவன் அடிக்கடி மாற்றிக் கொண்டதும் தெரியவந்துள்ளது.

தனியாக ரகசியமாக தங்கியிருந்த ஜோஸப்: ஓராண்டாக, ஸ்ரீநகரில் வாடகை அறையில் தங்கியிருந்த பாஸ்கரனை சந்திக்க, நண்பர்களோ உறவினர்களோ யாரும் வந்ததில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது; தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தாத வகையில், பாஸ்கரன் ரகசியமாக தங்கியிருந்ததாகவே போலீசார் கருதுகின்றனர். இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் நடந்த குற்றச்சம்பங்களில் அவனுக்கு தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள இரு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அம்மோனியா / அம்மோனியம் நைட்ரேட் உபயோகப் படுத்தியது; அம்மோனியா / அம்மோனியம் நைட்ரேட்[10] சகஜமாக ஜிஹாதி / இந்திய முஜாஹித்தீன்[11] போன்ற தீவிரவாதிகளாலும் உபயோகப்படுத்தப் பட்டு வந்துள்ளது[12]. கடந்த மே மாதத்தில் சேலம் பகுதியில் மகேந்திரன் என்பவனிடத்திலிருது 10 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது[13]. ஜூலை மாதத்தில் சேலத்தில் சிவதாபுரம் என்ற இடத்தில் இருக்கும் தொழிற்சாலையின் குடவுனிலிருந்து ஏகப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், வயர்கள் முதலிய கைப்பற்றப்பட்டன[14].  ஜோஸப் பாஸ்கர் பட்டாசுகளில் இருக்கும் அம்மோனியா பவுடரை மொத்தமாக எடுத்து, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முற்பட்டுள்ளான். அப்போது, வெடிகுண்டு வெடித்ததில் இரு கைகளின் மணிகட்டுகளும் துண்டாகி, அதே நேரத்தில் உயிரிழந்துள்ளான். ஆகவே நிச்சயமாக வேடிக்கைக்கு அவ்வாறு செய்திருக்க மாட்டான்.

வேதபிரகாஷ்

© 05-11-2010


[1] தமிழ் நாளிதழ்கள் “ஜோசப் மகன் பாஸ்கரன்” என்று குறிப்பிட்டாலும், ஆங்கில நாளிதழ்கள் Joseph Bhaskaran, அதாவது “ஜோசப் பாஸ்கரன்” என்றே குறிப்பிடுகின்றன. http://www.thehindu.com/news/cities/Coimbatore/article865274.ece

[4] மாலைமலர், தீவிரவாத செயல்களின் கூடாரமாக மாறிவரும் திருப்பூர் மாநகரம்,  Tirupur புதன்கிழமை, நவம்பர் 03, 11:34 PM IST

http://www.maalaimalar.com/2010/11/03233442/tirupur-news.html

[5] தினமலர், குண்டு வெடித்து இறந்தவன் கூலிப்படை கொலைகாரனா? தனிப்படை போலீசார் விசாரணை, நவம்பர் 05, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120823

[6] தமிழ் நாளிதழ்கள் “ஜோசப் மகன் பாஸ்கரன்” என்று குறிப்பிட்டாலும், ஆங்கில நாளிதழ்கள் Joseph Bhaskaran, அதாவது “ஜோசப் பாஸ்கரன்” என்றே குறிப்பிடுகின்றன. http://www.thehindu.com/news/cities/Coimbatore/article865274.ece

[8] தினமலர், திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவன் பலி, நவம்பர் 03, 2010, http://www.dinamalar.com/News_detail.asp?Id=119125

[9] யார் மூலமாக அவனுக்கு துப்பாக்கிகள் கிடைத்தன; எப்போது அவன் அத்துப்பாக்கிகளை வாங்கினான்; அத்துப்பாக்கிகளை பயன்படுத்தி, யாராவது கொலை செய்யப்பட்டார்களா என்ற விவரங்களை கண்டறியும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவனது அறையில் கிடைத்த ஐந்து சிம்கார்டுகளையும் வைத்து, அவனது தொடர்புகள் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை அவனது தொடர்பில் இருப்பவர்கள் யார், எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து அறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

[10] New Indian Express, Pune blast RDX, ammonium nitrate could be red herring, Feb 18 2010,

http://www.indianexpress.com/news/pune-blast-rdx-ammonium-nitrate-could-be-re/581270/

[11] Ammonium Nitrate was one of the key components used in the Delhi serial blasts, also believed to be the handiwork of the Indian Mujahideen.

http://ibnlive.in.com/news/indian-mujahideen-prime-suspect-in-pune-blast/110143-3.html

[12] There have been largely three types of explosives used in the past few years:

• Only RDX: Mumbai train blasts, Diwali blasts in Delhi, among others.

• RDX and TNT: Hyderabad’s Mecca Masjid blasts

. Ammonium nitrate

[14] Special Correspondent, Seizure of ammonium nitrate, wire raises brows, Wednesday, Jul 07, 2010, http://www.hindu.com/2010/07/07/stories/2010070762480500.htm

 

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம் நைட்ரேட், குண்டுவெடிப்பு!”

  1. தமிழகத்தில் வெடிகுண்டு தயரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1) « திராவிட Says:

    […] [1] வேதபிரகாஷ், ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம்நைட்ரேட், குண்டுவெடிப்பு, https://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilna… […]

  2. நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதம Says:

    […] [18] https://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilna… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: